Page 5 of 6 FirstFirst ... 3456 LastLast
Results 41 to 50 of 54

Thread: condolence for cine personnel

 1. #41
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை

  டி.வி. நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54.
  பாலமுரளி மோகன் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். விவேக்குடன் நடித்த டி.வி. நிகழ்ச்சி செய்தி வாசிப்பாளர் தேர்வு காமெடி பிரபலமானது.
  ‘‘வாளைப்பழ தோல் வழுக்கி வாலிபர் உயிர் ஊஷல்’’, ‘‘தேர்தலில் ஆச்சியை பிடிப்பது யார்’’ என்று துணை நடிகையை பேச வைத்து விவேக்கும் பாலமுரளி மோகனும் பண்ணும் காமெடி பேசப்பட்டது.
  இதுபோல் தென்றல், வம்சம் டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார்.
  சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு 10 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தார்.
  இன்று காலை அவரது படுக்கை அறையை தட்டிய போது கதவு திறக்கவில்லை. நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் வேப்பேரி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்ஸ்பெக்டர் பிரபு, சப்–இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விரைந்து சென்று கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
  அங்கு மின் விசிறியில் பாலமுரளி மோகன் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
  மரணம் அடைந்த பாலமுரளி மோகனுக்கு சீதாராணி என்ற மனைவியும், உமாசங்கர் என்ற மகனும் உள்ளனர்


  .நன்றி -மாலைமலர்


  ஆழ்ந்த அனுதாபங்கள்.
  ஏன் தான் இந்த தற்கொலை வியாதியோ
  Last edited by aanaa; 27th June 2014 at 05:19 PM.
  "அன்பே சிவம்.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #42
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்

  எஸ்.எஸ். ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87. திமுகவில் சேர்ந்த எஸ்.எஸ்.ஆர். கட்சிக்காக பாடுபட்டார். கடந்த 1962ம் ஆண்டு அவர் தேனி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டசபைக்கு தேர்வானார். நம் நாட்டிலேயே எம்.எல்.ஏ.வான முதல் நடிகர் எஸ்.எஸ்.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது
  .


  http://tamil.filmibeat.com/news/lege...re-031426.html
  "அன்பே சிவம்.

 4. #43
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  "அன்பே சிவம்.

 5. #44
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like

  பிரபல சின்னத்திரை இயக்குநர் பாலாஜி யாதவ் தற்கொலை


  சின்னத்திரை உலகில் அதிகமான சீரியல்களை இயக்கியவர் பாலாஜி யாதவ். துளசி, அரசி, பந்தம், காய்த்ரி, புகுந்த வீடு, செல்வி, ரோஜா, லட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியவர். இத்தனை சீரியல்களை இயக்கிய பாலாஜி யாதவ் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது


  சமீபகாலமாக பெரும்பாலான தொலைக்காட்சிகளில் இந்தி டப்பிங் சீரியல்களே ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறது. நேரடி சீரியல்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பலர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பகூடாது நேரடி சீரியல்களைத்தான் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகிறார்கள். நடிகர்கள் சங்கம் இதற்காக ஒரு போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருந்துது. இந்த நிலையில் பாலாஜி யாதவின் தற்கொலை சின்னத்தரை வட்டாரத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது.


  பாலாஜி யாதவின் மனைவி அளித்த பேட்டியில் "டப்பிங்க சீரியல்கள் நிறைய வந்து விட்டதால் என் கணவருக்கு வேலை வாய்ப்பில்லை. ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல் இருந்தார். வருமானத்தை நம்பி அப்பார்ட்மெண்டில் ஒரு வீடு வாங்கினோம். அதற்கு தவணை செலுத்த முடியவில்லை. குழந்தை பாக்கியம் இல்லாததால் தத்தெடுத்து ஒரு குழந்தை வளர்த்தோம். தற்போது அதை வளர்க்க முடியாமல் பெற்றவர்களிடமே கொடுத்து விட்டோம். இந்த மன வேதனை தாளாமல்தான் என் கணவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.


  இதுகுறித்து சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவர் கவிதா பாரதி கூறும்போது "பாலாஜி யாதவின் மரணம் எதிர்பாராத அதிர்ச்சியாகும். சமீபகாலமாகவே பிறமொழி தொடர்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் எங்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. தொலைக்காட்சி நிறுவனங்கள் டப்பிங் சீரியல்களை கைவிட வேண்டும்" என்றார்.


  சின்னத்திரை கலைஞர்கள் பாலாஜி யாதவின் உடலுக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். விரைவில் சின்னத்திரை கலைஞர்களின் கூட்டமைப்பின் அவசரக்கூட்டம் நடக்கிறது. அதில் டப்பிங் சீரியல்கள் குறித்து சீரியாசன முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.


  நன்றி: தினமலர்
  "அன்பே சிவம்.

 6. #45
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like

  திமுகவின் பிரசார பாடகரும், திரைப்படப் பாடகருமான நாகூர் ஈ.எம். ஹனிஃபா (97) சென்னையில் புதன்கிழமை காலமானார்.


  கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது இரவு 8 மணியளவில் திடீரென அவர் உயிர் பிரிந்தது.


  கருணாநிதியின் சிறு வயது நண்பர்களில் ஒருவர். இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் மூலம் பெரிதும் புகழ் பெற்றவர். சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவராகவும் இருந்தவர்.


  திரைப்படத்திலும் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். "இறைவனிடம் கையேந்துங்கள்', "உன் மதமா, என் மதமா' போன்ற அவரின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அவருக்கு 2 மகன்கள் 4 மகள்கள் உள்ளனர்.


  திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நாகூரில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.


  நன்றி: தினமணி
  "அன்பே சிவம்.

 7. #46
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  சின்னத்திரை இயக்குநர் விடுதலை காலமானார்!


  பிரபல சின்னத்திரை இயக்குநர் விடுதலை காலமானார். அவருக்கு வயது 52.


  எத்தனை மனிதர்கள், வார்த்தை தவறிவிட்டாய், அக்கினிசாட்சி, ஆனந்தம், ;அவளும் பெண் தானே, குறிஞ்சி மலர்


  போன்ற சின்னத்திரை சீரியல்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சின்னத்திரை கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் வசித்து வந்த விடுதலை, இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிசடங்கு நாளை அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடக்க இருக்கிறது. விடுதலையின் மறைவுக்கு சின்னத்திரை கலைஞர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
  "அன்பே சிவம்.

 8. #47
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  நடிகை ஆச்சி மனோரமா உடல் நலக்குறைவால் மரணம்!  சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.
  தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள்.
  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார்.
  மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர்

  மனோரமா. பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.
  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
  "அன்பே சிவம்.

 9. #48
  Senior Member Veteran Hubber rajeshkrv's Avatar
  Join Date
  Nov 2004
  Posts
  940
  Post Thanks / Like
  Sarakku vechirukken female singer Radhika thilak passed away in sep


 10. #49
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  "அன்பே சிவம்.

 11. #50
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  பிரபல தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகினர் -
  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த். நடனம், மிமிக்ரி என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். வடகறி படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமானது. இந்நிலையில் இன்று இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


  தற்கொலை செய்து கொண்ட சின்னித்திரை நடிகர் சாய் பிரசாந்த் இல்லத்தில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கடிதத்தில், எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு என்று தனது மனைவி சுஜிதாவுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ள அவர், நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.


  தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கியவர் சாய் பிரசாந்த். நேரம், வடகறி உள்ளிட்ட பல படங்களிலும் நடிக்கத் துவங்கிய நிலையில் அவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


  இந்நிலையில் தனது மனைவி சுஜிதாவின் மீது வைத்திருந்த அதீத காதலும், மனைவியின் பிரிவுமே அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட சாய் பிரசாந்த் இரண்டு பக்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


  அதில், எனது அன்புக்குரிய சுஜிதா சாய் பிரஷாந்துக்கு


  உன் மீது அதீத காதல் வைத்திருந்தேன். மன இறுக்கம் காரணமாக உன்னை நான்கு முறை அடித்தேன். ஆனால் கவலைப்படாதே, எனது மரணம் உனக்கு எந்த வகையிலும் இடையூறு அளிக்காது. எனது மரணத்திற்கு கண்டிப்பாக நீ காரணமாக இருக்க முடியாது. ஒரு சத்தியம் மட்டும் செய்கிறேன். உனது 33 சவரன் நகை கண்டிப்பாக திரும்பி வரும்.


  எனது காதல் எப்போதும் உண்மையானது. நான் செல்வதால் தயவு செய்து அழாதே, ரக்*ஷிதாவும் தான் (மகள்). என் பெற்றோர்கள் கண்டிப்பாக உன்னையும் உனது குடும்பத்தாரையும் கேள்வி கேட்க மாட்டார்கள். உன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி சொல்லவும். நான் மட்டுமே எனது மரணத்திற்குக் காரணம்.


  என் பெற்றோர் உனக்கு ஐந்து லட்சம் பணமும், உனது நகையும் கொடுப்பார்கள். எனது மரணத்திற்குப் பிறகாவது தயவு செய்து உனது கோபத்தை விட்டுவிடு. நான் ரக்*ஷிதாவுக்கு எப்போதும் ஒரு நல்ல அப்பா . மிஸ் யூ ரக்*ஷிதா, சுஜிதா, அம்மா, அப்பா, சுஜி சித்தப்பா, நிரஞ்சனா குடும்பம், ராகுல் மற்றும் ரோகித், சுஜிதா குடும்பம், மற்றும் சரவண குமார்.


  ரக்*ஷிதாவின் புரிதலுக்கு ஒரு கண்டிஷன். யாரும் சண்டையிடவோ அழவோ கூடாது. நான் மட்டுமே எனக்கு பிரச்னை. எல்லோருடனும் இணைப்பில் இருக்கவும், புரிந்துகொள். ராடான் மீடியா முக்கியமாக சன் நெட்வொர்க், என் அம்மா (ராதிகா சரத்குமார்) ஆகியோருக்கு நன்றி. மிஸ் யூ லாட் அம்மா, ரக்*ஷிதாவுக்கு எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு.


  லவ் யூ தாமரை டீம், மற்றும் சுகுமார் அண்ணா. நன்றி நிரஞ்சனா குடும்பத்தார். லவ் யூ மேட்லி சுஜிதா சாய் பிரசாந்த் ..உம்மா, டேக் கேர் எவ்ரிபடி உங்களை எல்லாம் சிரிப்புடன் விட்டுச் செல்கிறேன் என்று உருக்கமாக கடிதத்தில் கூறியுள்ளார்.
  Last edited by aanaa; 15th March 2016 at 09:16 PM.
  "அன்பே சிவம்.

Page 5 of 6 FirstFirst ... 3456 LastLast

Similar Threads

 1. Cine Quiz
  By Plum in forum Tamil Films
  Replies: 1972
  Last Post: 5th July 2015, 04:22 PM
 2. Cine Quiz
  By Thirumaran in forum Tamil Films
  Replies: 1490
  Last Post: 31st December 2009, 02:10 PM
 3. Your Top 10 Cine Personalities
  By Thirumaran in forum Tamil Films
  Replies: 168
  Last Post: 11th July 2007, 04:23 PM
 4. Cine quiz
  By Oldposts in forum Tamil Films
  Replies: 116
  Last Post: 24th December 2004, 05:49 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •