Page 118 of 148 FirstFirst ... 1868108116117118119120128 ... LastLast
Results 1,171 to 1,180 of 1479

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4

  1. #1171
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் முரளி,

    'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தின் சாதனைப்பட்டியலின் நீளம் மலைக்க வைக்கிறது. அது மிகப்பெரிய வெற்றிப்படம் என்பது மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும். அது போக பெரும்பாலோருக்கு அப்படத்தின் மூலமாக நடிகர்திலகத்துக்கு 'ஆசிய ஆப்பிரிக்க சிறந்த நடிகர்' விருது கிடைத்தது என்பதும் தெரிந்திருக்கும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சாதனைகள் இன்றைய தலைமுறைக்கு (ஏன் அன்றைய தலைமுறைக்கே) தெரிந்திராத உண்மைகள். நடிகர்திலகம் என்னும் மாபெரும் கலைஞனின் எப்படிப்பட்ட சாதனைகள் எல்லாம் மறைக்கப்பட்டிருக்கின்றன...??.

    சரியான நேரத்தில், சரியான ஒரு தொடரைத் துவங்கியுள்ளீர்கள். நடிகர்திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் சென்னை சித்ரா திரையரங்கிலும் வெள்ளி விழாவைத்தாண்டி ஓடியிருக்கிறது.

    சென்னை சித்ராவில் கட்டபொம்மன் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இதே போன்று சுதந்திரப்போராட்ட வரலாறு கொண்ட, மருது பாண்டியர்களின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'சிவகங்கைச்சீமை' படம் சென்னை பாரகனில் திரையிடப்பட்டிருந்ததாம். (ONLY WALKABLE DISTANCE BETWEEN THE TWO THEATRES). அப்போது, கண்ணதாசன் சார்ந்திருந்த ஒரு அரசியல் கட்சியினர் (1961-ல் கண்ணதாசன் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்), கட்டபொம்மனுக்கு காங்கிரஸ் படம் என்ற சாயம் பூசி, மக்கள் மத்தியில் எடுபடாமல் செய்யவேண்டுமென்பதற்காகவும் தங்கள் கட்சியைச்சேர்ந்த நடிகர் கதாநாயனாக நடித்த சிவகங்கைச்சீமை வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவும், ஒவ்வொரு காட்சி முடிந்தபின்னும் சித்ரா திரையரங்கிலிருந்து பாரகன் திரையரங்கு வரை சைக்கிள்களில் "கட்டபொம்மன் படம் அவுட்" என்று கத்திக்கொண்டே போவார்களாம். சித்ரா அரங்கிலும் டிக்கட் வாங்கும் கியூவில் நின்றுகொண்டு, வேண்டுமென்றே கட்டபொம்மன் படத்தை கேலிசெய்து பேசுவார்களாம். அப்போது பேச்சாளர்கள் (ஏச்சாளர்களும் கூட) நிறைந்த கட்சி அது. அவர்களுக்கு பதில் சொல்ல காங்கிரஸில் ஆள் இல்லாதது வசதியாகப்போய்விட்டது.

    ஆனால் கடைசியில் எந்தப்படம் வெற்றி மகுடத்தைச்சூடியது, எந்தப்படம் தோல்வியைத்தழுவியது என்பது சரித்திரம் காட்டும் உண்மை. (ஆனால், அதற்காக சுதந்திரப்போராட்ட வரலாறு கொண்ட 'சிவகங்கைச்சீமை' படம் தோல்வியடைந்ததில் நமக்கு மகிழ்ச்சியோ உடன்பாடோ இல்லை. ஒரு திரைப்படம் தயாரிக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை அறிந்த எவரும் எந்த ஒரு படமும் தோல்வியடைவதைக் கொண்டாட மாட்டார்கள்).

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1172
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்

    சென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.

    3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.

    4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.

    [ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].

    5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.
    வெற்றிவேல் வீரவேல்


    Quote Originally Posted by saradhaa_sn

    சென்னை சித்ராவில் கட்டபொம்மன் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, இதே போன்று சுதந்திரப்போராட்ட வரலாறு கொண்ட, மருது பாண்டியர்களின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'சிவகங்கைச்சீமை' படம் சென்னை பாரகனில் திரையிடப்பட்டிருந்ததாம். (ONLY WALKABLE DISTANCE BETWEEN THE TWO THEATRES). அப்போது, கண்ணதாசன் சார்ந்திருந்த ஒரு அரசியல் கட்சியினர் (1961-ல் கண்ணதாசன் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்), கட்டபொம்மனுக்கு காங்கிரஸ் படம் என்ற சாயம் பூசி, மக்கள் மத்தியில் எடுபடாமல் செய்யவேண்டுமென்பதற்காகவும் தங்கள் கட்சியைச்சேர்ந்த நடிகர் கதாநாயனாக நடித்த சிவகங்கைச்சீமை வெற்றி பெற வேண்டுமென்பதற்காகவும், ஒவ்வொரு காட்சி முடிந்தபின்னும் சித்ரா திரையரங்கிலிருந்து பாரகன் திரையரங்கு வரை சைக்கிள்களில் "கட்டபொம்மன் படம் அவுட்" என்று கத்திக்கொண்டே போவார்களாம். சித்ரா அரங்கிலும் டிக்கட் வாங்கும் கியூவில் நின்றுகொண்டு, வேண்டுமென்றே கட்டபொம்மன் படத்தை கேலிசெய்து பேசுவார்களாம்.

    ஆனால் கடைசியில் எந்தப்படம் வெற்றி மகுடத்தைச்சூடியது, எந்தப்படம் தோல்வியைத்தழுவியது என்பது சரித்திரம் காட்டும் உண்மை.

    திரையரங்கத்திற்குள்ளேயே எதிர் மறையான பிரச்சாரங்கள் செய்தும், அவற்றையெல்லாம் முறியடித்து மாபெரும் வெற்றியடைந்தது, கட்டபொம்மன் நிகழ்த்திய மற்றுமொரு சாதனையாகும்.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  4. #1173
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Celeberating 75 years of tamil cinema series...

    today 10.30 pm, in Sun TV - " அன்பைத் தேடி "

    friday 3rd Oct, 10.30 pm - " அந்த நாள் ".

    பார்த்து மகிழுங்கள்.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  5. #1174

    Join Date
    Feb 2008
    Posts
    111
    Post Thanks / Like
    saaradha,

    You had mentioned that you wanted to see Chitra Paurnami. This is a truly useless movie, and Sivaji comes in a horrible wig! You can safely skip it...


    Cheers
    RV
    Originally known as RV

  6. #1175

    Join Date
    Feb 2008
    Posts
    111
    Post Thanks / Like
    More reviews at my blog on Sun TV's late night movies - http://awardakodukkaranga.wordpress.com/

    Chiranjeevi at http://awardakodukkaranga.wordpress....;-chiranjeevi/

    Irumbutthirai at http://awardakodukkaranga.wordpress....umbuth-thirai/

    Kappalottiya thamizhan at http://awardakodukkaranga.wordpress....iya-thamizhan/

    Rajapart rangadurai's review in ANanda vikatan at http://awardakodukkaranga.wordpress....rt-rangadurai/
    Originally known as RV

  7. #1176

    Join Date
    Feb 2008
    Posts
    111
    Post Thanks / Like
    This is a terrific discussion, but hard to read the older pages. Is there a consolidated article of all the points in this forum somewhere?
    Originally known as RV

  8. #1177
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Bhoori
    This is a terrific discussion, but hard to read the older pages. Is there a consolidated article of all the points in this forum somewhere?
    Pls go to the page 1 ,you can find direct links for important reviews ,artciles and old parts
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #1178
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சாரதா,

    நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் நடிகர் திலகத்தின் சாதனைகளை மறைக்க முடியாது என்பது மட்டுமல்ல பலவற்றை முறியடிக்கவும் முடியாது.

    ஜோ & மோகன்,

    நன்றி.

    நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத காவியப்படமான வசந்த மாளிகை வெளியான 36-வது ஆண்டு நாளான இன்று நடிகர் திலகத்தின் சாதனைகளை பற்றி மேலும் பேசுவோம்.

    அன்புடன்

  10. #1179
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1959

    1. இதே ஆண்டில் கட்டபொம்மன் மற்றும் பாகப்பிரிவினை படங்களின் நடுவில் வெளி வந்தும் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் மரகதம்.

    2. மீண்டும் ஒரே நாள் வித்யாசத்தில் இரண்டு நடிகர் திலகம் படங்கள் வெளியாயின. அவற்றில் ஒன்று வெற்றிப்படமாக அமைந்தது.

    அவள் யார் - 30.10.1959

    பாகப்பிரிவினை - 31.01.1959


    வருடம் - 1960

    1. பாகப்பிரிவினையை தொடர்ந்து 1960 பொங்கலன்று வெளியான இரும்பு திரையும் வெள்ளி விழா கொண்டாடியது.

    கோவை - கர்னாடிக்.

    2. தொடர்ந்து மூன்று வெள்ளி விழா படங்களை கொடுத்ததன் மூலம் மீண்டும் ஒரு முதன் முதல் சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

    3. இந்த வருடம் இரும்பு திரை தவிர மூன்று 100 நாட்கள் படங்களை கொடுத்தார் நடிகர் திலகம்.

    தெய்வப்பிறவி

    படிக்காத மேதை

    விடி வெள்ளி.

    4. ஒரே வருடத்தில் ஒரு வெள்ளி விழா மற்றும் மூன்று 100 நாட்கள் படங்களை முதன் முதலாக கொடுத்தவர் நடிகர் திலகம் தான்.

    5. படிக்காத மேதை ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான மதுரை - தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் இரண்டாவது படமாக அமைந்தது.

    6. படிக்காத மேதை ஓடிய 116 நாட்களில் பெற்ற வசூல் எல்லோரையும் திகைக்க வைத்தது.

    116 நாட்களில் மொத்த வசூல் - Rs 2,21,314- 1 அ - 3 ந பை

    வரி நீக்கிய நிகர வசூல் - Rs 1,65,293 - 4 அ - 11 ந பை

    விநியோகஸ்தர் பங்கு - Rs 89,103 - 15 அ - 5 ந பை

    7. நடிகர் திலகம் திரையில் நடிகர் திலகமாகவே தோன்றிய படம் - பாவை விளக்கு.

    8. படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் நடிகர்களாகவே முதல் காட்சியில் தோன்றி பின் நடிகர் திலகம் அகிலனின் பாவை விளக்கு நாவலை படிக்க அனைவரும் கதாபாத்திரங்களாக மாறியது முதன் முதலாக வந்தது பாவை விளக்கு படத்தில் தான்.

    9. முதன் முதலாக தாஜ் மகாலில் படமாக்கப்பட்ட தமிழ் படம் - பாவை விளக்கு.

    10. முதன் முதலாக ஸ்ரீதர் இயக்கிய நடிகர் திலகத்தின் படம் - விடி வெள்ளி.

    11. மீண்டும் ஒரே நாளில் (தீபாவளி) இரண்டு நடிகர் திலகத்தின் படங்கள் வெளியானது

    பாவை விளக்கு - 19.10.1960

    பெற்ற மனம் - 19.10.1960

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  11. #1180
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Murali Sir,
    தொடர்ந்து பொழியட்டும் உங்கள் தகவல் மழை
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •