Page 95 of 113 FirstFirst ... 45859394959697105 ... LastLast
Results 941 to 950 of 1129

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #941
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அதிரை புகாரி
    புதையல் படத்தின் வெற்றி அதில் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதி கலைஞர் கருணாநிதிக்கும் வழங்க அதை முதலீடு செய்து தான் கலைஞர் கருணாநிதி கோபாலபுரம் வீட்டையே வாங்கினாராம்.
    நெஞ்சுக்கு நீதி படித்து விட்டு பின் அவசர கருத்தை சொல்ல வாருங்கள்,
    இன்னமும் விளக்கமா சொல்கிறேன்
    குளித்தலை தேர்தல்.பிரச்சாரத்தில் இருந்த கலைஞர் கருணாநிதியிடம் நேரடியாக சென்று பணத்தை கொடுத்தார்களாம் தயாரிப்பாளர்கள்,
    ஆனால் கலைஞர் கருணாநிதியோ நான் முதன் முதலாக தேர்தலில் போட்டியிடுகிறேன், பிரச்சாரத்தில் இருப்பதால் நீங்களே அதை ஏதாகிலும்.முதலீடு செய்யுங்கள் என் சொல்லிவிட புதையல் படத் தயாரிப்பாளர்கள் கோபாலபுரம் இடத்தை சொந்தமாக்கிக் கொடுத்தார்களாம்,
    கோபாலபுரம் வீடு கிடைக்க புதையல் வெற்றி அடித்தளம் இட்டது,
    இந்த புதையல் படத் தயாரிப்பாளான கமால் பிரதர்ஸ்களுக்கு. கலைஞர் கருணாநிதி முதல்வராக பதவி வகித்த போது பல விதங்களில் உதவி செய்து முன்னேற்றம் அடையச் செய்தார் என்பது தனிக்கதை,
    இது போல நடிகர் திலகத்தின் திரைப்பட வெற்றிகள் மூலம் ஏராளமான முக்கியஸ்தர்கள் சொத்து சுகம் சேர்த்துக் கொண்டார்கள்,
    அவர்களது பட்டியல் மிக நீண்டதாகும்,

    Thanks Sekar Parasuram
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #942
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இலங்கையில் தொடர்ச்சியாக நூறுநாள் ஓடிய சிவாஜியின் ஐந்து படங்கள்!

    இலங்கையில் தமிழ்ப்பட உலகின் வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். அங்கு அவர் நடித்து தொடர்ச்சியாக வெளிவந்த ஐந்து படங்களில் இருபடங்கள் இருநூறு நாட்களும் மூன்று படங்கள் நூறுநாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடின. அவை எந்தெந்த படங்கள்? எங்கே? எப்போது வெளிவந்தன? என்பதை ஆதாரபூர்வமாகக் கூறும் காணொளி இது.





    Thanks Nilaas Thiraikoodam
    Last edited by sivaa; 12th September 2021 at 07:43 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #943
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Thanks to ntfans
    ❣️ஒரு இதழில் நம்பியார் அவர்களின் பேட்டி:
    எங்க ஊர் ராஜா படப்பிடிப்பின் போது, முதலில் நம்பியார் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து கொண்டிருந்தார்கள். அப்போது நம்பியார் இடைவேளையில் அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
    அப்போது படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி நம்பியாரை பார்த்து பணிவுடன் வணக்கம் சொன்னார். பின் மேக்கப் ரூமுக்கு சென்று விட்ட சிவாஜி,ஒரு மணி நேரம் கழித்து திரும்பினார்.
    அச்சமயம் நம்பியாரை ஒரு மிதப்புடன் கர்வத்துடன் பார்த்துக்கொண்டே சென்றார். அதை பார்த்த நம்பியாரின் நண்பர்கள் என்ன வரும்போது சிவாஜி பவ்யமாக வந்தார். இப்போது நம்மை ஒரு வித தோரணையுடன் பார்த்து செல்கிறாரே என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.
    அதற்கு நம்பியார் வரும்போது அவர் கணேசனாக வந்தார். இப்போது மேக்கப் போட்டவுடன் கதையில் உள்ள ஜமீன்தாராக மாறி செல்கிறார். அதனாலதான் நம்மை அவர் ஒரு ஜமீன்தார் பார்ப்பது போல் பார்த்தார்.
    அதனாலதான் அவரை நடிகர் திலகம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். பின்ன நம்மளையா சொல்வாங்க? என்று நம்பியார் தன் நண்பர்களிடம் கூறினாராம்.
    *நன்றி!✍����*


    Thanks Vasudevan Srirangarajan (Tamil images)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #944
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனை பல நூற்றாண்டுகளாக கொண்டாட அடித்தளம் அமைத்த நடிகர் திலகம் சிவாஜி
    இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி எதிர்வரும் பல தலைமுறையினரும் கூட கட்டபொம்மன் வரலாறு தெரிந்து கொள்ள நடிகர்திலகமே காரணம், காரணமாக இருக்கவும் போகிறார், அத்தகைய இமாலய வெற்றியை தனது நடிப்பின் மூலம் நிலை பெற செய்தார்,
    இக்காலத்தில் உள்ள முன்னணி ஹீரோக்கள் யாராவது தங்களது சொந்த பணம் 100 கோடி ரூபாயை பொதுச் சேவைக்கென செலவிட முன் வருவார்களா?
    இருபது படங்களின் சம்பளத்தை விட்டுத்தரத்தான் மனம் சம்மதிக்குமா?
    ஆனால் " நடிகர்திலகம்" விட்டுக்கொடுத்திருக்கிரார், 100 கோடி ரூபாய் அளவிற்கு தனது சொந்த பணத்தை ஒரு பொதுச் சேவைக்காக மட்டுமே செலவிட்ட நிகழ்வும் உண்டு,
    இது போல ஏராளமான பொது நலச் சேவைகள் அவ்வப்போது தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்,
    தனது சிறப்பு மிக்க நடிப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் உயிர்த்தியாகத்தை உணர்த்திய நடிகர்திலகம் அது சினிமா என்பதோடு நின்று விடக்கூடாது என்பதற்காக கட்டபொம்மன் நினைவிடம் அமைக்க உத்தேசித்தார், அதன்படி 1969 ல் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான நெல்லை மாவட்டம் கயத்தாரிலேயே 47 செண்ட் நிலைத்தை விலைக்கு வாங்கி அங்கு கட்டபொம்மன் சிலை, நினைவு மண்டபம், ஸ்தூபி, கல்வெட்டுகள் என வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைத்த யோசனைகள் கொண்டு உருவாக்கினார், 1969 ல் திட்டத்திற்கு தேவையான மதிப்பு என ரூ22 லட்சம் மதிப்பிடப்பட்டு இறுதியாக முடிக்கப்படும் தருவாயில் ரூபாய் 32 லட்சமாக நின்றது,
    இது அப்போதைய தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிடுகையில் இன்றைய மதிப்பு ரூபாய் 100 கோடியாகும். இவ்வளவு சிறப்பாக
    முடிக்கப்பட்ட நினைவு மண்டபத்தை 10-07-1970 ல் திறந்து வைக்க அப்போதைய இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களை விழாக்குழு தலைவராக்கி நமது பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறக்கப்பட மிகப்பெரிய விழாவாக நடத்தினார் நடிகர்திலகம்,
    இத்தனைக்கும் அப்போது தமிழக அரசு திமுக அரசாகும், முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்து வந்தார்,
    அந்த விழாவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் திறந்த ஜீப் மீது நின்றபடி " சிவாஜி ரசிகர்கள் மன்றம் " நீண்ட தூரம் நின்று அளித்த மரியாதையை பெருமையோடு ஏற்றுக் கொணடார்.

    Thanks Sekar Parasuram
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #945
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தமிழ் சினிமாவின் பொற்காலம்...
    1000 கோடி என்ன? 5000கோடி என்ன ?எத்தனையோ கோடிகளில் எந்த சரித்திர படமானாலும் இனி எடுக்கலாம்.ஆனால் 100 வருடங்கள் ஆனாலும் ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதலில் பேசப்படுவான்.
    அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை
    ஆன்ட்ராட்ய்டு காலத்தில் என்ன? அடுத்த நூற்றாண்டில் தேடினாலும் பாசமலர் தான்
    முதலில் வரும்.
    உனக்கேன் அக்கறை? என்று ஆயிரம் பேனா முனைகள் சமுக சாடல்களை எழுதியிருந்தாலும் ,இனி எழுதினாலும் அதைப் பேசிய குணசேகரன் கதாபாத்திரம் தான் மின்னலாய் தெரியும்.
    ஒரு படத்தின் 90 வேடங்களாயினும், அதை ஒருவரே ஏற்று செய்தாலும், ஒன்பது வேட நவராத்திரி நடிப்புக்கு ஈடு செய்ய எவராலும் முடியாது.
    அடுத்த நூற்றாண்டு அதி நவீன கணிணியும் , தெய்வமகனை ஆராய்ச்சி செய்தால் ,
    அது கூட " ERROR " என்று தான் காட்டும்.
    இப்போது பிறக்கும் ஒரு குழந்தை அதன் 100 வது வயதில் தேசபக்தி காவியங்களை
    சொல்ல விரும்பினால் அப்போதும் நடிகர்திலகத்தின் படங்களைத்தான் அது
    சொல்ல வேண்டியது வரும்.
    எந்த வரிசையில் படங்கள் வந்தாலும் ஓர் வரிசையில் வந்த நடிகர்திலகத்தின் "பா "
    வரிசை படங்கள் சொல்லிய பண்பு பண்பாடு பாசம் பந்தம் பரிவு பக்தி பாவம் பரோபகாரம் படிப்பினை பகுத்தறிவை எளிமையாக ,அழகாக எடுத்துச் சொல்ல எந்த டிஜிட்டலும் உத்திகளும் உதவாது.
    மனிதக்குரலில் இடிமுழக்கம் என்று திரைக்கலையை ஆய்வு செய்தால் சிவாஜியின் படங்களே வரிசை கட்டி வரும்.
    சிங்கமது பேசும் சக்தி பெற்று வீர கர்ஜனை செய்யும் போது அது கர்ணனின் குரலை கேட்டால் சப்தநாடியும் ஒடுங்கும்.
    நூற்றாண்டு நிகழ்வுகளின் வளர்ச்சி நம்மை நிலாவுக்கு புலம் பெயர வைத்தாலும் "அந்தநாள் ஞாபகம் "
    என்பதை தமிழன் நினைக்கும் போது உயர்ந்த மனிதனின் பாடலலைத்தான் நெஞ்சம் நினைக்கும்.
    இன்னும் ஆயிரம் வருடங்கள் கழிந்து ,
    ராஜ ராஜ சோழனின் 2000 வது பிறந்த நாள் கொண்டாடப்படும் போதும் நடிகர்திலகத்தின் திருமுகம் தான் நினைவுக்கு வரும்.
    இந்தியாவின் 500 வது சுதந்திர தினவிழாவானாலும், 1000 வது சுதந்திர தின விழாவானாலும் தொலைக்காட்சிகள் தேசபக்தி பாடலாக "இந்திய நாடு என் வீடு" என்ற பாடலை தான் ஒளிபரப்பும்.
    காலங்கள் கரைக்கும் காட்டு இரைச்சல் இசைகளினூடே, பட்டிக்காட்டு ராகங்களில் "கேட்டுக்கோடி உருமிமேளம் "பாடலுக்கு என்றும் தனி மதிப்பிருக்கும் .
    வெஸ்டர்ன் காதலும்,வெட்கம் மறந்த காதலும் சமுகத்தின் கலாச்சாரமாய் மாறும் , இன்னும் சில காலங்களில்.
    அப்போதும் வசந்த மாளிகையை பார்ப்பவன் வியப்பான்.
    ரசிகனை உருவாக்கும் சக்தி எப்போதும்
    வசந்தமாளிகைக்கு உண்டு.
    அடுத்த நூற்றாண்டில் மட்டுமல்ல ,அனைத்து தலை முறையிலும் தலை சிறந்த கலைஞன் என்ற பட்டம் நடிகர்திலகம் சிவாஜிக்கு இருக்கும்.
    60 வயது காதலை 20 வயதும் ரசிக்கும் படமாக ஒரே ஒரு படம்தான் எக்காலத்திலும் நினைக்கப்படும்.அது முதல் மரியாதை.
    உலகின் பாதியை வியப்படைய வைத்த ஒரு பிராந்திய மொழி கலைஞன் என்ற கேள்வி வருமானால் அது சிவாஜி என்ற ஓரே ஒரு பெயரோடு முற்றுப் பெற்று விடும்.
    இறக்கை கட்டிக் கொண்டு மனிதன் பறக்கும் விஞ்ஞான வளர்ச்சி தோன்றினாலும் ,திருவிழாக்களிலும் , கோவில் விழாக்களிலும் , திருவிளையாடல் ஒலிச்சித்திரம் தான்
    ஒலிக்கும்.
    BIG BANG எனப்படும் பெருவெடிப்பை தமிழ்சினிமாவில் எடுத்துக் கொள்ள வேண்டுமானால் 1952 ஆம் வருடத்தைதான் சொல்ல வேண்டும்.
    சினிமாவே பார்க்காதவர்களையும் பார்க்க வைத்ததில் அதிக ஆற்றல் படைத்த கலைஞர்களின்புள்ளி விபரங்களை எடுத்தோமானால் அதில் நடிகர்திலகமே முதலில் இருப்பார்.
    ட்ரெண்ட் செட்டிங் எனப்படும் இப்பொழுது வெளியாகும் ஒரு திரைப்பாடல் உதாரணமாக 100 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தாலும், இன்று பார்த்த நடிகர்திலகத்தின் திரைப்பாடல் 2099 வருடத்திலும் பார்க்கப்படும்.உண்மையான ட்ரெண்ட் செட்டிங் என்று இதை தான்கூற வேண்டும்.
    ஒரு சரித்திரம் இதோடு முடிந்து விட்டது என்று தில்லானா மோகனாம்பாளை சொல்ல வேண்டியது வரும்.எந்த வகையிலே என்றால் தமிழனின் சிறந்த கலாச்சார படமாக இதை விட இனி எதுவும் எடுக்க முடியாது என்பதில்தான்.
    காவல் துறைக்கு பெருமை சேர்த்த படங்களாக பலவற்றை சொல்வதுண்டு.ஆனால் ,காவல்துறையே
    தங்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக தங்கப்பதக்கத்தை தான் சொல்லும்.
    மேலும் ,காவல்துறை தன் கொள்கை விளக்க படமாக சொல்ல விரும்பினால் தங்கப்பதக்கத்தை சொல்வதில் தான் பெருமை கொள்ளும்.
    காவல்துறை அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும் என்று பாடமெடுக்க விரும்பினால், S.P.சௌத்ரீயை முன்னுதாரணமாக காட்டி
    பாடமெடுத்தால் காவல்துறையின் பாடச்சுமை குறையும்.
    பாடல்களே இல்லாத படங்கள் புதிது புதிதாய் எந்த நாளும் வரலாம்.பாடல்களே படங்களாக வந்த காலத்தில் வந்த "அந்த நாளை"ப் போல் புதுமையாகுமா? .
    ஆயிரக்கணக்கான கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு நூறு வருடங்கள் கடந்த பின்னும், இணையங்களில் தமிழ் கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் பற்றிய 'சர்வே ' எடுக்கப்படுமானால் அதிகமாக நடிகர்திலகத்தின் திரைப்படங்களே இருக்கும்.
    தேசபக்தி சார்ந்த ஆவண திரைப்படங்களாக இந்தியநாடு பத்திரப்படுத்த விரும்பினால் நடிகர்திலகத்தின் பங்களிப்பில் உருவான திரைப்படங்கள் தான் அதற்கு கை கொடுக்கும்.
    மேக்கப் கலை வளர்ச்சியை வைத்து ஒரு டாக்குமென்டரி தயாரிக்கும் போது, கடந்தகாலங்களில் மேக்கப் எப்படி செய்யப்பட்டது என்று ஆராயப்பட்டால்
    40, 50 வருடங்களுக்கு முன்பு வந்த குழந்தைகள் கண்ட குடியரசு, நான் வணங்கும் தெய்வம், திருவருட்செல்வர் படங்களை பார்த்தால் ,இன்றைய வளர்ச்சி
    கொடுத்த பிரமிப்பை விட அது அதிகமாகவே இருக்கும்.
    டிஜிட்டல் தொழில் நுட்ப உத்திகளும், வளர்ச்சிகளும் அதிமாகிக் கொண்டே இருக்கலாம்.
    எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிகள் வளர்ந்து கொண்டிருந்தாலும்,
    நடிப்பை தேட மட்டும் நடிகர்திலகமே பயன் தருவார்.
    நன்றி..
    செந்தில்வேல் சிவராஜ்.

    siva-796.jpg

    Thanks Senthilvel Sivaraj (Sivaji Group)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #946
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    அக்டோபர் 1
    நடிகர்திலகம்,
    மக்கள் தலைவர்,
    சிவாஜி அவர்களின்...
    பிறந்தநாளை முன்னிட்டு...
    மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
    ஸ்டைல் மன்னனின்
    ராஜா...

    siva-798.jpg

    Thanks Sundar Rajan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #947
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    மத்திய சென்னையை மிரளச் செய்த சிவாஜியின் திரைப்படங்கள் #nilaasthiraikkoodam

    தமிழ்த் திரையுலகில் தன்னிகரற்ற நடிப்பாற்றல் மிக்க கலைஞர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். நடிப்பில் மட்டுமல்லாது வெற்றித் திரைப்படங்கள் வழங்கியதிலும் அவருக்கு நிகர் அவரே. அவரது படங்கள் சென்னையில் பெற்ற வெற்றியைப்பற்றி முன்பு வெளியிட்டிருந்த வட சென்னை சாதனைகளைப் பற்றிய காணொளியைத் தொடர்ந்து நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மத்திய சென்னையில் ஓடிய விபரங்கள் அடங்கிய தொகுப்புதான் இக்காணொளி.
    குறிப்பு : பதிவில் இடம்பெற்றுள்ள போஸ்டர்களில் தவறுதலாக நிகழ்ந்துள்ள ஒருசில எழுத்து/எண் பிழைகளை அன்பர்கள் பொறுத்தருள்க. நன்றி.





    மேலே உள்ள குறியிட்டை கிளிக் பண்ணி வீடியோவை பார்க்கலாம்


    Thanks nilaasthiraikkoodam
    Last edited by sivaa; 21st September 2021 at 07:55 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #948
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இன்றும் சாதனை படைத்த சிவாஜி...
    அன்பு இதயங்களே,
    இன்றைய Google நுழைவு பக்கத்தில்,
    நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு....
    அம்மனின் படங்களை வைத்துள்ளது...
    உலக தலைவர்கள் பிறந்தநாளில் அவர்களின் படங்களை வைக்கும் Google,
    இந்த ஆண்டு நடிகர்திலகத்தின் படத்தை வைத்துள்ளது.
    மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்களின் வரிசையில் நடிகர்திலகத்தின் படத்தை வைத்திருப்பது....
    இன்றும், என்றும் மக்கள் மனதில் நடிகர்திலகம் இருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை...
    Google க்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    siva-824.jpg

    Thanks Sundar rajan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #949
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சிறப்புக் கட்டுரை:
    .................................................. ...........................................
    இட்டு நிரப்ப முடியாத ‘#சிவாஜித்தனம்’
    """""""""""""""""""""""""""""""""""""""""""""""""" ""
    ம.தொல்காப்பியன்
    எனது குழந்தை வயதில் சம்பூர்ண ராமாயணம் என்ற புராணப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரபல தென்னிந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்திருந்த படம் அது. எங்கள் ஊர் ‘சீத்தாலக்ஸ்மி’ டூரிங் டாக்கீசில் மூன்றரை மணி நேரம் ஓடும். ஒரு வாரம் முழுதும் அந்தப் படத்தைக் காணக் குடும்பம் குடும்பமாக ஊரே திரண்டு செல்வோம்.
    படம் மிக மெதுவாக நகரும். மெது மெதுவான காட்சி அமைப்புகள், அமைதி தவழும் முக பாவனைகள், சோகம் பொங்கும் பாத்திரப் படைப்புகள் என்று படம் அலுப்பூட்டும். பார்வையாளர்கள் எல்லோரும் தூங்கி வழிவார்கள். சிலர் படுத்து உறங்குவதையும் காணலாம். இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட காட்சியில் அப்படியே தலை கீழாய் மாறிவிடும்.
    விழித்துக்கொண்டிருப்பவர் அந்தக் காட்சி வருவதை முன்னிட்டு மற்றவர்களை உஷார்படுத்துவார். வேறு சிலரோ திடீரென விழித்துக்கொண்டு பரபரப்படைவார்கள். இந்தக் களேபரங்களுக்கு இடையிலும் தூங்கிப் போனவர்கள் மறுநாள் காலையில், தான் எழுப்பப் படவில்லை என்பதற்காக மற்றவர்களோடு சண்டையில் இறங்குவார்கள்.
    விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பரதனாகத் தோன்றும் அந்தச் சில காட்சிகளுக்காகத்தான் இத்தனை அலப்பறைகள்.
    “அண்ணா! அண்ணா! என் அண்ணன் எங்கே? என் அண்ணன் ராமன் எங்கே? அண்ணா...”
    என்று பதறியபடி பரதனாக சிவாஜி தோன்றும் அந்த காட்சியின்போது விழித்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அத்தனை கூட்டமும் இத்தனை சலசலப்புகளுக்கு உள்ளாகியது.
    சிவாஜி திரையில் தோன்றியதும் அதுவரை தூங்கி வழிந்த, சோர்ந்து கிடந்த பார்வையாளர்கள் திடீர் விழிப்படைவதைக் கண்டு நான் திகைப்பது வழக்கம். பரதனின் முக்கியக் காட்சிகள் கடந்ததும் கூட்டம் மெல்ல மெல்லக் கொட்டகையை விட்டு வெளியேறும். என்ன நடந்தது?
    சம்பூர்ண ராமாயணத்தில் பங்கு பெற்றிருந்த என்.டி. ராமாராவ் உட்பட அத்தனை நடிகர்களையும் வென்று வீழ்த்திக் காட்டியிருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவ்வளவுதான் வேறொன்றுமில்லை!.
    வெற்றி வாகை;
    எனது அனுபவம் அத்தோடு முடிந்து விடவில்லை
    பாத்தால் பசி தீரும் படத்தில் ஜெமினி கணேசனை வென்றார். பச்சை விளக்கு போன்ற படங்களில் எஸ்.எஸ்.ஆரை வீழ்த்தினார். சபாஷ் மீனாவில் சந்திரபாபுவை வென்றார். பல்வேறு படங்களில் முத்துராமன், ஏவிஎம் ராஜன், நம்பியார், நாகேஷ், போன்ற அன்றைய காலத்து ஜாம்பவான்கள் அனைவரையும் வெற்றி கண்டார் சிவாஜி கணேசன்.
    ‘வியட்னாம் வீடு’வில் பத்மினியை வென்று காட்டினார். பாச மலர் படத்தில் சாவித்திரியைத் தோற்கடித்தார். மனோகராவில் கண்ணாம்பாவை ஜெயித்தார். சரஸ்வதி சபதம் படத்தில் கே.ஆர். விஜயாவைத் தோற்கடித்தார். பல்வேறு படங்களில் மனோரமாவை வென்று வீசி இருக்கிறார்.
    இவை எல்லாவற்றையும் விட மேலான வெற்றியாக நான் காண்பது, அவர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் பின் தள்ளியதைத்தான்!
    ஆம்! சிவாஜி கணேசனால் நடிக மேதை என்று மிக உயர்வாக வர்ணிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ராதா. மற்றவர் டிஎஸ் பாலையா. அத்தகைய ராதாவை பலே பாண்டியா உட்பட, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் அவரை விஞ்சிச் சென்று சாதனை படைத்தவர் சிவாஜி கணேசன்.
    மகா நடிகர்கள் என்று கருதப்பட்ட டி.எஸ்.பாலையா, சகஸ்ரநாமம், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.ரங்காராவ், பி.நாகைய்யா போன்ற பெரும் நடிகர்களை எல்லாம் பின்வாங்க வைத்தவர் சிவாஜி கணேசன்!
    பழம்பெரும் நடிகர்களை மட்டும் அல்லாமல் பின்னால் தான் சந்திக்க நேர்ந்த நவீன நடிகர்களை எல்லாம் கூட தனது நடிப்பால் ஊதித் தள்ளினார் நடிகர் திலகம்.
    வென்றார், வீழ்த்தினார், தோற்கடித்தார், பின்வாங்கச் செய்தார், ஊதித் தள்ளினார் போன்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கான விளக்கத்தை நீங்கள் கோரலாம். உங்களுக்கு சிறு அவகாசம் அளிக்க விரும்புகிறேன். ஒரு பாடல் காட்சியைப் பார்த்துவிட்டுப் பிறகு தொடரலாம்.
    ஊதித் தள்ளினார்;
    ‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’ என்ற பாடல் காட்சியைப் பார்க்க உங்களை அழைக்கிறேன். படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் அது.
    ‘பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை’, ‘நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை’ போன்ற உலகத் தரமான மேலும் இரண்டு பாடல்கள் இருந்த போதும் இந்தப் பாடலை குறிப்பாக நான் சொல்வதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது.
    இந்தப் பாடலில் சிவாஜியோடு பாலாஜியும் சேர்ந்து நடித்திருப்பார். பாடலின் மெட்டு சற்று மெதுவான தொனியில் ஒலிக்கும். பாலாஜிக்குப் பாடிய பி.பி. ஸ்ரீநிவாஸோ மென் தொனிக் கொண்டவர். பண்ணை ஆட்களுடன் சேர்ந்து கொண்டாட்ட மோஸ்தரில் பாடப்பட்ட அந்த பாடல் சற்றும் பொருத்தமில்லாமல் வேகம் குறைந்திருக்கும். ஆனால் நடிகர் திலகம் அந்தத் தொய்வுகள் ஏதும் தெரியாமல் அப்படியே மாற்றிக் காண்பிப்பார்.
    தனக்கே உரிய பாணியில் அங்கு இல்லாத ஆனால் இருந்திருக்க வேண்டிய ஓர் உணர்ச்சி வேகத்தைத் தனது உடம்பிலும் உள்ளத்திலும் கொண்டு வந்து அந்த சூழலையே ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொடுத்துவிடுவார்.
    ஒரு நடிகனால் எத்தகைய மோசமான நடிப்புச் சூழலையும் தூக்கி நிறுத்திக் காட்ட முடியும் என்பதற்கு அந்தப் பாடல் காட்சி ஒரு சிறந்த உதாரணம்.
    மெட்டு மெதுத்தன்மை வாய்ந்தது என்றால் நடிகர் பாலாஜி அதை விடவும் மெதுவானவர். இந்த இரண்டு வேகத்தடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு அந்தக் காட்சியையே குதூகலப்படுத்தியிருப்பார் சிவாஜி. ஒரு நடிகன் ஒரு பாடல் காட்சியை எப்படி ஆளுமைப்படுத்த முடியும் என்பதற்கு ஓர் இலக்கணச் சான்றாகத் திகழ்கிறது இந்த பாடல் காட்சி.
    ‘ஊதித் தள்ளினார்’ என்ற எனது சொற்களுக்கான காட்சி வடிவத்தை இப்போது கண்டீர்கள். இது ஒரு சிறு பொறி. அவ்வளவுதான்.
    இந்தப் பாடல் காட்சியில் ஒரு புதிரையும் நீங்கள் கண்டீர்கள். ஆம்! அது புதிர்தான். வேறு நடிகர்களுக்கெல்லாம் புரியாத புதிர் அது. அந்தப் பாடலில் வந்த பாத்திரத்துக்கு ஒரு ஸ்டைலை உருவாக்கி இருப்பார் சிவாஜி கணேசன். பாடலில் மட்டுமல்லாது படம் முழுக்க அந்த ஸ்டைல் ஊடாடி நின்று அசத்தியிருக்கும்.
    உற்பத்தியாகும் ஸ்டைல்;
    தாம் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய புதிய ஸ்டைலை உருவாக்கி அளிப்பது சிவாஜியின் நடிப்புச் சூத்திரத்தின் பிரதான அம்சம். சித்தரிக்கப்பட்ட பாத்திரத்தின் சுபாவத்துக்கு மேலும் மெருகூட்டுவதாக அந்த ஸ்டைல் அமைந்து சிறப்பூட்டும்.
    சிவாஜி தனது உடம்பில் ஸ்டலை உற்பத்தி செய்கிறார். ஏதேனும் தனித்த ஸ்டைல் இல்லை என்றால் ஒரு நடிகன் ரசிகனுக்குத் தேவைப்பட மாட்டான். சிவாஜியின் உடல் மொழி வேறாக இருந்தபோதும் அவர் தனக்கே உரிய கற்பனையின் துணை கொண்டு கேரக்டரின் சுபாவங்களுக்கேற்ற புதிய ஸ்டைலைத் தனது உடலில் உருவாக்கிக் காட்டி ரசிகனைப் பரவசப்படுத்திவிடுகிறார்.
    இல்லாத ஒன்றை உருவாக்குவதுதானே திறமையினும் திறமை. தனது உடம்பில் இல்லாத ஸ்டைலைத் தேவை அறிந்து உருவாக்கித் தரும் திறமையினால்தான் சிவாஜி கணேசன் அனைவரையும் விஞ்சிச் செல்கிறார். எவராலும் வெல்ல முடியாத நிலையை அடைந்துவிடுகிறார்.
    மிகை நடிப்பா?
    சிவாஜியின் நடிப்பைப் பற்றிப் பேசும்போதெல்லாம் மிகை நடிப்பு என்ற வாளால் விமர்சக உலகம் அவரைக் கீற ஓடி வருவதை நான் காண்கிறேன். நான் அவர்களோடு ஒத்துப்போகிறேன் என்பதை எடுத்த எடுப்பிலேயே ஒத்துக்கொள்கிறேன்.
    அதே நேரத்தில்,
    குற்றம் சாட்டுவதோடு நின்றுவிட்ட, அதற்கான காரணங்களைத் தேடிக் காண விழையாத, அவர்களின் பொறுப்பற்ற செயலை நான் வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறேன்..
    சிவாஜியின் மிகை நடிப்புக்கு இரண்டு முதன்மையான காரணங்களை நான் பார்க்கிறேன்.
    ஒன்று,
    அந்தக் காலத்துப் பார்வையாளர்களின் புரிந்துகொள்ளும் ஆற்றலைச் சார்ந்தது.
    இரண்டாவது,
    சிவாஜியை இயக்கிய அவரது இயக்குநர்களின் திறன் சார்ந்தது.
    முதலாவது காரணத்தை நான் இங்கு விரிவாகப் பேசப்போவது இல்லை. அது அனைவரும் அறிந்த பொதுவான ஒன்றே. காலத்தை வெல்வதற்கு மனிதன் இன்னும் கற்கவில்லை என்ற உண்மையில் அதை மூழ்கடித்துவிடலாம்.
    என்னைப் பொருத்தவரை இரண்டாவது காரணம் மிகவும் முக்கியமானது.
    சிவாஜியின் இயக்குனர்கள் பெரும்பாலும் அவரது ரசிகர்களாகவே இருந்தனர். அவர்கள் சிவாஜியை ஓர் ஒப்பற்ற அதிசயமாகப் பார்த்து வியந்து நின்றவர்கள். அவர்கள் விரிந்து பரந்த சினிமா பார்வை கொண்டவர்கள் அல்ல. உலக சினிமா குறித்தோ மேதமை மிக்க உலக நடிகர்களின் கேமிரா செயல்பாடுகள் குறித்தோ எந்த வித ஞானமும் இல்லாதவர்கள். சிவாஜியின் இத்தகைய இயக்குனர்கள் சிவாஜியைக் குறிப்பிட்ட வரையறைக்குள் கட்டுப்படுத்தும் வல்லமை அற்றவர்களாக இருந்தனர். சிவாஜியிடமிருந்து திரண்டு வரும் நடிப்பைத் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் திறனற்று நின்றார்கள்
    சித்தரிக்கப்பட்ட கேரக்டர்களுக்கு உயிர் கொடுப்பதற்காகப் புதிய ஸ்டைல்களை உருவாக்கி அளிக்கும் சிவாஜியின் ஆதார ஆற்றலின் வேகத்தைத் தேவை அறிந்து கட்டுப்படுத்தும் திராணி அற்றவர்களாக, அசந்து போய் நின்றிருந்த அவர்களை நான் காட்சிதோறும் காட்சிதோறும், ஷாட்தோறும் ஷாட்தோறும் அவதானித்து வந்திருக்கிறேன்.
    சிவாஜியிடம் ஆங்காங்கே தெரியும் மிகை நடிப்புக்கு அவர் மட்டுமே காரணம் அல்ல.
    இதே விமர்சகர்கள் ‘முதல் மரியாதை’யைப் பார்த்துக் கை கட்டி வாய் பொத்தி நிற்பதை எண்ணிப் பாருங்கள். எங்கே போயிற்று அவர்களது மிகை நடிப்பு எனும் குற்றச்சாட்டு!
    சிவாஜி தனது ஆயுள் முழுதுமான சினிமா வரலாற்றில் நூறு சதவிகித சினிமா மொழியில் உருவான எத்தனை படங்களில் தோன்றி இருக்கிறார் என நினைக்கிறீர்கள்?
    அவருக்கு அத்தகைய வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்தன. ஆயினும் அவர் நடித்த அனைத்துப் படங்களிலும் அவர் தரமான சினிமா மொழியைக் கையாண்டிருப்பதைக் காணலாம். சினிமா மொழியும் நாடகத்தனங்களும் மாறி மாறி இடம் பெற்றிருக்கும்.
    அவரது இயக்குனர்கள் சினிமா மொழியைக் கையாண்டவர்கள் இல்லை. அவர் மட்டுமே தனி ஒருவராக முயன்றிருக்கிறார்.
    கேரக்டரின் உணர்ச்சி வேகத்துக்கு ஏற்றாற்போல நடை எப்படி அமைய வேண்டும், பார்வை எப்படி இருக்க வேண்டும் குரல் எந்த தொனியில் ஒலிக்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானித்துக்கொள்கிறார். அந்த கேரக்டரின் பிறவிக் குணங்களோடு தனது உடல் மொழியை இயங்கவிடுகிறார். இது சிவாஜியின் நடிப்புச் சூத்திரம்.
    சிவாஜியின் கற்பனைத் திறன் அலாதியானது. இணையற்றது. கேரக்டரின் சுபாவத்தைப் பெருக்குவது குறித்த அவரது கற்பனைத் திறன்தான் சிவாஜியின் ஜீவ ரசம். சிவாஜியைப் பிழிந்து எடுத்தால் அவரிடம் மீதமிருக்கும் ‘சிவாஜித்தனம்’ என்பது அவரது கற்பனையாகத்தான் இருக்கும்.
    தன் இயக்குநர்கள் அளித்த நாடக வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு சிறந்த சினிமாவுக்கான முதல் தர நடிப்பை வெளியிட்டிருக்கிறார் சிவாஜி.
    ஒரு முழுமையான சினிமாவில் நடிப்பதற்கு அவர் 1986வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வருடத்தில்தான் பாரதிராஜா தனது முதல் மரியாதையைக் கொடுத்தார். பாரதிராஜாவின் வழக்கமான குறுக்கீடுகள் இதிலும் இருந்தபோதும் சிவாஜியின் ஒப்பிட முடியாத பங்களிப்பால் 'முதல் மரியாதை' சினிமா, தமிழ் சினிமாவின் மதிப்பு மிக்க பொக்கிஷமாக ஜொலிக்கிறது.
    (‘சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஓர் சமர்’என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. கட்டுரையாசிரியர் ம. தொல்காப்பியன், இயக்குநர், எழுத்தாளர்.)
    இன்று,
    அக். 1, 2021 சனிக்கிழமை,
    அய்யனின் பிறந்த நாள்
    ம.தொல்காப்பியன்

    Thanks ma Tholkappiyan (Sivaji Group)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #950
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகம் #சிவாஜி கணேசன் #பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு #கூகுள் தேடு பொறியில் #டூடுலை உருவாக்கிய #பெங்களூரைச் சேர்ந்த ஓவிய கலைஞர் #திரு_நூபூர்_ராஜேஷ்_சோக்ஸியால் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்��

    siva-830.jpg

    Thanks sankar (nadigathilakam fans)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 95 of 113 FirstFirst ... 45859394959697105 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •