Page 160 of 210 FirstFirst ... 60110150158159160161162170 ... LastLast
Results 1,591 to 1,600 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1591
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #என்றென்றும்_மக்கள்_திலகம்

    இந்த ரஜினிகாந்த் எபிசோட் நமக்கு உணர்த்தும் மற்றொரு உண்மை...எந்த நடிகனுமே இனி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆக முடியாதுங்கறதுதான்...

    நாடகங்களில் நடித்த காலங்களில் தூண் காலில் விழுந்து நடக்கவே முடியாத போதும், துப்பாக்கியால் சுடப்பட்டு பேசவே முடியாத நிலையிலும் , தன்னுடைய ஆட்சி 1980 ல் கலைக்கப்பட்டபோதும், 1984 ம் ஆண்டு இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய போதும், தீவிரமான கள அரசியலில் இருந்து அவர் பின்வாங்கியதே இல்லை. மக்களை சந்திப்பதை ஒரு தவமாகவே நினைத்தார். அரசியலிலும் வென்றார்...!!!

    இது அரசியல் அல்ல...உண்மை..!!!.........Sr.Bu...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1592
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கண்ணதாசனின் #வாத்தியார்

    மாட்டுக்காரவேலன் படத்திற்கு ஒரு பாடல் கண்ணதாசன் எழுதினார்...

    அதைப் படித்துப் பார்த்த மக்கள்திலகம்
    அந்தப்பாடலில் இரண்டுவரிகள் ஆபாசமாக இருக்கின்றன.
    என்னுடைய படங்களை குடும்பத்தோடு வந்து பெண்கள் பார்ப்பார்கள்...

    கதாநாயகியின் வாயிலிருந்து வருகின்ற இந்த ஆபாசமான பாடல் வரிகள்...
    இது நம் நாட்டுப் பெண்களையே அவமானப்படுத்தியது போன்று ஆகிவிடும்

    அந்த வரிகளை மாற்றி எழுதி வாருங்கள் என்று உதவிடைரக்டர் ராஜசேகரிடம் கொடுத்து அனுப்பினார் மக்கள்திலகம்... ராஜசேகர்கண்ணதாசன் வீட்டிற்கு சென்றார்.

    "எம்ஜிஆர் பாடலை மாற்றச் சொன்னாரா?" என்று கேட்டு விட்டு பாடலை மாற்றி எழுதினார் கண்ணதாசன் அவர்கள்.
    பிறகு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது

    வக்கீல் எம்ஜிஆரும்....மாட்டுக்கார எம்ஜிஆரும்

    தன் காதலிகளுடன் சேர்ந்து பாடுவதைப் போல் அந்தப் பாடல் அமைந்திருக்கும்.

    வக்கீல் எம்ஜிஆர் :

    பள்ளிக்கணக்கு
    கொஞ்சம் சொல்லி பழக்கு இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு...

    கதாநாயகி :

    போடுங்கள்
    கூண்டில் ஏற்றுங்கள்
    நான் போதும் என்று
    சொல்லும் வரை
    நீதி சொல்லுங்கள்...

    இந்த வரிகள் தான் முதலில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள்...

    இந்த வரிகள் ஆபாசமாக உள்ளது என்று மக்கள்திலகம் மாற்றச்சொன்னார்

    #மக்கள்திலகம் #சொல்லிய #பிறகு #மாற்றிய #வரிகள்....

    "போடுங்கள்...
    கூண்டில் ஏற்றுங்கள்
    உங்கள் பொன்மனதை
    சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்..."

    மக்கள்திலகம் தன்னுடைய பாடலில் ஆபாசமான வார்த்தைகளின் சாயல் துளிக்கூட வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பார்.

    மக்கள்திலகம் தன் படங்களில் நீதி நேர்மை, சத்தியம், தாய்ப்பாசம், தர்மம், ஒழுக்கத்தைப் போதித்தவர்...

    "என் பாடல் வரிகளை ஒருவர் திருத்துகிறார் என்றால் அது எம்ஜிஆராகத் தான் இருக்கமுடியும்...!" என்று கூறியவர் கண்ணதாசன் அவர்கள்......bsm...

  4. #1593
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அந்த மனிதன் மேல் அவ்வளவு அபிமானம் ஒரு காலமும் இல்லை , எப்படியோ சினிமாவில் நுழைந்து தமிழரை மயக்கி திராவிட அரசியலை ஆட்சிக்கு கொண்டுவந்தார் என்பது உண்மை...

    சினிமாவிலும் அரசியலும் தன்னை நிலைநிறுத்த பலரை பலிகொடுத்தார் என்பதும், மிகபெரிய தந்திரங்களையெல்லாம் செய்தார் என்பதும் உண்மை, அவரின் தந்திரம் முன்னால் கருணாநிதி காலளவு கூட வரமுடியாது.

    ஆனால் அந்த மனிதருக்கு தெய்வத்தின் வரம் இருந்ததை உணரமுடிகின்றது, கர்ணன் போல் இருந்த இடம் தவறாக இருந்தாலும் ஒரு ஆசீர்வாதமும் தெய்வத்தின் சரியான கணக்கும் அவரிடம் இருந்ததை புரிந்து கொள்ள முடிகின்றது.

    ஏதோ ஒரு நோக்கத்துக்காக அவர் வந்தார், வென்றார், ஆண்டார், என்பதை இப்பொழுது தெளிவாக பார்க்க முடிகின்றது...

    இப்பொழுதெல்லாம் அந்த மனிதரின் வாழ்வினை நோக்கும் பொழுது சிந்தனை மாறுகின்றது. அவரை தெய்வம் நடத்தியிருப்பது புரிகின்றது...

    இலங்கையில் பிறந்து வறுமையில் சிக்கி அவர் இங்கு வரவும், இங்கும் படிக்க வழியின்றி நாடக கூட்டம் செல்லவும் விதி இழுத்து வந்திருக்கின்றது

    வசதி இருந்தால் இலங்கையிலே இருந்திருப்பார், தமிழகத்தில் வாய்பிருந்தால் படிக்க சென்றிருப்பார், அவர் வாழ்வில் வறுமை விதியாக செயல்பட்டு மிக சரியாக இழுத்து சென்றிருக்கின்றது

    அட அப்பொழுதும் தானாக வென்றிருந்தால் அவரோ அவரின் அரசியலோ இல்லை. தமிழகத்தில் நாத்திக மேகங்கள் சூழ்ந்த பொழுது அவர் சினிமாவில் போராடிகொண்டிருந்தார்

    பாடவும் வராமல் வசனம் பேசவும் வராமல் விரக்தியாய் அவர் கழுத்தில் ருத்ராட்சமும் நெற்றியில் விபூதியுமாக முருகனிடம் அழுவதும் கதறுவதுமாய் இருந்தார், அப்படியும் ஒரு காலம் அவருக்கு இருந்தது

    அவர் தொட்டதெல்லாம் தோல்வி, ஒரு பக்கம் சொந்த சிக்கல்களும் உறவு சரிவுகளும் ஏராளம்.

    கருணாநிதியுடன் அவரை தெய்வமே சேர்த்தது, மறுப்பதற்கில்லை ஆரம்பகால ராமச்சந்திரனுக்கு கருணாநிதியின் வசனங்கள் கைகொடுத்தன. அந்த நட்பே அவரை திமுகவுக்கும் இழுத்து சென்றது

    அங்கும் அவர் கூட்டத்தில் ஒருவராய் இருந்தாரே தவிர நாத்திகம் பேசவில்லை

    கருணாநிதி அரசியலில் தீவிரமாய் இருந்த காலத்தில் வசன உலகைவிட்டு விலகிய காலத்திலும் ராம்ச்சந்தர் தொழிலில் கவனமாய் இருந்தார்...

    அந்த தொழிலிலும் ஒரு நேர்மை இருந்தது, அவர் புரட்சிகட்சி அபிமானி என்றாலும் புரட்சி நடிகர் என்றாலும் மக்களுக்கு தவறான கருத்தை ஒரு இடத்திலும் போதிக்கவில்லை...

    தமிழக மக்கள் தன்னை உற்று பார்க்கின்றார்கள் கவனிக்கின்றார்கள் என்றவுடன் நல்ல விஷயங்களை சொல்லத்தான் விரும்பினார், கடவுள் மறுப்போ, குடியோ, சிகரெட்டோ, தன் படங்களில் வராமல் பார்த்துகொண்டார், பிரிவினைவாதமோ, குதர்க்கமோ, காங்கிரஸ் எதிர்ப்போ ,அவர் படங்களில் செய்யவில்லை

    அதை தெய்வமும் பார்த்துகொண்டே இருந்தது...

    சந்தேகமில்லை அவர் திமுகவில்தான் வளர்ந்தார், ஆம் அர்ஜூனனும் துரியோதனனும் ஒன்றாகத்தான் கங்கை கரையில் வளர்ந்தார்கள்

    ராமச்சந்திரன் மக்களின் அபிமான நடிகர் என உயரத்தில் மின்னினார், சிவாஜியோ யாரோ எதுவோ அவரை அசைக்க முடியவில்லை, அவரின் தர்மம் அவரை உயர்த்திகொண்டே இருந்தது...

    அவரை எதிர்த்தவர்களெல்லாம் தோற்கும் படி அவருக்கு ஒரு ஜாதகமும் அமைந்திருந்தது...

    பின் விதி எம்.ஆர் ராதா துப்பாக்கிவடிவில் வந்தாலும் தெய்வம் அதிலும் அவரை காத்தது, ஆம் அதுகாலம் அவரை அந்த இடத்துக்கு இழுத்து வந்த தெய்வம் அவருக்கு கடமை மிச்சம் இருக்க இரண்டாம் வாழ்வு கொடுத்தது...

    திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் உண்மை முகத்தை உணர்ந்தார் ராமச்சந்திரன்

    அவர் மட்டும் இல்லையென்றால் தமிழகத்தில் ஏது திமுகவுக்கு எதிர்ப்பு? யார் எதிர்சக்தி?

    ராமச்சந்திரன் இல்லையென்றால் தமிழகம் இப்பொழுது குட்டி ஆப்கன்? குட்டி பாகிஸ்தான்? குட்டி முல்லைதீவு ஆயிருக்காதா என்றால் நிச்சயம் ஆகியிருக்கும்

    குறைந்தபட்சம் மேற்கு வங்கம் போல் நாசமாயிருக்கும், கருணாநிதி 50 ஆண்டுகால முதல்வராக இருந்திருப்பார், தமிழகத்தில் காஷ்மீரிய தீவிரவாத இயக்கம் போல அவர் குடும்பமே ஏரியாவுக்கு ஒன்றாக ஆண்டு கொண்டிருக்கும், அதில் இந்து மதமும் ஆலயங்களும் சரிந்திருக்கும், நசுங்கியிருக்கும்

    அதை தமிழ் தமிழகம் திராவிடம் என மிக சரியாக மறைப்பார் கருணாநிதி*

    நாத்திகமும் போலி தமிழும் அப்பட்டமான இந்தி மற்றும் இந்திய எதிர்ப்பும் கொண்ட திமுக தமிழ்நாட்டை நாசத்திலும் நாசம் செய்திருக்கும்

    உரிய நேரத்துக்காக தெய்வம் அவரை திமுகவிலே ஒளித்து வைத்திருந்தது, ஆண்டவனின் விளையாட்டு அர்ஜூனன் வாழ்விலும் அப்படியே, ராமச்சந்திரன் வாழ்விலும் அப்படியே

    தன் பலம் தெரியா, அறியா அனுமன் போல அடங்கிகிடந்த ராமச்சந்திரனுக்கு அவர் பலத்தை தெரியவைத்தது இந்திரா காந்தி

    அதன் பின் விஸ்வரூபம் எடுத்தார் ராம்ச்சந்தர்

    ஒரு விஷயம் நிச்சயம் சொல்லமுடியும், ராமச்சந்திரன் பக்திமானாய் இருந்தார். கடவுள் மறுப்பு நாத்திகம் இந்து மதத்தாரை புண்படுத்துதல் அவரிடம் இல்லை

    இந்து ஆலயங்கள் புனரமைக்க உதவினார். திருவரங்க ஆலயம் முதல் தென்காசி ஆலயம் வரை அவரால் நடந்த திருப்பணிகள் ஏராளம்

    அள்ளி கொடுத்ததில் அவருக்கு நிகர் அவரே, அதை அவரின் எதிரியும் மறுக்கமுடியாது

    அவரின் வாழ்வினை கூர்ந்து பார்த்தால் ஒரு கட்டத்துக்கு பின் ஒரு சித்தனின் மனநிலை இருந்திருக்கின்றது

    சொந்தவாழ்வினை அவர் பெரிதாக நினைக்கவில்லை, கொடுமதியாளனான* கணவனை ஜானகி அடைக்கலம் தேடியபொழுது கொடுத்தார், தன் தொடக்ககால படங்களின் நாயகி எனும் ஒரு இரக்கம் இருந்தது

    முடிந்துபோன சொந்தவாழ்வில் இனி யார் வந்தால் என்ன? போனால் என்ன? என்ற ஒரு விரக்தி இருந்தது

    ஜெயலலிதாவுக்கும் அவருக்கும் இருந்த உறவு எத்தகையது எனபதை ஜெயலலிதா சொல்கின்றார்

    "அவருக்கு என் மேல் இரக்கமே இருந்தது , ஒரு புத்திசாலி பெண் விதிவசத்தால் சினிமாவில் சிக்கிகொண்டாளே எனும் அனுதாபம் இருந்தது

    சினிமா தொழிலில் இருந்ததால், அந்த உலகை முழுக்க அறிந்ததால், என்னை காக்கும் கவனத்தில் இருந்தார்

    நான் ஒருமுறை வீட்டில் விழுந்து காயமுற்றபொழுது எல்லோரும் என் வீட்டுசாயினை அதாவது பணமிருக்கும் பீரோசாவியினை தேடியபொழுது என்னை மருத்துவமனையில் சேர்த்து சொந்தங்களிடம் கவனமாயிரு அவர்கள் உன் சொத்தில் குறியாய் இருக்கின்றார்கள் என எச்சரித்தது அவர்தான்

    அந்த சினிமா உலகில் அவரே எனக்கு பாதுகாப்பும் வழிகாட்டியுமாயிருந்தார், அந்த பலத்தில்தான் நான் நடித்தேன், அப்படியே அவரை தொடர்ந்து அரசியலுக்கும் வந்தேன்"

    ஆம், ராமச்சந்திரனின் வாழ்வின் பல இடங்களில் இதை பார்க்கலாம், பெண்கள் மேல் அவருக்கொரு இரக்கம் இருந்திருக்கின்றது, அதுவும் சினிமா பெண்கள் என்றால் பரிதாபம் மேலோங்கியிருக்கின்றது

    சரோஜா தேவியின் கணவர் இறந்தபொழுது அவரை எம்பி ஆக்க கூட முயன்றிருக்கின்றார்

    என்னவும் எண்ணிகொள்ளுங்கள், ஆனால் பழையவர்களை மறக்கா ஒரு குணம் அவரிடம் இருந்திருக்கின்றது

    பழகியவர்கள், உதவியர்கள் என எல்லோரையும் தேடி சென்று உதவினார், நன்றி எனும் குணம் அவரிடம் இருந்தது.

    பத்திரிகையாளர் தொழிலதிபர் முதல் எத்தனையோ பேர் வறுமையுற்றால் ஓடிசென்று உதவியிருகின்றார், வாழ்ந்தவன் கெட கூடாது என்பது அவரின் கொள்கையாய் இருந்திருக்கின்றது

    தனக்கு ஒருவன் விசுவாசமாயிருந்தால் தன்னை நம்பினால் அவனை உச்சத்தில் தூக்கி வைக்கும் குணம் அவரிடம் இருந்திருக்கின்றது

    அது ஜேப்பியாராக இருந்தாலும் சரி, வலம்புரி ஜானாக இருந்தாலும் சரி, பிரபாகரனாக இருந்தாலும் சரி, நம்பிவிட்டானா சரி காப்பாற்றிவிடலாம்...

    இதை சரியாக கவனித்த தமிழகமே எத்தனையோ கட்டுகதைகளை தாண்டி, பொய் புரட்டை தாண்டி அவரை கொண்டாடியது

    மக்களின் பசி முதல் ஒவ்வொரு வேதனையும் அனுபவபூர்வமாக அறிந்தவர் என்றமுறையில் மக்களோடு எளிதில் ஒட்டினார்

    நிச்சயம் தனிகட்சி அவரின் விருப்பம் அல்ல, காமராஜரோடு ஒட்டவே விரும்பினார் ஆனால் அவரை சேர்க்காமல் காமராஜர் செய்த தவறே இங்கு காங்கிரஸ் காலாவதியாக பெரும் காரணம்

    வேறு வழியின்றிதான் தனிகட்சி கண்டார் ராமச்சந்திரன்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வரம் அமையும்.

    பேச்சு, எழுத்து, நடிப்பு, அரசியல், ஓவியம் தொழில் என எதுவோ இறைவனால் கொடுக்கபடும். அதில் அவன் புகழ்பெறுவதை ஆண்டவன் பார்த்துகொண்டே இருப்பான்...

    உச்சத்தில் இருக்கும் ஒருவன், ஏராளமானோர் தன்னை கவனிக்கும் நிலையில் இருக்கும் ஒருவன் என்ன செய்கின்றான் என கவனமாய் அவன் நோக்கிகொண்டே இருப்பான்...

    ராமச்சந்திரனுக்கும் அந்த வாய்ப்பினை அவர் முகம் மூலம் , தொழில் மூலம் ஆண்டவன் வழங்கினான்...

    அதில் ராமச்சந்திரன் நல்ல கருத்துக்களை சொன்னதில் ஆண்டவன் மகிழ்ந்தான், அந்த செந்நாய் கூட்டத்தில் ராமச்சந்திரன் மட்டும் கோவில் யானையாக கடவுளுக்கு அடங்கி நாத்திகம் பேசாமல் இருந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி

    தாயினை மதிப்பது, குடி போன்ற சமூக தீமைகளை தவிர்ப்பது ,ஏழைகளுக்கு இரங்குவது போன்ற நல்ல கருத்துக்களை அவன் சொல்ல சொல்ல ஆண்டவன் மகிழ்ந்தான்...

    பாடலிலும் படத்திலும் சமூகத்தினை தவறாக திசை திருப்பும் ஒரு வார்த்தையோ காட்சியோ அவன் அனுமதிக்கவில்லை என்பதில் தன் வரம் மிக சரியாக பயன்படுவதை ஆண்டவன் கண்டான்...

    இந்த பண்புகளால் மென்மேலும் ஆசீர்வாதம் குவிந்தது...

    சினிமாவில் வசனகாலம் மாறியது, ராமச்சந்திரன் நின்றார்

    வாள்சண்டை காலம் மாறியது , ராமச்சந்தரன் நின்றார்

    நீண்ட பாகவதர் கொண்டை காலம் மாறி மார்டன் படங்கள் வந்தன, ராம்ச்சந்தரின் நின்றார்.

    சிவாஜிகணேசன் உட்பட யாரெல்லாமோ வந்தார்கள், கண்ணதாசன் வந்தார், சவால்விட்டு சந்திரபாபு வந்தார் , உதயநிதி போல முக முத்து வந்தார்

    இன்னும் யாரெல்லாம் வந்தார்கள்

    ஆனால் முருக பக்தரான சின்னப்பதேவர் உட்பட பலர் வந்து ராமச்சந்திரனை தாங்கிபிடித்தபடியே இருந்தார்கள்...

    ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து அவரை தாங்கினார், அது தெய்வத்தின் அருள்...

    அந்த அருளே அண்ணாவுக்கு பின்னரான கொடும் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் அவரை தமிழகத்தின் மீட்பராகவும் மாற்றிற்று.

    கொடிய நாத்திகத்துக்கும், தேசவிரோத கும்பலுக்கும், இங்கு அவராலே கடிவாளம் இடபட்டது

    ராமச்சந்திரன் வந்திராவிட்டால் தமிழகம் நாத்திக கருப்பு சட்டையின் பிடியில் முழுக்க சிக்கி மிகபெரும் தேசவிரோத செயல்களின் கூடாரமாயிருந்திருக்கும்...

    முள்ளிவாய்க்கால் போல அடிக்கடி இங்கு மொத்தமாய் ரத்த ஆறு ஓடியிருக்கும், சண்டாள நாத்திக கோஷ்டி காஷ்மீர் போல இங்கும் மாற்றியிருக்கும்...

    அதை தடுக்க முருகபெருமானால் அனுப்பிவைக்கபட்ட ஒரு அருள்பெற்ற நபர் ராமச்சந்திரன்

    அவர் முருகபக்தர் , காண்பவரை எல்லாம் "ஆண்டவனே.." என்றே அழைப்பார்

    நடந்தவைகளை நாம் நினைத்து பார்த்து ராமச்சந்திரன் இங்கு வந்ததும் நடித்ததும் கட்சி தொடங்கியதும் தமிழகத்தை காக்க தெய்வத்தின் அருளால் அனுப்பட்டவர் என உணர்ந்தை அன்றே ஒருவர் உணர்ந்திருக்கின்றார்

    அவரும் முருகபெருமானின் அடியாரே...

    ஆம் ,அந்த கிருபானந்தவாரியா ரியின் ஞானகண்களுக்கு இந்த காட்சிகள் என்றோ தெரிந்திருக்கின்றன*

    இதனால்தான் "பொன்மனசெம்மல்" என பட்டம் அருளி மனமார வாழ்த்தியிருக்கின்றார்...

    அம்மாதிரி நல்லவர்களின் வாழ்த்துதான் ராம்சந்திரன் இன்றளவு பழனிச்சாமி உருவில் அமர்ந்து திமுகவுக்கு தண்ணிகாட்ட முடிகின்றது...

    நம்புகின்றீர்களோ இல்லையோ, திமுக எனும் நாத்திக தேசபிரிவினைவாத இம்சை கட்சி இருக்குமளவும் இங்கு ராமச்சந்திரன் வாழ்வார், அந்த கோஷ்டிக்கு கடிவாளம் இட்டுகொண்டே ஓட அடிப்பார்...

    இது தெய்வத்தின் விளையாட்டு, ஆழ கவனித்தால் புரியும்...

    ஆம் கட்சிக்கும் பதவிக்கும் ஆசைபட்டு தன் மனசாட்சியினை கொன்று கடவுள் மறுப்பு பேசாமல், பெரும் உயரத்தில் இருந்தும் மக்களை ஏமாற்றும் சொல்லை சொல்லாமல் , முடிந்தவரை உதவி, பசிபோக்கி, தனக்கு பின்னும் எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு விட்டு சென்ற அந்த நல்மனதை ஆண்டவனுக்கு பிடித்திருந்தது

    அதனாலே அவன் மூலமே இங்கு நாத்திகத்தை ஓட அடித்து இப்பூமியினை ஓரளவு காத்தும் கொண்டது தெய்வம்

    திமுக இருக்கும் காலம் வரை அதிமுகவும் இருக்கும். திமுகவின் தேசவிரோத இந்துவிரோத ஆட்டத்துக்கு அது பதிலடி கொடுத்து ஓட அடித்துகொண்டே இருக்கும்

    அதில் ராமச்சந்திரன் தமிழகத்தை காத்து கொண்டே இருப்பார், திமுக அழியும் வரை அவரும் இங்கே வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்.- *பதிவு ஸ்டான்லி ராஜன்*.........
    Stanley Rajan...

  5. #1594
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரை நேர்மையாக நேசிக்கும் பக்தர்களுக்கு நம் புரட்சித் தலைவர்.எம்ஜிஆர் என்னும் பெயரை உச்சரிக்க தகுதி உண்டு .. புரட்சித் தலைவரின் பெயரை உச்சரித்து பெருமிதம் கொள்வோம்.எம்ஜிஆர் என்றால் வெற்றி..
    எம்ஜிஆர் என்றால் தைரியம்..
    எம்ஜிஆர் என்றால்..
    கருணை..
    எம்ஜிஆர் என்றால் மனித நேயம்..
    எம்ஜிஆர் என்றால் ஒற்றுமை.. சமத்துவம்..
    எம்ஜிஆர் என்றால்
    நாட்டுப் பற்று..
    எம்ஜிஆர் என்றால்
    புதுமை..இனிமை..
    இளமை.. அழகு..புன்னகை.
    எம்ஜிஆர் என்னும் வார்த்தை.. நம் உயிர்.. ����.. நான் அனுதினமும் உச்சரிக்கும் மூன்றெழுத்து மந்திரம்.
    எம்ஜிஆர்
    எம்ஜிஆர்
    எம்ஜிஆர்.......hcg...

  6. #1595
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அழகப்பா கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த வருடம். கல்லூரியின் கலை விழாவிற்கு தலைமை தாங்கிய மக்கள் திலகத்தின் முன்னால் ஒரு மாணவன் என்ற முறையில் தமிழ் திரைப்படங்கள் பற்றி ஒரு திறனாய்வு சொற்பொழிவு நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    என் பேச்சைக் கைதட்டி ரசித்த அவர் மேடையை விட்டு இறங்கும் முன் என்னைப் பாராட்டி ஒரு பாராட்டுக்கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். அதை இன்று வரை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.

    பின்னர் சென்னை வந்து சட்டக் கல்லூரியில் படிக்கத் தொடங்கினேன். பொருளாதார நெருக்கடி என்னை படிக்க விடவில்லை.'இன முழக்கம்' என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக கொஞ்ச நாட்கள் வேலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தச் சமயம் எம்.,ஜி.ஆரை அவரது தோட்டத்தில் பத்திரிக்கையாளன் என்ற முறையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    "நம்மை எங்கே அவருக்கு நினைப்பிருக்கப் போகிறது?" என்று நினைத்துக் கொண்டு மற்ற பத்திரிக்கையாளர்களை மத்தியில் அமர்ந்திருந்தேன். அந்த அபூர்வ மனிதரின் அன்புள்ளம் என்னைக் கண்ட மாத்திரத்தில், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே?" என்றாரே பார்க்கலாம்.

    நான் என்னை மறந்தேன். என் எதிர்காலம் அங்கே தொடங்கியது. என் நிலைமையைக் கேட்ட அவர் தாயுள்ளத்தோடு எனக்கு உதவி செய்ய முன்வந்தார். மறுநாளே என்னை ஸ்டூடியோவிற்கு வரச் சொல்லி டைரக்டர் காசிலிங்கத்திடம் உதவி டைரக்டராகச் சேர்த்து விட்டார்கள். பிறகு இந்த அநாதையை தங்கள் வீட்டு மாடியில் தங்கச் சொல்லி கதை திரைக்கதை எழுதும்படி ஊக்குவித்தார்கள்.

    நானும் உற்சாகத்தோடு எழுதத் தொடங்கினேன். ஒரு நாள் எனக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வந்தது. என்னைப் பார்த்ததும், "ஆமாம்,நான் எழுதச் சொன்னேன் என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள், வருமானம் என்ன உங்களுக்கு?" என்று கேட்டார்

    நான் "இல்லை" என்று சொன்ன மாத்திரத்திலேயே ஒரு தாய் போல என்னைக் கடிந்து கொண்ட அவர், "இதை என்னிடம் முன்னாலேயே சொல்வதெற்கென்ன ?" என்றார். அடுத்த நிமிஷம் என் கை நிறைய பணம் தந்து அனுப்பினார்.

    இப்படித் தொடங்கிய அவரது கருணை உதவிகள் போகப்போக என்னை ஒரு மனிதனாக கலைஞனாக மாற்றத் தொடங்கின.

    - இயக்குனர் மகேந்திரன்.

    (சினிமா எக்ஸ்பிரஸ் 01.01.1982 இதழ் )...sk...

  7. #1596
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1968-ம் ஆண்டு பொம்மை என்ற சினிமா இதழுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி

    பேட்டி எடுத்த பிரபலம் யார் தெரியுமா…? ஜெயலலிதா!

    தன் அரசியல் குருவான எம்.ஜி.ஆரிடம் வெளிப்படையாக ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே…

    நடிப்புத் துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?

    வறுமை.

    உங்கள் பெற்றோர்கள் நீங்கள் நடிப்புத்துறையில் ஈடுபடுவதைப் பற்றி என்ன சொன்னார்கள்?

    ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’ என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க பசியைப் போக்குவதற்காக நடிப்புத் தொழிலில் ஈடுபடும்போது எப்படி தடை செய்வார்கள்?

    நீங்கள் முதன்முதலாக போட்ட வேஷம் எது? அப்போது உங்கள் வயது என்ன?

    லவகுசா நாடகத்தில் குசன் வேஷம் போட்டேன். ஏறக்குறைய ஆறு வயதிருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

    உங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசான் யார்?

    குசன் வேஷத்தில் நடிக்கும்போது நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். அவரது பெயர் நினைவில் இல்லை. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நான் சேர்ந்தபோது எனக்கு முதன் முதலாக நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசான் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் அவர்கள். பிறகு காலஞ்சென்ற எம்.கந்தசாமி முதலியார் அவர்கள் எனக்கு நடிப்பு சொல்லித் தந்தவர் ஆவார்.

    நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம், அதில் நீங்கள் ஏற்று நடித்த வேஷம்… இவற்றைச் சொல்ல முடியுமா?

    மனோகரா நாடகம். மனோகரன் வேஷம்

    பெண் வேஷம் போட்டு நாடகங்களில் நடித்து இருக்கிறீர்களா?

    நடித்ததுண்டு.

    அந்த நாளில் நடிகர்கள் சொந்தக் குரலில்தான் பாடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் எப்போதேனும் சொந்தக் குரலில் பாடியிருக்கிறீர்களா?

    பாடாவிட்டால் எப்படி கதாநாயகன் வேஷம் தருவார்கள்?

    நீங்கள் முதன்முதலாக காமிராவின் முன் நின்றபோது எப்படி இருந்தது? அது எந்த ஸ்டூடியோவில் நடந்தது? உடன் இருந்தவர்கள் யார் யார்?

    சோபனாசலாவாக இருந்து வீனஸ் ஸ்டூடியோவாக மாறிய இடத்தில் ‘வேல் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோ இயங்கி வந்தது. அதில்தான் நடித்தேன். அன்று என்னுடன் இருந்தவர்கள் எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

    உங்கள் முதல் படத்தின் கதையை எழுதிய வாசன் அவர்களது படமே உங்கள் நூறாவது படமாக அமைந்தது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

    அதுதான் இயற்கையின் விளையாட்டு என்பது.

    திரைப்படத்தில் உங்களை கதாநாயகனாக நடிக்க வைத்தது யார்?

    பட உரிமையாளர்கள் என்று எடுத்துக்கொண்டால் முதலாவதாக எனக்கு கதாநாயகன் வேடம் தந்து படம் எடுத்தவர் நாராயணன் கம்பெனி உரிமையாளராக இருந்த காலஞ்சென்ற கே.எஸ்.நாராயண ஐயங்கார் அவர்கள். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் பிறகு எனக்கு கதாநாயகன் வேடம் தந்து, மக்களுக்கு என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் ஜுபிடர் பிக்ஸர்ஸின் உரிமையாளர்களில் ஒருவரான காலஞ்சென்ற எம்.சோமசுந்தரம் அவர்கள்.

    நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் ‘நாடோடி மன்னன்’. சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

    நான் விரும்புவதை என் தொழிலில் செய்து காட்ட வேண்டும் என்பது எனது நீங்காத ஆசையாகும். ஒருவேளை என் விருப்பம் தவறாகவும் இருந்துவிடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நான் சொந்தத்தில் படம் எடுக்க இதுதான் காரணம்.

    நீங்களே இந்தப் படத்தை டைரக்ட் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

    முன் கேள்விக்கு சொன்ன விடையிலேயே இதற்குரிய பதிலும் அடங்குகிறதே!

    சினிமா மந்திரியாக வந்தால் நீங்கள் என்னென்ன சீர்திருத்தங்களை செய்வீர்கள்?

    நாடோடி மன்னனை பாருங்கள், எனது எண்ணங்களை அதில் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

    திரைப்பட உலகில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

    நமது பண்பாட்டை கலாசாரத்தின் தனித்தன்மையை பிற மதத்தினரும் பிற நாட்டினரும் உணர்ந்து மதிக்கும் வகையில் சினிமாக் கலையின் மூலமாக தொண்டு செய்ய வேண்டும் என்பதும், அதோடு இந்தத் துறையில் நமக்கு வசதியும் வாய்ப்பும் இருந்தால் பிறருக்கு சமமாகவாவது நமது கலைத்துறையை உருவாக்கிக் காட்ட முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுமாகும்.

    நீங்கள் ஆங்கிலப் படங்கள் பார்ப்பதுண்டா?

    உண்டு.

    உங்களுக்கு பிடித்த மேல்நாட்டு நடிகர்கள் யார்?

    எல்லாரையும் பிடிக்கும்!

    இந்திப் படங்களை நீங்கள் பார்ப்பதுண்டா?

    ஒரு சில படங்களைப் பார்த்திருக்கிறேன்.

    நீங்கள் எந்த அரசியல் கட்சியில் முதலில் இருந்தீர்கள்?

    காங்கிரஸில். காந்திய வழியில் சமதர்மத்தை விரும்பும் ஒருவனாக இருந்தேன்.

    அந்தக் கட்சித் தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கிப் பழகி இருக்கிறீர்கள்?

    அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை. அதாவது நான்கு பேர் என்னைத் தெரிந்து கொள்ளுமளவுக்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை.

    தி.மு.க.வில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள்?

    1952-ஆம் வருடம் தி.மு.க.வில் சேர்ந்தேன்.

    தி.மு.க.வில் சேரக் காரணம் என்ன?

    எனது காந்திய வழிக் கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க.வில் இருப்பதை அறிந்து சேர்ந்தேன்.

    உங்களை இக்கட்சியில் சேர்த்த பெருமை யாருக்கு உண்டு?

    என்னை யாரும் சேர்க்கவில்லை. அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன் போன்றவர்களிடம் என்னை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திய பெருமை நாடகமணி டி.வி.நாராயணசாமி ஒருவருக்கே உண்டு.

    உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

    நிச்சயமாக உண்டு.

    நீங்கள் கோயிலுக்குப் போனதுண்டா?

    நிறைய. திருப்பதிக்கு இரண்டு முறை போய் வந்திருக்கிறேன். முதல் தடவை நான் திருப்பதிக்கு போய் வந்தபோது எனக்கு வயது 12 அல்லது 13 வயதிருக்கும். நாடகக் கம்பெனியில் அப்போது நான் நடித்து வந்தேன். இரண்டாவது தடவை போனது ‘மர்மயோகி’ படம் வெளியானபோது. இரண்டாவது தடவை போனதுதான் திருப்பதியைப் பொறுத்தவரை கடைசியானது அதற்குப் பிறகும் வேறு பல கோயில்களுக்குப் போயிருக்கிறேன்.

    ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு அதை நிறைவேற்றப் போயிருந்தீர்களா?

    பார்க்க வேண்டும் என்ற ஆவல். பக்தி, பிரார்த்தனை எதுவும் நான் செய்துகொள்ளவில்லை.

    உங்கள் தாயார் எந்த கடவுளை வழிப்பட்டு வந்தார்கள்?

    எங்கள் தாயார் இரண்டு கடவுளை வணங்கி வந்தார்கள். ஒன்று விஷ்ணு-நாராயணன். அதன் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். குல தெய்வமாக வணங்கி வந்தது காளியை.

    வீட்டை விட்டுப் புறப்படும் முன்பு இப்போது யாரை வணங்கிவிட்டு வருகிறீர்கள்?

    என் தாயை.

    உங்கள் வீட்டில் பூஜை அறை உண்டா? எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்?

    என் பூஜை அறையில் என் தாய் – தந்தை, மகாத்மா காந்தியடிகள். என் வாழ்க்கைத் துணைவியின் தாய் தந்தையரின் படங்கள் இருக்கின்றன. (அதோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று உண்டு) இவர்கள்தாம் நான் வணங்கும் தெய்வங்கள்.

    பழைய உங்களது படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் கழுத்தில் ருத்திராட்சை மாலையுடன் இருக்கிறீர்கள். ஏதேனும் ஜெபம் செய்துகொண்டிருந்தீர்களா?

    நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான் அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தேன். இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக்கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஒரு சின்னத் திருத்தம், அது ருத்ராட்சை மாலை அல்ல. தாமரை மணி மாலை. திருப்பதியில் நானே வாங்கிய மாலை அது.

    தமிழ்ப் படங்களில் தமிழ்நாட்டின் பண்பை விளக்கும் காட்சிகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் அவ்வளவாக இல்லை என்று சிலர் சொல்கிறார்களே, இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? உங்கள் அபிப்பிராயம் என்ன?

    மறுக்கிறேன்… கலை, ஆச்சாரம், பண்பாடு அதையும் கலாசாரம் என்று சொல்லலாம். பண்பு+பாடு = பண்பாடு. பாடு என்றால் உழைப்பு. பண்படுத்தப்பட்ட செயல், இப்படியும் கொள்ளலாம். ஆக இவை அத்தனையும் சமூகத்தில் உள்ள மக்களிடையே நிலவும் நம்பிக்கைகளை, செயல்களை ஆதாரமாக கொண்டு சொல்லப்படும் வார்த்தைகள்.

    இப்போது தமிழ்ப் படங்களில் காண்பிக்கப்பட்டு வரும் காட்சிகள் தமிழகத்தில் நடைபெறாத நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொன்டு உருவாக்கப்படுகிறது என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

    நாகரிகம் சிலரை ஆட்கொண்டுவிட்டதன் விளைவாக தமிழ்ச் சமுதாயத்தில் எப்படிப்பட்ட வேதனை தரத்தக்க காட்சிகள் நம் முன் நிகழ்த்திக் காண்பிக்கப்படுகின்றன என்பதை தயவுசெய்து சிந்தித்துப் பார்க்க துணிவீர்களா?

    சமீபத்தில் நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஒரு பத்திரிகையை படித்ததன் விளைவாக. ஒரு மாளிகையில் விருந்து நடக்குமாம். குறிப்பிடத்தக்கவர்கள் தங்கள் மனைவியுடன் செல்வார்களாம். நடனம் ஆடுவார்களாம். எந்தப் பெண்ணும் எந்த ஆடவனும் அதாவது யாருடனும் யாரும் சேர்ந்து ஆடலாமாம். குறித்த நேரத்தில் விளக்கு அணைக்கப்படுமாம். யாரை யார் விரும்புகிறார்களோ அவர்களோடு கணவன், மனைவி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாமாம். வரையறுக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு விளக்கு எரியுமாம். பிறகு திரும்பிச் சென்று விடுவார்களாம். மனைவியர்களை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு என்று அதற்குப் பெயராம்.

    இது உண்மையாக இருக்கும் என்று கற்பனை செய்துபார்க்கக் கூட நமக்கு துணிவில்லா விட்டாலும் சமூகத்திலுள்ள ஒரு சிறு பகுதியினரால் நிறைவேற்றப்படும் பண்பாடு என்று சொல்லப்படுமானால் இதைப் படத்தில் காண்பிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படுகிறீர்களா?

    தமிழ்ப் படங்களுக்கு தங்கப் பதக்கம் கிடைக்குமா?

    தமிழர்களால் அமைக்கப்பட்ட குழு ஒன்றுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்படுமானால் தங்கப் பதக்கம் நிச்சயம் கிடைக்கும்.

    நீங்கள் விரும்பி உங்களுக்கு கிடைக்காமல் போன வேஷம் ஏதாவது இருக்கிறதா?

    விரும்பியவை பல. ஆனால், நான் விரும்பிய பாத்திரங்களை என்னிடமிருந்து இன்னும் யாரும் பறித்துக் கொள்ளவில்லை.

    உங்கள் அன்னையார் இப்போது உயிருடன் இருந்திருந்தால்?

    என் நிலைக்காக மிகவும் அனுதாபப்பட்டிருப்பார்.

    எப்படிச் சொல்கிறீர்கள்?

    குறைந்த வருமானத்தில் இருந்தபோது எனக்கு கிடைத்த மன நிம்மதி இப்போது எனக்கு இல்லை. என்னிடம் உதவி பெறாத நிலையில் என்னை அப்போது உள்ளன்போடு நேசித்து வந்தவர்கள் என்னிடம் பல உதவிகளைப் பெற்றும் உள்ளன்போடு இப்போது நேசிப்பதில்லை. உண்மையாக சொல்கிறேன். என்னை உளமாற நேசிக்கும் உண்மையான நண்பர்கள் மிகக்குறைவு. இது எனக்கே தெரியும். இப்படிப்பட்ட நிலையில், சூழ்நிலையில் இருக்கும் என்னைப் பார்த்து என் தாயார் அனுதாபப்படாமல் சந்தோஷப்பட்டுக்கொண்டா இருப்பார்?

    பலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?

    பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாக தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

    அப்படிப்பெற்ற உதவிகளில் நீங்கள் பெரிதெனக் கருதுவதும், மறக்க முடியாததும் எது?

    கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தபோது அவரது வீட்டிலேயே கோவிந்தன் என்ற தோழர் ஒருவர் இருந்தார். பத்து, பதினைந்து என்று மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்தத் தோழர் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் எனக்கு ஒரு நாள் இரண்டு ரூபாய் கொடுத்து உதவியதை மறக்கமுடியாது. ஆனால், அந்த நண்பரைத் தேடித் தேடி அலைகிறேன். என்னால் அந்தத் தோழனைக் காண முடியவில்லை.

    ஒரு காலத்தில் நடிகன் என்ற நிலையில் நெப்டியூன் ஸ்டூடியோவில் பணியாற்றிய நீங்கள் இப்போது சத்யா ஸ்டூடியோவாக மாறியிருக்கும் அதன் பங்குதாரர்களில் ஒருவராக இருக்கிறீர்கள். இந்த மாறுதலைப் பற்றியும், அந்தப் பழைய நாட்களையும் இணைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?

    நான் பல பேர்களுக்கு உபதேசம் செய்கின்ற, செய்து கொண்டிருக்கின்ற ஒரே கருத்துதான் என் நினைவில் நின்றுகொண்டிருக்கிறது. மனித உடலைப்பற்றிப் பெரியவர்கள் ‘நீரின் மேல் குமிழியைப் போன்றது’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதைவிட ஆபத்தானது, நிச்சயமற்றது, ஒரு மனிதனுக்கு சேர்கின்ற பொருளும், புகழும். நான் எந்த ஸ்டூடியோவில் யாரோ ஒருவனாக பனியாற்றினேனோ அதே ஸ்டூடியோவில் நானே பங்குதாரராக இருப்பது ஒன்றே போதாதா, பொருளும், புகழும் நிலையற்றது என்பதை எடுத்துக்காட்ட.

    இந்திப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் ஏற்பீர்களா?

    நேரம் இருந்து, அந்தப் பாத்திரத்தில் என் கருத்துக்களை சொல்ல முடியும் என்ற நிலை இருந்து, என்னைத் தாங்கிக் கொள்ளக்கூடிய இதயம் அவர்களுக்கு இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

    உங்கள் எதிர்காலத்திற்கு ஏதாவது சேமித்து வைத்திருக்கிறீர்களா?

    சேமித்து வைப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, தனக்கென்று சேமித்து வைப்பது. மற்றொன்று, பிறருக்கென்றே சேமித்து வைப்பது. என் வரை எனக்கென்று எதையும் சேமித்து வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.

    தி.மு.க. தலைவர்களால் திரைப்பட உலகம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது?

    திரைப்பட உலகம் என்பது திரைப்படத் தொழிலை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு வார்த்தை என்று நான் நினைக்கிறேன். வேறு ஒரு கேள்விக்கு நான் பதில் சொன்னதுபோல திரைப்படத் தொழில் ஒரு சில பகுதிகளை மட்டும் கொண்ட தொழில் அல்ல. திரைப்பட உலகம் என்று நீங்கள் கேட்பது தமிழ்த் திரைப்பட உலகம் பற்றித்தான் என்று நான் சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா? அப்படி உங்கள் அனுமதி கிடைக்குமானால் தமிழ்த் திரைப்படத் தொழிலில் தூய தமிழுக்கு வித்திட்டது தி.மு.க. தலைவர்கள்தான் என்று நான் அறுதியிட்டுக் கூற முடியும்.

    திரைப்படத்துறையிலிருந்து நீங்கள் ஓய்வுபெற்றால் என்ன செய்வீர்கள்?

    என் உடலில் உழைக்கும் சக்தி இருக்கும் வரையில் திரைப்படத் தொழிலிலிருந்து நான் ஓய்வுபெறுவதாக இல்லை.

    விதியை யாராலும் வெல்ல முடியாது என்று நம்புகிறீர்களா? அல்லது விதியை மாற்றி அமைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?

    எந்த விதி? சட்டமன்றத்திலே நிறைவேற்றுகின்றார்களே அந்த விதிதானே? அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதுதான் நமக்கு தெரிகின்றதே.

    சந்தர்ப்ப வசத்தால் ஒரு ஆணும் பெண்ணும் தவறு செய்ய நேர்ந்தால் சமூகம் பெண்ணை மட்டுமே கண்டிக்கிறது. ஆணைக் கண்டிப்பதில்லை. இதற்கு என்ன காரணம்? இது நியாயமா?

    அப்படி ஒரு காலம் இருந்திருக்கலாம். இப்போது அப்படி இல்லை என்று நினைக்கிறேன்.

    நீங்கள் அதிக மகிழ்ச்சி அடைந்த அனுபவம் நாடக மேடை நடிப்பிலா? அல்லது திரைப்பட நடிப்பிலா?

    நாடக மேடை நடிப்பில்! நடிகன் நாடக மேடையில் நடிக்கும் போது அவனுடைய திறமைக்கு உடனடியாக பலனைக் காண்கிறான். அதாவது மக்கள் மகிழ்வதை அதாவது அவனுடைய திறமையான நடிப்பை ஏற்றுக்கொள்வதை நேரடியாக அனுபவிக்கிறான். அப்படி அனுபவித்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. சினிமாவில் அப்படி இல்லையே.

    தமிழ்ப் படங்களின் தரம், முன்னேற்றம் இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அத்தனை படங்களையும் பார்க்கின்ற நல்ல வாய்ப்பினை நான் பெற்றவனல்ல. எனவே பொதுவாக ஒரு படம் எப்படி இருக்கிறது என்று சொல்வது தெரியாத ஒன்றைப் பற்றி நான் தீர்ப்புக் கூறுவதாக முடிந்துவிடலாம். ஆனால், நான் கேள்விப்பட்டதில் இருந்து மக்கள் சொல்கின்ற கருத்தில் இருந்து பெரும்பாலான படங்கள் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு வந்த படங்களைவிட தரத்திலும் தகுதியிலும் உயர்ந்ததாக உள்ளன என்பதை சொல்ல முடியும்.

    முன்னேற்றம் என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு பதில் சொல்வது இயலாத ஒன்று. ஏனெனில், ஒரு தொழிலின் முன்னேற்றம் என்பது பல்வேறு வகையான, வெவ்வேறு தொடர்பான செயலிலிருந்து, விளைவிலிருந்து உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    உதாரணத்திற்கு ஒரு சினிமாப் படத்தை எடுத்துக் கொண்டால் உரையாடல், காட்சிகள், இசையமைப்பு, நடிப்பு, பாத்திரத்திற்கேற்ற உடைகள், காட்சி ஜோடனை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, இயக்குதல் முதலியவைகளில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக முன்னேற்றம் ஏற்படுவதும், ஏற்படாமல் இருப்பதும் இயற்கை.

    குறிப்பாக சினிமாப் படங்களின் முன்னேற்றம் என்றால் இவை அத்தனையும் சேர்த்துதான் பதில் சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால், மேலே சொன்னவைகளில் ஒன்றில் முன்னேற்றம் என்று கூறினாலும் அது சினிமாத்தொழிலுக்கே முன்னேற்றமாகத்தான் கருத வேண்டும். அந்த வகையில் ஒலி, ஒளி, காட்சி ஜோடனை, ஒப்பனை, நடிப்பு, கதை, இசை, உரையாடல், படத்தொகுப்பு, பதிப்பு முதலிய பல்வேறு வகைகளில் தமிழகம் சினிமாத் துறையில் நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.

    சினிமாவை நீங்கள் ஒரு கலை என்று நினைக்கிறீர்களா? வியாபாரம் அல்லது தொழில் என்று நினைக்கிறீர்களா?

    ஒரு தொழிலை கலைநுணுக்கத்தோடு உருவாக்கினால் சிறந்த வியாபாரமாக அது பயன்படும். அதுபோல சினிமாவை தொழிலாகக் கருதி, கலை அம்சத்திற்கு எந்த ஊறுவிளைவிக்காமல் பயன்படுத்தினால் அந்த வியாபாரம் செழிக்கும்.

    நீங்கள் நடித்த படங்களிலேயே உங்களுக்கு மனதிருப்தியைத் தந்த படம் எது?

    ஒரே ஒரு முறைதான் ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் என் பாத்திரம் பிடித்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன். அதற்குப் பிறகு இதுவரையில் நான் எதையும் அப்படிச் சொல்லி, என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டது இல்லை.

    நீங்கள் உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் நடிப்புத்துறையை விட்டுவிட்டு அரசியலிலேயே ஈடுபட்டால் என்ன?

    என்னைப் பொறுத்தவரை நல்ல ஒரு அரசியல்வாதிக்கு கலையின் மூலமாக மக்களுக்கு சேவை செய்வதை விட வேறு ஒரு வழிவகை அவர்களுக்கு இருக்காது என்பதை நான் திடமாக நம்புகிறேன்.

    நீங்கள் தி.மு.க.வில் இருப்பதால்தான் உங்கள் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதாகச் சொல்கிறார்கள். அக்கட்சியிலுள்ள நீங்கள் படத்தில் நடிப்பதால்தான் தி.மு.க. அதிக செல்வாக்கு பெறுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

    இந்த இரண்டு விதமான அபிப்பிராயங்கள் குறித்து எனக்கு எந்த விதமான கருத்தும் கிடையாது. நான் கலைப் பணி புரிகின்றேன். தொழிலுக்காக அரசியலில் இருக்கிறேன், என் கொள்கைக்காக என் கொள்கையை கூடுமானவரை பிறர் மனம் புண்படாத வகையில் கலையில் புகுத்தி தொழில் நடத்தி வருகின்றேன்.

    உங்கள் சொந்த வாழ்க்கையில் பெரிய சோதனையாக அமைந்த நிகழ்ச்சி எது?

    ஒரு பெண் என்னை காதலித்ததுதான். தயவுசெய்து இதற்கு மேல் அதைப் பற்றி ஒன்றும் கேட்க வேண்டும்.

    உங்கள் தொழிலிலே உங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது எது?

    என்னை அழிக்க விரும்பிய எதிரிகளின் நட்பு.

    உங்களுக்குக் கார் ஓட்டத் தெரியுமா?

    ஓட்டத்தெரியும். நான் ஓட்டுவதெல்லாம் பிறருடைய துணிவைப் பொறுத்தது. சினிமாவில் கார் ஓட்ட லைசென்ஸ் தேவை இல்லை. படத்தில் காதலிக்க லைசென்ஸ் தேவையா? அதுபோலத்தான்.

    அதிர்ஷ்டம், ஆருடம், ராசி இவற்றில் நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தது உண்டா?

    உறுதியாக. மிகப் பலமான நம்பிக்கை இருந்தது உண்டு.

    திரு. மு.கருணாநிதி அவர்களுக்கும் உங்களுக்கும் முதலில் தொடர்பு ஏற்பட்டது எப்படி?

    ஜூபிடர் ‘அபிமன்யூ’ படத்திற்காக உரையாடல் எழுத அவர் கோவை வந்தபோது

    உலகிலேயே அழகானது எது?

    குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து கருத்துச் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கும் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொன்னால்! பரந்த இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள நான், உலகத்தில் உள்ளதில் அழகானது எது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

    ஆடு, மாடு, கோழி மனிதனுக்கு இம்சை செய்வதில்லை. அதைக் கொன்று சாப்பிடுவது பாவம் இல்லையா?

    உங்களுடைய கேள்வியிலிருந்து மனிதனுக்கு இம்சை செய்கின்றவைகளை கொன்று சாப்பிடலாம் என்ற பொருளும் தொக்கி நிற்கிறது என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அப்படியானால் உயிர்ப் பிராணிகளையே கொன்று தின்பது தவறு என்று உங்கள் கேள்வியில் கருத்து வெளிப்படவில்லை. தீங்கு செய்யும் பிராணிகளை கொன்று தின்னலாம் என்ற கருத்தாகிறது. அப்படியானால் தீங்குச் செய்கின்ற மனிதனையே, ஏன் மனிதன் கொன்று தின்னக் கூடாது? இதை வேடிக்கையாகத்தான் கேட்கிறேன்…

    கொல்லாமை, புலால் உண்ணாமை இவை எல்லாம் மனத்தின் பழக்கத்தைப் பொறுத்தது. புலால் உணவு உண்பவர்களிலேயே பலர் சிலவற்றை உண்கிறார்கள். சிலவற்றை உண்பதில்லை. இவை எல்லாம் மனப் பழக்கத்தின் விளைவாக ஏற்படுகின்ற பழக்க வழக்கங்களாகும்.

    நீங்கள் காங்கிரஸில் இருந்தபோது கதராடை கட்டிய துண்டா?

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்தபோதுகூட கதர் கட்டி இருக்கிறேன். முன்பெல்லாம் கதராடை தூய்மையின் அடையாளமாக இருந்தது.

    பெரிய மகானாக விளங்கும் காஞ்சி காமக்கோடிகளை நீங்கள் எப்போதாவது தரிசித்துப் பேசியதுண்டா?

    என்னைவிட அதிகமாக விஷயம் தெரிந்தவர்களைக்கூட நான் மதிப்பதுண்டு. மிக உயர்ந்த நிலையிலுள்ள, தகுதி வாய்ந்த பெரியவரை மகான் என்று ஏற்றுக்கொள்ள எனக்கு என்ன தடை இருக்கப் போகிறது?

    சினிமாவுலகில் நீங்கள், யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்கு போய்விட்டீர்கள்? நீங்கள் விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

    எந்த மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் உச்ச நிலைக்குப் போய்விட்டதாக நினைப்பது, தோல்வியான ஒரு சூழ்நிலையில் தோன்றும் திகைப்பேயாகும்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ‘நியூ எல்பின்ஸ்டன்’ தியேட்டரில் ‘இரு சகோதரர்கள்‘ என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக ‘இந்த மேடைப் புலி’ என்று பட்டம் பெற்ற கே.பி.கேசவன் அவர்கள் நடித்திருந்தார். நாடக மேடையிலும் சினிமாவிலும் நடித்து பெரும் புகழ்ப் பெற்றிருந்தார். அவருடன் நானும் வேறு சிலரும் இந்தப் படத்தைப் பார்க்க சென்றிருந்தோம்.

    இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து நின்று அவர் பெயரைக் கூறிக் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான் இதைக் கண்டு திகைத்து கே.பி. கேசவன் அவர்களையே பார்த்துக் கொண் டிருந்தேன். இத்தனை ஆதரவும், செல்வாக்கும் பெற்றிருக்கும் அவருக்கு அருகில் நாம் அமர்ந்திருக் கிறோமே என்ற பெருமை கூட உண்டாயிற்று.

    படம் முடிவதற்குள் வெளியே வந்துவிட வேண்டும் என்று நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்களும் வெளியே வந்துவிட்டனர். நாங்கள் மேலே இருந்து படி இறங்கி கீழே வருவதற்குக்கூட சிரமமாகிவிட்டது. நான் மற்றவர்களை பிடித்துத் தள்ளி, கே.பி.கே. அவர்களை பாதுகாப்பாகக் காப்பாற்றி காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தேன்.

    அன்று மக்களுக்கு என்னை யார் என்று தெரியாது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு பின், சென்னை ‘நியூ குளோப்’ தியேட்டருக்கு நானும் கே.பி.கே. அவர்களும் ஓர் ஆங்கிலப் படம் பார்க்கப் போனோம். அப்போது நான் நடித்த ‘மர்மயோகி’ திரைப்படம் வெளிவந்து சில மாதங்களே ஆகி இருந்தன.

    இடைவேளையின் போது நான் வந்திருந்ததை அறிந்த ரசிகர்கள் எழுந்து கூச்சல் போட்டார்கள். எனக்கு அருகில் அதே கே.பி.கே. அவர்கள்தான் அமர்ந்திருந்தார் கள். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.

    படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் எங்களை சூழ்ந்தது. கே.பி.கே. அவர்கள் அந்த ரசிகர் களிடமிருந்து என்னைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி அனுப்பினார். நான் புறப்படும் போது அவரும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவராக நின்றிருந்தார். அவரது நடிப்பாற்றல் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை.

    கலைஞர்களுக்கு உச்சநிலை, தாழ்ந்தநிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. அவ்வளவுதான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும்; தாழ்த்தும். அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு!...........

  8. #1597
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாலி எழுதிய 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

    இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    'அடிமைப்பெண்' படத்துக்காக, 'அம்மா என்றால் அன்பு' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

    'வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

    'ரொம்ப சந்தோஷம்' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

    'அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது' என்றேன்.

    'எப்படி? எப்படி?' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

    `அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

    அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

    `என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

    - இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, 'வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்' என்றார்.

    'அம்மா என்றால் அன்பு' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, 'அடிமைப்பெண்' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.'

    இவ்வாறு வாலி கூறினார்.

    ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

    1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

    'என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?' என்று கேட்டார், வாலி.

    'நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

    'என்ன சந்தோஷ சமாசாரம்?' என்று வாலி கேட்டார்.

    'நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!' என்று கூறிய எம்.ஜி.ஆர்., 'உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை' என்றார்.

    கண் கலங்கி விட்டார், வாலி.

    எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, 'கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?' என்ற கேள்வி எழுந்தது.

    கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

    அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

    'உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

    'நினைத்தேன் வந்தாய், நூறு வயது!' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

    'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...' என்று 'எங்க வீட்டு பிள்ளை'யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

    'அன்னமிட்ட கை' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.'

    - இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

    'அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது' என்றார்.

    அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., 'என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை' என்றார்.

    எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

    பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

    'எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.

    வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, 'அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது' என்று கூறினார்.

    மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

    எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.- courtesy malaimalar

  9. #1598
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா என்ற கவிதை உருவாகியது ஆயிரத்து 954 ஆம் ஆண்டு அதை சட்டமாக இயற்றி 1980 நிறைவேற்றப்பட்டது சத்துணவுத் திட்டமாக ஏழையின் குழந்தை எல்லோரும் கல்வி கற்க வேண்டும் அந்த கல்வியின் அடிப்படையில் உணவு தரவேண்டும் என்ற மேலோங்கிய எண்ணம் எழுந்தது நம் மக்கள் திலகத்தின் மனதில் எதிரிகள் என்ற பெயரிலே வாழும் மனிதர்கள் எம்ஜிஆர் தமிழனை பிச்சைக்காரன் ஆகிவிட்டார் தமிழன் கைகளில் தட்டை எந்த விட்டார் என்று எக்காளம் இட்டார்கள் எவனாலும் தடுக்கும் இல்லை அந்த மாபெரும் திட்டத்தை என் தலைவன் தொடர்ந்து செயல்படுத்தினார் தமிழகத்தில் அன்று பால்வாடி பள்ளியில் படித்த பிள்ளைகள் எல்லாம் இன்றைய தமிழ் நாட்டில் வாழும் அதிகாரிகளாக பெரும் செல்வந்தர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது ஊரறிந்த உண்மை.........Ravi...

  10. #1599
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தன் உடல்நலத்தை கூட பொருட்படுத்தாமல் தன் மக்களின் மீது கொண்ட அன்பால் அவர்கள் வாழ்வு உயர தொடர்ந்து பாடு பட்ட மக்கள் திலகத்தின் தியாகம் இப்போதாவது புரிந்ததா? தங்கள் நலனுக்காகவும் தங்கள் குடும்ப நலனுக்காகவும் கட்சி தொடங்சியவர்களின் கதி என்னவாயிற்று. "நமது தேவையே மக்களுக்கு நாம் செய்யும் சேவையே" என வாழ்ந்த மக்கள் திலகத்தின் இடத்தை கனவிலும் யாராலும் நெருங்க முடியாது என்பதை எல்லோரும் உணர்ந்தாலும் கைபிள்ளைகள் மட்டும் அடம் பண்ணுவது அவர்களின் சிறுபிள்ளைதனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    தொடர் பதிவு உ...த்தமன்.7
    ---------------------------------------------
    அடுத்த கட்ட மோதல்.
    சார்லஸில் 1965 பொங்கலுக்கு வெளியான மாபெரும் வெற்றிப் படம்தான் எங்க வீட்டுப் பிள்ளை.
    விஜயா புரடொக்ஷன்ஸாரின் தயாரிப்பு. இயக்கம். சாணக்யா.
    கூட வந்த பெரிய படம் என்று பேசப்பட்ட மாற்று நடிகரின் மிகை மிகை நடிப்பில் உருவான பழனி பீம்சிங்கின் இயக்கத்தில் வெளியாகி உறுதியாக வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் வெளியாகி
    ஒரு பெரிய டிரக்கரில் மோதிய மாட்டு வண்டி போல உருத்தெரியாமல் போனது. கூட வந்த புதிய கலைஞரான ஜெய்சங்கரின் இயல்பான நடிப்பில் வெளியான இரவும் பகலும் படம் கூட 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

    தலைவரின் சாதாரண படங்களோடே பிரமாண்ட வெளிநாட்டு படங்கள் மோதி மண்டை உடையும் போது இதென்ன பிரமாதம்?. முதல்நாளை பொறுத்தவரை பழனிக்கு நல்ல வரவேற்புதான். எதிர்பார்ப்பு அதிகம் இருந்தாலும், நம்ம அய்யனின் மிகை நடிப்பில் படமே மக்களுக்கே பகையானது. பெருந்தொகை செலவழித்து நட்சத்திர பட்டாளங்களை குவித்து நடிக்க வைத்தாலும் குறுந்தொகை கூட
    வசூலாகாமல் படம் 21/2 வாரங்களில் விநியோகஸ்தர் ஆபிஸில் தஞ்சமடைந்தது.

    எனது நண்பன் அவனும் ஒரு கைஸ்தான். அடிக்கடி சொல்லுவான், எம்ஜிஆர் ரசிகர்கள் லோ கிளாஸ் ஆட்கள். ஆனால் அய்யனின் கைஸ்கள் எல்லாம் ஹை கிளாஸ் ஆடியன்ஸ் என்று. முதல் நாள் தியேட்டரில் வரிசையில் நிற்பவர்களை பார்த்தால் தெரியும் என்பான். ஆனால் நான் சொல்வேன், எம்ஜிஆர் படத்துக்கு ஹைகிளாஸ் ரசிகர்கள் நிறைய உண்டு. அவர்கள் எல்லாம் முதல் 10 நாட்களுக்கு தியேட்டருக்கு வர மாட்டார்கள்.

    எங்க ஊரில் முதல் 10 நாட்களில் தியேட்டரில் முட்டி மோதி டிக்கெட் எடுப்பவர்கள் எல்லாம், சத்யராஜ் வருவாரே முட்டம் சின்னப்பதாஸ் வேடத்தில் அது மாதிரி கைலி அல்லது 4 முழ வேஷ்டியை தூக்கி அண்டர்வேர் தெரிய கையில் பீடி அல்லது சிகரெட் பிடித்துக்கொண்டு சட்டையை முழுவதுமாக திறந்து வைத்துக் கொண்டு காலை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு விசில் சத்தத்துடன், சீட்டி அடித்துக் கொண்டு எந்தக் கவலையும் இல்லாமல் தலைவரின் வருகையை எதிர்பார்த்து காத்து கிடப்பார்கள்.

    ஆனால் அய்யனின் படத்துக்கு கொஞ்சம் பேர் மட்டும் ஹைகிளாஸில் பவனி வருவார்கள்.
    10 வது நாளில் படமே ஆட்டம் கண்டு விடும். தலைவர் படத்துக்கு 10 நாள் கழித்துதான் பொதுமக்களே பார்க்க முடியும். ஆனாலும் சார்லஸில் வெளியான "எங்க வீட்டுப் பிள்ளை"யை காண ஹை கிளாஸ் டிக்கெட் எடுத்த ஏழை மக்கள் எல்லாம் போக வழி தெரியாமல் தியேட்டரின் முன்னே அமைந்திருக்கும் கார்டன் வழியாக ஏறி உள்ளே செல்வதை பார்த்திருக்கிறேன்.

    பின்னர் கார்டன் வழியே செல்லக்கூடாது என்பதற்காக பிரத்யேகமாக ஒரு நபரை நிறுத்தி வைத்து தடுத்தனர். திரை தூக்கியவுடன் எழும்பும் விசில் சத்தம் காதை துளைக்கும். அதிலும் ஏற்ற
    இறக்கத்துடன் அவர்கள் எழுப்பும் ஒலி எவ்வளவு கற்றாலும் நமக்கு வராது. மொத்தத்தில் தலைவர் படம் வெளியாவது ஒரு திருவிழா நடத்துகிற மாதிரி அத்தனை சுவாரசியமாக இருக்கும்.

    டிக்கெட் எடுக்கும் சாகஸ நிகழ்ச்சியே பிரமாதமாக இருக்கும். 77 நாட்கள் நடைபெற்ற அந்தத் திருவிழாவை முடிவுக்கு கொண்டு வந்தனர் சார்லஸ் திரையரங்கத்தினர். நிச்சயம் வசூல் 1 லட்சத்தை தாண்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் காட்டிய பொய் கணக்கு வெறும் ரூ 49000 தான். ஆனால் மிகவும் சிறிய திரையரங்கமான காரனேஷனில் "புதியபூமி" 29 நாட்களில் 32000 வசூல் கணக்கு காட்டினார்கள்.

    இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் சார்லஸின் வசூல் ஊழலை. தலைவர் படம் ஓபனிங் திருவிழாவை விடுத்து அய்யனாம், மிகை நடிப்பாம் யாரையா கேட்டார்கள் உங்கள் புலம்பலை. போய் வேற இடம் பார் யாராவது இளிச்சவாயன் கிடைக்கிறானா என்று?.........ksr...

  11. #1600
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்னை என்பவள் நீ தானே!
    ---------------------------------------
    காரமான அரசியல் பதிவுகளையே சுவைத்த நாம்--
    ஈரமான பதிவில் இன்று சந்திக்கிறோம்!
    சிலருக்கு ஜெ அவர்கள் அம்மாவாக இருந்தாலும்-
    அன்னை என்றால் நம் நினைவில்--
    ஜானகி அம்மையார்!
    அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வொன்றக் காணலாம்!
    டாக்டர் பழனி ஜி.பெரியசாமி!
    இவர் பெயரைக் கேட்டவுடனேயே நமக்கு எம்.ஜி.ஆர் தான் நினைவுக்கு வருவார்!
    அமெரிக்காவில் அண்ணலின் உயிரை மீட்கப் பாடுபட்ட ஆண் சாவித்திரி!
    பழனியிலேயே பெரிய சாமி--
    முருகன் வைத்தியக் கடவுள் என்றால்--
    பழனி பெரியசாமிக்கு எம்.ஜி.ஆர் தானே கடவுள்?
    அது எம்.ஜி.ஆர் மறைந்து,,கட்சியும்--
    ஜா--ஜெ--என நின்ற காலம்!
    சட்டமன்றத் தேர்தலை இரு அணியும் சந்திக்கின்றன!
    தண்டபாணி என்னும் கட்சி நிர்வாகி!
    எம்.ஜி.ஆர் காலத்து செயல் வீரர்!
    சேரன்மா தேவி தொகுதியின் ஒன்றியச் செயலாளர்!
    சேரன்மா தேவியில் எம்.எல் ஏ .வுக்குப் போட்டியிடும் பி.எச்.பாண்டியனுக்காக வேட்பு மனுக் கட்டணத்தை தாமேக் கட்டுகிறார் தண்டபாணி!
    எம்.ஜி.ஆரின் சிறந்த விசுவாசி என்பதனாலேயே தண்டபாணியின் பிள்ளைக்குத் தன் சொந்தக் கம்பெனியான தரணி சுகர்ஸில் நல்லதொரு வேலைப் போட்டுக் கொடுத்திருக்கிறார் நம் பழனி ஜி.பெரியசாமி!
    சட்டமன்றத் தேர்தலில் ஜானகி அம்மையாரேத் தோற்றுப் போன நிலையிலும்--
    சேரன்மா தேவியில் ஜா அணியில் பி.எச்-பாண்டியன் வெற்றி பெறுகிறார்!
    ஜானகி அணியில் ஜெயித்தது அவர் மட்டும் தான் என்று நினைவு.
    இந்த நிலையில்,,தண்டபாணியின் மகனை வேலையில் இருந்து நீக்கி விடுகிறார் பழனி ஜி பெரியசாமி??
    சேரன்மா தேவியில் பி.எச்.பாண்டியனுக்கு பணம் கட்டிய தண்டபாணி,,ஜானகி அம்மையாருக்கும் கட்டியிருந்தால் அன்னை ஜெயித்திருப்பாரே--
    கட்டத் தவறியக் --கடமைத் தவறியக் குற்றத்துக்காக-தண்டபாணிக்கு தண்டனையாக--அவர் மகனை வேலையிலிருந்து நீக்குகிறார் ப.பெ.சாமி!
    தண்டபாணி,,நேரே அன்னையிடம் சென்று முறையிட,,ஜானகி அம்மையாரும் பழனி பெரியசாமியிடம் சொல்கிறார்--
    என் கணவர் எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கியவர் தான் தண்டபாணி. இவரோடு என்னவர் பலமுறை ஒன்றாக உணவருந்தும் அளவுக்கு தீவிர விசுவாசி!
    என் பொருட்டு,,இவர் மகனை வேலையிலிருந்து நீக்கியது சரியல்ல!--
    அன்னையின் பேச்சுக்கு மறுப்பேது?
    தண்டபாணியின் மகனுக்கு மறுபடியும் அந்த வேலைக் கிடைக்கிறது!
    இதில் நோக்க வேண்டியது--
    தன் அன்னையின் தோல்வியைப் பெரியதாக எடுத்துக் கொண்ட பழனி பெரியசாமியின் ஈடுபாடு பெரிதென்றால்--
    தான் தோற்றுப் போயிருந்தாலும்,,தமக்காக தண்டனை கொடுக்கப்படுவதை விரும்பாத ஜானகி அன்னையின் கருணையுள்ளம்??
    நான் முன்பு எழுதியிருந்தேன்--
    எம்.ஜி.ஆர் காலத்துத் தொண்டர்கள்--
    உணர்வுக்குக் கட்டுப்பட்டவர்கள்!!!

    Vtr...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •