Page 11 of 63 FirstFirst ... 9101112132161 ... LastLast
Results 101 to 110 of 626

Thread: TV tid bits

  1. #101
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அதிர்ஷ்ட லட்சுமி!
    இன்று 'ஜி' தமிழ் தொலைக்காட்சியும் மற்ற தொலைக்காட்சிகளுக்கு இணையாக ரசிகர்களை கவரும் விதத்தில் பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குவதில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஹலோ நான் அதிருஷ்ட லட்சுமி'

    இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அம்ஸ்ரீகா. அதிருஷ்டத்தில் மேல் அம்ஸ்ரீகாவிற்கும் நிறைய நம்பிக்கை உண்டாம். அதனால்தானோ என்னவோ இப்படி ஒரு நிகழ்ச்சியை சந்தோஷமாக தொகுத்து வழங்குகிறார். தொலைக்காட்சியில் வரவேண்டும் என்ற தன்னுடைய நெடுநாள் ஆசை தற்போது நிறைவேறியதை தன்னுடைய அதிர்ஷ்டமாக கருதுகிறார் இந்த தொகுப்பாளினி.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    'மக்களின்' நாயகி!
    மக்கள் தொலைக்காட்சியின் 'சின்ன சின்ன ஆசை' நாயகி ஆர்த்திக்கு பிடித்த ஆடை சேலைதானாம்! நாடகம், மோனோ ஆக்டிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஆர்த்திக்கு 'மக்கள்' தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளான 'சின்ன சின்ள ஆசை', 'சொல் விளையாட்டு', 'களத்துமேடு' ஆகியவற்றை தொகுத்து வழங்குவதில் மட்டற்றமகிழ்ச்சி என்று சொல்கிறார்.
    "அன்பே சிவம்.

  4. #103
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அரைகுறை டிரஸ்சை தவிர்க்கணும்...! ஆர்த்தியின் அசத்தல் அட்வைஸ்
    "அரைகுறை டிரஸ் போட்டுக்கிட்டு பப்ளிக்ல போவதை தவிர்க்கணும். பெண்களுக்கு சுதந்திரம் வேணும்ன்னு சொல்றோம். அதை சரியான வழியில் பயன்படுத்திக்கவும் செய்ணும்ல. கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பெண்கள் சேலை மட்டும் தான் கட்டிக்கணும்!' இப்படி அழுத்தமாக சொன்னவர், "சின்னச்சின்ன ஆசை, "சொல் விளையாட்டு, களத்துமேடு, பணம் பண்ணலாம் வாங்க'ன்னு மக்கள் "டிவி'யில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஆர்த்தி. அவர் அளித்துள்ள பேட்டியில், என்னைப் பொறுத்தவரை பெண் கள் உடை விஷயங்களில் அதிக கவனம் செலுத்தணும்ன்னு சொல்வேன். நாகரிக மோகத்தில் அரைகுறை டிரஸ் போட்டுக்கிட்டு பப்ளிக்ல போவதை தவிர்க்கணும். பெண்களுக்கு சுதந்திரம் வேணும்ன்னு சொல்றோம். அதை சரியான வழியில் பயன் படுத்திக்கவும் செய்ணும்ல. கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பெண் கள் சேலை மட்டும் தான் கட்டிக்கணும். மத்தவங்க பெண் களை நல்லபடியாக நடத்தணும்ன்னா, மதிக்கணும்னா டிரஸ் அணிவதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம், என்று கூறியுள்ளார்.
    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  5. #104
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மலேசியாவுக்கு போகப்போறோம்!


    சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 3 நாட்கள் மலேசியாவில் நடக்கிறது. மார்ச் 21-ந்தேதி மலேசியாவில் உள்ள ஜோஹோரிலும், 22-ம்தேதி கோலாலம்பூரிலும், 28-ம் தேதி பினாங்கிலுமாக இந்த கலை நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. பிரைட் பிïச்சர் சார்பில் நடக்கும் இந்த கலைநிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் சுரேஷ்வர், தீபக், அர்ச்சனா, அம்மு, கவி, ராஜ்காந்த், ஜார்ஜ், திவ்யதர்ஷினி, ஐஸ்வர்யா, லட்சுமி, ஸ்ரீ, ஸ்ரீராம், தேவிபிரியா, வந்தனா, தேவ், சாய்பிரகாஷ், யுவஸ்ரீ, பிரியதர்ஷினி, கமலேஷ், பாலாஜி, பூஜா, ஸ்வேதா உள்ளிட்ட 28 பேர் கலந்து கொள்கிறார்கள்.
    நன்றி -- தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #105
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "நீயும் நானும்...''



    சின்னத்திரையில் தமிழ், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி என 4 மொழிகளில் 7 ஆயிரம் எபிசோட்களுக்கு மேல் இயக்கி இந்தியாவிலேயே அதிகமான எபிசோட்டை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர் சோலைராஜா. "அம்பிகை'', "அம்மா'' போன்ற பல வெற்றி மெகா தொடர்களை தந்தவர் இவர்.

    கடந்த ஆண்டு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் சிறந்த இயக்குனருக்கான நந்தி விருது பெற்றவர். இப்போது தமிழில் "நீயும் நானும்'' என்ற படத்தை இயக்க உள்ளார். "இசையும், நடனமும் இக்கதையில் பாத்திரங்களாகவே வருவதால் இசைக்கும், நடனத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட இருக்கிறது'' என்றவரிடம், "சின்னத்திரையையும் தொடரத்தானே செய்வீர்கள்?'' கேட்டோம்.

    "இப்போதும் தெலுங்கில் நான் தயாரித்து இயக்கும் `கோரின் டர்க்' என்ற தொடர் ஈடிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த தலைப்புக்கு தமிழில் மருதாணி என்று அர்த்தம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளின் பின்னணியை கதைக் களமாக்கியிருக்கிறேன். இதனால் உணர்வுகளுக்குப் பஞ்சமில்லாத காட்சிகளால் தெலுங்கு ரசிகர்களின் ஏகோபித்த தொடராகி விட்டது. எந்த மொழியென்றாலும் உணர்வுகள் பொதுவானதுதானே!

    ''சினிமா வாய்ப்பு வந்த பின்னணி?''

    "இசை சம்பந்தப்பட்ட ஒரு படத்தை திரைக்குத்தர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதற்கான கதையை தயார் செய்து வைத்திருந்தேன். இப்போது அதை இயக்குவதற்கான வாய்ப்பு கனிந்ததும் இயக்கத் தொடங்கிவிட்டேன். மற்றபடி சின்னத்திரையில் எனக்கான இடத்தையும் எப்போதும் போல தக்கவைத்துக் கொள்வேன்.''

    நன்றி -- தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #106
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by R.Latha
    உலகிலேயே மிகவும் கடினமான காரியம் எது
    என்று நினைக்கிறீர்கள்? மனிதர்களைக்
    கையாள்வதுதான்.
    வீட்டிலும் சரி, வெளியிலும் சரி பிறரின்
    மனம் கோணாமல் பழகுவது, அவர்களிடம்
    வேலை வாங்குவது, அவர்களை நிர்வகிப்ப
    துதான் உலகிலேயே மிக மிகக் கடினமான
    பணி. அதுவும் பலரின் ஒத்துழைப்புத் தேவைப்படும்
    தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரப் படங்கள் எடுப்
    பது போன்ற வேலைகளில் மனிதர்களின் ஒத்துழைப்பு மிக
    மிக அவசியம். அத்தகைய கடினமான பணியை மிக எளிதா
    கச் செய்து முடித்து விடுகிறார் ஓர் இளம்
    பெண்.
    அவர் சுமித்ரா. ஒரு காட்சி ஊடகத்
    துறையில் அவர் ஒரு தயாரிப்பு நிர்வாகி.
    லேகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும்
    தொலைக்காட்சி தொடர்களுக்கும், விளம்ப
    ரப் படங்களுக்கும் தயாரிப்பு நிர்வாகியாகப்
    பணிபுரியும் அவரை அவருடைய அலுவல
    கத்தில் சந்தித்துப் பேசினோம்.
    ""திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்
    கள், விளம்பரப் படம் போன்ற காட்சி ஊட
    கத்தில் தயாரிப்பு நிர்வாகம் என்பது மிகக் கடி
    னமான பணி. அதிலும் ஒரு பெண் அந்த
    வேலையைச் செய்வது மிகச் சிரமம்.
    அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 12 மணி வரை சிலநாட்க
    ளில் வேலை இருக்கும். ஆர்ட்டிஸ்ட்கள் கரெக்டாக வருகிறார்
    களா என்று பார்ப்பதிலிருந்து ஷூட்டிங் முடிந்து லைட் பாய்
    போன்றவர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வது வரை ஒரு
    தயாரிப்பு நிர்வாகியின் வேலையாக இருக்கும். ஒரு தொலைக்
    காட்சித் தொடர் எடுக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 100
    பேருக்கும் மேல் வேலை செய்ய வேண்டியிருக்கும். அவர்களை
    எல்லாம் நிர்வகிப்பது சாதாரண காரியம் அல்ல.
    எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தென்னிந்திய திரைப்ப
    டத் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில் பதிவு செய்து கொண்ட
    ஒரே பெண் தயாரிப்பு நிர்வாகியாக நான் மட்டும்தான் இருப்
    பேன் என்று நினைக்கிறேன். 1992 ஆம் ஆண்டு அந்தச் சங்கத்
    தில் பதிவு செய்து கொண்டேன்.
    தயாரிப்பு நிர்வாகியாகப் பணி செய்வது எவ்வளவு கடின
    மானதோ அவ்வளவு சுவையானதும் கூட.
    நான் "நீ எங்கே என் அன்பே' என்ற தொலைக்காட்சித்
    தொடருக்கு தயாரிப்பு நிர்வாகியாக வேலை செய்தேன். அந்
    தத் தொடர் விஜய் டிவியிலும், ராஜ் டிவியிலும் ஒளிபரப்பா
    னது. அந்தத் தொடருக்காக 70 நாட்கள் ஏற்காட்டில் படப்பி
    டிப்பு நடத்தினோம்.
    அப்போது கிடைத்த ஓர் அனுபவம்
    ரொம்ப வேடிக்கையானது. அதில் நடித்த
    ஒரு நடிகை தங்குவதற்கு ஏஸி ரூம் வேண்
    டும் என்று கேட்டார். ஆனால் ஏற்காட்
    டில் இரவு நேரங்களில் மிகக் குளிராக
    இருக்கும். அதனால் நாங்கள் ஏஸி ரூம்
    ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர்
    ஏற்காடு வந்தும் நடிக்க வரமாட்டேன்
    என்று மறுத்துவிட்டார். அவரைச் சமா
    தானம் செய்வதற்குள் போதும்போது
    மென்றாகிவிட்டது. இன்று ஒருநாள்
    அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
    நாளை ஏஸிக்கு ஏற்பாடு செய்கிறோம்
    என்று வாக்குறுதி கொடுத்து நடிக்க
    வைத்தேன். மறுநாள் அந்த நடிகையே
    என்னிடம் வந்து ஏஸி தேவையில்லை என்று சொல்லிவிட்
    டார். ஏனென்றால் அங்கே அவ்வளவு குளிர்.
    அதுபோல சாப்பாட்டுப் பிரச்னை அங்கே வந்துவிட்டது.
    சாப்பாடு பரிமாறும்போது டைரக்டருக்கு ஓர் இடத்திலும்,
    அஸிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு வேறு இடத்திலும், பிற
    ருக்கும் தனித்தனி இடங்களிலும் சாப்பாடு பரிமாறப்படுவது
    வழக்கம். ஆனால் அங்கே சாப்பாடு கொண்டு வந்தவர்கள்
    அஸிஸ்டன்ட் டெக்னிஷீயன்ஸ்களுக்கும் லைட் பாய்களுக்
    கும் ஒரே இடத்தில் வைத்துப் பரிமாறிவிட்டார்கள். இத
    னால் அஸிஸ்டன்ட் டெக்னீμயன்களுக்கு மிகவும் கோபம்.
    அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்பது
    அவர்கள் வருத்தம். அவர்களிடம் பேசி சமாதானம் செய்து
    படப்பிடிப்பை நடத்துவதற்குள் அன்று ஒரு மணி நேரம் தாம
    தமாகிவிட்டது. இப்படிச் சின்னச் சின்னப் பிரச்னைகள் எல்
    லாம் பெரியதாக வந்து நிற்கும்.
    நிறையப் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய வேலை இது.
    டைரக்டர் டென்ஷன் ஆனால் ஷூட்டிங் பாதிக்கும். அத
    னால் எந்த வேலையாக இருந்தாலும் முதல்நாளே சம்பந்தப்
    பட்டவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டுவிடுவேன். அவர்க
    ளும் சேர்ந்து திட்டமிட்ட வேலை என்பதால் அனேகமாக
    எந்தப் பிரச்னையும் வராது.
    "அஞ்சாதே அஞ்சு' என்ற தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்
    பான தொடர். அந்தத் தொடருக்கும் நான்தான் தயாரிப்பு நிர்
    வாகி. அந்தத் தொடரில் உதய பிரகாஷ் என்ற ஓர் அருமை
    யான நடிகர் நடித்தார். ஆனால் அவரின் ஒரே பலவீனம் குடிப்
    பது. இரவு எந்த நேரம் படப்பிடிப்பு முடிந்தாலும் காரில்
    ஏற்காடு குளிரில் ஏஸி ரூம்
    பிரான்ஸ் உணவுக்
    கண்காட்சியில்
    சுமித்ரா
    கொண்டு போய் ஓர் இடத்தில் இறக்கிவிடச் சொல்வார். பின்
    னர் குடித்துவிட்டு எங்கேயாவது போய்த் தங்கிவிடுவார். மறு
    நாள் நாம் இறக்கிவிட்ட இடத்துக்குச் சம்பந்தமில்லாத தொலை
    தூரமான ஓர் இடத்தில் இருந்து போனில் பேசுவார். காரை
    அனுப்புங்கள் என்பார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து
    விட்டால் மிக அற்புதமாக நடிப்பார்.
    எனது தயாரிப்பு நிர்வாகி வேலை அனுபவத்தில் விளம்பரப்
    படங்களில் நடிக்க வந்த நடிகை ஜோதிகா, நடிகை சினேகா
    போன்றவர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
    நடிகை ஜோதிகா போல நேர ஒழுங்கு உள்ள பிறரைக் காண்
    பது அரிது. காலை 9 மணிக்கு ஷூட்டிங் என்றால் காலை 7.30
    மணிக்கே ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவார். பிறர் எல்லாம் தயா
    ராகிவிட்டார்களா என்றெல்லாம் அவர் கவலைப்படமாட்
    டார். சரியாக 9 மணிக்கு மேக் அப் போட்டுவிட்டு ஷூட்டிங்
    ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். யாருக்காவது எஸ்எம்எஸ் அனுப்
    புவதற்கு டைப் பண்ணிக் கொண்டிருப்பார். அந்த நேரம்
    டைரக்டர் ஷாட் ரெடி என்று சொன்னால் உடனே அந்த எஸ்
    எம்எஸ்ûஸ அனுப்பாமல் அப்படியே வைத்துவிட்டு நடிக்க
    வந்துவிடுவார். அதுபோல இரவு 9 மணிக்குப் போக வேண்டும்
    என்றால் முதலிலேயே சொல்லிவிடுவார். டாண் என்று 9 மணி
    யானவுடன் கிளம்பிவிடுவார்.
    நடிகை சினேகா செட்டில் எல்லாருடனும் ஜாலியாகப் பழகு
    வார். எல்லாரிடமிருந்தும் தெரிய வேண்டிய விஷயங்களை
    எடுத்துக் கொள்வார். யார் எது சொன்னாலும் மிகக் கூர்மையா
    கக் கவனிப்பார்.
    சமிக்ஷா என்ற நடிகையுடனான எனது அனுபவம் மிக வித்தி
    யாசமானது. அவருக்கு காலை ஆறு மணிக்கே பாவ்பாஜி
    வேண்டும். காலையில் எல்லாம் கிடைக்காது, சாயங்காலம்
    வாங்கித் தருகிறேன் என்று சொல்லி அவரை நடிக்க வைக்க
    வேண்டும். ஆனால் நடிக்க ஆரம்பித்தார் என்றால் அந்த கேரக்
    டராகவே மாறிவிடுவார்.
    எந்த ஒரு தயாரிப்பு நிர்வாகியும் எல்லா வேலைகளையும்
    அவர் ஒருவரே செய்துவிட முடியாது. அதனால் எனக்குக் கீழே
    மூவரை வெவ்வேறு வேலைகளுக்காகத் தேர்ந்தெடுத்து அவர்க
    ளிடம் வேலைகளை ஒப்படைத்துவிடுவேன். அவர்கள் அந்த
    வேலைகளைச் சரியாக, குறித்த நேரத்தில் முடித்துவிட்டார்
    களா என்று கண்காணித்துக் கொண்டே இருப்பேன். அப்போ
    துதான் வேலைகளை எளிதாக முடிக்க முடியும்.
    நாங்கள் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பயன்படும் வகை
    யில் ஓர் எடிட்டிங் ஸ்டுடியோ அமைக்க வேண்டும் என்று முடிவெ
    டுத்த போது அதற்கான நவீனத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து
    கொள்ள ஜெர்மனியில் ஃப்ராங்க்பர்ட் நகரில் நடந்த "ஃபோட்டோ
    கீனா' என்ற வீடியோ, ஆடியோ கண்காட்சிக்கு 1992 இல் போயிருந்
    தேன். ஏழுநாள் அங்கேயே தங்கியிருந்தும் அந்தக் கண்காட்சி முழு
    லதையும் என்னால் பார்க்க முடியவில்லை. எங்களுக்குத் தேவை
    யான தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டு வந்தேன்.
    விளம்பரப் படங்களில் உணவு வகைகளை நன்றாக அலங்க
    ரித்துக் காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு அலங்கா
    ரம் செய்ய நிறையச் செலவாகும். நாங்கள் தயாரிக்கும் விளம்ப
    ரப் படங்களில் காட்டப்படுகிற உணவு வகைகளை நானே
    அலங்காரம் செய்துவிடுவேன். அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்
    றுக் கொள்ள பிரான்சில் நடந்த உணவுக் கண்காட்சிக்கும்
    போயிருக்கிறேன்.
    இதுதவிர கோலம் போடுவதில் எனக்குச் சிறுவயதில்
    இருந்தே ரொம்ப ஆர்வம். பிறருக்குக் கோலம் போடக் கற்றுத்
    தரும் நோக்கத்தோடு "கோலம் - கோலாகலம்' என்ற புத்தகத்
    தைத் தயாரித்திருக்கிறேன். அது விரைவில் வெளிவர இருக்கி
    றது'' என்றார். ■

    http://www.dinamani.com/Kadhir/1522009/25.pdf
    [/tscii]
    "அன்பே சிவம்.

  8. #107
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by R.Latha
    தமிழ் பாக்ஸ் ஆஃபிஸ்

    உலகத் தமிழர்களுக்காக ‘தமிழ் பாக்ஸ் ஆஃபிஸ்' என்ற பெயரில் 24 மணி நேர தொலைக்காட்சி சேனலை ஜீ.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. இதில் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவைப் பற்றியும் நடிகர்-நடிகையர், பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைப் பற்றியும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

    ‘தமிழ் பாக்ஸ் ஆஃபிஸ்' நிகழ்ச்சிகளை இதுவரை சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிங்கப்பூரிலிருந்து ஒளிபரப்பி வரும் ஜீ.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம், வரும் மார்ச் மாதம் முதல் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவிலும் தனது ஒளிபரப்பைத் தொடங்குகிறது.

    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0

    "அன்பே சிவம்.

  9. #108
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by R.Latha
    ஐலவ் யூ ரஸ்னா' என்று ஒரு
    மழலைக் குரலைக் கேட்டி
    ருப்பீர்கள். அந்தக் குரலுக்
    குச் சொந்தக்காரர்தான் இந்
    தப் ப்ரியா ஆனந்த். இவரின் தந்தை
    பின்னணி குரல் கொடுக்கும்
    கலைஞரான மோகன். இவரது மாமா
    இசையமைப்பாளர் தாயன்பன்.
    சிறுவயதிலிருந்தே விளம்பரங்க
    ளில் குரல் கொடுக்கத் துவங்கி
    விட்ட ப்ரியா, இந்தத் துறையில் இன்
    றைக்கு பின்னணி குரல் கொடுக்கும்
    முன்னணிக் கலைஞர்களில் ஒருவர்.
    அவரின் பின்னணி குரல் கொடுத்த
    அனுபவங்கள் குறித்து நம்மிடம்
    அவர் பேசியதிலிருந்து...
    ""நிறைய விளம்பரங்கள் தொலைக்காட்சி
    சீரியல்கள் போன்றவற்றில் நான் குரல்
    கொடுத்திருந்தாலும் திரைப்படத்திற்கு
    முதன்முதலாக குரல் கொடுத்தது, 24 மணி
    நேரத்தில் எடுக்கப்பட்ட "சுயம்வரம்' படத்
    தின் ஹீராவுக்குத்தான்.
    பல நடிகர், நடிகைகள் தங்களை டைரக்
    டர்களின் நடிகர்கள் என்று கூறிக்கொள்வ
    தில் பெருமைப்படுவார்கள். நானும் டைரக்
    டர்களின் ஆர்டிஸ்ட்தான். நிறைய டைரக்
    டர்கள் அவர்கள் புதிதாக அறிமுகம் செய்த
    கதாநாயகிகளுக்கு நான் குரல் கொடுத்தி
    ருக்கிறேன். பாரதிராஜா அறிமுகப்படுத்திய
    ப்ரியாமணிக்கு "கண்களால் கைது செய்'
    படத்திற்காகக் குரல் கொடுத்தேன். கஸ்தூரி
    ராஜா அறிமுகப்படுத்திய சோனியா அகர்
    வாலுக்கு "காதல் கொண்டேன்' படத்தில்
    குரல் கொடுத்தேன். "வின்னர்' படத்தில்
    கிரணுக்கும், சூர்யாவின் "அன்பே, ஆரு
    யிரே' படத்தில் நிலாவுக்கும் குரல் கொடுத்
    தேன். மறைந்த இயக்குனர் ஜீவாவின் "உள்
    ளம் கேட்குமே' படத்திலிருந்து பூஜாவுக்கு
    தொடர்ந்து குரல் கொடுக்கிறேன். பொம்ம
    லாட்டம் படத்தில் நடித்த ருக்மிணிக்கு, தற்
    போது "ஆனந்த தாண்டவம்' படத்திலும்
    குரல் கொடுத்திருக்கிறேன். "தசாவதாரம்'
    படத்தில் நடித்த மல்லிகா ஷெராவத்துக்கு
    டப்பிங் கொடுப்பதற்கு, பல பேரின் குரல்க
    ளைக் கேட்டு, முடிவாக எனக்குப் பேசுவ
    தற்கு வாய்ப்பளித்தார் கமல்ஹாசன்.
    அவருக்குத் தமிழில் நான் பேசுவது சரி
    யாக பொருந்தவே, என்னையே தெலுங்கி
    லும், ஹிந்தியிலும் கூட பேசவைத்துவிட்
    டார்கள். ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டிற்கும் ஒவ்
    வொரு மாதிரி பேசவேண்டியிருக்கும். மல்
    லிகா ஷெராவத்துக்கு பேசுவது போன்று
    பூஜாவுக்குக் குரல் கொடுக்க முடியாது.
    ஒவ்வொருவரின் உடல் மொழி, பேசும்
    ஸ்டைல், அவர்களின் கதாபாத்திரம்... இப்
    படி பல விஷயங்களையும் கருத்தில்
    கொண்டுதான் ஒருவருக்கு எப்படிப்பட்ட
    மாடுலேஷனோடு குரல் கொடுக்க வேண்
    டும் என்பதை நான் முடிவு செய்வேன்.
    சுருக்கமாகச் சொன்னால், கதாபாத்திரத்
    தின் தன்மையைப் பொருத்து அழுது,
    சிரித்து, கோபப்பட்டு பலவிதமான உணர்ச்
    சிகளோடு மைக்கின் முன்னால் நானும்
    நடிக்கவேண்டும். மைக்கின் முன்னால் இப்
    படி டப்பிங் கலைஞர்கள் நன்றாக நடிப்ப
    தில்தான், கேமராவின் முன்னால் நடிக்கும்
    சில நடிகர்களின் வெற்றியே அடங்கியிருக்
    கின்றது. இன்னமும் நிறைய புதிய குரல்க
    ளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்
    துக் கொண்டேதான் இருக்கின்றது. டிவி
    சீரியல்களுக்கும் சிலவற்றில் பேசுகிறேன்.
    "நாணல்' மெகா தொடரில் நடிக்கும்
    சோனியா அகர்வாலுக்கு நான் பேசுகி
    றேன். இதுதவிர, ஆனந்தம், தங்கமான புரு
    ஷன் போன்ற சீரியல்களுக்கும் பேசுகி
    றேன். அது என்னவோ தெரியவில்லை,
    திரைப்படங்களில் கதாநாயகிக்கு குரல்
    கொடுக்கும் எனக்கு, சீரியல்களில் வில்லிக
    ளுக்கு குரல் கொடுக்கவே வாய்ப்பு வரு
    கின்றது!
    எல்லா கலைகளையும் போலவே டப்
    பிங் பேசுவதற்கும் பயிற்சி முக்கியம். கேரக்
    டரின் வாயசைவிற்கு தக்கபடி நம்முடைய
    குரல் "ஸிங்க்' ஆகவேண்டும். அதன்பின்
    காரெக்டரின் பாடிலாங்வேஜிற்கு ஏற்ற
    மாடுலேஷனை நம்முடைய குரலில் கொண்
    டுவர வேண்டும்.
    சின்னச் சின்ன விளம்பரங்களில் பேசிப்
    பேசித்தான் நான் இந்தளவிற்கு வந்துள்
    ளேன். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு
    தான் எங்களின் பெயரை டைட்டில் கார்டில்
    சேர்த்தனர். தற்போது எங்கள் சங்கத்தின்
    மூலம் தேசிய விருதுகள் அளிக்கும் பட்டிய
    லில் டப்பிங் கலைத் துறையையும் சேர்க்கச்
    சொல்லி வலியுறுத்தியிருக்கிறோம்.
    பாலசந்தர், பாரதிராஜா, கே.எஸ்.ரவிகு
    மார்... என பல முன்னணி இயக்குனர்களு
    டன் பணி செய்திருக்கிறேன். முதல் படத்
    தில் டப்பிங் கொடுக்கும் போது எவ்வளவு
    உற்சாகமாகச் சென்றேனோ, அதே உற்சா
    கத்துடன்தான் இன்றைக்கும் செல்கிறேன்.
    நான் இதுவரை பேசிய படங்களுக்கென்று
    எதுவும் கணக்கு வைத்துக் கொள்ள
    வில்லை. இது மிகவும் அவசியம் என்று
    என் கணவர் ஆனந்த் வலியுறுத்துவார்.
    அவருடைய அன்பான ஊக்குவிப்பால்
    இன்னும் நான் நிறையச் சாதிப்பேன் என்ற
    நம்பிக்கை எனக்கிருக்கிறது.
    http://www.dinamani.com/sunday/15kon1.pdf
    "அன்பே சிவம்.

  10. #109
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    ‘நல்ல கேரக்டர்கள் வேண்டும்': இசையருவி தொகுப்பாளினி ‘மகேஸ்வரி'



    புதுச்சேரியில் நடந்த குளிர்பான விளம்பர படபிடிப்பில் பங்கேற்க வந்த நடிகர் விஜய். உடன் (இடது) எம்எல்ஏ என்.ஆனந்து.

    சினிமாவில் நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்றார் இசையருவி தொகுப்பாளினி ‘மகேஸ்வரி'.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    பூர்வீகம் பெங்களூர் என்றாலும் சென்னைதான் எல்லாம். படித்துக் கொண்டிருக்கும் போதே காம்பியரிங்கில் ஆர்வம் இருந்ததால் வந்து விட்டேன். அதோடு எனக்குள் கொஞ்சம் சினிமா ஆர்வமும் ஒட்டியிருந்தது. ஒரு வேளை நான் காம்பியர் ஆனதற்கு சினிமா கனவு கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

    காம்பியரிங் உலகம் நிறைய கற்று கொடுத்திருக்கிறது. சினிமாவில் நடிப்பவர்கள் கூட காட்சிகளுக்கு ஏற்ப அழுது, சிரிக்க வேண்டும். ஆனால் காம்பியரிங் மட்டும்தான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் காம்பியரிங்கில் ஸ்பெஷல்.

    காம்பியரிங் சுலபமானது அல்ல. தினமும் நிறைய விஷயங்களைக் கற்று கொண்டுதான் கேமரா முன்னால் நிற்க வேண்டும். தேர்வாகி முதல் ஷோ பண்ணும் போது நிறைய பதற்றம் இருந்தது. அதுக்காக கண்ணாடி முன் நின்று பேசிய தருணங்களை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது.

    எனது சினிமா கனவு இப்போதுதான் கை கூடி வந்திருக்கிறது. தற்போது ‘ஓடி போலாமா' படத்தில் சந்தியாவின் ஃப்ரண்டாக நடித்து வருகிறேன். படம் வந்த பிறகு இந்தக் கேரக்டர் பெரிதாகப் பேசப்படும். இதைத் தவிர ‘கந்தசாமி', ‘குயில்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறேன். ‘குயில்' படத்தில் எனக்கு ஒரு பாடலே உண்டு.

    சினிமாவில் எந்தக் கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன். அது எனக்கு நல்ல பெயரை வாங்கித் தருவதாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஓரிரு படங்களில் கிளாமராக நடித்து விட்டு மறு நாளே காணாமல் போன நடிகைகளின் கதை இங்கு நிறைய இருக்கிறது. அது மாதிரி காணாமல் போவதற்கு எனக்கு இஷ்டம் இல்லை.

    நிறைய காதல் கடிதங்கள் வந்திருக்கின்றன. காதல் ஒரு மென்மையான உணர்வு. அதை உணரக்கூடிய தருணம் வருகிற போதுதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் காதல் வரும். அந்த தருணம் வரும் போது நானும் காதல் வயப்படுவேன். அதுவரைக்கும் என் குடும்பத்தினருடன்தான் காதல் இருக்கும்.
    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0


  11. #110
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    காதல் திருமணம்!

    இந்த மாதத்தில் நடிகை வினோதினி சென்னை தொழிலதிபர் வெங்கட் ஸ்ரீதர் என்பவரை திடீர் திருமணம் செய்து கொண்டார். அதே போல அன்சாரி ராஜா என்பவரை ‘கருத்தம்மா' ராஜ ஸ்ரீ திடீர் திருமணம் செய்து கொண்டார். சென்ற மாதத்தில் காவ்யா மாதவன் மற்றும் நடிகை சங்கீதா ஆகிய நடிகையரும் திடீர் திருமணம் செய்து கொண்டனர். அடுத்து ‘ஜெயம்' ரவியின் திருமணம் நடக்க இருக்கிறது. 2009 நல்ல தொடக்கம்தான்.

    சோனியா இல்லை!

    சோனியா கதாநாயகியா நடித்த ‘பத்து பத்து' படத்தைத் தயாரித்த நிறுவனமும் ‘கேள்விக் குறி' படத்தைத் தயாரித்த நிறுவனமும் ஒன்று சேர்ந்து ‘கடத்தல்' என்ற படத்தைத் தயாரிக்கிறது. ‘கேள்விக்குறி' படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்த ஜெயலானி, இந்தப் படத்தையும் நடித்து இயக்குகிறார். ஆனால் இதில் சோனியா இல்லை. அவருக்கு பதில் இன்னொரு அழகு பதுமையை இறக்குமதி செய்கின்றனர்.

    கெட்டப் சுந்தர்!

    வெள்ளித்திரையில் இருந்து நடிகைகள் சின்னத்திரைக்கு செல்கின்றனர். அதே போல் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு பிரேம்குமார், அபிஷேக், சேத்தன் ஆகியோர் வந்து விட்டனர். இதில் வில்லன் நடிகர் ஓ.ஏ.கே. சுந்தர் நிறைய படங்களில் வில்லனாகவும் கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் நடித்து வருகிறார். படத்துக்குப் படம் அவருக்கு கெட்டப்புகளும் வித்தியாசமாக அமைகிறன. லேட்டஸ்டாக ‘தம்பிக்கு இந்த ஊரு' படத்தில் பிரபுவின் வலது கையாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஒரு கால் இருக்காது. அதற்கு பதில் கட்டை கால் வைத்து நடிக்கிற பாத்திரம். அதே போல் சுந்தர் .சி நடிக்கும் ‘வாடா' படத்தில் ரிஷிகேஷில் மாறு வேடத்தில் உலவும் பாத்திரம். அதாவது பின்லேடன் வேடம். படப்பிடிப்பின் போது சந்தேகத்தில் போலீஸ் வந்து விசாரித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இருட்டு குகையில் முரட்டு சிங்கம்!

    வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்பு தேவன் அடுத்து பிரகாஷ் ராஜ் நடித்த ‘அறை எண் 305-ல் கடவுள்' படத்தை இயக்கினார். இப்போது லாரன்ஸ் நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார். படத்திற்கு பெயர் ‘இருட்டுக் குகையில் முரட்டு சிங்கம்'. இதுவும் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தயாராகிறது.

    http://www.dinamani.com/sunday/sunda...FAP+%A3%B2U%F4

Page 11 of 63 FirstFirst ... 9101112132161 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •