View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
 • Thirumathi Selavam

  0 0%
 • Thendral

  1 100.00%
 • Chellame

  0 0%
 • Thangam

  0 0%
Page 3 of 159 FirstFirst 123451353103 ... LastLast
Results 21 to 30 of 1587

Thread: new serials/programs

 1. #21
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  தொடருக்கு பெயர் பெற்ற "டிவி'யாகி விட்டது கலைஞர் "டிவி' அந்த அளவுக்கு புதுப்புது தொடர்கள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளியாகி உள்ள தொடர், அழகான நாட்கள். பிரபு சங்கர் இயக்கியுள்ள இந்த தொடர் ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டது. திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1.30 மணிக்கு பாருங்கள்
  "அன்பே சிவம்.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #22
  Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
  Join Date
  Jan 2005
  Posts
  1,598
  Post Thanks / Like
  இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ``முல்லா'' நஸ்ரூதீன் நகைச்சுவைக் கதைகள் சின்னத் திரையில் இடம் பிடிக்கிறது.

  ஸ்ரீவாரி கம்பென்ஸ் நிறுவனத்தின் சார்பில் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.எஸ்.சோமநாதன், ஏ.பத்மராஜ் இணைந்து தயாரிக்கும் புதிய தொடர், ``ஆச்சி சொல்லைத் தட்டாதே''.

  நடிகை மனோரமா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த தொடரின் மூலம் முதல் முறையாக பிரபல காமெடி நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், சின்னத்திரைக்கு வருகிறார். மற்றும் நகைச்சுவை நடிகர்கள் வையாபுரி, பாலாஜி, சிவபாலாஜி, போண்டாமணி, குள்ளமணி, நடிகைகள் வடிவுக்கரசி, சுமித்ரா, நளினி, ஜெயலட்சுமி, தேவிப்பிரியா, எம்.ஆர்.கே. காளிதாஸ், மும்தாஸ் என தொடரில் நட்சத்திரப் பட்டியல் அதிகம்.

  திரைக்கதையை கே.பி.அறிவானந்தம் எழுத, வசனம் ஜி.கே. பாடல்கள்: கவிஞர் பூவை செங்குட்டுவன். இசை: சசி, கேமரா: லோகு- ஸ்ரீதர்.

  இயக்கம்: ஏ.பத்மராஜ்- எஸ்.ஏ.ஜானகிராமன்.

  இந்த நகைச்சுவைத் தொடர் அடுத்த மாதம் முதல் ஜெயா ப்ளஸ் டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.

 4. #23
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  சென்னை தொலைக்காட்சி முதல் அலைவரிசை மற்றும் பொதிகையில் செவ்வாய்தோறும் இரவு 7.30 மணிக்கு வெளியாகும் நகைச்சுவை தொடர் "சிரி , சிரி தினசரி!' அன்றாடம், வீட்டில், நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நகைச்சுவை உணர்வோடு சித்தரிக்கும் தொடர் இது. பாண்டு, காத்தாடி ராமமூர்த்தி, எம்.ஆர்.கே., மேனேஜர் சீனா, அடடே மனோகர், வெள்ளை சுப்பையா, திடீர் கன்னையா, கல்யாண்ஜி, எம்.டி.மூர்த்தி, கிருபா, வெங்கட்ராமன் மற்றும் நடிகைகள் எஸ்.என்.பார்வதி, நாகலட்சுமி, ஷோபனா, முல்லை மலர், ராஜேஸ்வரி, பேச்சியம்மா, ரேவதி, ஸ்ரீமதி ஆகியோர் நடிக்கின்றனர். நாகேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், சார்லி, சின்னி ஜெயந்த்,மதன்பாப் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். தொடரின் கதை, வசனம், கோபு பாபு; இசை பால பாரதி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஜெயசீலன்.
  "அன்பே சிவம்.

 5. #24
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  கலைஞர் "டிவி'யில், திங்கள் வெள்ளி தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும், கண்ணீர் இல்லா கதாநாயகியை கொண்ட தொடர், ரேகா ஐ.பி.எஸ்., இப்போது தான் ஆரம்பித்தது போல இருந்தது, அசுர வேகத்தில் 100 நாளை தாண்டி விட்டது. இனி அதிரடி திருப்பங்கள்; அசத்தல் காட்சிகள் தான்.
  "அன்பே சிவம்.

 6. #25
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  kanak kaanum kolankal vazhiyil
  SUNTV brings Kalluri Kalam - a new serial
  "அன்பே சிவம்.

 7. #26
  Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
  Join Date
  Jan 2005
  Posts
  1,598
  Post Thanks / Like
  more information about kaloori kaalam

  டிவைன் மீடியா என்னும் நிறுவனம் தயாரிக்கும் புதிய மெகா தொடர் "கல்லூரிக் காலம்.'' இளமை தவழும் இத்தொடர் சன் டிவியில் வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

  பானுசந்தர், டெல்லி கணேஷ், ராஜ்காந்த், அருண், சுருளி மனோகர், மஞ்சரி, கிருத்திகா, அனிஷா ஆகியோர் நடித்திருக்கும் இத்தொடரில் இதற்கு முன்பு திரையில் தோன்றி நடித்திராத 24 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.

  இது முழுக்க முழுக்க கல்லூரிப் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை. அதனால் தமிழகத்திலுள்ள பல கல்லூரிகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களும், மாணவிகளும் எப்படி எப்படி நடந்து கொள்கிறார்கள்? அவர்கள் எப்படிப்பட்ட மொழியில் பேசுகிறார்கள் என்பவற்றையெல்லாம் 6 மாதங்களுக்கும் மேலாக கவனித்து, அதை தொடரில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

  வழக்கமாக கல்லூரி கதைகளில், கல்லூரி வயதை மீறிய நடிகர்கள் நடிப்பதைத் தவிர்த்து கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையே தேர்வு செய்து நடிப்புப் பயிற்சி தந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். இத்தொடரில் நடித்திருக்கும் அனைவரும் சொந்தக் குரல்களிலேயே பேசியிருக்கிறார்கள்.

  `சாதகப் பறவைகள்' சங்கர் இசையமைக்கும் இத்தொடரின் டைட்டில் பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு: உதய். எடிட்டிங்: தாஸ்.

  எம்.நரேஷ் ஜெயின், "சாதகப்பறவைகள்'' சங்கர் இணைந்து தயாரிக்கும் இத்தொடரின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.பிரம்மா.

  சென்னை, கும்பகோணம், ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் "கல்லூரி காலம்'' பள்ளிப்பருவ சீருடைகளை விட்டு கல்லூரிக்கு கலர் கலரான உடைகளுடன் நுழையும் மாணவர்களின் கனவுகளை கண்களுக்கு முன்னால் நிறுத்தும் தொடர்'' என்கிறார் இதன் இயக்குனர் கே.பிரம்மா.

 8. #27
  Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
  Join Date
  Jan 2005
  Posts
  1,598
  Post Thanks / Like
  next news will be, the costumes designer of kaloori kaalam is booked to direct a serial

  TUTORIAL COLLEGE KAALANGAL

  for kalaigar tv.

 9. #28
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  அரவாணிகள் பற்றிய நிகழ்ச்சிதான் "இப்படிக்கு ரோஸ்!' விஜய் சேனலில் சில மாதம் முன் பரபரப்பாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி. தமிழ் சேனல்களில் இப்படி ஒரு நிகழ்ச்சி வருவது இதுவே முதன் முறை. இதை நடத்தும் ரோஸ், அமெரிக்காவில் பொறியியலில் மேற்படிப்பு படித்தவர்; அவரும் அரவாணி. அரவாணிகளை பேட்டி கண்டு, அவர்கள் வாழ்க்கை , முன்னேற்றம் பற்றி இந்நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்துவார் ரோஸ். வரும் 28 ம் தேதி முதல், ஒவ்வொரு வியாழன் இரவு 10 மணிக்கு , கண்டிப்பா பாருங்க.
  "அன்பே சிவம்.

 10. #29
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  ராமாயணம் தொடரை மீண்டும் என்டிடிவி ஒளிபரப்ப தொடங்கியுள்ளது. இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பார்த்ததும் மற்ற சானல்களும் பழைய பிரபல தொடர்களை தூசி தட்டி எடுத்து புது வடிவில் கொடுக்க தயாராகி வருகின்றன.

  1980களில் தூர்தர்சனில் கலக்கிய மகாபாரதம் மெகா தொடரை தற்போது ஸ்டார் பிளஸ் சானல் மும்முரமாக தயாரித்து வருகிறது. உலகிலேயே அதிக பாடல்கள் கொண்ட இதிகாசம் மகாபாரதம். இது 74 ஆயிரம் செய்யுள் கொண்டது.

  இதை மீண்டும் விறுவிறுப்பாக கொடுக்க ஸ்டார் பிளஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் மகாபாரதத்தை சின்னத்திரையில் நேயர்கள் கண்டு களிக்கலாம்.
  "அன்பே சிவம்.

 11. #30
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  ஆறு மனமே ஆறு 170 வாரத்தை தாண்டியது

  ராஜ் "டிவி'யில், வார நாட்களில் ஒளிபரப்பாகும் "ஆறு மனமே ஆறு' தொடர், 170 வாரத்தை தாண்டிவிட்டது. கடத்தி வைக்கப்பட்ட பாரதியை தனக்கு திருமணம் செய்து வைக்க மிரட்டுகிறார் ரவி. மிரட்டலுக்கு அபிராமி பணிகிறாரா? திருமணம் நடந்ததா? இல்லையா? அபிராமியாக நடிகை சீதா நடிக்கிறார். மற்றும் தீபன் சக்ரவர்த்தி, ஷண்முக சுந்தரம், ஜோதி, பிரபாகர் உட்பட பலர் நடிக்கின்றனர். மீனாட்சி: திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் மீனாட்சி. தாய், தந்தையரை இழந்த மீனாட்சி, எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறாள் என்பது தான் கதை. கதையில் காதலும் உண்டு. தாரிகாவின் நடிப்பு யதார்த்தம். கண்ணியம்: மனித உறவுகளிடையே பாசப்பிணைப்பு போராட்டம் தான் கதை. பெண்களின் வரவேற்பை பெற்ற தொடர், வார நாட்களில் இரவு 9.30 மணிக்கு.
  "அன்பே சிவம்.

Page 3 of 159 FirstFirst 123451353103 ... LastLast

Similar Threads

 1. Vijay tv going to start 2 new programs
  By anbupani in forum TV,TV Serials and Radio
  Replies: 1
  Last Post: 7th October 2009, 01:58 AM
 2. Programs that you enjoy watching on TV
  By Anoushka in forum TV,TV Serials and Radio
  Replies: 107
  Last Post: 15th July 2008, 04:41 AM
 3. IR in TV Serials
  By RR in forum Ilaiyaraja (IR) Albums
  Replies: 4
  Last Post: 16th July 2007, 01:12 PM
 4. which channel do you think has the most creative programs?
  By mirattalji in forum TV,TV Serials and Radio
  Replies: 20
  Last Post: 18th November 2006, 01:45 AM
 5. Pongal Programs
  By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
  Replies: 1
  Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •