Page 86 of 402 FirstFirst ... 3676848586878896136186 ... LastLast
Results 851 to 860 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #851
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மனதில் #நின்ற #மாமனிதர்

    நம்முடைய வாழ்க்கையில் பல பெரிய மனிதர்களை, தூரத்தில் இருந்து பார்த்து, பிரமித்து, அவர்களை மானசீகக் குருவாகவும், இதய தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டு கொண்டாடுவோம்.

    ஒரு கட்டத்தில் நம்முடைய மனம் கவர்ந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, அவருடன் நெருங்கிப் பழகும் போது, நாம் அதுவரை அவரைப் பற்றி நினைத்திருந்த கம்பீர பிம்பங்கள் எல்லாம் சுக்குநூறாக உடைந்து போகவும் வாய்ப்புண்டு.

    ஆனால், ஒரு சிலரிடம் மட்டும், நாம் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்ட நல்ல குணங்களும், எல்லோரும் போற்றக்கூடிய நாகரிகமும், பண்பாடும் நிறைந்து காணப்படும். அப்படிப்பட்டவர்களிடம் நம்முடைய மரியாதை மேலும் கூடி பிரம்மிப்பை உண்டாக்கும். அது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    ‘ஒரு கவிஞனோ, ஒரு இலக்கியவாதியோ, ஒரு நாடக ஆசிரியரோ, ஒரு நடிகனோ, அவர்கள் படைக்கின்ற, உருவாக்குகின்ற, நடிக்கின்ற கதாபாத்திரங்களைப் போல் மற்றும் அவர்கள் உருவாக்குகின்ற காட்சிகளைப் போல், நிஜ வாழ்க்கையில் அவர்களால் வாழ்ந்து காட்ட முடியாது’ என்று சொன்னவர் கிரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ.

    ஆனால் அவரது கருத்தை பொய்ப்பித்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர். ‘நாடகத்திலும், திரைப்படங்களிலும் வேண்டுமானால், ராஜாவாக நடிக்கலாம். ஆனால் நிஜ வாழக்கையில் ராஜாவாக முடியாது’ என்று, எம்.ஜி.ஆரை விரும்பாதவர்கள் அன்றைக்குச் சொன்னார்கள். ஆனால் திரையிலும், நிஜத்திலும் நாட்டை ஆண்டவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.

    என் திருமண அழைப்பிதழைக்கொடுக்க ராமாவரம் சென்றேன். நான் உள்ளே வரும்போதே முதல்வர் வணங்கியபடி கைகூப்பியபடி நின்றார்.

    வணங்குவதிலும், வாழ்த்துவதிலும், முதல்வனாக இரு’ என்று, இஸ்லாத்தில் குறிப்பிட்டுள்ளபடி மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அந்த உயர்ந்த பண்பாட்டிற்கு அன்று முதல் நான் அடிமையானேன். அன்றிலிருந்து இன்றுவரை யாராக இருந்தாலும், நான் தான் எல்லோருக்கும் முதலில் வணக்கம் செலுத்துவேன்.

    என்னிடம் இருந்து திருமண அழைப்பிதழை முதல்-அமைச்சர் வாங்கிய பிறகு எங்களை உட்காரச் சொன்னார். நாங்கள் உட்கார்ந்த பிறகுதான், அவரும் இருக்கையில் அமர்ந்தார். இந்த பண்பாட்டையும், நாம் பின்பற்ற வேண்டும் என்று என் உள் மனதில் வைத்துக்கொண்டேன்.

    அவர் ஒரு தனிப்பிறவி. இந்த மாமனிதர், பிறர் முன்னிலையில், பொது மேடைகளில், சட்டமன்றத்தில் என அனைத்து இடங்களிலும் நடந்து கொண்ட விதமும், பண்பாடும், நாகரிகமும் மிகவும் போற்றத்தக்கது. பிறருக்கு தான் உதவி செய்ததை அவர் எந்த இடத்திலும் கூறியது கிடையாது. அவர் உதவியைப் பெற்றவர்கள் பலரும், அந்த நன்றியை மறந்து அவரை கடுமையாக விமர்சனம் செய்தபோதும் கூட, அவர் தான் செய்த உதவியை ஒருபோதும் சொல்லிக்காட்டியதில்லை.

    மனிதர்களுக்கு இயற்கையாக வரும் தும்மல், இருமல், விக்கல், ஏப்பம், கொட்டாவி போன்றவற்றை, அவர் பொது இடங்களில் செய்து யாரும் பார்த்தது இல்லை. சிலருக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தும் கண், காது, மூக்கு போன்ற இடங்களை துடைத்தோ, சுத்தம் செய்தோ கூட அவரை யாரும் கண்டதில்லை. உடலில் எந்த பாகத்தையும் சொரிந்தோ, உடலில் சோம்பல் முறித்தோ யாரும் பார்க்கவில்லை.

    ஏதோ.. வானத்தில் இருந்து பூமிக்கு வந்த தேவர்களைப் போல நடந்துகொள்வார். எத்தனை மணி நேரம் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய சூழல் வந்தாலும், சிறுநீர் கழிக்கக்கூட செல்லாமல் அங்கேயே அமர்ந்திருப்பார்.

    அவரைப் பற்றி எழுதுவதே எனக்குப் பெருமைதான்.

    #புரட்சித்தலைவர் #பற்றி #நடிகர் #ராஜேஷ்.......... Thanks..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #852
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பெயர் : எம்.ஜி.ஆர்
    இயற்பெயர் : மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
    பிறப்பு : 17-01-1917
    இறப்பு : 24-12-1987
    பெற்றோர் : கோபாலமேன், சத்தியபாமா
    இடம் : கண்டி, இலங்கை
    புத்தகங்கள் : நாடோடி மன்னன்
    வகித்த பதவி : அரசியல்வாதி, நடிகர்
    விருதுகள் : பாரத் விருது, அண்ணா விருது, பாரத ரத்னா விருது, பத்மஶ்ரீ விருது, வெள்ளியானை விருது

    வரலாறு:-வாழ்க்கை வரலாறு

    எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணி அவர்களின் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.

    இளமைப்பருவம்:

    இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக் கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

    கல்வி உதவி:

    எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.

    திரைப்பட வாழ்க்கை:

    1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

    இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

    அவர் நடித்துக் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

    அரசியல் வாழ்க்கை:

    இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார். 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தது.

    இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

    திட்டங்கள்:

    சத்துணவுத் திட்டம்

    விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி

    தாலிக்கு தங்கம் வழங்குதல்

    மகளிருக்கு சேவை நிலையங்கள்

    பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்

    தாய் சேய் நல இல்லங்கள்

    இலவச சீருடை வழங்குதல் திட்டம்

    இலவச காலணி வழங்குதல் திட்டம்

    இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்

    இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்

    வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்

    தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல்:

    1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார். எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

    முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 ஜூன் 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.

    1981 ஆகஸ்ட் 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் ‘தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981’ பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.

    சிறப்பு விருதுகளும் பட்டங்களும்:

    எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

    விருதுகள்:

    பாரத் விருது - இந்திய அரசு

    அண்ணா விருது - தமிழ்நாடு அரசு

    பாரத ரத்னா விருது - இந்திய அரசு

    சிறப்பு முனைவர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம்,

    சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.......... Thanks...

  4. #853
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1977 , அ தி மு க முதல் முறை ஆட்சியை பிடிக்கிறது .... அதன் தலைவர் மக்கள் திலகமோ , முதலமைச்சராக பொறுப்பேற்பதை 5 நாட்கள் தள்ளி வைக்கின்றார் ...

    ஏன் ? தனது படங்களுக்கான டப்பிங் வேலைகள் முடித்துக் கொடுக்கவே , பதவி பிரமாணம் எடுப்பதை தள்ளிப் போட்டார் .... மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன் படத்திற்கான டப்பிங் வேலை முடிந்தது ... மக்கள் திலகம் மைக்கை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டார் . வாகினி டப்பிங் தியேட்டர் நிலத்தை தொட்டு முத்தமிட்டார் . வெளியே மிகப் பெரிய கூட்டம் ... நேரம் இரவு 11 மணி ....

    மக்கள் திலகம் பேசினார் : " இந்த மாலைகளும் வாழ்த்துக்களும் எனது திரை வாழ்கையின் முடிவுக்கா அல்லது ஆட்சியின் நாளைய துவக்கத்திற்கா ? இதுக்கு பதில் நானே சொல்றேன் ... இந்த சினிமா வாழ்க்கைக்கு நான் ரொம்ப கஷ்டப் பட்டு வந்தேன் , கிடைச்ச வாழ்கையை காப்பாத்துறதுக்காக அரசியலுக்கு வரலை , ஒரு சபதத்துல வந்தேன் ....

    சில பேர் அதிகாரம் தன் கையிலே இருக்குறதே , பிறரை அழிக்குறதுக்குன்னு நினைச்சாங்க , இல்லே , மத்தவங்களை கவுரவிக்கவும் , காப்பாத்துறதுக்கும் தான்னு , காட்டத் தான் இதிலே குதிச்சேன் , வெற்றியடைஞ்சிட்டேன் ...

    என் சினிமா வாழ்க்கையில் மகாராஜனா , ஏன் ஒரு சக்கரவர்த்தியாக்கூட இருந்துட்டேன் . நாளைக்கு அடையப் போறது வெறும் மந்திரிப் பதவி தான் , ராஜாவை விட மந்திரி கீழே தான் .

    இன்னைக்கு மைக்கை தொட்டும் , இந்த மண்ணை தொட்டும் , முத்தமிட்டது ஒரு இடைக்கால பிரிவுக்கு தான் . மீண்டும் வருவேன் , இந்தப் படம் என் திருப்திப் படம் .

    எனது முதல் படம் சதி லீலாவதி , அதில் நான் ஒரு காவல் அதிகாரியா வருவேன் , கடைசி படம் மன்னன் , மா மன்னன் , எப்படி என் பிரமோஷன் ? நாளைக்கு மந்திரியானாலும் எம் . ஜி . ஆர் . எம் . ஜி . ஆர் தான் . அதுக்கு நீங்க எல்லோரும் தந்த மகத்துவத்தை நான் மறக்க மாட்டேன் ... நன்றி வணக்கம் ....

    மக்கள் திலகத்தின் இந்த உணர்ச்சிமிகு, உணர்வுமிகு உரையானது எத்தகைய அனுபவப்பூர்வமான உண்மை கருத்துகளை பறைசாற்றி இருக்கிறது... சினிமா உலகில் நான் மகா ராஜனாக, ஏன், சக்கரவர்த்தியாக இருக்கிறேன்... நாளை அரசியலில் பதவி ஏற்பது கூட மந்திரிதான்... ராஜனுக்கு பிறகுதான் மந்திரி என என்ன மதியூகததோடு பேசியுள்ளார்... இவருக்குதான் பேச தெரியாது - என அநேக மதி படைத்தோர் கூறினர் ... என்ன விந்தை........... Thanks.........

  5. #854
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தேவர் ஃபிலிம்ஸின் முதல் வண்ணப் படமான ‘நல்ல நேரம்’ 1972-ம் ஆண்டு வெளியாகி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சென்னையில் இரண்டு திரையரங்குகளில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்தது. அதோடு, அந்த ஆண்டு வெளியான படங்களில் சென்னையில் சித்ரா, மகாராணி, மேகலா, ராம் ஆகிய 4 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி, சாதனை செய்த ஒரே படம் ‘நல்ல நேரம்’!

    ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.
    அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

    எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா நடித்த ‘நல்ல நேரம்’ திரைப்படத்தில் ‘நீ தொட்டால் எங்கும் பொன்னா குமே, என் மேனி என்னாகுமோ?…’ என்ற டூயட் பாடல் இடம்பெறும். மற்ற எம்.ஜி.ஆர். பட பாடல்களுக்கு இல்லாத சிறப்பு இந்தப் பாடலுக்கு மட்டுமே உண்டு
    வழக்கமாக, பாடல் காட்சிகளில் பார்ப் பவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள் ளும் வகையில் எம்.ஜி.ஆர். ஆடுவார், ஓடுவார். ஆனால், இந்தப் பாடலில் வலைப் படுக்கையில் (நெட்) படுத்த படியே பாடி நடித்திருப்பார். முழு பாடல் காட்சியிலும் படுத்தபடியே நடித்த நடிகர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்! ஓடி ஆடி நடிப்பதைவிட, படுத்துக் கொண்டே பாடல் காட்சியில் நடிப்பது கஷ்டம். ஆனாலும், படுத்துக் கொண்டே ஜெயித்தவருக்கு படுத்துக் கொண்டே நடிப்பது கஷ்டமா என்ன?

    எம்.ஜி.ஆர். நடித்து சடையப்ப செட்டியார் தயாரிப்பில், தர் இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளியான படம் ‘மீனவ நண்பன்’. படத்தில் கே.பி.ராமகிருஷ்ணனும் நடித்துள்ளார். ‘‘இந்தப் படத்துக்காக எம்.ஜி.ஆருக்கு அதிகபட்சமாக ரூ.45 லட்சம் சம்பளம் தரப்பட்டது. அதுவரை தென்னகத்தில் வேறு எந்த ஹீரோவுக்கும் அவ்வளவு சம்பளம் கொடுக்கப்படவில்லை. இப்போது அந்த தொகை பல கோடிகளுக்கு சமம்’’ என்று நினைவுகூர்கிறார் ராமகிருஷ்ணன்!

    எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் விளம்பரத்துக்காக சாட்டையைச் சுழற்றுவது போல, அடிப்பது போல, சாட்டையை உடலைச் சுற்றி பிடித்தபடி என, இந்தத் தொடரின் ‘லோகோ’வில் இடம்பெற்றுள்ள படம் உட்பட விதவிதமாக எம்.ஜி.ஆர். போஸ் கொடுக்க, அந்தப் படங்களை எடுத்தவர் நாகராஜ ராவ். இதில் ஒரு விசேஷம், எம்.ஜி.ஆர். தனக்குத் தோன்றிய விதங்களில் தானாகவே யோசித்து கொடுத்த அட்டகாசமான போஸ்கள் அவை!

    எம்.ஜி.ஆர். நடித்த ‘ஆனந்த ஜோதி’ படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்தார். நடிகை தேவிகா எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் இது. படத்தில் தேவிகாவின் தம்பியாக பள்ளிச் சிறுவனாக கமல்ஹாசன் நடித்திருப்பார்

    பல்லாண்டு வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத்தில் நடந்து கொண்டிருந்தபோது தமிழ்ப் புத்தாண்டு தினம் வந்தது. படப்பிடிப்பு குழுவினருக்கு எம்.ஜி.ஆர். பரிசுகள் அளித்ததோடு, தேங்காய் சீனிவாசன் நடித்த ‘கலியுகக் கண்ணன்’ படத்தை திரையிட ஏற்பாடு செய்து குழுவினரோடு ரசித்துப் பார்த்தார்.

    சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழ் அறிஞருமான ம.பொ.சி. எழுதிய, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ நூலை நாட்டுடமை யாக்கி, அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை செய்த தற்காக ம.பொ.சி.க்கு எம்.ஜி.ஆர். நிதி வழங்கினார்!

    ஃபிலிம்ஃபேர்’, ‘இல்லஸ் டிரேட்டட் வீக்லி’ ஆகிய பத்திரிகைகள் எம்.ஜி.ஆரைப் பற்றி சிறப்புக் கட்டுரைகள் வெளியிட முடிவு செய்தன. அதற்காக, வித்தியாசமான புகைப்படம் எடுக்க விரும்பிய புகழ்பெற்ற புகைப்பட நிபுணர் திராஜ் சவுடாவின் வேண்டுகோளை ஏற்று, அதிகாலையில் உதயத்தின் போது சிரமம் பார்க்காமல் சென்னை கடற்கரைக்கு வந்து பின்னணியில் சூரியன் ஒளிர போஸ் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!

    அதிமுகவின் முதல் உறுப்பினர் எம்.ஜி.ஆர்.தான். கட்சியின் பெயரி லும் கொடியிலும் தனது தலைவரான பேரறிஞர் அண்ணாவுக்கு முக்கியத் துவம் அளித்தார். கட்சி உறுப்பினர் அட்டையிலும் தனது படத்தைவிட அண்ணாவின் படமே பெரிதாக இருக்கும்படி செய்து, தலைவரை மதிக்கும் தொண்டர் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்தார்

    நான் உங்கள் வீட்டுப் பிள்ளை

    இது ஊரறிந்த உண்மை

    நான் செல்லுகின்ற பாதை

    பேரறிஞர் காட்டும் பாதை!’

    நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படம் வெளியானபோது, மக்களை கவரும் வகையில், அதுவரை இல்லாத புதுமையான விளம்பர உத்தி பயன்படுத்தப்பட்டது. படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்டன.

    ஜூபிடர் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டுடியோவை எம்.ஜி.ஆர். வாங்கி அதற்கு தனது தாயாரின் பெயரை சூட்டி ‘சத்யா ஸ்டுடியோ’ ஆக்கினார். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய ஸ்டுடியோவில் தொழிலாளர்களை பங்குதாரர்களாக்கி, லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்து அளித்த முதலாளி… இல்லை, இல்லை, முதலாளி என்ற பெயரில் வாழ்ந்த தொழிலாளி எம்.ஜி.ஆர்.!

    1967 மற்றும் 71-ம் ஆண்டுகளில் பரங்கிமலை தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டப்பேரவைக்கு எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ம் ஆண்டு பரங்கிமலை தொகுதி எம்எல்ஏ-வாக எம்.ஜி.ஆர். இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினருக்கான அடையாள அட்டை.

    1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிடவில்லை. தமிழகம் முழுவதும் திமுகவுக்காக பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் திமுக 50 இடங் களில் வென்றது. எம்.ஜி.ஆரின் உழைப்பை பாராட்டி அவருக்கு எம்.எல்.சி. பதவி அளித்து மகிழ்ந்தார் பேரறிஞர் அண்ணா!

    சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் பாடல் இது:
    ‘உலகமெனும் நாடக மேடையில்
    நானொரு நடிகன்;
    உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன்!’

    பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேனை அவர் பிச்சாவரம் அழைத்துச் சென்று இயற்கை காட்சிகளைக் காட்டினார். ‘இவ்வளவு அழகிய இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்றலாமே?’ என்று அண்ணா விரும்பினார். பின்னர், எம்.ஜி.ஆர். முதல்வரானபின் பிச்சாவரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டது.

    அரச கட்டளை’ படத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ர பாணியின் மகன் ராமமூர்த்தி தயா ரித்தார். சக்ரபாணி இயக்கினார். பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன் என எம்.ஜி.ஆர். பட முக்கிய வில்லன் கள் எல்லோரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

    இந்தப் படத்தில், கவிஞர் வாலி எழுதி, பி.சுசீலாவின் இனிமையான குரலில் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்…’ என்ற அருமையான பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா பாடுவது போல காட்சி. எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைப் புகழும் பின்வரும் வரிகள் வரும்போது, தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் கூரையைப் பிளக்கும்.

    ‘அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

    அந்த வாசலில் காவல்கள் இல்லை

    அவன் கொடுத்தது எத்தனை கோடி

    அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’

    எங்க வீட்டுப் பிள்ளை’ படம் தயா ராகிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் இரவு வாஹினி ஸ்டுடியோவின் எட்டாவது படப்பிடிப்பு அரங்கில் தீவிபத்து ஏற்பட்டது. விஷயம் தெரிந்து எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். தேவையான உதவி களை செய்தார். பின்னர், வீட்டில் இருந்த நாகிரெட்டியையும் சந்தித்து ‘‘கவலைப் பட வேண்டாம்’’ என்று ஆறுதல் கூறியபோது, ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று வியந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தார் நாகிரெட்டி.............. Thanks...

  6. #855
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    44 ஆண்டுகள் முன்பு சென்னை நகரை குலுக்கி எடுத்த மகத்தான பேரணி மக்கள் திலகம் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் லட்ச கணக்கான அதிமுக தொண்டர்கள்
    ஒன்று சேர்ந்து ராஜ் பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்து மனு கொடுக்க சென்ற தினம் .

    மக்கள் வெள்ளத்தில் மக்கள் திலகம் சென்ற ஊர்வலத்தின் படங்கள் அன்றைய நாட்களில் அரசியல்
    நோக்கர்கள் -விமர்சகர்கள் சொன்ன கருத்து
    ''எம்ஜிஆர் என்ற புயல் மையம் கொண்டுள்ளது .மக்கள் சக்தி அவர் பக்கம் . விரைவில் அவருடைய
    விஸ்வரூபம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் . ஒரு தனி மனிதரின் மக்கள் செல்வாக்கு உலகில் எம்ஜிஆருக்கு உள்ளது போல் எந்த ஒரு நடிகருக்கோ அரசியல்வாதிக்கோ கிடையாது .''

    வடநாட்டு பத்திரிகைகள் - வெளிநாட்டு பத்திரிகைகள் - நிருபர்கள் எல்லோருமே அந்த மக்கள் வெள்ளத்தை பார்த்து வியந்து தங்களுடைய பத்திரிகைகளில் '' mass hero mgr '' என்று
    கட்டுரை எழுதினார்கள் .......... Thanks...

  7. #856
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் தங்கம் படத்திற்கு தலைவர் மட்டுமே இல*வசமாக நடித்துகொடுத்து கருணாநிதியை திவால் நோட்டீஸ் கொடுப்பதிலிருந்தும், கடன் தொல்லையிலிருந்தும் மீட்டுகொடுத்ததை நாம் அறிவோம்! ஜெயலலிதா உட்பட பிற பிரபலங்களுக்கு உரிய தொகை கொடுக்கப்பட்டது. ஆனால் தலைவருடன் நடித்த புத்தூர் நட்ராஜ், குண்டுமணி, தர்மலிங்கம், சங்கர் உள்ளிட்ட ஸ்ட*ண்ட் நடிகர்களுக்கு சம்பள பாக்கியை (அந்த காலத்திலேயே 5,000 முதல் 30,000 வ*ரை) மேகலா பிக்சர்ஸ் த*ராமல் இழுத்தடித்தனர். படத்த*யாரிப்பு முடிந்தும் அவர்கள் சம்பள பாக்கியை கேட்டதற்கு கருணா & கோவின் பதில்: "!போங்கப்பா! உங்க அண்ணனுக்கே சம்பளம் கிடையாது. இதில் உங்களுக்கு பாக்கி வேறா? எல்லாம் அவ்வளவுதான்!" என்று
    கூறி விரட்டிவிட்டனர். இதை அவர்கள் தலைவரிடம் முறையிட எம்ஜிஆர், கருணாவிடம் "நான் திமுகக்காரன், உங்கள் முத*ல்வ*ர் ப*த*வியை காப்பாற்ற*வும் இல*வ*ச*மாக ந*டித்துகொடுத்தேன். அவர்கள் நிலைமை அப்படியல்ல! விநியோக உரிமை மூல*ம் உங்கள் க*ட*ன்தேவைக்கு மேலும் பலமட*ங்கு ப*ணம் கிடைத்துவிட்ட*தை நான் அறிவேன்! துணை ந*டிக*ர்க*ள் வ*யிற்றில் அடிக்காதீர்க*ள்!" என்று கோபத்துடன் எச்ச*ரித்தார். பிறகு துணைநடிகர்களுக்கு சம்பளம் செட்டில் செய்யப்பட்டது. எங்கள் தங்கம் படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா கேடயம் நெடுஞ்செழிய*னால் தலைவருக்கு வழங்கப்படும் படம். அருகில் முரசொலி மாறன்!.......... Thanks...

  8. #857
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கேரள மாநிலம் பாலக்காட்டில் புரட்சித்தலைவர் சிறுவயதில் பிறந்து வளர்ந்த இல்லம்.
    கருங்கல் சிற்பங்களோடு, கலைநயமிக்க வகையில் பராமரிக்கப்படுகிறது. நூலகம், புகைப்பட காட்சி அறை, மக்கள்திலகத்தின் திரையுலக அணிவரிசை என வியக்க வைக்கும் ஒருங்கமைவுகள்.
    இந்த காணொளியை விளக்கி விவரிக்கும் நபர் காலணிகளை மரியாதை நிமித்தம் கழற்றிச்செல்வதும், வர விரும்புபவர்களுக்கான வழிகாட்டலில் "அந்த வளாகத்தின் உள்ளேயே இயங்கும் அங்கன்வாடி மையத்தின் குழந்தைகட்கு இனிப்புகள் வாங்கி வாருங்களென" கூறுவதும் அங்கே நிழலாடும் மக்கள் திலகத்தின் ஆன்ம உணர்வின் அன்பு வெளிப்பாடென்றே உணரத்தோன்றுகிறது.
    வாழ்க புரட்சித்தலைவர் !!!..........�� ��...... Thanks...

  9. #858
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தெய்வத்தின் #பணம்

    "ராமுவைக் காப்பாற்றுங்கள்"...
    இது 1974 ம் வருடத்திய 'குமுதம்' வார இதழில் வந்த தலைப்பு...

    சென்னை மயிலையைச் சேர்ந்த திரு.ராமு என்பவர் இருதயக்கோளாறினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றால் காப்பாற்றி விடலாம் என்பது தான் அந்தச் செய்தியின் கரு.

    இதைக்கேள்விபட்ட தேவர் பிலிம்ஸைச் சேர்ந்த கலைஞானம் என்பவர் மயிலாப்பூர் சென்று அவருக்கு உதவுவதாகக் கூறி தேவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

    முதல் மாடியிலிருக்கும் தேவரைக்காண இருவரும் படியேறிச்செல்லும் போது, தன் மார்பில் கைவைத்து திடீரென்று உட்கார்ந்து விடுகிறார் ராமு. ஆனால், சிலவிநாடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். தேவரின் முன்னால் சென்று கலைஞானம், ராமுவின் நிலைமையை விளக்குகுறார்...

    தேவர், ராமுவிடம் 'அமெரிக்கா செல்ல எவ்வளவு பணம் தேவைப்படும்? எனக்கேட்க, 'ரூ.10000/- தேவைப்படும் என்று ராமு சொல்கிறார்.

    ' இப்போதைக்கு இந்தா ரூ.5000/-, மீதிப்பணத்தற்கு வேறு யாராவது உதவுகிறார்களா? ன்னு பாரு...அப்படி வேறு யாரும் உதவவில்லையெனில் மீதிப்பணத்தையும் நானே தருகிறேன்...' என்று தேவர் கூறுகிறார்...

    ராமு அந்தப் பணத்தை வாங்கிச்சென்று, அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், தேவர் தழுதழுத்த குரலில், கலைஞானத்திடம் இப்படிக் கூறுகிறார்...

    "இந்தப் பணம் கூட என்னுடையதல்ல...என் தெய்வத்தினுடையது...." (வாத்தியார்)
    வாத்தியார் மேல எந்தளவு பக்தி பாருங்க தேவருக்கு...!

    நல்ல எண்ணத்தில் கொடுக்கப்படும் பணமானது நல்ல விஷயங்களுக்காத் தானே சென்றடைந்துவிடுமல்லவா...!!!.......... Thanks...

  10. #859
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க. ஆரம்பித்த பிறகு ஒருநாள் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. கே.ஏ.கிருஷ்ணசாமியுடன் தோட்டத்துக்குச் சென்று அவரை சந்தித்தேன். அப்போது ஒருவரை அறிமுகப்படுத்தி, "இவர் தயாரிக்கவிருக்கும் "நீதிக்குத் தலை வணங்கு' படத்துக்கு நீங்கள் பாடல் எழுத வேண்டும்' என்றார் எம்.ஜி.ஆர். இப்படித்தான் நான் படவுலகில் பாடலாசிரியராக அறிமுகமானேன். நான் எழுதிய முதல் பாடலே எம்.ஜி.ஆர். நடித்த படமாக அமைந்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. நான் முதன்முதலாக எழுதி "நீதிக்குத் தலை வணங்கு' படத்தில் இடம் பெற்ற "கனவுகளே ஆயிரம் கனவுகளே....' என்று தொடங்கும் பாடல் "சூப்பர் ஹிட்'டாகி எனக்கு நல்ல அறிமுகத்தை தேடித் தந்தது. தொடர்ந்து "ஊருக்கு உழைப்பவன்', "பல்லாண்டு வாழ்க', "இதயக்கனி' "நவரத்தினம்' போன்ற பல எம்.ஜி,ஆர். படங்களில் பாடல்கள் எழுதினேன்.

    திடீரென ஒரு நாள் எம்.ஜி.ஆர். என்னை அ.தி.மு.க.வில் சேரும்படி சொல்லவே, நான் சற்று தயங்கினேன். "நீங்கள் கலைஞர் மீது அபிமானம் உள்ளவர் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களைப் போன்ற படித்தவர்கள் எல்லாம் கட்சிக்கு வந்து பணியாற்றி கட்சியை வளர்க்க வேண்டும். உங்கள் குடும்பத் தேவைகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக வாருங்கள்' என்றார். எனவே துணிந்து நானும் அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்தேன்.

    பீட்டர் சாலையிலிருந்த குடியிருப்பை காலி செய்து விட்டு, எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி லாயிட்ஸ் சாலையில் உள்ள பெரிய வீட்டுக்கு குடி பெயர்ந்தேன்.சொன்னபடியே எம்.ஜி.ஆர். வீட்டு வாடகையிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக் கொண்டார். அந்த காலகட்டத்தில் கட்சிக் கூட்டங்களில் பேச மாதம் இருபது நாட்களுக்குக் குறையாமல் வெளியூர் சென்று விடுவேன். அப்போதெல்லாம் அவ்வளவு பெரிய வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருக்க என் மனைவி பயப்பட்டதால் வேறு சிறிய வீட்டுக்கு மாறினேன்.

    அரசாங்க வேலையை ராஜினாமா செய்த பிறகு "சோதனை' என்ற பெயரில் சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தேன். மாதத்தின் பெரும்பாலான நாட்கள் பொதுக்கூட்டங்கள் பேச வெளியூர் சென்ற காரணத்தால் பத்திரிகையில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. எனவே பத்திரிகையை மூன்றாவது இதழுடன் நிறுத்தும்படியாகிவிட்டது.

    எம்.ஜி.ஆர். முதல்வராகி படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு நிறைய வெளிப்படங்களுக்கும் எழுதினேன். குறிப்பாக ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் எனக்கு நிறைய வாய்ப்புக்களை வழங்கினார். இசையமைப்பாளர் இளையராஜாவும் எனக்கு நிறைய பாடல்கள் எழுத சந்தர்ப்பம் அளித்தார். பொதுக்கூட்டம் பேச வெளியூர் சென்ற காரணத்தாலேயே பல படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பை நான் இழந்திருக்கிறேன்.

    இளையராஜா இசையில் "நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் நான் எழுதிய "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது' என்ற பாடல் பிரபலமடைந்து எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதேபோல் கமல் நடித்த "காக்கி சட்டை' படத்தில் நான் எழுதிய "வானிலே தேன் நிலா ஆடுதே பாடுதே' என்ற பாடல், "அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் இடம் பெற்ற "முத்துமணிச்சுடரே வா', "வெள்ளை ரோஜா' படத்தில் இடம் பெற்ற "ஓ மானே மானே' போன்றவை எனக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்த பாடல்களில் சில. "பாடும் வானம்பாடி' படத்தின் பாடல்கள் அனைத்தையும் நானே எழுதியிருந்தேன்.

    என் மகள் திருமணத்துக்கு தலைமை தாங்க அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால் திருமணத்தன்று அவருக்கு பல்வலி ஏற்பட்டு அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டார்.

    ஆனால் அமைச்சர்கள் எல்லோரையும் திருமணத்துக்கு அனுப்பி வைத்ததுடன், நடிகர் பாக்யராஜை அழைத்து தனக்கு பதிலாக சென்று திருணத்தை நடத்தி வைக்கும்படி சொல்ல, பாக்யராஜ் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். அடுத்த நாள் தோட்டத்துக்கு அழைத்து என் மகளுக்கு விருந்து கொடுத்த எம்.ஜி.ஆர். என் மகளுக்கு சீர் செய்து வாழ்த்தியதை என்றென்றும் என்னால் மறக்க முடியாது.

    இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர், கதர் வாரியத் துணைத்தலைவர் என்று பல பொறுப்பக்களை வகித்த எனக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, பாரதிதாசன் விருது ஆகியனவும் கிடைத்திருக்கின்றன.''என்கிறார் கவிஞர் நா.காமராசன்.......... Thanks........

  11. #860
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •