Page 99 of 114 FirstFirst ... 4989979899100101109 ... LastLast
Results 981 to 990 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #981
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கலியுக கர்ணன் வள்ளல் சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த கொடைகளில் ஒன்று.

    #போராட்டம்_தொடருகிறது
    தமிழக அரசு தூங்குகிறது
    சிவாஜி கணேசன் 1965-ல்
    பறையர்களுக்கு வாங்கி கொடுத்த
    நிலத்தினை மீட்டுக்கொடு
    ________________________________
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கீழஊரணி பகுதியில் 200-க்கு மேற்பட்ட பறையர் குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். குடியிருப்பதற்கு மனையில்லாமல் துயரத்தோடு வாழ்ந்த இந்த மக்களின் நிலையை நினைத்து வருந்திய நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் 1965-ம் ஆண்டு இந்த பகுதிக்கு வந்து தேன்கூடு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி நாடகத்தின் வாயிலாக கிடைத்த வருவாயை வைத்து AVM.பழனியப்ப செட்டியார் என்பவர் மூலமாக இரண்டரை ஏக்கர் நிலத்தினை வாங்கி பறையர் மக்களின் பிரதிநிதிகள் பெயரில் பட்டா செய்து கொடுத்தார்கள்.
    சிவாஜி கணேசன் காலனி என்னும் பெயரில் மக்களால் இந்த இடமானது அழைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது இந்த பகுதியில் வாழ்ந்துவரும் பறையர்களை அச்சுறுத்தி ஆதிக்க சாதியை சேர்ந்த பண முதலைகள் சிலர் சிவாஜி கணேசன் காலனியை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து வட்டாச்சியர் யுவராஜ் என்பவரை பயன்படுத்தி தங்கள் பெயர்களில் சட்டவிரோதமாக திருட்டு பட்டா மாற்றம் செய்துள்ளார்கள். எனவே பல ஆண்டுகளாக பறையர்குடி மக்கள் தங்களுக்கு சொந்தமான சிவாஜி காலனியை மீட்டுதரும்படி போராடி வருகின்றார்கள்.
    பறையர் மக்களின் அறவழியிலான போராட்டத்தை ஆட்சியாளர்களோ அல்லது அதிகாரிகளோ ஒரு பொருட்டாகவே கருதாமல் இம்மக்களை ஏமாற்றி வருகின்ற காரணத்தால், நடக்கவிருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் புறக்கணித்து வீடுதோறும் கருப்பு கொடிகளை ஏற்றி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
    எனவே தமிழக அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து பறையர்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தினை மீட்டுதர வேண்டும்.
    ___ சடையன்பெயரன் ஊ.ம.த

    siva-1042.jpg

    நன்றி Vijaya Rai Kumar-( Nadigarthilagam Fans)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #982
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வள்ளல்.

    "பெருவெள்ளம்"
    1960ஆம் ஆண்டு சென்னையைச் சூழ்ந்த போது, மக்கள் பசி தீர்க்கும் பணியில் திரைப்படத் துறையில் இருந்து முதலில் ஈடுபட்டவர் சிவாஜிகணேசன் என்கிறது வரலாற்று தகவல்கள்.
    மக்கள் ஒருவர் கூட பசி பட்டினியோடு இருக்கக்கூடாது என்று தன் வீட்டில் தன் மேற்பார்வையில் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைத்து மக்களுக்கு உணவு வழங்கும் பணியைச் செய்துள்ளார் சிவாஜிகணேசன்.
    அரசியல்வாதிகள், விளம்பரப் பிரியர்கள் ஒரு நேரம் உணவுப் பொட்டலங்களை கொடுத்து விளம்பரம் தேடிக் கொள்வதைபோல் இல்லாமல்,
    மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பும் வரை, சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து உணவு சமைத்து வழங்கப்பட்டுள்ளது.
    அப்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது .

    siva-1043.jpg

    Thanks Ganesh Pandian (Nadigar thilagam Sivaji Visirigal)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #983
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த வீடற்ற ஆதி திராவிடர்களுக்கு உதவும் வகையில் இடம் வாங்கி கொடுத்துள்ளார்
    அதற்கான ஆதாரம்.

    நன்றி திரு ஆர்.சுந்தரம்
    நடிகர் திலகம் அவர்கள் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமல் உள்ளது. அதில் இதுவும் ஒன்று.
    காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த வீடற்ற ஆதி திராவிடர்களுக்கு உதவும் வகையில் காரைக்குடியில் தேன்கூடு என்ற நாடகம் நடத்தி அதில் வசூலான தொகையில் இடம் வாங்கி கொடுத்துள்ளார். அது தற்போதும் சிவாஜி கணேசன் காலணி என்று அழைக்கப்படுகிறது.

    siva-1045-1.jpg

    siva-1046.jpg

    Thanks Vijaya Rai Kumar(NadiGar Thilagak Fans)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #984
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவந்த மண் கட்அவுட் சென்னை குளோப் தியேட்டர்.
    எதிர்காலம் திரைப்படத்தின் Title .

    siva-1048.jpg
    நன்றி புகைப்படம் உதவி திரு ராகவேந்திரா சார்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #985
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் திரையில் பெப்ரவரி 18 முதல்

    அவன்தான் மனிதன்.

    siva-1047.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #986
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திருந்தவே மாட்டோம் என்று வாத்தி ரசிகர்கள் அடம்பிடிப்பது ஒன்றும்புதிய விடயமல்ல.
    ஆதாரம் கிடைத்தாலும், பார்த்தாலும் கண்ணைமூடிக்கொள்வது வாத்தியாரின் வாரிசுகளின் பச்சை குத்திய கொள்கை.
    பச்சை குத்த வைத்து கண்ணை மூடிக்கொண்டு கண்டதையும் எழுதுங்கள் என சொல்லிவிட்டு
    வாத்தியார் மறைந்து விட்டார். பாவம் வாத்தியின் கைகூலிகள் அல்லாத பொய்யாக எழுதிக்கொண்டு திரிகிறார்கள்.

    சினிம உலகில் நடிகர் திலகத்தின் வெற்றியை பொறுக்கமுடியாமல் எம் ஜீ ஆர் எப்படி நித்திரை இல்லாமல்
    புழுங்கித்தவித்தாரோ, அதேபோல வாத்தியின் கைகூலிகள் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஜீரணிக்கமுடியாமல்
    நித்திரையின்றியும் ,அரைகுறை நித்திரையில் அலறித்துடித்து எழுந்தும் பரிதாபமாக இல்லாத பொய்களையெல்லாம்
    எழுதி தங்களை தாங்களே ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்கள்.

    சிற்றரசர் குழு எழுதுகிறது நெல்லையிலும் மதுரையிலும் வாத்தியின் படங்கள்தான் சாதனையாம்.அதுவும் தவறான தகவல்களை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
    அப்போ ஏனைய ஊர்களில் எல்லாம் மற்றைய நடிகர்களின் படங்கள்தான் சாதனை என்பதை சிற்றரசர் குழு ஏற்றுக் கொள்கிறதா?
    சிற்றரசர் குழுவில் எழுதியது
    மக்கள் திலகத்தின் படங்களில் சண்டை காட்சிகளின் துவக்கத்தில் வில்லனோ, வில்லனின் அடியாட்களோ ஆரம்பத்தில் எதிர்பாராதவிதமாக ஒன்று அல்லது இரண்டு குத்துகள் விடுவதை வாங்கிக் கொள்வார். அதன் பின்பு ஒரு அடி கூட வாங்காமல் திருப்பி கொடுப்பார். இதை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பார்கள்.
    படங்களில் இயக்குனர் எப்படியும் காட்சியமைப்பை வைக்கலாம் . அதைகூட புரிந்து கொள்ளமுடியாதவர்கள்தான்
    வாத்தியின் ரசிகர்கள் அதை வேறு பெருமையாக எழுதுகிறார்கள்
    அதுபோல ஒன்றிரண்டு சம்பவம் அவரது படங்களின் வசூல் விஷயத்திலும் நடந்தேறி இருக்கிறது. இந்த சம்பவம் நெல்லையிலும், மதுரையிலும் அரங்கேறி இருக்கிறது. நெல்லையில் எப்போதுமே மக்கள் திலகத்தின் படங்கள்தான் வசூலில் முன்னணியில் இருக்கும். ஆனால் 1968 ல் வெளியான "பணமா பாசமா" எதிர்பாராதவிதமாக அந்த ஆண்டு அதிக வசூலை எட்டிப்பிடித்தது. சுமார் ரூ1,60,000 தாண்டி வசூல் செய்தது.
    ஆக எங்க வீட்டுப் பிள்ளை வசூலை பணமா பாசமா முறியடித்துவிட்டது என்பதை தங்களை அறியாமலே
    ஒப்புக் கொண்டுவிட்டது சிற்றரசர் குழு. ஆனால் வாதப்பிரதிவாதம் செய்யும்பொழுது மட்டும்
    இல்லை எங்க வீட்டுப் பிள்ளை பட வசூலை பணமா பாசமா நெருங்கவே இல்லை என பல்டி அடித்து கூப்பாடு போடுவார்கள்.
    அதுபோல மதுரையில்
    1969 மற்றும் 1970 ல் வெளியான "அடிமைப்பெண்" மற்றும் "மாட்டுக்காரவேலன்" ரூ430000 கடந்து இரட்டை வெற்றி பெற்று "பணமாபாசமா" சாதனையை முறியடித்தது. மீண்டும் 1972 ல் பெண்கள் சென்டிமென்ட் மூலம் அதிக வசூல் பெற்ற படம் "பட்டிக்காடா பட்டணமா". முதன் முதலாக ரூ 560000 வசூல் பெற்று சாதனை செய்தது. அதுவும் கதாநாயகனுக்கு கிடைத்த வெற்றியல்ல. கதைக்கு கிடைத்த வெற்றிதான் அது.
    அதன்பின்பு வந்த "வசந்த மாளிகை" 200 நாட்கள் ஓட்டியும் அந்த வசூலை எட்ட முடியவில்லை. 1973 ல் வந்த "உலகம் சுற்றும் வாலிபன்" ஒரு சாதாரண திரையரங்கில் வெளியாகி ரூ685000 வசூலாக பெற்று "ப.பட்டணமா" சாதனையை தவிடுபொடி ஆக்கியது. அதன்பின்பு வந்த "உரிமைக்குரல்" ரூ 7 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்தது. ஒன்றுக்கு இரண்டு சாதனையுடன் முற்றுப்புள்ளி வைத்தார் மக்கள் திலகம். அதன் பின்பு வந்த "தங்கப்பதக்கம்" ரூ 5 லட்சத்தோடு நின்று விட்டது. மக்கள் திலகம் திரையில் இருக்கும் வரை யாரும் வெல்ல முடியாத சாதனையை படைத்து விட்டார்.
    உண்மையை உள்ளதை வாத்தியின் கைகூலிகள் மறுப்பது மறைப்பதுபோல் நாங்கள் மறுப்பதும் கிடையாது மறைப்பதும் கிடையாது. பணமா பாசமா மதுரை வசூலை அடிமைப் பெண்ணோ மாட்டுக்கார வேலனோ முறியடிக்கவில்லை .

    பணமா பாசமா......... மதுரை தங்கம்..........140 நாள் வசூல் 4,75,250.09
    அடிமைப் பெண்.........மதுரை சிந்தாமணி...175 நாள் வசூல் 4,34,643.75
    மாட்டுக்கார வேலன்...மதுரை சிந்தாமணி....177 நாள் வசூல் 4,33,744.54

    எம் ஜீ ஆர் என்ற கதாநாயகனுக்காக படங்கள் ஓடுவதென்றால் வாத்தியின் எல்லா படமும்
    வெள்ளிவிழா ஓடியதா ? மற்றைய நடிகர்களின் எல்லா படங்களையும் விட வாத்தியின்
    எல்லா படங்களுமா வசூலில் முன் நிற்கின்றது?
    மக்கள் திலகம் திரையில் இருக்கும் வரை யாரும் வெல்ல முடியாத சாதனையை படைத்து விட்டார்.(இது சிற்றரசர் குழு சொல்கிறது)
    வாத்தி கதாநாயகனாக நடித்த கடைசிப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெளிவந்தது 1978 அம் ஆண்டு.எம் ஜீ ஆர் நடித்து பாதியில் நின்றுபோன அண்ணா நீ என் தெய்வம் என்ற படம் சிறிது மாற்றத்துடன் எம் ஜீ ஆர் துணை பாத்திரமாகவும் பாக்கியராஜ் கதாநாயகனாகவும் நடித்து அவசரப்பொலிஸ் 100 என்ற பெயரில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது.ஆக மொத்தத்தில் 1990 ஆம் ஆண்டு வரை திரைஉலகில் எம் ஜீ ஆர் நடித்த படங்கள் வெளிவந்திருக்கின்றன.

    ஆனால் சீடர்கள் என்ன சொல்கிறார்கள் வாத்தியார் திரை உலகில் இருந்த வரை மதுரையில் யாரும் வெல்லவில்லையாம் .
    பூனை கண்ணைமூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமாம்.கற்பனையில் மட்டுமல்ல பொய்யிலேயும் வாழுகிறார்கள் வாத்தி சீடர்கள்.

    திரிசூலம்......................மதுரை சிந்தாமணி..........................200 நாள் வசூல் 10,28,819.55
    பதினாறு வயதினிலே....மதுரை மினப்பிரியா /சினிப்பிரியா..266 நாள் வசூல்....9,12,767.20

    தங்களுக்கு ஏற்ற விதமாக எழுதி தங்களையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவது
    வாத்தி ரசிகர்களின் கலை. முன்னர் பத்திரிகைகள் மற்றும் வாய்வழி மட்டுமே தகவல் பரிமாற்றமாக இருந்தன .
    ஆனால் தற்பொழுது அப்படியல்ல எல்லோரது விரல் நுனியிலும் தகவல் அறியும் சாதனம் உண்டு.
    எல்லோரும் எந்தவிடயமானாலும் தகவலை பெற்றுக்கொள்ளும் சூழலிலும் வாத்தி சீடர்கள் மாறப் போவதில்லை.
    பொய்யையே பரப்பிக்கொண்டிருப்பார்கள்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #987
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    எட்டாவது வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்@Sivaji samrajiyam YouTube channel





    Thanks Sivaji samrajiyam YouTube channel
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #988
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி கணேசன் காலனி
    நண்பர்களுக்கு வணக்கம்,
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களால் விளம்பரம் இல்லாமல் தரப்பட்ட நன்கொடைகளில் இதுவும் ஒன்று. நம் ரசிகர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்திருக்கமாட்டோம். இந்தத் தகவலும் பிரச்சினைக்குரியதாக ஆனதால் அனைவரும் அறியும்படி ஆனது.
    இந்த நலச் சங்கத்தின் பொறுப்பிலிருந்தவர்களே, நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றதுதான் பிரச்சினையின் மூலக் காரணமாக சொல்லப்படுகிறது.
    தற்போது நடைபெற்றுவரும் பிரச்சினை குறித்து இந்தச் சங்கத்தின் நிர்வாகிகளுடன் தொடர்புகொண்டு பேசினேன். அதுமட்டுமில்லாமல், எனக்குத் தெரிந்த அரசியல் பிரமுகர் மூலமாகவும் அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளப்பட்டது.
    இப்போதிருக்கும் நிலையில், நடிகர்திலகம் அவர்களால் வாங்கித் தரப்பட்ட இந்த இரண்டரை ஏக்கர் நிலத்தில், ஒரு பகுதி வழக்கில் உள்ளது. அந்த வழக்கிலும் தங்களுக்கு சாதகமான முடிவே வரும் என்று நலச் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
    அடுத்து மீதமுள்ள மற்றொரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதுதான் தற்போது பிரச்சினையாக உள்ளது.
    விரைவில் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, நிலம் மீட்டுத் தரப்படும் என்ற உறுதியை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது. அதற்கு மேலும் தாமதமோ, அல்லது பிரச்சினையோ தொடருமானால், மாநிலம் தழுவிய ஒரு போராட்டத்தை முன்னெடுக்க நான் தயாராக இருப்பதாகவும் அவர்களிடம் உறுதியளித்திருக்கிறேன்.
    நம்பிக்கையுடன், நல்ல செய்திக்காக காத்திருப்போம்.
    அன்புடன்,
    கே.சந்திரசேகரன்
    தலைவர், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை

    siva-1057.jpg

    siva-1058.jpg

    Thanks Sivaji Peravai
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #989
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திருப்பூர் மனீஸ் திரை அரங்கில்
    வெற்றிகரமான 2 வது வாரமாக

    ராஜா

    siva-1061.jpg

    Thanks Vengateswaran (Facebook)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #990
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    படத்தில் துடித்தது போல், நேரில் துடித்த சிவாஜி





    Thanks Thirai Chirpi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •