Page 188 of 210 FirstFirst ... 88138178186187188189190198 ... LastLast
Results 1,871 to 1,880 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1871
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புத் தம்பி
    ;;;;;;;;;;;;;/;;;;;;;;;;;;;;;
    எம்.ஜி.சக்கரபாணி

    "என் தம்பி ராமச்சந்திரன் பிப்ரவரி நாலாம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பற செய்தி வந்தவுடனே எனக்குள் ஒரே சந்தோஷம். வயசு குறைஞ்சிட்டமாதிரி ஒரு நினைப்பு. தம்பி வரப்போற நாளை எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்.
    இந்தச் செய்தி வந்ததிலிருந்து படுக்கையில் படுத்தபடியே பழைய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா அசை போட்டுகிட்டேயிருக்கேன். ராமச்சந்திரன் குழந்தையா இருந்தப்பவே நாங்க கும்பகோணத்தில் இருந்தோம். குடும்பத்தில் நிறைய வறுமை. அங்க திக்குவாயன்கடைன்னு உண்டு. காலணாவுக்கும் அரையணாவுக்கும் கடைக்குப் போய் சாமான் வாங்கி வருவேன். எங்க போனாலும் தம்பியை தோளில் தூக்கிக்கிட்டே போவேன்.
    சின்ன வயசில இருந்தே எதுக்கும் கலங்க மாட்டான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோம் என்ற எண்ணம் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் 'எல்லாம் நல்லதுக்குத்தான் 'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உண்டு. அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கு.
    ராமச்சந்திரனுடைய மனதைரியத்துக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அவனுடைய முதல் மனைவி தங்கமணிக்கு உடல்நிலை ரொம்ப சீரியஸ்னு ஊர்லஇருந்து செய்தி வந்தது. ராமச்சந்திரன் கிளம்பிப் போனபிறகு அவள் செத்துப்போய்ட்டான்னு தந்தி வந்தது. தம்பிக்கு சின்ன வயசு. மனசு கலங்கிடப் போறான்னு நான் ஆறுதல் சொல்ல ஊருக்குப் புறப்பட்டேன். அங்க போன பிறகு நான் வருத்தப்படக்கூடாதேன்னு அவன் தான் எனக்கு தைரியம் கூறிக்கொண்டிருந்தான்.
    முதன் முதலா ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த படம் "சாயா". நாராயணன் கம்பெனி தான் தயாரிப்பாளர்கள். அப்ப அகில இந்திய புகழ் பெற்ற நந்தாலால் யஷ்வந்த்லால்தான் டைரக்டர். அப்பல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாயிருந்தால் ஒரு படத்தையே முடிச்சுடலாம். 52,000 ரூபாய் வரை செலவழிச்சு படம் எடுத்த பிறகு ஏதோ காரணத்தினால் படம் நின்னு போச்சு. இந்தப் படம் வெளிவந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தம்பி நினைச்சுகிட்டிருந்தப்போ அந்த ஆசையில் மண் விழுந்தது. இது என்ன சோதனைன்னு நான் ரொம்ப மனம் கலங்கிப் போய் வேதனைப்பட்டேன். தம்பி என்னைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னான். என்னை 'ஏட்டா';ன்னு தான் கூப்பிடுவான். கவலைப்படாதீங்க ஏட்டா ஏதோ நல்லது நடக்கப் போறதுக்கான அறிகுறி இதுன்னு சொன்னான். அதுக்கப்புறமும் விடாமுயற்சி செய்ததினால ராஜகுமாரி படத்தில் மறுபடியும் ஹீரோ சான்ஸ் கிடைத்தது. எடுத்த காரியத்தை தைரியமா செய்யனும் அதுல என்ன இடைஞ்சல் வந்தாலும் கவலைப்படக்கூடாதுன்னு நினைப்பான். முடியாதுன்னு சொன்னால அவனுக்குக் கோபம் வந்துடும். 1956ல் நாடோடிமன்னன் படம் எடுக்க ஆரேம்பிச்சோம். நிறைய பணம் செலவழிச்சோம். படம் எடுத்து முடிக்கிறதுக்குள்ள ஏராளமான இடைஞ்சல்கள். ஸீன் நல்லா வரணும்னா அதுக்காக தம்பி என்ன வேணும்னாலும் செய்வான்.
    ஷூட்டிங் நடந்தபோது திடீர்னு மூணு லாரி கயிறு வேணும்னான். கையில பணமில்லை. தம்பிகிட்ட இதச் சொல்ல முடியாது. எப்படியோ சமாளிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு போனோம். படத்தில் ஒரு கயிறு பாலம் வரும். அந்த ஸீன் ரொம்ப நல்லாவும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடிச்சப்ப இந்தப் படம் சக்ஸஸ் ஆனா எம்.ஜி.ஆர் மன்னன் இல்லையானா நாடோடி என்று பத்திரிக்கையிலேயெல்லாம் எழுதினாங்க. படம் பிரமாதமா ஓடிச்சு. எல்லா படங்களுக்கும் நூறாவது நாள் , இருநூறாவது நாள்ன்னு தான் விழா எடுப்பாங்க. நாங்க நாடோடிமன்னன் பட வெற்றி விழான்னு தான் அறிவிப்பு செஞ்சி விழா நடத்தினோம்.
    சீர்காழியில் நாடகத்தில் நடிச்சுகிட்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில் குண்டுமணி தம்பி கால் மேல விழுந்து எலும்பு முறிஞ்சு போச்சு . இனி இவன் கால் சரியா போயி பீல்டில் எங்க நிக்கப் போறர்ன்னு பேசினாங்க. கால் சரியாகி திரும்பி பீல்டுக்கு வந்த போது ஏகப்பட்ட படங்கள் குவிஞ்சது.
    அதுக்கப்புறம் தான் எம். ஆர். ராதா சுட்ட சம்பவம். இனி எம்.ஜி.ஆர் எழுந்து வரவே முடியாது அப்படி வந்தாலும் பேசவே முடியாதுன்னு சொன்னாங்க. அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக மக்கள் மனசில நிலையான இடம் தம்பிக்குக் கிடைச்சது. குண்டு காயத்தோட ஓட்டுக் கேக்கிற மாதிரி போஸ்டர் போட்டாங்க. தமிழ்நாடு பூராவும் அவனுக்காக பிரார்த்தனை செய்தாங்க . அதுக்கப்புறம் புகழ் இன்னும் அதிகம் ஆயிருச்சு.
    1972-ல் தி.மு.கவிலிருந்து தம்பியை நீக்கினாங்க. சத்யா ஸ்டுடியோவில் பலர் ‘நீங்க மன்னிப்பு கேட்டுடுங்க’ன்னு சொன்னாங்க. தம்பி மனம் கலங்கிடக்கூடாதேன்னு தைரியம் சொல்லப் போனேன். என்னை பார்த்தவுடனேயே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஏட்டா நான் இப்பத்தான் பால் பாயாசம் குடிச்சேன். ஒரு கை பார்த்திடுவோம்ன்னு சொன்னான். என்னப்பா செய்யப் போறேன்னு கேட்டேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அந்த தைரியத்தைப் பார்த்து நானே அசந்து போனேன்.
    1972-ல் வந்த கஷ்டம் என்ன செஞ்சுது? தம்பிய முதலமைச்சராவே ஆக்கிடுச்சு. 1984-அக்டோபர் 13 அன்னிக்குத்தான் தம்பியை பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரியில் என்னை அனுமதிச்சாங்க
    நான் உள்ளே போனவுடனேயே ஏட்டா உடம்பு எப்படியிருக்கு? நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்களா ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான். அவன் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க நான் போனா என்னை விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். என்னைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவேன்னு சொன்னான். எந்த சமயத்திலேயும் அவன் தைரியத்தை விட்டதே கிடையாது. நான் அங்கேயிருந்து கிளம்பும் போது டாக்டர்.பி.ஆர்.எஸ்ஸைக்கூப்பிட்டு அண்ணனை நல்லா கவனிச்சுக்கோங்கன்னு சொன்னான். இப்படி சோதனைகள் வந்தா அதைத் தாங்கிக்கிட்டு அதை சாதனையாக்கிக் காட்டற சாமர்த்தியம் தம்பிக்கு நிறைய உண்டு. தம்பியுடைய வெற்றியைப் படிப்படியா கவனிச்சு ,ரசிச்சு பிரமிச்சவன் நான்.
    பல பேர் தம்பியை வரவேற்கத் தயாராயிருக்காங்க. பொன்மனச்செம்மலே வருக புரட்சித்தலைவரே வருக, இதய தெய்வமே வருக ன்னு எல்லோரும் வரவேற்பாங்க. ஆனா எல்லா வரவேற்பையும் விட நான் என் தம்பியை ‘ராமச்சந்திரா நீ புதுப்பொலிவோடு வா’ ன்னு சொல்றதுலே இருக்குற அர்த்தமே வேற .
    1984 பிப்ரவரி 2ஆம் தேதி ஜுனியர் விகடனுக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அளித்த பேட்டி.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1872
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிறந்த நடிகர் அயல் நாட்டில் ஓட்டெடுப்பில்
    வென்ற எம்.ஜி.ஆர் :
    ��������������������������������

    �� சிங்கப்பூர் பரிசுகள் (ஓட்டெடுப்பு மூலம்):
    ��������������������������������

    ⭐1965 எங்க வீட்டு பிள்ளை,

    ⭐1958 நாடோடி மன்னன்,

    ⭐ 1961 திருடாதே,

    ⭐ 1963 பெரிய இடத்துப் பெண் (தமிழ் மலர்),

    ⭐1967 காவல்காரன்,

    ⭐1968 குடியிருந்தகோயில்,(பெற்ற வாக்கு:
    34,938.

    ⭐ 1969 அடிமைப்பெண்,நம்நாடு,

    ⭐ 1970 மாட்டுக்கார வேலன்,

    ⭐1971 ரிக்சாக்காரன்,

    ⭐1972 நான் ஏன் பிறந்தேன்,

    ⭐ 1973உலகம் சுற்றும் வாலிபன் (சிறந்த
    படம்,சிறந்த டைரக்டர்),

    ⭐1975 பல்லாண்டு வாழ்க,

    இலங்கையில் வாக்கெடுப்பில் வென்ற படங்கள் :
    ������������������������������
    1965 எங்க வீட்டு பிள்ளை,
    1968 குடியிருந்த கோயில்,
    1969 அடிமைப் பெண்,
    1970 மாட்டுக்கார வேலன்,
    1972 நான் ஏன் பிறந்தேன்,
    1975 நாளை நமதே.
    ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨.........vrh...

  4. #1873
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு அய்யனின் கைஸ் மதுரையில் அய்யன் பட வெளியீடு அன்று டிக்கெட் எடுக்க பட்ட கஷ்டத்தை விளக்கி சொல்வதை பார்க்கும் போது நமக்கு பெரிய காமெடியாக தெரிகிறது. அவர் பேசாமல் தூத்துக்குடி வந்திருக்கலாம். எந்த கலர் டிக்கெட் வேண்டுமானாலும் முட்டாமல் மோதாமல் கவுண்டரிலேயே மிக தாராளமாக பெற்றிருக்கலாம். இங்கெல்லாம் அய்யனின் படம் முதல் காட்சி hf என்பதெல்லாம் குதிரை கொம்புதான்.

    முதல் நாளில் 2வது காட்சிக்கு கால் வாசி தியேட்டர் நிரம்பினால் அதுவே பெரிய ஆச்சர்யமான விஷயம். அவர்கள் சிலாகித்து பேசுவதை பார்த்தால் சிப்பு சிப்பா வருது. அவர்களை பொறுத்தவரை ஒரு படத்தை ஒரு தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டி விட்டால் போதும் அதை வெற்றி படமென சொல்லி கூத்தாடுவார்கள்.
    அங்கே தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டுக் கொள்வதை பற்றி கவலைப் பட மாட்டார்கள்.

    1970 வரை சொந்த படத்தை தவிர வேறு எந்த படத்துக்கும் தலைவர் அதிகம் செலவு வைத்ததில்லை.
    ஆனால் அய்யனின் படங்களுக்கு மல்டி ஸ்டார்ஸ் மிகவும் அவசியம்.
    அதுமட்டுமல்ல அவர் படத்தை பாருங்கள் தயாரிப்பு செலவு மிக அதிகமாக இருக்கும். வீ.பா.கட்ட பொம்மன், புதியபறவை, கப்பலோட்டிய தமிழன், கர்ணன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர்,
    திருமால் பெருமை, பாரத விலாஸ், ராஜ ராஜ சோழன், ராஜரிஷி, சிவந்தமண், தர்மம் எங்கே என்று பெரும் பொருள் தயாரிப்புக்கே சென்று விடுவதால் படத்துக்கு எங்ஙனம் லாபம் வரும்?

    அப்படியே வெளி வந்தாலும் ஒரு சில ஊர்களில் மட்டும் 100 நாட்கள் ஓட்டி படம் வெற்றி என்று குதிப்பார்கள். B சென்டரில் 50 நாட்கள் ஒடுவது என்பது அநேகமாக இருக்காது என்றே சொல்லலாம். ஆனால் தலைவர் படத்துக்கு b சென்டர் மற்றும் c சென்டரில்தான் ஆட்டம் அற்புதமாக இருக்கும். அதிலும் ஸ்ரீதரின் "உரிமைக்குரல்", 50 நாட்கள் ஓடாத b c சென்டரை தேடிப் பிடிப்பதே கஷ்டம். புதுமையான டைரக்டர் என்று பெயரெடுத்த ஸ்ரீதர் புதுமையான வெற்றியை பார்த்தது "உரிமைக்குரலி"ல்தான்.

    அதே போல் a p நாகராஜன் "நவரத்தின"த்தை இயக்கி தயாரிக்கிறார் என்றவுடன்
    அவரை சுற்றிய விநியோகஸ்தர்களை அவர் வாழ்நாளில் கண்டதில்லை என புளகாங்கிதமடைந்தார். தயாரிப்பில் இருக்கும் போதே "நவரத்தினம்" அத்தனை ஏரியாவும் விற்று தீர்ந்ததுடன் கணிசமான லாபத்தையும் பார்த்து விட்டார். எத்தனையோ பிரமாண்ட பக்தி படங்களை எடுத்து கையை சுட்டுக் கொண்டவருக்கு இந்த நிகழ்ச்சி அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆண்டவன் படமெடுத்து ஆண்டியானவரை மீண்டும் அரசனாக்கி பார்த்தவர் மக்கள் திலகம் என்ற மகோன்னத மனிதர்.

    அய்யன் படமெடுத்து ஆண்டியான தயாரிப்பாளரெல்லாம் தலைவர் படத்தயாரிப்பாளரை பார்த்து பொறாமை கொள்வர். அந்த தலைவரே அவருக்கு படமெடுக்க சத்தர்ப்பம் கொடுத்தவுடன் வற்றாத நதியாக மீண்டும் ஜீவ மாற்றம் ஆகி விடுகிறார்கள்..........ksr.........

  5. #1874
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என் வாழ்க்கையின்
    முதல் வெளிச்சத்தை
    1969 இல்...
    'ராஜா' தியேட்டர் இருட்டில்
    கண்டு பிடித்தேன்!
    'ஒளி விளக்கு'...
    நான் பார்த்த முதல்
    எம்.ஜி.ஆர் படம்!!- - -
    ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
    என்று இருந்த என்னை...
    நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...
    வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...நீங்கள் தான்!
    நாத்திகராக உங்களை நீங்கள்
    அடையாளங் காட்டினாலும்...
    உண்மையான ஆன்மீகம் எது என்பதை
    எனக்குக் கற்றுத் தந்தது...
    உங்கள் வாழ்க்கை தான்!- - -
    ஒரு தெய்வத்தால் மட்டுமே
    தரக் கூடிய ஆறுதலை...
    உங்கள்...'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
    எனக்குத் தந்திருக்கிறது.
    ஒரு குருவினால் மட்டுமே
    வரக் கூடிய ஞானத்தை
    உங்கள்...'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்' பாடல்
    எனக்கு அருளியிருக்கின்றது.
    ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
    கனிவையும் அரவணைப்பையும்
    'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
    எனக்கு அள்ளித் தந்தது.
    ஒரு தந்தையிடமிருந்து பெறக் கூடிய தைரியத்தை
    'வெள்ளி நிலா முற்றத்திலே' பாடல்
    எனக்குச் சொல்லித் தந்தது.- - -
    'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
    எனக்குள் உயர்ந்து நின்ற சோதி மரத்தை
    யான் உணர ஆரம்பித்தேன்.
    'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
    எனது பாலைகளையும்
    சோலைகளாக மாற்றும்
    அற்புதம்' அறிந்து கொண்டேன்.
    'உலகம் பிறந்தது எனக்காக'
    என்று ஒலிக்க ஒலிக்க...
    உரிமை கொண்டாடி ரசிக்கும்
    உற்சாக குணம் என்னுள்
    துள்ளி வளர்வதை
    உணர்ந்து சிலிர்த்தேன்.
    உங்கள் பாடல் காட்சிகளில்
    இரு கையுயர்த்தி நீங்கள்
    'இமய' தைரியம்
    தந்திராவிட்டால்...
    நேற்றைய என் கனவுகள்
    காவியுடை பூண்டிருக்கும்.
    'எங்கே போய் விடும் காலம்?!' என்று
    நீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
    பொறுமை காத்து...ஆனால்
    தலை உயர்த்திக் காத்திருந்தன
    எனது திறமைகள்.- - -
    உங்கள்...
    கம்பு வீசும் சாகசங்களில்
    பித்தனானேன்.
    கத்திச் சண்டைகளில்
    முத்தியடைந்தேன்!
    நல்ல நேரம்' படத்தில்
    சுருண்ட முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட
    மஞ்சள் உடையுடன் மலையருவி போல் துள்ளிக் குதித்து
    மாடிப் படியிறங்கிய
    உங்கள் அழகில்
    நான் வானம் ஏறினேன்! -
    கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
    'ஒளி விளக்கு'
    மீண்டும் 'ராஜா'வில் ஏற்றி வைக்கப்பட்ட போது
    எனக்கும் என் நண்பனுக்கும் [நெல்லியடி முரளி] இடையே..
    ஒரு நூதனமான போட்டி!
    'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
    பாடல் காட்சியில் வரும்
    நான்கு எம்.ஜி.ஆரில்
    எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?
    இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே
    ஒளி விளக்கை
    மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
    சந்தோஷமாகத் தோற்றோம்!- - -
    உங்கள் கணக்கில்
    வரவு வைத்திருக்க வேண்டிய
    வசந்தங்களை எல்லாம்
    வறுமை...
    விரட்டியடித்திருக்கிறது.
    உங்கள் இளமைக் காலத்தின்
    எண்பது சத வீதத்தை...
    விதி...
    வீணாக்கி இருக்கிறது.
    உங்கள் கனவுகளுக்குக் கூட
    மறுக்கப்பட்டது களம்.
    கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்
    கவிழ்த்துப் போடும் அளவுக்கு
    உங்களைப் பந்தாடியிருக்கிறது
    கடந்த காலம்.
    பெரிய பெரிய திறமைகளை வைத்துக் கொண்டே
    சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூட
    நீங்கள்..
    'பகீரதப் பிரயத்தனம்'
    செய்ய வேண்டியிருந்தது.- - -
    உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
    தூவப்பட்டன அவமான முட்கள்.
    உங்கள் கலைப் பயணத்தின்
    பாதித் தூரம் வரைக்கும்
    'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.
    பாவம்....
    உங்கள் 'மன வலிமை'யை
    அவை உணரத் தவறின.
    தடைக் கற்கள்-
    உங்கள் கால்களுக்கும்
    அவமானங்கள்-
    உங்கள் மனதுக்கும்
    உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!
    ஏளனங்கள் எல்லாம்
    உங்களை
    ஒரு வேழமாய் மாற்றின!
    எதிர்ப்புகள் எல்லாம்
    உங்கள்
    ஏணியாய் உயர்ந்தன!
    ராமச்சந்திரன்
    முகவரி தேடி வந்து
    வட்டியும் முதலுமாக
    அதிசயங்கள் நிகழ்த்த ஆரம்பிக்கிறாள்
    அதிர்ஷ்ட தேவதை!
    'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு' என்று...
    உங்கள் வெற்றி வாழ்க்கை
    விளக்கு ஏந்தி வந்து
    விளக்கம் சொல்கிறது.- - -
    'யாம் பெற்ற துன்பம்
    இரு மடங்காக
    யாம் காண்பவர் எல்லாம் பெறுக...'
    என்று அலையும்
    சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
    'யாம் பெற்ற துன்பம்
    இனி யாருக்கும் வேண்டாம்' என்று
    சத்துணவு தந்தீர்கள்.
    இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
    அவர்கள் தேவைள் படித்தறிந்து
    அதனிலும் மேலாக
    அள்ளித் தந்தீர்கள்.
    போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட
    அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
    கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
    கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.- - -
    உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
    அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
    ஓடிப் போய்
    உதவியிருக்கிறீர்கள்.
    ஆரம்ப காலங்களில் உங்கள்
    கைக்கு எட்டிய வாய்ப்புகளை...
    வாய்க்கு எட்டாமல்
    தட்டி விட்டவர்கள்...
    பின்பு..வாழ்ந்து கெட்டு
    உங்கள் வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
    உங்கள் மனக் கதவையும்
    அகலமாகவே அவர்களுக்காக
    திறந்து வைத்தீர்கள்.- - -
    இறப்பு என்பது...
    இயற்கையின் நிஜம்.
    ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
    இந்த இருவர் மரணமும்
    உண்மைக் கலப்பற்ற பொய்கள்!
    ஒருவர்...என் தந்தை!
    மற்றவர்...நீங்கள்!
    - யாழ் சுதாகர்.............Png

  6. #1875
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ''எம்.ஜி.ஆர். குறித்த நூல்கள்'' மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அவரைப் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே... தமிழ் நூல்கள்

    1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
    2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
    3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
    4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
    5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
    6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
    7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
    8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
    9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
    10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
    11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
    13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
    14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
    15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
    16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
    17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
    18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
    19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
    20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
    21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
    22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
    23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
    24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
    25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
    26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
    28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
    29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
    30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
    31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
    32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
    33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
    34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
    35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
    36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
    37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
    38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
    39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
    40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
    41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
    42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
    43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
    44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
    45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
    46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
    47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
    48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
    49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
    50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
    52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
    53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
    54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
    55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
    56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
    57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
    58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
    59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
    60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
    61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
    62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
    63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
    64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985))
    65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
    67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
    68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
    69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
    70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
    71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
    72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
    73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
    74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
    75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
    76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
    77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
    78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
    79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
    80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
    81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
    82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
    83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை) 84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
    85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
    86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
    87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))...mj

  7. #1876
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எந்த கட்சி என்ன மதம் ஆத்தீகனா நாத்தீகனா என கடவுள் பார்பதில்லை நல்லவனுக்கு உதவுவார் எம் ஜி ஆரும் அது போல் தான்

    கம்மியூனிஸ்ட் தலைவரும் சுதந்திர தியாகியும் ஆன ஜீவா சிலை அமைக்க கம்மியூனிஸ்ட் கட்சி தா பாண்டியன் தலைமையில் முடிவு எடுத்து பணம் மிகுத்த பிரமுகர்களிடம் நிதி சேர்க்கிறார்கள் பாதி தொகை கூட சேரவில்லை அப்போ தான் எம்ஜிஆர் மட்டுமே உதவ முடியும் என்று எம்ஜிஆரிடம் நிதி கேட்க முடிவாகிறது அப்போது கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள பாலசுப்பினமணியன் எம் ஜி ஆரை கடும் விமர்சனம் செய்பவர் அவர் எம் ஜி ஆரை காண தயங்கியவாறு செல்கிறார் தோட்டம் வந்த கம்மியூனிஸ்ட் தலைவர்களை உண்ண வைத்து கேட்கிறார் என்ன வேண்டும் என எம் ஜி ஆர் ஜீவா சிலை அமைக்க நிதி தந்து உதவ வேண்டுகிறார்கள் கம்மியூனிஸ்ட் தலைவர்கள் உடனே எம் ஜி ஆர் நல்ல விஷயம் சிலை அமைக்கும் அத்தனை சிலவையும் நானே தருகிறேன் என கூறும் எம்ஜிஆரை பார்த்து திகைத்து நிற்க்கிறார்கள் சிறு நிதி எதிர்பார்த்து வந்தவர்கள்

    ஆன்மீக சுவாமி கிருபானந்த வாரியார் திருபணியாக ஒரு கல்லியாண மண்டபம் கட்ட நிதி திரட்டுகிறார் பல பணக்கார ஆன்மீகவாதிகளிடம் நிதி வசூல் செய்தும் பணி முடிக்க முடியாமல் கடைசியில் எம் ஜி ஆரை சந்தித்து நிதி கேட்க வந்த சுவாமிகளை உண்ணவைத்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என எம் ஜி ஆர் கேட்க உங்கள் மனம் போல் தாருங்கள் என சுவாமி கூற எம் ஜி ஆர் ஒரு செக்கில் தொகை எழுதாமல் கையொப்பம் இட்டு கொடுக்கிறார் சுவாமி உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதை எழுதி கொள்ளுங்கள் என எம் ஜி ஆர் கூற திகைப்போடு பெற்று கொண்டு கல்லியாண மண்ட்டபம் திறப்பு விழாவில் பல பிரமுகர்கள் மத்தியில் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் என்ற பட்டம் சூட்டி மகிழ்ந்தார் சுவாமி

    நல்லோர் லட்சியம் வெல்ல
    எம் ஜி ஆர் துணை நிற்ப்பார்

    வாழ்க எம் ஜிஆர் புகழ்..........Arm

  8. #1877
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு 2 உதாரணங்கள். காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அவ்வளவுதான்! காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று சொல்கிற திமுக கூட, ‘கருணாநிதி ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘நல்லாட்சி அமைய எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள்.

    நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்றுதேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொல்கிறார். சிவாஜி மடியில்அமர்ந்து வளர்ந்தவன் என்று கூட கமல் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் கட்சி தொடங்க இருந்த நேரம், ‘உலகம்சுற்றும் வாலிபன்’ படம் ரிலீசாகக் கூடாது என்று அன்றைய ஆளும் கட்சியான திமுக எல்லா முயற்சிகளையும் செய்தது.மதுரையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்பட்டால், நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று வீரவசனம் பேசினார் மதுரை முத்து. அதன் பிறகு அவர் அதிமுக.வில்சேர்ந்தார்! படம் வெளியே வரவிடாமல் முடக்கி பொருளாதார ரீதியாக எம்ஜிஆருக்கு கடும் நெருக்கடியைத் தர வேண்டும் என்பதுதான் அன்று சிலருடைய திட்டம். படப்பெட்டியை திரையரங்குகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பது, சுவரொட்டிகள் ஒட்டவிடாமல் இடைஞ்சல் செய்வது அல்லது ஒட்டிய சுவரொட்டிகளை கிழிப்பது என்று எல்லா வகையிலும் எம்ஜிஆரை பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை திரையிட்டார் எம்ஜிஆர். எதிர்ப்பே அவருக்கு இலவச விளம்பரம் ஆனது. அந்தப் படம் அவருக்கு வெற்றி படம். வசூலிலும் சாதனை செய்தது.

    எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். சத்துணவுக்கு என்று தனித்துறை, தனிஅமைச்சர் எல்லாம் எம்ஜிஆர் தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அரிசி விலை 2 ரூபாய்தான். ரவை, மைதா, சர்க்கரை, பாமாயில், பள்ளி சிறுவர்களுக்கான சீருடை ஆகியவை கூட நியாய விலை கடையில் கிடைத்தன. அவை எல்லாமே தரமானவை. ரேஷன் அரிசி விலையை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய தொகுப்பு அரிசியை தரமாட்டோம் என்று சொன்னது. எம்ஜிஆர் அதை கண்டித்து அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அப்படியெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

    எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவரால் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள். அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார். எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினி பிறந்த நாளன்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களை சந்திக்கவில்லை. ஒரு பெண்மணி கதறி அழக்கூட செய்தார். குறைந்தபட்சம் அவரதுகுடும்ப உறுப்பினர்களாவது அவர்களை சந்தித்து இருக்கலாம். அது கூட செய்ய முடியவில்லை.

    தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக் கொள்ள எம்ஜிஆர் என்றுமே தயங்கியது கிடையாது. ஒரு முறை நிருபர் ஒருவர், என்டிஆரிடம், எம்ஜிஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது ‘‘அவரோடு என்னை ஒப்பிட சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் கடவுள்; அவரை என்னோடு எப்படி ஒப்பிட முடியும்’’ என்று ‘ஆந்திராவின் கடவுள்’ என்டிஆர் சொன்னார்.

    எம்ஜிஆர் ஏதோ திடீரென புதுக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்ததாக நினைக்கிறார்களோ என்னவோ. அண்ணாவிடம் அரசியல் கற்றவர். என் இதயக்கனி என்று எம்ஜிஆரை அண்ணா கொண்டாடினார். ‘நீ முகத்தை காட்டினாலே 30 லட்சம் ஓட்டு’ என்று எம்ஜிஆரை பற்றி அண்ணா சொன்னது உண்மைதான். இப்போது இருப்பவர்கள் எம்ஜிஆர் வரலாறு பற்றி சரியாக படிக்கவில்லையோ என்னவோ?

    மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன்; எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், எம்ஜிஆர் திருச்சியைதான் இரண்டாம் தலைநகரமாக்க விரும்பினார். அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், திருச்சி - தஞ்சாவூர் செல்லும் வழியில் காட்டூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால், அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்ததாலும் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டார்.

    எம்ஜிஆர் ஏழை மக்களின் நண்பன். இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல். இந்த இரண்டும் இன்று இருப்பவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ‘பெண்கள் தங்கள் கணவர்களின் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்; என் பேச்சை கேட்பார்கள்’ என்று பெருமிதமாக சொன்னார் எம்ஜிஆர். மற்றவர்கள் அப்படி சொல்ல முடியுமா?

    நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்ட போது, எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை, செயல்மூலம் காட்டினார். அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கூட அந்த கட்சி ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு விழும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் பெயரை சொல்லிதான் ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னம், தமிழ்நாட்டில் இன்று வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி. அதனால்தான் அந்த சக்திக்கு இத்தனை போட்டி. முதல்வர் பதவி அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை. முதல்வர் பதவிக்கு அவர் பெருமை சேர்த்தார் என்றே சொல்லலாம்.

    ரஜினி, கமல்தான் என்றில்லை... சினிமாவிலிருந்து வரும் எல்லோருமே எம்ஜிஆர் ஆகிவிடுவார்களா என்பதற்கு வாக்காளப் பெருமக்கள் தக்க பதில் வைத்திருப்பார்கள்..........Aiyapp.das

  9. #1878
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புராண கர்ணனை வென்றார் கலியுக கர்ணன் எம் ஜி ஆர் ...

    சிலர் கேட்டனர் எப்படி?!

    புராண கர்ணன் அன்னதானம் செய்யவில்லை ஆனால் ஒருதடவை ஒருவருக்கு அன்னதானம் நடக்கும் இடத்தை காட்டியதால் அடைந்தார் சொர்க்கம் இது புராணகதை

    நம் கலியுக கர்ணன் ராமாவரம் தோட்டம் 24 மணி நேரம் அணையா அடுப்போடு அன்னதானம் செய்தார் எம் ஜி ஆர்

    அதுவும் தன்னை காணவரும் தோட்டம் வரும் எவரும் பசி ஆற உண்டே காண்பார் எம் ஜி ஆர்
    தான் உண்ணும் போது 20 நண்பர்களுடனே உண்பது வழக்கம் மற்றவர் விரும்பி உண்பதை உடனே வழங்க வைப்பார் எம் ஜி ஆர்

    காமராஜை பல முறை விருந்துக்கு அழைக்க வர மறுக்கும் காமராஜ்யிடம் ஏன் மறுக்கிறீர்கள் என எம்ஜிஆர் கேட்க காமராஜ் ராமசந்திரா விருந்துக்கு வரகூடாது என்று அல்ல நான் ஒரு வித உணவோடு வாழ்கிறேன் உன் வீட்டின் சாப்பிட்டின் ருசி மகத்துவம் பலர் கூறி கேட்டுள்ளேன் ஒரு முறை வந்து உண்டால் என் நாக்கு தினம் அதை கேட்கும் அதனால் தான் மறுக்கிறேன் என கூறினார்

    உணவு ஊட்டுவதில் தாய்க்கு நிகர் எம்ஜி ஆர் ஒரு மேல் மட்ட அதிகாரி எழுதிய நூலில் இப்படி எழுதியுள்ளார் ஒரு முறை நான் கோட்டையில் பணியில் உள்ள போது எம்ஜி ஆர் தோட்டத்தில் இருந்து சி எம் அழைப்பு வர உடனே சென்ற என்னை வரவேற்ற சி எம் வாங்க சாப்பிடுவோம் என அழைக்க ஏதோ அவசரமா அழைத்தீர்களே என தயக்கமாக கேட்க ஒன்றும் இல்லை முன்பு ஒரு முறை ஒரு கூட்டம் இங்கு நடந்ததே அதில் பங்கு கொண்ட நீங்கள் அன்று இங்கு உணவு உண்டீர்கள் அன்று ஒரு உணவு பரிமாறபட்டது அதை நீங்கள் விரும்பி உண்டீர்கள் அது அபூர்வமாக இங்கு தயாரிக்க படும் இன்று அந்த உணவு என்ற உடன் உங்கள் முகம் நினைவில் வந்தது அது தான் உண்ண அழைத்தேன் என கூற நான் ஒருகணம் மலைத்து நின்றேன் எதிரே நிற்பது என் அன்னையா எம் ஜி ஆரா என என் தாய்போல் எனக்கு காட்சி அளித்தார் அன்று உண்மை அன்போடு

    மக்வான என்ற மத்திய மந்திரி இருந்தார் தமிழகம் வரும் போது எல்லாம் எம்ஜிஆரையும் எம் ஜி ஆர் ஆட்சியையும் விமர்சித்து கொண்டே இருந்தார் ஒரு நாள் எம் ஜி ஆர் வீட்டில் விருந்து உண்ணும் சந்தர்ப்பம் வாய்க்க அதன் பின் எப்போதும் எம் ஜி ஆர் புராணமே மனிதநேயம் அன்பு க்கு எம் ஜி ஆரே எடுத்து காட்டு என்று

    சிறுவயதில் உண்ண உணவு இன்றி தவித்த எம் ஜி ஆர்
    பிற்க்காலத்தில் அன்னதானத்தில் மன்னன் ஆனார்

    வாழ்க எம். ஜி. ஆர்., புகழ்.........arm

  10. #1879
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    முகநூல் நண்பருக்கு இனிய வணக்கம் ...

    Two commemorative coins in the denomination of Rs 100 and Rs 5 were released Thursday on 17th January, 2019 to mark the 102nd birth anniversary of late Tamil Nadu Chief Minister and ruling AIADMK founder M G Ramachandran.

    Chief Minister K Palaniswami and Deputy Chief Minister O Panneerselvam released the coins at a function held in the Tamil Nadu Dr. MGR Medical University complex, Chennai
    The coins bear the portrait of Ramachandran at the centre along with the inscription 'DR M G Ramachandran Birth Centenary' on the lower periphery.
    The year '1917-2017' will be flanked below the portrait of Dr M G Ramachandran,
    On the obverse side, the coins will bear the Lion Capital of Ashoka Pillar in the centre with the inscription 'Satyamev Jayte'.
    The Rs 100 and Rs 5 coins will weigh 35 grams and 6 grams, respectively.
    The Rs 100 coin will be made of silver (50 per cent), copper (40 per cent), nickel (5 per cent) and zinc (5 per cent).
    The Rs 5 coin will be made of copper (75 per cent), zinc (20 per cent) and nickel (5 per cent)..........Vel NS

  11. #1880
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அந்த சிங்கத்துக்கு உணவு வகைகள் பரிமாறி அதன் உடன் நன்கு பழகி ஒரு உற்ற நண்பன் போல இருந்தவர் ஒரு பெங்காலி நபர்...ஆள் அழகா உயரத்தில் கம்மியாக இருப்பார்.

    அவரையும் முழுதாய் தங்கள் உடன் வைத்து கொண்டு வரலாற்று தலைவர் படம் அடிமைபெண்ணில் 30 அடி பள்ளத்தில் தன் தாயை காக்க தலைவன் சிங்கத்துடன் போராடி வீழ்த்தும் காட்சி...

    4 நாட்களில் இறுதி சண்டை காட்சி எடுக்க பட்டு விடும் என்ற நிலையில் அந்த காட்சி எடுக்க 3 மாதம் ஆகி விட்டது சத்தியமான உண்மை....

    ஆரம்ப காட்சிகள் எடுக்க பட்ட பின் 4 நாட்கள் அந்த சிங்கம் எந்த உணவையும் எடுத்து கொள்ள மறுக்க....விஷயம் அறிந்த தலைவர் பட்டினி கிடக்கும் அதை வதைத்து எடுக்க படும் காட்சிகள் தவறு...

    என்று சொல்லி பட பிடிப்பு தள்ளி போய் ஒருவாரம் சிங்கத்துக்கு சிறப்பு உணவுகள் நம் பொன்மனம் செலவில் வழங்க பட வீறு கொண்டு எழுந்தது அந்த சிங்கம்...

    உற்சாகம் ஆக களம் இறங்கிய அதனுடன் மோதும் காட்சிகளில் தலைவர் உடை அமைப்பில் அந்த பெங்காலி நபரும் இருக்க காட்சிகள் மாறி மாறி எடுக்க பட்டன.

    ஒரு காட்சியில் சிங்கத்தின் வாலை பிடித்து இழுக்கும் போது கடும் கோபம் கொண்டு சிங்கம் ஆத்திரத்தில் பாய்ந்து வர உணவு கொடுத்து பராமரித்து வந்த அந்த வடநாட்டு நபரே திகைத்து போக..

    தயார் நிலையில் இது போல ஒரு சூழ்நிலை வந்தால் அந்த சிங்கத்தை மயக்கம் வரும் நிலையில் சுட சண்டை காட்சிகள் துணை இயக்குனர் ..
    என்.சங்கர் கையிலும் பள்ளதுக்கு மேலே அசோகன் நிற்கும் அந்தவாயில் பகுதியில் இன்னும் ஒரு நபர் அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை... அவர் கையிலும் துப்பாக்கி இருக்க...

    பாய்ந்து வந்த சிங்கத்தின் வாயில சங்கர் அவர்கள் துப்பாக்கியை திருப்பி கொண்டு செல்ல சிங்கம் கோபம் அடங்கி மூச்சு வாங்க.

    மொத்த அரங்கமும் திகிலில் திகைக்க ஏதும் அறியா மாவீரன் போல பயம் இன்றி நின்றார் நம் மன்னவர்.

    பவளவல்லி பதவி வெறி கொண்டு ஆத்திரத்தில் ஆள் மாறி பள்ளத்தில் விழ அவரை இழுத்து கொண்டு போகும் காட்சி எடுக்க பட்ட பின் சிங்கம் உடல் நிலை மீண்டும் வயிற்று போக்கால் அவதி கொள்ள...

    மருத்துவர் வந்து மருந்துகள் அளித்து நன்கு உடல் நலம் பெற்ற பின் மீதி காட்சிகள் பார்ப்பவர் வியக்கும் வண்ணம் எடுத்து முடிந்து படம் வெளிவந்த போது அனைத்து நெஞ்சங்களும் அந்த இறுதி சண்டை காட்சிகள் பற்றியே பேச .

    வட இந்திய பத்திரிகை கள்... இது போல ஒரு காட்டு ராஜாவுடன் மோதும் உண்மை காட்சிகள் இந்திய திரைப்பட வரலாற்றில் இல்லை என்று விமர்சனம் எழுத.

    அதை படித்து அப்படி என்ன அந்த காட்சியில் இருக்கு என்று படம் பார்க்க வந்த இந்தி திரைப்பட வல்லுனர் ராஜ்கபூர் அவரே தன்னை மறந்து பொது இடம் என்று பார்க்காமல் எழுந்து நின்று விசில் அடித்து பாராட்டிய நிகழ்வுகள் நம் தானை தலைவருக்கு மட்டுமே சொந்தம் என்று பெருமை கொள்ளுவோம்...

    படத்தின் இறுதி காட்சிகள் சிறப்பிக்க காரணம் ஆன துணை ஸ்டண்ட் நிபுணர் சங்கர் அவர்கள் தலைவர் முதல்வர் பொற் கரங்கள் கொண்டு விருது பெரும் படம் பதிவில்...

    அந்த சிங்கத்தை பேணிய பெங்காலி நபருக்கு உரிய மரியாதை செய்து பெரும் தொகையை கொடுத்து வழி அனுப்பி வைத்த செயல் மறக்க மறுக்க முடியாத நிகழ்வுகள்.

    வாழ்க தலைவர் புகழ்.
    நன்றி...தொடரும்.

    உங்களில் ஒருவன் நெல்லை மணி.

    என் .சங்கர் அவர்கள் தலைவரின் இதயக்கனி படத்துக்கு இவரே ஸ்டண்ட் காட்சிகள் அமைப்பாளர்..

    விவசாயி படத்தில் வரும் சேற்று சண்டை காட்சி நிபுணரும் இவரே ஆவார் என்பது துணை செய்திகள்...

    காவல்காரன் படத்தில் தலைவரை பின்னால் இருந்து இவர் கத்தியால் குத்த வர தான் அமர்ந்து இருக்கும் நாற்காலியை எடுத்து அதை தடுக்கும் காட்சி அமர்க்களம் போங்க.............nmi

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •