Page 45 of 402 FirstFirst ... 3543444546475595145 ... LastLast
Results 441 to 450 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #441
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த படத்தில் முன்னாள் நாட்டின் முதல் பாரத பிரதமர் ஜவர்ஹலால் நேரு அவர்கள், தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜ், C.சுப்பிரமணி மற்றும் முன்னனி தலைவர்களுடன் 1962. ல் இந்திய திருநாட்டின் மீது சீனா படையெடுத்தது.
    நேருஜி நாட்டுமக்களிடம் யுத்தநிதி வேண்டினார்.
    மேலே உள்ள படத்தில் அன்று மலர்ந்த செந்தாமரை போன்று ஜொலிக்கும் நம் தலைவர் M.G.R அவர்கள் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவிலே அதிக தொகையும், முதன் முதலில் ரூபாய் 75,000 நிதி கொடுப்பதாக அறிவித்து, முதல் தவணையாக ரூ.25000 அதற்கான காசோலையை சுற்றுபயணம் செய்ய எழும்பூர் ரயில் நிலைத்தில் இருந்த தமிழக முதல்வர் கர்ம வீரரிடம் ஒப்படைத்தார்.
    நேரு அவர்கள் நம் தலைவர் M.G.R அவர்களுக்கு தன் கைபட எழுதிய கடிதத்தில் ராணுவவீரர்களுக்கு நாட்டிலே இவ்வளவு பெரிய தொகையை மற்றும் முதலில் கொடுத்த தமிழ்நாட்டை சேர்ந்த MGR
    அவர்கள் பெரிய உள்ளம்படைத்தவர் என புகழ்ந்தார்.
    நாட்டு பற்றுடைய நம் தலைவரை புகழ்ந்து எழுதியுள்ளார்.
    அப்படிப்பட்ட தலைவனின் உலகம் முழுவதும் இருக்கும் எண்ணிலடங்காத தொண்டர்களில் நாமும் ஒருவராக மகிழ்வோம், தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே...........இந்த படத்தில் திருவாளர்கள் நேரு, காமராஜ், எம்.ஜி.ஆர்., சுப்ரமணியம் ஆகிய 4 "பாரத் ரத்னா" விருது பெற்ற புண்ணியவான்கள் ... இடம்பெற்ற அரிய புகைப்படம்... Thanks wa.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #442
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கடவுள், இறைவன், ஆண்டவன், தெய்வம், கோவில், என்ற சொல்லை தனது பாடல்களில் அதிகமான அளவில் புகுத்தி, தெய்வ உணர்வினை எளிதாக மக்கள் மனதில் வலியுறுத்தி, நிலை நிறுத்தி "மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்" "வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்" என்று நிரூபித்து, மெய்ப்பித்து காட்டிய தலைவன் பொன்மன செம்மல், புரட்சி தலைவன், எங்க வீட்டு பிள்ளை, வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

    காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
    கடலில் தவழும் அலைகளிலே
    இறைவன் இருப்பதை நான் அறிவேன்
    என்னை அவனே தான் அறிவான்

    இறைவன் ஒருவன் இருக்கின்றான்
    இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
    இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்.

    கடவுள் என்னும் முதலாளி
    கண்டெடுத்த தொழிலாளி
    விவசாயி .... விவசாயி ....
    கடவுள் என்னும் முதலாளி
    கண்டெடுத்த தொழிலாளி
    விவசாயி .... விவசாயி ...

    வருக வருக தேடி வந்த செல்வமே
    நீ வாழ்க வாழ்க தெய்வம் போல என்றுமே.

    கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?
    கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?

    ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
    அதை எப்போதும் காத்திருப்பேன்.

    பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
    தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
    மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
    அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்.

    பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
    சாமிக்கு நிகர் இல்லையா
    பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
    தெய்வத்தின் பிள்ளை இல்லையா.

    கோவில் என்றால் கோபுரம் காட்டும்
    தெய்வம் உண்டு அங்கே
    உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
    எண்ணம் வேண்டும் இங்கே
    கோவில் என்றால் கோபுரம் காட்டும்
    தெய்வம் உண்டு அங்கே
    உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
    எண்ணம் வேண்டும் இங்கே
    பிறந்த நாடே சிறந்த கோவில்
    பேசும் மொழியே தெய்வம்
    இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
    கோபுரமாகும் கொள்கை.

    ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்...
    அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்....
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
    அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
    ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்.

    ஆதி கடவுள் ஒன்றேதான்
    அதைக் காண முடியாது
    ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
    இதில் பேதம் கிடையாது
    உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
    உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
    ஆதிகடவுள் ஒன்றே தான்.

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி
    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி.

    வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
    பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
    நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
    பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
    நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ
    வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்.

    கடவுள் வாழ்த்து பாடும்
    இளங்காலை நேரக் காற்று
    கடவுள் வாழ்த்து பாடும்
    இளங்காலை நேரக் காற்று
    என் கைகள் வணக்கம் சொல்லும்
    செங்கதிரவனைப் பார்த்து
    கதிரவனைப் பார்த்து

    தாயின் வடிவில் வந்து
    என் தெய்வம் கண்ணில் தெரியும்
    தாயின் வடிவில் வந்து
    என் தெய்வம் கண்ணில் தெரியும்
    அவள் தாழ் பணிந்து எழுந்தால்
    நம் தொழிலில் மேன்மை விளையும்.

    மண்குடிசை வாசலென்றால்
    தென்றல் வர வெறுத்திடுமா
    மாலை நிலா ஏழையென்றால்
    வெளிச்சம் தர மறுத்திடுமா
    உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
    ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை.

    உள்ளமென்றொரு கோவிலிலே
    தெய்வம் கண்டேன்
    அன்பே வா.

    அன்பில் வாழும் இதயம் தன்னை
    தெய்வம் கண்டால் வணங்கும்
    எங்கே சொல்லு
    வணங்கும்.

    காத்தும் மழையும் யாருக்கும்தான்
    பொதுவில் இருக்குது
    அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
    கருத்து இருக்குது.

    இறைவா உன் மாளிகையில்
    எத்தனையோ மணி விளக்கு
    தலைவா உன் காலடியில்
    என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
    நம்பிக்கையின் ஒளி விளக்கு

    ஆண்டவனே உன் பாதங்களை
    நான்கண்ணீரில் நீராட்டினேன்
    இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
    இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா...
    (ஆண்டவனே)

    பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
    என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
    உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
    விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
    (ஆண்டவனே)

    மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடி துடிக்கும்
    வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
    உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன்
    மன்னன் உயிர் போகாமல்
    இறைவா நீ ஆணையிடு
    இறைவா நீ ஆணையிடு.....ஆணையிடு
    இறைவா....இறைவா....இறைவா....

    சத்தியம் நீயே தரும தாயே
    குழந்தை வடிவே தெய்வ மகளே
    சத்தியம் நீயே தரும தாயே
    குழந்தை வடிவே தெய்வ மகளே

    ஒன்றே குலமென்று பாடுவோம்
    ஒருவனே தேவனென்று போற்றுவோம்
    அன்னை இதயமாக அன்பு வடிவமாக வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்

    கடவுளிலே கருணை தனை காணலாம்
    அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
    நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியம்
    அங்கு ஒருபோதும் மறையாது அவன் சாட்சியாம்

    பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
    என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
    இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
    நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

    இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
    அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
    அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
    நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்.

    தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
    வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை
    தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
    துயரம் தெரிவதில்லை.

    பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
    அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
    பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
    அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்

    போயும் போயும் மனிதனுக்கிந்த
    புத்தியைக் குடுத்தானே-
    இறைவன் புத்தியை குடுத்தானே -
    அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
    பூமியைக் கெடுத்தானே -
    மனிதன் பூமியை கெடுத்தானே
    போயும் போயும் மனிதனுக்கிந்த
    புத்தியை குடுத்தானே

    பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
    பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
    பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
    பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
    கலைகளை தெய்வமாய் காண வேண்டும்

    ஒருவன் மனது ஒன்பதடா
    அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
    உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
    அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

    கருணை கொண்ட மனிதரெல்லாம்
    கடவுள் வடிவம் ஆகும்.

    என் ஆலயத்தின் இறைவன்
    ஆலயத்தின் இறைவன்

    என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
    என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
    ஒரு குற்றமில்லாத மனிதன் -
    அவன்கோவில் இல்லாத இறைவன்

    என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ
    காவலில் எத்தனை தெய்வமோ
    மன்னனுக்கெத்தனை உள்ளமோ
    மனதில் எத்தனை வெள்ளமோ.

    காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க
    கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க.

    கடவுள் செய்த பாவம்
    இங்கு காணும் துன்பம்
    யாவும் என்ன மனமோ என்ன குணமோ
    இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
    மனிதன் கொண்ட கோலம்.

    கடவுள் ஏன் கல்லானான் -
    மனம் கல்லாய் போன மனிதர்களாலே........... Thanks wa.,

  4. #443
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முகராசி ..........
    __________
    கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் எந்த
    காரியத்தை செய்வதற்கும் தேதி
    குறிப்பார் நல்ல
    சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
    தேதி வைத்துவிட்டதடியோ
    கணக்கில் மீதி
    வைக்கவில்லையடியோ

    கவிஞர் கண்ணதாசன்

    என் அனுபவம்
    __________________
    அறிவு மட்டும் சுயநலம்
    கருணை மட்டும் அப்பாவித்தனம்
    இவை இரண்டும் கலந்தது தான் முழு மனிதன் இவை மக்கள் திலகத்திடம்
    மிகுந்து காணப்பட்டதால் தான்
    மனிதநேயம் மிளிர்ந்தது !

    ஹயாத் ! Thanks wa.,

  5. #444
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -10/07/19



  6. #445
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #446
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை அகஸ்தியாவில் தொடர்ந்து 5 வது வாரமாக தர்மம் தலை காக்கும், காவல்காரன் , எங்க வீட்டு பிள்ளை , நினைத்ததை முடிப்பவன் படங்களை அடுத்து
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 2 காட்சிகளில் வெளியாகிறது .

    கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் வெளியாகி வெற்றிநடை போட்டது .மீண்டும்
    இரண்டாவது முறையாக குறைந்த இடைவெளியில் வெளியாகியுள்ளது .

  8. #447
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #448
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "புதிய பூமி " வெளியாகிய நாள் : 27/06/1968
    51 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
    கதிரவன் என்கிற பெயரில் மருத்துவராக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஏழை எளியோர்க்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் உன்னத கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார் . ஜெயலலிதா வெகுளிப்பெண்ணாகவும் நடிகை ஷீலா மருத்துவராகவும் சிறப்பித்தனர் .
    திரைக்கதை :வி.சி.குகநாதன் வசனம் : தென்னரசு, இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்கம் : சாணக்யா . ஜேயார் மூவிஸ் தயாரிப்பு . பாடல்கள் அனைத்தும் இனிமை .
    1.நான்தாண்டி காத்தி 2. நெத்தியிலே போட்டு வைச்சேன்
    3.விழியே விழியே . 4.சின்னவளை முகம் சிவந்தவளை (காதல் பாடல்கள் ) கேட்க கேட்க ,பார்க்க, பார்க்க சலிக்காதவை
    5.நான் உங்கள் வீட்டு பிள்ளை -பூவை செங்குட்டுவன் எழுதிய பல பல்லவிகளில்
    இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அருமையான பாடல். தேர்தல் பிரச்சார காலங்களில்
    அதிகம் பிரயோகப்படுத்தும் பாடல்களில் ஒன்று .ரசிகர்கள் /பக்தர்கள் கைபேசியில்
    இந்த பாடலை காலர் ட்யூன் ஆக பெரும்பான்மையாக பயன்படுத்துகின்றனர் .
    நாகேஷ் ரமாப்ரபா, ராமராவ் நகைச்சுவை கூடுதல் பலம் .
    முதல் வெளியீட்டில் சுமாரான வெற்றியை பெற்றிருந்தாலும், மறுவெளியீடுகளில்
    பகல் காட்சி மற்றும் ரெகுலர் காட்சிகளில் தொய்வில்லாமல் வெற்றிநடை போட்ட படம் .


  10. #449
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


  11. #450
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •