Page 150 of 210 FirstFirst ... 50100140148149150151152160200 ... LastLast
Results 1,491 to 1,500 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1491
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #அன்பே_வா...மக்கள் திலகம் MGR.,

    #AnbeVaa Digitally Remastered Movie Theatre List, Chennai - 18.12.2020 :

    Bookings Open now...

    Devi Ciniplex, Anna salai- 12.45 Pm, 4.00 Pm, 7.15 Pm

    Albert Complex, Egmore- 3.00 Pm, 6.30 Pm

    Woodlands Complex, Royapettah - 3.00 Pm, 6.30 Pm

    Sri Shanmuga 4K Dolby Atmos, G.N.T Road, Moolakadai - 3.00 Pm, 9.45 Pm

    Jothi Theatre, St.Thomas Mount - 2.30 Pm, 10.00 Pm

    Vela Cinemas, Thiruninravur - 11.30 Am, 6.30 Pm

    PVR - Annanagar - 6.00 Pm

    PVR, Velachery - 2.50 Pm

    PVR Ampa Skywalk Mall, Aminjikarai - 3.10 Pm

    PVR Grand Galada, Pallavaram - 11.30 Pm

    PVR SKLS Galaxy Mall, Red Hills - 6.30 Pm

    INOX The Marina Mall, OMR - 3.15 Pm (Screen 8)

    Ags Cinemas, Villivakkam - 12.00 Pm

    Ags Cinemas, OMR Navalur - 3.15 Pm

    Ags Cinemas, Maduravoyal - 6.05 Pm

    Ags Cinemas, T.Nagar - 3.45 Pm

    SPI: Sarhyam Cinemas, Royapettah - 3.00 Pm

    SPI: Escape Cinemas, Royapettah - 12.15 Pm

    SPI: Pallazo, Vadapazhani - 6.00 Pm

    Luxe Cinemas, Velachery - 7.10 Pm

    Cinepolis, OMR, Thoraipakkam - 6.15 Pm...UBU.............

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1492
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "அன்பே வா" காலத்தை வென்ற காவியம் இன்று ஏறத்தாழ 150- 200 திரையரங்குகளில் வெளியாவது நம் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... கொரனா காலத்துக்கு பின் வெளியிடப்படும் ஒரு மிக முக்கியமான திரைப்பட காவியத்திற்கு எப்படியெல்லாம் நாளிதழ்கள், சஞ்சிகைகள் போன்றவற்றில் விளம்பரங்கள், பல வகையான டிசைன் போஸ்டர்கள் வெளியிட ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்?! படத்தை மொத்தமாக வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்கள் அல்லவா செய்ய வேண்டும்?! அதுவும் இப்பொழுது தொடர்ந்து மழை பெய்யும் நேரத்தில்... மக்கள் திலகம் எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் எனும் தைரியத்தில் தானே?! இவ்வளவு திரையரங்குகளில் இப்படிப்பட்ட கால நேரத்தில் வசூலித்தால் அதுவும் ஒரு பிரம்மாண்டமான சாதனையாக திகழும் என..........

  4. #1493
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நில் கவனி தாக்கு!!
    ---------------------------
    கமலிடம் முதல்வர் எடப்பாடியும் இரண்டொரு அமைச்சர்களும் வாய்க் கொடுத்தாலும் கொடுத்தார்கள்,,தலைவலி போய் திருகுவலி வந்திருக்கிறது?
    கமலஹாசன் படங்களைக் குடும்பத்துடன் பார்க்க முடியாது என்று சொல்லப் போக--
    பிக் பாஸ் பார்ப்பதற்கு நன்றி என்ற நக்கலான பதில்! அதைத் தொடர்ந்து--கமல் அணியிலிருந்து--
    எம்.ஜி.ஆர்--மஞ்சுளா,,எம்.ஜி.ஆர் லதா படங்களைப் பற்றிய அலசல். ?
    தேவையா இது??
    ஒரு நாட்டின் முதலமைச்சரே,,கமலஹாசன் போன்ற டாஸ்மாக்கு ஆசாமிகளுக்கு பதில் சொல்வது தேவையா என்ற கேள்வி தான் பலமாக எழுந்திருக்கிறது! அந்தக் கேள்வியில் நியாயம் இருக்கிறது!
    தண்ணியடிச்சுட்டு ஒருத்தன் சாலையில் ஏறு மாறான விஷயங்களைத் தாறுமாறாக உளறிக் கொண்டு போனால் அவனுக்கு சமமாகவா நாமும் பேசுவது?
    இன்றைய நிலையில் முதல்வர் எடப்பாடியின் ஆட்சியில் மக்களுக்கு திருப்தி இருக்கிறது!
    அதைவிட,,தி.மு.க மீது அச்சமும் இருக்கிறது!
    முதல்வர் சந்திக்க வேண்டியதும் பதில் சொல்ல வேண்டியதும் மக்களுக்குத் தானே தவிர கமல் போன்ற மாக்களுக்கு இல்லையே?
    அது என்னவோ தெரியவில்லை,,தி.மு.க சகட்டு மேனிக்கு சாக்கடையை தெளித்தாலும் சகித்துக் கொள்ளும் அமைச்சர் பரிவாரங்கள்--
    கமல்--ரஜினி வகையறாக்களுக்கு மட்டும் வரிந்து கட்டுகிறார்கள்??
    ஒரு வேளை கமலின் கட்சியை,,தமக்கு சமமாகவும்,,தி.மு.கவை தமக்கு மேலானதாகவும் கருதுகிறதா அ.தி.மு.க மேலிடம்??
    பொண்ணுக்கும்,,பொண்டாட்டிக்கும் வித்தியாசம் தெரியாதவனுக்கெல்லாம் பதில் சொல்லும் அளவுக்கா பரிதாப நிலையில் இருக்கிறது அ.தி.மு.க??
    எம்.ஜி.ஆர்ப் படங்களை விமர்சிக்கும் அளவுக்கு கமலுக்கு எந்தவித யோக்கியதையும் இல்லாத நிலையில்--
    கமல் போன்ற ஸ்கூல் பசங்க விளையாட்டுகளுக்கு பதில் சொல்ல அ.தி.மு.கவின் ஐ.டி விங்கும்,,முக நூல் வாட்ஸ்-அப் அ.தி.மு.க கட்சியினரும் போதுமே?
    அவர்கள் தான் அழுத்தமாகவும்,,ஆதாரப் பூர்வமாகவும் எதிர்க் கட்சியினரை வறுத்து எடுக்கறார்களேர்!
    அ.தி.மு.கவை மட்டுமேக் குறி வைத்து தான் அத்தனைக் கட்சிகளும் தாக்குதல் நடத்துகின்றன!
    எம்.ஜி.ஆரை முன்னிலைப் படுத்துங்கள் என்று நாம் சொல்வதை--இன்றைய தேதியில்--அ.தி.மு.கவைத் தவிர மற்ற அத்தனைக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு அவர்கள் தான் எம்.ஜி.ஆரை அதிகம் பேசுகிறார்கள்??
    எம்.ஜி.ஆரின் சாதனைகள் பிரமிப்பானவை என்கிறார் பா.ஜ.க மோடி!
    எம்.ஜி.ஆர் செய்த சேவைகளில் பத்து சதவீதமாவது நான் செய்வேன் என்கிறார் ரஜினி!
    எம்.ஜி.ஆர் சத்துணவு தான் உலக அளவில் உன்னத திட்டம் என்று மாய்ந்து போகிறார் காங்கிரஸில் ராகுல்காந்தி!
    எல்லோரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு--
    எம்.ஜி.ஆர் மடியில் தான் வளர்ந்தேன் என்று பொக்கரான் குண்டைப் போடுகிறார் கமல்??
    எம்.ஜி.ஆர் ஓட்டுக்குத் தான் எத்தனை பேர் போட்டி??
    இவை மட்டுமல்லாமல்,,ஜெ வின் கடந்த கால நிர்வாக சாதனைகள் வேறு அ.தி.மு.கவுக்குப் ப்ளஸ்-பாயிண்ட்!
    இவர்கள் இருவருமே,,,மக்களை சந்தித்த அளவுக்கு சின்னக் கட்சிகளை சீந்தியதே இல்லை!
    உதிரிகளையா எதிரிகளாக நினைக்க வேண்டும்??
    அ.தி.மு.கவில் வாய்த்திருக்கும் தொண்டர்களைப் போல் வேறு எந்தக் கட்சிக்கும் அமையவில்லை!
    இத்தனைக்கும்,,அ.தி.மு.க மேலிடம் ஒரு சமயம் சசிகலாவுக்கு அஷ்டோத்ரம் சொல்லி,,சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபோதும் அடிப்படைத் தொண்டர்கள் அமைதி காத்து நின்றது பெரிய விஷயம்??
    ஜெவின் தனிப்பட்ட ஆளுமையால் தாய்க்குலங்களின் தாராள பரிவு வேறு அக்கட்சிக்கு இருக்கிறது?
    இப்போது அ.தி.மு.க ஒன்றையேக் குறி பார்த்து அத்தனை பேரும் ஆயுதங்களைத் தொடுப்பது போதாது என்று--
    பிப்ரவரி மாதம் தமிழ் நாட்டுக்கு எழுந்தருளும் சசிகலா என்னும் திவ்ய ஸ்வரூபம் என்னன்னக் கூத்தடிக்கப் போகிறதோ??
    எம்.ஜி.ஆரை அத்தனை பேரும் பிய்த்து ஆளுக்குக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதற்கு முன்னர் அ.தி.மு.க மேலிடம் விழித்துக் கொண்டால் சரி!
    தானும் படுக்க மாட்டேன். தள்ளியும் படுக்க மாட்டேன் என்று இப்படியே இருந்தால்--???
    வெற்றி என்ற கோஷத்துக்கு சங்கு தான்???
    அருமையானவர்களின் விமர்சங்களை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்!.........vtr...

  5. #1494
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரை உலக சக்கிரவர்த்தி நம் தலைவர் ஒரு நாள் தன் வீட்டுக்கு வந்து விருந்தில் கலந்து கொள்ளுங்கள்..

    உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று ...திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகம் செய்பவர்கள், மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் கூட்டு அமைப்பை சேர்ந்தவர்களை அழைக்க..

    அவர்களும் மகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பு விருந்து உண்ட பின்...தலைவர் சொல்கிறார் நாளை முதல் எனது நடிப்பு சம்பளத்தை 50000 ரூபாய் அதிகம் ஆக கேட்க போகிறேன்.

    சொல்லாமல் சம்பளம் உயர்த்தி விட்டார் எம்ஜிஆர் என்று நீங்கள் நினைக்க கூடாதே என்றே இந்த சந்திப்பு .

    உங்கள் கருத்து என்ன என்று தலைவர் கேட்க அவர்கள் அனைவரும் கோரஸ் ஆக என்ன இப்படி எங்களை கேட்டு நீங்கள் இந்த நாட்டின் முக்கிய நடிகர் உங்கள் சம்பளம் உங்கள் விருப்பம் தருகிறோம் என்று சொல்ல.

    உடனே தலைவர் சிரித்து கொண்டே நீங்கள் ஒப்பு கொள்வீர்கள் என்று தெரியும்...ஆனால் எனது சம்பளைத்தை நான் உயர்த்த அதை பார்த்து மற்ற நடிகர்கள் அதிகம் கேட்க.

    இது தான் சமயம் என்று திரை அரங்க உரிமையாளர்கள் நீங்கள் பட டிக்கெட் கட்டணத்தை உயரத்திவிட்டால் எனது ரசிகர்கள் பாவம் தினம் வேலை செய்து பிழைக்கும் அன்றாட பறவைகள்....

    அவர்கள் தலையில் நீங்கள் இந்த பாரத்தை சுமத்த கூடாது என்று எனக்கு உறுதி அளித்தால் சம்பளம் அதிகம் கொடுங்கள் அல்லது வேண்டாம் என்றார்.

    நீங்கள் சொன்ன படி நடப்போம்... ஒரு போதும் அரங்க கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று சொல்லி அனைவரும் விடை பெற...

    வெளியில் நடக்கும் போது பலர் என்ன ஒரு பெருந்தன்மை உள்ள மனிதர் இவர் என்று மனதுக்குள் பேசி கொண்டே சென்றதை எப்போது நினைத்தாலும் இனிக்கும் நினைவுகள் அல்லவா தலைவர் நெஞ்சங்களே.

    அகில உலக திரை பட வரலாற்றில் இவரை போன்ற ஒருவரை இனி எங்கே காண்போம்.

    வாழ்க தலைவர் புகழ்.
    உங்களின் குரல் ஆக உங்களில் ஒருவன். ..
    நெல்லை மணி....

    நன்றி தொடரும்....

    அதிக சம்பளத்தை வாங்கி அதிகம் அள்ளி கொடுக்கவே...என்று நமக்கு புரிகிறது............nmn...

  6. #1495
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொதுவாக திரு. சத்தியராஜ் மேலே எம்ஜிஆர் பக்தர்களுக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது. அவர் எங்கும் எப்போதும் தன்னை ஒரு எம்ஜிஆர் ரசிகராக வெளிப்படுத்துபவர் என்பதால்.

    இரண்டு நாட்களாக, சத்தியராஜ் அவர்கள் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் பண்ண போகிறார் என்று வலைத்தளங்களில் பதிவுகள் வருகின்றன. நம்புவதற்கு கஷ்ட்டமாக உள்ளது. சத்தியராஜ் தரப்பில் இதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், மறுப்பும் காணவில்லை என்பதும் கவலையாகதான் இருக்கு.

    காரணம், திமுகவுக்கு ஓட்டு கேட்டு போன எந்த நடிகரும், அதன் பின் உருப்பட்டதா சரித்திரம் இல்லை. பாக்கியராஜ், ராஜேந்தர், வடிவேலு போன்றவர்கள் அன்று விழுந்ததுதான். இன்னும் எழுந்து உட்கார கூட முடியவில்லை. அன்று ஏன் அப்படி செய்தோம் என்று இன்றுவரை புலம்பி கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் இருவரும்.

    சத்தியராஜ் அவர்கள் நல்ல நடிகர். இந்த வயதிலும் வலுவான கேரக்டர்களில் வந்து மக்கள் மனங்களில் நிற்கிறார்.
    எம்ஜிஆர் பக்தர்களால், அதிமுக தொண்டர்கள், கட்சிகாரர்களால் "இவர் நம்ம ஆள்" என்று அன்புடனும், மரியாதையுடனும் பார்க்கப்படுபவர்.

    சத்தியராஜ் அவர்கள் ரொம்ப விவரமானவர். பாக்கியராஜ், விடிவேலு நிலைகள் பார்த்தும், அது போன்ற சாக்கடைகளில் இறங்கி, தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த நற்பெயருக்கு தானே களங்கம் செய்ய மாட்டார் என்று நம்புவோம்.

    இதயக்கனி ஆசிரியர் திரு. Ithayakkani S Vijayan அவர்கள், சத்தியராஜ் அவர்களிடம் பேசி, பரவி கொண்டிருக்கும் வதந்தீக்கு மறுப்பு வெளியிட செய்து இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முன் வர வேண்டும் என்று வேண்டுகிறோம்.

    கட்டப்பா... எம்ஜிஆர் பக்தர்களுக்கு எட்டப்பன் ஆகி விட்டார் என்று எல்லோரும் பேசுவதற்கு இடம் கொடுக்காதீங்க சத்தியராஜ் சார்.

    Jayaprakash Padma Siva Sankaran...

  7. #1496
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ���� அடுத்த MGR யார் ����

    கமலா ?
    ரஜினியா ?
    எனக்கு தோன்றியதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை

    அடுத்த எம்.ஜி.ஆரா.க இருவருக்கும் வாய்ப்பு இல்லை !

    காரணம் எம்ஜிஆர் ஒரு அரசியல்அவதாரம் மாதிரி
    அவர் ஒரு பிறவி அரசியல்வாதி 1937 ல் காங்கிரசில் இருந்து பிறகு நடிகனாகி 1949 ல் திமுகவில் இருந்தவர்

    அவர் தன் அரசியலுக்கு சினிமாவை உண்மையாக பயன்படுத்தி கொண்டார்
    அவருக்கு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற இலட்சியமும் இருந்தது

    அது சினிமாவில்
    பாடல் சண்டைகாட்சிகள் மக்களுக்கு உதவும் மனபாங்கு அதே நேரம் குடி சிகரெட் என்று மக்கள் பாதை மாறாமல் இருக்க அதிக கவனம் எடுத்து கொண்டார்

    அதே நேரம் கொடுப்பதில் வள்ளல்
    இரக்க குணமும்
    ரசிகனை மதிக்கும் குணம் கொண்டவர்
    குறிப்பாக தாய்குலத்தை ரொம்ப மதிப்பார்

    அதனால் அவரை மக்கள் பெருவாரியாக ஏற்று கொண்டார்கள்

    ஆனால் கமல் பாதை வேறு
    ரஜினி பாதை வேறு

    இருவரும் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும்
    தன் தொழிலில் தான் அதிக கவனம் செலுத்தி கொண்டு இருந்தார்கள்

    ரஜினி ஜனரஞ்சகரமான படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தன் ரசிகனை பெருக்கி கொள்ள மட்டுமே ஆசை பட்டார் ?

    அவருக்கும் ஒரு கூட்டம் எம்ஜிஆர் போல் உருவாகி விட்டது மறுக்க முடியாது
    ஆனால் இவர் எம்ஜிஆர் மாதிரி நாட்டுபற்று மொழி நல்ல பழக்க வழக்கம் தன் திரையில் சொல்லி கொடுக்கவில்லை
    அவர் நோக்கம் வெற்றி வசூல் ரசிகன் என்ற சுயநலமாக இருந்து விட்டார் இன்று வரை

    அவரை அதை ஒத்து கொண்டும் உள்ளார் நான் குடி சிகரெட் என்று ஒரு தலைமுறையை மாற்றி விட்டேன் என்று
    ஆகா இவர் எம்ஜிஆர் அல்ல என் பார்வையில் மட்டுமே

    கமல்ஹாசன்
    தன் சினிமாவில் எம்ஜிஆர் போல் ஒரு செண்டிமெண்டுக்குள் தன்னை அடைத்து கொள்ளாமல்

    தான் நேசிக்கும் சினிமாவை உலகதரத்துக்கு கொண்டு சென்றார்
    சினிமாவில் அரைத்த மாவையை மீண்டும் மீண்டும் அரைக்காமல்

    தமிழ் சினிமாவை உலகம் உற்று பார்க்கும் உயரத்துக்கு கொண்டு சென்றார்
    அதே நேரம் தன் ரசிகனை வெறும் விசிலடிச்சான் குஞ்சாக வைத்து கொள்ளாமல்

    எம்ஜிஆர் அன்று செய்யமுடியாததை
    காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றார் போல் தன் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியவர் அதன் மூலமாக

    கண் தானம்
    இரத்த தானம் உடல் தானம் கல்விக்கு உதவி எய்ட்ஸ் விழிப்புணர்வு
    பெற்றால் தான் பிள்ளையா என்று இன்றை தேவைக்கு ஏற்றால் போல் மாற்றி விட்டார்

    கமலின் பல நல்ல செயல்கள் பெரிதாக வெளியே தெரியாது அதே போல் கமலின் ரசிகர்கள் இன்று வரை. ஒரு சிலிப்பர் செல் போல் தான் இருப்பார்கள் இவர்கள் செய்யும் செயலும் சத்தம் இல்லாமல் நடக்கும் அதுவும் கர்வம் கொள்ளாமல்

    கமலுக்கும் ரஜினிக்கும் அரசியல் கனவு இருந்ததே இல்லை

    எம்ஜிஆர் கட்சியிலே இருந்து பயணித்தால் ஒரு கட்டத்தில் தான் பழி வாங்கபட்டதால் உதயமானது தான்
    அதிமுக ����

    கமலுக்கும் ரஜினிக்கும் காலத்தின் கட்டாயம் இந்த அரசியல்

    இருப்பினும் ரஜினியை விட கமலுக்கு அரசியல் வாய்ப்பு பலமுறை வந்தும்
    அதை அவர் ஏறகவில்லை
    இன்றும் சசிகலா பெயர் அடிபடவில்லை என்றால் இன்னும் வந்து இருக்க மாட்டார்

    தனக்கு. இருக்கும் பெயரையும் புகழையும் தவறாக பயன்படுத்த விரும்பாதவர் கமல்ஹாசன்

    அதே நேரம் எம்ஜிஆர் தன் அரசியல் வாரிசாக கமல்ஹாசன் வர வேண்டும் என்று ஆசை பட்டார்
    இது அன்று இருந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கும் தெரியும்
    அந்தளவு கமல் மீது நம்பிக்கையும் பாசமும் உண்டு எம்ஜிஆரிடம்

    ரஜினியை விட கமலுக்கு தான் அதிக வாய்ப்பு கிட்டியது எம்ஜிஆரிடம்
    கமல் எம்ஜிஆர், சிவாஜி தோளில் விளையாடிய செல்ல பிள்ளை

    எம்ஜிஆர் பெயரை கமல் உச்சரித்தாலும்
    கமலின் தொலை நோக்கு பார்வை தான் அவர் அரசியலில் தெரியும்

    அதிலும் உண்மையை உரக்க சொல்லும் குணமும்
    நேர்மையை மட்டும் பேசுவது
    அதிலும் இன்றையை அரசியல்வாதிகள் சொல்லவே முடியாத வார்த்தை

    ஒட்டுக்கு பணம் �� கொடுக்க மாட்டேன்
    என் கட்சிகாரர்கள் செயல்பாடு சரி இல்லை என்றால் பதவியை நீக்குவேன் என்று எந்த கட்சி சொல்லும் ஆக கமலின்

    அரசியலிலும் புதுமை தான் இருக்கும்

    இதில் யார் MGR ...
    முடிவு மக்கள் கையில் �� ?!

    நன்றி....வணக்கம்..��✊������ J.Deepam news channels...

  8. #1497
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இப்பேர்ப்பட்ட #பக்தர்கள் #உலகில் #வாத்தியாருக்கு #மட்டுமே #உண்டு...

    இப்பதிவை டைப் பண்ணும்போது பொங்கி வந்த கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை...
    ------------------------------------------------------

    சென்னை மவுண்ட்ரோடு தபால்தந்தி அலுவலகம்! மாலை ஆறு மணி, நீண்ட வரிசை, அதில் வியர்வையால் நனைந்து, காய்ந்து விரைத்து நிற்கும் சட்டை, கோடு போட்ட உள் டவுசர் வெளியில் தெரிய மடித்துக் கட்டிய லுங்கி முகத்தில் சோகம், எப்படியும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை இழையோடும் கண்கள், பரபரப்புடன் ஒரு ரிக்*ஷாகாரர்.
    ஒரு வழியாய் மனதை திடப்படுத்திக் கொண்டு உள்டவுசர் பாக்கெட்டில் இருந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய் என்று கசங்கி சுருண்டு கிடந்த நோட்டுகளை தந்திக் கவுண்டரில் அள்ளிப் போட்டுக் கொண்டே…

    ”இவ்வளவு தான்யா இன்னிக்கு ரிக்ஷா ஓட்டின கலெக்ஷன், இதை எடுத்துக்க”

    “யோவ் நீ என்ன இடம் மாறி வந்துட்டியா, நான் உன் ரிக்*ஷா ஓனர் இல்ல…!

    “அய்ய…துட்டு உன்க்கில்லைபா…தந்தி கொடுக்க”
    “எந்த ஊருக்கு?”
    அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு” தலைவா கவலைப் படாதே... நாங்கள் உயிருடன் இருக்கும் வரை உன்னை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது” இதுக்கு எவ்வளவு காசு”

    “95 ரூபாய் ஆகுது”
    “இந்தா எடுத்துக்க..
    அலுவலர் அந்த அழுக்கு நோட்டுகளை எண்ணிப் பார்த்து, 78 ரூபாய் தான் இருக்கிறது, இன்னும் 17 ரூபாய் வேண்டும்.
    “மீண்டும் பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துழாவுகிறார், 10 பைசா கூட இல்லை.
    அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள், ரிக் ஷாக்காரரைப் பார்த்து...

    “அண்ணாத்தே, காசு இல்லன்னா எடத்தை காலி பண்ணு, நாங்க தந்தி கொடுக்கணும்.”
    “நிலை தடுமாறிய ரிக்ஷாக்காரர், சார் கொஞ்சம் பொறுத்திரு, நாலு சவாரியில நீ கேட்ட துட்டை கொண்டு வந்துடுறேன், நீ வூட்டுக்கு போயிடாத, ஆபீஸ எப்ப மூடுவ?!

    “எப்பவும் மூட மாட்டோம், இந்த கவுண்டர் 24 மணி நேரமும் திறந்திருக்கும்”
    “அது போதும் இன்னும் அரை அவர்ல வந்துட்றேன்... நேரத்தை வீணாக்காமல் வெளியேறுகிறார்...

    “நீங்க எந்த ஊருக்குமா தந்தி கொடுக்கணும்..?”
    காலிப் பூக்கூடையுடன் க்யூவில் நின்ற பூக்காரப் பெண்மணியிடம் கேட்கிறார். தந்தி அலுவலர்.

    ”ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு”...

    ஒரு நாள் முழுக்க வியர்வை சிந்திய காசை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், ஒரு தலைவனின் உயிருக்காக தன்னை வருத்தி தவம் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை, கொஞ்சம் கேலித்தனத்துடன், பார்க்கிறார் தந்தி அலுவலர்.
    அரை மணி நேரத்திற்குள் வருவதாக சென்ற ரிக்ஷாகாரர், ஒரு மணி நேரம் கழித்து வருகிறார்.

    “இந்தா சார் நீ கேட்ட 17 ரூபாய்’ என்று
    நான்கு ஐந்து ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறார்...
    பரிவுடன் பதிவு செய்து கொண்ட தந்தி அலுவலர்…

    ஏம்பா நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத. நீ தந்தி கொடுக்கறதுனால என்ன பிரயோஜனம், தலைவர்களெல்லாம் நிறையச் சம்பாதிச்சு ரொம்ப உயர்ந்து இருக்காங்களே, உங்களை மாதிரி தொண்டர்கள் எல்லாம் மூடத்தனமா ஏன் இப்படி செயல்படுறீங்க?
    அவுங்க உங்களுக்கு ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களா?

    வேறு நேரமாயிருந்தால், ரிக்ஷாக்காரர் தாறுமாறாக செயல்பட்டிருப்பார், ஆனால் நல்லவேளை அந்த நேரத்தில் மட்டும் ரிக்ஷாக்காரர் பொறுமையாக செயல்பட்டார்...

    “சார் இது வரைக்கும் ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களான்னு கேட்டீங்க, மத்த தலைவர்களைப் பத்தி எனக்குத் தெரியாது.

    "ஆனா என் தலைவன் அப்படி இல்லை, எங்களை மாதிரி ஏழை ஜனங்களுக்கு என் தலைவன் என்ன வேணும்னாலும் செய்வான் உங்களுக்குத் தெரியுமா? என் குடும்பம் மூனு வேளை சோறு துண்றதே என் தலைவனால தான்."

    “என்னப்பா சொல்ற..?

    “ ஆமா சார்..!
    இந்த ரிக்ஷா என் தலைவன் வாங்கிக் கொடுத்தது அந்தத் தலைவனுக்காக என் குடும்பம் ஒருநாள் பட்டினி கிடந்தா, செத்தா போயிடுவோம்..

    அதிகம் பேச வரவில்லை……
    பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு ரிக்ஷாக்காரர் விருட்டென்று கிளம்பி விட்டார்.

    படித்த நமக்கே, படிக்காத ரிக்*ஷாக்காரர் பாடம் கற்பித்துச் சென்றுவிட்டாரே என்று தந்தி அலுவலர் கலங்கித் தான் போனார்...

    யாரை நினைத்து நெகிழ்வது ... இப்பேர்ப்பட்ட தலைவனையா...? அல்லது பக்தனையா ...?...bsm...

  9. #1498
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவராலும் கொண்டாடப்படும் ஒப்பற்ற. தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் :
    ������������������������������
    அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி நிரந்தர
    புகழுக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர்.
    காரணம் என்ன?

    ��இவர் முதல்வராக இருந்தவரை
    தமிழ்நாட்டிலோ அல்லது பிற
    மாநிலத்திலோ ஒரு செண்ட் இடம்கூட
    வாங்கியதில்லை.

    �� தன் ஆட்சி அதிகாரத்தில் தன்
    குடும்பத்தினர்களோ அல்லது
    உறவினர்களோ தலையீடு இருக்கக்
    கூடாது என பகிரங்க அறிவிப்பு விட்டவர்.

    �� நான் ஊழல் செய்தேன் என நிரூபித்தால்
    என்னை நாடு கடத்துங்கள் என பகிரங்க
    அறிவிப்பு விட்டவர்.

    �� அத்தியாவசிய பொருள்களின் விலையை
    எப்பொழுதும் ஒரே கட்டுப்பாட்டில்
    வைத்திருந்தவர்.

    �� ஏழைகளுக்கு அரிசி தட்டுப்பாடு
    வரக்கூடாது என்பதற்காக உண்ணா
    விரதம் இருந்தவர்.அதிலும் வெற்றி
    பெற்றவர்.

    �� சத்துணவு திட்டத்திற்கு போதிய நிதி
    தராவிட்டால் நான் பிச்சையெடுத்தாவது
    திட்டத்தை நடத்துவேன் என துணிந்து
    சொன்னவர்.

    �� தனக்கு ஆன மருத்துவ செலவைக்கூட
    அரசிற்கு சுமை வைக்கக்கூடாது
    என்பதற்காக பணத்தை திருப்பி
    செலுத்தியவர்.

    �� கடைசிவரை தன் வீட்டில் குடிநீர் குழாய்
    கூட பயன்படுத்தாமல் தன் கிணற்று நீரை
    பயன்படுத்தியவர்.

    �� தான் சம்பாதித்த சொத்துக்களில்
    முக்கால்வாசியை ஏழைகளுக்கு எழுதி
    வைத்தவர்.

    �� தனக்குப் பின் தன் நினைவில்லத்தைக்
    கூட அரசுக்கு செலவு வைக்காமல் தன்
    சொந்த பணத்திலே அமைத்து சென்ற
    தீர்க்கத்தரிசி.

    புரட்சித் தலைவரின் சிறப்புகள் இன்னும் எண்ணிலடங்காதவை.அவைகளை பட்டியலிட பல நாட்கள் ஆகும்.அப்பேற்பட்ட
    சிறப்புக்குரியவரை இன்று அனைவரும் கொண்டாடுவதைப் போல் வேறு தலைவர்களை கொண்டாடுவதில்லை.காரணம் மற்றவர்கள் சேர்த்த சொத்துக்கள் ஊழலாக பேசப்படுகிறது.புரட்சித் தலைவர் சம்பாதித்த
    சொத்து மக்கள் என்பதை ஊரே கொண்டாடுகிறது.
    தலைவா.....உங்கள் உண்மைத் தொண்டர்கள்
    என்றுமே உங்கள் புகழ் பாடுவோம்.
    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!����������.........Rnjt

  10. #1499
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய வணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

    மக்கள் திலகம் அண்ணா திமுக*வை தொட*ங்கிய பிற*கு 1974ல் "அண்ணா பிற*ந்த நாடு" என்ற* பெய*ரில் ஒரு வ*ண்ண*ப்ப*ட*ம் ந*டிக்க முடிவாகி விளம்பர*மும் வெளியான*து. ஜெய*ப்பிர*தா மூவீஸ் சார்பில் பி.வாசுவின் த*ந்தை பீதாம்ப*ர*ம் மற்றும் இன்னொருவ*ரும் சேர்ந்து த*யாரிக்கவிருந்த*ன*ர். இதில் ஒடுக்க*ப்ப*ட்ட மக்கள் மற்றும் ச*மூக அவ*லங்க*ளை எதிர்த்து போராடும் வ*ழ*க்க*றிஞ*ர் வேட*ம் எம்ஜிஆருக்கு. நேர*மின்மையால் கைவிட*ப் ப*ட்ட*து.

    ஒருமுறை உய*ர்நீதிமன்ற* கூடுத*ல் க*ட்டிட திற*ப்புவிழா சென்னையில் ந*ட*ந்த*து. த*மிழ*க முத*ல்வ*ர் எம்ஜிஆர் த*லைமையில்..ஏராளமான நீதிப*திக*ள், வ*க்கீல்க*ள், பொதுமக்கள் உள்ளிட்டோர் க*ல*ந்துகொண்ட*ன*ர். அத*ற்கு சிலநாட்க*ள் முன்புதான் எம்ஜிஆர், த*மிழ*க மக்களின் ந*லன்க*ருதி, த*மிழ்நாட்டின் மைய*ப்ப*குதியான திருச்சியை த*லைந*க*ராக மாற்றினால் அனைத்து மாவ*ட்ட* மக்களுக்கும் சென்றுவ*ர* வ*ச*தியாக இருக்கும், சென்னையில் இடநெருக்க*டி குறையும். திருச்சியிலும் ப*ல்வேறு க*ட்ட*மைப்பு வ*ச*திக*ள் உருவாக்கி அம்மாவ*ட்ட*மும் மேம்ப*டும் என்ற நோக்கத்தை வெளியிட்டார். இக்க*ருத்துக்கு ஆத*ர*வும், எதிர்ப்பும் ப*ர*வ*லாக இருந்த*து.

    இந்நிலையில் அந்த* நீதிம*ன்ற* க*ட்டிட திற*ப்புவிழாவில் முத*ல்வ*ர் எம்ஜிஆர் முன்னிலையில் பிர*ப*ல வ*ழ*க்க*றிஞ*ர் ராம்ஜெத் மலானி பேசிய*தாவ*து: சென்னையை விட்டு திருச்சியை த*லைந*க*ராக மாற்றவேண்டும் என்ற முத*ல்வ*ரின் க*ருத்து த*வ*றான*து. சென்னை த*மிழ*க*த்தின் எல்லா மாவ*ட்ட*ங்க*ளுக்கும் மேலே மனித*னின் மூளை போல் உள்ள*து. என*வே அதை மாற்றுவ*து த*வ*று என்று பேசினார்.

    பிற*கு, முத*ல்வ*ர் எம்ஜிஆர் பேசும்போது "மனித*னுக்கு மூளை மிகவும் முக்கிய*ம்தான். ஆனால் அதைவிட முக்கிய*ம் இத*ய*ம்தான். மூளை ச*ரியின்றி மனநிலை மாறுபாட்டுட*ன் இருந்தாலும் ஒரு மனித*ன் ப*ல ஆண்டுக*ள் உயிர்வாழ முடியும். ஆனால், இத*ய*ம் ச*ரிவ*ர இய*ங்காமலோ அல்லது நின்றுவிட்டால்.. என்று கூறி பேச்சை ச*ற்று நிறுத்தினார். அர*ங்கமே க*ர*கோஷ*த்தால் அதிர்ந்த*து. பிறகு எம்ஜிஆர் மனித*னுக்கு இத*ய*ம் மிக முக்கிய*ம். அது மைய*ப்ப*குதியில்தான் உள்ளது. அத*ற்காக நான் திருச்சியை இர*ண்டாவ*து த*லைந*க*ர*மாக மாற்ற*லாம் என்ற* என் க*ருத்தைதான் சொன்னேனே த*விர அதுவே முடிவ*ல்ல. இதுப*ற்றி ப*ல்வேறு வ*ல்லுன*ர்க*ளின் ஆலோசனையைக் கேட்டு வ*ருகிறேன் என்றார்.

    திருச்சியில் சோம*ர*ச*ம்பேட்டை ப*குதியில் புர*ட்சித்தலைவ*ர் த*ன*து சொந்த* ப*ண*த்தில் ஒரு இட*ம் வாங்கி அங்கு ஒரு வீடும் க*ட்டியுள்ளார்...ஆனால், அவ்வீடு ப*ய*ன்ப*டுத்த*ப்ப*டாம*ல் இன்றும் உள்ள*து............Shnm.........

  11. #1500
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காலங்கள் கடந்த பிறகும் அரசியலில் ஓங்கி ஒலிக்கும் எம்.ஜி.ஆர். குரல் ரஜினி - கமலுக்கு கை கொடுக்குமா?

    பதிவு: டிசம்பர் 18, 2020 15:36


    தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்கென்று இப்போதும் தனி செல்வாக்கும், ஓட்டு வங்கியும் உள்ளது. அதனை தேர்தலில் அறுவடை செய்யும் எண்ணத்திலேயே ரஜினியும், கமலும் அவரது பெயரை சொல்லி பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.

    காலங்கள் கடந்த பிறகும் அரசியலில் ஓங்கி ஒலிக்கும் எம்.ஜி.ஆர். குரல் ரஜினி - கமலுக்கு கை கொடுக்குமா?
    கமல்ஹாசன் - ரஜினிகாந்த்


    சென்னை:

    எம்.ஜி.ஆர். தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் முதன்மையானவர். “வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்?” என்ற அவரது பாடலுக்கு ஏற்ப காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

    சினிமாவில் தனது பாடல்கள் மற்றும் புரட்சிகரமான வசனங்களால் மக்களை ஈர்த்த எம்.ஜி.ஆர். அரசியலிலும் கொடி கட்டி பறந்தார்.

    சினிமாவில் மாபெரும் வெற்றியை ஈட்டியது போல அரசியல் களத்திலும் தனி முத்திரை பதித்தார்.

    தி.மு.க.வில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர். கருத்து வேறுபாடு காரணமாக 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். முதல் தேர்தலிலேயே திண்டுக்கல் தொகுதியில் அவரது கட்சி வெற்றி பெற்றது.

    பின்னர் 1977-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆனார். சாகும் வரை முதல்-அமைச்சராகவே இருந்தார். 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நோய் வாய்ப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். பிரசாரத்துக்கு செல்லாமலேயே வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு மக்களின் மனதை அவர் வென்று இருந்தார்.

    எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஆட்டம் கண்ட அ.தி.மு.க.வை ஜெயலலிதா கட்டுக்கோப்பாக வழி நடத்தினார். அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆரின் வாக்குகளே இப்போதும் அ.தி.மு.க.வை பலம் வாய்ந்த கட்சியாக வைத்துள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்த போதிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு இணையான வெற்றியை பெற்றது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரின் செல்வாக்கே இதற்கு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

    இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்டதாகவே மாறி இருக்கிறது.

    கருணாநிதி இல்லாத நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் ஆட்சியில் அமரும் முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

    இப்படி 2 கட்சிகளும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினியும், கமலும் புதிதாக களம் இறங்கி உள்ளனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வுக்கு போட்டியாக எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. நடத்தும் கூட்டங்களில் இப்போதும் எம்.ஜி.ஆர். பாடல்களும், பேச்சுக்களும் மறக்காமல் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

    அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பாடல்களை போட்டும், அவரது பெயரை சொல்லியும் ஓட்டு கேட்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

    ஆனால் அரசியலில் புதிய தலைவர்களாக அவதாரம் எடுத்துள்ள ரஜினியும், கமலும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். தந்த ஏழைகளின் ஆட்சியை என்னால் தர முடியும் என்று ஏற்கனவே ரஜினி கூறியிருந்த நிலையில், கமல் ஒரு படி மேலே சென்று, நான் எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி, வாரிசு என்று மேடைகள் தோறும் பேசி வருகிறார்.

    “நாளை நமதே” என்கிற எம்.ஜி.ஆரின் பாடலையும், தனது பிரசார கோ*ஷமாக கமல் முன்னெடுத்து செல்கிறார். எம்.ஜி.ஆர். பாடலை போட்டு டுவிட் செய்து அ.தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரத்திலும் கமல் ஈடுபட்டுள்ளார்.

    எம்.ஜி.ஆர். மரணம் அடைந்து 33 ஆண்டுகள் ஓடி விட்டன. இப்படி காலங்கள் கடந்த பிறகும் தமிழக அரசியல் களத்தில் எம்.ஜி.ஆரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு அவர் விட்டுச் சென்றுள்ள ‘மக்கள் ஆதரவே’ முழுமையான காரணமாகும்.

    தமிழக அரசியலில் எம்.ஜி. ஆருக்கென்று இப்போதும் தனி செல்வாக்கும், ஓட்டு வங்கியும் உள்ளது. அதனை தேர்தலில் அறுவடை செய்யும் எண்ணத்திலேயே ரஜினியும், கமலும் அவரது பெயரை சொல்லி பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.

    இதற்கு அ.தி.மு.க.வினர் பதிலடியும் கொடுத்து வருகிறார்கள். கமலுக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தாலேயே எம்.ஜி.ஆரின் பெயரை அவர் கூறி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    எம்.ஜி.ஆர். ஆட்சியை தருவேன் என்று ரஜினி கூறிய கருத்துக்கும், அ.தி.மு.க.வினர் முன்பு பதில் அளித்துள்ளனர். நாங்கள் நடத்தி வருவதே எம்.ஜி.ஆரின் ஆட்சிதான் என்று ரஜினிக்கும், அ.தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

    இப்படி தேர்தல் களத்தில் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க தொடங்கி உள்ள ரஜினிக்கும், கமலுக்கும் அது எந்த அளவுக்கு கை கொடுக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Courtesy malaimalar.......UKB...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •