TV tid bits

Thread: TV tid bits

Tags: None
 1. aanaa's Avatar

  aanaa said:

  TV tid bits


  அவர் வேறு யாருமில்லை. விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர்தான். அவர் தமிழராகவும் இருக்கலாம். ஆண், பெண் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இது தான் யார் அவர் நிகழ்ச்சி.

  மக்கள் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு நேரலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. நேயர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தொகுப்பாளரிடம் கேள்விகள் கேட்கலாம்.

  அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவரா? உயிருடன் இருக்கிறாரா? இப்படி ஆம், இல்லை என்று பதில் வரக் கூடிய 15 கேள்விகள் மட்டும் தான் தொகுப்பாளரிடம் கேட்கலாம். அதற்குள் போட்டியாளர் சரியான பதிலைக் கண்டு பிடித்து தொகுப்பாளரிடம் சொன்னால் பரிசு. இந்த நிகழ்ச்சியை சொல்விளையாட்டு கார்த்திகா தொகுத்து வழங்குகிறார்.
   
 2. aanaa's Avatar

  aanaa said:

  உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் புதிய தேடலை விஜய் டி.வி. தொடங்கி உள்ளது. முதற்கட்ட தேர்வு திருச்சி, கோவை, மற்றும் மதுரையில் கடந்த வாரங்களில் நடந்து முடிந்தது. திருச்சி மாநகரத்தில் இருந்து 23 நபர்களும், கோவையிலிருந்து 27 நபர்களும், மதுரையிலிருந்து 20 நபர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நாளை (சனி) சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

  நடனத்தில் விருப்பமானவர்கள் 16 முதல் 35 வயது வரை நிரம்பிய ஆண்/பெண் இந்த நேர்முகத் தேர்வில் பங்கு பெறலாம்.

  எந்த ஸ்டைலாக இருந்தாலும் நன்றாக நடனமாடுபவர்கள் ஒரு ஆடியோ சி.டி.யில் பாடலை பதிவு செய்து இந்த நேர்முகத் தேர் வில் பங்கு பெறலாம். வேப்பேரி, டவுட்டன் கொர்ரி பள்ளி எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

  முதலில் வரும் 100 பேருக்கு மட்டுமே போட்டியில் கலந்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். நடனத்தில் திறமைசாலிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் நடன திறமையை நிரூபிக்கலாம்

  வரும் 21-ந் தேதி முதல் வியாழன், வெள்ளி, இரவு 9 மணிக்கு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் ஒளி பரப்பாக உள்ளது
  "அன்பே சிவம்.
   
 3. aanaa's Avatar

  aanaa said:

  மானாட மயிலாட (கலைஞர் டி.வி.) பாகம் இரண்டு வெற்றிகரமாக 23வது எபிசோட்டில் அடி எடுத்து வைக்கிறது.

  திரைப்பட நடன இயக்குநர் கலா மாஸ்டர் இயக்கும் இந்த நடன நிகழ்ச்சியில், பல ஜோடிகள் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ள நிலையில், ஐந்து ஜோடிகள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  ஒவ்வொரு சுற்றும் புதுமையாக நடன வடிவமைக்கப்பட்டுள்ள இந் நிகழ்ச்சியில் நாளை மறுநாள் (ஞாயிறு) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிசோட்டில் திகில் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஜோடியும் திகைப்பூட்டும் வண்ணம் திகில் மூட்டும் வேடங்களான காட்டுவாசி, மயானக் கூத்து, ஆவி வடிவம் என்று வேடம் தரித்து நடனமாடுகிறார்கள்.
  "அன்பே சிவம்.
   
 4. aanaa's Avatar

  aanaa said:

  என்னோடு ஒரு பாட்டு
  இசைப் பிரியர்களுக்காக வசந்த் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி, என்னோடு ஒரு பாட்டு பிரபல பின்னணி பாடகர்கள் பலரும் இதில் பங்கு கொண்டு பாடுகிறார்கள். இவர்களுடன் புதியதாக அறிமுக மாகும் புதிய பாடகரை பாட சொல்லி ஊக்கப்படுத்துகிறார்கள்.

  வசந்த் டி.வி.யில் வாரம் ஒரு முறை ஒளிபரப்பப் பட இருக்கும். இந்த நிகழ்ச்சியில் உன்னிமேனன், க்ரஷ் ராகுல் நம்பியார், பென்னி, ரோஷினி, டாக்டர் லாவண்யா, சின்ன பொண்ணு, சத்யன், அஸ்லாம், பிரசன்னா, ரீட்டா, ஹாரீஸ், ராகவேந்திரா, நரேஷ் அய்யர், அனுராதா என ஏராளமான பின்னணி பாடகர்கள் பங்கு கொண்டு ஒவ்வொரு வாரமும், பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். நாளை (சனி) முதல் இரவு 7.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
  "அன்பே சிவம்.
   
 5. aanaa's Avatar

  aanaa said:


  Kalaignar awards on Isai Aruvi, weekend, 20.00.

  Stay tuned this weekend at 20.00 as Isai Aruvi, the 24 hour music channel from Kalaignar TV, will air the recap of the mega Tamil music award function held recently at the Chennai Nehru Indoor Stadium, Chennai.

  The evening presented a colourful array of events which was a visual delight and a fitting tribute to the legends and achievers.

  It started with an invocation dance performance by actor Shobana and the award ceremony saw scintillating dance performances by actors Simran and Megna Naidu.
  "அன்பே சிவம்.
   
 6. aanaa's Avatar

  aanaa said:
  வல்லவனுக்கு வல்லவன்

  வித்தியாசமான விளையாட்டு நிகழ்ச்சியான வல்லவனுக்கு வல்லவன், வசந்த் டி.வி.யில் சுதந்திர தினம் முதல் ஒளிபரப்பா கிறது.

  ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
  "அன்பே சிவம்.
   
 7. aanaa's Avatar

  aanaa said:

  வருகிற ஏப்ரல் மாதம் கேப்டன் டி.வி. தொடங்கப்படும்.
  "அன்பே சிவம்.
   
 8. aanaa's Avatar

  aanaa said:  தர்மயுத்தம்-150
  "மெகா'' தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் "தர்மயுத்தம்'' தொடர், 150 எபிசோடுகளை தாண்டியிருக்கிறது.

  கவுசல்யா, நிழல்கள் ரவி, அஜய், தீபாவெங்கட், ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் இத்தொடரில் நடிக்கின்றனர்.

  வழக்கமான குடும்பக் கதைகளுக்கு மத்தியில் திரைப்படக் கலைஞர்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்ட வித்தியாசமான தொடர் என்பதால், இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

  பிரபல இசை அமைப்பாளர் சந்திரசேகர் அவரிடம் பயிற்சி பெற்று தன் முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கும் ரகுராமனை விழா மேடையில் சுட்டுக் கொல்கிறார்.

  நீதிமன்றத்தில் அவருக்குத் தூக்குத்தண்டனை வழங்கும்போது, இறந்ததாகக் கருதப்படும் ரகுராமன் உயிருடன் வந்து அவரைக் காப்பாற்றுகிறான். வக்கீல் பைரவி திட்டமிட்டபடி ஜார்ஜ், ரகுவாக நடிக்க சம்மதித்தது தெரியவருகிறது. ஜார்ஜின் நடவடிக்கைகளால் சந்திரசேகர் பாடகி மீனாவை திருமணம் செய்து கொண்டு வாழ்வை தொடர்கிறார். ரகுராமனை சந்திரசேகர் சுட்டதற்கான காரணம் தெரியவர, அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். சந்திரசேகர் ரகுவிடம் மன்னிப்புக் கேட்க முன்வருகிறார். இதற்கிடையில் ஜார்ஜ் பாண்டிச்சேரி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அங்கு வெடிகுண்டு விபத்தில் சிக்குகிறார்.

  இதற்கிடையில் பைரவி, ஜார்ஜ் சாயலில் இருக்கும் ஏகலைவனை, ரகுவாக நடிக்க ஏற்பாடு செய்கிறார். அவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. ரகுவின் அக்கா மாதவி உள்ளிட்ட பலரை ஏமாற்றி பல வழிகளில் பணத்தை சுருட்டுகிறான். வெடிவிபத்தில் சிக்கிய ஜார்ஜ் தப்பித்து, தேவி, பைரவியின் கவனிப்பில் உடல் தேறி வருகிறான். இந்த சூழ்நிலையில் ரகுவாக நினைத்து, ஏகாவிற்கு பட வாய்ப்புகள் வருகிறது. ஏகா அதை வைத்து பல திட்டங்கள் போடுகிறான்.

  பைரவியும், ஜார்ஜம் அவனது திட்டத்தை முறியடிக்கிறார்களா? தேவி - ஜார்ஜ் திருமணம் நடந்ததா? மீண்டும் ரகுராமனாக - ஜார்ஜின் இசை வாழ்க்கை தொடர்கிறதா? இப்படி சுவாரஸ்யமான சம்பவங்களுடன் பரபரப்பாக தர்மயுத்தம் தொடர்கிறது.

  இந்த தொடர் மறுஒளிபரப்பாக திங்கள் முதல் வியாழன் வரை பகல் 12 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

  வி.எச்.எஸ்.ஸ்கீன்ஸ் சார்பில் டி.சபாபதி, எஸ்.ஹேமந்த்குமார் தயாரிக்கிறார்கள். நாகசரவணன், சுரேஷ்ராஜ் ஒளிப்பதிவை கவனிக்க, கதை திரைக்கதை இயக்கம்: எம்.விஸ்வநாத்.
   
 9. aanaa's Avatar

  aanaa said:
  நடிக்கும் இயக்குனர்கள்

  மெகா டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஜனனம் தொடரில் விஜய் கிருஷ்ணராஜ், சசிமோகன், மனோஜ்குமார், `கல்லுக்குள் ஈரம்' ராமநாதன், அழகுசுந்தரம் என 5 இயக்குனர்களை நடிக்க வைத்திருக்கிறார், டைரக்டர் `யார்' கண்ணன். தொடரில் அவரும் கோரக்க சித்தர் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
  "அன்பே சிவம்.
   
 10. aanaa's Avatar

  aanaa said:
  2 மணி நேரம் மட்டுமே!

  பெரிய திரையில் பெரிய அளவில் பிரகாசிக்க முடியாமல் சின்னத்திரையில் தன்னை வளர்த்துக் கொண்டவர் அந்த `ராவா'ன நடிகை. சினிமா டைரக்டரை மணந்து ஒரு குழந்தைக்கும் அம்மா ஆகிவிட்ட இவருக்கு இப்போது ஸ்கூல் பெயரில் தொடங்கும் ஊர்ப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படம் கிடைத்த பிறகு நடிகையின் சீரியல் ஈடுபாடே மாறிவிட்டது. படத்தில் நடிக்கப் போய்விடுகிறவர் போனால் போகிறதென்று ஒரு நாளைக்கு இண்டு மணி நேரம் மட்டுமே சீரியல் செட்டில் காணப்படுகிறார். சீரியல் என்பது அதிக நேரம் உழைக்க வேண்டியதாயிற்றே என்று கேட்டால், "அது சினிமா. இது சீரியல்தானே'' என்கிறாராம், அலட்சியமாக. இதனால் சீரியல் சம்பந்தப்பட்டவர்கள் டென்ஷனில் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.

  தேவைதானா