Page 17 of 46 FirstFirst ... 7151617181927 ... LastLast
Results 161 to 170 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #161
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik
    Quote Originally Posted by aanaa
    கிட்டத்தட்ட 25 வருட சினிமா அனுபவம் பெற்றவர் தீபா வெங்கட்.
    onnum printing mistake illaiyE...

    Because if we calculate with this, her gae comes 40+ now.
    But she she still looks like 20+ age.
    http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htm

    மிகப் பழைய நாடகமான குடும்பம்(?) ஜெய்கணேஷின் பேத்தியாக வந்த ஞாபகம் ...
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #162
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சிரிப்பை நிறுத்தலாமா சோனியா?

    'செல்லமே'- தொடரில் சம்பந்தமே இல்லாமல் சிரிச்சுக்கிட்டே இருக்கும் சோனியாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.​

    ''என்னங்க இப்படித் திடீர்ன்னு சிரிப்பதை விட்டு விட்டு பழிவாங்குதில் இறங்கிட்டீங்க'' என்றவுடன் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி விட்டவரை நிறுத்தி சற்று சீரியஸôகப் பேச வைத்தோம்:​ ​

    'ஆமாம்.​ இப்போது சிரிக்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.​ கதையோட களம் எல்லாம் மாறிப்போனதுனால இப்போது சிரிக்க முடியவில்லை.​ இருந்தாலும் சிரிப்பதற்கு முயற்சி செய்துகிட்டுத்தான் இருக்கிறேன்.​ இந்தத் தொடரில் என் அம்மா இறந்துபோன பிறகு கதை கொஞ்சம் மாறி ரொம்ப சீரியஸôன சீன்ஸ் போய்க்கிட்டு இருக்கிறது.​ ராதிகா மேடமை எதிர்த்து யாராவது சண்டை போட வேண்டியிருப்பதினால்,​​ அது நாத்தனாராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் என்னால் சிரிக்க முடியாமல் போய்விட்டது.​ எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்துவிடலாம்.​ ஆனால்,​​ எல்லாரையும் சிரிக்க வைப்பதுதான் சிரமம்.​ ​ ​

    இந்தச் சிரிப்பு பாத்திரத்திற்காகவே வீட்டிற்குப் போய் கண்ணாடி முன்னால நின்று ஒரு மணிநேரம் சிரித்துப் பழகுவேன்.​ என் கணவர் பார்த்துவிட்டு உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்பார்.​ கொஞ்ச நாள் அந்த மாதிரியேதான் திரிந்தேன்.​ வெளியில் போகிறபோது சின்னச்சின்ன குழந்தைகள்கூட என்னைப் பார்த்ததும் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள்.' ​

    இப்பொழுது எத்தனை தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

    'செல்லமே', ​ 'மாதவி' என்று இரண்டு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.​ இரண்டுமே வேறுவேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள்.​ 'செல்லமே'வில் எல்லாரும் திட்டுவது மாதிரி பாத்திரம்.​ மாதவியில் எல்லாரும் பார்த்து பரிதாபப்படுகிற பாத்திரம்.​ இப்படி ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான பாத்திரங்கள் செய்வது நல்ல அனுபவமாக இருக்கிறது.​ அதோடு 'ராம ராவணன்','மூன்று முகம்' என சில மலையாள படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.​ ​

    உங்கள் கணவரை இப்பொழுது தொடர்களில் பார்க்க முடியலையே?​ ​

    மூன்று வருடங்களாக அவர் தொடர்களில் நடிப்பதில்லை.​ இது வரை மூன்று தொடர்களில்தான் நடித்திருக்கிறார்.​ பெரியதிரை வாய்ப்பு வந்ததால் அங்கு சென்று விட்டார்.​ தற்போது 'ரசிக்கும் சீமானே',​​ 'ஆறாவது வரம்' போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

    உங்கள் கணவரும் நீங்களும் நடிப்பைப் பற்றி விவாதிப்பீர்களா?

    நான் நடிக்கும் தொடரைப் பார்ப்பதற்கு அவருக்கு நேரம் இருக்காது.​ நான் சிறுவயதில் இருந்து நடிப்பதால் என்னிடம் ஆலோசனை கேட்பார்.​ விமர்சனங்கள் எதுவும் சொல்ல மாட்டார்.​ ஆனால் என் திறமைக்கேற்ற பாத்திரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உண்டு.​ ​

    சின்னத்திரை அல்லது சினிமாத்துறை இப்பொழுது எப்படி இருக்கிறது என்று நினைக்கிறிர்கள்?

    எல்லாத் துறையும் நன்றாக வளர்ந்திருக்கிறது.​ ஆரோக்கியமாகவும் இருக்கிறது.​ நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது பேபி அஞ்சு,​​ மீனா,​​ சாலினி என்று மூன்று நான்கு பேர் தான் இருப்போம்.​ இப்போது ஏகப்பட்ட படங்கள் வருகின்றன.​ ஏகப்பட்ட பேர் நடிக்கிறார்கள்.​ இது வளர்ந்திருப்பதைத்தானே காட்டுகிறது.​ இடையில் ​ கொஞ்ச நாள்களுக்கு முன் கிளாமருக்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருந்தது.​ ஆனால் இப்போது அந்த நிலைமையும் மாறிவிட்டது.​ புதுமுகங்களும் திறமை காட்டுவதற்கு ​ ​ நிறைய வாய்ப்பு இருக்கிறது.​ அதுபோல சினிமா என்றாலே ஒரு தப்பான துறை என்கிற மாதிரியான கருத்துகள் இருந்தன.​ அதுவும் இப்போது மாறிப்​ போய்விட்டது.

    உங்கள் குழந்தைகள் பற்றி சொல்லுங்க?

    என் மகன் தேஜஸ்வின்னுக்கு ஐந்து வயதாகிறது.​ என் மகள் பவதாரணிக்கு ஒரு வயது தான் ஆகிறது.​ என் அப்பா,​​ அம்மாவும் என் சித்தியும்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.​ பெரியவனாவது என்னோடு கொஞ்சம் நாள் இருந்தான்.​ ஆனால் மகள் தான் எட்டு மாதத்தில் இருந்தே அம்மாவிடம் வளர்ந்து வருகிறாள்.

    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

  4. #163
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஞாயிறு கொண்டாட்டம்
    லட்சிய நடிப்பு

    "தங்கம்' தொடரில் வரும் வடிவு என்றாலே இளவஞ்சிக்கு வயிற்றில் புளிதான். வடிவைக் கொஞ்சம் நமது வாசகர்

    களுக்காக சீண்டி பார்ப்போமே என்று சின்னத்திரை நடிகை வர்ஷாவை தொடர்பு கொண்டோம். இன்று

    ஷூட்டிங் இல்லை ஜாலியா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சுந்தர தெலுங்கு கலந்த தமிழில் கூறினார். அவரைச் சந்தித்தோம்.

    உங்கள் குடும்பத்தினர் பற்றி சொல்லுங்கள்?

    என் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் ஹைதராபாதில் உள்ளார்கள். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்குதான். நான் முஸ்லீம் மதத்தை சார்ந்தவள். இங்கே சென்னையில் என் அத்தை, மாமாவோடு தங்கியிருக்கேன்.

    என்ன என்ன தொடர்கள் நடிச்சுகிட்டு இருக்கீங்க?

    "தங்கம்', "இதயம்', "அம்மன்', "கஸ்தூரி' என நான்கு தொடர்கள் நடிக்கிறேன். இந்த நாலு தொடரிலுமே நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்துகிட்டு இருக்கேன். இப்படி வேற வேற டிபரண்ட்டா செய்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. "தங்கம்'ல கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். "கஸ்தூரி'யில் மென்மையான கேரக்டர், "அம்மன்' தொடரில் போலீஸ் ஆபிசரா வருவேன். "இதயம்' தொடரில் இப்பொழுது தான் என் போர்ஷன் ஆரம்பமாகி இருக்கு அதுவும் நெகட்டீவ் ரோல் தான். அதற்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்று இனிமேதான் தெரியும்.

    "தங்கம்' தொடரில் இளவஞ்சியை எதிர்த்து வெளுத்து வாங்குறீங்களே, எப்படி?

    அந்த சீரியலில் காவேரி அக்காதான் எப்பவுமே எல்லாரையும் டாமினேட் செய்வாங்க. ஆனா நான் அவுங்களுக்கு டென்ஷன் கொடுக்கிற மாதிரி எதிர்த்து சண்டை போடுவேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கிறது. அதனாலயே என் கேரக்டர் மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆகியிருக்கிறது. வெளியே எங்கயாவது ஆடியன்ஸ் பார்த்தாகூட "எப்பங்க உங்களுக்கு கல்யாணம். நீங்க கல்யாணமாகி அங்கே போங்க அப்ப தான் நல்லா இருக்கும். நீங்க ரெண்டு பேரும் ஸ்கிரீன்ல வந்தாலே ரொம்ப இன்ட்ரஸ்ட்டா பார்ப்போம்'னு சொல்லுவாங்க.

    நீங்கள் எப்படி சினிமாவைத் தேர்ந்தெடுத்தீங்க?

    சின்னவயதில் எங்கள் வீட்டில் டிவி எல்லாம் பார்க்க கூடாது. ஒரே ஒரு ரேடியோ தான் இருக்கும் அது கூட எங்க அப்பாதான் வைத்திருப்பார். சின்ன வயதில் இருந்தே எனக்கு டிவியில் வருபவர்கள் போட்டிருக்கும் நகைகள்,டிரஸ் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாக இருக்கும்.

    அதற்காகவே டி.வி. பார்ப்பேன். காலேஜ் முடிச்சதும் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன். மாடலிங்கில் இருக்கும்போதுதான் "லட்சியம்' என்ற தொடரின் டைரக்டர் என்னைப் பார்த்துவிட்டு இந்தக் கேரக்டரை நான் செய்தால் நல்லா இருக்கும் என்று சொன்னார். அதுதான் என்னோட ப்ர்ஸ்ட் சீரியல். அதன் பிறகு பாலாஜி டெலி ஃபிலிம்ஸ் மூலமாக மற்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

    ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?

    நடனம் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஏதாவது பாட்டுபோட்டுவிட்டு நானும் என் சிஸ்டரும் ஆடிக்கிட்டு இருப்போம். கலா மாஸ்டரோட சிஸ்டர் ஜெயந்தி அக்காவிடம் தான் நடிகர் சங்கத்துல போய் டான்ஸ் கற்றுக்கொண்டேன். நடிப்புக்கு அடுத்தபடியா எனக்கு டான்ஸ்தான் ரொம்ப பிடிக்கும்.

    டான்ஸ் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கும் நீங்கள் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லையே ஏன்?

    தொடர் முடிந்ததும், டான்ஸ் பிராக்டிஸ் போகணும். ஏற்கனவே இத்தனை தொடர்கள் போய்கிட்டு இருக்கு. நேரம் கிடையாது. இதற்கு மேல டான்ஸ் எடுத்துகிட்டா ரொம்ப கஷ்டமாகிவிடும். நடிப்பில் சரியா கவனம் செலுத்த முடியாது. ஒர்க் லோட் அதிகமாகிவிடும். சின்னத்திரை நிகழ்ச்சி, நட்சத்திர விழா எல்லாம் வரும் போது டான்ஸ் நிகழ்ச்சிகள் செய்யணும்னு ஆசை இருக்கு. ஆனால் போட்டிகள்ல கலந்துக்க விருப்பமில்லை.

    ரம்யாகிருஷ்ணோட நடிக்கும் அனுபவம் எப்படி?

    நான் அவருடைய படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். அப்பவே எனக்கு அவரைப் ரொம்ப பிடிக்கும். ஆனால் படத்தில் பார்த்ததற்கும் இப்போது நேரில் பார்ப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. ஒரு சாதாரண குடும்ப பெண் எப்படி இருப்பாங்களோ, பழகுவாங்களோ

    அப்படிதான் பழகுவாங்க. பெரிய ஹீரோயின் என்ற பந்தாஎல்லாம் அக்காவிடம் கிடையாது. யார் எந்த சீன் நல்லா நடித்தாலும் உடனே நீ நல்லா செய்த நல்லா இருந்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று பாராட்டுவாங்க.

    பொட்டு வைத்து பூ வைத்துக் கொண்டு தமிழ் பெண்ணாக நடிக்கும்பொழுது உங்கள் நடிப்பைப் பார்த்து வீட்டில் என்ன சொல்லுவார்கள்?

    சொல்லப் போனால் எங்கள் குடும்பத்தில் பலருக்கு நான் நடிப்பதே தெரியாது. எனக்கு பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்து கொள்வது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

    சமீபத்தில் பெண்கள் தினம் வந்ததில்லையா அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?

    ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பெண்களுக்காக ஒரு தினம் வைத்து கொண்டாடுவது பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் தானே? என்னை பொருத்தவரை பெண்கள் யாரும் அடிமையாக இருக்க கூடாது. சுதந்திரமா செயல்படணும். எப்பவும் தன்னம்பிக்கையோட இருக்கணும்,யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு நினைப்பேன்.

    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

  5. #164
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    திருமணம் திருப்பு முனையாக இருக்கும்!

    "கோலங்​கள்" தீபா வெங்​கட் என்​றால் தெரி​யா​த​வர்​களே

    கிடை​யாது.​ அந்த அள​வுக்கு இல்​லத்​த​ர​சி​க​ளின்

    மனங் ​க​ளை​யும் கொள்ளை கொண்​ட​வர்.​ பெரி​ய ​தி​ரை​யில் பின்​ன​ணி​கு​ரல் கொடுப்​ப​வ​ரா​க​வும்,​​ ரேடி​யோ​வில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வரு​கி​றார் தீபா.​ இதோ அவ​ரது வசீ​க​ரக் குர​லில் ​ நமது கேள்​வி​க​ளுக்குப் பதி​ல​ளிக்​கி​றார்..​ ​ ​

    * தொலைக்​காட்சி தொடர்​க​ளில் உங்​களை நிறைய பார்க்க முடி​ய​வில்​லையே,​​ ஏன்?​​

    இது ​வரை நிறைய தொடர்​க​ளில் நல்ல நல்ல ரோல்ஸ் ​ நடித்​தி​ருக்​கி​றேன்.​ அதற்​காக ஆடி​யன்ஸ் ​ கிட்ட பாராட்​டு​க​ளும் வாங்​கி​யி​ருக்​கி​றேன்.​ இப்​போது என்​னு​டைய எதிர்​பார்ப்​புக்கு ​ ஏற்ற மாதிரி ரோல் அமை​ய​வில்லை.​ நிறைய தொடர்​கள் நடிக்​க​வேண்​டும் என்​ப​தில்லை.​ ஒரு சில தொடர்​கள் நடித்​தா​லும் அது மக்​கள் மன​தில் நிற்க வேண்​டும் என்று நினைக்​கி​றேன்.​

    நான்கு மாதங்​கள் வரை தொடர்​கள் நடிக்க வேண்​டாம் என்று முடிவு செய்​தி​ருந்​தேன்.​ அந்த நேரத்​தில்​தான் டைரக்​டர் விஸ்​வ​நா​தன் "வாடகை வீடு' தொட​ரைப் பற்றி சொன்​னார்.​ அது இரண்டு நாய​கி​கள் கதை.​ இருந்​தா​லும் இரண்டு பேருக்​குமே முக்​கி​யத்​து​வம் உள்ள கதை.​ அந்த ஸ்கி​ரிப்ட் எனக்​குப் பிடித்​தி​ருந்​தது.​

    சந்​தோ​ஷி​யும் நானும் நடிக்​கி​றோம்.​ வாடகை வீட்​டில் குடி​யி​ருப்​ப​வர்​க​ளின் சொந்த வீடு பற்​றிய கன​வு​ம் அதற்​காக அவர்​கள் சந்​திக்​கும் பிரச்​னை​யும்​தான் கதை.​ அது ஒரு காமெடி தொடர்.​ இதில் நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்​பத்தைச் சார்ந்த பெண்​ணாக நடிக்​கி​றேன்.​ என் கேரக்​டர் பெயர் பூஜா.​ ​

    * இன்​றைய ​ சின்​னத்​தி​ரை​யில் நடிப்​ப​தற்கு நிறைய பெண்​கள் வந்​து​விட்​டார்​கள்.​ அது உங்​க​ளுக்​குப் போட்​டி​யாக இருக்​கும் என்று நினைக்​கி​றீர்​களா?​​

    அப்​படி யாரை​யும் நான் போட்​டி​யாக ​ நினைப்​ப​தில்லை.​ இது ​ போன்று நிறைய புது​மு​கங்​கள் ​ வரும்பொழுது அது ஒரு ​ ஆராக்​கி​ய​மான போட்​டி​யாக ​ தான் இருக்​கும்.​ என் திறமை ​ மீது எனக்கு நிறைய ​ நம்​பிக்கை இருக்​கி​றது.​ இந்த மாதிரி ஆரோக்​கிய போட்​டி​கள் வரும்​போ​து​தான்,​திற​மை​கள் வெளியே தெரி​யும்.​ அதுவே தங்​களை இந்த பீல்​டில் தக்க வைத்​துக் கொள்ள ஒரு முயற்​சி​யாக இருக்​கும்.​ ​

    * பெரி​ய ​தி​ரை​யில் ​ நடிப்​ப​தற்குச் சின்​னத்​திரை நடி​கை​கள் விரும்​பு​வ​தில்​லையே?​ ஏன் நீங்​க​ளும் சின்ன சின்ன கதா​பாத்​தி​ரத்​தில்​தான் வரு​கி​றீர்​கள் அதைப் பற்றி என்ன நினைக்​கி​றீர்​கள்?​ ​

    பெரி​ய ​தி​ரை​யில் ​ நீடிக்க வேண்​டும் ​ என்​றால் கொஞ்​சம் கிளா​ம​ரா​க​வும் நடிக்க வேண்​டும்.​ கிளா​ம​ரா​க​வும் ரொமான்​ஸô​க​வும் நடித்​தால்​தான் மக்​கள் ஏற்​றுக்​கொள்​கி​றார்​கள்.​ இது தவிர்க்க முடி​யா​தது.​ ஒரு படத்​தில் இரண்​டா​வது நாய​கி​யாக நடித்​து​விட்​டால் அதற்குப் பிறகு சில வரை​மு​றை​களைக் கடை​ப்பி​டிக்க வேண்​டி​யி​ருக்​கி​றது.​ என்​னு​டைய லிமிட்டுக்​குள்ள வரு​கிற படங்​க​ளில் மட்​டுமே நான் நடிக்​கி​றேன்.​ அப்​படி என்​னு​டைய லிமிட்டைத் தாண்டி நடித்​தால் எனக்​கும் ​ நிறைய வாய்ப்​பு​கள் வரும்.​ இப்​போது தங்கை கேரக்​டர்​கள் நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ ​

    * நீங்​கள் டைரக்ட் செய்ய ​ போகி​றீர்​க​ளாமே?​​

    உண் ​மை​யைச் சொல்ல வேண்​டு​மென்​றால் ஒரு ​ நடி​கை​யாக ஜெயிப்​ப​தற்கே நிறைய போராட வேண்​டி​யி​ருக்​கி​றது.​ எத்​தனையோ பிரச்​னை​களைச் சந்​திக்க வேண்​டி​யி​ருக்​கி​றது.​ இதை​யெல்​லாம் தாண்டி வந்​தால் தான் ஜெயிக்க முடி​யும்.​ அதுபோல ஒரு டைரக்​டர் ஆவது சுல​ப​மல்ல.​ நிறைய பொறுப்​பு​களைச் சுமக்க வேண்​டி​யி​ருக்​கும்.​ அப்​படி நான் டைரக்​ஷ​னில் இறங்​கி​னால் எப்​படி நடி​கர், நடி​கை​களை வேலை வாங்​கு​வ​தில் இருந்து மற்ற எல்​லா​வற்​றை​யும் தெரிந்து கொண்டு,​​ கற்​றுக் கொண்​டு​தான் வரு​வேன்.​ ​

    * உங்​கள் வருங்​கால திட்​டம் என்ன?​​

    எந் ​தத் துறை​யாக இருந்​தா​லும் நல்ல பேர் வாங்​கு​வ​தற்​கும்,​​ ஒரு நல்ல இடத்​திற்கு வரு​வ​தற்​கும் ​ நிறைய உழைக்க வேண்​டி​யி​ருக்​கும்.​ ஆனால் சினி​மாவைப் பொருத்​த​வரை அது ரொம்ப ஈசி.​ இப்​போ​தைக்கு எனக்கு நல்ல நடிகை என்று பெயர் இருக்​கி​றது.​ அதை கடை​சி​வரை காப்​பாற்ற வேண்​டும் என்று நினைக்​கி​றேன்.​ மக்​கள் என்னை அவர்​கள் குடும்​பத்​தில் ஒருத்​தி​யாக நினைக்​கி​றார்​கள் அதை தக்கவைத்துக் கொள்​வ​து​தான் இப்​போ​தைய பிளான்.​ ​

    * நடிப்பைத் ​ தவிர வேறு எந்த துறை​யில் ஆர்​வம் இருக்கு?​​

    நடிப்பைத் ​ தவிர பெரி​ய ​தி​ரை​யில் நாய​கிக்கு ​ டப்​பிங் குரல் கொடுக்​கி​றேன்.​ ​ சினி​மா​வில் நடிக்க வந்​த​தில் இருந்து டப்​பிங் பேசிக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ இதை தவிர ஹலோ ஒன் எப் எம் ரேடி​யோ​வில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்​கி​றேன்.​ ரேடி​யோ​வி​லும் ​ நிறைய ரசி​கர்​கள் இருக்​கி​றார்​கள்.​ அது எனக்கு ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​

    * உங்​கள் ​ திரு​ம​ணம் எப்​போது?​ காதல் திரு​ம​ண​மாக ​ இருக்​குமா?​​

    கல் ​யா​ணம் என் வாழ்க்​கை​யில் ஒரு திருப்​ப​மாக இருக்​கும்.​ நான் காத​லித்​தா​லும் இல்லை என்​றா​லும் அது என் பெற்​றோர்​கள் சம்​ம​தத்​து​டன் நடக்​கும்.​ காதல் திரு​ம​ணம் செய்து கொள்​ப​வர்​கள் சந்​திக்​கும் நிறைய பிரச்​னை​களை நான் பார்த்​தி​ருக்​கி​றேன்.​ பெற்​ற​வர்​கள் வாழ்த்​துக்​க​ளோட நடக்​கிற திரு​ம​ணம்​தான் சந்​தோ​ஷ​மா​ன​தாக இருக்​கும்.​ என் திரு​ம​ணம் என் அப்பா அம்​மா​வின் விருப்​ப​ப​டி​தான் இருக்​கும். அந்த பொறுப்பை அவர்​க​ளி​டமே ஒப்​ப​டைத்​து​விட்​டேன்.​ திரு​ம​ணத்​திற்குப் பிறகு நடிப்​ப​தில் எனக்கு விருப்​ப​மில்லை.​

    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

  6. #165
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஞாயிறு கொண்டாட்டம்
    நடிப்பதில் ஆர்வம் இல்லை!

    விஜய் டிவி​யில் நிகழ்ச்சி தொகுப்​பா​ளி​னி​யாக கொஞ்​சும் தமி​ழில் பேசி மக்​கள் மன​தில் இடம் பிடித்​த​வர் ஷில்பா.​ "நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்​சி​யின் படப்​பி​டிப்பு தளத்​தில் அவ​ரைச் சந்​தித்​தோம்.​ நம்​மி​ட​மும் கொஞ்​சும் தமி​ழில் பேசி​னார்.​ இனி அவ​ரு​டன்..​

    * உங்​க​ளைப் பற்றி சொல்​லுங்​கள்?​​

    எனக்கு பூர்​வீ​கம் கேரளா.​ நான் ஆங்​கில இலக்​கி​யம் படித்​தி​ருக்​கி​றேன்.​ ஐந்து வரு​ட​மாக இந்​துஸ்​தானி மியூ​சிக் கற்று வரு​கி​றேன்.​ என் தங்கை என்​ஜி​னீ​ய​ரிங் படிக்​கி​றாள்.​ எங்​க​ளு​டை​யது சிறிய அன்​பான குடும்​பம்.​ ​

    * தற்​போது என்​னென்ன நிகழ்ச்​சி​கள் தொகுத்து வழங்​கு​கி​றீர்​கள்?​​

    "நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்​சியை ஒன்​றரை வரு​ட​மாக தொகுத்து வழங்​கிக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ அதைத்​த​விர டிவி நிகழ்ச்​சி​க​ளைத் தொகுத்து வழங்​கு​கி​றேன்.​ தற்​போது விஜய் டிவி​யில் புதி​ய​தாக தொடங்​கி​யி​ருக்​கும் "சினிமா சினிமா' நிகழ்ச்​சி​யின் தொகுப்​பா​ளி​னி​யா​க​வும் இருக்​கி​றேன்.​

    * பிர​ப​லங்​க​ளின் திரு​ம​ணத்தை "நம் வீட்டு கல்​யா​ணம்' நிகழ்ச்சி மூலம் தொகுத்து வழங்​கும் அனு​ப​வம் பற்றி சொல்​லுங்​கள்?​​

    புது ​மை​யான அனு​ப​வம்.​ பிர​ப​லங்​க​ளின் திரு​ம​ணத்தை நேரில் சென்று பார்க்க முடி​யா​த​வர்​கள் தங்​கள் வீட்​டில் இருந்தே அவர்​க​ளு​டைய சடங்​கு​கள்,​​ சம்​பி​ர​தா​யங்​க​ளைப் பார்ப்​பது ​ நன்​றாக இருக்​கி​றது.​ அதைத் தவிர திரு​ம​ணத்​தில் கலந்து கொள்​ளும் பிர​ப​லங்​க​ளைப் பார்க்​கும் வாய்ப்​பும் கிடைக்​கி​றது.​ இந்​தக் கான்​சப்ட்டே ரொம்ப புது​மை​யா​னது.​ மக்​க​ளி​டம் நிறைய வர​வேற்பு இருக்​கி​றது.​

    * தொடர்​க​ளில் ஏன் நீங்​கள் நடிக்​க​வில்லை?​​

    தொடர்​க​ளில் நடிக்க நிறைய வாய்ப்​பு​கள் வரு​கின்​றன.​ ஆனால் நடிப்​ப​தில் எனக்கு அவ்​வ​ளவு ஆர்​வம் இல்லை.​ ​

    * நிகழ்ச்சி தொகுப்​பா​ளினி தவிர வேறு எதில் கவ​னம் செலுத்​து​கி​றீர்​கள்?​​

    ஸ்டேஜ் ஷோக்​க​ளில் இந்​துஸ்​தானி இசை​யில் பாடல்​கள் பாடு​கி​றேன்.​ பாட்டு தான் ரொம்ப பிடித்​தி​ருக்​கி​றது.​ இப்​போ​தைக்கு முழுக்க முழுக்க இந்​துஸ்​தானி இசை பாடல்​க​ளில்​தான் கவ​னம் செலுத்​து​கி​றேன்.​ ​

    * பின்​னணி பாடகி ஆவ​தற்கு ஏதும் முயற்சி செய்​கி​றீர்​களா?​​

    கன் ​ன​டப் படம் ஒன்​றில் ஒரு பாடல் பாடி​யி​ருக்​கி​றேன்.​ தமி​ழில் பாடு​வ​தற்​கான முயற்​சி​கள் செய்து வரு​கி​றேன்.​ அதற்​காக இசை​ய​மைப்​பா​ளர்​க​ளி​டம் டெமோ சிடி​கள் கொடுத்து வரு​கி​றேன்.​ ​

    * இந்​துஸ்​தானி இசை​யைத் தேர்​தெ​டுத்​தது ஏன்?​​

    என் குர​லுக்கு இந்​துஸ்​தானி இசை பொருத்​த​மாக இருக்​கி​றது.​ சிறு​வ​ய​தில் கர்​நா​டக இசை கொஞ்​சம் கற்​றுக்​கொண்​டேன்.​ மேற்​கத்​திய மற்​றும் இந்​துஸ்​தானி இசை பிடித்​த​மா​னவை.​ எனவே அவற்றை விரும்பி கற்​றுக்​கொண்​டேன்.​ பொது​வா​கவே எனக்கு ​ மெலோ​டி​யான இசை​யைக் கேட்க ரொம்ப பிடிக்​கும்.​

    * நிகழ்ச்​சி​க​ளின் மூலம் மக்​க​ளி​டம் நேர​டி​யாக தொடர்பு கொண்டு பேசும் அனு​ப​வம் ​ ​ பற்றி சொல்​லுங்​கள்?​​

    மக் ​களை நேர​டி​யாக தொடர்பு கொண்டு பேசு​வ​தால்,​​ ​ நிதா​ன​மா​க​வும்,​​ கவ​ன​மா​க​வும் பேச​வேண்​டி​யுள்​ளது.​ ஏதா​வது தவ​றாகி போனா​லும் திருத்​திக் கொள்ள முடி​யாது.​ மக்​கள் நம்மை நேர​டி​யாக திட்​டி​வி​டு​வார்​கள்.​ அத​னால் மிக கவ​னத்​து​டன் பேச வேண்​டும்.​ சிர​மங்​க​ளுக்கு ஆண்,​பெண் என்ற வேறு​பாடு தெரி​யாது.​ பிற துறை​க​ளில் உள்ள சிர​மங்​கள் இத்​து​றை​யி​லும் இருக்​கின்​றன.​

    * உங்​க​ளைப்​பற்றி ரசி​கர்​கள் என்ன சொல்​லு​கி​றார்​கள்?​​

    நிகழ்ச் ​சி​யைத் தொகுத்து வழங்​கும்​போது என் உச்​ச​ரிப்பு நன்​றாக இருக்​கி​றது எனச் சொல்​லு​கி​றார்​கள்.​ மேலும்,​​ நளி​ன​மா​கப் பேசு​வ​தா​க​வும் சொல்​லு​கி​றார்​கள்.​ ​ இப்​படி மக்​கள் நம்​மி​டம் நேர​டி​யாக சொல்​லும்​போது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​ இதை எனக்கு கிடைக்​கும் பரி​சாக நினைக்​கி​றேன்.​

    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

  7. #166
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மானாகிறேன் மயிலாகிறேன் - நமீதா!

    தமிழ் சினிமாவில் "கவர்ச்சிகன்னி'யாக தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர் நமீதா. தற்போது வித்தியாசமான வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதோடு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டு, பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.

    நமீயிடம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், அவர் கொஞ்சம் இளைத்து, இன்னும் கூடுதல் அழகாயிருப்பது! தட்டுத்தடுமாறி நமீ பேசும் தமிழை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

    வெயில் தலைக்காட்டத் தொடங்காத ஒரு காலை வேளையில் நமீயை ஒரு காபி ஷாப்பில் சந்தித்து உரையாட காத்திருந்தோம். "வாங்க மச்சான்' என்று கூறியபடியே நமீ, கண்களில் காந்தப்பார்வையும், இதழில் புன்னகையுமாக நம் முன்னே வந்து அமர்ந்தார். இரண்டு கோல்டு காபிகளுக்கு ஆர்டர் செய்து விட்டு, நம்மிடம் உரையாடினார்.

    நீங்கள் நடித்து வெளியான ஒரு படம் சம்பந்தமாக உங்களைப் பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளதே?

    இனிமேல் அந்தப் படத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை என்றாலும் நீங்கள் கேட்டதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கு. என்னைப் பொருத்தவரைக்கு நாலு பேர் திட்டினாக்கூட அது ஒரு செய்திதான். ஆனால், எந்தத் திட்டுக்கும் நான் பொறுப்பானவள் இல்லை.

    அந்தப் படத்தை பொருத்தவரை நான் நேர்மையாகவும், சரியாகவும், மரியாதையாகவும் நடந்திருக்கிறேன். தவறுகள் யார் தரப்பில் என்பதை நான் உணர்த்தத் தேவையில்லை என்று நினைக்கிறேன். என்னைப் பற்றி அவதூறாக பேசுபவர்களின் பேச்சில் உண்மையில்லை என்பது என்னை அறிந்த எல்லோருக்கும் தெரியும். ஏன்? சொன்னவருக்கும் கூட இது தெரியும்!

    அப்படியிருக்கும்போது நான் எதைச் சொல்லுவது?

    நடந்தது நடந்ததாக இருக்கட்டும். என்னை பழிப்பவர்களுக்கு கடவுள் பதில் அளிப்பார்.

    தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி?

    தெலுங்கில் "சிம்ஹா' என்னும் பெயர் கொண்ட படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக, போயபட்டி சீனு இயக்கத்தில் நடிக்கிறேன்.

    இதில் எனக்கு கிளாமர் கேர்ள் வேடம் (உங்களுக்கு வேறெந்த வேடமும் கொடுக்கமாட்டாங்களா? நமீ!) இதில் பாலகிருஷ்ணா ஸôர் பொதுவுடைமை பேசுகிற வேடத்தில் நடிக்கிறார். அவருடைய இந்த பேச்சினால் அவர் மேல் எனக்கு காதல் பிறக்கிறது. அதன்பின் எங்கள் வாழ்க்கை என்னவாகிறது? என்பதுதான் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

    இன்னும் இரண்டு நாட்கள் மட்டும்தான் படம் பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அசோக் இயக்கத்தில் "தேசத்துரோகி' என்ற படத்தில் நடிக்கிறேன். மேலும் மலையாள இயக்குநரான பிரமோத் பப்பன் இயக்கும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. இது தவிர வேறெந்த படத்திலும் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை. இனிவரும் காலங்களில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

    தொடர்ந்து தெலுங்கிலும் நடிப்பீர்களா?

    இயக்குநர் சரண் ஸôர்தான் தெலுங்கு "ஜெமினி' படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகுதானே தெலுங்கிலிருந்து நான் தமிழுக்கு நடிக்க வந்தேன். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஒன்றும் தவறில்லையே? தமிழ், தெலுங்கு, மலையாளரம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்தாகிவிட்டது. எல்லா மொழியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன்.

    "கோ' படத்தில் நடிக்க மறுத்தீர்களாமே?

    "கோ' படத்தில் ஒரு பாடலுக்கு நடிக்க அழைத்தார்கள். ஆகவேதான் நடிக்க மறுத்தேன். இப்போது

    மட்டு ​மில்லை,எப்போ​துமே ""ஒரு பாட​லுக்​காக நான் நடிக்க மாட்​டேன்'' என்று சொல்​லித்​தான் வந்​தி​ருக்கி​றேன்.அது மிகப்பெ​ரிய பட​மாக இருந்​தா​லும் கூட நான் நடிக்க மாட்​டேன்.

    ஏனென்​றால், நான் ஒரு பாட​லுக்கு மட்​டும் போய் அந்​தப் படங்க​ளில் ஆடி, நடித்​தால் பிறகு அதையே நமது பாணி​யாக்கி நம்மை ஒரு பாட​லுக்கு மட்​டும் ஆடும் நடி​கை​யாக்கி விடு​வார்கள். எனக்​கென்று ரசிகர்களிடத்​தில் ஒரு இமேஜ் இருக்கிறது. ஆகவே​தான் "கோ' படத்​தில் நடிக்க மறுத்​தேன்.மற்றபடி அதில் வேறெந்த உள்​நோக்க​மும் இல்லை!

    உங்க​ளுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் கிடைக்கிறதா?

    என்னை நம்பி எடுக்கப்படு​கிற படங்க​ளுக்கு ரசிகர்க​ளின் ஆதரவு நிச்சயம் இருக்கிறது.அத​னால் என்​னு​டைய ரசிகர்கள் எதை விரும்பு​வார்கள்?என்று யோசித்து,அதற்​கேற்ற​வாறு கதைக​ளைத் தேர்ந்தெ​டுக்கி​றேன்.தயா​ரிப்பாளர்க​ளும் இந்த விஷயத்​தைப் புரிந்து வைத்தி​ருப்ப​தால்​தான் எனக்​கேற்ற கதைக​ளைத் தேர்வு செய்து​கொண்டு வந்து என்னை அணுகுகி​றார்கள்.

    அப்ப​டித்​தான் "நில் கவனி என்​னைக் காதலி',"இந்திர​விழா' போன்ற படங்க​ளில் நடித்​தேன்.ரசிகர்க​ளும் இப்படங்க​ளுக்கு பெரிய ஆதரவு அளித்​தார்கள்.இது போன்ற கதைகள் எனக்கு அமைந்​தால் தொடர்ந்து நடிப்​பேன்.ஏனெ​னில்,என்னை வைத்து படமெ​டுக்​கும் தயா​ரிப்பாளர்கள் என்​னால் நஷ்டமடையக்கூ​டாது!

    "மானாட மயி​லாட' குறித்து?

    இன்று எனக்கு கிடைத்தி​ருக்​கும் ரசிகர் பட்டாளத்​தில் பெரும்பாலானவர்கள் சின்னத்​திரை மூலம் கிடைத்தவர்கள்​தான்.அடித்தட்டு மக்கள் வரை போய்ச் சேரு​கிற சாதன​மாக இன்று சின்னத்​திரை இருக்கிறது.

    ரசிகர்க​ளின் இடத்​திற்கே சென்று, அவர்க​ளைச் சந்​திப்பது என்பது சின்னத்​திரை மூலம்​தான் முடி​யும்."மானாட மயி​லாட' என்பது ஒரு வெற்றிகர​மான நிகழ்ச்சி.அதுக்கு மக்கள் மத்தி​யில் கிடைத்தி​ருக்​கும் வர​வேற்பு எத்​தகையது? என்பது உங்க​ளுக்​கேத் தெரி​யும்!

    இந்நிகழ்ச்சி மூல​மாக பாராட்​டு​கிற வேலையை நான் செய்து வருகி​றேன்.இதை யார் வேண்டுமானா​லும் செய்ய​லாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்க​ளுக்​கும், அந்த நிகழ்ச்​சியை பார்க்​கும் ரசிகர்க​ளுக்​கும் இன்​னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது.

    அந்த உற்சாகப்ப​டுத்​தும் வேலையை நான் மானாக​வும்,மயிலாக​வும் இருந்து செய்து வருகி​றேன். அதுமட்டு​மில்லை, இந்த நிகழ்ச்சி என்னு​டைய மன​திற்கு நிறை​வை​யும், குதூகலத்தை​யும் கொடுக்கிறது. வட இந்​திய நடிகர்கள்​தான் இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் கலந்து​கொண்டு போட்டியாளர்களை​யும்,ரசிகர்களை​யும் உற்சாகப்ப​டுத்து​வார்கள்.

    தென் ​னிந்தியா​வில் இந்த வேலையை முத​லில் நான் இறங்கி செய்​த​தால் எனக்கு நடிப்ப​தில் கிடைக்​கிற திருப்​தியை விட​வும் அதி​க​மாக "மானாட மயி​லாட' மூலம் கிடைக்கிறது. தற்​போது என்​னைத் தொடர்ந்து இது​போன்ற நிகழ்ச்சிக​ளில் பூஜா,ரம்பா ஆகி​யோர்க​ளும் கலந்து​கொண்டு வருகி​றார்கள். சின்னத்​திரை நிகழ்ச்சிக​ளில் கலந்து கொள்வ​தால் நடிகைக​ளுக்கு மார்க்​கெட் போய்வி​டும் என்பதை நான் உடைத்தி​ருக்கி​றேன்.

    ஆக்ஷன் ஹீரோயி​னாக நடிப்​பீர்களா?

    இந்தக் கேள்​வியை நீங்கள் இயக்குநரிடம்​தான் கேட்டி​ருக்க வேண்​டும்.எந்த இயக்குநர் ஆக்ஷன் காட்சிக​ளில் நடிக்கக் கேட்டா​லும் என்னு​டைய கால்​ஷீட் ரெடி!தற்​போது நடிக்க இருக்​கும் "தேசது​ரோகி' படத்​தில் ஆக்ஷன் காட்சிக​ளில் நடிப்பதற்​கான வாய்ப்புகள் இருக்கு.

    படம் தயா​ரிக்​கும் எண்ண​முண்டா?

    ஒரு நல்ல கதை கேட்டு வைத்தி​ருக்கி​றேன்.இதை கொஞ்ச காலத்​திற்​குப் பிறகு தயா​ரிக்க​லாம் என்று திட்ட​மிட்டி​ருக்கி​றேன்.அவசரப்பட்டு தற்​போது படம் தயா​ரிக்​கும் திட்ட​மில்லை.ஆனால் தயா​ரிக்​கும்​போது கண்​டிப்​பாக தமி​ழில்​தான் அந்தப் படத்தை எடுப்​பேன்.

    சாமி​யார்க​ளைச் சந்​தித்து இருக்கி​றீர்களா?

    எனக்கு கட​வுள் நம்​பிக்கை உண்டு!​

    ​ நெருக்க​மான தோழிகள் யார்? யார்?

    சினேகா​வும், பூஜா​வும்​தான்!


    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  8. #167
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    தங்கம் தந்த தங்கை!

    சன் டிவியில் இரவு 8.30 மணிக்கு

    பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும்

    "தங்கம்' தொடரில் ரம்யாவின்

    தங்கையாக வந்து எல்லோர் மனதிலும்

    இடம் பிடித்த ஜோதியை அத் தொடரின்

    படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தோம்.

    சின்னத்திரையில் நடிக்க வந்தது எப்படி?

    நான் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு பெண். என்ஜினீயரிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ஆனால் விதி என்னை சினிமாவில் கொண்டு வந்து விட்டுவிட்டது.

    ஒருமுறை ராதிகா மேடம் "தாலிபிரமா' என்கிற தெலுங்கு தொடருக்காக மேக் - அப் டெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தார்கள் என்று கேள்விப்பட்டு என் பெற்றோர்கள் சம்மதத்துடன் போய் பார்த்தேன்.

    அந்தத் தொடரில் எனக்கு நிரோஷாவோட மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராடான் மீடியாவில்தான் நான் முதன் முதலில் நடித்தேன். இப்படி தான் என் சின்னத்திரை பயணம் தொடங்கியது. படிப்பை விட்டுவிட்டு நடிகையாக வருவேன் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை.

    முதல் தொடரே எனக்கு ஆந்திராவில் நல்ல பெயரைக் கொடுத்தது. அதன் பிறகு ஹன்ஷா விஷன் தயாரித்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ஏ.வி.எம்.மின் "சொர்க்கம்' தொடர் மூலமாக தான் முதன் முதலில் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போழுது நிறைய தமிழ் தொடர்களில் நடித்து வருகிறேன்.

    தற்போது என்ன தொடர்களில் நடித்து

    வருகிறீர்கள்?

    தங்கம் தொடரில் ரம்யாகிருஷ்ணன் தங்கையாக நடித்து வருகிறேன். அவங்களைப் போல பெரிய ஹீரோயின்கூட நடிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதை அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஏ.வி.எம்.மின் "உறவுக்கு கை கொடுப்போம்' என்கிற தொடரில் நடித்து கொண்டிருக்கிறேன்.

    ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் நடிப்பது கஷ்டமாக இல்லையா எப்படி நேரம் கிடைக்கிறது?

    தெலுங்கு எனது தாய் மொழி என்பதால் அதில் நடிப்பதில் எனக்கு அவ்வளவு பெரிய சிரமம் ஒன்றும் தெரியவில்லை. தமிழில் நடிக்க வந்த புதிதில் எனக்குத் தமிழே தெரியாது. எங்கே எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் ரொம்ப நன்றாகவே தமிழ் பேசுவதாக எல்லோரும் சொல்கிறார்கள்.

    எனக்கு தமிழ் இன்டஸ்ட்ரி ரொம்ப பிடித்திருக்கிறது. நிறைய தமிழ் தொடர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. தமிழ் மக்கள் மரியாதையாகப் பழகுகிறார்கள். "தங்கம்' தொடருக்குப் பிறகு நிறைய தமிழ் மக்களிடம் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

    தெலுங்கில் இரண்டு தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் முன்று தொடர்கள் நடிக்கிறேன். இரண்டு மொழிகளிலும் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

    சென்னைக்கும், ஆந்திராவுக்கும் மாறி மாறி போய் வரும் போது சில நேரங்களில் நான் சென்னையில் இருக்கிறேனா அல்லது ஆந்திராவில் இருக்கிறேனா என்று குழப்பமாக இருக்கும். இரண்டு மொழியிலும் நடிப்பதில் என்ன கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து போராடி பெரிய இடத்துக்கு வர வேண்டும். சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் நிறைய இருக்கிறது.

    பெரியதிரைக்குச் செல்லும் எண்ணம் உண்டா?

    நல்ல கம்பெனி, பெரிய டைரக்டர், நல்ல ஹீரோ இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். பெரிய திரையில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. வருகிற வாய்ப்புகள் எல்லாம் கிளாமர் ரோலாகவே வருவதால் எனக்கு நடிக்க விருப்பமில்லை. கதையை ஒட்டி கிளாமராக இருந்தால் பரவாயில்லை.

    ஒருமுறை கிளாமராக நடித்து விட்டால் அதை தொடர்ந்து அது போன்ற வாய்ப்புகள்தான் அமையும் என்பதால் நல்ல வாய்ப்பு வரும் போது நடிப்பேன். இப்போதைக்கு சின்னத்திரையில் மட்டும்தான் கவனம் செலுத்தி

    வருகிறேன்.

    உங்களுக்கு என்ன மாதிரி கேரக்டர்கள் நடிக்க பிடிக்கும்?

    எனக்கு ஹோம்லியான கேரக்டர் நடிக்க ரொம்ப பிடிக்கும். கிராமத்துப் பொண்ணா நடிக்க பிடிக்கும். எந்த மாதிரி கேரக்டர் ஒத்து வருமோ அது மாதிரி நடிக்க வேண்டும். இப்பொழுது நடித்து கொண்டிருக்கிற தொடர்களும் என் எண்ணம் போலவே கிடைத்திருக்கின்றன. இப்படி ஒவ்வொரு தொடரில் வேறு வேறு மாதிரி நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நெகட்டீவ் ரோல்ஸ் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.

    ரசிகர்களைச் சந்தித்தது உண்டா, என்ன சொல்லுவார்கள்?

    ஆந்திராவில் உள்ள மக்களுக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும். பொது இடங்களில் அல்லது ஷாப்பிங் போகும் போது எங்காவது பார்த்து விட்டால் என் பக்கத்தில் வந்து பேசுவார்கள், நலம் விசாரிப்பார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் நான் நடிக்கும் தொடர்களைப் பற்றி விமர்சிப்பார்கள்.

    இப்படி அவர்கள் என் மீது அன்பு செலுத்தும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதே போல் தங்கம் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழ் மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

  9. #168
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஞாயிறு கொண்டாட்டம்
    தென்​றல் தந்த அங்​கீ​கா​ரம்!

    'தென் ​றல்' தொட​ரில் சுப​லேகா சுதா​க​ரின் மகள் துள​சி​யாக வந்து அசத்​து​ப​வர் ஸ்ருதி.​ பார்ப்​போர் நெஞ்​சத்தை தனது எதார்த்த நடிப்​பால் ஈர்க்​கி​றார்.​ பாவாடை தாவணி,​​ கழுத்​தில் ஒரு முத்​து​மாலை என எளி​மை​யா​கத் தோன்​றும் ஸ்ருதி,​​ சினி​மா​வி​லும் கால்​ப​தித்​தி​ருக்​கி​றார்.​ "தென்​றல்' தொட​ரின் படப்​பி​டிப்பி​லி​ருந்த ஸ்ருதி நம்​மி​டம்

    பேசி​யதி​லி​ருந்து...​

    இந்த தொட​ருக்​காக உங்​களை எப்​ப​டித் தேர்​தெ​டுத்​தார்​கள்?​​

    "ஜெர்ரி' படம் ரீலி​ஸிற்​குப் பிறகு நிறைய பேர் நடிப்​ப​தற்கு கேட்​டார்​கள்.​ நான் உடனே ஒத்​துக்​க​வில்லை.​ நல்ல கதா​பாத்​தி​ர​மாக இருக்​க​வேண்​டும் என்று எதிர்​பார்த்து காத்​தி​ருந்​தேன்.​ அந்த நேரத்​தில்​தான் சன் டிவி​யில் விக​டன் டெலி​வி​ஷன் தயா​ரிப்​பில் தென்​றல் தொட​ருக்கு நடிக்​கிற வாய்ப்பு வந்​தது.​ கிட்​டத்​தட்ட ஆறு வரு​டங்​க​ளுக்கு மேல் ஓடி,​​ ரசி​கர்​க​ளி​டம் நல்ல வர​வேற்பு பெற்ற கோலங்​கள் தொடர்,​​ நல்ல தொட​ராக இருந்​த​தால்​தான் பெரி​ய​ள​வில் வெற்றி பெற்​றது.​ அந்​த​மா​திரி ஒரு தொடரை தயா​ரிக்​கிற நிறு​வ​னத்​தில் இருந்து நடிக்க வாய்ப்பு கிடைத்​தது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது அத​னால் உடனே ஒப்​புக்​கொண்​டேன்.​

    முத ​லில் டைரக்​டர் கும​ரன் வந்து கதை​யைச் சொன்​னார்.​ "பாவாடை தாவணி போட்​டு​கிட்டு நீங்க சாதா​ர​ண​மாக எப்​ப​வும் வீட்​டில் இருப்​பது போல ஒரே ஒரு பொட்டு மட்​டும் வெச்​சுக்​கிட்டு வாங்க ஒரு டெஸ்ட் செய்து பார்த்​தி​ட​லாம்' என்று சொன்​னார்.​ பிறகு டய​லாக் கொடுத்து பேசச் சொன்​னார்​கள் அதில் ஓ.கே.​ ஆகி​விட்​டேன்.​

    அந்த கேரக்​டர் இந்​த​ள​வுக்​குப் பேசப்​ப​டும் என்று எதிர்​பார்த்​தீர்​களா?​​

    நல்ல கேரக்​டர் என்று தான் நினைத்​தேன்.​ ஆனால் இந்​த​ள​விற்கு வர​வேற்பு இருக்​கும் என்று நினைக்​கலை.​ ஒரு நல்ல பிரா​ஜக்ட் ஒத்​துக்​கிட்டு செய்​வது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருக்​கி​றது.​ ​ தென்​றல் தொடர் ஆரம்​பித்த ​ முதல் வாரத்​தில் இருந்தே ரசி​கர்​கள் நிறைய சப்​போர்ட் செய்​கி​றார்​கள்.​ திரை​யு​லகைச் சார்ந்​த​வர்​க​ளும் நிறைய பேர் ஃபோன் செய்து என் நடிப்பைப் பாராட்​டி​னார்​கள்.​ அதைக் கேட்​கும் பொழுது என் கேரக்​டர் மீது இன்​னும் ஆர்​வம் அதி​கம் ஆகி​றது.​ துளசி கேரக்​ட​ரில் வரும் மேன​ரி​ஸம்,​​ உச்​ச​ரிப்பு,​நடிப்பு எல்​லாமே டைரக்​டர் சொல்லி கொடுப்​பதை அப்​ப​டியே செய்​கி​றேன்.​ அவர் சொன்​னதை அப்​ப​டியே என்​னு​டைய கதா​பாத்​தி​ரத்​தில் பிர​திப​லிக்​கி​றேன்.​

    சினி ​மா​வில் பெரி​தாக வரு​வீர்​கள் என்று நினைத்​தி​ருப்​பீர்​கள்.​ ஆனால் சின்​னத் திரை​தான் உங்​களை நன்​றாக அடை​யா​ளப்​ப​டுத்​தி​யி​ருக்​கி​றது.​ அப்​ப​டித்​தானே?​​

    ஆமாம் உண்​மை​தான்.​ நிறை​யப் பேர் சொன்​னாங்க.​ சினி​மாவை விட இந்த ஒரு தொடர் பெரி​ய​ள​வில் ​ அங்​கீ​கா​ரத்தை உண்டு பண்​ணி​யி​ருக்கு.​ "காதல் டாட் காம்',​ "ஜெர்ரி',​ "மந்​தி​ரம்' என மூன்று தமிழ் படங்​க​ளில் நடித்​தேன்.​ தெலுங்​கில் இரண்டு,​​ மூன்று படங்​கள் நடித்​தி​ருக்​கி​றேன்.​ மலை​யா​ளத்​தில் "தோஸ்த்' என்ற படம் நடித்​தி​ருக்​கி​றேன்.​ அது​தான் என்​மு​தல் பட​மும் கூட.​ இத்​தனை படம் நடித்​தி​ருந்​தா​லும் எனக்கு இந்​தத் தொட​ரும்,​​ துளசி கேரக்​ட​ரும்​தான் பெரி​ய​ள​வில் பெயர் வாங்கி கொடுத்​தி​ருக்​கி​றது.​ இது,​​ தென்​றல் தந்த அங்​கீ​கா​ரம்​தான்.​ பெரி​யத்​தி​ரை​யில் எதிர்​பார்த்​தது சின்​னத்​தி​ரை​யில் கிடைத்​தி​ருக்​கி​றது.

    இனி சினி​மா​வில் நடிப்​பீர்​களா?​​

    நல்ல கேரக்​ட​ராக இருந்து அந்தக் கதா​பாத்​தி​ரத்​திற்கு முக்​கி​யத்​து​வம் ​ ​ இருந்​தால் கண்​டிப்​பாக நடிப்​பேன்.​ வாய்ப்பு வரு​கி​றது என்​ப​தற்​காக ​ ​ ​ ​ ​ எல்லா படங்​க​ளி​லும் நடிக்க மாட்​டேன்.​ இப்​போ​ழுது இந்தத் தொட​ரின் மூலமா மக்​கள் மன​தில் நல்ல அடை​யா​ளம் கிடைத்​தி​ருக்​கி​றது.​ "யார்,​​ இந்தப் பெண் புதுசா இருக்​கி​றது?​' என்று ஆச்​சர்​ய​மாக கேட்​கி​றார்​கள்.​ இனி சின்​னச் சின்ன கேரக்​டர் சினி​மா​வில் செய்​ய​மு​டி​யுமா?​ அதில் எனக்கு விருப்​ப​மும் இல்லை.​ அதே​ச​ம​யத்​தில் கிடைத்த நல்ல பெயரைத் தக்க வைத்​து​கொள்ள வேண்​டும் இல்​லையா?​ அத​னால் நல்ல கதை​யும்,​​ கதா​பாத்​தி​ர​மும் வந்​தால் கண்​டிப்​பாக நடிப்​பேன்.​

    நடிக்க வேண்​டும் என்ற ஆசை உங்​க​ளுக்​குள் எப்​பொ​ழுது வந்​தது?​​

    நான் நடிக்க வேண்​டும் என்று ஆசைப்​பட்​டது எல்​லாம் கிடை​யாது.​ சின்ன வய​தில் பள்ளி நாட​கங்​க​ளில் நடித்​தி​ருக்​கி​றேன்.​ அப்​படி எட்​டாம் வகுப்பு படிக்​கும் பொழுது ஒரு நாட​கத்​தில் நடித்​தேன்.​ அப்​போது நிகழ்ச்​சி​யில் எடுத்த போட்​டோவைப் பார்த்​து​விட்டு நடிக்​கக் கூப்​பிட்​டார்​கள்.​ ஆனால் பத்​தா​வது படிக்​கும் போது​தான் நடிக்க வந்​தேன்.​ மலை​யா​ளப் படத்​தில் அறி​மு​க​மா​னேன்.​ அதன்​பி​ற​கு​தான் தமி​ழுக்கு வந்​தேன்.​ இந்த நான்கு வரு​டப் போராட்​டத்​திற்குப் பிறகு இப்​பொ​ழு​து​தான் நல்ல வாய்ப்பு கிடைத்​தி​ருக்​கி​றது.​

    குடும்​பம் பற்றி?​​

    அப்பா ராஜன் நாயர் ஒரு மிலிட்​டரி எக்ஸ்​சர்​வீஸ்​மேன்,​​ அம்மா ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ சுலோச்​சனா ராஜன்,​​ நான்.​ இதை தவிர்த்துப் பெரிய பேக் ரவுண்​டெல்​லாம் எது​வு​மில்லை.​ என் தாய்​மொழி மலை​யா​ளம்.​ சின்ன வய​தில் டான்ஸ் கொஞ்​சம் கத்​துக்​கிட்டு இருக்​கேன் அவ்​வ​ள​வு​தான்.​


    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

  10. #169
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    வெற்றியின் ரகசியம்!

    ஸ்ரீதேவிகுமரேசன்
    First Published : 25 Apr 2010 11:21:00 AM IST

    Last Updated :

    சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் "ராணி மகா ராணி' நிகழ்ச்சியின் நாயகி மமதி. தன் வசீகர குரலால், அழகு தமிழில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அவரைச் சந்தித்தோம்....

    ராணி மகா ராணி நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

    இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கேம் ஷோ. எல்லா பெண்களுக்குள்ளேயும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அதை வெளிக்கொண்டு வரவே இந்த கேம் ஷோ. சில பெண்களுக்குப் போட்டிகளில் கலந்து கொள்ளும் திறமை மட்டும் இருக்கும்.

    ஆனால்,வெற்றிபெறத் தெரியாது. அப்பொழுது அவர்களைச் சுற்றி இருப்பவர்களோ, அல்லது வேறு யாராவதோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அப்பெண்களின் மனது வேதனைப்படும்படி பேசிவிடுவார்கள். ஆனால் இந்த மேடையில் அதைப் போன்று எதுவும் கிடையாது.

    அவர்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கும். இதில் வெற்றி, தோல்வி என்ற இலக்கு இல்லாமல் சந்தோஷமாக விளையாடுவார்கள். ஒவ்வொரு பெண்ணும், பணமோ அல்லது பொற்காசோ வென்று செல்லுவார்கள்.

    ஆக்கப்பூர்வமாக நாலு விஷயங்களைப் பேசி, சந்தோஷமாக விளையாடி, திருப்திகரமாக வீட்டுக்குப் போக வேண்டும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

    சின்னத்திரையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

    தூர்தர்ஷன் மட்டும் இருக்கும் பொழுதிலிருந்தே சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டுதான் இருக்கிறேன். தொடர்கள் எதுவும் நடிக்கவில்லை.

    வேறு என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகின்றீர்?

    பிக் எஃப்.எம் வானொலியில் "பிக் வணக்கம்' என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கியிருக்கிறேன். இப்பொழுது ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறேன். இதை தவிர விஜய் டிவியில் "சில்லுன்னு ஒரு சேலஞ்ச்' என்ற நிகழ்ச்சியும் வழங்கி கொண்டிருக்கிறேன்.

    சிறுவயது முதலே சின்னத்திரையில் இருக்கும் நீங்கள் பெரியதிரை பக்கம் போகாதது ஏன்?

    பெரியதிரையில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு நடிப்பதில் ஈடுபாடு இல்லை. நிகழ்ச்சி தொகுப்பாளராகவோ, அல்லது பங்கேற்பாளராகவோ இருக்கத்தான் விருப்பம். அதனால்தான் நடிப்பதற்கு வருகிற வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.

    ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரோட படத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சின்னவயதில் இருந்தே அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    தமிழ் ரசிகர்களைப் பொருத்தவரை மமதியின் குரலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது, அப்படியிருக்க பின்னணி குரலுக்கு நிறைய வாய்ப்புகள் வந்திருக்குமே?

    தமிழ் சின்னத்திரையைப் பொருத்தவரை என்னையும் என் தமிழையும் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது எனக்கு கடவுள் கொடுத்த வரம். பின்னணி குரலுக்கான வாய்ப்புகளும் நிறைய வருகின்றன.

    குரலால் நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. சின்னத்திரையைத் தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துகிட்டு இருக்கிறேன். அதற்கு முழு நேரமும் செலவிட வேண்டியிருப்பதால் அதிகப்படியான நிகழ்ச்சிகள் வழங்க நேரம் கிடைப்பது இல்லை.

    இந்தத் துறையில் பெண்கள் வெற்றி பெறுவது சுலபமில்லை என்று சொல்கிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

    சினிமாத்துறை மட்டுமல்ல எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி என்று எடுத்து கொண்டாலே அது ஆடவராக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி பேராடினால்தான் வெற்றி கிடைக்கும்.

    அதே சமயத்தில் தன்னுடைய எல்லையைத் தாண்டாமல் உழைக்கும் வரை பிரச்னைகள் எது வந்தாலும் எதிர்கொள்ளலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் திறமையிருந்தால் வெற்றி பெறுவதற்கு ஆண், பெண் வேறுபாடு எல்லாம் கிடையாது.

    ஆண்களுக்குத்தான் ஜெயிப்பது கஷ்டம். புத்திசாலிதனமான பெண்களுக்கு அது சுலபம். வெற்றியை எப்படி வேண்டுமானாலும் அடையலாம் என்று நினைப்பவர்களும் உண்டு, இப்படித்தான் அடைய வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. அது அவரவர் தனிப்பட்ட கொள்கை.

    ஓரிரண்டு நிகழ்ச்சிகளில் மட்டுமே வந்தாலும் உங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதே அதன் ரகசியம் என்ன?

    என் தமிழ் உச்சரிப்பைக் கேட்க பிடித்திருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். நிகழ்ச்சி ரொம்ப இயல்பாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். அதுதான் வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன்.

    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

  11. #170
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    பெண்கள்தான் ஹீரோக்கள்!

    ஸ்ரீதேவிகுமரேசன்
    First Published : 02 May 2010 12:00:00 AM IST

    Last Updated :

    சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் மீண்டும் வந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்ட பெரியதிரையின் பிரபல நாயகியான கஸ்தூரியை அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்புக் கூடத்தில் சந்தித்தோம். அங்கே இருந்த பரபரப்பின் ஊடே நம்முடைய

    கேள்விகளுக்குச் சுடச்சுட பதிலளித்தார்.

    பெரியதிரையில் வாய்ப்புகள் இருக்கும்பொழுது எப்படி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வந்தீர்கள்?

    சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் அதை உலகம் முழுவதும் பார்க்க முடிகிறது. வெளிநாட்டில் இருக்கும் என் குடும்பத்தினர்கள் அனைவரும் பார்த்து மகிழ்கிறார்கள்.

    சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அது பட்டி தொட்டி எல்லாம் பரவிவிடும். இந்த மாதிரி ஒரு பெரிய நிறுவனத்தில் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தொகுப்பாளினியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து ஒத்துக்கொண்டேன்.

    நான் எதிர்பார்த்தது போலவே எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் மூலம். வெகு நாட்களுக்கு பிறகு என் முகம் ஒரு சில நிமிடமே டிவியில் வந்து போனாலும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எத்தனை பேர் எனக்கு போன் செய்து மறுபடியும் எப்போது சினிமாவிற்கு வந்தீர்கள்.

    சின்னத்திரையில் உங்களைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று சொன்னார்கள். சின்னத்திரையின் வளர்ச்சியைக் கண்டு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.

    ஏன் டி.வி. சீரியலில்களில் நடிப்பதில்லை?

    சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடருக்கு நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அப்படியில்லாமல் வேறு டிவி சேனலாக இருந்தால் அதுவும் உலகமெங்கும் தெரியக்கூடிய டிவியாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நானே மாதத்தில் பாதிநாள் ஜெர்மனியில்தான் இருக்கிறேன்.

    அந்த நேரங்களில் நான் நடித்ததைப் பார்க்க எனக்கே ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால்தான். அது குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளில்தான் சாத்தியம். அந்த மாதிரி முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சிகளில் கண்டிப்பாக நடிப்பேன்.

    தெலுங்கு, மலையாளம் தொலைக்காட்சியில் வரும் தொடர்களில் இருந்து நடிக்க கேட்கிறார்கள். இப்போது சினிமா வாய்ப்புகள் நிறைய வந்து கொண்டு இருப்பதால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

    சின்னத்திரையைப் பொருத்தவரை எனக்கு ரோல் மாடலாக ரம்யா கிருஷ்ணனைத்தான் நினைக்கிறேன். அவர்கள் இரண்டு துறையிலும் கலக்குகிறார்கள். அது போல செய்ய முடிந்தால் கண்டிப்பாகச் செய்வேன்.

    பெரிய திரை நடிகைகள் நிறைய பேர் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

    சின்னத்திரைதானே என்று சொல்லி ஒதுக்கிய காலம் எல்லாம் எப்போதோ மலையேறிவிட்டது. ஒருமுறை இயக்குநர் வாசு சொன்னார். "முன்பெல்லாம் தியேட்டரில் சினிமாவைத் தேடிப் போய் பார்ப்பார்கள். ஆனால் இப்போது சினிமா வீட்டுக்கே தேடி வருகிறது.

    அதைப் பார்க்கக்கூட மக்கள் விரும்புவது இல்லை. தொடர்கள், கிரிக்கெட் என்று உலகத்தில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது சின்னத்திரையா,பெரியதிரையா என்ற பேச்சுக்கே இடமில்லை.

    அப்படிபார்த்தால், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ரியாஸ்கான் போன்றவர்கள் எல்லாம் சின்னத்திரையில் இருந்து போய்தான் பெரியதிரையில் கலக்கிகிட்டு இருக்காங்க. அவ்வளவு ஏன் டான்ஸ் மாஸ்டர் முதல் கொண்டு தொலைக்காட்சியில் இருந்து பெரியத்திரைக்குப் போகிறார்கள்.

    அது அவரவர் மனதைப் பொருத்தது. எங்கு அங்கீகாரம் கிடைக்கிறதோ அங்கு வேலை செய்கிறார்கள்' என்றார். இதுதான் என் கருத்தும்.

    சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் ஒரே நேரத்தில் நல்ல லீடிங் ரோல் வந்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

    இன்றைய சூழ்நிலையில் நான் கேரக்டர் ரோலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதே போல டான்ஸ் என்றாலும் ஒ.கே. கலக்கலா ஆறு நிமிடம் வந்தாலும் அந்த ஆறு நிமிடத்தில் ஸ்கோர் செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

    பெரியதிரையைப் பொருத்தவரை படம் முழுக்க ஹீரோயினாக நடித்தாலும் நல்ல கதை அமையவில்லை என்றால் ஸ்கோர் செய்வது ரொம்ப கஷ்டம். சின்னத் திரையில் அப்படியில்லை.

    பெண்கள்தான் ஒவ்வொரு கதையிலும் ஹீரோ. தினமும் ஒவ்வொருவருடைய வீட்டிற்கே சென்று அவர்களோட வீட்டில் ஒருவராக வாழ்கிறார்கள் சின்னத்திரை ஹீரோயின்கள்.

    சன் குடும்ப நிகழ்ச்சிக்கானத் தேர்வு வேலைகள் செய்து கொண்டு இருக்கும்போதுதான் தெரிந்தது சின்னத்திரை நடிகைகளுக்கு எவ்வளவு பெரிய அங்கீகாரம் இருக்கிறது என்று. எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. "திருமதி செல்வம்' என்ற தொடரில் நடித்த அபிதாவுக்குச் சினிமாவில் கிடைக்காத வெற்றியை சின்னத்திரை கொடுத்திருக்கிறது.

    அவருக்கு இனி பெரியதிரை பக்கம் போகவேண்டும் என்கிற எண்ணம் கூட வருமா என்று தெரியவில்லை. அந்த மாதிரி வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் ஏன் வேண்டாம் என்று சொல்லவேண்டும்?

    சின்னத்திரை வளர்ச்சியினால் பெரியதிரை பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்களே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்கள் வந்த போது கூத்து கொஞ்சம் நசுங்கி போனது. அடுத்து சினிமா வந்த போது நாடகங்கள் நலிந்து போனது. இப்போது டிவி வந்தபோது சினிமா கொஞ்சம் நலிந்து தான் போனது.

    இந்த மாதிரி அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப வளர்ச்சி மாறிக்கிட்டே இருக்கிறது. எத்தனையோ மேடை நாடக கலைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டவர்கள் இன்று டிவி வந்த பிறகு ரொம்ப பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தொலைக்காட்சியில் வரும் மெகா தொடர்கள் தான். அந்த வகையில் சின்னத்திரை ஒரு முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறீர்கள். உங்கள் கணவரோட ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது?

    என் கணவர் டாக்டர் குமார். அவருக்கு நான் நடிப்பதைப் பற்றி எந்தவித ஆட்சேபனையும் இல்லை. நான் நடிப்பதை ரொம்ப விரும்பிப் பார்ப்பார். அதற்காக எல்லா விதத்திலும் சப்போர்ட் செய்வார். ஆனால் நடிப்பதற்காக அவரைப் பிரிந்திருப்பதில்தான் அவருக்குக் கொஞ்சம் வருத்தம்.

    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=

Page 17 of 46 FirstFirst ... 7151617181927 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •