Page 10 of 210 FirstFirst ... 891011122060110 ... LastLast
Results 91 to 100 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #91
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1958-ல் வெளிவந்து சரித்திரம் படைத்த சாதனை படம் நாடோடி மன்னன்.
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பு, தயாரிப்பு,
    இயக்கம் என தனது முழு திறமையையும்
    வெளிப்படுத்திய வெற்றிப் படம்.
    பகுதி மட்டும் வண்ணத்தில் எடுக்கப்பட்டது.

    பேசும்படம் சினிமா மாத இதழ்,
    "நாடோடி மன்னன்" சிறந்த படமென தேர்ந்தெடுத்து பாராட்டு பத்திரம் வழங்கியது....... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #92
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "கூரைகளெல்லாம் கூட வளர்ந்தால் கோபுரமாவதில்லை..."
    "குருவிகளெல்லாம் உயரப் பறந்தால் பருந்துகளாவதில்லை.."
    #புரட்சித்தலைவர். #எம்ஜிஆர் பெயரை எவ்வளவுதான் மறைக்கவோ...மறுக்கவோ ஒரு கூட்டம் முயற்சி செய்தாலும் .. தலைவரின் பெயரை ..புகழை... சாதனைகளை யாராலும் அழிக்கவோ..
    மறைக்கவோ நெருங்கவோ முடியாது..."
    இது புரட்சித் தலைவர்.எம்ஜிஆரின் அரசு.." அவர் பாடுபட்டு வளர்த்து கட்டிக் காத்த..ஊழலற்ற பொற்கால ஆட்சி செய்த கட்சி.. . மக்கள் திலகத்தை இதயதெய்வமாக வணங்கிக் கொண்டு.. தலைவர் மறுபடியும் வரமாட்டாரா...என்ற ஏக்கத்துடன் ...
    தலைவரை வேண்டி நிற்கிறார்கள்... நம் தலைவரின் பக்தர்கள்...
    நம்மிடையே மஹானாக..சித்தராக வாழும் நம் தலைவரின் வெளிப்பாடு...???
    எதிர்பார்ப்போம்... என் உள்ளம் என்னும் உலகில் புரட்சித் தலைவர்.எம்ஜிஆர்..
    மட்டுமே என் நிரந்தர தலைவர்...
    இனிய அதிகாலை வணக்கம் அன்புள்ளங்களே...
    வாழ்க புரட்சித் தலைவரின் புகழ் என்றும்.......
    Thanks...

  4. #93
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தொழிலாளர்தின #வாழ்த்துக்கள் ...

    தொழிலாளர்களின் நலத்தைத் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் பேணி, அவர்களைப் போற்றி...தான் முதல்வரான பின்பும் தொழிலாளர்களுக்காக பல நலத்திட்டங்களைச் செயல்படுத்திய நம்ம வாத்தியாருக்கு, அவர்தம் பொற்பாதங்களுக்கு இப்பதிவினைச் சமர்ப்பிக்கின்றேன்.

    #MAY #DAY - Dedicated to our Beloved God "VAATHIYAR"

    அன்பே வா திரைப்படத்தில் சரோஜாதேவிக்கு உடைகள் வடிவமைத்தவர் திரு ரஹ்மான் பாய் படத்தின் பெயர்ப்பகுதியில்(டைட்டிலில்) காணலாம்.

    ரஹ்மான் பாய்...!

    சிம்லா மிகவும் குளிர்ப் பிரதேசம் ரஹ்மான்பாய் அதற்குத் தகுந்தாற்போல் உடைகள் இருக்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆயத்தமாக இருந்த உடைகளை ரஹ்மான்பாய் காண்பிக்க, மகிழ்ச்சியில் கட்டியணைத்து வாழ்த்து சொன்னார் வாத்தியார்.

    படத்தில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலில் வாத்தியார் & சரோஜா போட்டிருக்கும் உடைகளைத்தைத்து வாத்தியாரிடம் காண்பிக்க, அப்படியே மகிழ்ந்து, தனது சொந்தப் பணத்தை எடுத்து அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பேசிய தொகை கிடைத்துவிட்டது. கொடுக்கப்பட்ட வேலையைத்தான் செய்தேன் அதிகப்படியாக வேண்டாம் என்றிருக்கிறார் ரஹ்மான் பாய்...

    "இல்லை ரஹ்மான்பாய்.." கொடுக்கப்பட்டதைவிட அதிக வேலைப்பாடுள்ள உடைகளைத் தயாரித்திருக்கிறீர்கள் அதிகப்பணமல்ல... என் அன்பு இது. என் அன்பு வேண்டாமா உங்களுக்கு ? என்றிருக்கிறார் வாத்தியார்.
    திக்குமுக்காடிப்போன பாய் பணத்தை வாங்கிக்கொண்டு, அந்தப் பணத்தை நிறைய வருடங்கள் செலவழிக்காமல் வைத்திருந்திருக்கிறார்.

    திரைப்படங்களில் கொடைவள்ளல்களாக நடிப்பவர்கள் சொந்தவாழ்வில் கருமிகளாகத் தானிருந்திருக்கிறார்கள். நடிப்பதில் செய்ததை, சொந்த வாழ்வில் நடிக்காமல் செய்தவர்.

    மற்றொரு சம்பவம்...!

    ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்திற்காக காரைக்குடிக்கு மாலை 6 மணிக்கு வருவதாக இருந்தது. வழக்கம்போல் 9 மணிக்கு வந்தார்கள். சுற்றுவட்டார மக்கள் காலையிலிருந்தே வர ஆரம்பித்துவிட்டார்கள். தாமதமானதால் அவரது வாகனம் வேகமாகக் கூட்டத்திற்குள் நுழைந்தது.

    காவலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டுதான் இருந்தார்கள் அதையும்மீறி எம்ஜிஆரைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் 8 வயதுச் சிறுவன் கூட்டத்திலிருந்து நடுச்சாலைக்குள் வந்துவிட்டான்.

    பிரேக் போட்டாலும் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்குள் சிறுவனைக் கார் இடித்துவிட்டது. முதலில் காரிலிருந்து இறங்கியது யார் தெரியுமா? எம்ஜிஆர் தான்... " குழந்தை... குழந்தை... " என்று
    அவர் பதறிவந்து தூக்கியதை, அங்கிருந்த யாரும் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. தன் காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிகிச்சைக்கான செலவு, சிறுவனின் படிப்பு, உணவு, உடை எல்லாவற்றையும் தானே ஏற்றுக்கொண்டார்...

    அடிபட்ட சிறுவன் யார் தெரியுமா? அவன் பெயர் முருகேசன்... சலவைத் தொழிலாளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    காரைக்குடி, காட்டுத்தலைவாசல் என்னும் இடத்தில் சலவைத்தொழிலாளியாக அவன் குடும்பத்தினர் இருந்தனர்.

    இப்படிப்பட்ட சம்பவங்கள் எத்தனை எத்தனை...ஒன்றா! இரண்டா! எடுத்துச்சொல்ல...

    வாத்தியாரின் வழியில் தொழிலாளர் நலம் பேணுவோம்... போற்றுவோம்........... Thanks.........

  5. #94
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவா உங்கள் மேல் உயிரையே வைத்திருக்கும் இவ்வுலகில் அதாவது இந்த உலகத்திலேயே!
    ஆம் யாருக்குமே எந்த ஒரு தனிமனிதனுக்கும் கிடைக்காத மிகப்பெரிய தொண்டர்படை கூட்டம் ஒன்று உங்கள் நினைவுகளோடு வாழுகிறது தலைவா.
    எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உங்களையும் ,உங்கள் கருத்துக்களையும் உங்கள் நல்ல செய்கைகளையும்,எதிர்பாராமல் இல்லாதார்க்கு கொடுத்து வாழவைத்த வள்ளல் குணத்தையும் நினைத்து மறக்கவேமுடியாமல் வாழ்ந்து வருகிறோம் மன்னவா*

    உங்களைவைத்து பல்லாயிரம்கோடி சம்பாதித்தவர்களுக்கும் சம்பாதித்துகொண்டிருப்பவர்களுக்கும் எந்தவிதத்திலும் ஜால்ரா போடாமல், எங்கள் தலைவன் காட்டிய வழியில் உங்கள் நினைவோடு உங்களை மட்டுமே தலைவனாக ஏற்று உங்கள் நல்ல கருத்துக்களை,வழிமுறைகளை மட்டுமே பின்பற்றி நீங்கள்கூறியதுபோல் எங்கள் உழைப்பில் (நன்றியில்லாமல் வாழ்ந்த, வாழ்ந்துகொன்டிருக்கிறவர்கள் மத்தியில் )வாழும் நாங்கள் மட்டுமின்றி,, உங்கள்வழி இன்னும் பலதலமுறைகளையும் வாழவைக்கும் என்பதுமட்டும் எவராலும் மறுக்கவே முடியாது.
    இந்த உலகத்தில் நிறந்தர புகழுக்கு சொந்தகாரர் ஒருவர் உண்டென்றால் அது நீங்கள் மட்டுமே.ஒருசிலர் குறைகூறினால் அவர்கள் மனிதனாக வாழ்வதற்கே தகுதியில்லாதவர்கள்.
    மான்புகெட்டவர்களை பின்பற்றிய நன்றிகெட்டவர்கள் உங்கள் புகழை மறைப்பதாக நினைக்கலாம்.நீங்கள் ஆலமரம் .வற்றாத கடல்.வீசுகின்ற காற்று.
    வேண்டுமென்றால் தலைவனுடைய வரலாற்றை தெரியாதவர்கள் ஒருமுறைபடித்துபாருங்கள்.உங்களுக்கு ஒருவித மயக்கமே வரும்.பின்னர் நீங்களும் எங்கள் தலைவனின் மெய்சிலிர்க்கவைக்கும் புகழை தானாகவே எடுத்துறைப்பீர்கள் .
    தலைவா உலகமே உங்கள்புகழை எண்ணி எண்ணி தினமும் வியக்கிறது, வியர்க்கிறது. தகுதியேயில்லாதவர்களெல்லாம் பிரதமர், ஜனாதிபதி பதவியை குறிவைத்தார்கள்.எல்லா தகுதியுமுள்ள மேதை நீங்கள் தமிழ்நாட்டை மட்டுமே, தமிழையே நேசித்தீர்கள்.
    உங்கள் மேல் உயர்ந்த எண்ணம்கொண்ட பல கோடி உண்மை பிரியர்களில் நானும் ஒருவன் என்று பெருமை பீற்றிக்கொள்ளும்
    என்றும் உங்கள்
    N RGM
    அனைவர்க்கும் மேதின நல்வாழ்த்துக்கள்......... Thanks.........

  6. #95
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம் நண்பர்களே,!

    அடிமைப் பெண் - 01-05-1969

    அடிமைப் பெண் 1969 ஆம்
    ஆண்டு இதே தொழிலாளர் தினத்தில் ( மே 1 -ஆம் ) வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாஇருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார்.

    அடிமைப் பெண்:-
    இயக்குனர் : கே.சங்கர்
    தயாரிப்பு : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
    கதை : எம் ஜி ஆர் பிக்சர்ஸ்
    நடிப்பு : எம். ஜி. இராமச்சந்திரன்,
    ஜெயலலிதா, சோ , சந்திரபாபு
    S.A. அசோகன் , R.S. மனோகர் ,
    ஜோதிலட்சுமி , பண்டரிபாய் ,
    ஜஸ்டின் , பேபிராணி , ராஜசிரி
    ஒளிப்பதிவு : ராமமூர்த்தி
    வசனம் : சொர்ணம்
    இசை : K.V.மகாதேவன்
    பாடல் : வாலி, சோமூ, புலமைப்பித்தன்
    வெளியீடு : 01.05.1969

    கதைச்சுருக்கம் :-

    வேங்கைமலை ராணியின் மீது தவறுதலாக நடக்க முயன்ற பொழுது கால்கள் வெட்டப்படும் செங்கோடன் சூரக்கோட்டை ராஜா ஆவான். இவன் தன் மனைவி மீது தவறுதலாக நடக்க முயற்சித்தான் என்ற கூற்றினால் அவனுடன் போர் புரிய வருகின்றான் போரில் வெற்றியும் பெறுகின்றான் வேங்கைமலை ராஜா (எம்.ஜி.ஆர்). ஆனால் நயவஞ்சக முறையில் அவனைக் கொலை செய்யும் செங்கோடன் பின்னர் அவன் நாட்டில் வாழும் பெண்கள் அனைவரையும் அடிமைப் படுத்த உத்தரவு பிறப்பிக்கின்றான். இச்செய்தியைக் கேட்டு அறியும் வேங்கையன்,தாயார்தனது மகனை செங்கோடன் கையில் பறிகொடுத்து தலைமறைவான இடத்தில் வாழ்ந்து வருகின்றார். வேங்கையனும் சிறுவயது முதல் சிறையில் அடைக்கப்பட்டு உலகமறியாது வாழ்கின்றான். காட்டுவாசி போலவே மாறிவும் வேங்கையனை வேங்கைமலையினைச் சேர்ந்தவனால் காப்பாற்றப்படுகின்றான். பின்னர் ஜீவா (ஜெயலலிதா) என்ற பெண்ணால் வளர்க்கப்படுகின்றான் வேங்கையன். அவளிடன் பேச, போர் செய்ய மற்றும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளும் வேங்கையன் தனது தாயாரையும் சந்திக்கின்றான். தன் மகனை முதலில் சந்திக்க மறுக்கும் வேங்கையனின் தாயார் பின்னர் வேங்கையன் அடிமையாகவிருந்த பெண்களை விடுவித்தபின்னர் அவனைச் சந்திக்கின்றார். இச்சமயம் ஜீவா போன்றொரு பெண் வேறொரு பகுதிக்கு ராணியாகவிருப்பதைக் காணும் வேங்கையன் திகைப்படைகின்றான். அவளும் இவன் மீது காதல் கொள்கின்றாள். ஆனால் ஜீவாவையே காதலிக்கும் வேங்கையன் அப்பெண்ணை ஏமாற்றி தன் நாடுதிரும்புகின்றான். அச்சமயம் பார்த்து செங்கோடனுக்கு உதவி புரியும் அந்த ராணி தன்னை ஏமாற்றியதற்காக வேங்கையனை பழிவாங்குவதற்கு முயற்சி செய்யும் சமயம் ஜீவா தனது தோழி என்பதனைத் தெரிந்து கொள்கின்றாள். இச்சமயம் பார்த்து வேங்கையனின் தாயாரைக் கடத்திச் செல்லும் செங்கோடனிடமிருந்து தன் தாயை மீட்டெடுத்து செங்கோடனைக் கொலை செய்கின்றான் வேங்கையன். அதே சமயம் ஜீவாவைக் கொலை செய்ய முயலும் பெண்ணான வேங்கையனை அடைய விரும்பிய ராணி தவறுதலாகத் தாக்கப்பட்டு கொலையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    புகழ்பெற்ற பாடல் : -
    @ . ஆயிரம் நிலவே வா -
    @. தாயில்லாமல் நானில்லை
    @. காலத்தை வென்றவன் நீ
    @. ஏமாற்றதே.. ஏமாற்றதே..
    @. உன்னை பார்த்து இந்த
    @. அம்மா என்றால் அன்பு

    சிறப்பு :
    @. வெளியானது தொழிலாளர் தினத்தில்
    @ புரட்சி நடிகர் நடித்த 102 வது படம்
    @. புரட்சி நடிகர் கதாநாயகனாக வலம் வந்த 82-வது படம்.
    @. புரட்சி நடிகர் 2 வேடத்தில் பங்கு கொண்ட 7-வது படைப்பு
    @. மக்கள் திலகத்துடன் ஜெயலலிதா நடித்த 17-வது படம்
    @. தலைவரின் 11-வது வண்ண படம்
    @. மக்கள் திலகத்துடன் ராஜசிரி நடித்த 4-வது படம்.
    @. மக்கள் திலகத்துடன் K.V.மகாதோவன் இசை அமைத்த 22-வது படம்
    @. அதிகமான இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பு நடத்த பட்ட படம்
    @. K.சங்கர் தலைவருக்க இயக்கிய 5-வது படம்.
    @ வெள்ளி விழா படம் 25-வாரம் - மதுரை சிந்தாமணி
    @. தொழிலாளர் தினத்தில் வந்த ஒரேயொரு தலைவர் படம்.
    @. அதிகமான பொருட்செலவில் உருவானது

    நன்றி.. B.S.Raju, Urimaikural
    என்.வேலாயுதன்
    திருவனந்தபுரம்........ Thanks.........

  7. #96
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சித்திரச் சோலைகளே!
    உமை நன்கு திருத்த இப்பாரினிலே
    முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
    உங்கள் வேரினிலே

    ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
    உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
    நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
    உதித்தது மெய் அல்லவோ?”

    “ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
    இலக்கணம் படித்தவன் தொழிலாளி
    உருக்கு போன்ற தான் கரத்தையே நம்பி
    ஓங்கி நிற்பவன் தொழிலாளி”
    *******

    “நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
    நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே...”

    " உழைக்கும் கைகளே.. உருவாக்கும் கைகளே.."

    போன்ற பாடல்களின் வழியாக.. தன்னுடைய திரைப்படங்களில் உழைக்கும் மக்களின் மேன்மையை புரட்சித்தலைவர் உயர்த்தினார்.. இன்றைக்கும் இந்தப் பாடல்களை கேட்கும் போது உழைக்கும்
    தொழிலாளிக்கு வாழ்த்துகள் சொல்லி ஒரு சல்யூட் அடிக்க ஆசைப்படுவோம்.

    நாட்டின் மூலதனத்தை விட தொழிலாளியின் சக்தியே வீரியமானது. அதனை நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். வேர்வை நிலத்தில் பட உழைக்கும் தொழிலாளி இல்லையென்றால் உலகில்
    எந்தப் பராக்கிரமங்களும் கிடையாது.

    எப்படித் தொழிலாளர்களை மேதினத்தில் நினைத்துப் பார்க்கின்றோமோ, அதுபோல விளைநிலத்தில் பாடுபடும் விவசாயிகளைக் கொண்டாட வருடத்தின் 365நாட்களில் ஒரு நாள் கூட கிடையாது.

    பாடுபடும் விவசாயிகளைப் பற்றி எண்ணும் போது பட்டுக்கோட்டைக் கவிஞன் சொன்னது போல, “காடு வெளஞ்சென்ன மச்சான் –நமக்கு கையும் காலும் தானே மிச்சம்” என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது.

    “கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி ....” என்று பாடல்களில் உழவனைச் சிறப்பித்து சொல்லப்படுகிறது..
    “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்”,
    “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்றார் அய்யன் வள்ளுவர்.

    பாடல்களால் விவசாயத்தைச் சிறப்பிப்பது ஒருபுறம் இருந்தாலும் தங்கள் உழவுத் தொழிலை கொண்டாடுகின்ற தைத்திங்களை எல்லோரும் கொண்டாடினாலும், உழைக்கும் தொழிலாளர்களுக்கு, தங்கள் உழைப்பை, உழைப்பின் உன்னதத்தை மே 1-ம் நாளில் சிறப்பித்துக் கொண்டாடுவது போல,
    நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கும் தாங்கள் படுகின்ற பாட்டைப் பாடுகின்ற வகையில், ”உழவர் தினம்” என்று வருடத்தில் ஒர்நாள் சர்வதேச அளவில் அறிவிக்கப்பட வேண்டும்.

    இது விவசாயத்தையும், விவசாயத் தொழிலாளிகளையும் சிறப்பிக்கின்ற முக்கிய நடவடிக்கையாக அமையும்...
    அனைவருக்கும் இனிய மேதின வாழ்த்துக்கள் ...!.......... Thanks.........

  8. #97
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜாதி ராஜா... ரஜினிகாந்த்.....வேல்..சூரியா.... சட்டம் என்கையில்... கமல்...வாணிராணி.. வாணி ஸ்ரீ .., வந்தாளே மகராசி.. ஜெயலலிதா... தங்கமடி தங்கம் அம்பிகா... இத்தனை படங்கள் ... "எங்க வீட்டு பிள்ளை" கதையின் மூலக்கரு........ Thanks...

  9. #98
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்க வீட்டு பிள்ளை படத்தை கிட்டத்தட்ட 4 தடவை பார்த்து விட்டேன். அதோடு நில்லாமல் ஒரு 40 , 50 பேரிடமாவது கதையை சொல்லியிருப்பேன். நண்பர்கள் சேர்ந்து விட்டால் போதும் விளையாட்டை முடித்துவிட்டு அரட்டை அடிக்க ஆரம்பித்து விடுவோம். அப்போது எங்க வீட்டு பிள்ளையில் வரும் ஒவ்வொரு காட்சியாக சொல்லி பேசி மகிழ்வோம்.

    அப்படி பேசிக்கொண்டிருக்கையில் ஒருநாள் எம்ஜிஆர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் சென்று விடுவாரே, அவரை மாதிரி சாப்பிட்டு விட்டு தைரியமாக காசு கொடுக்காமல் வரமுடியுமா? என்று எங்களுக்குள் சவால் எழுந்தது.
    உடனே நான் இதென்னடா பிரமாதம் நான் செய்கிறேண்டானு சொல்லிட்டேன். எல்லோரும் உடனே சம்மதித்து விட்டு சரிடா! நீ செய்டா! அப்படி செஞ்சுட்டா உன்னையும் எம்ஜிஆர் மாதிரி தைரியமானவன்னு ஒத்துகொள்வோம் என்றனர்.

    4,5 நாட்கள் ஆன பிறகு டேய் இவன் பயந்துட்டான். இவன் ரெளடி எம்ஜிஆர் கிடையாது.கோழை எம்ஜிஆர் என்று என்னை அழைக்க ஆரம்பித்தார்கள். உடனே எனக்கு ஆவேசம் வந்து விட்டது. உடனே ஒரு திட்டம் மனதுக்குள் தோன்றியது.
    நாம நாலு பேரும் ஹோட்டலுக்கு போவோம். சாப்பிட்டு முடித்தவுடன் சர்வர் பில் தரும்போது தனித்தனி பில் கேட்போம். சர்வர் தந்தவுடன் நீங்கள் சர்வர் பார்க்கும் போதே அத்தனை பில்லையும் ஏங்கிட்ட குடுத்துட்டு நீங்க வெளியே போய் விடுங்கள். நான் மூன்று பில்லை மறைத்து வைத்து விட்டு என் பில்லை மட்டும் கட்டி விட்டு வருகிறேன் என்றேன்.
    எல்லோரும் பலே நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று என்னை பாராட்டினார்கள். ஒன்றை மறந்து விட்டோம். ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் வயது எங்களில் யாருக்கும் கிடையாது.அனைவருடைய பார்வையும் எங்கள் மீதுதான் இருக்கும் என்பதை நாங்கள் நினைக்கவில்லை.

    சரி அதற்கான ஹோட்டலை தேர்ந்தெடுக்க வேண்டுமே! என்று ஹோட்டலை தேடினோம். அந்த காலகட்டத்தில் சாதாரண ஹோட்டல்தான் அதிகமிருக்கும். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிடுவார்கள். அங்கெல்லாம் சென்றால் நாம் மாட்டிக் கொள்வோம். அங்கெல்லாம் செல்லாமல் காரனேஷன் தியேட்டர் அருகே சரவண பவ என்ற ஹோட்டலை தேர்ந்தெடுத்தோம். படம் விடுகிற வேளையில் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரம் பார்த்து நுழைந்து விடுவோம்.

    2,3 நாள் நோட்டம் விட்டதில் திருப்தியான அளவுக்கு கூட்டம் இல்லை. ஒரு நாள் வெள்ளிக்கிழமை புதிய படம் போட்டதால் படத்துக்கு கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. ஹோட்டலிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாங்கள் நால்வரும் ஹோட்டலில் நுழைந்து விட்டோம். நால்வரும் ஒரே டேபிளில் அமர்ந்து சாப்பிட்டோம்.சாப்பாட்டில் கவனம் செல்லவில்லை. எப்படி காரியத்தை வெற்றிகரமாக முடிப்பது என்ற எண்ணத்தில் இருந்ததால் மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. எங்கள் நாலு பேருக்கும் சேர்த்து மொத்தம் ₹2 தான் வந்தது.

    உடனே சர்வரை கூப்பிட்டு தனித்தனி பில்லாக கொண்டு வா என்றேன். அவனும் ஆளுக்கு 50 பைசானு தனித்தனி பில்லாக கொடுத்து விட்டு சென்று விட்டான். அடுத்த டேபிளுக்கு ஆள் வரும்வரை சர்வர் கல்லாவுக்கு எதிரேதான் நிற்பான். அதுவரை மெதுவாக சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். மூவரின் பில்லை நான் வாங்குவதை சர்வர் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அங்கேயே நின்றான். திடீரென்று அடுத்த டேபிளுக்கு 4 பேர் வந்து அமர்ந்து ரொம்ப அவசரம் படம் போட்டு விடுவான் சீக்கிரம் ஆளுக்கு 2 தோசை போட்டு கையோடு எடுத்துட்டு வா என்றதும் சர்வர் வேகமாக தண்ணி எடுத்து வைத்து விட்டு சமையல் கட்டுக்குள் நுழைந்தவுடன் அவசரமாக இலையை எடுத்து போட்டு விட்டு கவுண்டருக்கு போய் 50 பைசா பில்லை காண்பித்து காசை கொடுத்து விட்டு கிளம்பினேன்.தம்பி உன் கூட வந்தவங்களை எங்கே? என்று கேட்க வெளியே நிக்கிறாங்கனு சொல்லிட்டு திரும்பி பார்க்காமலே நடந்து, நடந்து என்ன ஒட்டமும் நடையுமாக சென்று விட்டேன்.

    இதை என் உடன்பிறந்தவர்களிடம் சொல்லி பெருமைப்பட்டு கொண்டிருந்தேன்.
    அதில் ஒருவன் என் தந்தையிடம் போட்டுக்கொடுத்து விட்டான். என் தந்தை என்னை கூப்பிட்டார்கள். விளையாடிக் கொண்டிருந்த நான் என் தந்தை அழைத்ததும் என்னப்பா! என்று தந்தையிடம் சென்றேன். டேய் பரவாயில்லைடா நீ பெரிய சாமர்த்தியசாலி எப்படிடா ஏமாற்றினாய் என்று கேட்டவுடன் ஆர்வம் தாங்காமல் அத்தனையும் மிகவும் பெருமையாக சொல்லி முடிப்பதற்குள் ஒரே மிதிதான். தள்ளிப்போய் விழுந்தேன். நான் அந்த பகுதிக்கு அடிக்கடி போகிறவன். எனக்கு என்று ஒரு கெளரவம் இருக்கு நீ அதை கெடுத்திருவே போல இருக்குனு சொல்லிட்டு இனிமே இப்படி ஏதாவது கேள்விப்பட்டேன் உனக்கு அன்றைக்கே சமாதிதானு சொல்லிட்டு போயிட்டாரு. அதோடு அந்த எண்ணங்கள் மாறி விட்டது.
    அப்பறம்தான் படத்தை நினைத்து பார்க்கையில் தலைவர் சொல்வது நினைவுக்கு வந்தது. சே! சாப்பிட்டு விட்டு இப்படி காசு கொடுக்காம வந்துட்டோமே! வெட்கமா இல்லை! எப்படியும் இந்த தாயத்தை விற்றாவது காசை கொடுத்திருவோம்னு சொன்னது நினைவுக்கு வந்தது.

    இரண்டு நாள் கழித்து என் தந்தை அம்மாவிடம் பேசியதை கேட்ட போதுதான் தெரிந்தது அந்த ₹1/50 பைசாவையும் சேர்த்து கொடுத்தார்களாம் ஆனால் ஹோட்டல்காரர் வாங்க மறுத்து விட்டாராம். அதற்கு முதலாளி, அது நம்ம தம்பியா தெரியாமல் போய் விட்டதே! முன்னமே தெரிந்திருந்தால் நல்லா சாப்பிட வைத்து அனுப்பியிருப்போமே! என்றாராம். என் தந்தையை வைத்து ஒரு நாளைக்கு 40 காபி, டீக்கு மேல் விற்பனை நடக்குமாம்.

    இருவரும் நல்ல நண்பர்களாம். அதற்கு என் தந்தை சொன்னார்கள் நீ. பிடிபட்டவுடன்
    உன்னை யாரென்று எல்லாம் விசாரிக்க மாட்டார்கள் ஆளாளுக்கு தர்மஅடி கொடுத்தபின்புதான் விசாரிப்பார்கள். அதற்குள் அந்த பகுதி முழுவதும் தெரிந்து விடும். இன்னார் மகன் என்று என் பெயரைத்தான் கேவலமாக பேசுவார்கள் என்றார். அதுவும் எனக்கு நியாயமாக பட்டது. அன்றிலிருந்து. தம்பி தங்கக்கம்பியாக மாறி விட்டேன்........தோழர் S K அவர்களின் நீண்ட பதிவு..... Thanks...

  10. #99
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தொழிலாளி

    தொழிலாளிகளைப் பற்றி உலகத்தில் எத்தனையோ தலைவர்களும், அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள்....ஏன் சில திரைப்படங்களில் கூட தொழிலாளர்களைப் போற்றியுள்ளார்கள்...

    ஆயிரம் பேர் போற்றியிருந்தாலும்...
    நம்ம வாத்தியார், தொழிலாளர்களைப் போற்றியதற்கு ஈடாகுமா!!!

    ஏனெனில் மேற்குறிப்பிட்ட யாவரும் சொல்லி மட்டும் தான் இருக்கின்றார்கள்...அறிவுரை சொல்வது எளிது...அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

    ஆனால் #அடிமட்டத்தொழிலாளியாக இருந்து , தன் உழைப்பினால் தானும் உயர்ந்து, திரைப்பட துறையில் சிறிய அளவில் நடிகராக நடிக்க தொடங்கி கடும் உழைப்பினால் முன்னேறி முதல் ரேங்க் உச்ச நடிகர் அந்தஸ்தில் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் வரையிலும், தம்மை சார்ந்தவர்களையும் வாழவைத்து, ஒரு மாநிலத்திற்கே முதல்வராய்த் திகழ்ந்து...நமக்கெல்லாம் இதயதெய்வமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற...

    தொழிலாளர் வர்க்கத்திற்கே என்றென்றும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும்...

    "#வாத்தியாரின் #பாதகமலங்களுக்கு இக்காணொளியை" சமர்ப்பிக்கின்றேன்...

    உண்மையான தொழிலாளிக்குத்தான் உண்மையான தொழிலாளர்களின் பிரச்சனை தெரியும்.

    வாத்தியார் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் #வெறும் #நடிப்பல்ல...எவ்வளவு ஆத்மார்த்தமானது என்பதை இக்காட்சிகளில் அறிந்துகொள்ளலாம்...எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது......... Thanks.........

  11. #100
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்"

    " மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனிதநேயம்"

    1977 இல் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். எம்.ஜி.ஆருக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரின் உயர்மட்ட விசிறிகளில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டுராவ்.

    பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று குண்டுராவ் எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். குண்டுராவின் பிறந்த நாளன்று, பெங்களூருக்கு நேரில் சென்று, அவரை வாழ்த்தவேண்டும் என்று முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

    பிற்பகலில் TMX 4777 என்ற எண்ணுள்ள பச்சை அம்பாசிடர் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர். அவருடன், அவரது மனைவி ஜானகி அம்மா, ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர். மற்றொரு வேனில் நாங்கள் அவர் வண்டியை பின்தொடர்ந்தோம்.

    பெங்களூரை அடைந்ததும் எம்.ஜி.ஆரும், அவரது குடும்பத்தினரும் அங்கு 'வெஸ்ட் எண்ட்' என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். நாங்கள் அதற்க்கு அருகே வேறொரு ஹோட்டலில் தங்கினோம்.

    மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டுக்கு சென்றோம். பெரிய பார்சல் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பரமசிவம், செக்யுரிட்டி ஆபிசர் கண்ணுசாமி உடன் இருந்தனர். பால் பாயாசத்தோடு எங்கள் அனைவருக்கும் நன்றாக சைவ சாப்பாடு அளிக்கப்பட்டது. சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார் குண்டு ராவ். அவரை மனதார வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.
    பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எம்.ஜி.ஆர் தான் வரும் அம்பாசிடர் காரில் என்னை வரச் சொன்னார். 11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெயில். காரில் பயணம் செய்யும்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் படிய பாடல்களை எப்போதும் ரசித்துக் கேட்பார் எம்.ஜி.ஆர்.

    ஓசூர் தாண்டியிருப்போம். இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் நடந்து, பிறகு வெயிலுக்காக ஓரமாக நின்று மீண்டும் நடை.

    'ராமசாமி, காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். 'ராமு, போய் அவங்களை விசாரித்துவிட்டு வா...' என்றார் என்னிடம். ராமகிருஷ்ணன் என்ற என் பெயரை பல நேரத்தில் 'ராமு' என்று சுருக்கியே அவர் கூப்பிடுவார்.

    'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக் கிழவி. 'தூரத்திலிருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்...' என்றார். எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

    தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடம் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பேட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து, 'அவர்களிடம் கொடு...' என்றார்.

    இரு ஜோடி செருப்புகளையும் எடுத்துக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னார் என்று ஆயிரம் ரூபாயையும் கொடுத்தேன். அப்படியே நெகிழ்ந்து போயினர். எதிர்பாராமல் பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றிகூட சொல்லாமல் அப்படியே நின்றனர்.

    காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.

    தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் என்று இல்லாமல், உதவி கேட்காதவர்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்வதுதான் எம்.ஜி.ஆரின் குணம். இந்த மனிதநேயம் தான் அவரை உயரத்தில் வைத்தது. தனக்கு உதவியவர் தமிழக முதல்வர் என்று அந்த கிழவிக்குத் தெரியுமா, தெரியாதா? எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்யப்பட்ட மனிதநேய செயல் அது.
    Posted : M.G.Nagarajan
    30 April 2020 2:13 AM
    தகவல்களுக்கு நன்றி: விகடன் பிரசுரம்...... Thanks........

Page 10 of 210 FirstFirst ... 891011122060110 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •