Page 92 of 113 FirstFirst ... 42829091929394102 ... LastLast
Results 911 to 920 of 1129

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #911
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் திரிசூலம் 200 வது படம்
    எதிரிகளின் நெற்றிப் பொட்டில் அடித்தார் போல 200 நாளைக் கொண்டாடியதோடு தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் வசூல் சாதனையை நிகழ்த்தியது,
    இதற்கு முன் தங்கப் பதக்கம் செய்த சாதனைகளை எதிர் கூட்டம் மறைத்து மறுத்ததுப் போல திரிசூலத்தின் வெற்றிக்கு முன்னால் நிறகவே முடியவில்லை
    வசூல் புயலில் சிக்கி காணாமல் மறைந்தார்கள்,
    மதுரையில் நடைபெற்ற திரிசூலம் வெற்றி விழா மேடையில் நடிகர் திலகத்திற்கு வெள்ளியினால் ஆன திரிசூலத்தை பரிசாக வழங்கும் ரசிகர்கள்( கொடுத்து வைத்த ரசிகர்கள்)

    siva-654.jpg

    Thanks Sigaththamilan Sivaji Sivaji
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #912
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கிரிக்கெட் விளையாட்டில் எத்தனை எத்தனை records maintain செய்கிறார்கள் தெரியுமோ?
    கிறுக்குத்தனம் அது என்று எண்ணியிருந்தேன்..
    நாளாவட்டத்தில் அந்த கிறுக்கு எனக்கும் ஒட்டி கொண்டது...
    எங்கள் வீட்டில் வாரத்தில் எத்தனை நாள் வெறும் தயிர் சாதம்,எந்த வாரத்தில் இது அதிகம் என்றெல்லாம் நானுமொரு ரெகார்ட் சார்ட் மெயின்டைன் செய்ய ஆரம்பித்தேன்..
    விளைவு?
    சில நாட்களுக்கு முன் மருத்துவர் தினம் கொண்டாட பட்டது..
    அன்று எத்தனை படங்களில் எத்தனை முறை எத்தனை வித மருத்துவராக N.T.நடித்திருந்தார் என்று கணக்கெ டுத்தேன்.....
    ஷேக்ஸ் பியரின் எத்தனை பாத்திரங்களை N.T.ஏற்று சிறப்பித்து இருக்கிறார் என்று இன்னொரு கணக்கெடுத்தேன்...
    இன்று N.T.எத்தனை படங்களில் மரணம் அடைவதாக நடித்திருக்கிறார் என்று கணக்கிட்டேன்,இன்று அந்த நினைவு எனக்கு மிகுந்திருந்தது என்பதால்...
    அத்துடன் நில்லாது பதிவும் செய்ய துணிந்தேன்...
    பொருத்தருள்வீர் புண்ணியரே!
    பிழை இருந்தால்..
    என் செயல் தவறானால்...
    சில முக்கியமான உலக தொடர்களில் top ten catches என்று காட்டுவார்கள்..
    அப்படி ஒரு பட்டியல் N.T.அவர்களின் மரண காட்சிகளில் போட முடியும் என்றாலும் மனம் துணிய வில்லை..
    ஆனால் நம்பர் ஒன் காட்சி எது?
    என்று ஒரு கேள்வி எழுமானால்,
    நண்பர்களே! விடை ஒன்றே தான்..
    சூரியன் கிழக்கில் தான் உதிப்பான் என்பது போல மாற்றம் இல்லாதது....
    அந்த கை வீசம்மா கை வீசு....மரணம்.....
    பாசமலர்கள் படத்தில்...
    வழக்கமாக ஒரு நட்சத்திர நடிகர் கதைப்படி படத்தில் இறந்து பட்டால் அந்த படம் அதோகதி தான்..
    விதி விலக்கே இருக்காது.
    ஆனால் பாசமலர்கள் படத்திற்கு லட்ச கணக்கில் மக்கள் (பால் பேதமின்றி இருப்பாலரும் )திரள் திரளாக வந்து கண்ணீர் மல்கினார்கள்...
    அந்த பாத்திரங்கள் மரணித்தன என்றே மனம் கலங்கினார்கள்..
    கண்ணீர் பெருக்கினார்கள்..
    அபிமான நட்சத்திரங்களின் மறைவாக,மரணமாக காண வில்லை..
    அந்த படத்திற்கு முன்னரே கூட கதைப்படி மரணம் அடையும் பாத்திரமாக கணக்கற்ற முறை தோன்றியிருந்தார் N.T..
    கள்வனின் காதலியில் முத்தயன் மரணம்...
    காத்தவராயனில் காதலர் இருவர் மரணம்...
    அம்பிகாபாதியிலும் அவ்விதமே.....
    உத்தம புத்திரனில் இருவரில் ஒருவர் மரணம்..
    பலே பாண்டியாவில் மூவரில் மருது என்கிற பேட்டை வாத்தியார் மரணம்..
    நவராத்திரி படத்தில் ஒன்பது பாத்திரங்களில் அந்த கொலையாளி பாத்திரம் மரணம்..
    இப்படி பல பல மரணங்கள்...
    அடுத்து என்னை பாதித்தது கர்ணனின் மரணம்...
    எத்தனை சதிகள்,சாபங்கள்,விதியின் விளையாட்டுகள் அந்த ஒரு மரணத்தில்...
    இந்திரன் கவச குண்டலங்களை யாசித்து பெற்ற சதி...
    குந்தி கர்ணனிடம் தாய் என்கிற உரிமையில்,அர்ச்சுனன் மீது நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை ஏவ கூடாது என்று வரம் பெற்ற சதி...
    சல்லியன் இனி சாரத்தியம் செய்ய மாட்டேன் என்று யுத்த பூமியில் கைவிட்டு சென்ற சதி...
    படு களத்தில் நீ கற்ற அஸ்த்திர வித்தைகள் மறந்து போகட்டும் என்கிற பரசுராமரின் சாபம்....
    யுத்த பூமியில் உன் தேர்கால் புதைய கடவது என்கிற புத்திரணை இழந்த ஒரு வேதியனின் சாபம்..
    இத்தனைக்கும் மேலாக தர்ம தேவதை,கர்ணனின் மீது பார்த்திபன் தொடுக்கும் பாணங்கள் எல்லாவற்றையும் மலர் மாலைக்களா க்கி காத்து நிற்கும் தருணத்தில் பரந்தாமனே வேதியன் உருவில் வந்து உன் தர்மத்தின் பலனை எல்லாம் தாரை வார்த்து கொடு என்று இரந்து பெற்று கர்ணனை வீழ்த்திய விபரீதம்...
    கர்ணனின் மரணம் கொடியதே..
    நடித்து காட்டினாரே நம்முடையா N.T.
    ஹும்! விலகி போங்கள்...துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை என்ற பாஞ்சை சிங்கத்தின் மரணம்......
    சரித்திரம் பேசிய மரணம் அல்லவா அது..
    பெருமிதமும் துயரமும் தீரமும் ஒரு சேர காண்பவர் நெஞ்சங்களில் பொங்கிய விந்தையை விளைவித்தவர் N.T.தானே..
    பிரெஸ்டீஜ் பத்ம நாபன்...
    பாரிஸ்டர் ரஜினிகாந்த்...
    அக்ராஹாரங்கள் மெய் சிலிர்த்து பேசின...இரு கதாப்பாத்திரங்கள் பற்றி..
    நாமும் உறைந்து போய் நின்றோம் என்பதுதானே உண்மை..இரு படங்களின் முடிவிலும்...
    வ.உ.சிதம்பரனார்,கொடி காத்த குமரன்,பகத் சிங்.....
    மூன்று தீரர்களின் தியாக மரணங்களால் தேசியம் தமிழ்நாட்டில் இன்றும் நம்மிடையே இருக்கிறதே சில துளியேனும்..காரணம் அந்த சிங்க தமிழன் அல்லவா!
    தெய்வ மகன்!
    அம்மா,உடம்பெல்லாம் வலிக்குதும்மா..
    கட்டி பிடித்து கொள்ளம்மா என்று கதறிய கண்ணனின் மரணம்...
    விளக்கனைத்து விட்டு போ,ரஹீம் என்ற தீபம் அணைந்த காட்சி...
    கர்மவீரரின்மூச்சு நிற்பதற்கு முன் பேசிய இறுதி பேச்சல்லாவா அது..
    தீபம் படத்தில் அந்த காட்சியை அத்தனை ஏடுகளும் குறிப்பிட்டு எழுதின..
    மகா கவி காளிதசனின் மரணம்...
    வாழ்வில் விரக்தியுட்றேன்,விதி முடிவு தேவதையே!
    விரைந்து நீ வா....
    இறுதியாக அடுத்த தலைமுறை நடிகர்கள் இருவருடன் நடித்த தேவர்மகன்...
    படையப்பா....
    இரண்டிலுமே கூட மரணம் தான் N.T.அவர்களுக்கு..
    சட்டென்று நிகழ்ந்து விடும் மரணம்..
    இரு படங்களிலுமே....
    மிக பெரும் சிறப்புகள் செய்ய பட வேண்டும் அவருக்கு...
    மாநில,ஒன்றிய அரசுகள் இரண்டிற்குமே இருக்கிறது அந்த பொறுப்பு...
    என்றும் N.T.அவர்களின் நினைவில்..
    V.Vino Mohan....


    Thanks Vino Mohan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #913
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஜூலை மாதத்தில் நாம் இருக்கிறோம், நடிகர்திலகத்தின் நினைவு மாதம்,
    நினைவு சிறப்பு பதிவு.
    ஒரு காலத்தில் அயல்நாட்டினர்
    தமிழகத்தை 'சிவாஜி கணேசன் தேசம்' என்றுதான் குறிப்பிடுவார்களாம் , அந்த அளவிற்கு நடிகர்திலகத்தின் நடிப்பானது கடல் கடந்த புகழினை எட்டியிருந்தது,
    என்பது வருட தமிழ் சினிமாவில்
    ஐம்பது வருடங்களுக்கு மேலும் நடிகர்திலகத்தின் ஆளுகைக்குள் இருந்து வந்தது.
    பராசக்தி- - குணசேகரன்,
    பாகப்பிரிவினை- - கன்னையா,
    வீரபாண்டிய கட்டபொம்மன்,
    கப்பலோட்டிய தமிழன்-- வ.உ.சி,
    சேரன் செங்குட்டுவன்,
    சாக்ரடீஸ்,
    ஒத்தெல்லோ,
    அசோக சக்கரவர்த்தி,
    வீர சிவாஜி,
    வாஞ்சி நாதன்,
    திருப்பூர் குமரன்,
    பாசமலர் ராஜ சேகர்,
    அப்பர்,
    சிக்கல் சண்முக சுந்தரம்,
    பாரிஸ்டர் ரஜினிகாந்த்,
    டி.எஸ்.பி.சௌத்ரி,
    பிரிஸ்டீஜ் பத்மனாபன்,
    பாவமன்னிப்பு ரஹீம்,
    ஞானஒளி ஆன்டனி,
    இத்தனை நீண்ட நடிப்புப் பட்டியல் கொண்ட உலகத்து நடிகர் ஒருவரும் இல்லை,
    காலம் அந்தக் கலைப்பெட்டகத்தை கைப்பற்றிக் கொண்டது, கண்ணாடி பெட்டகத்துக்குள் கண் மூடிக்கிடந்த நடிகர்திலகத்தைப் பார்த்து கவிஞர் வைரமுத்து சொன்னது,
    ஒரு மனிதன் இறந்து போகும் போது நான்கு பேர் இறந்து போகின்றனர்,
    ஒரு கணவன் இறந்து போகிறான்,
    ஒரு தகப்பன் இறந்து போகிறான்,
    ஒரு மாமன் இறந்து போகிறான்,
    ஒரு மைத்துனன் இறந்து போகிறான்,
    ஆனால் மாபெரும் நடிகர்திலகத்தை இழந்து பார்க்கும் போது
    சாக்ரடீஸ் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
    சேரன் செங்குட்டுவன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
    கட்டபொம்மன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்,
    ராஜ ராஜ சோழன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன்.
    ஒரு எழுபது வருட மனித வாழ்க்கையில் மூவாயிரம் வருடம் வாழ்ந்த ஒரே நடிகன்" நடிகர் திலகம்"
    மட்டுமே.
    ஒரு முகத்தில் ஓராயிரம் பாவங்கள் காட்டிய ஒப்பற்ற கலைஞர்,
    ராமனின் பாதம் பட்ட கல் அகலிசை ஆனது போல் நடிகர்திலகம் பேசிய வசனங்களால் தமிழ் மேலும் இனிமையானது.
    நாளைக்கும் சேர்த்து உணவைத் தேடுகிற எறும்பு போல,
    பாலைவனப் பயணத்தில் தன்னீரை சேமித்து வைத்துக் கொள்ளும் ஒட்டகம் போல இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கானப் புகழை சேர்த்து சென்றிருக்கிறார் நம் நடிகர்திலகம்
    நன்றி :- பிலிம் காட்டியவர்கள் என்ற நூலிலிருந்து

    Thanks Sekar Parasuram
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #914
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, " கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் எனவும் கூறினார்,
    1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
    நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
    :- கட்டுரை வெளியீடு 19/02/1986
    தினகரன் நாளிதழ்
    நன்றி:- வரலாற்றுச் சுவடுகள் நூலிலிருந்து

    Thanks Sekar Parasuram
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #915
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    அருமை நண்பர் சிவா அவர்களுக்கு,

    முதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரில் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற உங்கள் உழைப்பிற்கு சிரந்தாழ்ந்த வணக்கம்

    balakrishnan

  7. Thanks sivaa thanked for this post
    Likes senthilvel liked this post
  8. #916
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Quote Originally Posted by abkhlabhi View Post
    அருமை நண்பர் சிவா அவர்களுக்கு,

    முதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரில் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற உங்கள் உழைப்பிற்கு சிரந்தாழ்ந்த வணக்கம்

    balakrishnan
    வாழ்த்துக்கும், தங்கள் வருகைக்கும் நன்றி.
    தொடர்ந்து வாருங்கள், உங்களால் முடிந்த விடயங்களை பதிவிடுங்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #917
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சிவாஜி பற்றி ஹிந்தி நடிகர் திலீப்குமார் என்ன சொன்னார்?
    நன்றி தாய்.comJune 4, 2021
    சிவாஜி பற்றி ஹிந்தி நடிகர் திலீப்குமார் என்ன சொன்னார்?
    1993-ல் ‘தேவர் மகன்’ படத்தின் வெள்ளிவிழா சென்னையில்.
    சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள் இயக்குநர் ஷியாம் பெனகலும், இந்தியில் நடிகரான திலீப் குமாரும். தனது மனைவி சைரா பானுவுடன் வந்திருந்தார் திலீப்.
    சிறப்பு விருதுகள் வழங்குவதற்கு முன்பு தேவர் மகன் படத்திலிருந்து சில காட்சிகளைத் திரையிட்டார்கள்.
    சிவாஜிக்கு விருது வழங்குவதற்கு முன்பு உத்தமபுத்திரன் படத்திலிருந்து பிரபலமான “யாரடி நீ மோகினி” பாடலைத் திரையிட்டார்கள்.
    பாடலில் சிவாஜி காட்டிய ஸ்டைல் பலரையும் ரசிக்க வைத்தது.
    சிவாஜியின் நடிப்பில் வியந்துபோன திலீப் குமார் சிவாஜி காதில் கிசுகிசுத்துப் பேசினார்.
    பிறகு மேடையில் பேசும்போது சொன்னார் திலீப்குமார்.
    “நானும், சிவாஜியும் 50 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது அவரது தாடியைப் பார்க்கும்போது அழகான ஞானியைப் போல காட்சி தருகிறார்” என்றதும் கூட்டத்தில் ஏக கைதட்டல்.
    சிவாஜியின் முகத்தில் சின்னதாக ஒரு மெல்லிய புன்னகை.

    Thanks Raja Lakshmi (Nadigarthilakam sivaji visirigal)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #918
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    TMS க்கு சினிமாவில் முதல் ஜனரஞ்சக சந்தர்ப்பம் கொடுத்து தூக்கி விட்டதும் அவருக்கு சினிமாவில் வாழ்வு கொடுத்ததும் சிவாஜி கணேசன் தான்!
    TMS அவர்களே அதை இந்த காணொளியில் சொல்வதை கேளுங்கள்!

    கேள்விகேட்பவர் எவ்வளவுதான் சாதுரியமாக கேள்வி கேப்டதாக நினைத்து கேட்டாலும் TMS அவர்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லமல் பதில் சொல்கிறார் பாருங்கள்! Eg சிவாஜிக்கு உயிர் கொடுத்தது நீங்கள்தானே? என்று கேட்கிறார் பேட்டி காண்பவர். TMS அழுத்தம் திருத்தமாக கேட்டவரின் முகத்தில் அடித்தமாதிரி சொல்கிறார் "சிவாஜி நடித்ததினால்தான் எனக்கு புகழ் வந்தது" என்று! அதுமட்டுமல்ல வெகு தெளிவாக சொல்கிறார் அதாவது MGR க்கு பாடியதால் எனக்கு புகழ் வந்தது, ஆனால் சிவாஜிக்கு பாடிய பாடல்கள் எல்லாம் அவரதாக போய்விட்டது! ஏனென்றல் சிவாஜியின் தத்ரூப நடிப்பு, வாயசைப்புகளால், குரல் ஒற்றுமை எல்லாம் அது அவர் பாடுவதாகவே மக்கள் நினைத்தார்கள்! அடுத்து சிவாஜியே தன்னை தூக்கு தூக்கியில் படவைத்தது பற்றி சொல்கிறார். எல்லோரும் சிதம்பரம் ஜெயராமனை சிவாஜிக்கு பாட சிபாரிசு செய்தவேளையில், சிவாஜி மட்டும் "தூக்கு தூக்கி" படத்தில் முதல் மூன்று பாடல்களை OK செய்திருக்காவிட்டால் நான் வேறு வேலைக்கு (ஆடிட்டர்) போய் இருப்பேன்! சிவாஜி பாடலை கேட்ட பிறகு இசை அமைப்பாளர் , படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் எல்லோரும் சிவாஜி என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்து நிற்கையில், சிவாஜி என்னை அருகில் அழைத்து ரொம்ப நன்றாக இருக்கிறது, நீங்களே எல்லா பாடல்களையும் எனக்கு இந்த படத்தில் பாடுகிறீர்கள் என்று கணேசன் என் சினிமா வாழ்வில் விளக்கேற்றி பிள்ளயார் சுழி போட்டு கொடுத்தார்! so எனக்கு வாழ்வு கொடுத்தது சிவாஜிதான் என்று சொல்கிறார்! மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதல்லவா அதனால் சிவாஜி எனக்கு இளையவராக இருந்தாலும் அவருக்கு நான் மரியாதையை கொடுத்துதான் பேசுவேன் ஏன் என்றால், அகிலஉலகத்துல ஒரு சிறந்த நடிகரா சிவாஜி இருக்கார்னா அது நம் தமிழ் நாடு செய்த தவப்பயன், அவருக்கு நான் பாடியது எனக்கு மிக பெருமையாக இருக்கிறது அது என் பாக்கியம் என்று பூரித்து பேட்டியளிக்கிறார்! அதுமட்டுமல்ல மேலும் சொல்கிறார், நான் 10 ரூபா வாடகை வீட்டில் இருந்தேன் பழைய சைக்கிளில் தான் ஸ்டுடியோக்களுக்கு போய் கொண்டிருந்தேன் - ஆனால் தூக்கு தூக்கியில் சிவாஜி என்னை பாட approve செய்து அவருக்கு நான் பாடிய பிறகு, 10 கார் களுக்கு மேல் நான் வசித்த இடம் தேடி வந்தது என் குடிசைக்கு! இந்த பெருமை எல்லாம் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எல்லாத்துக்கும் மேல் என்னை பாடவைத்து என்படல்களை தன் பாடலாக மாற்றி தன் நடிப்பால் பாவத்தால் உயிர் கொடுத்து மக்களிடம் புகழ்பெற செய்த சிவாஜி கணேசன் அவர்களுக்கு தான் சேரும் என்று மனதார நன்றி சொல்கிறார்! ஞானஒளி பாடல் பாடியதை சிவாஜி பாராட்டியதை வெகுவாக புகழ்ந்து பெருமையாக சொல்கிறார் - அதேபோல் தனது கனவு பாடலானா உயர்ந்தமனிதன் பாடல் - அந்தநாள் ஞாபகம் .. அதில் சிவாஜியின் நடிப்பு, மற்றும் குங்குமம் படத்தில் சீர்காழி குரல் தனக்கு ஒத்துவரவில்லை என்று TMS ஐ பாடவையுங்கள் என்று சிவாஜி சிபாரிசு செய்ததையும் இங்கு நினைவு கூறுகிறார்! சந்தர்ப்பம் கிடைத்த வேளைகளில் சிவாஜி TMS க்கு உதவி இருக்கிறார் என்பது பெருமைப்படவேண்டிய விஷயம் - அது சிவாஜியின் பெருந்தன்மையை காட்டுகிறது

    Thanks Kugan Kuganathan (Nadigarthilakam sivaji visirigal)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #919
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    உத்தமபுத்திரன் படம் பற்றி சத்யா மூவிஸ் திரு ஆர்.எம் வீரப்பன் திரு எம்ஜிஆரிடம் பொய் கூறியது ஏன்?





    Thanks NadigarThilagamTV
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. #920
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ஒன்ஸ் மோர் பார்த்தப்போ சிவாஜி தான் தெரிஞ்சார்...’ - உருகும் 90’ஸ் கிட் #MyVikatan
    விகடன் வாசகர் மனோ வின் அருமையான கட்டுரை.
    கருப்பு வெள்ளை காலக்கட்டம் முதல் கலர் சினிமா வரை நடித்த அனைத்து படங்களிலும், காட்சிகளிலும், ப்ரேம்களிலும் தன்னை, தனது தனித்துவமான உடல்மொழிகளால், வசன உச்சரிப்புகளால் நிலைநிறுத்திக்கொண்ட ஒரு மாபெரும் கலைஞனை பற்றி இங்கு பகிர விரும்புகிறேன். சாதாரணமாக திரையில் பார்த்த ஒரு கலைஞரை, அவரின் ரசிகனான என் தமையனின் நேத்திரங்களின் வழியாக கண்ட தரிசனம் இது. அவரின் நடிப்பு நிச்சயம் ஒரு சரித்திரம் தான்.
    90’s கிட்ஸ் தலைமுறையில் பிறந்த என்னை முதலில் கவர்ந்தது விஜயும் அஜித்தும் தான். ரஹ்மான் தன் இசையால் நம் உணர்வுதாளங்களை தட்டி எழுப்பிய காலமது. திடீரென்று வெளிச்சம் வீசிச் செல்லும் மின்னலைப்போல்தான் எனக்கு சிவாஜி என்னும் உன்னதக்கலைஞனின் நடிப்பு அறிமுகமாகியது. முதன்முதலாக 'ஒன்ஸ் மோர்' படம் பார்த்தப் பொழுது, தனது 'சாந்தா'வுக்காக ஏங்கும் அந்தக் காட்சிதான் என்னை அவரை நோக்கி ஈர்த்த முதல் நிகழ்வு. படம் முடிந்த பின்பு 'இருவர் உள்ளம்' படம் போட மாட்டார்களா என்று காவிய புதன் விளம்பரங்களை விடாமல் பார்த்திருக்கிறேன். ஏனோ அந்த ‘சாந்தாவும்’, ‘நினைவெங்கே போகிறது? ' பாடலும் நினைவில் ஆழமாக பதிந்துவிட்டது.
    அதன்பின், ஒரு சில ஆண்டு இடைவெளியில் மறுபடியும் சிவாஜி என்றொரு கலைஞனின் மற்றொரு பரிணாமத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. கோடை விடுமுறையென அனைவரும் தாத்தா பாட்டி வீட்டில் முகாமிட்டிருந்தோம். என்ன முரண்டு செய்தாலும், மதியம் கண்டிப்பாக வீட்டினுள் அடைத்துவிடுவர் தாத்தா . அப்படிப்பட்ட வேளையில் மறுபடியும் ஒரு படம், 'பாரத விலாஸ்'. கடைசி வரை மனசாட்சியுடன் பேசிப் பேசியே மனிதர் நம்மையும் அப்படி புலம்பவைத்து விடுவார். அதுவென்னவோ, இன்று வரை புதியபறவை 'கோபாலை' விட, பாரத விலாஸ் 'கோபால்' தான் என்னுடைய பேவரைட்.
    மற்றோர் நாள் , ஏதோ ஒரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பப்பட்டு, நம்மை அப்படியே கட்டிப்போட்ட படம், "திருவிளையாடல்". அதிலும் கலர் கலர் லைட் செட்டிங்ஸ் வைத்து, "சங்கதனை கீறு கீறு எனக்கீறும் நக்கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்ல தக்கவன்?" டயலாக் கேட்டப்போது ,"எப்படி இத மனப்பாடம் பண்ணிருப்பார்?" என்று மட்டுமே சிந்தனை ஓடியது. நக்கீரர் விடவில்லையே, " சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம், சங்கை அறிந்துந்து வாழ்வோம், அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை." வசனமும், அதற்கு சிவாஜி மேல் பரவுகின்ற வெளிச்சமும், அவர் புருவத்தூக்கலும் அல்ட்ராலெஜெண்ட் லெவல்.
    அது நடுத்தரக்குடும்பங்களில் CD பிளேயர் வந்த காலம். எதாவது ஒரு படத்துக்கு CD கிடைச்சா, அது தேயும் மட்டும் அந்த படத்தை பார்க்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அப்படிதான் அறிமுகம் ஆனார்கள் ராஜராஜசோழனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்.
    தேவாரத்தை மீட்டெடுத்த பெருமானேன்னு எல்லாரும் ராஜராஜனை சொல்வதே எனக்கு அப்போதுதான் தெரியும். கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவுல தஞ்சை பெரிய கோவிலை வச்சிக்கிட்டு, ராஜராஜன் அரசாண்ட பூமியிலேயே வாழ்ந்துட்டு ராஜராஜன் பத்தி தெரியாத எங்கள் தலைமுறைக்கு அவர்தான் ராஜராஜச்சோழன். `தஞ்சை பெரியக்கோவில் வாழ்க வாழ்கவே` பாட்டுக்கேட்டாலே மனசில் வரும் ராஜராஜன் சிவாஜி தான்.
    எத்தனை பேருக்கு அந்த அரச கம்பீரம் வரும்? அக்கன் குந்தவையிடம் பணிவு, மனைவியிடம் காதல், பெருந்தச்சனிடம் சீடன், மகளுக்கு தகப்பன், ராஜதந்திரங்கள் நிறைந்த மாமன்னன் என எல்லா உடல்மொழியிலும் அவர் காட்டிய அபாரத்திறமை இருக்கிறதே! சொல்லில் மாளாது.
    திருவருட்செல்வரில் "மன்னவன் வந்தானடி" பாடல். நளினம், கம்பீரம், ஆசை அனைத்தையும் நடையிலே காட்ட முடியுமா என்ன? ஆனால் இன்றும் அவை காண்போரின் மனதில் நீங்காது. கந்தன் கருணையில் சிறு பாத்திரம் தான்.
    வீரபாகுத்தேவர். ஆனால் வசனமும் காட்சி நிகழ்வுகளும் படம் முடிந்த பின்னர் கூட நம்மை தொடரும்.
    " நீ சூரன், நான் வீரன்" என சூரனிடம் கொக்கரிப்பதாகட்டும், வெற்றிவேல் வீரவேல் என்று படை நடத்துவதாகட்டும், இறுதியில் வள்ளிக்கும் தெய்வானைக்கும் இடையில், " தாயே இப்பொழுது நீங்கள்" என்று இயல்பாக சிக்கி திண்டாடுவதாகத்தும், அவரை தவிர்க்கவே முடியாத இடத்தில் நிலைநிறுத்திக் கொண்டுவிடுவார்.
    சிவாஜி ஒரு வசந்தகாலக் கலைஞன். அதனால் தான் அவரின் வசந்த மாளிகை எப்பொழுது பார்த்தாலும் நம்மை கனக்க வைக்கின்றது. ஒரு அதீத சுயமரியாதை உள்ள பெண்ணிற்கும், அன்பினை தேடித்தேடி அலையும் பணக்கார ஆணிற்குமான காதல் எல்லா வரையறைகளையும் தாண்டிய நெகிழ்வல்லவா? சிறுப்பிராயம் முதல், அன்பிற்காக ஏங்கி, தன்னை ஒரு easy go மனிதனாக காட்டிக்கொண்ட மனிதனை எப்போது கற்பனை செய்தாலும், வசந்த மளிகை 'ஆனந்த்'தான் நம் நினைவிற்கு வருவார்.
    அன்பிற்கும், அதிகாரத்திற்குமான இடைவெளியை இட்டு நிரப்பமுடியாமல் தவிக்கும் அத்துணை நேரங்களிலும், `எங்க சின்னவர் கெட்டுபோய்ட்டாரே தவிர கெட்டவர் இல்லைம்மா` என்ற குரல் நம்மை அறியாமல் மனதிற்குள் ஒலிக்கும். `மயக்கமென்ன` பாடலில் காதலின் ஆழத்தை அந்த கண்ணாடி அறையின் சுவர் வழியே கடத்தும் அழகிற்கு கொஞ்சமும் குறையாமல், `யாருக்காக` பாடலில் கசிந்துருகும் வலியினை விரவ யாரால் இயலும்? தனக்கு தானே சரிநிகர் சமானமான வெகுஜனக்கலைஞர் அவர்.
    திரிசூலத்தில் `சுமதி` என்ற விளிப்போடு பாடும் `மலர் கொடுத்தேன்` கண்டு கண்ணீர்விடாத கண்களே இருந்திருக்க முடியாது.
    `படிக்காத மேதை` ரங்கனாக நம்மை உருக வைக்கும் அதே வேளையில் `பார் மகளே பார்` சிவலிங்கமாக கௌரவம் காட்டி தள்ளி நிற்கவும் வைப்பார்.
    தந்தைக்கு பயந்துச்சாகும் ` உயர்ந்த மனிதன்` ராஜுவும் அவர்தான். தந்தையையே அரட்டி வைக்கும் `ஊட்டி வரை உறவு` ரவியும் அவரேதான்.
    அவரே `வீரபாண்டிய கட்டபொம்மனாய்` சிம்மகர்ஜனையும் செய்வார், `புதிய பறவை` கோபாலாய் கொலையும் செய்வார்.
    `அன்புள்ள அப்பாவின்` ராஜசேகரன் மகளின் திருமணத்தில் பாடிய `மரகதவல்லிக்கு மணக்கோலம்` ஒலிக்காத திருமண வீடுகளே கிடையாது. காலங்கள் மாறினாலும் `எந்தன் வீடு கன்று இன்று எட்டி எட்டி போகிறது` வரியில் கண்ணீர் விடாத தகப்பன்களே கிடையாது. இன்றும் தேவர் மகனின் `இதெல்லாம் என்ன பெருமையா? கடமை` template Meme creator -களின் நிலைவாசல். அதிலும் அந்த படத்தின் அப்பா-பையன் உரையாடலும், அதன் கனமும், அந்த நிமிடம் நம் கண்ணில் நிறையும் நீரும், மனவோட்டத்தில் உறைந்துப்போன நொடிகள்தான்.
    எல்லா வார்த்தைகளுக்கும் அகராதியில் பொருள் இருப்பதைப்போலவே , எல்லா கதாபாத்திரங்களும், அதன் மேதமைகளோடு சரிவர அளக்கப்பட்டு, சிவாஜியினால் நிறுவப்பட்டிருக்கும். எந்த கதாபாத்திரம் எடுத்தாலும், அதனில் தன்னை தொலைத்து, கதாபாத்திரத்தை மிளிரச்செய்யும் தன்மை அவரையே சேரும். அவர் ஒரு சரித்திரம், அவரின் நடிப்பு பெரும் பாடம்.
    -மனோ

    Thanks Vasudevan Sriranmgarajan (Nadigarthilagam Fans)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 92 of 113 FirstFirst ... 42829091929394102 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •