Page 39 of 41 FirstFirst ... 293738394041 LastLast
Results 381 to 390 of 403

Thread: muthalidam

 1. #381
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  15,930
  Post Thanks / Like
  துரும்பு இவள்
  துன்புறுத்தலாம்
  வக்கில்லாதவள்
  வதைக்கலாம்
  திக்கில்லாதவள்
  துரத்தலாம்
  இதுதானே உனது கணிப்பு
  அதில் அளவில்லா களிப்பு
  விதை தான் சிறியது
  விருட்சமோ பெரியது
  சின்னப்பயலே தெரியாதா
  சின்னவள் பலம் புரியாதா
  எரிமலையை தீண்டாதே
  கடும்புயலை தூண்டாதே
  நாகத்தை சீண்டாதே
  நஞ்சை கக்க வைக்காதே
  விடியலை நானும் தேடட்டுமா
  புதிய பாதையை வகுக்கட்டுமா
  குனிந்த தலையை நிமிர்த்தட்டுமா
  விஸ்வரூபம்தனை காட்டட்டுமா
  வெப்பத்தை நீயும் தாங்குவாயா
  வெந்து பின் புதிதாய் எழுவாயா
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   
 3. #382
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  15,930
  Post Thanks / Like
  கிரீடங்கள் சாய்வதில்லை
  கன்னி மயில் சீதை ஒரு நாள் சோலையிலே
  தோழியருடன் களித்திருந்த வேளையிலே
  காதல் கிள்ளையிரண்டு கைப்பிடிக்க வருவான்
  அழகிய ரகுராமனென பேசியது கேட்டு
  மனமிக மகிழ்ந்த அரசகுமாரி சேடியரை
  கவர்ந்து வரச்செய்தாள் அப்பறவையிரண்டை
  கைக்குள் பிடித்துக் கொண்டாள் அப்பேடையை
  ஆவல் மிகக் கூவினாள் மேலும் சொல்லென்று
  சேதி தந்த போதையில் கூட இருங்கள் என்னுடன்
  கல்யாணராமன் வந்திடும் சுப நாள் வரை என்றாள்
  மாளிகையின் சௌகரியம் தோதில்லை எம் வனத்திலே
  முட்டையிட காத்திருக்கும் நேரமிதென்றது பேடை
  பெட்டையை விட்டுவிடச்சொல்லி ஆண் கிளியும்
  காட்டில் குஞ்சு பொறித்து வளர்த்ததும் வருவதாய்
  கெஞ்சியும் கேளாமல் பிடிவாதமாய் பிடியை விடாத
  பெண்ணரசியை மனம் கசந்து சாபமிட்டு உயிரை விட்டது
  சிறைப்பட்ட அப்பாவி பெண் கிளி வயிற்றில் முட்டைகளுடன்
  அது கண்ட ஆண் கிளியும் கங்கையிலே மூழ்கி மாய்ந்ததே
  ஆண் கிளி அடுத்து அவதரித்தது அயோத்தியில் வண்ணானாய்
  முற்பிறவி வன்மம் தீராமலே திரிந்த பொழுதிலே
  இலங்கையிலிருந்து பிரிய சகி சீதையை மீட்டு வந்து
  அரசாள அரியணையேறிய ராமனை அவன் மனையாளை
  அவதூறாய் பேசியதை ரகசிய ஒற்றனும் கேட்டானே
  ஊரெல்லாம் புகழ்ந்தாலும் ஒருவன் இகழ்ந்ததை
  மறைக்க முடியாது தோற்றானே விதி வென்றதே
  ஏனைய இளவல்கள் மறுத்து மூர்ச்சையாகி விட
  தாயைக் கொன்ற தந்தை சொல் மீறா பரசுராமனொக்க
  கதறக் கதறக் காட்டிலே தானும் கதறியபடியே இலக்குவன்
  கரு சுமந்த உத்தமியை கபடறியா பேடையை சீதையை
  கைவிட்டு வந்தானே காக்கட்டும் வால்மீகி முனியெனவே
  சதியின் சுத்தமறியா பதியல்ல அரச பதவியின்
  களங்கமில்லா பெருமையை சிரமேற்தாங்கியவன்
  அக்கினியில் போட்டெடுத்த பொன்மயிலை பிரியவும்
  சூல் கொண்ட இல்லாளை நாடு கடத்தவும் துணிந்தானே
  லவனும் குசனும் வளர்ந்து வீரதீரமுடனே நிமிர்ந்து
  புரவிகளையடக்கி அனுமன் ஆசியுடன் அன்னை கவசத்துடன்
  அனைவரையும் வீழ்த்தி திறம் காட்ட அவர் குலம் மூலம்
  அறிந்த மாமன்னன் வாரிசுகளை அணைத்துக்கொள்ள ஏங்கினான்
  அன்னையை அருகே அமர்த்திட மீண்டும் அக்கினியை மூட்டினான்
  மூத்த தாயாரெல்லாம் மனம் குமுறி பொங்கித் தவித்து தடுத்திட
  பொறுத்துக்கிடந்தவள் அபலையவள் போதும் இனி சோதனைகள்
  என்றெண்ணி ஆதரவாய் பிளந்த அன்னை பூமியின் மடி புகுந்தாள்
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 4. #383
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  15,930
  Post Thanks / Like
  Last edited by pavalamani pragasam; 10th October 2013 at 06:52 PM.
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 5. #384
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  15,930
  Post Thanks / Like
  Where The Mind Is Without Fear
  Where the mind is without fear and the head is held high
  Where knowledge is free
  Where the world has not been broken up into fragments
  By narrow domestic walls
  Where words come out from the depth of truth
  Where tireless striving stretches its arms towards perfection
  Where the clear stream of reason has not lost its way
  Into the dreary desert sand of dead habit
  Where the mind is led forward by thee
  Into ever-widening thought and action
  Into that heaven of freedom, my Father, let my country awake.
  பயமில்லா மனம்
  எங்கே மனம் பயமில்லாதிருக்கிறதோ, தலை நிமிர்ந்த நிலையில் இருக்கிறதோ
  எங்கே ஞானம் எளிதாய் உறைகிறதோ
  எங்கே உலகம் குறுகிய வீட்டுச்சுவர்களால் துண்டுப்பகுதிகளாக உடைக்கப்படாதிருக்கிறதோ
  எங்கே வார்த்தைகள் சத்தியத்தின் ஆழத்திலிருந்து வருகின்றனவோ
  எங்கே அயராத முயற்சியின் கரங்கள் சிறப்பின் உச்சத்தை எட்ட நீள்கிறதோ
  எங்கே பகுத்தறிவெனும் தெளிந்த நீரோடை செத்தொழிந்த பழக்கமெனும் வறண்ட பாலை மணலில் தொலைந்துபோகாதிருக்கிறதோ
  எங்கே மனம் விரிந்துகொண்டேயிருக்கும் சிந்தனை செயல் நோக்கி தங்களால் வழிநடத்திச்செல்லப்படுகிறதோ
  அந்த சுதந்திர சுவர்க்கத்திலே, எந்தையே, எம் நாடு கண்விழிக்கட்டும்.
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 6. #385
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  15,930
  Post Thanks / Like
  கல்லாக காத்திருந்தேன்
  சிலையாய் செதுக்க வந்தான்
  காற்றில் கலந்திருந்தேன்
  கானமாய் எனை பாடினான்
  சொல்லாய் இறைந்திருந்தேன்
  கவிதையாய் கோர்த்துவிட்டான்
  நதியாய் ஓடி வந்தேன்
  கடலாய் கைகளில் தாங்கினான்
  பெண்ணை பேரரசியாக்கும்
  பெரிய மந்திரவாதி மணாளனே
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 7. #386
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  15,930
  Post Thanks / Like
  வைரக்கல் ஆதியில் கரிக்கட்டிதான்
  வருடக்கணக்காய் அழுந்தி புழுங்கி
  வெளிப்பட்டது மின்னும் அழகொளி
  வெட்டவொண்ணாவோர் உறுதி
  ஆர்ப்பரிக்கும் கடல் மேலே அலை
  ஆழியின் ஆழத்தில் பேரமைதிமயம்
  அரிய உயிரினங்கள் இயங்குமங்கு
  ஆடம்பரமில்லா அருமையின் பெருமை
  வெந்து நொந்து வளரும் உறமான திரு
  ஆழத்து நிலவரம் அறியவியலா மாய்மாலம்
  ஆனந்த ஆரவார அவள் அரிதாரக்கோலம்
  அறியார் சிறுமதியார் அந்தோ பரிதாபம்
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 8. #387
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  15,930
  Post Thanks / Like
  பழகிக் கொள்
  சோறாக்க
  துணி துவைக்க
  பெத்து வளக்க
  அது பழசு
  கணினி தட்டு
  ஸ்மார்ட் போன் எடு
  மாலில் ஷாப் பண்ணு
  அமெரிக்கா போ
  காரோட்ட பழகு
  கிரீன் கார்ட் வாங்கு
  கிராம உலகிதில்
  கவிதை நீயடி
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 9. #388
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  15,930
  Post Thanks / Like
  தாயே ஏனிப்படி ஓடுகிறாய்
  மேனிக்கு பலமான பராமரிப்பு
  வயிற்றுக்கு சத்தில்லா கொரிப்பு
  பாரம்பரிய வழிகள் நிராகரிப்பு
  குடும்பக்கலைகள் புறக்கணிப்பு
  புருசன் பிள்ளைகள் பரிதவிப்பு
  அவகாசமில்லாதொரு பரபரப்பு
  வென்றது பளபளப்பில்லா கப்பு
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 10. #389
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  15,930
  Post Thanks / Like
  கப்பு நாத்தம் தாங்கல
  வெளிய போக முடியல
  யாரும் இங்க குளிக்கல
  துணிமணிய துவைக்கல
  பீடி சிகரெட் நாறுது
  மது வாடை குமட்டுது
  தூசு குப்பை பறக்குது
  மாசு உலகை மூடுது
  மூச்சு எனக்கு முட்டுது
  சுத்தம் செய்வது யாரு
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

 11. #390
  Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Madurai, India, India
  Posts
  15,930
  Post Thanks / Like
  மனசாட்சியை பூட்டிவை பத்திரமாய்
  ரகசியமாய் யாரும் நெருங்கமுடியாமல்
  போகுமிடமெல்லாம் தூக்கிச்செல்லாமல்
  பெருஞ்சுமையது பெருந்தடையுமது
  பேராசைக்கும் பாவமனைத்துக்கும்
  பொல்லா தீங்கெதற்கும் பயன்படாது
  Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Page 39 of 41 FirstFirst ... 293738394041 LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •