Page 201 of 216 FirstFirst ... 101151191199200201202203211 ... LastLast
Results 2,001 to 2,010 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #2001
    Senior Member Senior Hubber mexicomeat's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    357
    Post Thanks / Like
    don't miss this rare interview of raja

    http://www.techsatish.com/2016/01/vi...ow-koffee.html
    இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
    சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்

    -Vaali

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2002
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Happy to be part of this team. Congrats to Director @jayam_mohanraja @actor_jayamravi @thearvindswami @ags_cinemas



    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #2003
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'சென்னை 28' இரண்டாம் பாகம்: வெங்கட்பிரபு புதிய விளக்கம் - Tamil HINDU


    பெரும் வரவேற்பைப் பெற்ற 'சென்னை 28' படத்தின் 2ம் பாகம் எப்போது தொடங்கப்படும் என்று இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் அளித்திருக்கிறார்.
    'மாசு (எ) மாசிலாமணி' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. இப்படத்தில் மீண்டும் தனது 'சென்னை 28' நாயகர்களோடு இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் 'சென்னை 28' 2ம் பாகம் குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு "அப்படி ஒரு யோசனை நிச்சயமாக இருக்கிறது. அனைவரையும் ஒன்றிணைத்து இரண்டாம் பாகம் தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம். ஆனால் அனைத்தும் இப்போதைக்கு எண்ணங்களாக மட்டுமே இருக்கின்றன. ஆனால் கண்டிப்பாக நடக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

    மேலும், 'சென்னை 28' 2ம் பாகம் இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைந்து தயாரிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திக்கு, "நானும் இயக்குநர் கெளதம் மேனனும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். ஆனால் அது வேறொரு படம். 'சென்னை 28' 2ம் பாகம் அல்ல" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #2004
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    கெத்து தமிழ் வார்த்தையா? நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்!
    உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்ஸன் நடிப்பில் திருக்குமரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் கெத்து. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படாததால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் “கெத்து” என்பது தமிழ் வார்த்தை தான் என்றும், சமீபத்தில் வெளியான சில படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கெத்து என்பது தமிழ் வார்த்தை இல்லை என்றுகூறி வரிவிலக்கு தரமறுக்கின்றனர் என்று பட தயாரிப்பு சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
    அரசு சார்பில் இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது, அதில், “ கெத்து என்ற தமிழ் வார்த்தைக்கு இணையாக பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கில பெயரில் முதல் எழுத்து ‘கே’ என்பதற்குப் பதிலாக ‘ஜி’ என உள்ளது. இதனால் வரிவிலக்கு அளிக்க முடியாது. மேலும் கெத்து என்ற சொல் தமிழ் வார்த்தை கிடையாது” என்று வாதிட்டார். தமிழ்வளர்ச்சித்துறை மண்டல இயக்குநரும் தனது பதில் மனுவில் கெத்து என்பது தமிழ்வார்த்தை இல்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

    எதிரெதிர் வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #2005
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'காதலும் கடந்து போகும்' கதைக்களம்: இயக்குநர் நலன் குமரசாமி சுவையான விளக்கம்


    'காதலும் கடந்து போகும்' ஸ்பெஷல் என்னவென்றால் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் வரும் போது படம் முடிவடைந்துவிடும் என்று இயக்குநர் நலன் குமரசாமி தெரிவித்தார்.
    விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'காதலும் கடந்து போகும்'. நலன் குமரசாமி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

    இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் நலன் குமரசாமி, "'காதலும் கடந்து போகும்' ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த காமெடி படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று காமெடி அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில் இறுதிகாட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு இழையோடும் காமெடி இருந்து கொண்டே இருக்கும்.
    எனது முதல் படமான 'சூது கவ்வும்' படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து பண்ணியிருக்கிறேன். அப்படத்தின் சாயல் இப்படத்தில் நீங்கள் காணவே முடியாது. குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

    'சத்யா' படத்தில் நடித்த சுந்தர் இப்டத்தில் கவுன்சிலராக நடித்துள்ளார். அவரிடம் பணியாற்றும் அடியாளாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். 'ப்ரேமம்' படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அப்படத்தினில் ஒரு நாயகியாக நடித்திருந்த மடோனாவை நாயகியாக இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம். விஜய் சேதுபதி மற்றும் மடோனா இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஒரு முறை "என்னய்யா இந்த பொண்ணு இப்படி நடிக்கிறா" என்று விஜய் சேதுபதி பாராட்டினார். போலீஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். படத்தின் 70% முதல் 80% காட்சிகள் நாயகன், நாயகி சம்பந்தப்பட்டே இருக்கும்.

    நாயகன், நாயகி இருவருக்கும் எப்படி நட்பு உருவாகிறது என்பது தான் கதையே. தமிழ் சினிமாவில் உடனே நட்பு உருவாகி விடுவது போல பண்ணியிருப்பார்கள். ஆனால், இப்படத்தில் படிப்படியாக பண்ணியிருக்கிறோம். அதில் காமெடி கலந்து சொல்லியிருக்கிறேன். அக்காட்சிகள் மூலமாக நட்பு உருவானது என்பதை பார்ப்பவர்கள் நம்புவது போல சொல்லியிருக்கிறோம். இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் இருவருக்கும் காதல் வரும் போது படம் முடிவடைந்துவிடும். இப்படத்தில் காதல் தோல்வி எல்லாம் கிடையாது.

    'சூது கவ்வும்' நயன்தாரா கோயில் கட்டும் காமெடி காட்சிகள் எல்லாம் படம் வந்தவுடன் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல இப்படத்தின் காமெடி காட்சிகளுக்கும் கிடைக்கும் என நம்புகிறேன். இப்படம் ஒரு கொரியன் திரைப்படத்தின் ரீமேக்காகும். அப்படத்தை அப்படியே எடுத்திருக்கிறேன், ஆனால் அதில் என்னோட பாணி இருக்கும்.

    'காதலும் கடந்து போகும்' படத்தின் கதை ஒன்றரை வருடத்திற்கு முன்பே தயார் தான். நானும் விஜய் சேதுபதியும் தயாராக தான் இருந்தோம். ஆனால், வேறு ஒரு கதை பண்ணலாம் என்று தான் வேறு ஒரு கதை பண்ணினோம். அதை சரியாக வரவில்லை என்றவுடன் ஒரம் வைத்துவிட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி அதே படத்தை பண்ணினோம்.

    இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், காதல் அது பேசாமல் வந்துவிட்டு போகட்டும் என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #2006
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா இணையும் படம் ரீமேக்கா?

    கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் செல்வ ராகவன் இயக்கும் இணையும் “ நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் படப்பிடிப்பு இன்று காலை திருவான்மியூரில் ஒரு பங்களாவில் துவங்கியது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா , ரெஜினா கசான்றா , நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
    கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார் செல்வராகவன் , ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா , இசை சந்தோஷ் நாராயணன் , இவர் செல்வராகவனுடன் முதன் முறையாக இணைந்துள்ளார். கலை விஜய் ஆதிநாதன் .
    பெரிய விளம்பரங்கள் எதுவுமின்றி மிக எளிமையாக இன்று துவங்கிய படப்பிடிப்பை இடைவிடாமல் தொடர்ந்து மார்ச் இறுதிவரை நடத்தத் திட்டமிட்டுள்ளனராம். அதற்குள் மொத்தப்படப்பிடிபையும் நடத்தி முடித்துவிடுவார்களாம். இயக்குநர் செல்வராகவன் இயக்கிவரும் நெஞ்சம் மறப்பத்தில்லை முற்றிலும் புது பாணியில் உருவாகிவரும் திரைப்படமாகும். இது வேறு எந்த படத்தின் ரீமேக்கும் அல்ல என்று படக்குழுவினர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #2007
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    9 மணிக்கு வந்துவிட்டால் நல்லநடிகரா? இயக்குநர் முருகதாஸ் சாடல்

    கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் 'கணிதன்'. அதர்வா, கேத்தரின் தெரசா நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர். முருகதாஸின் மாணவர். படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. இசையை ஏ.ஆர் ரகுமான் வெளியிட ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது " இது பத்திரிகையாளர் சம்பந்தப் பட்ட கதை. இதைத் தயாரிக்கும் தாணு சாரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.ரஜினி சாருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தவர் அவர். கடின உழைப்பாளி ராசியானவர்.
    நான் 'துப்பாக்கி' படம் எடுத்த போது அதன் முதல் தோட்டாவாக இருந்தவர் அவர்தான். நான் 'கத்தி' படம் இயக்கிய போது நான் ஒரு கத்திதான் எடுத்தேன். ஆனால் ஊரில் யார் யாரோ 100 கத்திகள் எடுத்தார்கள். நான் படத்தில் பாம் வைத்தால் நிஜமாகவே தியேட்டரில் பாம் வைத்தார்கள்.அப்போது நான் செய்வது அறியாமல் தவித்த போது எனக்குத் துணை நின்றவர் தாணு சார்தான். அவர் தயாரிக்காத படத்துக்குக்கூட எனக்கு அவ்வளவு பக்க பலமாக இருந்தார்.சத்யம் திரையரங்கில் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடந்தபோது படம் வெளிவருமா வராதா என்று நான் தவித்துக் குழம்பிய போது அவர் அங்குஅவர்கள் நடுவில் வந்து சொன்னார், படத்தை திரையிடுங்கள் எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்ன பாதிப்பு வந்தாலும் நான் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார். அப்படிப்பட்டவர்தான் இந்த தாணு சார்.

    என் உதவியாளர்கள் 'அரிமா நம்பி' ஆனந்த் சங்கர், 'கணிதன்' சந்தோஷுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 'துப்பாக்கி' படத்தில் வேலை பார்த்த என் ஆறு உதவியாளர்களும் இப்போது படம் இயக்குகிறார்கள்.

    தமிழ்த்திரையுலகில் 'கபாலி', 'தெறி' என்கிற இரண்டு பெரிய படங்களை எடுத்து வருகிறார். அந்தப் படத்தோடு என் உதவியாளர் இயக்கும் 'கணிதன்' படமும் தயாரிக்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. 'கபாலி', 'தெறி' என்கிற இரண்டு பெரிய படங்களோடு அதற்கு எந்த அளவிலும் குறையில்லாமல் இந்தப் படத்தையும் நேசிப்பார் என்பது எனக்குத் தெரியும். 'கணிதன்' இயக்கும் சந்தோஷ் நல்ல உழைப்பாளி, சுறுசுறுப்பானவர்.

    நாயகன் அதர்வாவைப் எனக்குப் பிடிக்கும்.,காரணம் அவரது அப்பா முரளிசார் எனக்குப் பிடிக்கும்.,. தமிழ்ச் சினிமாவில் அதிகமான புதுமுக இயக்குநர்களுக்கு முதல் படம் கொடுத்த நாயகன் முரளிசார்தான். அவர். நமக்கு அதர்வாவையும் கொடுத்தவர் என்பதால் அவரைப் பிடிக்கும். அதே போலஅதர்வாவும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். ஒரு கதாநாயகன் சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும் பெரிய கதாநாயகன் என்றில்லை. காலையில் 9 மணிக்குப் படப்பிடிப்புக்கு வந்தால் பெரிய உண்மையான நடிகர் என்று கூறமுடியாது. காலை 7 மணிக்கே சீருடையுடன் பள்ளிக்குப் போகும் குழந்தைகளைப் பார்க்கிறோம். அவர்களை சின்சியரானவர்கள் என்று நாம் கூறுவதில்லை.
    நல்ல கதையைத் தேர்வு செய்து நடிப்பதுதான் திறமை. கதாநாயகன் 50 கதைகள் கேட்டால்தான் ஒரு நல்ல இயக்குநரை கண்டுபிடிக்கமுடியும்;அடையாளம் காணமுடியும்.நல்ல கதை கேட்டது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயமோ அதே போல் மோசமான கதை கேட்பதும் கொடுமையான விஷயம். அஜீத்சார் ,விஜய்சார் போல அதர்வாவும் புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    இதில் நடித்துள்ள கேத்தரின் தெரசா முன்னணி நாயகியாக வருவார். இசையமைத்திருக்கும் சிவமணியும் நானும் ஒரு முறை விமானத்தில் போனோம். அவர் கண்ணை மூடிக் கொண்டு இருந்தார். அட கவலையில்லாத மனிதர் என்று நினைத்தேன். சற்று நேரத்தில் என் காதில் ஹெட் போனை மாட்டிவிட்டு விமானத்தின் ஒலியை அடிப்படையாக வைத்து ஒரு ரிதம் போட்டுள்ளேன் கேளுங்கள் என்றார். கேட்டு விட்டு அசந்து விட்டேன்.

    நான் வெளியிட ரகுமான் சார் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் என் படத்துக்காக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. ஸ்கார் விருது வாங்கும் போது வெள்ளைக்காரர்கள் மத்தியில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார். அப்போது எனக்கு எல்லாப் புகழும் தமிழனுக்கே என்று தோன்றியது.

    சாப்பாடு எப்படி இருக்கும் என்பதற்குச் சாப்பிடவே வேண்டாம்.சமையல் கட்டிலிருந்து வரும் வாசனையிலேயே தெரியும். இந்த'கணிதன்' படமும் அப்படித்தான். எடிட்டிங், டீஸர், பாடல் நிலையிலேயே நன்றாகத் தெரிகிறது. நம்பிக்கை வருகிறது. இப்படம் வெற்றிப் படமாகி சந்தோஷ் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்.'' இவ்வாறு முருகதாஸ் பேசினார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #2008
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கணும்னு எழுதிருந்தா அத யாராலும் மாத்த முடியாது' என்று நடிகர் சித்தார்த்தின் திடீர் ட்வீட் தத்துவத்தால் நெட்டிசன்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தன் ஹாலிவுட் பிரவேசம் பற்றி ட்வீட்டி இருந்தார் தனுஷ்


    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #2009
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிக்கலில் அஜீத்தின் இயக்குநர்? - vikatan

    அஜித்தை வைத்து வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா அவருடைய அடுத்தபடத்தையும் இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. அஜித் இப்போது ஓய்வில் இருக்கிறார்.
    ஓய்வு முடிந்தவுடன் சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் அந்தப்படத்தை சத்யஜோதிபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதுதான் நடக்கும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் திரையுலகினர். ஆனால் அதில் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    இயக்குநர் சிவா, தமிழில் முதல்படம் இயக்க வந்தபோது அந்தப்பட நிறுவனத்துக்கு இன்னொரு படம் இயக்குவதாக ஒப்புக்கொண்டு முன்தொகையும் வாங்கியிருந்தாராம் சிவா. ஆனால் தொடர்ந்து அஜித்தோடு பணியாற்றுவதால் அவர் சொல்கிற தயாரிப்பாளர்களுக்கே படம் பண்ணும் நிலை அமைந்துவிட்டது. அடுத்தபடமும் வேறு தயாரிப்பாளருக்கே இயக்குகிறார் என்ற செய்தி வந்தவுடன், எங்கள் நிறுவனத்தில் போட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்களே என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கேட்டிருக்கிறார்கள்.

    இந்தவிசயம் தெரிந்த இப்போதைய தயாரிப்புநிறுவனம் அந்தச்சிக்கலைச் சரிசெய்துவிட்டு வாருங்கள் என்று இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார்களாம். அதனால் முதல்படத் தயாரிப்பாளரோடு பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம் இயக்குநர். சிக்கல் சரி செய்யப்பட்டுவிடுமா?
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #2010
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    All praise to Vetrimarans VISARANAI by Ulaganayagan....Thanks sir


    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •