கர்ணவள்ளல் திரு சிவாஜி கணேசன்
23 வதுநினைவு தினம் யூலை 21.
இடது கைக்கு தெரியாமல் கொடைகொடுத்த வள்ளல் சிவாஜி கணேசன் ,1953 ஆம் ஆண்டு திரை உலகில் நுழைந்த மறுவருடமே இலங்கைக்கு சென்று யாழ் மூளை வைத்தியசாலை கட்டிட நிதிக்காக உதவியவர். முதன் முதலாக எந்த ஒரு கட்சியிலும் சேராத தனிநபர் ஒருவர் இலங்கை தமிழ் மக்களுக்கெனஉதவியவர் என எடுத்துக்கொண்டால் அது சிவாஜி கணேசன் அவர்களாகத்தான் இருப்பார். தமிக பாடசாலைகளுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கு 1959 ல் 1 லட்சம் கொடுத்தவர் (இன்றைய மதிப்பு பல கோடிகள்) சிவாஜி கணேசன். மதிய உணவுத் திட்டத்திற்கு சிவாஜி கணேசனின் பெயரை சூட்டுவதற்கு அன்றைய முதல்வர் காமராஜர் விரும்பிய பொழுது தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டவர் பெருமைக்குரி வள்ளல் சிவாஜி அவர்கள்.இவை சிறு துளி மட்டுமே, பாடசாலை மதிய உணவுத்திட்டத்திற்கு மேலும் மேலும் கொடுத்தார்.பேரிடர் காலங்களில் கணக்கின்றி கொடுத்தார். அப்படிப்பட்ட வள்ளலின் இருபத்து மூன்றாவது நினைவு தினம் யூலை 21 ல் அவரின் நினைவுகளை போற்றுவோம்.
எங்கள் தங்க ராஜா
நடிகர் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள பேபி ஆல்பர்ட் திரையரங்கில் கடந்த 19 ம் தேதி எங்கள் தங்க ராஜா திரையிடப்பட்டது.
தினசரி இரண்டு காட்சிகளாக திரையிடப்பட்ட இந்த படம் தற்போது இரண்டாவது வாரமாக வெற்றி நடை போடுகிறது.
இத்தனைக்கும் படம் Digital லில் வெளியாகாமல் சாதாரண 35mm பிரிண்ட் வடிவில் தான் திரையிடப்பட்டுள்ளது.
புதிய படங்கள் இரண்டுநாள் முன்று நாள் என்று தள்ளாடும் போது ஐம்பது வருடங்களுக்கு முன்பு வந்த படம் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைப்பது மிகப்பெரிய விஷயம்.
இத்தனைக்கும் நடிகர் திலகம் மறைந்து 23 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இன்றும் Box Office Emperor ஆக திகழ்வது அவருக்கு மட்டுமே சாத்தியம்.
Bookmarks