Page 106 of 114 FirstFirst ... 65696104105106107108 ... LastLast
Results 1,051 to 1,060 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #1051
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி கணேசன் மகன் யாழில் செய்தது!😯 Sivaji Ganesan Son Ramkumar Jaffna Visit | Alasteen Rock

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது மகன் ராம்குமார் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது நடந்ததை நீங்கள் இந்த காணொளியில் காணலாம்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1052
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஈழத்தில் சிவாஜிகணேஷன் செய்த வேலை; தந்தையின் தடங்களை தேடிவந்த மகன்!! || Ushanthan View


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1053
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார் இலங்கையில் நான் வாழ்ந்த மூளாய் கிராமத்திற்கு நேற்று ஏப்ரல் 24ந் திகதி வந்திருந்தார். காரணம்? தனது தந்தை 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நிதி சேகரித்துத் தந்ததால் உருவான மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால்....!
    இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் - 1953ம் ஆண்டு ஒக்டோபர் 28ந் தேதி, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக சிவாஜி கணேசன் யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் "என் தங்கை" என்ற நாடகத்தை நடத்தி நிதிசேகரித்துக் கொடுத்திருந்தார்! அதே நாடகம் கொழும்பிலும் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் சிவாஜி ஒரு இளம் நடிகர். சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி ' 1952 ஒக்டோபரில் வெளியானது.
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து முனைவர் மருதுமோகன் எழுதிய புத்தகத்தின் யாழ்ப்பாண வெளியீட்டுக்காக இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான முனைவர் சிவா பிள்ளையின் அழைப்பின்பேரில் 'சென்னை-யாழ்ப்பாணம்' பயணிகள் விமானத்தில் பலாலிக்குப் பறந்து வந்த ராம் குமார், யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டார்.
    சென்னை திரும்பமுன்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் அவர் சென்றார். வைத்தியசாலையின் நிர்வாகிகள், வைத்தியர்கள், தாதிமார் இணைந்து அவரை, வரவேற்றிருக்கிறார்கள். அந்த அன்பான உபசரிப்புக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் 'சிவாஜியின் செல்வன்'. இவ்வாண்டு ஆரம்பத்தில் சென்னையிலிருந்தபோதும், யாழ்ப்பாணத்திலிருந்தபோதும் நான் கொடுத்த அன்பான தூண்டுதலும் அவரது மூளாய் வருகையை ஊக்குவித்தது என்றதில் எனக்கும் குட்டிப் பெருமை..
    யாழ்ப்பாணத்தின் ஒரு சில பகுதிகளையும் என் தம்பியோடு சுற்றிப் பார்த்திருக்கிறார் ராம் குமார். நல்லூர் கந்தசாமி கோவிலுள் கண்கள் குளமாகி அழுதேவிட்டார் என்றான் தம்பி. தொல்புரம் மன்னதோட்டம் ஜெகஜோதி அம்பாள் ஆலயம், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம், கீரிமலை.. செல்வச்சந்நதி.. மாவிட்டபுரம்.. வல்வெட்டித்துறைமுத்துமாரியம்மன் திருவிழாக் கோலாகலம்.. என ஒருபுறமும், யாழ் கோட்டை, இந்தியா அன்பளித்த கலாச்சார மண்டபம், யாழ் நூல்நிலையம்... பருத்தித்துறை முனை, சங்கிலியன்தோப்பு, மந்திரிமனை என பட்டியல் நீள்கிறது. தேசமும் தெய்வீகமும் அவரைக் கவர்ந்துவிட்டிருக்கின்றன.
    தனது தந்தையின் கையால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மாமரத்தை கண்டபோது கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் ராம்குமார்!! 'தேவர் மகன்' அல்லவா..
    "விதை நான் போட்டது.. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை..!"
    siva-084.jpg

    siva-081.jpg

    siva-083.jpg

    siva-085.jpg

    Thanks Narayana Moorthy (Muktha films 60)
    Attached Images Attached Images
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1054
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1055
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்னும் எத்தனை வருடமானாலும் நடிகர் திலகத்தின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும் மாமரம்....
    இன்றைக்கு சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை யாழ்ப்பாணம்
    மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக, சிவாஜி கணேசன் 1953ம் ஆண்டு அக்டோபர் 28ந் தேதி, யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் "என் தங்கை" என்ற நாடகத்தை நடத்தி நிதிசேகரித்துக் கொடுத்திருந்தார்.
    அதே நாடகம் கொழும்பிலும் நடத்தப்பட்டது.
    அவர் செய்த அந்த பெரும் உதவியால்,
    இன்று அந்த வைத்தியசாலை மிகப் பிரபலமாக உருவாகியுள்ளது.
    அந்த நேரத்தில் சிவாஜி ஒரு இளம் நடிகர்.
    (சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி ' 1952 அக்டோபரில் வெளியானதுகுறிப்பிடத்தக்கது.)
    தனது முதல் படம் வெளியான போதே
    பொது நலப்பணிக்காக,அதுவும் கடல்கடந்து வாழும் தமிழர்களுக்காக உதவிய பெருந்தன்மை எப்படி பாராட்டினாலும் போறாது.
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து முனைவர் மருதுமோகன் எழுதிய புத்தகத்தின் யாழ்ப்பாண வெளியீட்டுக்காக இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான முனைவர் சிவா பிள்ளையின் அழைப்பின் பேரில் ராம் குமார்,
    யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டார்
    அதன் பின்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் அவர் சென்றார். வைத்தியசாலையின் நிர்வாகிகள், வைத்தியர்கள், தாதிமார் இணைந்து அவரை வரவேற்றிருந்தனர்
    அந்த அன்பான உபசரிப்புக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் 'சிவாஜியின் செல்வன்'.
    தனது தந்தையின் கையால் 70 ஆண்டுகளுக்கு முன்பு,
    மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மாமரத்தை கண்டபோது கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் ராம்குமார்.
    இன்றைக்கு தமிழகத்தில்,
    நடிகர் திலகத்தின் பல நினைவுகளை, "நாகரீக காலம்" என்ற பெயரைச்சொல்லி பல அடையாளங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
    ஆனால் அவர் கையால் விதைக்கப்பட்ட மாமரத்தை 70 ஆண்டுகளாக அவர் பெயரை சொல்லி பாதுகாத்து, நடிகர் திலகத்தை பெருமைப்படுத்தும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை நிர்வாகிகளையும், அங்குள்ள மக்களையும் நினைத்து பெருமைப்பட வேண்டும்.

    siva-101.jpg

    siva-102.jpg

    Thanks Sri
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #1056
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி கணேசன் | புலிக்கொடி நாட்டிய இடம் | Eluthum Karankal | Interview with actor Ram Kumar Ganeshan




    Thanks
    IBC Tamil TV
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1057
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    In 1972 Sivaji Ganesan's VASANTHA MALIGAI broke box office records in South Africa,when it released at the Odeon Cinema...It ran for months with almost all shows sold out...All the songs were huge hits and even Vanishri's orange saree became popular among our local women.Pictured below is a South African newspaper advert for Vasantha Maligai

    siva-113.jpg

    Thanks Kesivan Govinder (Nadigarthilagak visirigal)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1058
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    விடியலில் வாசித்தது... தற்செயலாக விரல் பட்டு, அசல் பதிவு எங்கோ சென்றுவிட்டது. ஆனால், நல்லவேளை எனக்குத் தெரியாமலேயே copy ஆகியிருந்ததை இங்கே share பண்ணுகிறேன். அனுப்பியவர் எவரோ, நன்றிகள்..
    ----------------------------»--»»»»»-------------------------------
    60 வயதிலும் பெண்ணின் காலில் விழுந்த சிவாஜி... எழுத்தாளர் சுரா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
    நக்கீரன் செய்திப்பிரிவு
    எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுல அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து வருகிறார். ‘திரைக்குப் பின்னால்’ நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
    "சினிமாத்துறையில் நன்றி என்ற ஒன்றை லென்ஸ் வைத்து தேடினாலும் பார்க்க முடியாது. நூறு பேரில் ஒருவரிடம் நன்றி, விஸ்வாசம் இருந்தாலே பெரிய விஷயம் என்பார்கள். சிவாஜி கணேசனின் நன்றி, விஸ்வாசம் பற்றி நான் ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். இதைக் கேட்கும்போது சிவாஜி கணேசனின் மீது உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை வரும்.
    சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் 1952இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேலூரைச் சேர்ந்த பி.ஏ.பெருமாள் முதலியார். அந்தப் படத்திற்கு ஃபைனாஸ் செய்தது ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியதும், படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றி பெற்றதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வெற்றி சிவாஜி கணேசனை மிகப்பெரிய உயரத்தில் கொண்டுபோய் வைத்ததும், அதன்மூலம் பெரிய கதாநாயகன் தமிழ்நாட்டில் உருவானதும் வரலாறு.
    அதன் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டன. சிவாஜி சார் 200 படங்களுக்கு மேலாக நடித்து, புகழ் குன்றின் உட்சத்தில் இருக்கிறார். நான் கூறும் இந்த சம்பவம் ஒரு தீபாவளி நேரத்தில் நடந்தது. இது பொம்மை பத்திரிகையில் ஆசிரியராக இருந்த என் நண்பர் வீரபத்திரன் என்னிடம் பகிர்ந்துகொண்டது. அவர் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய நண்பர். ஒருநாள் வீரபத்திரனை அழைத்த சிவாஜி, “நாளை எந்த வேலையும் வச்சுக்காதீங்க... நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும்” எனக் கூறியுள்ளார். வீரபத்திரனும் மறுநாள் காலையிலேயே சிவாஜி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிவாஜி வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு இருவரும் காரில் ஏறி அமர்கின்றனர். நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் சிவாஜி கூறினாரேயொழிய எந்த இடத்திற்குப் போகிறோம் எனக் கூறவில்லை. வீரபத்திரனுக்கும் அவரிடம் கேட்கத் தயக்கம். அதனால் எதுவும் கேட்காமல் காரில் ஏறிவிடுகிறார். கார் சென்னையைத் தாண்டுகிறது... காஞ்சிபுரத்தை தாண்டுகிறது... வீரபத்திரன் அப்போதும் கேட்கவில்லை. கடைசியாகக் கார் வேலூருக்குச் சென்று, அங்கு ஒரு வீட்டின் முன்னால் போய் நிற்கிறது. அந்த வீடு சிவாஜி கணேசனை வைத்து படம் எடுத்த பி.ஏ.பெருமாள் முதலியாருடையது. அவர் முன்னரே மரணமடைந்துவிட்டார். அவர் குடும்பம் மட்டும் அங்கே வசித்துவருகிறது. தீபாவளி வருவதால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொண்டு சிவாஜி கணேசன் சந்திக்க வந்துள்ளார். அந்த வருடம் மட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சிவாஜி கணேசன் இதேபோல நேரடியாக சென்று சந்திப்பாராம். அப்போது, பெருமாள் முதலியார் மனைவி காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் சிவாஜி கணேசன் கிளம்புவாராம். தன்னுடைய 60 வயதிலும் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
    பின், வேலூரில் இருந்து சென்னை திரும்புகையில் இருவரும் இதுபற்றி காரில் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிவாஜி, "இவர்தான் என்னை வச்சு ‘பராசக்தி’ படம் எடுத்தார். 2000 அடி படம் எடுத்திருந்தபோதே நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்; வசனம் பேசுனா மீன் வாயைத் திறந்து பேசுவது மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லி என்னை படத்திலிருந்து நீக்க முயற்சித்தார்கள். எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியைக் கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என நினைத்தார்கள். அப்போது நான்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பெருமாள் முதலியார் உறுதியாக இருந்தார். நான் இவ்வளவு பெரிய நடிகரானதற்கு காரணம் பெருமாள் முதலியார்தான். இன்று அவர் இல்லை. ஆனால், இந்தியா முழுக்க தெரிந்த நடிகராக நான் இருப்பதும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருப்பதும் அவர் போட்ட பிச்சை. அன்று பெருமாள் முதலியார் இல்லையென்றால் இன்று சிவாஜி கணேசன் இல்லை" என உருக்கமாகக் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் நினைத்தால் இதை யாரிடமாவது கொடுத்துவிடலாம். அப்படியெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் அவரே நேரில் சென்று அவர்களைச் சந்தித்து, வாங்கி வந்துள்ளதை அவர் கையால் கொடுத்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுவருவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்.
    அன்று இரவு 10 மணிக்கு அவர்கள் வந்த கார் வடபழனி அருகே வருகிறது. இப்போதைய கமலா தியேட்டர் அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவில்தான் வீரபத்திரன் வீடு உள்ளது. அவர், இங்கே நிறுத்துங்கள்... என் வீடு இங்கேதான் உள்ளது... நான் இறங்கிக்கொள்கிறேன் எனக் கூற, இந்த நேரத்தில் நடந்து போவீர்களா எனக் கேட்ட சிவாஜி, அவர் வீட்டிற்கே சென்று இறக்கிவிட்டுள்ளார். நான் முன்னரே கூறியதுதான்... சினிமாவில் நன்றி, விஸ்வாசம் என்பது சுட்டுப்போட்டால்கூட பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என யாராக இருந்தாலும் உங்களை அறிமுகப்படுத்தி நீங்கள் புகழ்பெறுவதற்கு மூலகாரணமாக இருந்த உன்னதமான மனிதர்களைக் கைக்கூப்பி வணங்குங்கள். இந்த சம்பவம் நம் அனைவருக்குமே ஒரு பாடம்".
    நன்றி: நக்கீரன்

    siva-120.jpg

    Thanks Kouwshigan Ramiah (Face Book)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1059
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அடுத்தடுத்து படம் ரிலீஸ் செய்த சிவாஜி.. பிரமாண்டங்களுக்கு நடுவில் சிக்கிய ’பொம்மை கல்யாணம்’.. !
    பொம்மை கல்யாணம்பொம்மை கல்யாணம்
    சிறந்த நடிகர்கள், வரதட்சணை கொடுமை என்ற சிறந்த கருத்தாக்கம் என பல நேர்மறை விஷயங்கள் இருந்த போதிலும் பிற படங்களின் அழுத்தம் மற்றும் அதிகபட்ச சோகம் காரணமாக பொம்மை கல்யாணம் 50 நாள்களையே கடந்தது.

    siva-121.jpg

    1958 வெளியான சிவாஜி கணேசன் நடித்தப் படங்களில் ஒன்று பொம்மை கல்யாணம். ஆச்சார்யா ஆத்ரேயா எழுத்தில் ஆர்.எம்.கிருஷ்ணமூர்த்தி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இதனை இயக்கினார். தெலுங்குப் படம் 1958 ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது. தமிழில் அதே வருடம் மே 3 ஆம் தேதி வெளியானது.

    சிவாஜி வருடம் முழுவதும் நடித்துக் கொண்டிருப்பார். அதனால், வருடம் முழுக்க அவர் நடித்தப் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும். ஒரு படம் வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளாகப் போய்க்கொண்டிருக்கையில் அடுத்தப் படத்தை வெளியிடுவார்கள். ஒரே நேரத்தில் இரு படங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் மூன்றாவதாக ஒன்று வெளியாகும். இதன் காரணமாக வெள்ளிவிழா போக வேண்டிய படம் 100 நாள்கள் ஓடும். 100 நாள்கள் ஓட வேண்டியது 50 நாள்களில் தூக்கப்படும். அதற்காக கவலைப்பட முடியாது. கவலைப்படும் நேரத்தில் இன்னொரு படம் வெளிவரும்.



    1958 லும் அப்படித்தான் நடந்தது. அந்த வருடத்தின் ஆரம்பத்தில் பொம்மல பெள்ளி - பொம்மை கல்யாணத்தின் தெலுங்குப் பதிப்பு - வெளியாகி வெற்றி பெற்றது. அது தெலுங்கு என்பதால் அதை பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். 1958 இல் சிவாஜி நடிப்பில் தமிழில் வெளியான முதல் படம் உத்தம புத்திரன். பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியான அப்படம், 36 நாள்களை கடந்த நிலையில் மார்ச் 14 பதிபக்தி படத்தை வெளியிட்டனர். உத்தம புத்திரன், பதிபக்தி இரண்டும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கையில் ஏப்ரல் 14 சம்பூர்ண ராமாயணத்தை வெளியிட்டனர். இதில் என்.டி.ராமராவுடன் சிவாஜியும் நடித்திருந்தார். சம்பூர்ண ராமாயணம் திரைக்கு வருகையில் உத்தம புத்திரன் ஐம்பது நாள்களையும், பதிபக்தி முப்பது நாள்களையும் கடந்திருந்தது. உத்தம புத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் என மூன்று படங்கள் ஓடிக் கொண்டிருக்கையில் மே 3 ஆம் தேதி பொம்மை கல்யாணம் வெளியானது.

    உத்தம புத்திரன் 100 நாள்களை நிறைவு செய்ய பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் இரண்டும் பொம்மை கல்யாணத்துடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடின. பொம்மை கல்யாணம் 50 தினங்களை கடந்த போது அன்னையின் ஆணை வெளியானது. பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் ஆகிய படங்களுடன் அன்னையின் ஆணையும் சேர, பொம்மை கல்யாணம் தியேட்டரிலிருந்து தூக்கப்பட்டது. பதிபக்தி 100 நாள்களும், சம்பூர்ண ராமாயணம் 5 இடங்களில் 100 நாள்களும், மதுரையில் 165 நாள்கள் ஓடின. அன்னையின் ஆணை 100 நாள்கள் ஓடியது. அந்த வருடம் வெளியான சாரங்கதாரா, சபாஷ் மீனா, காத்தவாயராயன் ஆகிய படங்களும் 100 நாள்கள் ஓடின. நடுவில் பொம்மை கல்யாணம் மட்டும் 50 நாள்களுடன் பின்னடைவை சந்தித்தது. 100 நாள்கள் ஓடவில்லை என்றாலும் படம் லாபம்தான்.

    பொம்மை கல்யாணம் ஒரு அக்மார்க் குடும்பப் படம். மாமியாரின் வரதட்சணை வெறியை விரிவாக கண்ணீர் ததும்ப காட்சிப்படுத்தியிருந்தது. சிவாஜி சுதந்திரப் போராட்ட தியாகி ரங்காராவின் மகள் ஜமுனாவை காதலிப்பார். வரதட்சணை பெயராது என்பதால் இந்தத் திருமணத்தை சிவாஜியின் தாய் சாந்தகுமாரி எதிர்ப்பார். அவருக்கு தனது சகோதாரனின் மகள் மைனாவதியை சிவாஜிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதற்கு மாறாக சிவாஜி, ஜமுனா திருமணம் நடக்கும். திருமணம் முடிந்தபின், மருமகளை மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வார். சிவாஜி ஊரில் இல்லாத நேரம் மருமகளை வீட்டைவிட்டே துரத்திவிட்டு, பழியை மருமகள் மீது போடுவார். அத்துடன் மைனாவதியை மகன் சிவாஜிக்கு திருமணம் செய்ய சாந்தகுமாரி ஏற்பாடு செய்வார். சிவாஜியும், ஜமுனாவும் இறுதியில் இணைந்தார்களா, சாந்தகுமாரியின் வரதட்சணை வெறி தணிந்ததா என்பது கதை.

    சிறந்த நடிகர்கள், வரதட்சணை கொடுமை என்ற சிறந்த கருத்தாக்கம் என பல நேர்மறை விஷயங்கள் இருந்த போதிலும் பிற படங்களின் அழுத்தம் மற்றும் அதிகபட்ச சோகம் காரணமாக பொம்மை கல்யாணம் 50 நாள்களையே கடந்தது. கே.வி.மகாதேவன் இசையில் படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

    வரதட்சணை கொடுமை குறித்த விழிப்பணர்வை ஏற்படுத்தியவகையில் இன்றும் பார்க்கக் கூடிய படமாகவே பொம்மை கல்யாணம் உள்ளது. 1958 மே 3 வெளியான பொம்மை கல்யாணம் இன்று 65 வது வருடத்தை நிறைவு செய்கிறது.


    Thanks siva-122.png NEWS 18
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1060
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரை விட பெரிய வள்ளல் சிவாஜிதான்! ஆராய்ச்சியாளர் சொல்வதென்ன?




    Thanks Valai Pechu Anthanan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •