Results 1 to 10 of 1139

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    கிரிக்கெட் விளையாட்டில் எத்தனை எத்தனை records maintain செய்கிறார்கள் தெரியுமோ?
    கிறுக்குத்தனம் அது என்று எண்ணியிருந்தேன்..
    நாளாவட்டத்தில் அந்த கிறுக்கு எனக்கும் ஒட்டி கொண்டது...
    எங்கள் வீட்டில் வாரத்தில் எத்தனை நாள் வெறும் தயிர் சாதம்,எந்த வாரத்தில் இது அதிகம் என்றெல்லாம் நானுமொரு ரெகார்ட் சார்ட் மெயின்டைன் செய்ய ஆரம்பித்தேன்..
    விளைவு?
    சில நாட்களுக்கு முன் மருத்துவர் தினம் கொண்டாட பட்டது..
    அன்று எத்தனை படங்களில் எத்தனை முறை எத்தனை வித மருத்துவராக N.T.நடித்திருந்தார் என்று கணக்கெ டுத்தேன்.....
    ஷேக்ஸ் பியரின் எத்தனை பாத்திரங்களை N.T.ஏற்று சிறப்பித்து இருக்கிறார் என்று இன்னொரு கணக்கெடுத்தேன்...
    இன்று N.T.எத்தனை படங்களில் மரணம் அடைவதாக நடித்திருக்கிறார் என்று கணக்கிட்டேன்,இன்று அந்த நினைவு எனக்கு மிகுந்திருந்தது என்பதால்...
    அத்துடன் நில்லாது பதிவும் செய்ய துணிந்தேன்...
    பொருத்தருள்வீர் புண்ணியரே!
    பிழை இருந்தால்..
    என் செயல் தவறானால்...
    சில முக்கியமான உலக தொடர்களில் top ten catches என்று காட்டுவார்கள்..
    அப்படி ஒரு பட்டியல் N.T.அவர்களின் மரண காட்சிகளில் போட முடியும் என்றாலும் மனம் துணிய வில்லை..
    ஆனால் நம்பர் ஒன் காட்சி எது?
    என்று ஒரு கேள்வி எழுமானால்,
    நண்பர்களே! விடை ஒன்றே தான்..
    சூரியன் கிழக்கில் தான் உதிப்பான் என்பது போல மாற்றம் இல்லாதது....
    அந்த கை வீசம்மா கை வீசு....மரணம்.....
    பாசமலர்கள் படத்தில்...
    வழக்கமாக ஒரு நட்சத்திர நடிகர் கதைப்படி படத்தில் இறந்து பட்டால் அந்த படம் அதோகதி தான்..
    விதி விலக்கே இருக்காது.
    ஆனால் பாசமலர்கள் படத்திற்கு லட்ச கணக்கில் மக்கள் (பால் பேதமின்றி இருப்பாலரும் )திரள் திரளாக வந்து கண்ணீர் மல்கினார்கள்...
    அந்த பாத்திரங்கள் மரணித்தன என்றே மனம் கலங்கினார்கள்..
    கண்ணீர் பெருக்கினார்கள்..
    அபிமான நட்சத்திரங்களின் மறைவாக,மரணமாக காண வில்லை..
    அந்த படத்திற்கு முன்னரே கூட கதைப்படி மரணம் அடையும் பாத்திரமாக கணக்கற்ற முறை தோன்றியிருந்தார் N.T..
    கள்வனின் காதலியில் முத்தயன் மரணம்...
    காத்தவராயனில் காதலர் இருவர் மரணம்...
    அம்பிகாபாதியிலும் அவ்விதமே.....
    உத்தம புத்திரனில் இருவரில் ஒருவர் மரணம்..
    பலே பாண்டியாவில் மூவரில் மருது என்கிற பேட்டை வாத்தியார் மரணம்..
    நவராத்திரி படத்தில் ஒன்பது பாத்திரங்களில் அந்த கொலையாளி பாத்திரம் மரணம்..
    இப்படி பல பல மரணங்கள்...
    அடுத்து என்னை பாதித்தது கர்ணனின் மரணம்...
    எத்தனை சதிகள்,சாபங்கள்,விதியின் விளையாட்டுகள் அந்த ஒரு மரணத்தில்...
    இந்திரன் கவச குண்டலங்களை யாசித்து பெற்ற சதி...
    குந்தி கர்ணனிடம் தாய் என்கிற உரிமையில்,அர்ச்சுனன் மீது நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை ஏவ கூடாது என்று வரம் பெற்ற சதி...
    சல்லியன் இனி சாரத்தியம் செய்ய மாட்டேன் என்று யுத்த பூமியில் கைவிட்டு சென்ற சதி...
    படு களத்தில் நீ கற்ற அஸ்த்திர வித்தைகள் மறந்து போகட்டும் என்கிற பரசுராமரின் சாபம்....
    யுத்த பூமியில் உன் தேர்கால் புதைய கடவது என்கிற புத்திரணை இழந்த ஒரு வேதியனின் சாபம்..
    இத்தனைக்கும் மேலாக தர்ம தேவதை,கர்ணனின் மீது பார்த்திபன் தொடுக்கும் பாணங்கள் எல்லாவற்றையும் மலர் மாலைக்களா க்கி காத்து நிற்கும் தருணத்தில் பரந்தாமனே வேதியன் உருவில் வந்து உன் தர்மத்தின் பலனை எல்லாம் தாரை வார்த்து கொடு என்று இரந்து பெற்று கர்ணனை வீழ்த்திய விபரீதம்...
    கர்ணனின் மரணம் கொடியதே..
    நடித்து காட்டினாரே நம்முடையா N.T.
    ஹும்! விலகி போங்கள்...துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை என்ற பாஞ்சை சிங்கத்தின் மரணம்......
    சரித்திரம் பேசிய மரணம் அல்லவா அது..
    பெருமிதமும் துயரமும் தீரமும் ஒரு சேர காண்பவர் நெஞ்சங்களில் பொங்கிய விந்தையை விளைவித்தவர் N.T.தானே..
    பிரெஸ்டீஜ் பத்ம நாபன்...
    பாரிஸ்டர் ரஜினிகாந்த்...
    அக்ராஹாரங்கள் மெய் சிலிர்த்து பேசின...இரு கதாப்பாத்திரங்கள் பற்றி..
    நாமும் உறைந்து போய் நின்றோம் என்பதுதானே உண்மை..இரு படங்களின் முடிவிலும்...
    வ.உ.சிதம்பரனார்,கொடி காத்த குமரன்,பகத் சிங்.....
    மூன்று தீரர்களின் தியாக மரணங்களால் தேசியம் தமிழ்நாட்டில் இன்றும் நம்மிடையே இருக்கிறதே சில துளியேனும்..காரணம் அந்த சிங்க தமிழன் அல்லவா!
    தெய்வ மகன்!
    அம்மா,உடம்பெல்லாம் வலிக்குதும்மா..
    கட்டி பிடித்து கொள்ளம்மா என்று கதறிய கண்ணனின் மரணம்...
    விளக்கனைத்து விட்டு போ,ரஹீம் என்ற தீபம் அணைந்த காட்சி...
    கர்மவீரரின்மூச்சு நிற்பதற்கு முன் பேசிய இறுதி பேச்சல்லாவா அது..
    தீபம் படத்தில் அந்த காட்சியை அத்தனை ஏடுகளும் குறிப்பிட்டு எழுதின..
    மகா கவி காளிதசனின் மரணம்...
    வாழ்வில் விரக்தியுட்றேன்,விதி முடிவு தேவதையே!
    விரைந்து நீ வா....
    இறுதியாக அடுத்த தலைமுறை நடிகர்கள் இருவருடன் நடித்த தேவர்மகன்...
    படையப்பா....
    இரண்டிலுமே கூட மரணம் தான் N.T.அவர்களுக்கு..
    சட்டென்று நிகழ்ந்து விடும் மரணம்..
    இரு படங்களிலுமே....
    மிக பெரும் சிறப்புகள் செய்ய பட வேண்டும் அவருக்கு...
    மாநில,ஒன்றிய அரசுகள் இரண்டிற்குமே இருக்கிறது அந்த பொறுப்பு...
    என்றும் N.T.அவர்களின் நினைவில்..
    V.Vino Mohan....


    Thanks Vino Mohan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •