Page 105 of 210 FirstFirst ... 55595103104105106107115155205 ... LastLast
Results 1,041 to 1,050 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1041
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*09/10/20* அன்று அளித்த*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------
    அமெரிக்காவில் தங்கியிருந்த தாய் வார இதழின் உதவி ஆசிரியர் திரு.கல்யாண்குமார் நல்ல செயல்களை, இயல்பான செயல்களை எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்து தெரிவித்தார் .ராமாவரம் தோட்டத்தில் இருந்து ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்ததாக அழைக்கப்படுகிறார் . மறுமுனையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசுகிறார் .கடந்த வாரம் தாய் வார இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வெளியாகி இருந்தது தெரியுமா என்று கேட்கிறார் ..இல்லை ஐயா, நான் உதவி ஆசிரியர் , விளம்பர துறையைத்தான் கேட்க வேண்டும் .ஆசிரியர் வந்த பிறகு உங்களிடம் பேச சொல்லட்டுமா என்று சொல்ல பதிலுக்கு எம்.ஜி.ஆர். பரவாயில்லை .உங்களிடம் எந்த தகவலும் இருக்காது .இருந்தாலும் ஆசிரியர் வந்த உடன் போனில் பேச சொல்லுங்கள் என்று பொறுமையாக சொன்னாராம் எம்.ஜி.ஆர். யாரிடம் எதை கேட்பது ,யாரிடம் எந்த விவரங்கள் பற்றி கேட்டால் தெரியும் என்கிற யுக்தியை அறிந்து இருந்தவர்*

    எப்படி வலம்புரி ஜான் வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணின் தன்மையை, நிலைமையை அக்கறையோடு விசாரித்து ,நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன் ,என்று அந்த பெண்ணுக்கே பேசுவது எம்.ஜி.ஆர்.தான் என்று தெரியாமல் வியப்பு அடைய செய்தது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்காக கணிசமாக தொகையை கொடுத்து அனுப்பினாரோ ,அப்படிப்பட்ட ஒரு தாயுள்ளம் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர்கள் . அவருடைய தாயுள்ளத்திற்கு பல்வேறு உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் . 1966ல் காவல்காரன் படத்தில் நடிக்க நடிகர் சிவகுமாருக்கு வாய்ப்பு கிடைத்தது .படப்பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ஆரிடம் தன்* தாயின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற விஷயத்தை தெரிவித்தால் ,எங்கே தன்னை பார்க்க மகன் ஓடிவந்து விடுவானோ என்று தாயார் தெரிவிக்காமலே இருந்துவிட்டார் என்று வருத்தத்தோடு சொன்னார் சிவகுமார் .இந்த சம்பவத்தை எம்.ஜி.ஆர். தன மனதில் நிலைநிறுத்தி கொள்கிறார் .1967 ஜனவரி 12ல் எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவரை சென்று பார்க்க* பலமுறை சிவகுமார் முயன்று முடியாமல் போனது .இந்த முயற்சி முடியாமலே போய்விடுமோ என்று நினைத்த நேரத்தில் ஒரு நாள் சிவகுமாரை கவனித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்*அவரை பார்வையாளராக சென்று கொஞ்சம் தள்ளி நின்று பார்த்துவிட்டு வர சொன்னார்.அவரை சிரமப்படுத்தாதீர்கள் என்றும்* சொன்னார் .சற்று தூரத்தில் இருந்த சிவகுமாரை எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டு உள்ளே வரும்படி சைகை செய்கிறார் .சிவகுமார் அருகில் வந்ததும் ,தன்னுடைய உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல் உன் தாயார் எப்படி இருக்கிறார் . ஊருக்கு சென்று அவரை பார்த்தாயா என்று மிகவும் லேசான குரலில் கேட்டாராம் .எப்போதும் தாயுள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். மற்றவர்களின் தாயார்களின் உடல்நிலை, பற்றியும் அக்கறையோடு விசாரிப்பது, அவர்களை மதிப்பது என்கிற குணம் எம்.ஜி.ஆரிடம் உண்டு .


    திரு.கா. லியாகத் அலிகான் :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உள்ளத்தில் தான் முதல்வராகாமல் வேறு யாரையாவது முதல்வராக நியமிக்கலாமா என்ற யோசனை இருந்தது .ஆனால் காலத்தின் கட்டாயமாக அவரே முதல்வராக இருந்து ஆளக்கூடிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அப்படி இருந்தார் .ரஷ்யாவிற்கு புறப்பட்டு போன எம்.ஜி.ஆர். அவர்கள் அங்கிருந்து சிலமுக்கிய நபர்களுக்கு கடிதம் எழுதுகிறார் .* தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட* சோதனை, கட்சியை விட்டு நீக்கிய நேரத்தில் ,தனக்கு ஆதரவாக, உதவியாக யார் யாரெல்லாம் இருந்தார்கள் தன்னை முன்னிலை படுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதுகிறார் .முதல் கடிதம் மாணவர் அமைப்பாளராக இருந்த திரு.வெள்ளைசாமிக்கு ரஷ்யாவில் இருந்து*வருகிறது .தமிழக மக்கள் போற்றும் மக்கள் தலைவர் எப்படிஎளிமையாக நடந்து கொண்டார்** பாருங்கள் .*அதே போல அனைவருக்கும் எழுதுகிறார் . கோவைத்தம்பி, அரங்கநாயகம் ,திருப்பூர் மணிமாறன், நாஞ்சில் மனோகரன் , கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம்,அழகு திருநாவுக்கரசு ,,தஞ்சை சாமிநாதன், ஏ.சி.சண்முகம் ,ஜெகத்ரட்சகன்* என்று ஏகப்பட்ட நபர்கள் ..அன்புள்ள தம்பிக்கு , நீங்கள் நலமா ,நான் இங்கு நலமாக இருக்கிறேன் .ரஷ்யாவில் கடும்குளிராக இருக்கிறது .நீங்களெல்லாம் ஜாக்கிரதையாக இருந்து கட்சி பணியில் ஈடுபடுங்கள் .உங்கள் உடலை வருத்தி கொள்ளாதீர்கள் என்று பொன்மொழிகளாக எழுதினார்* வெள்ளைச்சாமி என்பவரை ஒழித்துவிடலாம் என்று பலர் கணக்கு போட்டார்கள் . ஆனால் முடியவில்லை .சட்ட கல்லூரி மாணவர் தலைவராக வெள்ளைச்சாமி ,எம்.ஜி.ஆர். அவர்களை தி.மு.க.வில் இருந்து நீக்கிய சமயம் சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஊர்வலம் , ஆர்ப்பாட்டம் நடத்தி , காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று* அடி, உதை வாங்கியவர் என்கிற நினைவு எத்தனை வருடம் ஆனாலும் எம்.ஜி.ஆர். மறக்கமாட்டார் .என்னையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், கருணாநிதிக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதற்கு நான்,பொள்ளாச்சி ஜெயராமன், அண்ணா நம்பி, கே.பி.ராஜு, கருப்பசாமி போன்றவர்கள் அடக்குமுறையால் அவதிப்பட்ட நேரத்தில் மாணவர் தலைவராக இருந்த என்னை, வெள்ளைச்சாமி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்று அண்ணே ,கருப்பு கொடி காட்டிய எங்களை ரவுண்டு கட்டி ,காவல்துறையினர் லத்தியால் அடித்து காயப்படுத்தினர் என்றார் .நான்,வயதில் அவர்களைவிட இளையவன் .எங்களை பார்த்ததும், விவரங்களை சொன்னதும்* எம்.ஜி.ஆர். பதறிவிட்டார் .என்னை பார்த்து, உன்னையும் அடித்தார்களா என்று கேட்டார் .அதாவது 30 காவலர்கள், ஒரு டி.எஸ்.பி.,எஸ்.ஐ .,ஆய்வாளர் அங்கு*எங்களை ரவுண்ட் அப் செய்தனர் .* காவல்துறையினருக்கு மாவட்ட அளவில் நாங்கள் எல்லாம் ஓரளவு தெரிந்து இருந்தவர்கள் இருப்பினும் ,தகாத வார்த்தைகளால், வெளியில் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டினர் .எனக்கு லேசான அடிதான் . ஆனால் பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.ராஜு, கருப்பசாமி, சிங்கன்னா போன்றவர்களுக்கு கடுமையான அடி ,பலத்த காயங்கள் ஏற்பட்டன .அவர்களெல்லாம் பார்வைக்கு நல்ல உடற்கட்டோடு இருப்பார்கள் .இதையெல்லாம் பரிவோடு கேட்ட புரட்சித்தலைவர் எனக்கு லேசான அடி, மற்றவர்களுக்கு பலத்த காயங்கள் என்று சொன்னதுமே, என்னுடைய செயல்கள், ஈடுபாடுகள் ,லேசான அடி இதையெல்லாம் மனதில் வைத்து அவர் ஒரு கணக்கு போட்டார் .* என் மீது மிகுந்த அன்பு காட்டினார் .காரணம் நான் உண்மை விவரத்தை சொன்னேன் என்ற நம்பிக்கையில் .இனிமேல் பொறுமை காத்திருக்க முடியாது .கவலைப்படாதீர்கள் . நானே,இனி நேரடியாக செயலில் இறங்கி வேலை செய்யப்போகிறேன் அவர்களை நான் கவனித்து கொள்கிறேன் ..உங்களுக்காக நான் இருக்கிறேன் என்று என் தோளை தட்டினார் .தைரியமாக இரு என்றார் .(இந்த வார்த்தைகளை சொல்லும்போது திரு.லியாகத் அலிகான் தொண்டை அடைத்தது .உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார் .சில வினாடிகள் பேச முடியவில்லை. கொஞ்சம் தண்ணீர் அருந்தி, தன்னை ஆசுவாசப்படுத்திய பின் பேசினார் ) அதே மாதிரி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். எங்களை கைவிடவில்லை .ஒருபக்க பலமாக இருந்தார் .



    1977ல்எம்.ஜி.ஆர். அவர்கள் மந்திரிசபை அமைத்ததும்* முதன் முதலாக என்னை பால்வள துறை இயக்குனராக* நியமித்தார் .அப்போது பால்வள துறை அமைச்சராக இருந்தவர் குழந்தைவேலு .கோவை மருதாச்சலம் அவர்களை தலைவராகவும் ,சின்னராஜு,எம்.எல்.ஏ.,, மேட்டுப்பாளையம் பழனிசாமி , காட்டூர் கிருஷ்ணசாமி ,அண்ணா நம்பி, பேரூர் சண்முகசுந்தரம் ,இப்படி கட்சிக்காக பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் இயக்குனர்களாக நியமித்தார் .அதாவது அவர்கள் பக்கம் நியாயம் இருக்கவேண்டும், கட்சிக்காக உழைத்தவர்களாக* இருக்க வேண்டும் ,ரவுடித்தனம் செய்து இருக்க கூடாது இப்படிப்பட்டவர்களைத்தான் தேர்ந்தெடுத்தார் .எம்.ஜி.ஆர்.அவர்களின் குணாதிசயங்கள் நினைத்து இப்போது கணக்கிட்டால் எந்த ஒரு விஷயத்திற்கும்*அர்த்தம் இல்லாமல் அவர் செய்ததில்லை .அதே சமயத்தில் அவரை யாராலும் கணிக்க முடியாத வல்லவர் .ரஷ்யாவில் தான் இருந்தாலும் ஒய்வு நேரத்தில்*எங்களிடத்தில் அன்பை பரிமாறி கொண்டு, நீங்கள் எல்லாம் என் இதயத்தில் இடம் பெற்றுள்ளீர்கள் என்று சொல்லி, அனைவரையும் தட்டி கொடுத்து* வளர்த்து ஆளாக்கியவர் . அவர் ஒருமுறை முதல்வரான பின்* வெளிநாட்டுக்கு சென்று வந்தபோது, நீல நிற கோட்டும் ,கால் சட்டையும் அணிந்து வந்தார் ..அப்போது அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் உள்ளே* சுமார் பத்தாயிரம் பேர் திரண்டு இருந்தனர் .இப்போது போல பாதுகாப்பு அரண் எல்லாம் அப்போது கிடையாது .பார்வையாளர் கட்டணம் ரூ.5/- இருக்கும் .எங்கு பார்த்தாலும் மனித தலைகள் .காவல்துறையினரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர் . 1979 என்று நினைக்கிறேன் .எனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் சென்றுவிட்டார் .அப்போது நான் மணப்பெண்ணாகிய என் மனைவி* சர்புன்னிசாவை* சந்திக்க முடியவில்லை . ஏனென்றால் ,மணப்பெண்ணை மேடையில் உட்கார வைக்க கூடாது என்று என் தந்தையார் சொன்னதால் ,மேற்கொண்டு தலைவரையும் சந்திக்க முடியவில்லை .முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் வெளிநாடு சென்று திரும்பியபோது ஒரு பெரிய மாலையுடன் சென்று வரவேற்றேன் .அந்த மகத்தான கூட்டத்தில் சைகை மூலம் என்னை அருகில் அழைத்து ,நாலைந்து நாட்களுக்குள் உன் மனைவியை அழைத்து வந்து வீட்டில் என்னை பார் என்றார்*என்னை அவருடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்தார் .அவருடைய நினைவாற்றலை எண்ணி அப்போது வியந்தேன் .* இப்போது கூட எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது . அதாவது அவருக்கு நான் இன்னும் நன்றாக கடமை ஆற்றியிருக்க வேண்டும் . இன்னும் சிறப்பாக பணியாற்றி இருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் வருகிறது .அந்த அளவிற்கு எல்லோரையுமே சகோதரர்களாக நேசிக்க கூடிய, தொண்டர்களை கூட தம்பிகளாகத்தான் நேசித்தாரே ஒழிய, அண்ணாவை போல அன்புள்ள தம்பிக்கு என்று எழுதுவாரே அதுபோல ,தம்பிகளாக, தோழர்களாக, சகோதரர்களாக தவிர ஆண்டான், அடிமை என்ற சிஸ்டம் அவரிடம் கிடையாது ..இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


    1977ல் நாகப்பட்டினத்தில் புயல்,மழை, வெள்ளம் பாதிப்பு .அப்போது சிவகுமார், தன் தாயாருடன் சென்னையில் இருக்கிறார் .அவர் முதல்வர் புயல்/வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10,000/-க்கான காசோலையை முதல்வர் எம்.ஜி.ஆரிடம்*தருவதற்கு முற்படுகிறார் .சிவகுமார் தன் தாயாரிடம் விஷயத்தை சொல்ல, உடனே 10 நிமிடங்களில் தாயாராகிய அவரின் தாயாரோடு கோட்டைக்கு மனமகிழ்வோடு வருகிறார் .சிவகுமார் தாயாரோடு வருகை புரிந்த விஷயம் அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர். வாயில்படிவரை விரைந்து வந்து தன் முதுகை காட்டாமல் சிவகுமாரின் தாயாரை வரவேற்கும் பொருட்டு பின்பக்கமாகவே*படிகள் ஏறிஅவருடன்* வந்தார் உள்ளே அறைக்கு வந்ததும் அமரவைத்து ,உபசரித்து பேசி கொண்டிருந்தாராம் .அப்படி தாயுள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். அந்த தாய்க்கு மரியாதை கொடுத்து, மதிப்பளித்து நடந்து கொண்டாராம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்
    ---------------------------------------------------------------------------------

    1.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் -உலகம் சுற்றும் வாலிபன்*

    2.தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்*

    3.தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்*

    4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

    5.திருநிறைச்செல்வி மங்கையற்கரசி - இதயவீணை*


    *.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1042
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #காலத்தால் #அழிக்கமுடியாத திரைக்காவியம் தான் #திருடாதே...

    பிக்பாக்கெட் அடிக்கும் ஒரு திருடனின் கதை...ஆனால் படத்திற்கு என்ன தலைப்பு வெச்சுருக்கார் பாத்தீங்களா !!!

    திருடாதே திரைக்காவியம்...
    படம் வெளிவந்த சில தினங்களில்...ரசிகர்கள் மத்தியில் எந்த அளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது...என்பதை அறிந்து கொள்ளும் ஆவலோடு ரகசியமாக ஒரு சினிமா தியேட்டருக்கு புரட்சித்தலைவர், நம்பியார் மற்றும் இயக்குனர் நீலகண்டன் ஆகியோர் காணச்சென்றனர்...

    கிளைமாக்ஸ் காட்சியில் எம்ஜிஆர் - நம்பியார் விறுவிறுப்பான சண்டைக்காட்சில்..."எம்ஜிஆர் அடிக்கிற அடியில் நம்பியாரின் பொய்முகம் (முகமூடி) கிழிந்து தனது உண்மை உருவம் தெரிந்துவிடும்.

    அதனால் எம்ஜிஆரிடமிருந்து தப்பிப்பதற்காக நம்பியார் ஒரு பாதாள அறைக்குச் சென்று ஒளிந்துகொள்வார். அவரைப் பிடிப்பதற்காக எம்ஜிஆர் பாதாளஅறைக்குள் மெதுவாகச் செல்வார்..

    தங்களின் தலைவரை நம்பியார் தாக்கிவிடக்கூடாதே என்று பயந்த ரசிகர்கள்..."#இறங்காதே ! #இறங்காதே...#கீழே #நம்பியார் #ஒளிஞ்சிட்ருக்கான்" என்று பதறியபடிக் கூக்குரலிட்டனர்...

    இக்காட்சியைக் கண்ட இம்மூவரும் மிகவும் நெகிழ்ந்துவிட்டனர்...#எம்ஜிஆருக்கு #கண்ணீர் #பீறிட்டுக்கொண்டு ##வந்துவிட்டது...

    இந்த அளவு ரசிகர்கள் இதயங்களில் எம்ஜிஆர் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்தார்...

    மக்களின் இதயத்தில் மட்டுமா என்ன?

    அவர்களின் முகத்திலும் கூடத்தான்...!!!

    என்ன புரியலையா ???

    "அவர் தான் #மக்கள் #திலகமாச்சே".........bsm...

  4. #1043
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்பில் பிடித்தவர்கள் பலர்.சரித்திரப்படங்களில் சிவாஜிகணேசன், 80–90 களில் கமல், ரஜினி, எல்லாப்படங்களிலும் நாகேஷ், இப்படி…
    ஆனால் ஒரு மனிதராக அடுத்தவர் சாப்பிடக் கஷ்டப்படக்கூடாது என்று மனதார நினைத்து முதலமைச்சர் ஆனபோதும் மறவாமல் அதற்கான திட்டங்களை செயல்படுத்திய MGR பல விஷயங்களில் உயர்ந்து நிற்கிறார். சிகரெட் குடி போன்ற தீய பழக்கங்களை கடைப்பிடிக்கவில்லை திரைப்படங்களில் ஹீரோ அதெல்லாம் செய்ததாக காணவைத்ததில்லை… சிறுவர்களுக்குக் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து பார்த்தபோதெல்லாம் நன்றாகப்படிக்க சொல்லி வலியுறுத்தி, நடித்த படங்களில் பாடல்வரிகளை கவனமாக நல்ல சிந்தனைகளை தூண்டும்படி செய்தது சிறப்பு. எனக்கு அவரை அதனால் ஒரு தனிநபராகப் பிடிக்கும்.
    சமீபத்தில் அஜித். பரவலான பின்தொடர்பு இருந்தாலும் நிறைய நல்ல விஷயங்களை வெளிச்சம் தொடர்ந்துவிடாமல் செய்துவருகிறார். கிட்டத்தட்ட எல்லா நடிகர்களாலும் பாராட்டபடுகிறார். தேவையில்லாத அரசியல் செய்வதில்லை.
    பாலசந்தர் பாரதிராஜா மணிரத்னம் பாலா ஷங்கர் போன்ற நடிப்பை வளர்த்துவிடும் பலரின் படங்களில் நடிக்காமலேயே சொந்த உழைப்பால் முன்னேறி இருக்கிறார். பலதரப்பட்ட திறமைகள் கொண்டவராக இருக்கிறார்.
    நல்ல எதிர்காலம் இருக்கிறது. நம்பிக்கை தருகிறார்.
    லாரன்ஸ் பற்றியும் நிறையப்பேர் எழுதுகிறார்கள். நம்பிக்கை தருகிறார்.
    நடிகர் என்ற பட்டம் தாண்டி மனிதர் என்ற பட்டம் பெறும்போது அவர்கள் உயர்கிறார்கள்......Quora Q&A...

  5. #1044
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நிஜத்திலும் படத்திலும் சிறுமிகளுக்கு ஆதரவளித்த எம் ஜி ஆர்

    "ரிக்க்ஷாக்காரன் " படத்தில் முதல் பாடலாக எம்ஜிஆர் ஒரு அனாதைக் குழந்தையைப் பார்த்து அதன் சிரிப்பை ரசித்து அதன் வாழ்க்கையில் அதற்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தை நினைத்து கொதித்துப்போய் அதற்கு காரணமானவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்ற கருத்தில் பாடும் பாடல் குழந்தையின் அழகுச் சிரிப்பையும் அக்கிரமக் காரர்களின் ஆணவச் சிரிப்பையும் ஒப்பிட்டு எழுதப்பட்திருக்கும்.
    அனாதைக் குழந்தையிடம் ‘’நீ இன்று உன் தாயை இழந்து அனாதையாக இருக்கின்றாய், அதற்குக் காரணமானவர்கள் நீதியின் கண்களை மூடி விட்டதாக நினைத்து சிரித்து கொண்டாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கயவர்களின் ஆர்ப்பாட்டம் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடும். அவர்களை நீதிதேவன் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பேன், என பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அல்லது பாதிக்கப்பட்ட எவருக்கும் சட்டத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். நீதியின் கரங்கள் உங்களை காப்பாற்றும் என்று ஆறுதல் அளிப்பதாக பாடப்பட்ட பாடல் ஆகும்.

    ரிக்க்ஷாக்காரன் படத்தில் வரும் இப்பாட்டு பெரியவர்கள் மத்தியில் படாமல் ஏன் ஒரு சிறு குழந்தையை வைத்துக் கொண்டு பாட வேண்டும் என்று கேட்டால் இப் படத்தில் பெரியவர்களுக்காக ஒரு கருத்துப் பாடல் பிற்பகுதியில் எம் ஜி ஆர் மாறுவேடம் போட்டு உடுக்கை, பம்பை போன்ற நாட்டுப்புற இசைக் கருவிகளுடன் ஆடுகின்ற ஒரு குழுப் பாடலாக இடம்பெறுகிறது. எனவே இந்தப் பாட்டு சிறுவர்களுக்கு ஒரு ஆபத்து வரும்போது அவர்கள் சோர்ந்து போய் விடக்கூடாது என்ற கருத்தில் தாய் தந்தையை இழந்த சிறுவர்கள் தம்மை அனாதை என்று நினைக்கக் கூடாது. அவர்களுக்கும் ஆதரவளிக்க அன்பு நிறைந்த மக்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்காக ஒரு அனாதை சிறுமியிடம் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது
    வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
    மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே
    கெட்டவர்களிடம் நீதியும் நேர்மையும் எழுத்தளவில் ஏட்டளவில் இருக்கின்றது; நடைமுறை வாழ்க்கையில் இல்லை.

    ஆனால் அதற்காக அவர்களுடைய வாழ்க்கை அப்படியே இருந்து விடாது. அவர்களுக்கு நாம் அஞ்சிக் கொண்டிருக்கத் தேவையில்லை. நேரம் வரும் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை ஊட்டும் வகையில் அடுத்த சரணமாக
    நேரம் வரும் கேட்கிறேன்
    பூனை அல்ல புலி தான் என்று
    போகப் போகக் காட்டுகிறேன்
    போகப் போகக் காட்டுகிறேன்
    என்று பாடல் நிறைவடையும் .

    அப்போது எம் ஜி ஆரின் முகத்தில் சிவப்பு ஒளி பாய்ச்சப்பட்டு அவரது அறச்சீற்றம் தெரியும்படி காட்சி அமைந்திருக்கும். அவர் முகத்தில் சிவப்பு ஒளியை காண்பித்து அவர் கோபமாக அநீதியைக் கண்டு பொங்குவாய் எனக் காட்டப்படும் அதேவேளையில் அந்தப் பாடல் வரிகள் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அங்கு வந்து நான் உங்களின் துன்பங்களைப் போக்குவேன் என்று கண்ண பரமாத்மா கலியுகத்தில் நான் அவதரிப்பேன் என்று கூறியதைப் போல உணர்த்தப்படும். ரசிகர்கள் அவ்வாறு உணர்ந்து நிம்மதி அடைவார்கள் .

    ‘’எங்கே அநியாயம் நடந்தாலும் அங்கே ஆபத்பாந்தவனாக நான் வந்து உங்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பேன். உங்களுக்கு தீமை செய்தவர்களை கட்டோடு ஒழிப்பேன்,’’ என்ற கருத்தை சிறு குழந்தை முதல் பெரியவர் வரை மனதில் ஆழப் பதிய வைக்கும் முயற்சியே இந்த பாடலாகும். அந்தப் பாடலின் கருத்து அந்த சிறுமிக்கு அல்லது அந்த வயதில் உள்ள சிறுவர்களுக்கு தெளிவாக புரியாவிட்டாலும் அதன் மையக் கருத்து ஆழமாக அவர்கள் மனதில் பதியும்.

    எம்ஜிஆர் ஒரு இரட்சகர்; மீட்பர்; ஏழைகளுக்கு ஒரு துன்பம் வந்தால் அதை துடைக்கும் முதல் கரம் எம்ஜிஆரின் திருக்கரமே என்ற எண்ணத்தை நம்பிக்கையை இந்த பாடல் குழந்தை முதல் பெரியவர் வரை ஊட்டுவதில் ஐயமில்லை...

  6. #1045
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1972 ல் தமிழகத்தில் அதிக வசூலை ஏற்படுத்திய காவியம். 6 மாதத்தில் 1கோடியை வசூலாக பெற்று 40 லட்சத்தை அரசுக்கு வரியாக செலுத்திய காவியம்.........."நல்லநேரம்"...
    +++++++++++++++++++++++++++++++++
    56 திரையரங்கில் 50 நாட்களை கடந்த ஒரே காவியம். 21 திரையரங்கில்
    10 வாரங்களை கடந்த காவியம்.
    சென்னை 4, மதுரை, சேலம்
    கோவை, திருச்சி, நெல்லை
    திண்டுக்கல், ஈரோடு, பாண்டி
    தஞ்சை, குடந்தை, வேலூர், கரூர்
    மாயூரம், ப.கோட்டை, இலங்கை (3)
    ++++++++++++++++++++++++++++
    பெங்களுர் 3 அரங்கு 56 நாட்கள், மைசூர்,மங்களுர்,சித்தூர் 50 நாட்கள்.

    இலங்கையில் 5 அரங்கில் 50 நாட்கள்
    செல்லமஹால் 100நாட்கள்,
    வின்ஸர் 85 நாட்கள்.

    1972 ல் சென்னையில் 4 அரங்கில்
    100 நாள் ஒடிய ஒரே காவியம். சித்ரா, மகாராணி 116 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
    +++++++++++++++++++++++++++++
    2 ம் வெளியீட்டில்
    50 நாட்கள் ஒடிய ஊர்கள்...
    விருத்தாசலம்,தின்டிவனம்,குடியாத்தம்
    திருப்பத்தூர், துறையூர், கோவில்பட்டி
    தென்காசி,தேனீ, மன்னார்குடி, காரைக்கால், மேட்டுப்பாளையம்,
    செங்கல்பட்டு.....
    +++++++++++++++++++++++
    100 நாட்கள்....
    சென்னை
    சித்ரா, மகாராணி,மேகலா,ராம்
    மதுரை அலங்கார்.
    திருச்சி ஜூபிடர்
    சேலம் ஒரியண்டல்
    கோவை ராயல் (சிவசக்தி)
    நெல்லை சென்ட்ரல் (அசோக்)
    இலங்கை செல்லமஹால்
    +++++++++++++++++++++++++
    மதுரையில் இரண்டு அரங்கு வெளியிடப்பட்டு சாதனை.
    அலங்கார் 105 நாள்
    மூவிலேண்ட் 35 நாள்
    கோவையில் இரண்டு
    தொடர்ச்சி அரங்குகள்
    ராயல் 86 நாள்
    சிவசக்தி 21 நாள்
    நெல்லை இரண்டு தொடர்ச்சி
    சென்ட்ரல் 84 நாள்
    அசோக் 21 நாள்
    ++++++++++++++++++++++++++
    இன்று வரை நல்லநேரம் திரைப்படம் மகத்தான தொடர் வெளியீடுகளை சந்தித்து வருகிறது.....

    எங்கள் மக்கள் திலகம் ஒருவரே...
    வசூலின் நிரந்தர சக்கரவர்த்தி ஆவார்..........ur...

  7. #1046
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திமுகவில் இருந்தும்
    அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப் படுவதாக
    பொதுக்குழுவைகூட்டி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கி தீர்மானம் போட்டார்கள்

    எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானத்தை நெடுஞ்செழியன் கொண்டு வந்ததார் அதை
    திமுக செயற்குழு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து திமுக பொதுக்குழு கூடி நிறைவேற்றியதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டதாக
    அறிவித்தார்கள்

    எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கப் பட்டதுகுறித்து பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி கேட்டார்கள்
    அண்ணாவின் இதயக்கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதுதான் தூர தூக்கி எறியவேண்டியதாயிற்று
    என்றார்
    [பின் விளைவுகளை அறியாமல்]

    அன்றைய கோவை மாவட்டம்
    உடுமலைப்பேட்டையில் இளைஞர் ஒருவர் எம்ஜிஆரை கட்சியில்இருந்து நீக்கியதற்க்காக தற்கொலை செய்துகொண்டதற்குப்பின் விபரீதமாகிப்போனது.
    எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் திமுகவினரும்
    தமிழகம் முழுவதும் மோதிக்கொண்டார்கள் எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்தது கருணாநிதி அரசு

    அண்ணா வளர்த்த கட்சியில் சர்வாதிகாரம் சூழ்ந்துவிட்டது. கருணாநிதியின் பிடியிலிருந்து கட்சியை திமுகவினர்தான் காக்கவேண்டும் என்று
    அறிக்கை வெளியிட்டார் mgr

    துரோகம் தொடரும்...vr...

  8. #1047
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சி_தலைவர்
    #மக்கள்_திலகம்
    மன்னாதி மன்னன்
    #பாரத_ரத்னா_டாக்டர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #அவர்களின்_ஆசியோடு
    #நண்பர்கள்_அனைவருக்கும்
    #இனிய_வியாழக்கிழமை
    #காலை_வணக்கம்...

    புரட்சி தலைவரின் காலத்தில்
    புகழ் பெற்ற தமிழ் புலமை பற்று கொண்டவர்கள் அதிகம் அதில் அரசியல் ரீதியாக #சி_என்_அண்ணாதுரை
    #கலைஞர்_மு_கருணாநிதி போன்றவர்
    தமிழ் பேச்சால் தமிழக மக்களை கட்டி போட்டனர் என்றால் அது மிகையாகாது
    அது போல #புரட்சி_தலைவர்
    #பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்
    அவர்களும் தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்பதோடு, மிகுந்த தமிழ்ப் பற்றும் கொண்டவர் என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்...

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் எங்கு பேசினாலும் தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை பெருமிதத்தோடு சொல்வார். தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் நிலைத்து நிற்க வழி செய்தார்
    அவர் தமிழுக்கு ஆற்றிய பல விஷயங்களில் சிலவற்றை இங்கு பதிவிடுகிறேன்...

    1974-ம் ஆண்டு பிப்ரவரியில் பாண்டிச்சேரியில் சட்டப் பேரவைக்கும் நாடாளு மன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றார். மாஹே என்ற இடத்தில் பிரசாரக் கூட்டம். அந்தப் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். அவரது பேச்சை இடைமறித்து, மலையாளத்தில் பேசுமாறு கூட்டத்தில் இருந்த பெரும்பாலோர் கேட்டுக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு வந்ததே கோபம்!

    ‘‘எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி தமிழ் மட்டும்தான். சிறுவயதில் நாடக மேடை மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் தமிழில்தான் பேசுவேன். நான் வளர்ந்து, புகழ்பெற்று, இன்று உங்கள் முன் நிற்பதற்கு என்னை அரவணைத்து ஆளாக்கிய தமிழகம் தான் காரணம். எனவே, தமிழில்தான் பேசுவேன். விருப்பம் உள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் இங்கிருந்து சென்று விடலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளினார். பின்னர், வாய் திறக்காத கூட்டத்தினர் அவரது தமிழ் உணர்வைக் கண்டு வியந்தனர்.

    இந்தத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்... பாண்டிச்சேரி சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 30 தொகுதி களில் அதிமுக 12 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஸ்தாபன காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக 2 தொகுதிகளில் வென்றது. பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் பாலா பழனூர் வெற்றி பெற்றார்.

    புதுவை முதல்வராக அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்தாலும், தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி அகில இந்திய அளவில் பேசப்பட்டது. அந்த சமயத் தில் கோவை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செ.அரங்கநாயகம் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுகவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.

    தமிழுக்கு தொண்டாற்றி ‘முத்தமிழ் காவலர்’ என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியிலும் பணியாற்றியுள்ளார். நீதிக்கட்சியின் சார்பில் பனகல் அரசர் சர்.ராமராய நிங்கார் 1921-ம் ஆண்டு முதல் 1926-ம் ஆண்டுவரை சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்தார். அப்போதெல்லாம், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்றால் அந்த மாணவன் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.

    பனகல் அரசரை கி.ஆ.பெ. விசுவ நாதம் சந்தித்து, ‘‘ஆங்கிலமும் தமிழும் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தரவேண்டும்’’ என்று வலியுறுத்தி வெற்றி பெற்றார். அதன் பின்னர்தான், பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் மருத்துவக் கல்லூரி வாயிலை மிதிக்க முடிந்தது. பனகல் அரசர் நினைவாகத்தான் சென்னை சைதாப்பேட்டையில் ‘பனகல் மாளிகை’யும் தியாகராய நகரில் ‘பனகல் பூங்கா’வும் அமைந்துள்ளன.

    கி.ஆ.பெ. விசுவநாதத்துக்கு தமிழுக்கு என்று ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று விருப் பம். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது அவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். உடனடியாக அதற்கு எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். கி.ஆ.பெ.விசுவநாதத் தையே அதற்கான திட்டங்களை தயாரிக் கும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்ட தோடு, ஒரு குழுவையும் அமைத்து அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தார். அப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப் டம்பர் 15-ம் தேதி உருவாக்கப்பட்டது தான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.

    தமிழறிஞர்
    டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு உண்டு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் அண்ணன் சதாவதானி தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். ஒரே நேரத்தில் நூறு செயல்களை கவனித்து, நினைவில் நிறுத்தி பின்னர், அவற்றை சரியாக வெளிப்படுத்துபவர்களை ‘சதாவதானி’ என்று போற்றுவர். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவர் கிருஷ்ணசாமி பாவலர். அவர் எழுதிய ‘கதர் பக்தி’, ‘நாகபுரி கொடிப்போர்’ உள்ளிட்ட தேசிய மற்றும் சமூக சீர்த்திருத்த நாடகங்களில் சிறுவயதில் நாடக மேடைகளில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.

    அவரது சகோதரரான தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக் குப் பிறகு அவரது திருவுருவச் சிலையை, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். மதுரை பல்கலைக்கழகத்துக்கு 1978-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியதும் எம்.ஜி.ஆர்.தான்!

    தனது இறுதிமூச்சு வரை தமிழுக் காகவே முழங்கியவர் தேவநேயப் பாவாணர். அவருக்கு எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு உண்டு. 1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தமிழுக்கு எம்.ஜி.ஆர். சிறப்பு சேர்த்தார். மாநாட்டில் பாவாணரின் பேச்சை எம்.ஜி.ஆர். ஆர்வமுடன் கேட்டார். தேவநேயப் பாவாணர் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்.

    உலகில் உள்ள எத்தனை மொழிகளுக்கு தமிழ் மூலமொழியாக விளங்குகிறது என்பதையும் எத்தனை மொழிச் சொற்களுக்கு தமிழே வேர்ச் சொல்லாக விளங்குகிறது என் பதையும் ஆதாரபூர்வமான கருத்துக் களுடன் பாவாணர் சுவைபடப் பேசிக் கொண்டே போனார். சாப்பாட்டு நேரமும் கடந்துவிட்டது. சாப்பாட்டையும் மறந்து அவரது பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார். கூட்டமும் ஆர்ப்பரித்தது. ஒருமணி நேரத்துக்கும் மேல் பாவாணரின் சொல்மாரி தொடர்ந்தது.

    அன்றைய தினமே எதிர்பாராத அந்த சோகமும் நடந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதுரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சில நாட் களில் நோயின் தாக்கத்தால் தமிழின் மேன்மைக்காக ஒலித்த அவரது பேச்சு மட்டுமல்ல; மூச்சும் அடங்கியது. இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது.
    தேவநேயப்பாவாணரின் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் மாவட்ட நூலகங்களுக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.

    அது போலவே தமிழுக்கு தொண்டாற்றியவர்களின் பிள்ளைகள் படிக்க மருத்துவ கல்லூரியில் இரண்டு இடங்கள் ஒதுக்கி அரசாணை வெளியிட்டார்..

    ‘‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’’ என்று முழங்கியவர் புரட்சிக் கவிஞர்!

    அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் புரட்சித் தலைவர்!

    சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழ் அறிஞருமான ம.பொ.சி. எழுதிய, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ நூலை நாட்டுடமை யாக்கி, அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை செய்த தற்காக ம.பொ.சி.க்கு எம்.ஜி.ஆர். நிதி வழங்கினார்...

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு...

  9. #1048
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இப்போது இருக்கும் தலைமுறை நடிகர்கள் பலர் பாடி லாங்க்வேஜ் , ஸ்டைல் மானரிசம் தங்களுக்கே உரிய பாணியில் பண்ணுவதற்கு கொஞ்சம் கூட தெரிவதில்லை ... ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் அருமையான மேனரிசங்களை செய்து அசத்தியவர் நம்முடைய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவரைப் பற்றி சொல்லத் தெரிய வேண்டியதில்லை. இப்போது இருக்கும் புதிய நடிகர்கள் படங்கள் ஓடினால் தான் ஹீரோ. ஆனால் நம்முடைய புரட்சித்தலைவர் என்றும் எப்போதும் ஆல் டைம் எவர்கிரீன் மாஸ் ஹீரோ. இன்னும் பல தலைமுறைகளை தாண்டினாலும் எங்கள் உயிரிலும் மேலான அன்பு புரட்சித் தலைவா தாங்கள் தான் என்றுமே நிஜமான ஹீரோ.

    புரட்சித் தலைவருக்கு முன்பும் அவரைப் போல் எவரும் இல்லை ... புரட்சித் தலைவருக்கு பின்பும் இனி எப்போதும் அவரைப் போல் எவருமே இல்லை ....

    தலைவர் என்றாலே நம்முடைய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே !

    பொன் போல் மின்னும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........

  10. #1049
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கடந்து வந்த 48 ஆண்டுகள் ..ஒரு சிறிய கண்ணோட்டம் .

    1972-1987

    17.10. 1972ல் புரட்சித்தலைவரால் துவங்கப்பட்ட அண்ணா திமுக இயக்கத்தில் 100 சதவீத லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களை இயக்கத்தில் இணைத்து கொண்டார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரே நேரத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் தீவிரமாக பணியாற்றி கொண்டு வந்தார் . 1972- 1978 வரை அவர் நடித்த 17 படங்கள் வெளிவந்து ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றது .
    அதே நேரத்தில் 1973/1974 ல் நடந்த தேர்தல் களத்தில் புரட்சித்தலைவரின் வெற்றி உலக வரலாற்றில் இடம் பெற்று விட்டது .

    1977 பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர் இந்திய அரசியலில் ஹீரோ ஆனார் .
    1977 தமிழக சட்ட சபை தேர்தலில் எம்ஜிஆர் முதல்வராக உயர்ந்தார் . அகில உலகமே எம்ஜிஆரின் செல்வாக்கை கண்டு வியந்தது .
    1977- 1987 எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி
    அதிமுகவில் எம்ஜிஆர் ரசிகர்கள் பலருக்கும் கட்சியில் நல்ல பொறுப்புகளும் பிறகு ஆட்சியிலும்
    நல்ல பதவிகள் கிடைத்தது .உண்மையான ரசிகர்களுக்கு நல்ல மரியாதை கிடைத்தது ,உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பலருக்கும் சட்ட மன்ற /
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது தேர்தலில் போட்டியிட்டார்கள் ..பலரும் வெற்றி வாகை சூட்டினார்கள்.சிலர் அமைச்சர்களாக பதவி ஏற்றார்கள் மக்கள் திலகத்தின் பொற்கால ஆட்சிக்கு சிறப்பு சேர்த்தார்கள் ..
    .
    15 ஆண்டுகள் எம்ஜிஆர் ரசிகர்கள் அடைந்த பெருமைகள் ஏராளம் . ஏராளம் .

    1987-2020
    மக்கள் திலகத்தின் மறைவிற்கு பிறகு அதிமுக இயக்கம் பல சோதனைகள் சந்தித்தது .ஜெயலலிதாவின் தலைமை இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தது .1991/2001/ 2011/ 2016 ல் நடந்த 4 தேர்தல்களில் இவருடைய தலைமையில் அதிமுக மிகப்பெரிய வெற்றிகளை கண்டது .
    உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள் / விசுவாசிகள் / நல்ல தலைவர்கள் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது வருத்தமான செய்தி .
    இருந்தாலும் கடந்த 33 ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகள் மூலம் எம்ஜிஆர் புகழிற்கு மென்மேலும் புகழ் கிடைத்துள்ளது .

    1. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாரத ரத்னா
    2. எம்ஜிஆர் நூற்றாண்டு - எம்ஜிஆர் உருவம் பதித்த நாணயம் .
    3. எம்ஜிஆர் - ஸ்டாம்ப்
    4. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
    5. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம்
    6. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு தூண்
    7. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்
    8. எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
    9. டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம்

    இன்னும் பட்டியல் தொடரும்......

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இயக்கம் , இரட்டை இலைச்சின்னம் , கொடி மூன்றும் கடந்த 48 ஆண்டுகளாக உயிர்ப்புடன் வலம் வருகிறது . எம்ஜிஆர் பெயரையும் , உருவத்தையும் மறந்துவிட்ட இன்றைய அதிமுக கட்சி தலைவர்கள் அனைவருக்கும் வரும் தேர்தலில் நல்ல பாடம் கிடைக்கும் என்பது உறுதி .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு 1972 முதல் 2020 இன்று வரை வெற்றிமேல் வெற்றி சந்தித்து வருகிறோம் .
    இனி வரும் காலத்திலும் வெற்றிகளை சிந்திப்போம் .
    எம்ஜிஆர் நம்முடன் வாழ்ந்தார் வாழ்கிறார் .வாழ்வார்.......vr...

  11. #1050
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ? முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ?" தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப நாம் அடக்கமாக இருக்கிறோம். ஆனால் மாற்று அணியில் நம்முடைய வலுவான ஆதாரத்தை கண்டு இவ்வளவு நாட்கள் ஊரை ஏமாற்றி திரிந்தோம். இன்று நம்மை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்களே என்ற வெறுப்பில் இனி நாம் பொய் சாதனையை சொன்னால் உடனே வெளிச்சம் போட்டு உண்மையை வெளிக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்ற ஆத்திரத்தில் தலைவரை பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

    அவர்களுடைய தோல்வி இதன்மூலம் தெளிவாகிறது. மாற்று அணியை சேர்ந்த ஒருவர் 1958 ம் ஆண்டில் மிகை நடிகர்
    கணேசனுக்கு 8 படம் வந்ததாம். அந்த எட்டில் ஒன்றைத்தவிர 7 படங்கள் 100 நாட்கள் ஓடியதாம். யாருக்கும் உண்மை ஞாபகம் இருக்காது என்று நினைத்து ஒருவர் உளறியதை பத்திரிகையில் செய்தியாகப் போட்டால் அது உண்மையாகி விடுமா? "சாரங்கதாரா" "காத்தவராயன்" "அன்னையின் ஆணை" போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடியதாம். எந்த ஊரில் என்று தெரியவில்லை..

    "பொம்மை கல்யாணம்" 50 நாட்கள் ஓடியதாம். அதுவும் எந்த ஊரில் ஓடியது என்று தெரியவில்லை. தங்களிடம் உள்ள புழுகு மூட்டையை அசிங்கம் பாராமல் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்த படங்கள் எல்லாம் நிறைய ஊர்களில் திரையை சந்திக்கவே இல்லை என்பதே உண்மைநிலை. "சாரங்கதாரா" "பொம்மை கல்யாணம்" "காத்தவராயன்" போன்ற படங்கள் 'b' சென்டரில் ஒருவாரம் கூட தாக்குபிடிக்க முடியாமல் தியேட்டரை காலி செய்த படங்கள்.

    அதே காலகட்டத்தில் சிங்கத்தின் வாரிசாக வெளிவந்த ஒரு படம் கிளப்பிய புழுதியில் அத்தனை படங்களும் மக்களின் கண்களுக்கே தெரியாமல் போனதில் வியப்பில்லை.. அந்த படம்தான் கவிஞர் பாடிய 'நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கு அதுதான் சுபதினம்' என்று பாடும் போது திரையில் "நாடோடி மன்னனை" காண்பித்து அது போல் ஒரு படம் வரவில்லை என்று சுட்டிகாட்டி எழுதியிருப்பார் கவிஞர்.

    இந்த எட்டு .....குட்டிகளும் சிதறி, பதறி ஓடியது யாரை பார்த்து என்றால். சிங்க குட்டியை பார்த்து. அந்த சிங்கம்தான் "நாடோடி மன்னன்".
    இந்த எட்டு படங்களும் ஓடிய ஒரு சில 100 நாட்களை ஒரே படம்
    அடித்து சாப்பிட்டது என்றால் அதுதான் சிங்கத்தின் வீரியம். அதிலும் ஒன்றிரண்டு மண்டுகள் "உத்தம புத்திரனை" பார்த்து எம்ஜிஆர் "நாடோடி மன்னனை" எடுத்தாராம். என்ன சிரிப்பு வருகிறதா? அப்படியென்றால் "உத்தம புத்திரன்" 10 திரையரங்குக்கு மேலே அல்லவா 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டும். பரீட்சையில் ஒரு பேப்பரை காப்பியடித்த மாணவன் 100 மார்க் வாங்குவானாம். பாராமல் எழுதியவன் பெயிலாகி விடுவானாம். கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? மிகை நடிகரின் கைபுள்ளைங்களுக்கு.

    "உத்தம புத்திரனை" வடக்கயிறு கட்டி 2 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓட்டுவதற்குள் படாதபாடு பட்டனர்.
    "நாடோடி மன்னன்" ஓடியதோ 13 திரையரங்குகள். நினைத்து பார்க்க முடியுமா புல்லுருவிகளுக்கு. அதன்பின்பும் "நாடோடி மன்னனி"ன் ஓட்டத்தை கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. ஒன்றை மட்டும் அடித்து சொல்லலாம். உலகத்திலேயே இன்று வரை திரையிட்டதில் "நாடோடி மன்னன்தா"ன் அதிக நாட்கள் ஓடிய படம் என்று.

    நான் தமிழ் மொழியை மட்டும் சொல்லவில்லை. எல்லா மொழிகளில் திரையிட்ட எல்லா படங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். இதை மறுத்து சொல்லி ஆதாரம் காட்ட முடியுமா? அந்த ஆண்டின் வெளியான எட்டு படங்களின் வசூலை கூட்டினாலும் அது "நாடோடி மன்னனு"க்கு இணையாகுமா?. இது போன்ற தலைவரின் வெற்றியை சகிக்க முடியாதவர்கள் தாங்கள் தோல்வியடைந்ததை ஒப்புக் கொள்ளாமல் கண்டபடி பேசுவது அநாகரீகமான செயல்.

    நாங்களும் அதைப்போல் இறங்கினால் நீங்கள் தாங்குவீர்களா?. தலைவரின் ரசிகர்களை கொதிப்படைய செய்யாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம். எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகிய பின்பு வெளிவந்து வெள்ளி விழா ஓடிய "தியாகமா"வது "இதயக்கனியின்" வசூலை தொட முடிந்ததா? இல்லையே. இதோ அதற்கான பத்திரிகை ஆதாரங்கள்.

    இவ்வளவுக்கும் "இதயக்கனி" வெள்ளிவிழா ஓடாத படம், எப்படி "தியாகத்து"க்கு கொள்ளி வைத்த கதையை பாருங்கள். 1978 ல் வெளியான "தியாகம்" 75 நாட்களில் சென்னையில் பெற்ற வசூல் ரூ1478301.75 . ஆனால் அதே 75 நாட்களில் "இதயக்கனி" பெற்ற வசூல் ரூ 1589243.90. இவ்வளவு வசூல் பெற்றும் "இதயக்கனி" வெள்ளிவிழா ஓடவில்லை. ஆனால் தியாகத்தை வெள்ளிவிழா ஓட்டி முடித்தனர்.

    சென்னை மட்டுமல்ல நெல்லையிலும் இதே கதைதான். மதுரையில் 1973ல் வெளியான "உலகம் சுற்றும் வாலிபனை"யும் 74 ல் வெளியான "உரிமைக்குரலை"யும் வெல்ல முடியவில்லை. இத்தனை வருடம் கழித்தும் "இதயக்கனி"யையும் வெல்ல முடியவில்லை. நெல்லை அவர்களுக்கு தீராத தொல்லை தலைவர் அபிமானிகளுக்கு இன்பத்தின் எல்லை. நெல்லையில்
    "தியாகம்" பெற்ற வசூல் 258000 தான். ஆனால் 75 ல் வெளியான "பல்லாண்டு வாழ்க" பெற்ற வசூல் 260000 "இதயக்கனி" பெற்ற வசூல் 288000 "உலகம் சுற்றும் வாலிபன்" பெற்ற வசூல் 315000. எல்லாத்துக்கும் மேலே "உரிமைக்குரல்". "தியாகத்தி"ன் வசூலும் அவர்கள் வசூல் பேக்டரியில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வளவுக்கும் 73 ல் வெளியான படங்களின் பணமதிப்பு 78 ல் 150 சதமானமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரையில் "தியாகம்" பெற்ற வசூல் 674000 . ஆனால் "உலகம் சுற்றும் வாலிபன்" பெற்றதோ 685000. "உரிமைக்குரல்" பெற்றது 701000 . கோவையில் "தியாகம்" பெற்றதோ 643000 ஆனால் "உரிமைக்குரலோ" பெற்றது 850000 . சூரியன் அருகில் செல்வது ஆபத்தானது. தள்ளி நின்று தரிசித்து விட்டு போங்கள் மிகையின் கைபுள்ளைங்களே.

    காலம் கடந்தும் கணேசனுக்கு மோகம். வசூல் சக்கரவர்த்தியுடன் மோத இன்னெரு சக்கரவர்த்தி இங்கே கிடையாது. சாதா (குடி) மகனால் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் புல்லர்களே. சாதனைக்கென்று பிறந்த புரட்சி நடிகரிடம் தோற்று புறமுதுகு காட்டுவதே மிகை நடிகனின் மாமூல் வேலை என்பதை புரிந்து கொண்டு வாயை அடக்குங்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்..........ksr...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •