Page 171 of 178 FirstFirst ... 71121161169170171172173 ... LastLast
Results 1,701 to 1,710 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1701
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பல வருடங்களுக்கு முன் எனக்கு வில்லியம், ஜக்குலின் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் வெனிசுவேலா நாட்டை சேர்ந்தவர்கள். ( then they were boy friend and girl friend, now they married and have kids) நாங்கள் மூவரும் சேர்ந்து licensing exam க்கு படிப்போம். இப்போ அட்லாண்டாவில் cardiologist இருக்கான். நாங்கள் படிக்கும் பொழுது அவன் அடிக்கடி என்னிடம் சொல்லும் வார்த்தை. " I hate Indians" முதல் முறை அவன் சொன்ன பொழுது பதறி ஏன்டா என்றேன். அதற்கு அவன் சொன்ன பதில் " they always want to be inside of other's life, why should they care about what is going on in my personal life" .அவன் சொன்னதின் அர்த்தம் மெல்ல புரிபட ஆரம்பித்து அது எவ்வளவு தூரம் உண்மை எனபதும் புலப்பட ஆரம்பித்தது. இந்தியர்களை பற்றி பல மேல் நாட்டவர்களின் கருத்துவும் இதுதான். 10 வருடங்களுக்கு மேல் வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நான் சொல்வதை ஆமோதிப்பார்கள்.

    இதை இங்கே இப்போ சொல்ல காரணம் உண்டு. இன்று ஒருவர் அடுத்தவரை பற்றி கண்ணியம் இன்றி அடித்த comment னால் அவர் அக்கௌன்ட் முடக்கபட்டுள்ளது என்பதே. இணையம் வந்த பின் அனைவரும் எழுத்தாளர் ஆகி உண்மையான எழுத்தாளர்கள் கோமாளி ஆகிவிட்டார்கள். எழுத முடியும் /தெரியும் என்ற ஒரே காரணத்தினாலும் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்ற நினைப்பிலும் அடிப்படை நாகரிகம், கண்ணியம் ஏதும் இன்றி அடுத்தவர்களை அவமானபடுத்தும் போக்கு அதிகமாகி வருது. எல்லோருடனும் ஒத்து போவது என்பது நடவாத காரியம். அந்த நேரங்களில் பரஸ்பர மரியாதை யுடன் விலகி செல்வதே சாலச் சிறந்தது.

    " எல்லாம் படிச்சீங்க , படிச்சு என்ன கிழிச்சீங்க " என்ற சமூகத்தின் மீதான கோபத்தை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மட்டும் அல்ல,சமூதாயத்தின் மீது அக்கறை கொண்ட பாரதி, பாரதிதாசன், போன்றவ ர்களும் வெளிப்படுத்தி இருக்காங்க.!!

    " வீழ்வேன் என்று நினைத்தாயோ என்றான் பாரதி. அது தான் நல்ல மனம் மட்டும் அல்ல உறுதியான மனம் கொண்டவர்களுக்கும்.

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவர் இங்கு உண்டு. இதை படித்தால் மிகவும் சந்தோஷ படுவார்.






    "பூமி என்னும் கிண்ணம் இசையில் நிரம்பி வழியுதம்மா "

    Last edited by poem; 12th December 2014 at 07:55 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1702
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பல வருடங்களுக்கு முன்னால் எனக்கு வில்லியம், ஜாக்குலின் என்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் வெனிசுவேலா நாட்டை சேர்ந்தவர்கள். (then, they were boy friend and girl friend , now they got married and have kids) மூவரும் Licensing exam க்கு சேர்ந்து படிப்போம். இப்போ அட்லாண்டாவில் cardiologist ஆக இருக்கான். அவன் அடிக்கடி என்னிடம் சொல்லும் வார்த்தை "I hate Indians". அவன் முதன் முறையாக அதை சொன்ன பொழுது பதறி போய் ஏன்டா என்றேன் !. அதற்கு அவன் " They always want to be inside of other's life" "Why should they care about, what is going on in my personal life ??". அவன், சொன்னதின் அர்த்தம் புரிந்த பின் அதில் இருந்த உண்மையும் புலப்பட்டது. இது பல மேலை நாட்டவர்களின் கருத்துதான். 10 ஆண்டுகளுக்கு மேல் வெளி நாட்டில் வாழும் நம்மவர்கள் இதை வெகுவாகவே ஒத்துகொள்வார்கள்.


    இதை இப்போ இங்கே போட காரணம் உண்டு. இன்று கண்ணியம் இல்லாமல் போஸ்ட் போட்டதற்காக ஒருவரின் அக்கௌன்ட் முடக்கப்பட்டு உள்ளது. பொது வெளியில் எழுதும் பொழுது அடிப்படை நாகரிகமும் கண்ணியமும் மிக முக்கியம்.ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் படித்தவர்கள் , படிக்காதவர்கள், அமெரிக்காவில் இருப்பவர்கள் , ஆட்டையாம் பட்டியில் இருப்பவர்கள் எல்லோரும் ஒரே மாத்ரி இருக்கிறார்கள்.

    இணையம் வந்த பின் எல்லோரும் எழுத்தாளராகி, எழுத்தாளர்கள் எல்லாம் கோமாளிகள் ஆகி விட்டார்கள்.

    "எல்லாம் படிச்சீங்க ........படிச்சு என்ன கிழிசீங்க" என்ற பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்தின் பாட்டு சமூகத்தின் மேல் இருக்கும் அவரின் கோபத்தை எவ்வளவு உக்கிரமாக வெளிபடுத்துது ? பாரதி, பாரதி தாசன் போன்றவர்களும் இதை பற்றி நிறையவே பாடி இருக்காங்க !!

    " வீழ்வேன் என்று நினைத்தாயோ " என்ற பாரதியின் வார்த்தைகள் உறுதியான மனம் கொண்டவர்களுக்கு மட்டும் அல்ல . நல்ல மனம் கொண்டவர்களுக்கும்.......


    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவர் இங்கு இருக்கிறார். இதை படித்தால் மிகவும் சந்தோஷப் படுவார். )



    ""பூமி என்னும் கிண்ணம் இசையில் நிரம்பி வழியுதம்மா ""



    Last edited by poem; 19th December 2014 at 09:53 PM.

  4. #1703
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    One more touching song by Mr Nagoor Haneefa


  5. #1704
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    D.K.PattammaL

    eppadi paadinaro.....



    Raga is Karnataka Devagandari considered to be equivalent to Abheri and Bhimpalas. Some will dispute it citing a difference in one note !

    This is not a movie song. I posted it because DKP is the only musician I met at her home in Kotturpuram/Adyar. A very nice and unassuming person. In one of our visits she recalled her younger days when she began singing. She also let us videotape the conversation. I attended her concert in IIT, Madras more than 15 years back. She was accopanied by her grand daughter Nithyasri.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. Likes chinnakkannan liked this post
  7. #1705
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருவர் பக்கத்துக்கு திரியில் போட்ட post க்கு அதிகமான likes பார்த்தேன். அவர் நண்பர் என்பதற்காக போடப்பட்ட likes ஆ அல்லது அந்த போஸ்டின் உண்மையான concept புரிந்து போடப்பட்ட likes ஆ என்று தெரியவில்லை.

    மனிதர்கள் எல்லோருமே சிறிது மனபிறழ்வு கொண்டவர்களே. Personality disorder லில். A, B, C என்று மூன்று வகை உண்டு. எல்லோருமே ஏதோ ஒருவகையில் இருப்பாங்க. மனிதர்களை மிகவும் ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு அது (DSM - V ) . மற்றவர்களுக்கு மட்டுமே மன நோய் உண்டு என்று நினப்பதுவும் ஒரு வகை மன நோயே !!


    பின்குறிப்பு. இது பொதுவாக எழுதப்பட்டது. யாரும் தன்னை குறிப்பதாக நினைத்து தற்கொலைக்கு முயல வேண்டாம்.
    Last edited by poem; 16th December 2014 at 11:45 PM.

  8. #1706
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பனுக்கு கடன் கொடுத்தேன், பணத்துடன் நட்பும் போய் விட்டது என்று ஒருவரின் கமெண்ட் இதை எழுத தூண்டியது. இதை போலவே வேறு ஒருவர் சில மாதங்களுக்கு முன்.

    Twitter, FB பிரபலமாகாத காலத்தில், தமிழின் மீது தீராத தாகம் கொண்டவர்கள் Blog எழுதி தன் தாகத்தை தீர்த்து கொண்டும், என்னை போன்ற மிக மிக சாதரணமானவர்கள் அதை குடித்து குடித்து sorry படித்து படித்து ஓய்ந்தும் போய் இருத்த காலத்தில் ......சிலர் Blogger களிடம் பணம் collect பண்ணி பலரின் மருத்துவ சிச்கிசைக்கு கொடுத்து கொண்டு இருந்தாரகள். Bloggers பலரும் வெளி நாட்டில் இருந்ததாலும் கஷ்டமான பின்னணியில் இருந்து வந்ததாலும் தாராளமாகவே கொடுத்து உதவினார்கள். நான் உதவி தேவைபடுபவர்களின் போன் நம்பரை வாங்கி அவர்ளுடன் நேரடியாகவே பேசுவேன். பெரும்பாலனவர்கள் cancer patients. இரண்டு மூன்று கேள்விகளை மிக சாதரணமாக கேட்பேன். அதிலேயே தெரிந்துவிடும் அவர்கள் உண்மையா இல்லியா என்று. ஆனால் இதுவரை யாரும் பொய் சொல்லியதில்லை. மீள முடியாத கஷ்டத்தில் இருக்கும் பொழுது யாரும் பொய் சொல்வதில்லை. money gram ளில் பணத்தை அனுப்பி விடுவேன். சரியான கணக்கு வழக்கு இல்லை என்று அந்த group யை நிறுத்தி விட்டார்கள்.


    என் பெரிய அக்கா காலேஜ் principal ஆக இருந்தாங்க. அவங்ககிட்ட வேலை பார்தவங்கதான் பானு அக்கா. வேறு வேறு department என்றாலும், அவங்களும் மதுரை என்பதாலும் அருகில் குடி இருந்ததாலும் இருவருக்கும் நல்ல புரிதலுடன் கூடிய நட்பு இருந்தது. அவங்க கணவர் வக்கீல். இரண்டு பெண் குழந்தைகள். 9 மற்றும் 7 வயது.

    பெரிய பெண் சில நாட்களா விளையாடி முடித்தபின் கால் வலிக்குது என்று சொல்லி பின் ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் அழுதவுடன் டாக்டரிடம் காட்டினால் , அவளுக்கு Bone Cancer. சொந்த பணம், லோன், எல்லோரிடமும் கடன் வாங்கி செலவு பண்ணி அவளுக்கு treatment கொடுத்தார்கள். என் அக்கா ஏற்கனவே நிறைய கொடுத்து விட்டதால் . ஒரு முறை phone ல் பேசும் பொழுது என்னை பணம் கொடுக்க சொன்னார்கள். அடுத்த நாள் RS 25.000 செக் அனுப்பினேன். பணம் தான் தண்ணீராக கரைந்ததே தவிர அவளிடம் எந்த improvement ம் இல்லை. மிகவும் தீவீரமான cancer' outcome is going to be very grave என்றும் என் அக்காவிடம் மட்டுமே சொல்வேன். ஒரு மாதம் கழித்து பேச்சின் ஊடக என் அக்கா மீண்டும் பணம் அனுப்ப சொன்னாங்க. என் பெரிய அக்கா எனக்கு அம்மா போல். மிகுந்த அன்பும் மரியாதையும் எனக்கு உண்டு. அதனால் மறுப்பு ஏதும் சொல்லாமல் மீண்டும் Rs 25.000. அனுப்பினேன். இங்கே ஒரு விஷயத்தை கட்டாயம் சொல்லவேண்டும். அவங்களுக்கு உதவியது எல்லாமே தெரிந்தவர்களும் நண்பர்களும் தான். பானு அக்கா குழந்தையை மலையாள மாந்த்ரீகம் வரை கொண்டு காட்டியும் ஒரு வருடத்தில் இறந்து விட்டாள். அவளின் முடிவு ஏற்கனவே தெரியும் என்பதால் அனைவரும் மௌனமாக ஏற்று கொண்டார்கள்.

    ஆனால் அவளின் இழப்பை தாங்க முடியாத அந்த அக்காவின் கணவர் 2 மாதங்கள் கழித்து தூக்க மாதிரரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் முடிவை தான் யாராலும் தாங்க முடியவில்லை. அவரை நான் பல முறை பார்த்து இருந்தாலும் பேசியது கிடையாது. அவரின் அமைதியான முகம் இன்றும் என் நினைவில் பசுமையாக !!

    "எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் "?

    போன வருடம் summer க்கு இந்தியா போய் இருந்த பொழுது வழக்கம் போல என் அக்காவிற்கு போன் அவங்ககிட்ட இருந்து, நான் இருப்பது தெரியாது. அக்கா பேச்சின் ஊடே நான் வந்து இருப்பதை சொல்ல, நான் பேச . அவங்க குரலில் ஒரு தர்ம சங்கடம் பணம் இன்னும் திருப்பி தராதால். நான் பணத்தை பற்றி பேசவே இல்லை. நான் கொடுக்கும் பொழுதே திரும்ப வேண்டாம் என்ற முடிவுடன் தான் கொடுத்தேன். அந்தஅக்காவின் நலத்தை பற்றியும் அடுத்தவளை பற்றி மட்டுமே பேசி போனை என் அக்காவிடம் கொடுத்தேன்.


    கடவுளின் பேரருளால் எனக்கு எல்லமே இருக்குது. மீதி இருக்கும் இந்த நாட்களில் யாரிடமும் எதற்காகவும் போய் நிற்காத வரத்தை எனக்கு கொடு " வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற என் இறைவா" !!


    கல்லான உருவமும்
    கனிவான உள்ளமும்
    வடிவான சதுர்வேதனே !!


    Last edited by poem; 22nd December 2014 at 05:51 AM.

  9. #1707
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இரு வேறு நடிகர்கள் , இரு வேறு குரல்கள், ஒரே இசை.

    கவிதைக்கு பொய் அழகு, இசைக்கு உண்மைதான் அழகு !!


  10. #1708
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1709
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    //இடம், பொருள், ஏவல்// It is very difficult to pick the best song in this fantastic album.



  12. #1710
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •