View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 21 of 159 FirstFirst ... 1119202122233171121 ... LastLast
Results 201 to 210 of 1587

Thread: new serials/programs

  1. #201
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வளைந்த நாணல்
    குஷ்பு தயாரிக்கும் நாணல் மெகா தொடரை இரட்டை இயக்குனர்கள் ராபர்ட்-ராஜசேகர் இயக்க ஒப்புக்கொண்டு இயக்கி வந்தனர். 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்கத்துக்காக ஒன்றுசேர்ந்த இந்த இயக்குனர்கள், இயக்கத்தொடங்கி 18 நாட்களுக்குள் என்ன நடந்ததோ தெரியாது... இப்போது இருவரும் தொடரில் இருந்து விலகிக் கொண்டு விட்டனர்.
    dailythanthy-muthusaram
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #202
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    காட்ல மழை
    புதுவருஷ கொண்டாட்டத்தில் இந்த ஆண்டு அதிக உற்சாகம் சின்னத்திரை வட்டாரத்தில் தான். அதுவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்மு காட்டில் கனமழை என்றே சொல்ல வேண்டும். புத்தாண்டின் முதல்நாளும் அதுவுமாய் நாமக்கல், சேலம், ராசிபுரம் என ஒரே நாளில் மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கைநிறைய காசு பார்த்தவர் இவர்தான்.
    dailythanthy-muthusaram
    "அன்பே சிவம்.

  4. #203
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கோகுலத்தில் சீதை -கலைஞர் தொலைக்காட்சி
    கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் `கோகுலத்தில் சீதை' தொடர், பல திருப்பங்களோடு அடுத்த கட்டத்தை நோக்கி தனது பயணத்தை தொடர்கிறது.

    தனது கணவனால் பல விதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சீதா, கணவன் கொடுத்த குற்றச்சாட்டின் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறைவாசம் முடிந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக கோடீஸ்வரி ஆகிறாள்.

    இதற்கிடையில், மறுமணம் செய்து கொள்ள இருந்த தனது கணவனின் முயற்சியை முறியடிக்க எடுக்கும் காட்சிகளை அடுத்து வரும் எபிசோடுகளில் காணலாம்.

    நடிகை சங்கவி முதன் முதலாக சீதா என்ற புரட்சிப்பெண் பாத்திரத்தில் நடிக்கிறார். தொடரை இயக்குபவர்: சி.ஜே.பாஸ்கர்.
    dailythanthy-muthusaram
    "அன்பே சிவம்.

  5. #204
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் மனிதர்
    வழக்கம்போல பிரபலமான சுற்றுலாத்தலங்களைக் காண்பிப்பதற்குப் பதிலாக, பல்வேறு உள்ளூர் கலாசாரங்களைப் பற்றி நேரடியாக அறியத் தருகிறது இந்த நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை வழங்குபவர் உள்ளூர் மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும்விதமாக ஒரு பாரம்பரியத் திருமணத்தில் கலந்துகொள்கிறார், சுரங்கத் தொழில் செய்யும் ஒரு சமூகத்தைச் சந்திக்கிறார். வழிகாட்டியாக மாறிய ஒரு சுற்றுலாவாசியைப் போல நிகழ்ச்சித் தொகுப்பாளர், டி.வி. நேயர்களிடம் நேரடியாகப் பேசுகிறார். அத்துடன் உள்ளூர் மக்களுடன் உரையாடுகிறார், ஆர்வமூட்டும் இடங்களை வெளிக்கொணர்கிறார். அத்துடன், தன்னிச்சையாகப் பயணம் மேற்கொள்வது குறித்து தனியே பயணிக்கும் சுற்றுலாவாசிகளிடம் சுருக்கமாக `டிப்ஸ்' பெறுகிறார், இந்நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

    டிஸ்கவரியின் `டிராவல் அண்ட் லிவிங்' சேனலில் வருகிற திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் 1 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
    dailythanthy-muthusaram
    "அன்பே சிவம்.

  6. #205
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மக்கள் விருது 2008 - மக்கள் தொலைக்காட்சி

    மக்கள் தொலைக்காட்சியில் இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக 2008-ம் ஆண்டில் தமிழ் சமூகத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு மக்கள் விருது வழங்கி சிறப்பு செய்யும் நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

    இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் சாதனை புரிந்தவர்களுக்கும், மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல், விளையாட்டு, அறிவியல் என்று துறைதோறும் தங்களது திறமைகளை பதித்த சாதனையாளர்களுக்கும் இந்த 2008-ம் ஆண்டிற்கான மக்கள் விருது வழங்கப்பட உள்ளது.

    இந்த ஆண்டிற்கான மக்கள் விருது பெறும் 31 சாதனைத் தமிழர்கள் பற்றிய தகவல்களை பொங்கல் தினத்தில் மாலை 6.03 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் காணலாம்.
    dailythanthy-muthusaram
    "அன்பே சிவம்.

  7. #206
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    புதிய கோணங்கிகள் -மக்கள் தொலைக்காட்சி
    மக்கள் தொலைக்காட்சியில் போகி முதல் காணும்பொங்கல் வரை தொடர்ந்து நான்கு நாட்கள் 96 மணி நேரம் விடிய விடிய நிகழ்ச்சியை வழங்க இருக்கிறது, மக்கள் தொலைக்காட்சி.

    மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நகைச்சுவை கலந்த சிந்தனைகளை வாரி வழங்கும் புதிய கோணங்கிகள், நான்கு நாட்களும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களில் வாழும் மக்களின் இன்றைய நிலையினை நகைச்சுவையுடன் காட்சிப்படுத்துகிறார்கள். நகைச்சுவை கலந்த பாடல்களுடன் பிரகதீசுவரன் - செந்தில் ஜோடி வழக்கத்திற்கு மாறாக இரவு நேரத்தில் கலக்க வருகிறார்கள்.

    4 நாட்களும் ஒளிபரப்பு நேரம் தினமும் இரவு 10.30 மணி.
    dailythanthy-muthusaram
    "அன்பே சிவம்.

  8. #207
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மல்லுக்கட்டு
    ஆண்டுதோறும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை வித்தியாசமாக வழங்கும் மக்கள் தொலைக்காட்சி, இந்த ஆண்டும் புதிய புதிய வடிவங்களில் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளது.

    ஜல்லிக்கட்டு கேள்விப்பட்டிருக்கிறோம், அது என்ன மல்லுக்கட்டு என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? ஜல்லிக்கட்டில் களமாடும் காளைகளைப் போல வண்ணமயமான பிரமாண்ட அரங்கில் தோன்றும் காளையர்கள் தங்களது ஆற்றலை பல்வேறு விதங்களில் காட்டி நேயர்களை ரசிக்க வைக்கிறார்கள்.

    காணும் பொங்கல் அன்று இரவு 7 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரேவதி.
    dailythanthy-muthusaram
    "அன்பே சிவம்.

  9. #208
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மறக்க முடியுமா? -கலைஞர் தொலைக்காட்சி
    கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 10.15 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது ``மறக்க முடியுமா?'' சாதனைத் தொடர்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், காதல் மன்னன் ஜெமினி கணேசன் நாட்டிய பேரொளி பத்மினி இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை, ``மறக்க முடியுமா?'' நிகழ்ச்சியின் மூலம் கண்டு களித்த நேயர்கள், நாளை காலை 10.15 க்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை காணலாம். இந்

    நிகழ்ச்சி, தொடர்ந்து அடுத்த நான்கு வாரங்கள் ஒளிபரப்பாகும்.
    dailythanthy-muthusaram
    "அன்பே சிவம்.

  10. #209
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஹாய் செல்லமே'' - வசந்த் டிவி
    குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வசந்த் டிவியின் புதிய நிகழ்ச்சி `ஹாய் செல்லமே'. சிறுவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் மூளைத் திறனை, புத்திசாலித்தனத்தை வளர்க்கும் அறிவு சார்ந்த இந்த நிகழ்ச்சி, விரைவில் ஒளிபரப்பாகிறது.

    இந்த நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

    மொத்தம் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒரு குழுவில் 5 முதல் 10 பேர் வரை பங்கு பெறுகிறார்கள்.
    dailythanthy-muthusaram
    "அன்பே சிவம்.

  11. #210
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    புலன் விசாரணை - வசந்த் டிவி
    நடந்த குற்றத்தின் முழு பின்னணி பற்றி ஆராயும் புதிய நிகழ்ச்சி, `புலன் விசாரணை.' பரபரப்பாக பேசப்படும் குற்றங்களிலிருந்து, ஒன்றை எடுத்துக் கொண்டு அந்த குற்றம் எப்படி நடந்தது? அதற்கான பின்னணி காரணம் என்ன? யார் யாருக்கு அதில் தொடர்பு இருந்தது, ஏன் அந்த குற்றம் நடந்தது? எப்படி நடந்தது? போன்ற விஷயங்கள், இந்த நிகழ்ச்சியில் அலசப்படுகின்றன.

    மேலும் குற்றம் நடந்த இடத்திற்கு சென்று, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. இது போக அந்த குற்றம் சமுதாயத்தில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும்? சமூக பார்வையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகளின் கருத்தும் கேட்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

    ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு வசந்த் டிவியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.
    dailythanthy-muthusaram
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •