Results 1 to 10 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கூண்டுக்கிளி
    ➰➰➰➰➰➰
    சிவாஜிகணேசன் என்பவர் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை அல்ல.சுயமுடன் சிந்திக்கும் சுதந்திரபறவை, புதியபறவை
    ஞானப்பறவை.
    கூண்டுக்குள் அடைத்து கதவை திறந்தவுடன் வெளிவந்து சீட்டை பொறுக்கி எடுத்து ஜாதகம் எனச்சொல்லி... அதை வளப்பவருக்கு சாதகமாக்கி ஒரு நெற்மணிக்காக பொய் சொல்லும் கூண்டுக்கிளியல்ல.

    கூண்டுக்கிளி என்ற படம் நடிகர்திலகமும் மக்கள்திலகமும் இணைந்து நடித்த ஒரேபடம்.
    முன்னணியில் இருக்கும் இருபெரும் நடிகர்கள் நடித்த படம். இந்தியாவிலுள்ள அனைத்து
    முன்னணி நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடிக்க தயங்குவதில்லை. இங்குமட்டுந்தான்... ஒருவரை மிஞ்சி ஒருவர் பெயர் வாங்கிவிடுவார்களோ என்ற நடுக்கம் இன்றுவரை எல்லா கதாநாயகர்களுக்குமே இருந்துவருகிறது. ஆனால் அதில் சிவாஜி ஓர் விதிவிலக்கு.
    அவர் தொழில் மேல் கொண்ட மரியாதை... திறமையின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை.
    அதனால் கதாநாயகர் பாத்திரத்தில் மட்டுமல்ல எந்த வேடத்தையும் ஏற்க தயங்குவதில்லை. கௌரவ வேடமென்றாலும் நடிப்பார் ? எதிர்மறை (வில்லன்) பாத்திரத்தில் (Negative role) நடித்தும் பெயர் வாங்குவார்.

    இப்படித்தான் கதாநாயகன் பாத்திரத்தை எம்ஜிஆர் ஏற்க...
    எதிர்மறை பாத்திரத்தை சிவாஜி ஏற்றார். அவருக்கு எந்த அளவு நெஞ்சில் உரம் இருந்திருக்கும் ?

    "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
    வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.
    கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
    நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
    நாளில் மறப்பா ரடீ"

    இப்படியாப்பட்ட படம் ஏன் உருவாக்கவேண்டும்? வேறுகதை கிடைக்கவில்லையா ? ஏன் இல்லை? இந்தப்படத்தை பாருங்கள் புரியும்... சிவாஜி கீழே படுத்திருக்க எம்ஜிஆர் அவரை கீழே தள்ளி அழுத்துவதாக உள்ளது. ஆம் சிவாஜியை அழுத்துவதற்காவே எடுக்கப்பட்ட படம். இதற்கு சி.பி.ஐ விசாரனை தேவையில்லை.

    ஓர் மறைக்கப்பட்ட வரலாற்றை
    துருவி பார்ப்போமா ?

    அண்ணாவால் எழுதப்பட்ட
    "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்"
    என்ற நாடகத்தின் மூலம் பெரியாரால் "சிவாஜி" என்ற பட்டம் பெற்று சிவாஜிகணேசன் என
    அழைக்கப்பட்டார்.

    கலைஞர் எழுதிய பராசக்தி படம் 300 நாட்களை தொடக்கூடிய அளவிற்கு ஓடி பெறும் வெற்றியை பெற்றுத்தந்து பெரும் நடிகரானார்.
    அவரின் வளர்ச்சியை தடைபோட எந்த சக்தியாலும், பராசக்தியின் அருளை தடுத்து நிறுத்த முடியவில்லை.
    ஏற்கனவே சிவாஜி திமுகவில் அண்ணாவிற்கு அடுத்த நிலையில் பெயர் பெற்றவராய்
    விளங்கிவந்தார். இதை அண்ணாவிற்கு அடுத்த நிலையில் தான் வரவேண்டுமென நினைத்த படித்த மேதைகளின் கூட்டம் சும்மா விடுமா ? அன்றைக்குத்தான் சதிவலை பின்னப்பட்டது. சிவாஜிக்கு மாற்று சக்தியை கொண்டுவர நினைத்தது.

    சிவாஜியின் வரலாறை அறிந்த நாம்
    எம்ஜிஆரின் வரலாறையும் கொஞ்சம் பார்ப்போம்.

    இலங்கையில் கண்டியில் பிறந்த கேரளத்துகாரர் எம்ஜியார்... சிவாஜி போலவே அவரும் அவர் அண்ணன் எம்.ஜி.சாரங்கபாணியும் வறுமையின் காரணமாக நாடகத்தில் நடித்தார்கள். *1936ல் எம்.ஜி.ராமசந்தர் 'சதிலீலாவதி'எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்கள். சிவாஜி போல் முதல்படத்திலேயே கதாநாயகனாக ஆக வாய்ப்பு கிடைக்காமல் சிறுசிறு பாத்திரங்களில் நடித்து படிபடியாக முன்னேறினார். 11ஆண்டுகள் கழித்து *கலைஞரின்* கதை வசனத்தில் *1947ல் 'ராஜகுமாரி' படத்தின் மூலம் கதாநாயகனாக ஆனார்கள்.

    1952ல் கலைஞரின் வசனத்தில் பராசக்தியில் சிவாஜி அறிமுகமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவரின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமானால் எம்ஜிஆரை கொண்டுவர திட்டம் தீட்டப்பட்டது. எம்ஜிஆர் ஓர் பட்டைபோட்டு கொட்டை கட்டிய எம்ஜிஆர் காமராஜர் மேல் பற்றுள்ள காங்கிரஸ்காரர். ஆனால் பெரிதாக
    காங்கிரஸில் அவர் ஈடுபடவில்லை.

    1953ல் அண்ணாவின் முன்னணியில் எம்ஜிஆர் திமுகவில் சேர்க்கப்பட்டார். எம்ஜிஆரும் திமுகவால் வளர நினைத்தார்.

    1954ல் கூண்டுக்கிளி படம் வந்தது. ஆனால் இரண்டு ரசிகர்களிடமும் மக்களிடமும் வரவேற்பு பெறாமலே இந்தபடம் ஓடமுடியாமல் போனது.

    சிவாஜியை வில்லனாக சித்தரித்து
    எம்ஜிஆர் சிவாஜியின் நெஞ்சை
    பிடித்து அழுத்துவதாக நஞ்சு தூவப்பட்டது.

    வெள்ள நிவாரண நதி வசூல் செய்துகொடுக்க அண்ணா அவர்கள் கட்சிகாரர்களை கேட்டதினால் அதிக பணத்தை வசூல் செய்து கலைஞரிடம் கொடுத்து அண்ணாவிடம் கொடுக்கசொல்லி சென்னை படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார் சிவாஜி. ஆனால் எம்ஜிஆர் அண்ணாவிடம் நிதி கொடுக்க வைத்து முன்னணிபடுத்தப்பட்டார். அதன் பாராட்டுவிழாவிற்கு அழைப்பார்கள் தன்னை அண்ணா பாராட்டுவாரென சிவாஜி நினைத்திருந்தார்.ஆனால் அதிக வசுல் செய்து கொடுத்தும் சிவாஜியை அழைக்கப்படாமல் ஏமாற்றப்பட்டார். சிவாஜி மிக மிக வேதனை அடைந்தார். இனி ஒரு உறையில் இரண்டு கத்தி தேவையில்லை எம்ஜிஆரே இருக்கட்டும்... என்று நினைத்து மனம் நொந்த நிலையில் அவர் திருப்பதி சென்றார். பகுத்தறிவு பாசறையில் ஊறியவர்களல்வா
    கடவுள் மறுப்பு இயக்கத்தில் சேர்ந்தவர்கள் அல்லவா? கோயில் குளமெல்லாம் போகக்கூடாதல்லவா?
    திருப்பதி சென்று வந்த கணேசா...
    உனக்கு திமுக ஒரு கேடா ? கணேசா கோயிந்தா... கோயிந்தா... என்றார்கள்.

    1955வரை திமுகவில் இருந்தார் சிவாஜி. அதன்பிறகு ஒதுங்கியிருந்தார். ஆனாலும் அவர் வளர்சியை ஏதும் தடுத்து நிறுத்தமுடியவில்லை.

    அன்றைக்கு ஓடாத கூண்டுக்கிளி மறுவெளியீட்டில் நன்றாக ஓடியது. ஆனால் சிவாஜி ரசிகர்களுக்கும் எம்ஜிஆரின் ரசிகர்களுக்கும் பிரட்சனைகள் அடிக்கடி வந்தது.
    பிற்காலத்தில் அதுவே தொடர்ந்தது.

    5ஆண்டுகளுக்கு பின்னர்....
    அந்த 'கூண்டுக்கிளி' தானே கதவை திறந்து சுயமாக சிந்தித்து சுதந்திரபறவையாக, புதியவையாக ஞானபறவையாக
    1961ஆம் ஆண்டு காமராஜர் அவர்களின் தோளில் அமர்ந்து காங்கிரஸில் இணைந்தது. காமராஜர் இருக்கும்வரை அந்தப்பறவையை யாரும் துன்புறுத்தவில்லை.

    வாழ்க கூண்டுக்கிளி சிவாஜி !
    வாழ்க புதியபறவை சிவாஜி ! !
    வாழ்க ஞானபறவை சிவாஜி ! ! !

    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன் ப.நடராஜன்/:

    Thanks ப.நடராஜன் (Nadigarthilagam Sivaji Visirikal)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •