Page 21 of 114 FirstFirst ... 1119202122233171 ... LastLast
Results 201 to 210 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #201
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1964 அது நடிகர் திலகத்தின் ஆண்டு .
    யார் என்ன சப்பைக்கட்டு கட்டினாலும் ஆதாரங்களை மறைக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது. 1964-ல் வெளியான நடிகர் திலகத்தின் படங்கள் : 7 , 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் : 5, (கர்ணன், பச்சை விளக்கு, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி,
    10 வாரங்கள் ஓடிய படம் : 1 (ஆண்டவன் கட்டளை), 8 வாரங்கள் ஓடிய படம்: 1 (முரடன் முத்து)..

    (அங்கே எந்தப் படம் ஓடியதற்கும் ஆதாரங்களை கானோம். சும்மா வாய்ப் பேச்சுதான். வந்த சுவடு தெரியாமல் ஓடிப்போன என் கடமை போன்ற படங்களைப் பற்றி எந்த விவரமும் இல்லை. (உடனே வசூல் விவரம் என்ற பெயரில் அதுவும் ஆதாரமில்லாமல் அள்ளி விடக்கூடும்)




    Thanks Mohamad Thameem

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #202
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மேற்படி பதிவிற்கான பினூட்டங்கள் சில..

    No comparison
    ..........................

    நாமும் அப்படித்தான் இருந்தோம். அங்கே போய் பாருங்கள். சகட்டுமேனிக்கு நடிகர் திலகத்தை தாக்குகிறார்கள். அப்புறமும் நம்மிடம் இருக்கும் ஆவணங்கள் எதுக்கு? நாக்கு வழிக்கவா?.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #203
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மேலும் சில மேற்படி பதிவிற்கான பினூட்டங்கள் .........

    அதான் அவங்க பட பாட்டே இருக்கேண்ணா
    பொய்யிலே பிறந்து
    பொய்யிலே வளர்ந்தவங்க
    ......................

    தமீம் சார்.. நீங்கள் ஆதாரங்களை அள்ளி வந்து கொட்டுகிறீர்கள்.. அவர்களுக்கு ஆதாரங்களை தேடி எடுக்கவே நேரமில்லை.. காரணம் அவர்கள் முழுநேர அரசியல்வாதிகளாகி காசு எப்படி சம்பாதிப்பது என்ற கற்பனையில் மூழ்கி விட்டார்கள்.. நீங்கள் ஒரு ஆதாரத்திற்காக காசு செலவழித்தாவது தேடி கொண்டு வருவீர்கள்.. தவிரவும் இருந்தால்தானே அவர்கள் கொடுப்பதற்கு.. அதனால் இருக்கிற பொய்களை கிடைக்கும் இடைவெளியில் அள்ளி விடுகிறார்கள்.. நம்ம மக்கள் நம் தலைவரைப்பற்றி கொஞ்சம் ஓவராக சொன்னாலும் நீங்கள் காமராஜர் மாதிரி தலையில குட்டு வெச்சு உட்கார வெச்சுடறீங்க..
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #204
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மேலும் சில மேற்படி பதிவிற்கான பினூட்டங்கள்

    இது ஒப்பீடு அல்ல. வேறொரு குழுவில் நடிகர் திலகத்தை தரக்குறைவாக தாக்குவதற்கான பதில்.
    அதையும் படித்தால் நம் பக்கம் உள்ள நியாயம் உங்களுக்குப் புரியும் . மற்றபடி நாம் எப்போதுமே அவர்களோடு ஓப்பிடு செய்ய விரும்புவதில்லை

    ....................................



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #205
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாம் பதிவிடும் இந்த விளம்பர ஆதாரங்கள் / ஆவணங்கள் நமது நடிகர் திலகம் குழுக்களோடு நின்று விடுமோ என்று எண்ணியிருந்தோம். அதைத் தாண்டி மாற்று குழுக்களிலும் எடுத்து பதிவிடப்படுவது நமக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியே. "அங்கே" இவற்றைப் பார்க்கும் (இரு பக்கமும் சேராத) பொது மக்கள் 'பரவாயில்லையே, இவர்கள் ஒரேயடியாக மட்டும் தட்டும் அளவுக்கு சிவாஜி படங்கள் மோசமில்லையே. நல்ல வசூலாகியிருக்கின்றனவே' என்று பேசத் தொடங்கியிருப்பது நமக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, வெற்றியும் கூட . "அவர்கள்" இவற்றை அங்கே மறுபதிவிட்டதால் தானே இது சாத்தியமாயிற்று. எனவே நன்றி.
    " சிலர்" அங்கே கமெண்ட் பண்ணியிருப்பது போல இவை ரசிகர்கள் வெளியிட்டவசூல் ஆவணங்கள் அல்ல. தயாரிப்பாளர்களான சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தினத்தந்தியில் வெளியிட்டவை . தயாரிப்பாளரோ, முக்கிய விநியோகஸ்தரோ அவர்கள் இஷ்டத்துக்கு வசூலை கூட்டி வெளியிட முடியாது. காரணம் இவை வருமான வரித்துறையின் கவனத்துக்கு செல்லக் கூடியவை. (இதற்காகவே IT யில் ஒரு wing உண்டு)
    நமது ராஜா, நீதி பட வசூல்களை ரிக்ஷாக்காரன் வசூலோடுதான் ஒப்பிட்டிருக்கிறார்களே தவிர ( ரிக்ஷாக்காரன் நல்ல வசூலுடன் ஓடிய படம் என்பதில் மாற்றுத் கருத்தில்லை) ரிக்ஷாக்காரனை அடுத்து அதே தியேட்டர்களான தேவிபாரடைஸ், ஸ்ரீ கிருஷ்ணா (சரவணாவுக்கு பதிலாக மேகலா) தியேட்டர்களில் வெளியான 'நீரும் நெருப்பும்' பட வசூலைப் பற்றி மூச்சு விடக் காணோம். (ஒருவேளை இதன் பிறகு வசூல் என்ற பெயரில் 'ஆதாரமில்லாமல்' எதையாவது அள்ளிவிடக் கூடும்).





    Thanks Mohamad Thameem
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #206
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மேற்படி பதிவிற்கான பினூட்டங்கள் சில..

    படத்தைப் பார்த்து அவரகள் விட்ட கண் நீரினால் நெருப்பு அனைந்தே போனதே. பாவம் திருடனுக்கு தேள் கொட்டிய கதையை எப்படி சொல்வார்களோ

    .....................................

    ஆம். அதைப் பற்றி மட்டும் பேச மாட்டார்கள். அல்லது ஆதாரமின்றி பொய்யளப்பார்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #207
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மேற்படி பதிவிற்கான பினூட்டங்கள் சில..

    நீங்கள் குறிப்பிடும் அந்தப்பதிவை நண்பர் ஒருவர் எனக்கும் அனுப்பியிருந்தார். ஒரு நிமிடம் ஆடித்தான் போனேன். பிறகு சுதாரித்தபின் சிரிக்கத்தான் தோன்றியது. அவர்களாகவே ஒரு பகுதியின் வசூலை எடுத்துக்கொண்டு ஏதோ ஒன்றால் வகுத்து அதை ஏதோ ஒன்றால் கழித்தும் கூட்டியும் பின்னர் 50 நாள் வசூலோடு பெருக்கி.... அப்பப்பா... கடைசியில் உண்மையை உணராமலேயே " ஆஹா... சிவாஜி ரசிகர்கள் நல்லவர்கள்போல் வேடமிட்டு ஊரை ஏமாற்றுகிறார்கள் " என புலம்பி....
    போதுமடா சாமி.... அந்தப்பதிவை ஏன்டா படித்தோம் என்று ஆகிவிட்டது. என்ன செய்வது சார்... மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை சும்மா இருக்க விடுவதில்லை என்பது எத்தனை உண்மை. தங்கள் பதிவு உண்மையில் அருமை.

    ............................................

    சார் ரிக்ஷாக்காரன் படம் வெளியான*போது வேறு எந்த*எம்ஜியார் படம் வெளியிடவில்லை அது தான்உண்மை கைரிக்க்ஷா ஒழிந்துசைக்கிள்ரிக்க்ஷாவந்த தருணம் திமுகா அதை திரையில்
    பயண்படுத்தி கொண்டது தவிர வேண்டுமென்றே இந்த படத்திற்கு அவார்டு வாங்கி கொடுத்தது இப்படி*எல்லாம் விளம்பரம் இல்லை என்றால் இந்த படமும் பத்தோடு பதினோன்று தான்
    ..................................

    உண்மை. ரிக்ஷாக்காரன் வெளியான பின்140 நாட்கள் வரை வேறு படங்கள் வெளியாகவில்லை
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #208
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மேற்படி பதிவிற்கான பினூட்டங்கள் சில..

    நீரும் நெருப்பும்..... படு தோல்வி அடைந்தது. மோசமான தோல்வி. நாயகி ஜெ.அம்மா அவர்களே எதிர்பார்க்கவில்லை.அப்போது ஒரு பேட்டியில் நிருபர் கேட்டதற்கு ஏன்அப்படம்தோல்வி என கேட்டதற்கு மிகவும் கோபமாக நீரை நெருப்பு அனைத்து விட்டது என்றார் என அப்போது செய்தி வந்தது
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #209
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ராஜா சென்னை வசூல்
    நடிகர் திலகத்தின் ராஜா திரைப்படம் சென்னை திரையரங்குகளில் குறிப்பாக தேவி பாரடைஸ் அரங்கில் வசூலித்த தொகை பற்றி சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் கொடுக்கப்பட்ட பத்திரிக்கை விளம்பரத்தை சுட்டி ஒரு விவாதம் எழுந்திருப்பதாக நண்பர்கள் மூலம் அறிய நேர்ந்தது. அதில் குறிப்பிட்டபடி 50 நாட்களில் ராஜா Rs 4,64,457.80 p வசூல் செய்ய வாய்ப்பில்லை என்றும் நடிகர் திலகத்தின் ரசிகர்களின் வற்புறுத்தல்/நிர்பந்தம் காரணமாகவே பாலாஜி இந்த விளம்பரத்தை வெளியிட்டார் என்றும் எழுதியிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். உண்மை நிலை என்ன? அலசுவோம்.
    சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பாக அதற்கு முன் வெளியிடப்பட்ட அதாவது தேவி பாரடைஸ் அரங்கில் தொடர்ந்து 107 அரங்கு நிறைந்த காட்சிகள் அதன் வசூல் Rs 3,13,124.80 p என்று கொடுக்கப்பட்ட விளம்பரத்தை அடிப்படையாக வைத்து தேவி பாரடைஸ் அரங்கில் ஒரு காட்சி அரங்கு நிறைந்தால் Rs 2926.40 p என்றும் அதன் அடிப்படையில் 50 நாட்களில் 150 காட்சிகள் என்ற கணக்கில் அவை அனைத்துமே அரங்கு நிறைந்தால் கூட Rs 4,38,960/- வர முடியும். அப்படியிருக்க Rs 4,64,457.80 p என்பது மிகைப்படுத்தப்பட்ட வசூல் என்ற வகையில் குற்றச்சாட்டு சொன்னதாக நண்பர்கள் சொல்கிறார்கள். அதற்கு முந்தைய வருடம் ஒரு காட்சி அரங்கு நிறைந்தால் Rs 2772/- என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது அதன் பிறகு கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் நண்பர்கள் குறிப்பிட்டார்கள்.
    கட்டணங்கள் உயர்த்தப்பட்டது உண்மைதான். 1971 டிசம்பரில் இந்திய பாகிஸ்தான் போர் நடந்து வங்கதேசம் சுதந்திர நாடாக மலர்ந்தது. 1971 மார்ச் முதல் இந்தியாவிற்கு வந்த வங்க தேச அகதிகளை இந்தியா ஏற்றுக்கொண்டு அவர்களின் பராமரிப்புக்கு வழி வகுத்தது. அந்த அகதிகளின் நல்வாழ்வு நிதிக்காக அஞ்சல் கட்டணம், திரையரங்கு கட்டணங்கள் 1972 ஜனவரி முதல் உயர்த்தப்பட்டன. அந்த வகையில் தமிழகமெங்கும் திரையரங்குகளில் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டபோது தேவி பாரடைஸ் அரங்கிலும் அது நடைமுறைக்கு வந்து ஒரு காட்சியின் வசூல் Rs 2926.40 p ஆனது.
    இனி ராஜாவின் சில விளம்பரங்களை பார்ப்போம். படம் வெளியாகி 15 நாட்களுக்கு பிறகு சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் ஒரு விளம்பரம் வருகிறது. அதில் தமிழகத்தில் ராஜா திரையிடப்பட்ட அரங்குகளின் 14 நாட்கள் வசூல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் தேவி பாரடைஸ் அரங்கில் 14 நாட்களில் Rs 1,55,095.24 p வசூல் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு காட்சியின் வசூல் Rs 2926.40 p என்பதை பார்த்தோம். அதன் அடிப்படையில் 1,55,095.242926.40 ஆல் வகுத்தால் நமக்கு கிடைக்கும் காட்சிகளின் எண்ணிக்கை 53. ஒரு நாளைக்கு 3 காட்சிகள் வீதம் 42 காட்சிகள் நடைபெற வேண்டும். ஆனால் கூடுதலாக சிறப்பு காட்சிகள் மட்டுமே 11 நடைபெற்றிருக்கிறது.(இது போல் 1971ல் வந்த படத்திற்கும் 10 சிறப்பு காட்சிகள் நடைபெற்றிருக்கின்றன).
    இதன் அடுத்த விளம்பரம் தேவி பாரடைஸ் அரங்கில் நேற்று வரை 101 அரங்கு நிறைந்த காட்சிகள். இதை கொடுத்தவர்கள் படத்தின் வினியோகஸ்தரான கிரஸண்ட் மூவிஸ். இது என்றைக்கு வந்திருக்கிறது என்று சொன்னால் 1972 பிப்ரவரி 25 வெள்ளியன்று அதாவது படம் வெளியான 31வது நாள். முதல் 30 நாட்களில் சாதாரணமாக நடைபெறக்கூடிய 90 காட்சிகள் அத்துடன் 11 சிறப்பு காட்சிகள் சேர்த்து 101 காட்சிகள் ஹவுஸ்புல். இதற்கு பின் இரண்டு நாட்கள் கழித்து அதாவது 33 வது நாள் 1972 பிப்ரவரி 27 ஞாயிறன்று சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் விளம்பரம் வருகிறது. எந்த விளம்பரம்? நேற்று வரை தேவி பாரடைஸ் அரங்கில் நடைபெற்ற 107 காட்சிகளும் ஹவுஸ்புல். அதாவது 32 நாட்கள் 96 காட்சிகள் பிளஸ் 11 சிறப்பு காட்சிகள் மொத்தம் 107. அதன் வசூல் Rs 3,13,124.80 p (ஒரு காட்சிக்கு 2926.40 வைத்து)
    இனி அடுத்த விளம்பரம் கிரஸண்ட் மூவிஸ்.கொடுத்தது. 1972 மார்ச் 11 அன்று. அதாவது 46வது நாளன்று.(ஜனவரி 26 அன்று ராஜா ரிலீஸ். ஜனவரியில் 6 நாட்கள். பிப்ரவரி 29 நாட்கள். காரணம் 1972 லீப் வருடம். மார்ச்சில் 10 நாட்கள்) அந்த விளம்பரம் என்ன சொல்கிறது? நேற்று வரை (மார்ச் 10 வரை) தேவி பாரடைஸ் அரங்கில் நடைபெற்ற 146 காட்சிகளும் ஹவுஸ்புல். 45 * 3 = 135 + 11 =146 காட்சிகள். இதிலிருந்து என்ன தெரிகிறது? படம் வெளியான ஜனவரி 26 முதல் மார்ச் 10 வரை 45 நாட்களில் நடைபெற்ற 146 காட்சிகளும் ஹவுஸ்புல். 45 நாட்களில் மொத்த வசூல் Rs 4,27,254.40 p.
    46வது நாள் நாம் ஏற்கனவே சொன்னது போல் 1972 மார்ச் 11 சனிக்கிழமை. அன்று மாட்னி காட்சிக்குத்தான் ராஜா தொடர் ஹவுஸ்புல் விட்டுப் போகிறது. வாசகர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன். அந்த 1972 மார்ச் 11 அன்றுதான் ஞான ஒளி ரிலீஸ். சென்னையில் 5 அரங்குகள், பாரடைஸ் அரங்கிற்கு பக்கத்திலேயே பிளாசா. மேலும் அன்றைய சபாக்கள் மூலமாக நடைபெற்ற ஏராளமான சிறப்பு காட்சிகள். இதனால் தொடர் ஹவுஸ்புல் விட்டுப்போனது. ஆனால் அன்றைய தினமே ராஜா திரைப்படம் மாலைக்காட்சி, இரவு காட்சி, மறுநாள் மாட்னி, ஈவினிங் காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியிருக்கின்றன.
    இனி 50 நாட்களுக்கு வருவோம். 45 நாட்களில் 146 காட்சிகள். அதன் பிறகு 5 நாட்களில் 15 காட்சிகள். ஆக 50 நாட்களில் நடைபெற்ற காட்சிகள் 161. அந்த 161 காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகியிருந்தால் வரக்கூடிய வசூல் Rs 4,71,150.40 p. சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் தேவி பாரடைஸ் அரங்கில் 50 நாட்களில் ராஜா பெற்ற வசூலாக கொடுக்கப்பட்டிருப்பது Rs 4,64,457.80 p. இதில் எங்கே பொய் பித்தலாட்டம் வருகிறது? 50 நாட்களில் அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்திருந்தால் வந்திருக்க வேண்டிய வசூல் Rs 4,71,150.40 p. இதை விட கூடுதலான வசூலை பெற்றது என்று விளம்பரத்தில் வந்திருந்தால் அது தவறான தகவல். அப்படி கொடுக்கவில்லையே. உண்மையிலே என்ன வசூலோ அதுதானே கொடுக்கப்பட்டிருக்கிறது. பின் எப்படி தவறான பொய்யான வசூலை சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் பாலாஜி கொடுத்தார் என்று சொல்ல முடியும்?
    இதில் மற்றொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. இந்த விளம்பரத்தை சுஜாதா சினி ஆர்ட்ஸ் தினத்தந்தி போன்ற தமிழகத்திலேயே அதிகமாக விற்பனையாகும் நாளிதழில் கொடுக்கும்போது அதில் மூன்று பேர் ஆங்கிலத்தில் stake holders என்று சொல்வார்கள், அதாவது பாத்தியதைபட்டவர்கள். யார் யார் என்றால் பட தயாரிப்பாளர் சுஜாதா சினி ஆர்ட்ஸ், படத்தை வெளியிட்ட கிரஸண்ட் மூவிஸ், படத்தை திரையிட்ட தேவி பாரடைஸ் உரிமையாளரான தேவி பிலிம்ஸ் குழுமம். இவர்கள் மூவரும் சேர்ந்து பொது வெளியில் தங்களை ஒப்பு கொடுக்கிறார்கள். என்னவென்று? நாங்கள் மூவரும் சம்மந்தப்பட்ட இந்த படம் 50 நாட்களில் இத்தனை ரூபாய் வசூல் செய்திருக்கிறது என்று. சிலர் வருமானவரி இலாக்கா பற்றி சொன்னார்கள். அதை கூட விட்டுவிடுவோம். காரணம் அது அடுத்த நிதி ஆண்டில் (இவர்கள் மூவரும் வருமான வரி தாக்கல் செய்த பின்) வர கூடிய விஷயம். அதற்கு முன்பாகவே மாநில அரசின் commercial taxes department (வணிக வரி துறை) இவர்களிடம் கேள்வி கேட்கும். விற்கப்பட்ட ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் உரிய கேளிக்கை வரியை தேவி பாரடைஸ் அரங்கம் செலுத்த வேண்டும். வசூல் வராமல் வந்துவிட்டது என்று கூட்டி சொன்னால் வராத வசூலுக்கும் சேர்த்து கேளிக்கை வரி கட்ட வேண்டும். அதற்கு எப்படி தியேட்டர் நிர்வாகம் ஒத்து கொள்ளும்? இல்லை வினியோகஸ்தர்தான் எப்படி ஒப்புக் கொள்வார்?
    ஒரு வாதத்திற்காக நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் அவரை வைத்து தொடர்ந்து படம் தயாரிப்பவர் என்கின்ற முறையில் பாலாஜி வேண்டுமானால் குற்றம் சாட்டுபவர்கள் சொல்வது போல் வசூலை உயர்த்தி கொடுக்கலாம். ஆனால் கிரஸண்ட் மூவிஸ் மற்றும் தேவி குழுமத்திற்கு என்ன தேவை? அவர்கள் எப்படி இதற்கு ஒப்பு கொள்வார்கள்? அப்படி செய்தால் அதையே முன்மாதிரியாக வைத்து மற்ற படங்களுக்கும் இது போல் செய்ய சொல்லி அழுத்தம் வராதா? அதனால் இது போன்ற ஒரு விஷயத்தை எந்த அரங்க உரிமையாளரும் வினியோகஸ்தரும் செய்ய ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.
    நடிகர் திலகத்தை பிடிக்காதவர்கள் காலங்காலமாக இது போல் பல்வேறு அவதூறுகளை சொல்லி வந்திருக்கின்றனர். அதையெல்லாம் தாண்டி நடிகர் திலகம் இன்றும் வெற்றி கொடி நாட்டுகிறார் என்பதுதான் சரித்திர சாதனை. நன்றி!
    அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி!தொடர் ஹவுஸ்புல் காட்சிகள் விளம்பரங்கள், மற்றும் இரண்டு வார வசூல் விளம்பரம் இவற்றை கொடுத்து உதவிய நண்பர் Vaannila Vijayakumaran அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி!


    Thanks Murali Srinivas

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #210
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 21 of 114 FirstFirst ... 1119202122233171 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •