Page 58 of 148 FirstFirst ... 848565758596068108 ... LastLast
Results 571 to 580 of 1479

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4

  1. #571
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    டியர் முரளி,

    'முத்து நகையே உன்னை நானறிவேன்' பாடலைக்கேட்கும்போதெல்லாம், நடிகர்திலகத்துடன் சேர்ந்து கவியரசரும் நினைவுக்கு வருவார்...

    கால் ஊனமுற்ற தங்கையை வர்ணித்துக்கொண்டே வருபவர் ஓரிடத்தில் எழுதியிருப்பார்...

    'கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
    கையழகு பார்த்தால் பூ எதற்கு
    உன் காலழகு பார்த்தால், தெய்வத்துக்கு
    கருணை என்றொரு பேர் எதற்கு'

    அந்த கண்ணதாசனை என்ன செய்தால் தகும்?. படுபாவி, இப்படி ஒரு திறமையா..?.
    சாரதா,

    அந்த பாடலின் மூன்றாவது வரியில் "காலழகு பார்த்தால்" என்று சொல்லிவிட்டு ரோஜா ரமணியின் போலியோ பாதிக்கப்பட்ட கால்களை பார்த்துவிட்டு நடிகர் திலகம் ஒரு விநாடி தடுமாறுவார், முக பாவம் மாறி கண்ணீர் சிந்துவார். உடனே குழந்தை மனம் வருத்தப்பட கூடாதே என்று "தெய்வதிற்கு" என்று தொடர்ந்து பாடுவார். தியேட்டரில் கைதட்டல் அதிரும். இதை பற்றி சொல்லும்போது, நான் முதலில் இந்த படத்தை பார்த்த சம்பவம் நினைவிற்கு வருகிறது.

    படம் 1968-ல் ரிலீஸ் ஆன போது மதுரையில் சென்ட்ரல் சினிமாவில் இந்த படம் எனது தாய் மற்றும் உறவினர்களோடு பார்த்தேன். படம் வெளியான மூன்றாவது நாள் (ஞாயிற்றுக்கிழமை) பார்க்கிறேன். நான் சிறுவன். இந்த காட்சிக்கு பயங்கர கைதட்டல். சில நாட்களுக்கு பின் வானொலியில் இந்த பாடல் ஒலிப்பரப்பாகிறது. ஆவலுடன் கேட்டேன். அந்த வரி வருகிறது. ஆனால் எனக்கு ஏமாற்றம். கைதட்டல் கேட்கவில்லை. "அன்னிக்கு தியேட்டரில் கேட்ட கைதட்டல் இன்னிக்கு ஏன் கேட்கலே?" என்று எனது அம்மாவிடம் ஒரே கேள்வி மயம். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

    பிரபா,

    நாங்கள் எழுதியிருந்தாலும் உங்கள் கருத்துகளை நீங்களும் சொல்லுங்கள். அறிவாளி மற்றும் சவாலே சமாளி (ராஜ் டிவியில் பல நேரங்களில் பல காட்சிகளை கட் பண்ணி விடுவார்கள். ஆகையால் DVD/VCD பாருங்கள்)

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #572
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Last week there was a nice article about NT's residence, " Annai Illam" in "Times of India". It said, that the house was more than 100 years old and also briefly described about the unique features of the rooms. It seems that both Ram & Prabhu were of the opinion to sell the house. Later, both Rajini & Kamal persuaded them not to do so, to which, they agreed. Rajini's punch was - " Munnadi idhu Sivajiyin Annai Illam, aana ippo Sivajidhan Annai Illam"
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  4. #573
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Dear Mohan,

    I read that article and try to reproduce it here. But the online edition didn't have that news, in spite of myself trying it find it. It was a good article but if they had added some photos (taken inside), it would have been better.

    Regards

  5. #574
    Vivasaayi's Avatar
    Join Date
    Jun 2007
    Posts
    4,795
    Post Thanks / Like
    watching raja-rani

    wonderful movie..great pair,superb NSK.

    NTs movies in early days were so good.he is young and stylish!

    padmini- WHAT A BIYOOOOOOOOOOOOOTY
    OM NAMASIVAYA

  6. #575
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vivasaayi
    watching raja-rani
    wonderful movie..great pair,superb NSK.

    NTs movies in early days were so good.he is young and stylish!

    padmini- WHAT A BIYOOOOOOOOOOOOOTY
    Yet to see the film. Will catch it on DVD soon.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  7. #576
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    'ராஜா ராணி' கதையின் கருவைக் கொண்டு, 'சுஜாதா' என்று பின்னொரு நாளில் சிவகுமார், ராஜலக்ஷ்மி நடிப்பில் படம் வெளிவந்தது. படம் வெற்றிபெற்றதா என்று தெரியவில்லை. "சுஜாதா ஐ லவ் யூ சுஜாதா' ஒரு பாடல் மிகப் பிரபலமானது.

    பின்னர், இதே திரைக்கதையைக் கொண்டு எஸ்.வி.சேகரின் படம் ஒன்றும் வெளியானது (படம் பெயர் நினைவில்லை).

    ராஜா ராணி திரைப்படத்தில், படத்தை விட நம் மனதைக் கொள்ளைக் கொள்வது அவர்களின் மேடை நாடகங்களும், அதில் தமிழ்ச் சுவையோடு தெறிக்கும் வசனங்களும்.

    சாக்ரடீஸ் ஆக சிவாஜி நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கும். என் பள்ளி நாட்களில், இந்த படத்தில் வரும் சாக்ரடீஸ் மேடை நாடக வசனங்களும், இன்னொரு மேடை நாடக வசனமும், பதிவு நாடாவில் பதிவு செய்து, வாரம் ஒருமுறையேனும் நானும் என் தந்தையும் கேட்டு மகிழ்வோம். சாக்ரடீஸ் வசனம் நான் மனப்பாடம் செய்து என் அப்பாவின் முன் நடித்து காண்பிப்பேன். சிறுவயதாக இருப்பினும், அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. "எதையும் ஏன் எதற்காக எப்படி என்று கேள், அப்படிக் கேட்டதால் தான் சிலைவடிக்கும் இந்தச் சிற்பி சிந்தனைச் சிப்பியாக மாறினேன்". கருத்தாழமிக்க வசனங்கள், அதை நளினமாய், தமிழுக்கே உரிய கம்பீரத்தோடு நம்முன் கொணர்ந்த நடிகர்திலகம்! படத்தை விட படத்தில் வரும் மேடை நாடங்களின் பங்கு படத்திற்கு மகுடம் சூட்டியது என்றால் அது மிகை ஆகாது.

  8. #577
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Nice feedback on Raja Rani, SP. Pls do write more in this thread.

    BTW, you could also have included " Bhayamennada Yamanidam" in your signature.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  9. #578
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    ரங்கன்,

    (என் கையோப்பம் என்னை, எனக்குப் பிடித்தவற்றை, என் பலத்தை/பலவீனத்தை பிரதிபலிக்கும். எனக்கு யமனிடம் பயம் இன்று வரை உண்டு, அதனால் அதை எழுதவில்லை. )

    ராஜாராணியைப் பற்றி நான் கூறியது 2 சதவிகிதம் தான். அதில் பத்மினியின் யௌவனம், என்.எஸ்.கே டி.ஏ.மதுரத்தின் பகுதிகள், எஸ் எஸ் ஆரின் மறைமுக வில்லத்தனம், இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். அந்த அளவு என் எழுத்துவன்மையும், படத்தை பற்றிய அறிவும் இடம் கொடுக்கவில்லை. வேறுயாரேனும் எழுதியிருப்பார்கள்.

    காதல் கதையொன்று கூறுங்களேன் அத்தான்

    என்று ராஜசுலோசனா கேட்க "வீரத்தை வென்ற காதல் கதையொன்று கூறட்டுமா கண்ணே" என்று ஆரம்பித்து அதன் பின் வரும் அற்புத வசனமழையில் நனைந்து நிச்சயம் தமிழன்னை தன்னையே இழந்திருப்பாள்.

    ஒரு முறை கேட்டுப்பாருங்கள்!

  10. #579
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    I happened to read the shri Nagesh's autobiography "sirithu vazha vendum". He had mentioned one incident that has happened during Thiruvilayadal movie. As we all know, the conversation between Nagesh and NT was one of the highlighsts of the movie. The scene where Nagesh spoke to NT in the Temple was taken separately and continued with NT later. Even some of the dialogues were improvised by Nagesh. During the pre viewing (Dubbing), Sivaji sir along with APN, Nagesh were watching the above mentioned scene. Everybody was highly appreciative of Nagesh's acting and Nagesh was wondering with doubt that NT is going to ask for removing or reducing the scenes where Nagesh had improvised. But to the joyful surpirse of Nagesh, NT had remarked that "Nagesh has done really well. Dont reduce or change anything. Let it be there". Nagesh was floored by these words of Shivaji sir.

    That is the greatness and magnanimity of Shivaji sir and Nagesh has remembered that in his book. Nagesh also says that for Shivaji sir, Acting is everything and nothing else matters. Shivaji sir would not only excel but also ensure others do not lag behind and will encourage everyone to do better.

    After reading the same, I wanted to share this though many would be aware of this.

  11. #580
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    ரங்கன்,

    ராஜாராணியைப் பற்றி நான் கூறியது 2 சதவிகிதம் தான். அதில் பத்மினியின் யௌவனம், என்.எஸ்.கே டி.ஏ.மதுரத்தின் பகுதிகள், எஸ் எஸ் ஆரின் மறைமுக வில்லத்தனம், இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். அந்த அளவு என் எழுத்துவன்மையும், படத்தை பற்றிய அறிவும் இடம் கொடுக்கவில்லை. வேறுயாரேனும் எழுதியிருப்பார்கள்.

    காதல் கதையொன்று கூறுங்களேன் அத்தான்

    என்று ராஜசுலோசனா கேட்க "வீரத்தை வென்ற காதல் கதையொன்று கூறட்டுமா கண்ணே" என்று ஆரம்பித்து அதன் பின் வரும் அற்புத வசனமழையில் நனைந்து நிச்சயம் தமிழன்னை தன்னையே இழந்திருப்பாள்.

    ஒரு முறை கேட்டுப்பாருங்கள்!
    SP, your writing about RR really kindles my desire to watch the film soon.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •