Page 97 of 113 FirstFirst ... 47879596979899107 ... LastLast
Results 961 to 970 of 1129

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #961
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அவன்தான் மனிதன் டிஜிட்டலில் மறுவெளியீடு.

    3/12/2021 முதல் மதுரை ,கோவை, ஈரோடு , திருப்பூர்
    மற்றும் பல ஊர்களில் திரையிடப்பட்டுள்ளது.
    சென்னையில் 17/12/2021 முதல் திரையிடப்படவுள்ளது.

    siva-941.jpg

    siva-942.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #962
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அவன்தான் மனிதனும் அவரது ரசிகர்களும் மதுரையில்.....

    siva-943.jpg siva-946.jpg

    siva-944.jpg siva-947.jpg

    siva-945.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #963
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அவன்தான் மனிதனும் அவரது ரசிகர்களும் மதுரையில்.....

    siva-948.jpg

    siva-949.jpg

    siva-950.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #964
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    மதுரையை அதிர வைத்த சிவாஜி ரசிகர்கள் ( அவன்தான் மனிதன் டிஜிட்டல் வெளியீடு )

    அவன்தான் மனிதன் டிஜிட்டல் வெளியீட்டை கோலகலமாக கொண்டாடிய சிவாஜி ரசிகர்கள்





    Thanks சிவாஜி ரசிகன் Sivaji Rasigan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #965
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    That's our sivaji sir

    ஒரு முப்பது ஆண்டுகளாக பிதற்றி கொண்டிருக்கிறார்கள்.
    அதாவது 1989 ஆம் ஆண்டு பொது தேர்தலில் நடிகர்திலகத்தின் தோல்வியில் இருந்து....
    அரசியல் பண்டிதர்கள்,நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களில் பலர்..
    அரசியல் தலைவர்களில் சிலர்......
    இப்படி பல தரப்பட்டவர்கள்...
    அவர்களின் பிதற்றல் இதுதான்...
    ஆனான பட்ட சிவாஜிகணேசனே அரசியலில் தோற்று போனார்........
    இந்த மதியூகிகள் அனைவருமே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தை இரண்டே ஆண்டுகளில் சுருக்கி முடித்து கொண்டார்கள்.
    அதன் அடிப்படையில் தங்கள் முகாரியை ஆலாபனை செய்கிறார்கள்.
    ஆனான பட்ட சிவாஜியே அரசியலில் தோற்று போனார்.......
    அறியாமையால்..
    உள்நோக்கத்தோடு..
    சொந்த லாபம் கருதி..
    அந்த முகாரியை ஆனந்தமாக அரங்கேற்றி வருகிறார்கள்....
    நடிகர் திலகம் தேர்தல் அரசியலுக்கு 1957 ஆம் ஆண்டிலேயே வந்து விட்டார்....
    தீவிர பிரச்சாரத்தை 1962 ஆம் ஆண்டு பொது தேர்தலில் செய்தார்.
    அவரது வார்த்தையிலே சொல்வதென்றால் அந்த ஒரு தேர்தலிலே சில லட்சங்களை செலவு செய்திருக்கிறார்.
    படப்பிடிப்புகளை ஒத்தி வைத்ததால் வருவாய் இழப்பு வேறு....
    தீவிர பிரச்சாரத்தால் தொண்டை வலி யேற்பட்டு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்க பட்டிருக்கிறார்.
    சில நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார்.
    இது 1962 ஆம் ஆண்டு பொது தேர்தல் அனுபவம் மட்டும்.....
    அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் திமுக ஐம்பது இடங்களை வென்றது.
    அதில் ஒருவர் லட்சிய நடிகர் SSR....
    தேர்தலில் 50 mla க்கள் கிடைத்ததால் இரு MLC சீட்கள் கிடைத்தன திமுகவிற்கு..
    ஒருவர் mgr,மற்றவர் அன்பழகன்...
    ஆக அந்த தேர்தலிலேயே நடிகர்கள் இருவரை சட்ட மன்ற இரு அவைகளுக்கும் அனுப்பி வைத்து அழகு பார்த்தார் அண்ணா...
    ஆனால் கர்மவீரருக்கும் காங்கிரசுக்கும் அப்படி ஒரு சிந்தனை வரவில்லை.
    1967,1971 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் mgr பரங்கிமலையில் திமுக வேட்பாளராக நின்றார்...வென்றார்....
    நடிகர் திலகமோ பிரதிபலன் கருதாது உழைத்தார்...
    கை பணத்தை செலவிட்டார்...
    வருவாய் இழப்புக்கு ஆளானார்...
    தனக்கோ தன் ரசிகர் மன்றத்திற்கோ தொகுதி ஒதுக்கீடு கேட்டாரில்லை...
    1963 ஆம் ஆண்டில் பக்தவத்சலத்தை முதல்வராக்கி அழகு பார்த்தார் பெருந்தலைவர்...
    C.சுப்ரமண்யத்தையும் தமிழக அமைச்சர்,மத்திய அமைச்சர் என்று பதவிகள் வழங்கினார்....
    இன்றைய இளைஞர்களே,அந்த பக்தவத்சலம் 1967ஆம் ஆண்டு கட்சி தோற்ற மூன்றே ஆண்டுகளில் கர்மவீரரை கை கழுவி விட்டு கலைஞரிடம் தொகுதி உடன்பாடு பேச வந்து விட்டார் C.சுப்ரமண்யத்துடன்.
    அதே 1967 ஆம் ஆண்டிலேயே தேர்தல் தோல்விக்கு பின் கட்சி நடத்த கூட காசில்லாமல் நடிகர் திலகத்தை நாடி வந்து கண்ணீர் விட்டார் கர்மவீரர்..
    நடிகர் திலகம் வார்த்தைகள் தான் இது...
    என்னுடைய பசப்பு மொழியல்ல..
    சில மணிநேரத்திலேயே மூன்று லட்சம் ரூபாயை திரட்டி காமராஜரிடம் கொடுத்தார்,தனக்கென கட்சியிடம்,பெருந்தலைவரிடம் எதுவும் கேட்டு பெறாத நடிகர் திலகம்....
    அரசியல் பண்டிதர்களே! ஊடக நெறியாளார்களே!
    அந்த 1967 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு மாநிலம் முழுக்க சுற்றி அலைந்து கலைஞர் தேர்தல் நிதியாக திரட்டி அண்ணாவிடம் விருகம்பாக்கம் மாநாட்டில் கொடுத்த தொகை 11 லட்சம் ரூபாய்.
    அண்ணா பூரிப்போடு சைதை தொகுதி வேட்பாளராக அதே மாநாட்டில் கலைஞரை வேட்பாளராக அறிவித்தார் இப்படி...
    Mr.பதினொரு லட்சம் என்று......
    சில மாதங்களில் நடிகர் திலகம் சில மணி நேரத்தில் கட்சி நடத்த நிதி கேட்டு கண்ணீரோடு வந்த கர்மவீரருக்கு ஏறத்தாழ கலைஞர் மாநில முழுதும் சென்று திரட்டிய தொகையில் நான்கில் ஒரு பங்கை,மூன்று லட்சத்தை தனிநபராக,பெருந்தலைவரின் விசுவாசியாக அவரிடம் வழங்கினார்...
    எந்த நடிகருக்கு வரும் இந்த தயாள சிந்தை...
    தலைவன் மீது விசுவாசம் ...பயன் கருதா அன்பு..
    1987 ஆம் ஆண்டு mgr இறக்கும் வரை பொதுத்தேர்தல்கள்,அவ்வப்போது வந்த இடைத்தேர்தல்கள் வரை பிரதி பலன் கருதாமல் உழைத்தார் இயக்கத்திற்காக..
    கொண்ட கொள்கைக்காக..
    ஏற்று கொண்ட தலைமைக்காக....
    எத்தனை எத்தனை வெற்றிகள் அந்த தேர்தல்களில்......
    நடிகர்திலகத்திற்கு அந்த வெற்றிகளில் பங்குண்டு என்று MGR அவர்களே அங்கீகரித்தார்...
    தேர்தல்களில் வெற்றி கணக்கு போட,சந்தர்ப்ப அரசியல் செய்ய தவறினார் நடிகர் திலகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
    நம்பியவர்களை கை விட்டார்...
    தலைமைக்கு துரோகம் செய்தார்..
    துரோக சிந்தனையால் தனி கட்சி துவங்கினார் என்றெல்லாம் நடிகர் திலகத்தை பற்றி விரல் நீட்ட முடியுமா?
    பச்சை வயல் மனது அவருக்கு....
    களைகள் அந்த மனதில் விளைந்ததில்லை....
    பதர்கள் தோன்றியதில்லை அந்த நிலத்தில் விளைந்த நெல் மணிகளில்...
    அவர் இந்த மண்ணின் அசல் வித்து.....
    ஒரு 33 ஆண்டுகாலம் தமிழக அரசியலில் அவருக்கு பங்கிருந்தது...
    அந்த அரசியல் வாழ்வில் பெரும் வெற்றிகளும் சில தோல்விகளும் இருந்தன....
    துரோகமும் சந்தர்ப்ப வாதமும் அறவே இருந்ததில்லை...
    அடிநாளில் இருந்தே தமிழுக்கும் தமிழருக்கும் தன் உடல் பொருள் ஆவியை கொடுத்தார் விளம்பரம் இல்லாமல்...
    நடிகர் திலகத்தின் மீது நீங்கா அன்புடன்..
    மாறா மதிப்புடன்...
    பிரமிப்புடன்...
    Vino Mohan.V.


    Thanks Vino Mohan.V.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #966
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இரு திலகங்களின்...
    வெள்ளை ரோஜா வில்...

    மதுரை சென்ட்ரல் திரையரங்கில்...

    19.12.21
    மாலை காட்சியில்..

    மக்கள் தலைவரின்
    மகத்தான இதயங்களோடு..
    siva-969.jpg

    Thanks Sundar Rajan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #967
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தமிழ் திரையுலகில் 150க்கூம் மேற்பட்ட வண்ணப்படங்களில் நடித்து முடித்த முதல் நடிகர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன்! அவர் நடித்து முடித்த 151 வண்ணப் படங்களில் 63 படங்கள் 100 முதல் 200 நாட்களுக்கும் மேலாக ஓடி இருக்கின்றன. அவை என்னென்ன படங்கள்? எத்தனை நாட்கள் அதிகபட்சமாக ஓடின? என்பதைப் பற்றிய தொகுப்பு தான் இந்தக் காணொளி.





    Thanks Nilaas Thiraikkoodam
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #968
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    பட்டினி கிடந்து நடித்த சிவாஜி... கண் கலங்கிய இயக்குநர்!
    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சில புகைப்படங்களுடன் நக்கீரன் பத்திரிகையில் வெளியான செய்திகள் காணப்படுகிறது.
    எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பான நடிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தொழில் பக்தியில் அவருக்கு நிகர் அவர்தான். ஆரம்பக்காலம் தொடங்கி இறுதிக்காலம்வரை தான் செய்த தொழிலை 100 சதவிகித அர்ப்பணிப்புடன் செய்தவர். இதைப் பலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; சில பத்திரிகைகளிலும்கூட படித்திருக்கிறேன். ஆனால், இதை நேரடியாகக் காணும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை கிடைத்தது.
    ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன்னர் கே.எஸ்.கோபாலகிருஷணன் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் 'படிக்காத பண்ணையார்' என்ற திரைப்படம் உருவானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வாகினி ஸ்டூடியோவில் நடைபெற்றது. 'பணமா பாசமா', 'சித்தி' உள்ளிட்ட பல குடும்பப்படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். சிவாஜி கணேசனின் நடிப்பை நேரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் 'படிக்காத பண்ணையார்' படப்பிடிப்பு தளத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. சிவாஜி, அனுராதா சம்மந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை அன்று படமாக்கிக் கொண்டிருந்தனர். சிவாஜி கணேசனின் எதிரிகள், கவர்ச்சி நடனம் ஆடும் அனுராதா மூலம் ஊரில் கௌரவத்தோடு வாழும் பண்ணையாரான சிவாஜி கணேசனை வீழ்த்தி, அவருடைய பெயரைக் கெடுக்க வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். அதற்கான காட்சிகள் அனைத்தையும் ஒரு பாடலாக எடுக்க கே.எஸ்.கோபால கிருஷ்ணன் முடிவெடுத்திருந்தார். பாதி காட்சிகள் படமாக்கப்பட்டிருந்த நிலையில், அனைவரும் மதியவுணவு இடைவேளைக்குச் சென்றிருந்தனர். நான் அந்த நேரத்தில்தான் அங்குச் சென்றேன்.
    அனைவரும் அங்கே சேர் போட்டு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அங்குச் சிவாஜி கணேசன் இல்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அங்கு எங்குமே அவர் இல்லை. நான் அப்படியே ஸ்டூடியோவிற்குள் சென்றேன். எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தின் கீழே இருந்த ஷோபாவில் சிவாஜி கணேசன் அமர்ந்து கொண்டிருந்தார். அந்த அறையில் வேறு யாருமே கிடையாது. நான் அந்த அறைக்குள் நுழைந்த சத்தம் கேட்டவுடன் தூரத்திலிருந்து ஒரு பார்வை பார்த்தார். சிவாஜி கணேசனின் பார்வையைப் படங்களில் கூர்ந்து பார்த்தாலே ஒருவித பயம் வரும். நேரில் பார்த்தவுடன் பயத்தில் அந்த அறையிலிருந்து உடனே வெளியே வந்துவிட்டேன். என்ன சார் எல்லாரும் வெளியே உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க... சிவாஜி கணேசன் மட்டும் உள்ளே தனியா உட்கார்ந்தது இருக்கார் என்று வெளியே இருந்த கோபாலகிருஷ்ணனிடம் சென்று கேட்டேன். நீங்க எல்லாரும் சாப்பிட்டு வாங்க... எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனக் கூறிவிட்டு உள்ளே சென்று அவர் அமர்ந்திருப்பதாகக் கோபால கிருஷ்ணன் கூறினார். என்ன காரணம் என்று அவரிடம் கேட்டேன். பண்ணையார் கதாபாத்திரத்திற்காக அடர்த்தியான மீசையை அவருக்குப் பசை போட்டு ஒட்டியிருக்கிறோம். அதை எடுத்தால் அவருக்கு எரிச்சலாக இருக்கிறதாம். சாப்பிடுவதற்காக எடுத்தால் பிறகு மறுபடியும் ஒட்ட வேண்டிவரும். அதனால் எனக்குச் சாப்பாடு வேண்டாம். நான் இரவு வீட்டில் சென்று சாப்பிட்டுக்கொள்கிறேன் எனக் கூறிவிட்டார் என கோபாலகிருஷ்ணன் கூறினார்.
    எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனக் கூறிவிட்டு பட்டினியோடு இருந்து நடிக்கிறார். என்ன மனுஷன்யா இவர் என்று கோபாலகிருஷ்ணன் கூறும்போதே கண்கள் கலங்கிவிட்டன. சிவாஜி கணேசன் அர்ப்பணிப்பு பற்றி அதுவரை செவிவழிச் செய்தியாகவும் பத்திரிகைளிலும் படித்த எனக்கு, முதன்முறையாக அந்த அர்ப்பணிப்பைக் கண்கூடாகப் பார்த்தது சிவாஜி கணேசன் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. காலத்தைக் கடந்தும் திரையுலகில் சிவாஜி கணேசனின் பெயர் சாகாவரம் பெற்று நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் சிவாஜி கணேசனின் இந்த அர்ப்பணிப்புதான்.

    thanks Nakkeeran
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #969
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இந்திரா காந்தி உயிரை காப்பாற்ற துப்பாக்கியை உயரே பிடித்த சிவாஜி. "சுட்டு பொசுக்கிடுவேன் 1977 October.



    Thanks Nadigar thilagak T V
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #970
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். சென்ற வரம் பெய்த பெரு மழையின் காரணமாக சட்டென்று ஏற்பட்ட ஒரு நாள் நீண்ட மின்சார தடை அதன் காரணமாக டைப் செய்து வைத்திருந்ததை இழந்து மீண்டும் டைப் செய்ய வேண்டிய நிலைமை. அதனால் சென்ற வாரம் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டது. மன்னிக்கவும். இப்போது ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
    அந்த நாள் ஞாபகம் - பார்ட் 78
    அவன்தான் மனிதன் படம் பற்றியும் அதன் வெற்றி சாதனைகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். நடிகர் திலகத்தின் காலை அரசியல் உலக பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்.
    அவன்தான் மனிதன் நடிகர் திலகத்தின் 175வது படமாக வெளியானதும் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 175வது பட விழாவை மதுரையில் கொண்டாடுவது என்ற முடிவிற்கேற்ப மே 17,18 தேதிகளில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க அப்போது நிலவிய கடுமையான வானிலை, மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு விழா ஜூலை 5,6 தேதிகளுக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு வந்தது.
    நடிகர் திலகம் வழக்கம் போல் படப்பிடிப்பு மற்றும் இயக்க பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை சந்தித்து கொண்டேயிருந்தார். சென்னை ராயபுரத்தில் 1975 ஏப்ரலில் பெருந்தலைவர் சிலையை திறந்து வைத்தது அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான். அந்த சிலை அமைய நிதி உதவி செய்ததுடன் பா.ரா. அவர்கள் தலைமையில் அந்த சிலையையும் திறந்து வைத்தார்.
    ஒரு இடைவெளிக்கு பிறகு சித்ரா பௌர்ணமி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அந்த படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு முதல் கட்டத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. மீண்டும் தொடங்கியபோது அதை மாட்ச் செய்யும் விதமாக ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்றது.
    அதே போன்றே ரோஜாவின் ராஜா படத்தின் படப்பிடிப்பும் மீண்டும் ஆரம்பமானது. திருவனந்தபுரம் நகருக்கு அருகே கோவளம் கடற்கரை மற்றும் கொல்லம் அருகே வர்கல போன்ற இடங்களில் ஓட்றா ஓட்றா பாடலும் மற்றும் நடிகர் திலகம் மனோகர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன. இதன் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் சென்ற நடிகர் திலகத்தை வரவேற்க மிக பெரிய கூட்டம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடியிருக்க அந்த கூட்டத்தின் நடுவே நடிகர் திலகத்தை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு போலீசார் மிகுந்த பாடுபட்டனர் என்று பத்திரிக்கை செய்தி. எவ்வளவு பெரிய கூட்டம் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் நடிகர் திலகத்துடனே பயணம் செய்த அவரது காஸ்ட்யூமர் ராமகிருஷ்ணன் கூட்டத்தில் சிக்கி கீழே விழுந்து கால் விரலில் எலும்பு முறிவு ஏற்படும் அளவிற்கு கூட்டம்.
    Dr சிவா படத்துக்காக நடிகர் திலகம் மெர்காரா தலைக்காவேரி ஆகிய இடங்களுக்கு சென்றார், மலரே குறிஞ்சி மலரே பாடலும் காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் பாடலும் படமாக்கப்பட்டது என்ற செய்தியும் பத்திரிக்கை மற்றும் சிவாஜி ரசிகன் போன்ற இதழ்களிலும் வந்தது. மன்னவன் வந்தானடி படம் முடியும் தறுவாயிலிருக்கிறது என்றும் அன்பே ஆருயிரே படமும் அது போலத்தான் என்ற செய்திகளும் வந்தன. தேவன் கோவில் மணியோசை படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு மற்றும் ஏபிஎன் இயக்கிய கிருஷ்ண லீலா படத்தின் படப்பிடிப்பு பற்றியும் செய்திகள் வந்தன. ஆனால் அந்த நேரத்தில் கிருஷ்ணா லீலா படத்தில் நடிகர் திலகம் நடித்த காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றாலும் அவர் நடிக்கிறார் என்றே குறிப்பிடப்பட்டது.
    இந்திய விண்வெளித்துறையின் மிக முக்கிய மைல்கல்லான ஆர்யபட்டா விண்வெளி கலம் 1975 ஏப்ரல் 19 அன்று விண்வெளியில் செலுத்தப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விண்வெளி கலம் ஆர்யபட்டா. இப்போது நாம் நம்முடைய ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து நேரிடையாக அனுப்புகிறோம் .ஆனால் அன்றைய நாட்களில் அந்தளவிற்கு முன்னேற்றம் அடையாதிருந்த காரணத்தினால் ஆர்யபட்டா ரஷ்யாவிலிருந்து அனுப்பபட்டது. அன்றைய இந்திரா காந்தி அரசுக்கு மக்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும்படியாக இது ஒன்றுதான் அமைந்தது.
    காரணம் அன்று நாடு முழுவதும் அரசுக்கு எதிரே ஏற்பட்ட அதிருப்தி அலை. ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் பிஹாரில் ஏற்பட்ட கிளர்ச்சி, குஜராத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற மொரார்ஜியின் உண்ணாவிரதம் இவை நாடு முழுக்க எதிரொலிக்க அரசுக்கு நெருக்கடி. மொரார்ஜியின் உண்ணாவிரதம் காரணம் மத்திய அரசு குஜராத்தில் தேர்தலை அறிவித்தது. மற்றொரு முக்கிய திருப்பம் அதுவரை மன்னர் ஆட்சியில் இருந்த சிக்கிம் இந்தியாவோடு இணைவது என்ற முடிவை எடுத்து இந்தியாவின் அன்றைய 22வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
    தமிழகத்தை பொறுத்தவரை மிக மோசமான சூழல். கடுமையான மின்வெட்டு. தொழிற்ச்சாலைகளுக்கு 100% மின்வெட்டு, கடுமையான குடிநீர் பற்றாக்குறை, சென்னை நகரிலே ஒரு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் சப்ளை என்ற நிலைமை. பஸ் ஊழியர் போராட்டம் கடுமையான வறட்சி என்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. ஆனால் வழக்கம் போல் ஆளும் கட்சி லாவணி பாடிக் கொண்டிருந்தது. எப்போதும் கருணாநிதியும் சரி மற்ற திமுக தலைவர்களும் சரி (ஏன் இரண்டு கழகங்களுமே), பதில் சொல்ல முடியாத கேள்வியோ அல்லது சூழலோ வரும்போது சம்பந்தமில்லாமல் வேறு ஒரு பிரச்சனையை கொண்டு வருவார்கள். மிக பெரிய ஊழல் நடக்கிறது என்று சொல்லும்போது உங்கள் ஆட்சியில் துப்பாக்கி சூடு நடந்ததே அதுவும் ஊழலில் சேர்ந்ததுதான் என்று கருணாநிதி பதில் சொன்னார். துப்பாக்கி சூடு எப்படி ஊழல் ஆகும் என்று அதை பற்றி பேசும்போது முதலில் சொன்ன விஷயம் மக்களின் கவனத்திலிருந்து போய்விடும். இந்த வித்தையை நன்றாக செய்வார்கள். இன்னமொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் பதில் சொல்ல முடியாத கேள்வி வரும்போது கேள்வி கேட்டவரை பார்த்து 1963 ஜூன் மாதம் 7ந் தேதி வெள்ளிக்கிழமையன்று நீங்கள் இதே பிரச்சனைக்கு என்ன சொன்னீர்கள் தெரியுமா என்று சும்மாவது சொல்வார். உடனே கூட இருப்பவர்கள் அனைவரும் பாருய்யா வருஷம் மாதம் தேதி கிழமை எல்லாம் கரெக்டாக சொல்றார் பாரு. சூப்பர். அட்றா அட்றா என்று கைதட்ட விஷயம் திசை திருப்பும் முயற்சி சக்ஸஸ். உண்மையிலே அப்படி ஒன்று நடந்திருக்கவே நடந்திருக்காது. ஆனால் யார் அதையெல்லாம் சரி பார்க்க போகிறார்கள்?
    இந்த நேரத்தில் அதாவது மே முதல் வாரத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் தமிழகத்திற்கு விஜயம் செய்தார். ஜெபியின் இயக்கத்தை அதிமுக எதிர்த்துக் கொண்டிருந்தது. அதற்காகவும் இந்திரா காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற காரணத்திற்காகவும் திமுக அவருக்கு வரவேற்பு கொடுக்கும் என்று அறிவிக்க சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திமுகவினர் கூட ஜெபிக்கு கருப்பு கொடி காட்டுகிறோம் என்று இந்திரா காங்கிரஸ் மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்து அவர்களும் ரயில் நிலையத்தில் கருப்பு கொடி காட்ட அவர்கள் தாக்கப்பட்டனர். அங்கே ஒரு களேபரம் ஏற்பட்டு கலவர சூழல் உருவானது. ஜெபி திமுகவை ஆதரிக்கிறார் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் பிளான்.மிக சரியாக காய் நகர்த்தி நடத்தி காட்டினார்கள். ஆனால் ஜெபி என்ற மனிதர் அவருக்கு தமிழகத்திலே இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பேரையும் இழந்தார். சென்னை கடற்கரையில் அவர் பேசிய கூட்டத்திற்கு மிக குறைவான ஆட்களே வந்திருந்தனர். அவரை அந்த நேரம் சந்தித்து பேட்டி கண்டது துக்ளக் அந்த பேட்டியில் ஜெபி குழப்போ குழப்பமாக பதில் சொல்லியிருந்தார்.
    கருப்பு கொடி காட்டியபோது ஏற்பட்ட வன்முறையை கண்டித்து கருணாநிதிகு எதிராக கருப்பு கொடி காட்டப் போவதாக எம்ஜிஆர் அறிவித்தார். அனைவருக்கும் ஆச்சரியம். காரணம். கருப்பு கொடி காட்டி அடிவாங்கியது இந்திரா காங்கிரஸ்காரர்கள். அதற்கு ஏன் அதிமுக கருப்பு கொடி காட்ட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதன் விளைவாக செங்கல்பட்டில் கருணாநிதிக்கு கருப்பு கொடி காட்ட போன அதிமுகவினருக்கும் திமுகவினருக்கு பயங்கர மோதல் ஏற்பட்டு ரணகளம் ஆனது.அன்றைய அதிமுக எம்எலஏ எஸ் எம் துரைராஜ் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியும் வந்தது. உடனே கருணாநிதியின் அடுத்த சுற்றுப்பயணத்தின்போது பந்த் என்று அதிமுக அறிவிக்க பதிலுக்கு எம்ஜிஆர் படம் ஓடும் தியேட்டர்களுக்கு முன்பு மறியல் என்று திமுக அறிவிக்க ஒரே பதட்ட நிலை. பெருந்தலைவர் இந்த நேரத்தில் அழகாக சொன்னார். இரண்டு பேரும் சேர்ந்து தமிழ்நாட்டை கெடுத்து குட்டிசுவராக்கி விட்டார்கள். 1971ல் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னோம் மக்கள் கேட்கவில்லை. இப்போது ஒன்றுக்கு இரண்டாக ஒருவருக்கு ஒருவர் வன்முறை போராட்டம் நடத்தி மக்களின் அமைதியை அதுவும் இது போன்ற கடுமையான வறட்சி நேரத்தில் தொழில்கள் ஸ்தம்பித்து போயிருக்கும் நேரத்தில் செய்வதை எப்படி பார்த்துக் கொண்டிருப்பது என்று கேட்டார்.
    அவன்தான் மனிதன் 175வது படவிழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஜூலை 5,6 தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி அன்று காலை மதுரை ரயில் நிலையத்திலிருந்து நேராக நடிகர் திலகம் விளக்குத்தூண் சென்று அங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெருந்தலைவர் சிலையை திறந்து வைப்பார் என்றும் அந்த நிகழ்விற்கு பா.ரா அவர்கள் தலைமை வகிப்பார் என்றும் தகவல்கள் அறிவிக்கப்பட்டன. மிக பெரிய ஊர்வலம் காலையில் மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து புறப்பட்டு அனைத்து மாசி வீதிகளையும் சுற்றி தமுக்கம் மைதானத்தை அடையும் என்றும் அதன் அருகே மிக பெரிய மேடை அமைத்து அந்த மேடையில் நின்று நடிகர் திலகம் ஊர்வலத்தை பார்வையிடுவார் என்றும் தமிழ் திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பிற மொழி திரைப்படத்துறையினரும் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பாக இந்தி திரைப்பட நடிகர் சத்ருகன்சின்ஹா நடிகர் திலகத்தோடு மேடையில் நின்று ஊர்வலத்தை பார்வையிடுவார் என்று சின்ன அண்ணாமலை அறிவித்தார். மதுரை நகரில் 175 அலங்கார வளைவுகள் அமைக்கப்படும் என்றும் ஊர்வலத்தில் 175 திரைப்படங்களிலிருந்து காட்சிகள் பானர்கள் வடிவில் ஊர்திகளில் எடுத்து செல்லப்படும் என்றும் தகவல்கள் சொல்லப்பட எங்களுக்கெல்லாம் மிக பெரிய எதிர்பார்ப்பு.
    பெருந்தலைவரை பொறுத்தவரை பிப்ரவரி முதல் வாரம் காங்கிரஸ் செயற்குழுவில் இரண்டு கழகங்களுடனும் அவர்களுடன் சேர்கின்ற எந்த கட்சிகளோடும் ஓட்டும் இல்லை உறவும் இல்லை என்று தீர்மானம் போட்டுவிட்டு இடைவிடாத தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதுவும் அந்த வருடம் கோடைகாலத்தில் மிக கொடுமையான வெய்யில் நேரத்தில்கூட மக்களை சந்தித்துக் கொண்டேயிருந்தார். இரண்டு கழகங்களையும் அவற்றுக்கு துணை போக கூடிய கட்சிகளையும் மக்கள் முன் தோலுரித்து காட்டினார். வாழ்நாள் முழுக்க மக்கள் நலம் பற்றி சிந்தித்தவர் செயல்பட்டவர் அந்த நேரத்திலும் தன்னை பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக கவலைப்பட்டார். அப்போது கூட அவரை கொச்சைப்படுத்தும்விதமாக காமராஜருக்கு 72 வயதாகிவிட்டது. இப்போதும் முதல்வர் பதவி ஆசை விடவில்லை என்று ஏகடியம் பேசினார் கருணாநிதி.(அதே கருணாநிதி 92 வயதிலும் முதல்வர் பதவி ஆசை விடாமல் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக 2016ல் நின்றதையும் நமக்கு காலம் காட்டிக் கொடுத்தது). அவரின் தன்னலமற்ற பொதுத்தொண்டை மக்களின் நல்வாழ்விற்காக அவர் மேற்கொண்ட அந்த பயணத்தை முழுமையாக "வாடிய பயிருக்கு வான்முகில் காமராஜ்" என்று தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை வடிவில் வெளியிட்டது கல்கி வார இதழ்.
    இப்படியாக ஒரு கடினமான காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய அரசியலையே புரட்டி போட்ட ஒரு சம்பவம் நடந்தது. அதற்கு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு வந்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருந்தாலும் கூட இந்தியாவின் பிரதமர் விசாரணைக்கு வர வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. வாசகர்களுக்கு புரிந்திருக்கும். ஆம், இந்திரா காந்தி அவர்கள் 1971 பொது தேர்தலில் ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அவரை எதிர்த்து போட்டியிட்டிருந்த ராஜ்நாராயண் வழக்கு தொடர்ந்திருந்தார். பிரதமர் பதவியை பயன்படுத்தி அரசு ஊழியர்களையும் குறிப்பாக பிரதமர் அலுவலகத்தில் முதன்மை செயலாளராக இருந்த யஷ்பால்கபூர் போன்றவர்களை தனது தேர்தல் வேலைகளுக்கு பயன்படுத்தினார் என்பதுதான் முக்கிய குற்றசாட்டு. அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அழைத்தார் இந்திரா. இரண்டு முறை ஆஜரானார் இந்திரா. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
    1975 ஜூன் 12 வியாழக்கிழமை அந்த சரித்திர பிரசித்தி பெற்ற தீர்ப்பு வந்தது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சின்ஹா இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வழங்க அந்த நிமிடம் இந்திய அரசியல் தலைகீழாக புரட்டப்பட்டது. முதன்முறையாக ஒரு பிரதமரின் தேர்தல் வெற்றி செல்லாது என தீர்ப்பு வருகிறது. அதுவும் தவிர 6 வருடங்களுக்கு தேர்தலில் நிற்க தடை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆளும் கட்சியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு மிக பெரிய ஒரு களத்தை உருவாக்கி கொடுத்தது. ஏற்கனவே ஜெபி, மொரார்ஜி போன்றவர்கள் முன்னெடுத்த இந்திரா எதிர்ப்பு அலை நாடெங்கும் வீச துவங்கியது. இந்திராவிற்கு அப்பீல் செய்யும் உரிமை வழங்கிய அலகாபாத் நீதிமன்ற தற்காலிகமாக தீர்ப்பை நிறுத்தி வைத்தாலும் இந்திரா பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலு பெற்றுக் கொண்டேயிருந்தது. அதே நாளில்தான் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் வெளிவந்து ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் ஜனதா முன்னணி ஆட்சி அமைத்தது. ஸ்தாபன காங்கிரஸை சேர்ந்த பாபுபாய் படேல் முதல்வராக பதவியேற்றார்.
    இந்திரா பதவி விலக வேண்டும் என்ற போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முற்பட்டபோது இந்திரா அந்த முடிவை எடுத்தார். ஏற்கனவே 1971ல் பாகிஸ்தான் போரின்போது அறிவிக்கப்பட்ட அவசர நிலை அமலில் இருக்க இப்போது உள்நாட்டில் மிகுந்த குழப்பம் நிலவுவதால் அவசர நிலைமை இந்தியாவெங்கும் உடனே அமலுக்கு வருகிறது என்று 1975 ஜூன் 25 அன்று அறிவிப்பு வந்தது. எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பத்திரிக்கைகளுக்கு சென்சார் ஏற்படுத்தப்பட்டது. எந்த செய்தியாக இருந்தாலும் சென்சார் அதிகாரிகள் ஓகே சொன்னாலதான் பிரசுரமாகும் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
    ஏற்கனவே சொன்னது போல் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பெருந்தலைவர் ஆந்த பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பினார். அந்த இடைவிடாத பயணம், கடுமையான வெயில் அதோடு நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள், அவசர நிலை பிரகடனம், எதிர்க்கட்சியினர் கைது அனைத்தும் சேர்ந்து அவரை மனதளவிலும் உடலவிலும் பாதிக்க கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நேரத்திலும் தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை நடத்த சொன்னார். அவரால் வரமுடியாது என்பதால் கூட்டம் திருமலைப்பிள்ளை ரோட்டிலுள்ள அவரது வீட்டிலேயே நடந்தது. அவசர நிலை பிரகடனத்தை கண்டித்தும் அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போன்று கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை அவசர நிலை அறிவிப்பை எதிர்த்து கண்டன தீர்மானம் போட்ட ஒரே அரசியல் கட்சி ஸ்தாபன காங்கிரஸ் மட்டுமே. திமுகவின் தீர்மானத்தில் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றுதான் இருந்தது. அதன் பிறகு பெருந்தலைவரின் உடல்நிலை மீண்டும் நார்மலாகவில்லை.உடல் பலவீனம் களைப்பு அவரை விட்டு நீங்கவில்லை என்றே டாக்டர்களின் அறிக்கை கூறியது.
    மிசா சட்டத்தை பயன்படுத்தி பலரும் கைது செய்யப்படுகின்றனர் (ஜேப்பியார், முரசொலி அடியார்) என்ற செய்திகள் வந்தன. பல அரசு அலுவலகங்களிலும் பல்வேறு நடைமுறைகள் குறிப்பாக நேரத்திற்கு வருவது, அனைவரும் அலுவலக நேரம் முடியும்வரை இருப்பது என்ற நடைமுறைகளும், நியாய விலை கடைகள் ஹோட்டல்கள் போன்றவற்றில் மிக சரியான எடை, உணவு பண்டங்களுக்கு விலைப்பட்டியல் என்ற மாற்றங்களும் நிகழ ஆரம்பித்தன. ரயில்கள் நேரத்திற்கு வந்தன. வேலை நிறுத்தம் தடை செய்யப்பட்டது. பொதுவாக ஒரு ஒழுங்கு முறை உருவாவதாக தோன்றினாலும் எதிர்க்கட்சியினர் அரசை விமர்சிப்பவர்கள் என அனைவருக்கும் வாய்ப்பூட்டு என்பது நெருடலாகவே உணரப்பட்டது.
    1975 ஜூலை 11 வெள்ளி இரவு 8 மணி சுமாருக்கு இந்தியாவில் அன்றைக்கு மிக பரபரப்பாக பேசப்பட்ட சென்னை மவுண்ட் ரோடு எல் ஐ ஸி 14 மாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. மிக பெரிய விபத்தாக மாறிய அந்த தீ மறுநாள் ஜூலை 12 சனி மாலை 7 மணிக்குத்தான் அதாவது 24 மணி நேரத்திற்கு பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது. ஒரு நாள் முழுக்க சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைத்து வகை கடைகளும் கட்டிடங்களும் மூடப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அவசர நிலை அறிவிப்பிற்கு எதிராக சதி வேலையா என்ற கோணத்தில் எல்லாம் (சி பி ஐ விசாரணை) நடத்தப்பட்டது.
    இந்த காலகட்டத்தில்தான் செயற்கை மழை பொழிய வைக்கிறோம் என்ற விஞ்ஞான நாடகமும் நடைபெற்றது. வளர்ந்த நாடுகளிலேயே இதனால் பயன் இல்லை என்று கண்டுபிடித்து கைவிட்ட ஒரு சோதனையை இங்கே தமிழகத்திலே அரங்கேற்றினார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். விமானத்தில் பறந்து சென்று மேகக்கூட்டங்களின் மீது சில்வர் அயோடைடு என்ற வேதிப்பொருளை தூவினால் கருமேகங்கள் உருவாகி ஒன்று கூடி மழை பொழிவு உண்டாகும் என்பதுதான் அந்த சோதனை முயற்சி. ஆனால் பெரிய பலன்கள் எதுவும் நடக்கவில்லை. பிற்காலத்தில் இந்த செயற்கை மழை சோதனை முயற்சி சர்காரியா கமிஷனால் விசாரிக்கப்பட்டது. அரிசி பேர ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளன ப.உ ச. மீது தமிழக அரசே ஒரு விசாரணை கமிஷன் போட்டது. அந்த கமிஷனின் நடவடிக்கைகளில் கலந்து கொண்ட எதிர் கட்சியினர் தாங்கள் கேட்கும் எந்த குறிப்போ பைலோ அல்லது குறுக்கு விசாரணையோ செய்து தர அரசாங்கம் மறுப்பு தெரிவித்ததால் விசாரணை கமிஷன் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அறிவித்தன.
    நடிகர் திலகம் எப்போதும்போல் படு பிசி. அந்த காலகட்டத்தில் பத்திரிக்கைகளை படிக்கும்போது நான் பலமுறை ஆச்சர்யத்துடன்
    யோசித்திருக்கிறேன். தினத்தந்தியில் சென்னையில் ஏபிஎன் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் என்று இருக்கும். மறுநாள் நவசக்தியில் திருமணம் நடந்த அதே நாளில் பல்லடம் ஊரில் ஸ்தாபன காங்கிரஸ் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேச்சை போட்டிருப்பார்கள். அடுத்த இரண்டு நாளில் சென்னையில் ரோஜாவின் ராஜா படப்பிடிப்பு மனநல மருத்துவமனை போன்று அமைக்கப்பட்ட செட்டில் படமாக்கப்பட்டது என்ற செய்தியும், மன்னவன் வந்தானடி படத்துக்காக பாட்ச் ஒர்க் (விட்டுப்போன ஓரிரண்டு காட்சிகள்) முடித்து கொடுத்ததாக செய்தியும் வரும். அடுத்த இரண்டு நாளில் பெங்களூரில் இளைய தலைமுறை படத்தின் ஒரு அறை கொடுத்தால் தெரியும் பாடல் படமாக்கப்பட்டது என்ற நியூஸ் வரும். இதே நேரத்தில்தான் தன்னை வைத்து தொழில் முறையில் எதுவும் செய்யாவிட்டாலும் நட்பு முறையில் சாண்டோ சின்னப்பா தேவருக்கு மணிவிழாவை அந்த 1975 ஜூன் 29 அன்று தலைமையேற்று நடத்தினார் நடிகர் திலகம். அது முடிந்து மீண்டும் பாட்டும் பரதமும் செட்டில் சிவகாமி ஆட வந்தாள் படப்பிடிப்பு. உண்மையிலேயே கடுமையான உழைப்பு.
    அவசர நிலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரையில் நடத்த இருந்த 175வது படவிழா ரத்து செய்யப்படுகிறது என்பதை நடிகர் திலகமே ஒரு அறிக்கை வாயிலாக தெரிவித்தார். மிகுந்த வேதனையோடு எழுதப்பட்டிருந்த அந்த வரிகள் பலரையும் வருத்தப்பட வைத்தன. அதே போன்று தஞ்சை நகரிலே நடத்துவதாக இருந்த பெருந்தலைவரின் 73வது பிறந்த நாள் விழாவும் ரத்து செய்யப்பட்டது. அவரது பிறந்த நாள் ஜூலை 15 அன்று வீட்டில் எளிமையாக நடந்தது. பல ஊர்களிலுமிருந்தும் தொண்டர்கள் வந்தாலும் அன்றைய சூழல் மற்றும் அவரின் உடல்நிலை காரணமாக உற்சாகம் இல்லை, நடிகர் திலகம் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்தார்(என நினைவு). இந்திரா காந்தி வாழ்த்து தந்தி அனுப்பியிருந்தார்.
    இந்த நிலையில்தான் நடிகர் திலகத்தின் அடுத்த படமான மன்னவன் வந்தானடி திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று வெளியாவதாக விளம்பரம் வந்தது. எங்க மாமா மற்றும் ஞான ஒளி எடுத்த ஜேயார் மூவிஸ் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த மூன்றாவது படம். இதன் படப்பிடிப்பில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்த படத்தில்தான் மஞ்சுளா முதன் முறையாக நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் இது வெளியாவதற்கு முன் எங்கள் தங்க ராஜா என் மகன் போன்றவை வெளியாகி விட்டன. நடிகர் திலகம் பி.மாதவன் பாலமுருகன் கூட்டணி என்பதனால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அது மட்டுமல்லாமல் படம் வெளிவருவதற்கு முன்னரே வெளியான இசைத்தட்டின் வழியாகவும் ஆல் இந்தியா ரேடியோ மூலமாகவும் காதல் ராஜ்ஜியம் எனது பாடல் மிகுந்த வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் ஆகி இருந்தது.
    மதுரையில் முதன் முறையாக ப்ரியா காம்ப்ளக்ஸில் வெளியாகிறது. மட்டுமல்ல அந்த வளாகத்தில் இருந்த சினிப்ரியா மினிப்ரியா இரு திரையரங்குகளிலும் ரிலீஸ் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது ப்ரியா காம்ப்ளக்ஸ் மதுரையின் பிரெஸ்டிஜ் தியேட்டராக உருக் கொண்ட நேரம். மாதவன் படம் என்பதால் வழக்கம் போல் சனிக்கிழமை ரிலீஸ். இதற்குள்ளாக நடந்த மற்றொரு நிகழ்வு, என் கஸினுக்கு சென்னையில் வேலை கிடைத்து அவர் அங்கே சென்று விட்டார். ஆகையால் சிகர மன்றத்துடனான என்னுடைய தொடர்பு (தற்காலிகமாக) விட்டுப்போனது.
    எப்போது பார்த்தேன்? எப்படி பார்த்தேன்? படம் எப்படி இருந்தது? தொடர்ந்து அடுத்த வாரம் பேசுவோம்.
    (தொடரும்)
    அன்புடன்

    Thanks Murali Srinivasan ( Nadigarthilagam Sivaji Visirikal)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 97 of 113 FirstFirst ... 47879596979899107 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •