View Poll Results: What do you think about Social Responsibility in Tamil cinema?

Voters
22. You may not vote on this poll
  • Tamil Cinema is just for Entertainment ,So no social responsibility is needed

    6 27.27%
  • Tamil Cinema should have minimum social responsibility

    5 22.73%
  • Tamil cinema has more social responsibility than its need

    2 9.09%
  • Tamil cinema lacks social responsibility

    9 40.91%
Page 1 of 7 123 ... LastLast
Results 1 to 10 of 65

Thread: Tamil Cinema and Social Responsibility

  1. #1
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like

    Tamil Cinema and Social Responsibility

    தமிழ் சினிமா பற்றிய இந்த விவாத களத்தில் பொதுவாக நடிகர் ,நடிகைகள் ,இயக்குநர்கள் ,இசையமைப்பாளர்கள் ..அவர் பெரிதா இவர் பெரிதா என்பவை போன்ற விவாதங்களே நடக்கின்றன ..ஒட்டுமொத்த தமிழ் சினிமா குறித்த விவாதங்கள் அரிதாகவே இருக்கிறது.

    பொதுவாக சினிமா என்பதே ஒரு பொழுது போக்கு ஊடகம் .அதற்கு எந்த அளவு சமுதாய பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்ற பொதுவான விவாதம் தேவையான ஒன்று.

    * தமிழ் சினிமா என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமே ,எனவே அதற்கு சமுதாயப் பொறுப்பு தேவையில்லை என யார் கருதுகிறீர்கள்?

    * இல்லை ,பொழுது போக்காக இருந்தாலும் அதற்கு குறைந்த பட்ச சமுதாய பொறுப்பு இருக்க வேண்டும் என யார் கருதுகிறீர்கள் ?

    * அவ்வாறு சமுதாய பொறுப்பு தேவையென்றால் பொழுதுபோக்கும் சமுதாய பொறுப்பும் எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் ?

    * இதுவரை தமிழ்சினிமாவில் சமூக மாற்றம் ,மதம் ,அரசியல் ,பெண்ணுரிமை ,குடும்பம் ,உறவுமுறைகள் ,சமுதாய பொறுப்பு குறித்து சொல்லப்பட்ட கருத்துக்கள் எவை ..அவை தேவையா ? போதுமான அளவு உள்ளதா அல்லது தேவைக்கு அதிகமாக உள்ளதா ?

    * தமிழ் சினிமா தமிழ் மக்களின் சமூக வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது ?

    இது பற்றி விவாதிக்கலாமா?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Moderator Diamond Hubber Thirumaran's Avatar
    Join Date
    Nov 2005
    Location
    Chennai
    Posts
    10,222
    Post Thanks / Like
    Poll Add pannalaamae

  4. #3
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    yeah poll plz

  5. #4
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Poll added
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  6. #5
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    vote casted

  7. #6
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    மிக நல்ல தலைப்பு ஜோ.
    அவசியம் விவாதிக்கப் படவேண்டிய தலைப்பு.

    பொதுவாக பொறுப்பு கலைக்கு அவசியமில்லை (பொறுப்பு இருப்பதால் பாதகமில்லை) என்பதே என் கருத்து. ஆனால் இந்த கருத்து கதை, கவிதையை பற்றி என்னால் சொல்ல முடிகிறதே தவிற, தமிழ் சினிமா பற்றி அவ்வளவு எளிதாக சொல்ல முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதற்கு காரணம் அதன் அபாரமான வீச்சு. சமூகம், அரசியல் என்று பல தளங்களில் இதன் வீச்சு பல சமயம் பிரமிப்பூட்டுவதாகவும், பல சமயம் கூச்சப்பட வைப்பதாகவும் இருக்கிறது. (இந்த மையத்தில் நடக்கும் பல தீவிரமான விவாதங்களே இதற்கு சான்று !)

    தாக்கம் அதிகமாக இருக்கும் ஊடகம் என்பதாலேயே அதை கையாள்பவர்களிடத்தில் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக இருக்கிறது.

    நமது புரிதல்களும், தேடல்களும், ரசனையும் பெரும்பாலும் சினிமாவால் செதுக்கப்படுகிறது. அவற்றைத் தாண்டி வருவதைற்கு ஒரு முயற்சியே செய்ய வேண்டி இருக்கிறது.

    அதனால், எனது அபிப்ராயத்தில், விவாதத்துக்கு முன்னால் நாம் பதில் தேட வேண்டிய ஒரு கேள்வி. தமிழ் சினிமாவில் வீச்சு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதே.

    உலகத்தில் எந்த இடத்திலும் இந்த அளவு இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
    நிச்சயமாக சினிமாவின் தரத்தினால் அல்ல இரு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் பத்து நிமிடத்தில் சினிமா பக்கம் பேச்சு திரும்புவது ஏன் ? வேறு கலை இலக்கிய தேடல்கள் இல்லாமல் வெற்றிடமாக இருக்கின்றனவா. (சமீபத்தில் ஒரு திரியில் நீங்கள் சொன்னது போல, அருகில் உள்ள கேரளாவில் 'படிப்பவர்கள்' இருக்கிறார்கள்).
    ஆரம்பத்திலிருந்தே இவ்வாறு தான் இருந்ததா ? இடையில் ஏற்பட்ட மாற்றமா ?

    இதைப் பற்றி பேசுபவர்கள்/எழுதுபவர்கள் எல்லாருமே ஒரு கீழ்நோக்குப் பார்வையுடன் பேசுகிறார்கள். "ஏ பூச்சிகளே....நீங்கள் எல்லாம் புறநானூறு படிக்காமல் பில்லா பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்ற ஒரு அறிவுஜீவி தொனியில். அது இல்லாமல் விவாதிக்க இது சரியான தளமக இருக்கும் என்று நினைக்கிறேன். இது நம்மைப் பற்றி புரிந்துகொள்வத்ற்கான முயற்சி.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  8. #7
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    PR,
    As expected You started with excellent thoughts .I will come out with my points later.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #8
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Prabhu Ram
    தமிழ் சினிமாவில் வீச்சு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதே.

    உலகத்தில் எந்த இடத்திலும் இந்த அளவு இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
    நிச்சயமாக சினிமாவின் தரத்தினால் அல்ல இரு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் பத்து நிமிடத்தில் சினிமா பக்கம் பேச்சு திரும்புவது ஏன் ? வேறு கலை இலக்கிய தேடல்கள் இல்லாமல் வெற்றிடமாக இருக்கின்றனவா. (சமீபத்தில் ஒரு திரியில் நீங்கள் சொன்னது போல, அருகில் உள்ள கேரளாவில் 'படிப்பவர்கள்' இருக்கிறார்கள்).
    ஆரம்பத்திலிருந்தே இவ்வாறு தான் இருந்ததா ? இடையில் ஏற்பட்ட மாற்றமா ? .
    அருமையான கேள்வி!

    தமிழ் மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு ..வெகுகாலமாக தமிழர்கள் மொழியையே மூன்றாக பிரித்து இயல் ,இசை ,நாடகம் என முத்தமிழ் என வழங்கி வருகிறார்கள் .

    பல்வேறு இனக்கூறுகளுக்கும் தொன்று தொட்ட கலைவடீவம் இருப்பது போல ,தமிழர்களுக்கு கூத்துக்கலை அமைந்திருக்கிறது ..தமிழகத்தின் கோவில் நிகழ்ச்சிகளில் கூட தொன்று தொட்டு கூத்து ஒரு முக்கிய அங்கமாக இருந்திருக்கிறது ..எதையும் கதை வடிவில் கலையாக வெளிப்படித்தியிருக்கிறார்கள் தமிழர்கள் ..கூத்து கால மாற்றத்தில் நாடகம் ஆகி இப்போது விஞ்ஞான வளர்ச்சி காலத்தில்ல் சினிமாவாக வந்து நிற்கிறது.

    ஆக இந்த கலைவடிவத்தில் பங்கு கொண்டவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த கலையை வெளிப்படுத்தி (இலக்கியம் போலல்லாமல்) மக்களிடையே பரிச்சையமும் புகழும் பெற்றார்கள் ..பின்னர் நாடகம் வந்த போதும் நாடகக் கலைஞர்களை அவர்கள் புகழுக்குரியவர்களாக கருதினார்கள் .. அதுவே இன்று திரைப்படம் வரை நீள்கிறது என நினைக்கிறேன்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  10. #9
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    PR,
    கேரளத்தில் படிக்கும் ஆர்வம் அதிகம் வருவதற்கு அங்கே நிலை கொண்ட கம்யூனிஸ ஆதிக்கமும் ஒரு காரணம் என நினைக்கிறேன் .
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  11. #10
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Prabhu Ram
    இதைப் பற்றி பேசுபவர்கள்/எழுதுபவர்கள் எல்லாருமே ஒரு கீழ்நோக்குப் பார்வையுடன் பேசுகிறார்கள். "ஏ பூச்சிகளே....நீங்கள் எல்லாம் புறநானூறு படிக்காமல் பில்லா பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்ற ஒரு அறிவுஜீவி தொனியில்.
    உண்மை ..என்னைப் பொறுத்தவரையில் புறநானூற்றைப் படித்து ஆதிகாலத்தில் நாங்கள் அப்படி இருந்தோம் இப்படி இருந்தோம் என்று வீண் பெருமை பேசுவதை விட , நம் சமூகம் பற்றிய தற்கால இந்த நூற்றாண்டைப் பற்றிய குறைந்த பட்ச வரலாற்றுப் பார்வையும் ,வரும் காலத்தில் நவீன மாற்றத்திற்கேற்ப நம் சமூகம் கைக் கொள்ள வேண்டிய தேவைகளையும் பற்றிய அறிவும் கொண்டிருப்பது அவசியம் ..கூடுதலால பில்லா பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

Page 1 of 7 123 ... LastLast

Similar Threads

  1. Realism in Tamil Cinema...
    By Bipolar in forum Tamil Films
    Replies: 62
    Last Post: 12th June 2007, 12:00 AM
  2. Responsibility of Media in India
    By seran in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 10th April 2007, 11:48 AM
  3. 10 best get-ups of tamil cinema
    By VENKIRAJA in forum Tamil Films
    Replies: 19
    Last Post: 5th February 2007, 05:00 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •