-
29th April 2020, 10:54 AM
#1
Junior Member
Diamond Hubber
Makkal Thilagam MGR Part 26
With all our friends blessings to day I am starting our MAKKAL THILAGAM MGR PART 26.
-
29th April 2020 10:54 AM
# ADS
Circuit advertisement
-
29th April 2020, 11:18 AM
#2
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாகம் 26
இன்று வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது
இந்தப்பாகத்தை துவங்கி வைத்த திரு சுகாராம்
அவர்களுக்கு நன்றி.
மக்கள் திலகத்தின் திரையுலக அரசியல் சாதனைகளை
அன்பு நண்பர்கள் தொடர்ந்து பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
29th April 2020, 11:52 AM
#3
Junior Member
Diamond Hubber
அனைவருக்கும் நல் வணக்கம்... நல்வரவு... நல்வாழ்த்துக்கள்... எல்லாம் வல்ல இறைவன் அருளால் உலகமெங்கும் சுபிட்சமாக வாழ கடைக்கண் பார்வை பார்த்து ஆசிர்வதிகட்டும்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., புதிய பாகம் 26 தொடங்கப்பட்டத்தில் மிக்க மகிழ்ச்சி... நம் சகோதரர்கள் எல்லோரும் மக்கள் திலகம் மாண்பினை பல்வேறு கோணங்களில் பதிவு செய்ய வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்... நன்றி...
-
29th April 2020, 11:56 AM
#4
Junior Member
Diamond Hubber
தற்பொழுது
சன் லைப் தொலைக்காட்சியில்
அரச கட்டளை
-
29th April 2020, 12:43 PM
#5
Junior Member
Diamond Hubber
MGR Filmography (1962 Film 53) Poster
1962ஆம் ஆண்டு ராணி சம்யுக்தா மாடப்புறா ஆகிய இரண்டு சராசரி படங்களுக்கு பிறகு அந்த வருட சித்திரைப் பிறப்பன்று எம்ஜியாருக்குப் புத்துயிர் கொடுக்க வெளியானது தாயைக் காத்த தனயன்.
எம்ஜியாரின் ஆஸ்தான ப்ரொட்யூசர்களில் ஒருவரான சின்னப்பா தேவர் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு வழக்கம்போல ஆரூர்தாசின் கதை வசனத்தில் கேவி மகாதேவன் இசையமைக்க, எம்ஏ திருமுகம் இயக்க, எம்ஜியார் படங்களில் தவறாது தோன்றும் சரோஜாதேவி, அசோகன், எம் ஆர் ராதா அனைவரும் நடித்தனர். படத்தில் மிருகங்களுடனான சண்டைக்காட்சிகள் மிகுந்த பாராட்டைப் பெற்றன. தாய்க்குப் பின் தாரம் படத்திலிருந்தே தேவரின் படங்களில் ஏதேனும் ஒரு மிருகம் முக்கியத்துவம் பெறுவது என்பது வழக்கமாக இருந்தது. இதில் புலியின் உறுமலும் சீற்றமும் விசேஷம் பெற்றன.
மொத்தம் ஏழு பாடல்கள், ஏழும் ஹிட் ஆகின. வழக்கமான ஆக்ஷன் சீக்வன்ஸுகள் மட்டுமல்லாமல் எம்ஜியாருக்குப் பல உணர்ச்சிகரமான காட்சிகளையும் கொண்டிருந்தது இந்தப் படம். எம்ஆர் ராதா இரட்டை வேடம் ஏற்றிருந்ததும் அதை அழகான சஸ்பென்ஸ்ஃபுல் த்ரில்லராகச் செய்திருந்ததும் படத்தின் வெயிட்டை அதிகரித்தன.
சென்னையில் எம்ஜியார் படங்கள் வழக்கமாக வெளியாகும் ப்ளாசா, மஹாலஷ்மி, பாரத் ஆகிய தியேட்டர்களிலும், சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களிலும் நூறு நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது இப்படம். இலங்கையிலும் அவ்வாறே நூறு நாள் படமானது.
ஆக்ஷன், செண்டிமெண்ட், இசை போன்ற மசாலாக்களை எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்து பர்ஃபெக்ட்லி பேக்கேஜ்ட் ஃபிலிம் என்பதற்கான உதாரணங்களில் இப்படமும் ஒன்றானது........ Thanks...
-
29th April 2020, 12:57 PM
#6
Junior Member
Diamond Hubber
#தலைவரின்_நேற்றுஇன்றுநாளை
[ 12 - 07 - 1974 ]
தலைவர் இயக்கம் கண்டு திண்டுக்கல் இடைத்தேர்தல் இமாலய வெற்றிக்குப் பிறகு வெளியான சூப்பர் ஹிட் காவியம்.
திமுக ஆட்சியை இழந்ததற்கும் அதன் பின்பு தலைவர் இருக்கும் காலம் வரை திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கும் தலைவரின் இந்தப் பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
குறிப்பாக 1974 நேற்று இன்று நாளை
ரிலீஸான நாள் முதல் 1977 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை கிராமங்களில் நடைபெறும் இல்ல சுபகாரியங்களில் கூட இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் ஒலி பரப்புவார்கள்...
திமுகவினருக்கு வரும் ஆத்திரத்திற்கு அளவே கிடையாது.
இந்தப் பாடலில் வரும் வரிகளான...
மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்...
தம் மக்கள் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...
என்ற வரிகள் நேரடியாக கலைஞரையே தாக்குவதாக உள்ளதால் திமுகவினரின் ஆத்திரம் தலைவர் மீது மட்டுமல்ல...
இந்தப் பாடலை எழுதிய வாலி அவர்களையும் தயாரிப்பாளர்
நடிகர் S.A. அசோகன் அவர்களையும்
விட்டு வைக்கவில்லை.
மக்கள்திலகம் ரசிகர்களின் பேராதரவில் மாபெரும் வெற்றிப்படம் மட்டுமல்ல...
தலைவர் அரியணை ஏறுவதற்கும் கலைஞர் சொன்னாரே 14 ஆண்டு கால வனவாசம் என்று...
அதை நிறைவேற்றியதில் பெரும்பங்கு வகித்த பாடல் இது...
நெல்லை எழில்மிகு பார்வதி திரையரங்கில் இந்த திரைப்படத்திற்கு திரண்ட மக்கள் சமுத்திரம் போல் பார்வதி திரையரங்கில் எந்த திரைப்படத்திற்கும் வந்ததில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கொடுக்கும் சாட்சியாகும்.
இத் திரைக்காவியத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்க புரட்சித்தலைவர் புகழ்
#இதயதெய்வம்........... Thanks.........
-
29th April 2020, 12:53 PM
#7
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் வீரமும்
இன்றைய கோழை கஞ்ச நடிகர்களும்
பணம் அதிகம் இல்லை பிரபலம் ஆகிவரும் காலம் என்ற போதும் இந்தியா சைனா போர் பிரமரின் வேண்டுகோள் இந்தியாவிலே முதல் குடிமகனாய் அதிக பணம் கொடுத்தது எம்.ஜி.ஆர்.
உலகிலே ஒரு கட்சி கொடியை தன் ஸ்தாபனத்தின் அடையாளமாக திரையில் காட்டிய முதல் வீரநடிகர் எம்ஜிஆர் . உலகத்திலேயே ஒரு கட்சி எதிர் கட்சியாக கூட வராத காலத்தில் துணிந்து அக்கட்சியின் கொடியை தன் படத்தில் காண்பித்த அடலேறு மாவீரர் எம்.ஜி.ஆர்., மட்டுமே.
ஊழலை எதிர்த்து தனி கட்சி அமைத்ததால் தன் லட்சிய படம் இறங்க ஆளும் கட்சி அதிகாரம் குண்டர் படை கொண்டு தடுத்த போதும் படத்தை வெளியிட்டு அதுவரை தமிழ் திரையுலகம் கண்ட அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்தார் எம்ஜிஆர்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை எம்ஜிஆர் குணமடா
இன்றைய நடிகர்கள் பதவி மோகம் கொண்டு பைத்தியமா ஆட்சியை பிடிக்க நடிகன் என்ற ஒரே தகுதி போதும் என உளறி கொண்டு திரிகிறார்கள்
தமிழனை படுகொலை செய்து கொத்து கொத்தாக குண்டு வீசி அளித்த போது களம் இறங்காத நடிகர்கள் பதவி அடைய வயதாகி மார்கெட் போன பின் களம் இறங்க போறாங்களாம்
எம்ஜிஆர் நடிகன் என்பதால் மட்டும் மக்கள் ஆதரிக்க வில்லை மனிதநேய வள்ளல் ஒரு தெய்வப்பிறவி என்பதால் தான் என்பதை உணரவேண்டும்
வாழ்க எம்ஜிஆர் புகழ்........ Thanks...
-
29th April 2020, 01:07 PM
#8
Junior Member
Diamond Hubber
Cont-1
பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.......... Thanks.........
-
29th April 2020, 01:11 PM
#9
Junior Member
Diamond Hubber
இனிய பிற்பகல் வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
நாளை போடப்போறேன் #சட்டம் – பொதுவில்
நன்மை புரிந்திடும் #திட்டம்
நாடு நலம் பெறும் #திட்டம்
என்று நாடோடி மன்னன் படத்தில் பாடிய படியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். ஒப்பனையும் ஒரிஜினலும் ஒன்றுகலந்ததாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை அமைந்துவிட்டதால் அவரை சினிமா எம்.ஜி.ஆர் என்றும் அரசியல் எம்.ஜி.ஆர் என்றும் பிரித்துப் பார்க்க இயலவில்லை.
#தொழிலாளியாக_எம்ஜிஆரின்_நலத்_திட்டங்கள்
ஏழை பங்காளன் என்று மக்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம்., ரிக்*ஷாக்காரனாக, பெயின்டராக, வண்டி இழுக்கும் தொழிலாளியாக, பரிசலோட்டியாக, கிணறு தூர் வாருபவராக பல வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனால் அவர் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தொழிலாளிகளிடையே காணப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்தபடியே எம்.ஜி.ஆரும் நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர் மற்றும் பனையேறும் தொழிலாளிகளுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அறிமுகம் செய்தார்....... Thanks...
-
29th April 2020, 01:27 PM
#10
Junior Member
Veteran Hubber
ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தை 01-07-1982 முதல் அறிமுகப்படுத்தினார்.
மதிய உணவுத்திட்டம் என்று ஏற்கனவே ஒரு சில பள்ளிகளில் மட்டுமே இருந்த திட்டம் சரிவர நடத்த முடியாமல்இருந்ததால் இத்திட்டத்தை மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தி சாதாரண உணவாக இல்லாமல் சரிவிகித சத்துணவுத்திட்டமாக மாற்றினார். இதற்கு அதிகாரிகள் அதிகமாக செலவாகும் என்றும் செயல்படுத்துவது கடினம் என்றும் கூற இத்திட்டத்தை எப்பாடு பட்டேனும் நிறைவேற்றுவேன் என்று கூறி சாதித்தும் காட்டினார். இன்றைக்கு உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் நீதிபதிகள் என நிறைய பேர் இத்திட்டத்தினால் பயன்பெற்றவரே. இதை அவர்களே பல நேரங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இத்திட்டத்தை இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்றி பின்னர் ஐ. நா சபையே அதை பாராட்டியது. ஆனால் முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் இந்த சாதனையை இன்றைய தலைமுறையினருக்கு சரிவர கொண்டு சேர்க்கவில்லை. இனிமேல் பக்தர்களாகிய நாம் நம் ஆண்டவன் நிகழ்த்திய சாதனைகளை ஒவ்வொன்றாய் இன்றைய தலைமுறையினர் நன்கு அறியும் வண்ணம் செய்ய வேண்டியது நமது கடமையாகும். நம் உறுப்பினர்கள் இந்த சாதனை சம்பந்தமாய் தாங்கள் அறிந்தவற்றை பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
வி. கலியபெருமாள். புதுச்சேரி
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜியார்.
Bookmarks