Page 12 of 63 FirstFirst ... 210111213142262 ... LastLast
Results 111 to 120 of 626

Thread: TV tid bits

  1. #111
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சீரியல் வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது: நளினி

    தமிழ் தொலைக்காட்சி சீரியல் உலகத்தில் தற்போது இவருக்கென்று ஓர் இடம். கொடுமையான மாமியாரா? பாசமுள்ள அம்மாவா? பாந்தமான குடும்பத் தலைவியா? எதுவாக இருந்தாலும் எல்லா கேரக்டர்களிலும் ‘நச்'சென்று பொருந்திப்போகிறார் நடிகை நளினி. ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டின் இடைவெளியில் நளினி நம்மிடம் பேசியதிலிருந்து....

    சினிமாவுக்கும், சீரியலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. எதாவது ஒன்றில் அனுபவம் இருந்தாலே போதும் மற்றொன்று ஈஸியாக இருக்கும். நடிப்பதில் என்ன வித்தியாசங்கள் இருக்கிறது.

    ஒரு காலத்தில் சினிமாவில் இருந்தேன். இப்போது சீரியலில் இருக்கிறேன். ஆனால் சினிமாவை விட இந்த வாழ்க்கை ரொம்பவும் பரபரப்பாக இருக்கிறது. எந்த நேரமும் ஷூட்டிங், கேரக்டர்களை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற முனைப்பு என எந்த நேரமும் சீரியல் பற்றித்தான் யோசனை!

    சினிமாவில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ, அதை நடித்து விட்டுச் சென்று விடலாம். ஆனால், சீரியலில் அது போல அல்ல; கேரக்டராக வாழ வேண்டும். அப்போதுதான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

    சீரியல்கள் வீட்டிற்கே சென்று சந்திப்பதால் அதில் மக்கள் அனைவரும் ஒன்றிவிடுகிறார்கள். அதனால் எந்தத் தவறு செய்தாலும் சுலபமாகத் தெரிந்து விடும். ஒன்றுக்கு மேற்பட்ட சீரியல்களில் நடிக்கும்போது ஒரு சீரியலின் சாயல், மற்ற சீரியல்களில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இங்கு நிலைக்க முடியும்.

    ‘கோலங்கள்' அலமேலு கேரக்டருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடிப்பதால் வாழ்க்கை பரபரப்பு மிக்கதாக இருக்கிறது. வேலைக்குப் போவது மாதிரிதான் ஷூட்டிங்கும்.

    என்னுடன் சினிமாவில் நடித்த சக நடிகைகள், இப்போது சீரியலிலும் நடிக்கிறார்கள். அவர்களுடன் இருக்கும்போது பழைய சினிமா ஞாபகங்களைப் பற்றி பேசிக்கொள்வேன். அந்த தருணங்கள் ரம்மியமானவை.

    மகன் அருண், மகள் அருணா இருவருமே நன்றாக படித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வளர்த்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற என் கனவு விரைவில் நிறைவேறப் போகிறது. அதற்காகத்தான் காத்திருக்கிறேன். இருவரையுமே தமிழ் கலாசாரத்துடன் சுதந்திரமாக வளர்த்திருக்கிறேன் என்பது பெருமையான விஷயம்.

    10 வருடங்களாகி விட்டது அவரை (நடிகர் ராமராஜன்) சந்தித்து... அதற்காக நான் வருத்தப்பட்டதே கிடையாது. பிடிக்காமல்தானே பிரிந்தோம். அதற்கு ஏன் வருத்தபட வேண்டும். அவருக்கென்று ஒரு வாழ்க்கை, எனக்கென்று ஒரு வாழ்க்கை என ஆகி விட்டது. இனி அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது என்கிறார் பிரிவு தந்த அனுபவத்துடன்

    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0
    [/tscii]

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #112
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    தமிழ்ப் படங்களில் அறிமுகமாகும் அதி நவீன கேமரா

    ‘ஸ்லம்டாக் மில்லினர்' தேவ் படேல், ஃப்ரீடா பின்டோ.

    ஹாலிவுட் படங்களைப் படமாக்கப் பயன்படுத்தப்படும் ‘சிலிகான் இமேஜின்' என்ற ‘எஸ்.ஐ. 2 கே' அதி நவீன டிஜிட்டல் கேமரா தமிழ் சினிமாவிலும் விரைவில் பயன்படுத்தப்படவுள்ளது.

    இந்தக் கேமரா சென்னையிலுள்ள தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவின் மொத்த எடை 1.5 கிலோ மட்டுமே. இதிலிருந்து 500 கிராம் எடை கொண்ட லென்ஸ் பாக்ஸைத் தனியாகப் பிரித்தெடுத்துக்கொள்ளலாம்.

    காட்சிகளை படப்பிடிப்புத் தளத்திலேயே பார்த்துக்கொள்ள சிறிய மானிட்டரும் இதில் உள்ளது. மிகக் குறுகலான தெருக்கள், நெரிசல் மிகுந்த பகுதிகளில் இந்தக் கேமராவை எந்த உபகரணத்தின் உதவியும் இல்லாமல் கையில் வைத்துக்கொண்டே காட்சிகளைப் படமாக்கலாம்.

    கேமராவின் விலை ரூ.50 லட்சம். ஒரு நாள் வாடகை ரூ.25 ஆயிரம். இதற்கு ஃபிலிம் தேவையில்லை. டிஜிட்டல் முறையில் இயங்கும். 8 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்' படம் இந்தக் கேமராவில்தான் படமாக்கப்பட்டது.

    எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் ஜாக்கிஷெராஃப், ரவிகிருஷ்ணா நடிக்கும் ‘ஆரண்யகாண்டம்' படத்தின் முக்கியக் காட்சிகள் இந்தக் கேமராவினால் படமாக்கப்படுகின்றன. ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள புதிய படத்தில் இந்தக் கேமரா முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0

  4. #113
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    டி.ராஜேந்தரின் குறள் டி.வி.

    திரைப்பட இயக்குநரும் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான டி.ராஜேந்தர், ‘குறள் டி.வி' என்ற பெயரில் ஒரு புதிய இணையதள தொலைக்காட்சியைத் தொடங்கியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:

    குறள் டி.வி.யில் கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், பொழுதுபோக்கு, சினிமா என பல துறைகளைப் பற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. தமிழ் கலாசாரத்தைப் பரப்புவதற்காகத்தான் குறள் டி.வி.யைத் தொடங்கியுள்ளேன். இந்த டி.வி. நிகழ்ச்சிகளை ஜ்ஜ்ஜ்.ந்ன்ழ்ஹப்ற்ஸ்ண்ய்ச்ர்.ஸ்ரீர்ம் என்ற இணையதளம் மூலம் காணலாம்.

    குறள் டி.வி. பி.லிட் நிறுவனம் சார்பில் விரைவில் மூன்று திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளேன். அவற்றுள், என் இரண்டாவது மகன் குறளரசன் நடிக்கும் ஆக்ஷன் படமும் ஒன்று என்றார்.

    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0

  5. #114
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    பாலாவின் ‘நான் கடவுள்'
    படத்தில் ஆர்யாவின் தந்தையாக
    வந்து நடிப்பில் அசத்தியிருப்பவர்
    அழகன் தமிழ்மணி. இவர் ஏற்கனவே
    பல வெற்றிப் படங்களையும்,
    தொலைக்காட்சித் தொடர்களை
    யும் தயாரித்தவர் என்பது குறிப்பி
    டத்தக்கது. நடிப்பு என்றால் நாற்பது
    கிலோ மீட்டர் தூரம் ஓடுபவரை
    ‘நான் கடவுள்' படத்தில் எப்படி
    நடிக்க வைத்தார் பாலா? அது பற்றி
    அழகன் தமிழ்மணி கூறுகையில்,
    ‘‘என் தாத்தா மணலி கந்தசாமி. கம்
    யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தவர்.
    அதனால அவர் வழியில் நானும்
    வளர்ந்து வந்தேன். ஆரம்பத்தில்
    பத்து வருடங்கள் பத்திரிகையாளரா
    கப் பணியாற்றினேன். பிறகு ‘நயன
    தாரா' என்ற பெயரில் ஒரு மாத
    இதழை சொந்தத்தில் நடத்தினேன்.
    1983-ஆம் ஆண்டில் திரைப்படத்
    தயாரிப்பாளராக வளர்ச்சி பெற்றேன்.
    என் நண்பர்களுடன் இணைந்து
    நான் தயாரித்த முதல் படம் ‘மலை
    யூர் மம்பட்டியான்'. தியாகராஜன்,
    சரிதா நடித்த அந்தப் படம் வெள்ளி
    விழா கொண்டாடியது. அடுத்து தயா
    ரித்த படம் ‘அன்புள்ள ரஜினிகாந்த்'.
    ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில்
    நடித்த அப்படம் ஒரு மிகச்சிறந்த
    படமாக எல்லோ
    ராலும் பாராட்டப்
    பட்டது. பிறகு
    கார்த்திக் நடிப்
    பில் ‘தர்மபத்
    தினி', ‘சோலைக்
    குயில்', சரத்கு
    மார் நடிப்பில்
    ‘சித்திரைப்பூக்
    கள்' புதுமுகங்
    கள் நடித்த
    ‘அன்பே உன்
    வசம்' ஆகிய
    படங்களையும்
    தயாரித்தேன்.
    பகல் நேரம்
    ஒளிபரப்பாகி
    பெரிய அள
    வில் பேசப்
    பட்ட ‘மங்கை'
    தொடரை தயா
    ரித்ததும் நான்
    தான். அந்தத்
    தொடர் 400 நாட்கள் ஒளிபரப்பாகி
    சாதனை புரிந்தது. அதைத்
    தொடர்ந்து ‘அம்மா', ‘அம்பிகை',
    ‘அவளும் பெண்தானே' ஆகிய
    மெகா தொடர்களை தயாரித்தேன்.
    தெலுங்கு ஜெமினி டி.வி.யில் நான்
    தயாரித்த பல தொடர்கள் தொடர்ந்து
    ஒளிபரப்பாகி மக்களின் பேராதர
    வைப் பெற்றன. இவை தவிர,
    பொதிகை, விஜய் டி.வி.,
    பாரதி டி.வி. (தெலுங்கு), ஈ
    டி.வி. (தெலுங்கு), ஏசியா
    நெட் (மலையாளம்), சூர்யா
    டி.வி. (மலையாளம்) ஆகிய
    சேனல்களிலும் நான் தயா
    ரித்த மெகா தொடர்கள் ஒளி
    பரப்பாகி நல்ல பெயர்
    கிடைத்தது.
    என் கலையுலக வாழ்க்கை
    யில் ஏற்பட்ட ஒரு மிகப்பெ
    ரிய திருப்பம் ‘நான் கடவுள்'
    படத்தில் நடித்தது. திடீரென்று
    ஒரு நாள் பாலாவோட மேனே
    ஜரும், அசிஸ்டெண்ட் டைரக்
    டரும் வந்து என்னிடம் நீங்கள்
    ஒரு கேரக்டரில் நடிக்க வேண்
    டும் என்றார்கள். அப்போது
    நான், எனக்கு நடிக்க வராது
    சார், கை-கால் எல்லாம் உதறும்
    என்று சொன்னேன். அடுத்த பத்
    தாவது நிமிஷத்தில் டைரக்டர்
    பாலாவிடமிருந்து ஃபோன். அவ
    ரிடம் என் நிலைமையை எவ்வ
    ளவு எடுத்து சொல்லியும் அவர்
    என்னை விடுவதாக இல்லை. ‘நீங்க
    நடிக்கிறீங்க' என்றார்.
    இந்த சம்பவத்திற்கு முன் நான்
    தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்
    றபோது பாலா ஓட்டு போட வந்தி
    ருந்தார். அப்போது நான் அவரிடம்,
    ‘மறக்காமல் எனக்கு ஓட்டு போடுங்
    கள்' என்று சொன்னேன். சரியென்று
    தலையாட்டிவிட்டுப் போனவர் அப்ப
    டியே திரும்பி வந்து என் முகத்தை
    கூர்ந்து பார்த்தார். பிறகு சிரித்தவாறு
    சென்று விட்டார். அப்போது எனக்கு
    ஒன்றும் புரியவில்லை.
    ‘நான் கடவுள்' படத்தில் நடிக்கக்
    கேட்டபோதுதான் எனக்குப் புரிந்தது
    அன்றைக்கே அவர் அந்த கேரக்ட
    ருக்கு என்னை முடிவு செய்திருந்தார்
    என்பது! அந்த கேரக்டருக்காக பாலா
    நிறைய பேரை பார்த்தாராம். ஆனால்
    யாரும் ‘செட்' ஆகவில்லையாம். என்
    னைப் பார்த்ததும், நான்தான் அந்த
    கேரக்டருக்கு சரியானவர் என்று
    முடிவு செய்திருக்கிறார்.
    படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதி
    லிருந்து தாடி, முடி வளர்க்க ஆரம்
    பித்தேன். திடீர்னு ஒரு நாள் ஃபோன்
    பண்ணி, ‘காசிக்குப்போக டிக்கெட்
    போட்டிருக்கு, காசியில் முப்பது நாட்
    கள் ஷூட்டிங் இருக்கும்' என்றார்.
    அவருடன் காசிக்குச் சென்றோம்.
    சுனேனாவுடன்...

    அவர் சொன்னதையெல்லாம் செய்
    தேன். நடிக்க ஆரம்பித்த பிறகுதான்
    எனக்குத் தெரியும், நான் ஆர்யாவின்
    தந்தையாக நடிப்பது! ஒரு வேட்டி,
    சட்டை மட்டும்தான் என்னோட காஸ்
    டியூம். அதை மூன்று வருடங்களாக
    துவைக்காமலேயே பயன்படுத்தி
    னேன். காரணம் யதார்த்தமும், கன்டி
    னியுட்டியும் போய் விடக்கூடாது
    என்பதற்காக!
    இந்த படத்தின் ஷூட்டிங் நடக்
    கும்போதுதான் என் அம்மா இறந்து
    போனார். என் அம்மாவுக்கு நான்
    ஒரே பிள்ளை. எங்கள் குடும்ப வழக்
    கபடி அம்மா இறந்துபோனால்
    மொட்டையடித்து கொள்ளி வைக்க
    வேண்டும். ஆனால் நான் மொட்டை
    அடிக்காமலேயே அம்மா
    வுக்கு கொள்ளி வைத்
    தேன். காரணம் படத்தின்
    கன்டினியுட்டி. இதைப்
    பார்த்து என் சொந்தக்கா
    ரர்கள் எல்லாம் வருத்தப்
    பட்டார்கள். நானும் ஒரு
    தயாரிப்பாளராக இருப்ப
    தால் எனக்கு படத் தயாரிப்பி
    லுள்ள கஷ்டங்கள் பற்றி நன்
    றாகத் தெரியும். இப்போது என்
    மனதுக்குள் இருக்கும் வருத்தம்,
    நான் நடித்த படத்தை என் அம்மா
    பார்க்க முடியவில்லையே என்பது
    தான்.
    ‘நான் கடவுள்' வெளியான பிறகு அப்பா போன்ற கேரக்டர்களில்
    நடிக்க நிறைய அழைப்புகள் வருகி
    றது. இதற்கெல்லாம் காரணம் பாலா
    தான். இத்தருணத்தில் பாலாவுக்
    கும், ரசிகர்களுக்கும் என் நன்
    றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    இப்போது ‘யாதுமாகி' என்ற
    படத்தில் கதாநாயகி சுனேனாவின்
    தந்தையாக நடித்து வருகிறேன்.
    இப்படத்தை கே.பாக்யராஜிடம்
    இணை இயக்குனராகப் பணியாற்
    றிய ஆர்.பாலகுமார் இயக்குகி
    றார். அடுத்து நான் ‘ஒத்தைக்கு
    ஒத்தை' என்ற படத்தைத் தயா
    ரிக்கிறேன். இந்த படத்தை சஞ்
    சய்ராம் இயக்குகிறார். இதில்
    என் மகன் தமிழ் குமரன் கதா
    நாயகனாக நடிக்கிறார்.
    தெலுங்கில் மிகப்பெரிய
    வெற்றி பெற்ற ‘சின்னோடு'
    என்ற படத்தையும் தமிழில்
    தயாரித்து வருகிறேன். இப்ப
    டத்தை சரணிடம் இணை
    இயக்குனராகப் பணியாற்றிய
    கண்மணி இயக்குகிறார். இவர்
    தமிழில் ‘ஆஹா எத்தனை
    அழகு' என்ற படத்தை இயக்
    கியவர்'' என்றார்.

  6. #115
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Editor Mohan revises Ravi’s marriage date
    IndiaGlitz [Wednesday, March 18, 2009]

    Ravi

    Ravi Gallery

    In the latest press note, editor Mohan has revealed the revised marriage date of his son ‘Jayam’ Ravi and Aarthi on 4th June at Mayor Ramanathan Chettiyar auditorium. A day before, the official date was said to be on 7th June.

    He has expressed his regret for the change in the dates that has already got published in all the leading media. The date is pre-poned based on horoscope beliefs and not any other reasons, said Mohan. Marriage is to be held on June 4th while the reception will be on 7th June, as stated.

    Here’s a verbatim of Mohan’s note:

    யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் எனது மகனின் திருமண செய்தி உங்கள் எல்லா பத்திரிகைகளுக்கும் சென்று சேரும் முகமாக இமெயில் மூலமாகவும் பேக்ஸ் மூலமாகவும் அனுப்பியுள்ளேன்.

    http://www.indiaglitz.com/channels/t...cle/45675.html

  7. #116
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இன்னும் யோசனை

    சின்னத்திரை நடன நிகழ்ச்சித் தொகுப்பில் விறுவிறுவென்று முன்னேறிவிட்ட அந்த இளைஞர் பிரபல சின்னத்திரை இயக்குனரை சந்தித்து அவர் இயக்கும் சீரியலில் நடிக்க விரும்புவதாக சொன்னார். ஆனால் டைரக்டரோ "உனக்கு நடிப்பில் எப்படி வர விருப்பம்?'' என்று கேட்டார். "சினிமாவில் ஹீரோவாக வேண்டும்'' என்றார், சான்ஸ் கேட்டவர். இயக்குனர் அவரிடம், "சீரியலில் இரண்டாவது ஹீரோ ரேஞ்சுக்கு நடிக்கத் தொடங்கி விட்டால் அப்புறமாய் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு தரவே மாட்டார்கள் . அதனால் யோசித்து முடிவைச் சொல்'' என்றார்.

    இளைஞர் இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறார்.

    நன்றி -- தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #117
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    முணுமுணுப்பு

    மதுரையில் நடந்த பிரபல திருமணம் ஒன்றில் நடனமாடவும் கலைநிகழ்ச்சி நடத்தவுமாக சின்னத்திரை நட்சத்திரக் கூட்டம் சென்னையில் இருந்து விமானத்தில் போனது. இவர்களை அழைத்துக்கொண்டு போனது பிரபல இரண்டெழுத்து நடன இயக்குனர் அம்மணி.

    நிகழ்ச்சி முடிந்து அவரவருக்கான சம்பளத்தை நட்சத்திரங்கள் பெற்றுக்கொண்டபோதுதான் முணுமுணுத்திருக்கிறார்கள். காரணம் அம்மணி மாஸ்டர் அத்தனைபேருக்கும் கமிஷனாக ஒரு தொகையை பிடித்துக் கொண்டு சம்பளம் கொடுத்தது தான்.

    இப்படிச் செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் நான் போயிருக்கவே மாட்டேன் என்று அழாத குறையாய் சொன்னார், வருமானப் பிடித்தத்தில் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை ஒருவர்.


    நன்றி -- தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #118
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஷக்தி என்ன செய்யப்போகிறாள்?



    திங்கள் முதல்வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜி டிவியில் ஒளிபரப்பாகிவரும் அழகான ராட்சசி தொடர், இப்போது 75-வது எபிசோடை எட்டியிருக்கிறது.

    திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சொத்து கிடைக்காது என்ற பயம் கோடீஸ்வர கிஷோரை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கிறது. ஏதாவது கிராமத்து அப்பாவிப் பெண்ணை மணந்துகொண்டால் சொத்து தன் பெயருக்கு வந்ததும் அந்தப்பெண்ணை துரத்திவிட்டு வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கலாம் என்பது அவன் திட்டம். கிராமத்துப் பெண் ஷக்தி அவன் கண்ணுக்கு அப்பாவியாகப்பட, திருமணத்துக்கு சம்மதிக்கிறான்.

    ஆனால் திருமணத்துக்குப் பிறகு ஷக்தி அத்தனை சீக்கிரமாய் கழட்டிவிட முடிகிற ரகம் இல்லை என்பது புரிந்து போகிறது. மாமியார் சிவகாமிக்கு பிரியமான மருமகளாக இருக்கிறாள்.

    அதேநேரம் சிவகாமியின் அண்ணனும் அவர் மனைவியும் கிஷோருக்கு தங்கள்மகளை திருமணம் செய்துகொடுத்து அந்த குடும்பத்தின் சொத்துக்கு சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள்.அதற்காக அவர்கள் பங்குக்கு ஷக்தியை துரத்தும் முயற்சியைத் தொடர்கிறார்கள். முயற்சி கைகூடாமல் தோற்றுப்போகிறார்கள்.

    இனி நடப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் கிஷோரின் அத்தை கோபத்தில் ஊருக்குப் போய் விடுகிறாள். இனி அதிரடியாய் ஏதாவது செய்தால்தான் ஆயிற்று என்று முடிவுக்கு வரும் கிஷோர், தனது மாமா பெண்ணை மணந்து கொண்டு வீட்டுக்கு வருகிறான்.அதிர்ந்து போகும் தாய் சிவகாமியிடம், "இனி உன்னால் என்ன செய்யமுடியும்? மாமா பெண் மூலம் பிறக்கும் என் குழந்தைக்குத்தானே சொத்து உரியதாகும்'' என்று நக்கலாக பேசுகிறான்.

    ஆனால் அடுத்தகணமே தாயார் சிவகாமி அவனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள். நேற்று காலையில் தான் சொத்தை ஷக்தி பெயருக்கு மாற்றி எழுதினேன் என்கிறாள்.

    இதைக்கேட்டு கிஷோர் மட்டுமல்ல... ஷக்தியும் அதிர்ச்சி அடைகிறாள். உண்மையில் இந்த சொத்து மாற்றம் விஷயமாக சிவகாமி அம்மாள் ஷக்தியிடம் கூட எதுவும் கேட்கவில்லை. உண்மையில்அவள் நோக்கமே கிஷோரை திருத்தணும். அவன் தன் தாயாருக்கு நல்ல பிள்ளையாக இருக்கணும் என்பது தான்.அதற்காக அவள் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்குகிறாள்.

    கதை பற்றிவிவரித்த டைரக்டர் பிரபுநேபால் தொடர்ந்து கூறும்போது, "தொடரில் இந்த வாரம் புதிதாக இரண்டு குடும்பங்கள் அறிமுகமாகிறார்கள். ஷக்திக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத இவர்கள் எப்படி ஷக்தியுடன் ஒரே நேர்கோட்டில் இணைகிறார்கள் என்பது சுவாரசிய பின்னணியாக இருக்கும்'' என்கிறார்.

    தொடருக்கு திரைக்கதை: தேவிபாலா. வசனம்: ஜி.கே. ஒளிப்பதிவு: ï.கே.செந்தில்குமார். தயாரிப்பு-இயக்கம்: பிரபுநேபால்.
    நன்றி -- தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #119
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சீரியலுக்கென்றே தனி சேனல் வர வாய்ப்பு'

    சினிமாவில் சாதிக்க வேண்டும் என வந்த பலருக்கு சீரியல்கள்தான் அரவணைப்பாக உள்ளன. சீரியல்களின் தாக்கம் மக்களிடம் வெகுவாகப் பரவி வருகிறது என்கிறார் ‘விழுதுகள்' சந்தானம்.

    சிறு வயதில் இருந்தே நடிப்புதான் எனக்கு எல்லாம். பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசைதான் என்னையும் நடிகனாக்கி விட்டது. அந்தக் காலத்தில் மேடை நாடகத்தில் தொடங்கிய என் நடிப்பு ஆர்வம் இன்று அன்றாட சீரியல்கள் வரை வந்து நிற்கிறது. காலத்துக்கு ஏற்றவாறு இடம் மாறிவிட்டதே தவிர ஆர்வம் மாறவில்லை.

    டி.டி. தொலைக்காட்சியில் வந்த விழுதுகள்தான் என் முதல் சீரியல். அந்த சீரியலில் எனது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதிலிருந்து ‘விழுதுகள்' சந்தானம் ஆகிவிட்டேன்.

    முதன் முதலில் தமிழில் தயாரிக்கப்பட்ட சீரியலில் நடித்தவன் என்ற பெருமை எனக்கு உண்டு. அந்த சீரியலை தமிழ் சினிமாவின் பழம் பெரும் இயக்குநர் பீம்சிங் மகன் கோபி இயக்கியிருந்தார்.

    இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தாகி விட்டது. பாலசந்தர், சிஜே.பாஸ்கர் என பல இயக்குநர்களிடம் பணிபுரிந்தாகி விட்டது. அவ்வப்போது சில படங்களிலும் நடித்தேன். நாடகங்கள் மீது இருந்த ஆர்வம் சினிமா மீது இல்லை.

    இப்போது நிறைய சேனல்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் டி.டி.யைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. ஆனால், இப்போது நிலைமை வேறு. காமெடி, இசை என ஒவ்வொன்றுக்கும் ஒரு சேனல் வந்து விட்டது. விரைவில் சீரியலுக்கென்று ஒரு சேனல் வந்தாலும் வரலாம்.

    சீரியல்களில் நடிப்பதற்கு நடிகர்கள் போதவில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு சீரியல் உலகம் பிஸியாகிவிட்டது. ஒரு நடிகையை மையமாக வைத்து 4 அல்லது 5 சீரியல்கள் போய்க் கொண்டு இருக்கின்றன. நடிகர்களின் வாழ்க்கையை சீரியல்கள் தற்போது மாற்றிவிட்டது.

    இப்போது நிறைய பேர் சிறு வயதிலே சீரியலுக்கு வந்து விடுகிறார்கள். இது ஆரோக்கியமானதா, இல்லையா என்பதைப் பற்றி யோசிக்க யாருக்கும் நேரம் இல்லை.

    ‘மகள்', ‘திருமதி செல்வம்', ‘நாணல்', ‘பந்தம்', ‘கோலங்கள்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறேன். அனைத்திலும் நல்ல கேரக்டர்கள். அவை எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தால் சரி என்றார்.

  11. #120
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஜெயம் ரவிக்கு திருமணம்



    சென்னை, மார்ச். 17: நடிகர் ஜெயம் ரவிக்கும் சென்னையைச் சேர்ந்த ஆர்த்திக்கும் வரும் ஜுன் 7-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறுகிறது.

    பிரபல எடிட்டர் மோகனின் மகனான ரவி, ‘ஜெயம்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர். அதையடுத்து ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி', ‘மழை', ‘தீபாவளி', ‘சந்தோஷ் சுப்ரமணியம்', ‘தாம் தூம்' உள்ளிட்ட 10 படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘பேராண்மை' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

    மணமகள் ஆர்த்தி, சின்னத்திரை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களான விஜய்குமார்-சுஜாதா ஆகியோரின் புதல்வி. சர்வதேச மேலாண்மை படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

    ‘இந்தத் திருமணம் இரண்டு குடும்பங்களும் சேர்ந்து எடுத்த முடிவு. நாங்களாக அறிவிக்கும் முன்பு சில விஷயங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துவிட்டன. காதல் திருமணம் என்றால் ‘ஆம்' என்று சொல்வதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் இது முழுக்க முழுக்க எங்கள் இரண்டு குடும்பங்களும் எடுத்த முடிவு.

    ஜுன் 4-ம் தேதி சென்னையிலுள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்' என்றார் எடிட்டர் மோகன்.

    காதல் திருமணம் என்றால் ‘ஆம்' என்று சொல்வதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் இது முழுக்க-----------

    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0

Page 12 of 63 FirstFirst ... 210111213142262 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •