Page 2 of 22 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 220

Thread: KARUPPU TAJMAHAL

  1. #11
    Senior Member Seasoned Hubber TamilMoon's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Chennai
    Posts
    1,103
    Post Thanks / Like
    Nice Posts Venki >SMILE<
    ←~^~♥~Vijay~♥~^~→

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    நன்றி.நிறைய பேர் கவிதை,இலக்கியம்,பிறவை,சினிமா ஆகிய ஃபோரங்களில் முக்கியமாக அளவளாவுபவர்கள் ஏன் கதைகளுக்கு வருவதில்ல?எனக்கு மிகபிடித்த ஃபோரமே கதைகள் தாஅம்,சுதாமாவின் தொன்னூல்கள் விளக்கத்திற்கு அடுத்து.

  4. #13
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    இலவச இணைப்பு அளவில் ஒன்று:

    தார்-ரோட்டில் தேன்துளிகளா?
    அடச்சீ:கவிஞனுக்கு கானல்நீர் கூட
    எவ்வளவு சுவையாக தெரிகிறது பாருங்கள்!

    ilavasa inaippu alavil onru:

    tar-road-il thaenthulikala?
    adachi!kavinjanukku kanal neer kooda
    evvalavu azhagaka therikirathu parungal!

  5. #14
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    ஒக்கே ஒக்க நவீன கவிதையண்டி:

    மோகினிப்பேய்களை
    நீங்கள் பார்த்திருக்கலாம்
    வெள்ளை உடையணிந்த இராட்சசிகளாக.
    ஆண் மோகினிகளையும்
    நீங்கள் பார்த்திருக்கிறீர்களா-
    அதே போல வெள்ளை உடையணிந்த
    அரசியல்வாதிகளாக?

    okke okka naveena kavithaiyandi:

    mohini peykalai
    neengal arindhirukkalaam
    vellai udaiyanintha ratchasigalaaka.
    aan mohinigalaiyum
    neengal arinthirukkalaam-
    athe pola vellai udaiyanintha
    arasiyalvathikalaka!?

  6. #15
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    கைதி(நீள் கவி)

    எப்படி முளைத்தோம்
    என்று நிச்சயம் அறிந்திருக்காது-
    முளைவிட்ட பட்டாணிவித்து,
    என்னைப்போலவே.
    ஆனாலும்,
    விடுதலையான பின்
    உணர்ந்தேன் கைதியாய்.
    என்னைப்போன்ற குழந்தைகள்
    வெளியே வருவதை விட
    உள்ளேயே இருப்பது மேல்
    என்று புரிந்துகொண்டே குழந்தைகள்
    குழந்தையாய் இருக்கும் வரை அழுகிறார்கள்.

    kaidhi:
    eppadi mulaithom
    enru nichayam
    arinthirukkathu
    mulaivitta pattanivithu,
    ennaip polave!
    aanalum
    viduthalaiyana pin
    unarnthen kaithiyaai!
    veliye irupathaivita
    ulle iruppathe mel
    enru purinthe kuzhanthaikal
    kuzhanthaiyaai irukkumvarai
    azhukiraargal!

  7. #16
    Senior Member Seasoned Hubber TamilMoon's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Chennai
    Posts
    1,103
    Post Thanks / Like
    moonumae super
    ←~^~♥~Vijay~♥~^~→

  8. #17
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    என்னதான் பாழ்மண்டபமாக
    இருப்பினும் இன்னமும்
    சலிப்போடு வாழ்ந்துகொண்டிருக்கிறது-
    ஓர் ஆமை!

    ennathaan paazhmandapamaaka
    iruppinum innamum
    salippudan vaazhnthukondirukkirathu-
    oru aamai!

  9. #18
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    ! போல.
    !pola

    பட்டமரம் தன் இலைகளையெல்லாம்
    உதிர்த்துவிட்டதைப்போல
    உன் வருகை எனக்குள்ளிருந்த
    நினைவுகளையெல்லாம் அழித்துவிடுகிறது;

    pattamaram than ilaikalaiyellam
    uthirthuvittathaippola
    un varugai enakkulliruntha
    ninaivukalaiyellam azithuvitukirathu;

    விரிந்துவிட்ட மலர் மீண்டும்
    மூடாததைப்போல
    என் கண்களும் இதயமும்
    நீ வந்த பின்னர் உறங்குவதில்லை;

    virinthuvitta malar meendum
    muutathaippola
    en kankalum idhayamum
    nee vanthapinnar uranguvathillai;

    சிலந்தி தன் வலையை
    செதுக்கிக்கொண்டிருப்பதைப்போல
    என் கனவுகள் உனக்கு
    ஒப்பனை செய்துவிடுகின்றன;

    silanthi than valaiyai
    sethukkikondiruppathaippola
    en kanavukal unakku
    oppanai seythuvitukinrana;

    புதிதாக தீபாவளித்துணி உடுத்திக்கொண்ட
    சிறுமிபோல
    என் ஜன்னல்கள் உன்னைப்பார்த்து
    மயங்கி வளைகின்றன;

    puthithaka diwalithuni ututhikonda
    sirumipola
    en jannalkal unnaipparthu
    mayangi valaikinrana;

    உன்னால் என் நிலை வருணித்த
    உவமைகளைப்போல
    உன்னை ஒப்புவிக்க உலகினில்
    உவமைகளே இல்லை!

    unnal en nilai varnitha
    uvamaikalaippola
    unnai oppuvikka ulakinil
    uvamaikale illai!

  10. #19
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    கவிதைக்கு கவிதை திரியில் நானியற்றியவை.ஏனோ அவற்றை ஒன்றாக சேகரிக்க அவா எழுந்தது,நிறைவேற்றிவிட்டேன்.
    _________________

    பரவசமாய் பக்தியாய் வரமொன்று பெற்றிட
    பிள்ளையார் உருவொன்றை மனையில் ஏந்திட்டேன் - அவர்க்கு

    வேண்டியதாக உண்டியாய் சில புற்கள்
    வேங்கையாய்ப் பாய்ந்து பெற்றிட்டேன் சந்தையினுள் - மேலும்

    ஆப்பிளும் பேரிக்காயும் கொறிப்பார் என்றெண்ணி
    ஆகாரமாக்கினேன் அவற்றை பாலிதீனுக்கும் பிள்ளையார்க்கும் - ஆனாலும்

    எங்கள் இரைப்பைதான் செரித்தன பழங்களை
    ஏப்பங்களை , புண்ணியங்களை இலவசமாக தந்தபடி -பட்டினிப்

    பிள்ளையாரை கேணிக்குள் எறிந்த பின்னர்
    பிணைத்தகயிறு இறைத்தது கொஞ்சம் புனலினை - சூடாக

    கலக்கப்பெற்ற பாலோடு கரைந்த நீரோடு
    காபி அருந்தினேன் பிள்ளையாரை புசித்தபடி.
    ________________

    மாக்களின் நாவுக்குள்
    தவழும் தமிழ்,
    தூங்கும் சிசுவின்
    உலர்ந்த விரல்கள்,
    ஓடாக் கடிகாரத்தில்
    துடிக்கும் முள்,
    கண் சிமிட்டிக்கொண்டிருக்கும்
    டியூப் விளக்கு,
    தூறலில் எழும்
    கேணியின் வலையல்கள்,
    பூகம்பத்தின் அதிர்வில்
    நடக்கும் விருட்சம்,
    அரிவாளினின்று பிறைவடிவில்
    சொட்டும் குருதி.
    எல்லாம் இருக்கிறது
    பேனாவின் மை தவிர.
    ________________

    வளர்ச்சி உண்மையில்
    மலர்கள் மாலையாவதில் இல்லை
    காகிதம்கூட மலராவதில் தான்
    வளர்ச்சி உண்மையில்
    முள் புதராவதில் இல்லை
    ரோஜாவின் மேடையாக இருப்பதுதான்
    வளர்ச்சி உண்மையில்
    குழந்தை மனிதனாவதில் இல்லை
    மனிதன் குழந்தையாவதில் தான்
    மூங்கிற்காடு குழலாவதைப் போல.
    _________________

    பிளாட்பாரத்து கலாமின் கதறல்.

    நாளைய மன்னர்கள் வளரவே
    வழிமறிக்கும் புத்தக மூட்டைகள்
    வழிதோறும் சாதிக்குப்பைகள்
    சிக்னலெங்கெங்கும் மதிப்பெண் சாட்டைகள்
    ஆட்டோ மீட்டர்களாக
    அன்றாட வாழ்வில் சூடேறுவது பற்றாமல்
    பொழுதுபோக்காய் சூடெற்றும்
    சிற்சில பொறுப்பற்ற ஆசிரியர்கள்,
    சுகாதரமிலா கழிவறைகள்
    ஸ்பீடுபிரேக்கர்களாய்.
    வெல்வதெப்படி இந்த பந்தயத்தில்
    பணமெனும் பெற்றோறின்றி,
    ஸ்டேட்-ஃபர்ஸ்டும் குதிரைக்கில்லையே!
    ________________

    வண்டி என்றால்
    வரைவுள்ள தவஉறு
    வடிவமொன்று தேவை,
    நிச்சயம் அதற்கோர்
    நிலை உண்டியும்
    நித்தம் வேணும்,
    பயணிப்பது உணராவிடினும்
    பல்லாக்கு சுகம்நிகர
    பயணத்தை அறிதல் உண்டு,
    தளைகள்மட்டும் இருத்தலென்னில்
    தடங்கள் எண்ணம்போலே,
    துளையதன் காற்றுமில்லை
    கரைகளை மனம் நகைக்க
    குறைகளால் நிறையும் நம்முடை
    காலமதன் மாயநெறிகள்.

    ________________

    கலையெல்லாம் வாகனம்
    வாழ்வலுப்பு தெரியாது
    யமனுலுக்கு அறியாது
    புதிரனைத்தும் புரியாது
    காக்கும் கலையெனும்
    அமீபா அவதாரன்.
    வாழ்மானிடர் அனைவருக்கும்
    நெஞ்சலுப்பு இருந்திருக்கும்
    பஞ்சுடலும் கனத்திருக்கும்
    கலையெனும் வாகனம்
    அவ்வப்போது 'லிப்ட்' தரவில்லையெனின்.
    _________________

    கருத்தரிப்புண்ட பலூன்
    கயிற்றுச்சக்கரத்தில்
    உதட்டுமுத்தத்தால் உயிர்த்து
    உக்கிரமனிதனின் அகந்தையோடு
    குருவி கழுகாக
    குருட்டுக் கற்பனையில்
    செருக்கு எனும்
    செருப்பு அணிந்து
    பறக்க முற்பட்டது.
    அதை விதிக்கொசு
    அண்டவிலை,
    ஐம்பூதமும் எதிர்க்கவில்லை.
    'ஐ'யென்று கூவினர்
    மூடர்களான சிறுமனிதர்கள்.
    மட்டற்று வெகுளிபெருக்கி
    சிறகின்றி,சிரக்கொழுப்பெடுத்து
    சிறை தவிர்த்து
    கால்விடப்போய் வரவழைத்தது
    கதிரவனின் சினத்தை
    வீழ்ந்தது மண்ணுக்கடியில்
    விழிக்கவில்லை பிறபலூன்கள்
    அதுசரி பல்லறிவு
    அண்ணன்களுக்கே புலப்படவில்லையே!
    _________________

    அரிதாரம் பூசிக்கொண்டு
    வாயசைக்காமல்,
    ராக அபிநயங்களொடு
    சிலாகிக்காமல்
    நமக்கு மட்டும் புரியாத
    ஏதோ ஒரு மொழியில்
    புதுக்கவிதைகளோடு
    அக்குபஞ்சர்
    செய்துவிட்டுப்போகிறது அந்தக் கொசு.
    _________________

    எத்தனையெத்தனையோ
    உடைந்த வளையல்கள் நினைவுக்கு வருகின்றன...
    கோலட்டம் ஆடுகையில்
    விழுந்துடைந்த தங்கையுடையது,
    துணியலசுகையில்
    அவிழ்ந்துடந்த வேலைக்காரியுடையது,
    காற்றாடி விடுகையில்
    கழன்றுகொண்ட அண்டைவீட்டுத்தோழியுடையது,
    சீரியல் கிளிசரினில்
    கரைந்துடைந்த பாட்டியுடையது,
    எம்பிராயட்ரி போடுகையில்
    வழுக்கிவிழுந்த மாமியுடையது,
    பிரம்பெடுக்கையில்
    நலிந்துபோன ஆசிரியையுடையது
    அனைத்தையும் விட
    உயர்வான ஒன்று 'உயிர்'வான ஒன்று
    நான் மட்டும் பார்த்துரசிக்க
    கலைடோஸ்கோப்புக்காக
    விரும்பி மட்டும் கொடுக்கப்பட்ட
    என் தாயினுடையது!
    _________________

    paravasamAi pakthiyAi varamonRu peRRita
    piLLaiyAr uruvonrai manaiyil EnthittEn - avarkku

    vENdiyathAka uNdiyAi sila putkaL
    vEngkaiyAi pAynthu peRRittEn santhaiyinuL - mElum

    AppiLum bErikkAyum koRippAr enReNNi
    AkAramAkkinEn avaRRai pAlithInukkum piLLaiyArkkum - AnAlum

    engkaL iraippaithAn seriththana pazangkaLai
    EppangkaLai,puNNiyangkaLai ilavasamAka thanthapadi - pattinip

    piLLaiyArai kENikkuL eRintha pinnar
    piNaiththakayiRu iRaiththathu konjam punalinai - sUtAka

    kalakkappeRRa pAlOtu kalantha nIrOdu
    kApi arunthinEn piLLaiyArai pusiththapadi.
    __________________________________________________ __

    mAkkaLin naavukkuL
    thavazum thamiz,
    uRangkum sisuvin
    ularntha viralkaL,
    OtAk katikArathil
    thutikkum muL,
    kaNsimittikkoNdirukkum
    tube viLakku,
    thURalil ezum
    kEniyin valaiyaLkaL,
    pUkambatin athirvil
    natakkum virutcham,
    arivALininru piraivativil
    sottum kuruthi
    ellAm irukkiRathu
    pEnAvin mai thavira.
    _______________________________________________

    vaLarchi uNmaiyil
    malarkaL mAlaiyAvathil illai
    kAkitham kUda malarAvathilthAn.
    vaLarchi uNmaiyil
    muL putharAvathil illai
    rOjAvin mEtaiyAka iruppathilthAn.
    vaLarchi uNmaiyil
    kuzanthai manithjanAvathil illai
    manithan kUda kuzanthaiyAvathilthAn
    mUnkiRkAdu kuzalAvathaippOla!
    ________________________________________________

    ________________________________________________

    platforuththu kalaamin katharal.

    nAlaiya mannarkaL vaLaravE
    vazimaRikkum puththakamUttaikaL
    vazithoRum sAthikkuppaikaL
    siknalengkum mathippeN sAttaikaL
    AttO mIttarkaLAka
    anRAta vAzvil sYtERuvathu paththAmal
    pozuthupOkkAi sUtERRum sila AsiriyarkaL,
    sukAthAramilA kazivaRaikaL
    SpEdu birEkkarkaLai.
    velvatheppadi ippanthayaththil?
    paNamennum peRRORinRi
    StEt-first-um kuthiraikkillaiyE
    ___________________________________________

    vaNdi enRAl
    varaivuLLa thava uRu
    vativam thEvai,
    nichchayam athaRkoR
    nilai uNdiyum
    nitham vENdum,
    pallakku sukamnikara
    payaNaththai aRithal uNdu
    thaLaikaL mattum iruththalenil
    thatangkaL eNNampOlE
    thuLaiyathan kaRRumillai
    karaikaLai manam nakaikka nammutai
    kAlamathan mAyanerikaL.
    _________________________________________

    kalaiyellAm vAkanam
    vAzvaluppu theriyAthu
    yamanulukku aRiyAthu
    puthiranaiththum puriyAthu
    kAkkum kalaiyenum
    amIbA avathAran
    vAzmaNitar anaivarkkum
    panjutalum kanathirukkum
    nenjaluppu irunthirukkum
    kalaiyenRa vAkanam
    avvappOthu lift tharAvitin.
    __________________________________________

    karuththarippuNda baloon
    kayiRRuchakkarathil
    uthattumuththathAl uyirthu
    ukkiramanithanin akanthaiyOdu
    kuruvi kazukaAka
    kuruttuk kaRpanaiyil
    serukku enum
    seruppu aNinthu
    paRakka muRpattathu.
    athai vithikkosu
    aNdavillai,
    aimbUthamum ethirkkavillai.
    'ai' yenRu kUvinar
    mUtarkaLAna siRumanithar.
    mattaRRu vekuLiperukki
    siRakinRi sirakkozuppetuthu
    siRai thavirthu
    kAlvitapOi varavazaithathu
    kathiravanin sinathai:
    vIznthathu maNNukkatiyil
    vizikkavillai piRapaLUnkaL
    athusari pallaRivu
    aNNaNkaLukkE innum pulappatavillaiyE!
    __________________________________________

    arithAram pUsikkoNdu
    vAyasaikkAmal
    irAga abinayangkaLAl
    silAkikkAmal
    namakku mattum puriyAtha
    EthO oru moziyil
    puthukkavithaikaLOdu
    acupuncture
    seythuvittup pOkiRathu
    anthak kosu!
    __________________________________________

    eththanaiyeththanaiyO
    utaintha vaLaiyalkaL ninaivukku varukinRana....
    kOlAttam Atukaiyil
    vizunthutaintha thangkaiyutaiyathu,
    thuNiyalasukaiyil
    vizunthutaintha vElaikkAriyutaiyathu,
    kARRAti vitukaiyil
    kazanRukoNda thOziyutaiyathu,
    embirAyatri pOtukaiyil
    vazukkivizuntha mAmiyutaiyathu,
    pirambetukkaiyil
    nalinthupOna Asiriyaiyutaiyathu,
    anaiththaiyum vita
    uyarvAna onRu,'uyir'vAna onRu
    nAn mattum pArthurasikka
    kalaitOSkOppukkAka
    virumbi mattum kotukkappatta
    thAyinutaiyathu!
    _________________________________________
    which one was the worst?

  11. #20
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    ஓரிரு காதல் பாக்கள்:

    வெற்றிகரமான துளியை சிந்தியது மேகம்
    நெற்றிவேர்வையொடு கரைந்தது தாகம்

    அந்த இருட்டில் அவளது மூக்குத்தி
    கந்தகமின்னலென ஓர் இடியுதிர்த்தது அங்கு.

    தூறல்கள் என் மூளையைக் கரைக்க
    மறலியை கணநொடியில் மிதித்துக் கொன்றேன்.

    சிந்திய சிரிப்பொலியோ மின்னல்களாய் பறையில்
    இந்திரதனுசுவே என்னை இடித்த போது.

    மெல்ல நிலவு தன் மறுஜென்மமெடுக்க
    சில்லென்று ஒலித்தது மூங்கிற்குழல்.

    தவளைகளைப்போல மழைமுடிந்தபின் நான் புலம்பிக்கொண்டிருக்க
    தவலையை நிரப்பிக்கொண்டு முத்தமிட்டாள் காற்றினூடே
    _________________

    வாய்முத்தங்களின்றி மடல் மார்க்கமாய்கூட
    உன்னைச்சேர முடியாமல்
    நான் உமிழ்ந்த எச்சிற்துளி
    மெல்ல அந்த வாசஸ்தல அருவியினின்று,
    பாறையின் காதலை உதறபடிக்கு
    பயணித்து ஆறடைந்தது,
    கரையின் காதலை
    ஆறு துச்சமெனத்துப்பி,
    என் எச்சிலை
    ஆழியுள் புகுத்தியது.
    கடலும் தீவைப்புறந்தள்ளி
    மெல்ல அது முகிலாய்
    பரிணாமித்தது,
    மேகமும் உழவனின் அன்பை
    விசிறியடித்துவிட்டு
    சரியாக உன் வாயினுள்
    அனுமதிக்கப்படுகிறது.
    நான் வருகிறேன்
    என் காதல் கடிதத்தோடு,
    நீ வாயில் நுழைந்த எனது எச்சிலை
    என் உதடு வழியாக இதயத்திற்குள்.......
    _________________

Page 2 of 22 FirstFirst 123412 ... LastLast

Similar Threads

  1. Is Karuppan a God or a split-personality? in V Karuppu.
    By kandeeban in forum TV,TV Serials and Radio
    Replies: 2
    Last Post: 20th October 2008, 09:10 PM
  2. song from tajmahal needed
    By kokarako in forum Current Topics
    Replies: 1
    Last Post: 11th August 2006, 11:02 PM
  3. Karuppu Roja
    By Shakthiprabha. in forum Poems / kavidhaigaL
    Replies: 19
    Last Post: 2nd November 2005, 10:01 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •