Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 43

Thread: What was the last article you read?

  1. #11
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Quote Originally Posted by littlemaster1982
    Rendu per sandai pottukkaradhai paarkaradhunna enakku romba pidikkum hehe.
    Ingeyum athey thaan sometime
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Sep 2006
    Location
    Coimbatore,bangalore
    Posts
    1,614
    Post Thanks / Like
    enakkum venum... LM send to me after getting (u have my mail id)

  4. #13
    Banned Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Location
    Camp Arawak
    Posts
    4,600
    Post Thanks / Like
    i read Vaagai Chandrasekhar interview in AV.. pretty funny

    ... Yarum pattam kodukkamaleye, MGR-lenthu Puratchi-ayum, Karunanithi-lenthu Kalaingar-ayum suttu Puratchi Kalaingar-nu pattam vechikkittar..


  5. #14
    Senior Member Veteran Hubber sarna_blr's Avatar
    Join Date
    Dec 2007
    Location
    yaadhum oorEy ; yaavarum kElir
    Posts
    4,076
    Post Thanks / Like
    Gaptain'a paaththu ungalukku poraamai....
    Seven social sins:
    1.Politics without principles
    2.Wealth without work
    3.Pleasure without conscience
    4.Knowledge without character
    5.Commerce without morality
    6.Science without humanity
    7.Worship without sacrifice

  6. #15
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    Quote Originally Posted by raaja_rasigan
    enakkum venum... LM send to me after getting (u have my mail id)
    Sent to your Yahoo id.

  7. #16
    Senior Member Platinum Hubber ajithfederer's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    PhiladelphiaN !!
    Posts
    12,226
    Post Thanks / Like
    lm

    one kaapi please

  8. #17
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    Quote Originally Posted by ajithfederer
    lm

    one kaapi please
    Read it from here: http://www.divshare.com/download/3961952-164.


    Disclaimer: Read at your own risk. The article is bit nasty.

  9. #18
    Senior Member Veteran Hubber VENKIRAJA's Avatar
    Join Date
    Mar 2006
    Location
    Madras
    Posts
    3,285
    Post Thanks / Like
    LM mail me.....cos that link says ile not found! :sigh:

  10. #19
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Sep 2006
    Location
    Coimbatore,bangalore
    Posts
    1,614
    Post Thanks / Like
    இளையராஜா ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தார். அப்போது ‘தனம்’ படத்தின் ரீ ரிக்கார்டிங் பார்க்க வருமாறு மாணவர்கள் சிலரை அழைத்திருந்தார். சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போன மாணவர்கள் அவரை சந்திக்க பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்த போது, அவர்களுக்கு கம்போஸிங், ரீ ரிக்கார்டிங் பற்றி விளக்கினார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராஜாவின் பதில்கள்:

    அருண் : அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நீங்கள் வந்து மாணவர்கள் மத்தியில் பேசியபோது உங்கள் உணர்வு எப்படியிருந்தது?

    இளையராஜா: உங்கள் முன் பேசும் போது ரொம்ப பாஸிடிவான ஒரு எனர்ஜி எனக்குக் கிடைத்தது. ஏதோ சில நிமிஷம் இருந்து விட்டுப் போகணும்னு தான் நான் அங்கு வந்தேன். ஆனால் மாணவர்களின் கூட்டத்தையும் அவர்கள் தரும் உற்சாகத்தையும் பார்த்து என்னையும் அறியாமல் அதிக நேரம் பேசினேன்.

    தனசேகர் : தமிழிசையை இங்கே மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கேட்கிறார்கள் எனில் அதுக்கு நீங்கள்தான் காரணமில்லையா?’

    இளையராஜா: அது உங்களின் நம்பிக்கை. ஆனால் அதுவே உண்மையாகிவிடாது. இசை ரொம்பவும் ஆழமானது. இதற்கு முன்னாடி இசையமைத்தவர்களும், தமிழிசையை போட்டிருக்காங்க. நாடு, மொழி, இவற்றையெல்லாம் கடந்ததுதான் இசை. தமிழிசைன்னு சொல்றதோ, கர்நாடக இசைன்னு சொல்றதோ பெரிய குற்றம். கர்நாடக இசையில் இருக்கிற ஏழு ஸ்வரம்தான் தமிழிசையிலும் இருக்கு. உங்களுக்குள் இருக்கிற உசிருதான் எனக்குள்ளும் இருக்கு. (சிரிக்கிறார்).

    இளஞ்சேரலாதன்: ‘How to name it?_ஐ நீங்கள்தான் இசையமைத்தீர்கள். மற்ற மியூசிக் டைரக்டர்கள் கூட இதை உபயோகப்படுத்தற மாதிரி இருக்கு. எந்த படத்தில்னு சரியா சொல்ல முடியல.

    இளையராஜா: அந்த மியூசிக் தான் குறிப்பா எல்லாத்திலேயும் வருதுன்னு நீங்க சொல்றீங்க. உங்களை மாதிரி ஆட்கள் தான் மியூசிக்கிற்கு வரணும். அப்போது தான் அந்த தப்பை திரும்ப பண்ண மாட்டாங்க.

    கோபிநாத்: உங்களின் சினிமா பாடல்கள் அளவிற்கு நீங்கள் இசையமைக்கும் ஆல்பம் ரீச்சாகலேயே, ஏன்?

    இளையராஜா: ரீச்சுன்னு எந்த அர்த்தத்தில் நீங்க சொல்றீங்க.

    அருண்: நிறைய மக்களிடம் சென்றடையும் விஷயத்தை தான் ரீச்சுன்னு சொல்றோம்.

    இளையராஜா: ரீச்சுக்கும், மியூசிக்கிற்கும் சம்பந்தமே இல்லை. நல்ல மியூசிக் எதுன்னு நீங்க தேடிக் கண்டுபிடிக்கணும். உங்களுக்கு வந்து சேர்வதெல்லாம் நல்ல மியூசிக்கா இருக்கணும்னு இல்லை. ரோட்டில் போகும் போது என்ன வருது, நீங்க அதில் எதை எடுக்கிறீங்க என்பது உங்களைப் பொருத்தது.

    ஜோசப் : பழைய பாட்டை ரீமிக்ஸ் பன்றது இப்போ ஃபாஷனாகிவிட்டதே?

    இளையராஜா: அதையெல்லாம் நீங்க ஏன் கேட்கிறீங்க. இந்த மாதிரி பாடல்களை கேட்க மாட்டோம்னு எல்லோருமே இருந்து விட்டால் ஆட்டோமேட்டிக்கா ஸ்டாப் ஆகி விடும்.

    சுகன் : நாங்கள் ஏன் உங்களிடம் இந்த ரீ_மிக்ஸ் பற்றி கேட்டோம்னா, ஹிந்தியில் ‘சீனி’கும் படத்திற்கு நீங்கள் முன்பு இசையமைத்த ‘குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா’ ‘மெல்லத்திறந்தது கதவு’ படத்தின் பாடலின் டியூனையும் ‘மௌனராகம்’ படத்தில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு...’ பாடலின் டியூனையும் அப்படியே ஹிந்தியில் போட்டிருந்தீர்கள் இல்லையா?

    இளையராஜா: டைரக்டர் பால்கி, உங்களை மாதிரிதான் அவரும் என்னுடைய மியூசிக்கை கேட்டுத்தான் வளர்ந்திருக்கார். ‘நீங்கள் மியூசிக் பண்ணனும்’னு அவர் என்னிடம் கேட்டார். அப்போது நான் முன்பே போட்ட அந்த டியூன்களையே தன் படத்திற்கும் போட வேண்டுமென்று கேட்டார். நான் அதற்கு, ‘வேறொரு புது மியூசிக் என்றால் பரவாயில்லை. நான் முன்பு பண்ணினதையே இப்போ பண்ணச் சொல்கிறீர்களே’ என்றேன். உடன்பாடில்லாததால் அதை நான் மறுத்தேன். உடனே அவர் ‘நார்த் இண்டியன்களுக்கு நீங்க போட்ட அந்த டியூனோட அருமை தெரியல. தெரிய வைக்கணும்னுÊ தான் கேட்கிறேன்’ என்றார். அதனால் பண்ண வேண்டிய சூழ்நிலை. இல்லைன்னா நிச்சயம் பண்ணியிருக்கமாட்டேன்.
    இளஞ்சேரலாதன்: யுவன் மியூசிக்கில் நீங்கள் பாடி யிருக்கீங்க இல்லையா? எப்படி ஃபீல் பண்றீங்க?

    இளையராஜா: யுவன் நல்லா மியூசிக் பண்றான். சந்தோஷமா இருக்கு. பொருத்தமான சிச்சுவேஷனில் என்னுடைய வாய்ஸ் இருந்தா பெட்டராயிருக்கும்னு ஒரு மியூசிக் டைரக்டரா யுவன் என்னை அழைத்த போது போகாமல் இருக்க முடியுமா? (சிரிக்கிறார்). அப்படித்தான் ‘பட்டியல்’ படத்தில் ‘நம்ம காட்டுல...’ ‘பருத்தி வீரனில்’ ‘அறியாத வயது...’ போய் பாடிட்டு வந்தேன்.

    பிரேம்ராஜ்: இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ள நீங்கள் அப்படிப்பட்ட பாடல்களை நிறைய எழுதலாமே, ஏன் எழுதவில்லை?

    இளையராஜா: நான் எழுதலைன்னு உங்களுக்கு யார் சொன்னது? இரண்டு வாரம் முன்பு நான் எழுதிய ‘இசைஞானி இளையராஜா ஆய்வுக்கோவை’ மற்றும் ‘அடியார் அடியற்றி’ என்ற இரண்டு புத்தகம் ரிலிஸாச்சு. எதுக்கு எழுதி எழுதி குப்பையைக் கொட்டணும். நிறைய பேர் எவ்வளவோ இலக்கியங்களை எழுதி வச்சிட்டுப் போயிருக்காங்க. அதையெல்லாம் நீங்கள் படிச்சிருக்கீங்களா? சொல்லுங்க. ஜோசப் : ஒரு படத்தை டைரக்ஷன் பண்ணணும்னு எப்பவாவது நினைத்ததுண்டா?

    இளையராஜா: அதுக்காகத்தான் நிறைய பேர் இருக்காங்களே. 861 படங்களை முடிச்சிருக்கேன். டைரக்டர்களுக்குத் தெரிஞ்ச சினிமா எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்ச சினிமா அந்த டைரக்டர்களுக்குத் தெரியாது. நீங்கள் எது சினிமான்னு நினைக்கிறீங்களோ அது அல்லாத சினிமாக்களும் இருக்கிறது. ஒரு சினிமான்னா எதையெல்லாம் தாங்கி நிக்கணும், பொறுப்பான இடத்திலிருந்து எப்படி சொல்லணும்கிற அந்த விஷயம் யாராலும் சரியா கவனிக்கப்படலை. ஆரம்பத்தில் ஒரு காலகட்டம் வரை தரமான இலக்கியப் படங்கள் வந்தன. அப்புறம் இமேஜ்னு ஒரு வட்டத்துக்குள் வந்த பிறகு சினிமாவின் போக்கு மாறி விட்டது. ரஜினிகாந்த், ஆரம்ப கால கட்டங்களில் படம் ஓடுகிறதோ இல்லையோ சேலஞ்சிங்கா நல்ல படங்களில் நடிச்சார். கமலஹாசனும் சரி, பாரதிராஜாவும் சரி, மணிரத்னமும் சரி எல்லோருடைய நோக்கமும் இந்தக் கலையை எப்படி அழகாகச் சொல்வது என்பதில் தான் இருந்தது. சினிமாவிலுள்ள கலைச் சாதனங்கள் வேறு எதிலுமே இல்லை. இப்படி இவ்வளவு கலை அம்சங்களைக் கையில் வைத்துக் கொண்டு என்ன சொல்லப் போறீங்கன்னு ஒரு டைரக்டரிடம் கேட்டா, அவரிடமிருந்து சரியான பதில் இருக்காது. வெளிநாட்டுப் படங்களைப் பார்த்துவிட்டு அதிலுள்ள காட்சிகளைத் தான் திரும்ப எடுக்கிறார்களே தவிர சொந்தமா நான் இதை பண்ணினேன்னு சொல்ல முடியறதில்லே.

    தனசேகரன் : கல்கத்தாவில் உள்ள மியூசிக் அகாடமியில் கலந்து கொண்டீர்களாமே?

    இளையராஜா: ஆமாம், அந்த மியூசிக் அகாடமி பழைமையும் பெருமையும் வாய்ந்தது. என் நண்பர் ஒருவரின் அழைப்பிற்கு இணங்க அங்கே போனேன். ‘அசசி’ என்ற நிகழ்ச்சி நடந்தது. பெரிய பெரிய மியூசிக் ஜாம்பவான்கள் ஒரு இருபது பேர் அங்கிருந்தார்கள். ஸ்காலர்ஷிப் மாணவர்களுக்கான நிகழ்ச்சி அது. மாணவர்கள் பாடிக் காட்டினார்கள். அப்போது ஒரு மாணவர் வந்தார். அவர்கள் முன்பு வாத்தியத்தோடு பாடிக்காட்டினார். பாடி முடித்ததும் ஒருவர், ‘நீ இப்போ பாடினேயே, அது என்ன ராகம்?’ என்று கேட்டார். இப்படி எல்லோரும் ஆளாளுக்கு ஒரு கேள்வியைக் கேட்டார்கள். எல்லாவற்றிற்கும் அவரிடம் பதில் இருந்தது. கடைசியில் ஒருத்தர் ‘இந்தக் கீர்த்தனையை உனக்கு யார் சொல்லித் தந்தது?’ என்று கேட்டதும் அவர், தன்னுடைய மாஸ்டரின் பெயரைச் சொல்லி அவர் தான் இந்த கீர்த்தனையைக் கற்றுத் தந்தார் என்றார். உடனே, அவர் ‘உன் மாஸ்டர் சொல்லிக் கொடுத்ததை பாடினியே, சொந்தமா நீ அதில் என்ன செஞ்சே?’ என்றார். அவர் அப்படிக் கேட்டதும் மாணவர் திக்கு முக்காடிப்போனார்.

    மணிவண்ணன்: நீங்கள் சொல்றது ரொம்ப சரி. எதிலுமே நம்மோட கிரியேஷன் இருக்கணும். அப்படித்தானே?

    இளையராஜா: ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன், ரெடி, கட்ன்னு சொல்றது தான் சினிமாவா? நீ எடுத்ததை எல்லாம் வெட்டி ஒட்டினால் அது தான் சினிமாவா? கிடையாது. சினிமா என்பது வேறு. சிலபேர் சரியா சொல்றாங்க, சில பேர் இமேஜ் பாக்கிறாங்க. இந்தக் கலையுலகத்தை ‘இமேஜ்’ கெடுக்கிற மாதிரி வேறு எதுவும் கெடுக்கல. றீ

    :kumudam:

  11. #20
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Sep 2006
    Location
    Coimbatore,bangalore
    Posts
    1,614
    Post Thanks / Like
    "வண்ண வண்ண பூக்கள்''
    பாலு மகேந்திரா டைரக்ஷனில் தாணு தயாரித்த படம்

    பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்
    திராவின் இயக்கத்தில், "வண்ண வண்ணப்பூக்கள்'' என்ற படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.

    இந்தப் படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி தாணு கூறியதாவது:-

    பாலு மகேந்திரா சந்திப்பு

    "எனது அலுவலகம் அப்போது தி.நகரில் இருந்தது. ஒருநாள் காலை நான் அலுவலகத்தில் இருந்தபோது, டைரக்டர் எம்.ஆர்.பூபதி டைரக்டர் பாலு மகேந்திராவை அழைத்துக்கொண்டு வந்தார்.

    நான் அவர்களை வரவேற்று உபசரித்தேன்.

    பாலுமகேந்திரா இயக்கிய படங்களை பார்த்திருக்கிறேனே தவிர, அவர் இயக்கிய படம் எதையும் தயாரித்ததில்லை. என்ன நோக்கத்துக்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று நான் யோசித்த நேரத்தில் பாலு மகேந்திராவே என்னிடம், "தாணு சார்! நான் இதுவரை இயக்கிய படங்களில் ஒரு கமர்ஷியல் தயாரிப்பாளரை தேர்வு செய்யாமல் இருந்து விட்டேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு. அதன் விளைவாக இன்று நான் கஷ்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். எனது ஆபீசுக்கு 6 மாத வாடகை பாக்கி என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. இந்த நேரத்தில் எனக்கு ஒரு படம் கொடுத்தீர்களானால், காலத்துக்கும் மறக்கமாட்டேன். இப்போது நீங்கள் எனக்கு அட்வான்சாக ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், அது எனக்கு ஒரு லட்சம் மாதிரி'' என்று கூறினார்.

    ஒரு பெரிய இயக்குனர் இப்படி தன் நிலை பற்றி வெளிப்படையாகப் பேசியதில், எனக்கு மனம் பதறிவிட்டது. அப்போதே அவரிடம், "சார்! என் தயாரிப்பில் ஒரு படம் இயக்குங்கள்'' என்றேன்.

    "ஒரு கதை வைத்திருக்கிறேன். 26 லட்ச ரூபாய் பட்ஜெட். படத்தில் விக்னேஷ், ஆதித்யா, மவுனிகா, வினோதினி நடிக்கிறார்கள். இவர்களுக்கு இந்தக் கதையை சொல்லி, வீட்டிலேயே ரிகர்சல் வைத்து ஷுட் பண்ணியும் இருக்கிறேன். ஏற்கனவே கதையின் கேரக்டர்கள் இவர்களுக்கு அத்துபடி என்பதால், சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துவிடுவேன்'' என்றார். அதோடு அவர் சொன்ன நட்சத்திரங்கள் நடித்த சில காட்சிகளுக்கான ஸ்டில்களையும் காண்பித்தார்.

    பெரிய டைரக்டர் இப்படி சொன்னதும் நான் உடனே `கேஷ் பாக்சை' திறந்து ஒரு தொகையை அவர் கையில் கொடுத்து "கவலைப்படாதீங்க சார்! நாம படம் பண்றோம்'' என்றேன்.

    இளையராஜா

    அப்போதே அவர் படத்தின் டெக்னிஷியன்கள் பட்டியலையும் சொன்னார். அதில் இசை என்ற இடத்தில் இளையராஜா பெயர் இருந்தது. அந்தப் பெயரை பார்த்ததும் என் மனது மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தது.

    என் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது. என் தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவான "நல்லவன்'' படத்துக்கு இசைஞானி இளையராஜாவே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். அதற்காக அவரது தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரனுடன் சென்று சந்தித்தேன். என் விருப்பம் சொன்னதும் நான் எதிர்பார்த்திராத ஒரு தொகையை சம்பளமாக சொன்னார். அவர் கேட்ட தொகையினால், நான் அதிர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டவர், "பொட்டி (ஆர்மோனியம்) போடத் தெரியாதவங்களே உங்க கிட்ட அதிகம் கேட்டு வாங்கும்போது நான் கேட்டாலென்ன?'' என்றார்.

    அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்த இசையமைப்பாளருக்கு, நான் பலமுறை பல சூழ்நிலைகளில் உதவியிருக்கிறேன். அவர் இயக்கிய முதல் படம் ரிலீசின்போது பணப்பிரச்சினை. படத்தை வெளியிட முடியாத நிலையில் என்னிடம் வந்தார். 11/2 லட்சம் ரூபாய் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து, ரிலீசுக்கு ஏற்பாடு செய்தேன்.

    அடுத்த படத்துக்கு பூஜை போடும்போதே பிரச்சினை. பூஜைக்கான பணத்துக்காக எனக்கு போன் போட்டார். அப்போது எனது வினியோகத்தில் ஆவடி ராமரத்னா தியேட்டரில் "எங்கேயோ கேட்ட குரல்'' படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே போய் 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். மூன்றாவதாகவும் ஒரு படத்துக்கு ரிலீசின்போது பிரச்சினை நேர, அப்போது 2 லட்சத்துக்காக ஓடோடி வந்தார். அதையும் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து சரி செய்தேன்.

    இப்படி வெவ் வேறு சமயங்களில் என்னிடம் உதவி பெற்றவர், நான் தயாரிப்பாளர் ஆனதும் "உங்கள் படத்துக்கு நானே இலவசமாக இசையமைத்துத்தருவேன். உங்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இதுவாகத்தான் இருக்கும்'' என்று உருக்கமாகப் பேசியதன் பேரில் இசை வாய்ப்பை அவருக்கு வழங்கினேன். அப்போதும் அவர் தனது அப்பாவுக்கு உடல் நலமில்லை என்று கூறி "ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும்'' என்றார்.

    இதுவரை நன்றாக இருந்த அவர் பேச்சு, படத்தின் வியாபாரத்தை நான் பேசி முடித்தபோது மாறிவிட்டது. படம் நல்ல விலைக்கு போயிருப்பதை தெரிந்து கொண்டவர், படத்தின் ஹீரோ வாங்கும் சம்பளம் அளவுக்கு தனக்கும் தந்தால்தான் ஆயிற்று'' என்று அடம் பிடித்தார். "இது கூட நானல்ல! என் மனைவியின் கட்டாயத்துக்காகவே வாங்க வேண்டியிருக்கிறது'' என்று அப்போதும் அவர் சொன்னதுதான் ஹைலைட்.

    இந்த விஷயம் இசை ஞானியின் காதுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர் எடுத்த எடுப்பில் அதிக சம்பளம் கேட்டு அதிர வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு அவரை வற்புறுத்த விரும்பாமல் அப்போது நான் திரும்பி வந்துவிட்டேன்.

    அதற்குப்பிறகு இப்போதுதான் அவரது இல்லத்தில் காலெடுத்து வைத்திருக்கிறேன். அவருக்கே உரிய பாணியில் வரவேற்றவர், "உங்களுக்கு இசையமைக்கிறேன். டைரக்டர் யார்?'' என்று கேட்டார்.

    நான் பாலுமகேந்திராவின் பெயரை சொன்னேன்.

    இப்போது அவர் முகத்தில் சின்னதாய் ஒரு மாறுதல் தெரிந்தது.

    "தாணு! `ரத்த சம்பந்தலு'ன்னு ஒரு தெலுங்குப்படத்தை பாலுதான் பண்ணினார். பானுசந்தர் - அர்ச்சனா நடிச்சாங்க. 2 வருஷம் ஆகியும் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை.''



    பதிலுக்கு நான், "சார்! இப்ப அவரே என்கிட்ட அவரோட நிலை பற்றி உருக்கமா சொன்னதாலதான் அவரை வெச்சு படம் பண்றதா வாக்குக் கொடுத்திட்டு அட்வான்சும் கொடுத்திட்டு நேரா உங்க கிட்ட வந்திருக்கிறேன்'' என்றேன்.

    அப்போதும் அவர் இசையமைக்க யோசித்தார்.

    நான் பலவாறாக சமாதானப்படுத்தி, அவர் மனதை மாற்றினேன்.

    இளையராஜா இசையமைக்க சம்மதம் தந்ததும் மறுநாளே பாலு மகேந்திரா இளையராஜாவை சந்தித்தார். தனது படத்தின் கதை பற்றி விளக்கினார்.

    மெட்டுகள்

    மறுநாள் காலை 7 மணிக்கு பாடல் கம்போசிங்கிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள `பிஷர்மேன் கேவ்' போனோம். 8 1/2 மணிக்கு ஊதுபத்தி ஏற்றி வைத்து ஆர்மோனியத்தை தொட்டதும் முதல் பாட்டு `கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி' என்ற பாட்டு பிய்த்துக்கொண்டு வந்தது. அடுத்து `இளம் நெஞ்சே வா' பாட்டு. அதையடுத்து `சின்னமணி கோவிலிலே', `ஜின்ஜினாக்கடி' என தொடர்ந்து மதியத்திற்குள் 6 பாடல்களுக்கான அற்புதமான டிïன்கள் போட்டுக் கொடுத்து விட்டார், இளையராஜா.

    அவர் ஆர்மோனியத்தில் இசையமைத்தபோது பாலு மகேந்திரா ஒரு படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை பெயிண்ட் பண்ணி எனது அன்பளிப்பாக இளையராஜாவுக்குக் கொடுத்தேன். இந்த பெயிண்ட் நூறு வருஷத்துக்கும் மேலாக புகைப்படத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இளையராஜா தன்னை மறந்து இசையமைக்க, அவரது தாயார் தனது மகனை பார்த்து ரசிப்பது போல அந்த புகைப்படம் இப்போதும் அவரது இல்லத்தில் இருக்கிறது.

    திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கியது. பாலு மகேந்திராவிடம் ஏற்கனவே இந்த கதைக்காக நடிப்புப் பயிற்சி பெற்ற நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். 10 நாள் படப்பிடிப்பு தடங்கலின்றி போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீர் என்று ஒரு சிக்கல் ஏற்பட்டது. நடிகை அர்ச்சனாதான் அந்த சிக்கலை உருவாக்கினார்.

    http://www.dailythanthi.com/article....date=3/19/2008

Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast

Similar Threads

  1. Comments on Outlook article & other TiS criticisms
    By Neels in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 340
    Last Post: 17th November 2005, 07:19 PM
  2. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  3. Article
    By Kavitha in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 18th November 2004, 10:26 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •