Page 1 of 18 12311 ... LastLast
Results 1 to 10 of 174

Thread: SUN TV yin - ThiruviLaiyaadaL

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புராணத் தொடர் திருவிளையாடல்.

    சிவபெருமான், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தன்னை வழிபடும் பக்தர்களிடத்தில் நிகழ்த்திய சம்பவங்களே திருவிளையாடல் என்று அழைக்கப்படுகிறது.

    இத்தகைய திருவிளையாடல்கள் திருவிளையாடற்புராணம், சிவபுராணம், சிவமகாபுராணம், பெரியபுராணம், கந்தபுராணம் முதலான நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சுவாரஸ்யமான கதைகளின் தொகுப்பே இந்த திருவிளையாடல். தொடரில் இடம் பெறும் மாயாஜாலக் காட்சிகளை திரையில் கொண்டு வருவதற்கென்று சுமார் ஐம்பது பேர் கொண்ட கிராபிக்ஸ் குழு பணியாற்றி வருகிறது.

    சிவபெருமானாக ஸ்ரீதரும், உமாமகேஸ்வரியாக யமுனாவும், அவ்வையாராக மனோரமாவும், நாரதராக ராதாரவியும், இந்திரனாக ப்ரித்விராஜனும், இந்திராணியாக யுவராணியும், தொடக்க கதையில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

    இசை:கங்கை அமரன், ஒளிப்பதிவு:சரவணபாண்டியன், எபிசோட் டைரக்டர்:செல்வபாண்டியன், திரைக்கதை வசனம்: ஸ்ரீமான் கவிச்செல்வர். இயக்கம்: ராகேஷ், சின்ஹா.

    ரேடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தொடரை தயாரிக்கிறது.

    ################################
    WHO ACT AS VINAYAGAR?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like

    SUN TV yin - ThiruviLaiyaadaL

    திங்கள் முதல் வெள்ளி வரை
    இரவு 8.00 மணியிலிருந்து 8.30 வரை இந்த நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது.

    காச்-முச் என்று கத்தும் மெகா சீரியல்களுக்கிடையே
    வம்பு, சண்டை, வெட்டு, குத்து, பழி, மாமியார்-மருமகள் சண்டை என்று பார்த்து சலித்து விட்ட மக்களிடையே, அருமையாய் ஒரு பக்தித் தொடர் "ராடன் க்ரியேஷன்ஸ்' சன் டிவி மூலம் வழங்குகிறது.

    தூய தமிழில் தமிழ் நடிகர்கள் கொண்டு ஒளிபரப்பாகும் இத்தொடர் மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது.

    இது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இதோ இத்திரி.

  4. #3
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    இரு தினங்கள் முன் ஒளிபரப்பான பகுதியில்,
    முருகனின் அம்சங்களாக நவபாலகர்களை பற்றி கூறியிருந்தார்கள்.

    மக்களுக்கு ரசிக்கும் வகையில் தொடரை வழங்க வேண்டும் என்ற முனைப்பு பாராட்டத் தக்கது, எனினும், இதற்காக, இக்கால வழக்கில் உள்ள சொற்களை, குறிப்பாக இளைஞர்களை கவர்வதற்கு அவர்கள் பயன்படுத்தும் சில வழக்குச் சொற்களை "நவபாலகர்கள்' பயன்படுத்தியது, சற்று எரிச்சலை உண்டு பண்ணியது.

    நொடிக்கு நூறு தரம், அந்த பாலகர்களில் ஒருவர் முருகன் தன் சொல்லாட்சியில் வென்றாலோ, அல்லது முருகனின் கூற்று சரியாகி விட்டாலோ

    "அப்படி போடு!" / "அப்படி போடுங்கள்"

    என்று கூறிக்கொண்டிருந்தனர்.

    அது ரசிக்கும்படி இல்லை!

    மேலும், நெடுந்தொடர் என்பதால், சொற்களும், வசனங்களும் நிதானமாக வருகிறது. அது பாதகமில்லை. நமக்கு சில நாட்களில் பழகி விடும்

  5. #4
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    அவ்வை என்றாலே "கே.பி.சுந்தராம்பாள்" நினைவு தான் தமிழ்நாட்டு மக்கள் பலருக்கு வரும்.

    நம் ஆச்சி இதை சவாலாகவே எடுத்துக்கொண்டு விட்டார் போலும்.

    வந்த இரண்டே நாட்களில் நம் மனதில் அவ்வை என்றால் மனோரமா ஆச்சி இடம் பெறும் அளவு இவர் நடிப்பும், தமிழும், பேச்சும், ஒப்பனையும் அமைந்திருக்கிறது.

    கே.பி.சுந்தராம்பாள் இடத்தை இரண்டே நாட்களில் கொள்ளை கொண்டு விட்ட மனோரமாவிற்கு இது மாபெறும் வெற்றி!


  6. #5
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    சிவனாக வரும் ஸ்ரீதர் நன்றாகத் தான் செய்கிறார். எனினும், சிவபெருமான் என்றாலே நடிகர் திலகம் தான் நம்மில் பலருக்கு.

    துணிந்து இப்பாத்திரம் ஏற்றுச் செய்யும் ஸ்ரீதருக்கு வாழ்த்துக்கள்

  7. #6
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    முதலில் திருவிளையாடல் என்றாலே சிவாஜின் படம் தான் ஞாபகத்திற்கு வந்துவிடுகின்றது.

    எதையுமே புதிதாகப் பார்த்தால் பிரச்சனையில்லை. ஆனால் எப்படித்தான் சொன்னாலும் இந்தப் பாழாய்ப்போன மனம் ஒப்பிட்டுப் பார்க்கவே துடிக்கின்றது.
    பழக்க வேண்டும்.

    தொடரட்டும் நல்லதொரு விளையாடல்

  8. #7
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மனோரமா, ராதாரவி, பூவிலங்கு மோகன் , ஸ்ரீதர் தங்களது பாத்திரங்களை நன்றாகவே செய்கின்றனர்.
    "அன்பே சிவம்.

  9. #8
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    நன்றி லதா!
    அருமையான தகவல்கள் பகிர்ந்து கொண்டீர்கள். மேலும் இத்தொடரின் துவக்கப் பாடல் மிக அருமையாய் உள்ளது!

  10. #9
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    இன்றைய தொடரில் சிற்றரசன் ஒருவன், தனக்கு மகன் அதாவது அந்நாட்டு இளவரசன் பிறந்த செய்தியை முரசுகொட்டி அறிவித்து, மக்களையும் தன் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படி பொது அழைப்பு விடுக்கிறார்.

    அரண்மணையில் பொருள் கொண்டுவருவோர்க்கு பெருமதிப்பும் மற்றோர்க்கு முகச்சுளிப்பும் பரிசளிக்கிறார்கள்.

    அழகாய், அர்த்தமாய், ஆழமாய் கவிதை ஒன்றை புனைந்து சென்ற புலவர் ஒருவர்க்கு கிட்டியதென்னவோ ஏளனமும் அவமரியாதையும்.

    வீரக்கலைளை கற்பிக்கும் மற்றொருவனுக்கும் பெருத்த அவமானத்தையே பரிசளிக்கின்றனர்.

    இது கண்டு தன் நாடகம் ஒன்றைத் துவக்குகிறார் நாரதர்.

    என்னடா இது "ஸரஸ்வதி சபதம்" படம் பார்ப்பது போல் உள்ளதே என்று நாம் நினைக்கும் முன்பே, அதையே தான் அடுத்த சில நாட்களுக்கு திருவிளையாடற் கதையாக வழங்கவிருக்கிறார்கள் என்று புரிந்துவிடுகிறது.

    நம் எண்ணத்தை போலவே பிரம்மலோகத்திற்குச் சென்று, கல்வி பெரிதா செல்வம் பெரிதா என்ற சர்ச்சையை துவக்குகிறார் நாரதர். பிரம்மதேவனும் இதை மேலும் தூண்டிவிடவே கோபமுற்ற சரஸ்வதி 'அறிவே உலகில் சாலச் சிறந்தது' என்று உணரத்தப் புறப்படுகிறார்.

    அடுத்து ஸ்ரீவைகுந்தம் சென்று ஆனந்தமாய் வீற்றிருக்கும் லக்ஷ்மியை கோபமுறச்செய்ததும், 'உலகில் செல்வமே சிறந்தது' என்ற கூற்றை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து புறப்படுகிறார் லக்ஷ்மிதேவி.

    "அடுத்து என்ன திருக்கைலாயம் தானே!"
    என்று விஷமமாக முடிந்தது இன்றைய பகுதி.

    பிரம்மதேவன், "உலகில் சாலச் சிறந்தது செல்வமே" என்று சொன்னவுடன்,

    "ஆஹா இதைத் தான் நான்" என்று புன்னகையுடன் ஆரம்பித்து

    "நாரதா!" என்று ஸரஸ்வதி சினந்ததும்

    "எதிர்பார்க்கவில்லை" என்று சொல்ல வந்தேன் தேவி என்று நாரதர் சொல்வது ரசிக்கும்படி இருந்தது!

    செல்வங்கள் எல்லாமே அழிந்துவிடக்கூடியவை தான், கல்வி செல்வத்தைத் தவிர, என்று ஞானநிலையில் நம்மில் பலர் உளமாற நினைத்தாலும், உண்மையில், இப்பூவுலகில் நாம் வாழும் வரை, ஆசை, பிடிப்பு, அர்த்தம் எல்லாம் இருக்கும் வரை, செல்வமும் வீரமும் துணை புரிந்தால் தான் உலகில் பிழைத்திருக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

    ஜனரஞ்சகமாக ரசிக்கும்படி பல உரையாடல்கள், இருப்பதால், இத்தொடரை 'சமயம் சார்ந்த' தொடராகத் தான் பார்க்க முடிகிறது. ஞானதாகம் கொண்டு அலையும் சிலருக்கு ஆங்காங்கே சில ஞான முத்துக்கள் சிதறக்கூடும். அவற்றை கவனமாய் சேகரித்துக் கொள்வது அவர்கள் சாமர்த்தியம்.

    புலவரின் மனைவியாக நடித்தவர் இன்னும் சற்று பாத்திரத்தில் ஊறியிருக்கலாம். அவர் நடிப்பு சோபிக்கவில்லை. அரசன் அரசி இருவரும் வெகு சுமார். புலவராக நடித்தவர் பரவாயில்லை, நன்றாகவே செய்திருந்தார்.

  11. #10
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    ஒரு அன்பு வேண்டுகோள்

    லதா, அல்லது ஆனா, அல்லது வேறு யாராவது

    இத்தொடரில் வரும முக்கிய நடிகர்கள் பெயர்களை சேகரித்து முதல் பதிவில் இணைத்து விடலாமே

Page 1 of 18 12311 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •