Page 13 of 63 FirstFirst ... 3111213141523 ... LastLast
Results 121 to 130 of 626

Thread: TV tid bits

 1. #121
  Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
  Join Date
  Jan 2005
  Posts
  1,598
  Post Thanks / Like
  குரலும் உடம்பும் நடிகனின் கருவிகள்!

  2009 வருடத்திற்கான கலைமாமணி நாடகாசிரியர், நடிகர் ந.முத்துசாமிக்கும், பசுபதிக்கும் வழங்குவதாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அறிவித்திருப்பது, ‘கூத்து' என்ற உயர்ந்த கலைப் பண்பாட்டின் மகத்துவத்தை மேலும் உயர்த்திக் காட்டியுள்ளது.

  தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த புஞ்சையில் பிறந்த முத்துசாமி, கலை உலகில் உதித்தது ஒரு சிறுகதை எழுத்தாளராக. பின்னர், நவீன நாடக இயக்குநரான இவரது படைப்புப் பட்டியல் 60 நாடகங்களைக் கொண்டது. ‘நாற்காலிக்காரர்', ‘அப்பாவும் பிள்ளையும்', ‘குப்பை மேடு', ‘விறகு வெட்டி' போன்ற சமூக விமர்சன நாடகங்கள், ‘ப்ரகலாதன்', ‘பாஞ்சாலி சபதம்', ‘படுகளம்', ‘அர்ஜுனன் தபஸு' என்னும் இதிகாச குறியீட்டு நாடகங்கள், ப்ரெக்ட், கார்ஸியா, லென்ஸ் போன்ற வெளிநாட்டவரின் நாடகங்களைத் தழுவிய படைப்புகள் என இயங்கி வருகிறார் முத்துசாமி.

  ‘கூத்துப்பட்டறை'யில் (வைகாசி தெரு, சின்மயா நகர்) நாடக ஒத்திகையின் இடையே அவரைச் சந்தித்தபோது..

  ‘‘சென்னை வாசிகளுக்குக் கூத்தைக் காணும் வாய்ப்பு இருந்திருக்கிறது. தெருக்கூத்து பற்றி ஆராய்ச்சி செய்த ரிச்சர்ட் ஃப்ரெஸ்கா என்ற அமெரிக்கருடனும், புரிசை கண்ணப்ப தம்பிரானுடனும் இந்நகரத்திலேயே பல கூத்து நிகழ்வுகளைக் கண்டுள்ளேன். புரிசை கண்ணப்ப தம்பிரானுடன் எனக்குள்ள உறவைச் சொல்லத் தொடங்கினால் அதுவே ஒரு நெடுங்கதையாகிவிடும். கண்ணப்ப தம்பிரான் உயிரோடு இருந்தவரை எங்களுடன் நெருக்கமாக இருந்தார். கூத்துப்பட்டறை 1977-ல் ஆரம்பிக்கப்பட்டது. எனது நண்பர் வீராசாமிதான் இதற்குப் பெயர் சூட்டியவர். எந்த எழுத்தாளருமே கூத்தை ஒரு உன்னதக் கலைவடிவமாக எண்ணி எழுத முற்படவில்லை. தமிழ் சமூகத்தில் கூத்துக்கு மதிப்பு ஏற்பட்டது எப்பொழுது? மரபுக் கலை பற்றி நிறைய பல்கலைக் கழகங்களில் முறையான படிப்பும் ஆராய்ச்சியும் மேற்கொண்ட பிறகுதான்.

  நிஜத்தில் இந்திய நாடகம் என்று மொத்தமாக எடுத்துக் கொண்டால் இந்தக் கூத்து என்பது யக்ஷ கானத்துடனும் கதகளியுடனும் வேறு பல பிராந்தியக் கலை வடிவங்களுடன் பொது அம்சங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது; விசேஷ நடைகளில், அதாவது ஸ்டைலில், வட்டாரத்திற்கே உரித்தான சில மாறுபாடுகளையும் உணர்த்திக் காட்டுகிறது. நாட்டிய சாஸ்திரத்தில், இசைஞர்கள் எங்கே அமர்வார்கள், நடிகர்கள் எங்கே வேஷம் கட்டினார்கள், பார்வையாளர்கள் எங்கே அமர்வார்கள் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறது. அது போலக் கூத்திலும் நிலவியிருக்கிறது. சுவாரஸ்யமான கதையம்சத்தை ஒரு சடங்குத் தன்மையுடன் இணைத்துக் கொடுத்திருக்கிறது இந்தக் கூத்து.

  இங்கே, ஏதோ நடிகன் என்றில்லாமல் ஒரு முழு மனிதனை உருவாக்க முயற்சிக்கிறோம். உடம்பின்-மனதின் செயல்பாட்டிற்கு எல்லை உண்டென்றால் அந்த எல்லையை அறிந்து, அதை மீறிச் சொல்கிறோம். பூபாளன் என்ற யுத்தக் கலை நிபுணர் இங்குள்ளவர்களுக்கு உடம்பைக் கையாளும் முறைகளைக் கற்பிக்கிறார். இதனால் பல விதங்களில் உடம்பைப் பயன்படுத்தி, உடம்பு மூலம் தரவல்ல பல வித வடிவங்களைக் கண்டுபிடிக்கும் பயிற்சியும் தேர்ச்சியும் பெறுகிறார்கள். இதன் காரணமாக சிருஷ்டித் திறன் பெருகி அவர்களின் உடம்பே பார்வையாளருடன் தொடர்பு கொள்கிறது. நடிகர்கள் வெறுமனே உட்கார்ந்திருந்தாலும் உடம்பானது தொடர்பை நடத்திக் கொண்டு இருக்கும். ஒரு நடிகனுடைய கருவிகள் என்றால் அது அவனுடைய உடம்பும் குரலும் தானே? பசுபதி, கலைராணி, அண்ணாமலை, ஜெயகுமார் -இங்கே உருவானவர்கள் -யாவருமே ஒரு தெளிவும் நிர்வாகப் புத்தியும் உடையவர்களாகத் திகழ்கிறார்கள்.

  என் நாடகங்களின் மையக் கருத்து என்று எடுத்துக் கொண்டால், ‘நாற்காலிக்காரர்' ஒரு ‘பொலிடிகல் ஸடையர்' அரசியலில் சம்பந்தப்படாதவரும் அரசியலால் தாக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டியது. எதையுமே தானாகத் தெரிந்து கொள்வதுதான் உசிதம், எல்லாவற்றையும், எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் எடுத்துரைத்துக் கொண்டிருக்க முடியாது என்ற கருத்து வேறு ஒரு நாடகத்தின் மையப் பொருளானது. இப்படி பல ரகம். நவீன நாடகம் எல்லா பிரச்னைகளையும் சொல்லுவதற்கு ஏற்ற களமாகத்தான் இயங்கி வருகிறது.

  யுனெஸ்கோ அமைப்பின் கீழ் ஜெர்மனி, இஸ்ரேல், கோஸ்டா ரீக்கா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகளிலிருந்து வந்த கலையார்வலர்கள் கூத்துப்பட்டறையில் தங்கி எங்களுடன் செயல்பட்டது ஒரு கலாச்சாரப் பரிமாற்றம் எனலாம்.

  இந்திய அரசின் கலாசாரப் பிரிவு எங்களுக்கு நாடகம் நிகழ்த்த உதவி அளித்துள்ளது. பொதுவாகவே கலைக்குழுக்களுக்கு வகைமுறையான ஆதரவு கொடுத்துள்ளது. ஃபோர்ட் ஃபௌண்டேஷனும் எங்களை அங்கீகாரம் செய்து நிதிஉதவி வழங்கி கௌரவித்திருக்கிறது. இவையாவும் எங்களது செலவுகளைப் பார்த்துக் கொண்டதோடன்றி எங்களை ஜீவித்திருக்கவும் வைத்தது. போன மாதம் அறிவித்த கலைமாமணி அவார்ட் ஒரு பாப்புலர் ஆன விருது. நிறைய பேர் கூப்பிட்டு வாழ்த்தினார்கள். தேவிகா ராணி அவர்களும் டேபோரா தியாகராஜன் அவர்களும் ‘மெட்ராஸ் க்ராஃப்ட்ஸ் ஃபௌன்டேஷன்' மூலம் பள்ளிக்கு கூத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

  http://www.dinamani.com/sunday/sunda...=C%5B%FBU+TdLm

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #122
  Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
  Join Date
  Jan 2005
  Posts
  1,598
  Post Thanks / Like
  கல்லிலே கலை வண்ணம் கண்
  டார்' என்பதைப் போல், கண்
  ணாடியில் கலை வண்ணத்
  தைக் கொண்டு வருகிறார் சென்
  னையைச் சேர்ந்த சி.ராஜலஷ்மி.
  காங்கிரஸின் உயர்மட்டக் குழு
  உறுப்பினர் சிரஞ்சீவியின் மகள்
  இவர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை
  முடித்துவிட்டு "ரிலாக்ஸôக' ராஜலஷ்மி நம்மி
  டம் பேசியதிலிருந்து...
  ""எனக்கு சின்ன வயதிலிருந்தே ஓவியங்க
  ளின் மீது ஈடுபாடு அதிகம் இருந்தது. எல்லோ
  ரையும் போலவே பென்சில், ஸ்கெட்ச், நீர்
  வண்ணங்கள் என அனைத்தையும் பயன்ப
  டுத்தி ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன்.
  ஆயில் பெயின்டிங்குகளையும் வரைவேன்.
  தபஸ்யா ஓவியப் பள்ளியில் தஞ்சாவூர்
  பாணி ஓவியங்கள் வரைவதற்குக் கற்றுக்
  கொண்டேன். மிகமிகப் பொறுமையோடு
  நுணுக்கமாக வரைய வேண்டிய கலை அது.
  இதை கற்றுக் கொள்ளும்போது நான் பத்தாவது
  வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சாவூர்
  பாணி ஓவியத்தில் விநாயகர் உருவங்களை
  வரைவதுதான் என்னுடைய தனிப்பட்ட திற
  னாக இருந்தது. அதன்பிறகு, என்னுடைய அம்
  மாவின் நண்பர் ஒருவரிடமிருந்து கண்ணாடி
  யில் பெயின்டிங் வரையும் நுணுக்கத்தை ஓரிரு
  நாட்களில் தெரிந்து கொண்டேன்.
  அதுவரை சார்ட், கேன்வாஸ் போன்றவைக
  ளில் வரைந்து வந்த எனக்கு கண்ணாடியில்
  வரைவதற்குப் பழகியவுடன் அதில் வரைவ
  தற்கு ஆர்வம் அதிகரித்தது. நிறைய ஓவியங்
  களை கண்ணாடியில் வரைய ஆரம்பித்தேன்.
  இந்தப் புதிய மீடியத்தில் வரைவதற்கு என்னு
  டைய குடும்பத்தினரும், நண்பர்களும்
  என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினர். பள்ளி
  யில் நண்பர்களுக்கு, ஆசிரியர்களுக்கு பிறந்த
  நாள், உறவினர்களின் திருமணம் என்று எந்த
  விசேஷமாக இருந்தாலும் நான் வரைந்த கண்
  ணாடி ஓவியங்கள்தான் அவர்க
  ளுக்குப் பரிசாகும். நட்பு வட்டத்
  துக்கு மட்டுமே பரிசளித்து வந்த
  நான், மெதுவாக வி.ஐ.பி.களுக்
  கும் நான் வரைந்த கண்ணாடி ஓவி
  யங்களை அன்புப் பரிசாகக்
  கொடுக்க ஆரம்பித்தேன்.
  காங்கிரஸ் கட்சியின் தலைவர்
  சோனியா காந்தி உள்பட பலரும்
  அந்த வி.ஐ.பிகளின் லிஸ்டில்
  அடங்குவார்கள். இப்படிக் கொடுத்
  ததில், நமது முன்னாள் குடியரசுத்
  தலைவர் அப்துல் கலாமுக்கு நான்
  வரைந்த கண்ணாடி ஓவியத்தை
  கொடுத்தது என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி. அண்ணா பல்க
  லைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான விஸ்வநாதன் அவர்
  கள்தான் அந்த அரிய வாய்ப்பை எனக்கு அளித்தார். கண்ணன்,
  ராதையின் ஓவியத்தை கண்ணாடியில் வரைந்து முன்னாள் குடியர
  சுத் தலைவரிடம் கொடுத்தேன். அவர் என்னுடைய ஓவியத் திற
  மையை பெரிதும் பாராட்டினார்.
  ஓவியம் தவிர, பரதநாட்டியத்திலும் எனக்கு நிறைய ஆர்வம்.
  ஊர்மிளா சத்யநாராயணன் என்னுடைய நாட்டிய குரு. சுவாமிமலை
  சுரேμடம் வாய்ப்பாட்டு பயின்றேன். எட்டு ஆண்டுகள் பயிற்
  சியை முடித்திருக்கிறேன்.
  ரேடியோ மிர்ச்சிக்கான டைட்டில்-
  சாங்கை ஆரம்பத்தில் நான் பாடியி
  ருக்கிறேன். கலையின் மீது எவ்வ
  ளவு ஆர்வம் இருக்கிறதோ அந்தள
  வுக்கு படிப்பின் மீதும் ஆர்வம் இருக்
  கிறது. கலையும், கல்வியும் எனக்கு
  இரண்டு கண்கள். எதிர்காலத்தில்
  எம்.பி.ஏ., படித்துவிட்டு தொழில்
  முனைவராக வேண்டும் என்பது
  தான் என்னுடைய லட்சியம்!'' என்
  றார் ராஜலஷ்மி.

 4. #123
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  குஷ்பு வழியில்...  சின்னத்திரையில் உணர்ச்சிபூர்வ அம்மா, அண்ணி கேரக்டர்களில் அதிகம் நடித்து வரும் மீரா கிருஷ்ணன், இப்போது கணவர் கிருஷ்ணனையும் நடிகராக்கி விட்டார்.

  ஆனால் கணவர் நடிகராகியிருப்பது சின்னத்திரையில் அல்ல. பெரியதிரையில். அன்புள்ள துரோகி என்ற பெயரில் வளரும் புதுப்படத்தில் கிருஷ்ணன்தான் ஹீரோ.

  `தானுண்டு... தன் இசைக்கூடம் உண்டு' என்றிருந்த கிருஷ்ணனுக்கு நடிப்பு ஆர்வம் ஊட்டி அவரை ஒரு ஹீரோவுக்குத் தகுதியான அம்சங்களுடன் தயார் செய்தது மீராவேதான் என்கிறார்கள்.

  இந்த விஷயத்தில் மீரா நடிகை குஷ்புவின் பாணியை பின்பற்றியிருக்கிறார். டைரக்டராக இருந்த கணவர் சுந்தர்.சியை ஹீரோவாகவும் மாற்றியவர் குஷ்பு. அதே பாதையில் இப்போது பயணப்பட்டிருப்பது மீரா.
  நன்றி: தினதந்தி [
  "அன்பே சிவம்.

 5. #124
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  கனவு நாயகி  காமெடி நடிகர் கணேஷ் சமீபத்தில் சென்னை மதுரவாயலில்ஒரு பங்களா கட்டி முடித்துகிரகப்பிரவேசம் நடத்தினார். 10 வருடங்களுக்கு முன்பே வாங்கிப்போட்ட இடமாம். இப்போதுதான் கட்ட நேரம் வந்திருக்கிறது. கணேஷிடம், "வீட்டைக் கட்டி விட்டீர்கள். இனி திருமணம்தானே?'' கேட்டோம்.

  கணேஷ் சொன்னார்: "என் கனவு இல்லத்தை கட்டி முடித்து விட்டேன். இனி என் கனவுராணியை கைப்பிடிக்க வேண்டியது தான்.''

  சின்னத்திரையில் அதிகதொடர்களில் நடித்துவரும் கணேஷூக்கு இப்போது பெரிய திரையில் இருந்தும் வாய்ப்புக்கள் தேடிவரத் தொடங்கியிருக்கின்றன.
  நன்றி: தினதந்தி
  "அன்பே சிவம்.

 6. #125
  Moderator Diamond Hubber aanaa's Avatar
  Join Date
  Mar 2005
  Location
  இந்திரலோகம்
  Posts
  5,808
  Post Thanks / Like
  வேலை வாய்ப்புத் தகவல்கள்

  இன்றைய மாணவர்களிடம் வேலை என்றதும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை மட்டும்தான் கண்முன் விரிகிறது. ஆனால் அதைத் தாண்டியும் ஆயிரம் வேலை இருக்கிறது.

  பறக்கும் விமானம், தண்ணீரில் போகும் கப்பல், ஓட்டல், தோல் பதனிடுதல், அச்சுத்துறை என்று பல துறைகள். ஒவ்வொரு துறையிலும் எப்போதும் திறமையான ஆட்களுக்கான தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

  எந்த வேலைக்கு நாட்டிலும், உலக அளவிலும் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கு என்ன படிப்பு படிக்க வேண்டும்... முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்களும் கூடுதலாக எதைப் படித்தால் வேலை கிடைப்பது சுலபமாகும் போன்ற எதிர்பார்ப்பு கேள்விகளுக்கு கல்வியாளர்கள் நேரலையில் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி, ``வேலைவாய்ப்புத் தகவல்கள்''.

  வியாழன் தோறும் காலை 11 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், ராம்குமார் சிங்காரம்.
  நன்றி: தினதந்தி
  "அன்பே சிவம்.

 7. #126
  Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
  Join Date
  Jan 2005
  Posts
  1,598
  Post Thanks / Like
  தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி
  சினிமாத்துறையில் தாக்குப் பிடிக்க வேண்டுமென்றால் அதற்கு அசாத்திய திறமைகள் இருக்க வேண்டும். பெரிய பெரிய ஜாம்பவான்களையே இருந்த இடம் தெரியாமல் மாற்றிவிடக் கூடிய வல்லமை படைத்தது இந்த சினிமா. இத்துறையில் பெண்களாலும்

  வெற்றி பெற முடியும் என நிரூபித்திருக்கிறார் புஷ்பா கந்தசாமி. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மகள் என்ற அடையாளம் இருந்தாலும் தனித்துவமான தயாரிப்பாளர். அவரைச் சந்தித்தோம்.

  சினிமா துறைக்கு எப்படி திடீர்னு வந்தீர்கள்?

  எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா தெரியும். தூங்கினது, சாப்பிட்டது எல்லாமே சினிமாவோடதான். திருமணத்துக்குப் பிறகு அப்பாவோட கம்பெனில இருந்து ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. அப்பாகிட்டே கேட்டேன். சரின்னுட்டார்.

  அப்போ மிஸ்டர் நடராஜன் எக்ஸிகியூட்டிவ் டைரக்டரா இருந்தார். அவருக்கு கீழே அப்சர்வ் பண்ணி நிர்வாகத்தை பார்த்துகிட்டேன். அவர் வெளியேறிய பிறகு, மேனேஜிங் டைரக்டர் பொறுப்பை எங்கிட்ட கொடுத்தார் அப்பா.

  டைரக்டர் மனைவி, நடிகர் மனைவி, மகள் போன்றவர்கள் பெரும்பாலும் காஸ்டியூம் டிசைனராக சினிமாவுக்கு வருவார்கள். நீங்கள் மிகப் பெரிய பொறுப்பான தயாரிப்பு துறையைக் கையில் எடுத்தது எப்படி?

  அப்போ எனக்கு பயமே தெரியல. இளங்கன்று பயம் அறியாதுன்னு சொல்லுவாங்கல்ல. அது மாதிரி. அப்பா சொன்னார்ன்னு உட்கார்ந்துட்டேன். இப்போ யோசிச்சா மலைப்பா இருக்கு.

  அப்போ ஒன்றுமே தெரியாமல் உட்கார்ந்து செய்ய ஆரம்பிச்சேன். அவரோட சப்போர்ட் பேக்ரவுண்ட்ல இருந்தாலும் கூட, நானா நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.

  தயாரிப்பு துறையில இறங்கும் போது நீங்க எடுத்த சில முடிவுகள் தோல்வியைச் சந்தித்திருக்கும். சில முடிவுகள் வெற்றியைத் தேடி தந்திருக்கும். அப்போது என்ன நினைத்தீர்கள்?

  தப்பு முதல்லேர்ந்து நடந்துக்கிட்டுதான் இருக்கு. இப்போது பத்து, பதினைந்து வருஷமாகுது. நிறைய அனுபவம் கிடைச்சிருக்கு. ஆனால், இந்தத் துறையில எப்போ பார்த்தாலும் புது அனுபவமா இருக்கு. புது தப்பு செய்யக்கூடாதுன்னு தீவிரமா இருந்தா. பழைய தப்பு மறந்து போகுது. அப்படியேதான் இருக்குது.

  ரஜினி சார் ‘முத்து' படத்துக்கு கால்ஷீட் கொடுக்கிறார்ன்னு சொன்ன நேரத்துல, நேரடியா தியேட்டர்ல போடலாம்னு முடிவு பண்ணினோம். கிட்டதட்ட நூற்றி ஐம்பது தியேட்டர் ஓனரையும் இன்டர்வியூ வைத்து அவங்ககிட்டே வியாபாரம் பண்ணினோம். அதுல தமிழ்நாட்டில் இருக்கிற தியேட்டர் வரலாறு தெரிஞ்சது. யார் யார் நேரடியா பார்த்துகிறாங்க. யார் யார் மேனேஜர் மூலமா பார்த்துக்கிறாங்க என எல்லா இன்ஃபர்மேஷனும் தெரிஞ்சுக்க அந்தப் படம் யூஸ்புல்லா இருந்தது. அது ஒரு நல்ல அனுபவம்.

  ‘சாமி' படத்துக்கு முன்பு ரெண்டு, மூணு சின்ன படங்களில் அடிபட்டு போனேன். இனிமே பெரிய ஹீரோவ வெச்சிதான் படம் பண்ணனும்னு முடிவு பண்ணுனேன்.

  ரஜினி படம் மாதிரியே ‘சாமி'யும் பெரிய எதிர்பார்ப்போட வரணும்னு முடிவு பண்ணி உருவாக்கினோம். அதேமாதிரி அந்தப் படம் மக்கள்கிட்டே நல்ல பாராட்டு வாங்குச்சு.

  ரவி ராகவேந்தர், காவ்யா

  2003-ல ‘திருமலை'. அது பெரிய ஹிட். என்னோட சினிமா கேரியர்ல ‘திருமலை' எனக்கு திருப்புமுனையா அமைஞ்ச படம்னு பலமுறை விஜய் தன்னோட பேட்டிகள்ல சொல்லியிருக்காரு. அந்த மாதிரி சில முடிவுகளை துணிச்சலா எடுத்தேன். இந்த ரெண்டு முடிவுக்கும் என்னை நானே கன்கிராஜூலேட் பண்ணிக்கிட்டேன். சில முடிவுகள் தவறாகவும் ஆயிருக்கு. அதற்கும் நான்தான் காரணம். அதற்காக வருத்தப்பட்டது கிடையாது. அது அனுபவம்தான்.

  இப்போது தயாரித்து வரும் படங்களைப் பற்றி கூற முடியுமா?

  இப்போது ரெண்டு படம் தயாரிப்புல இருக்குது. ஒண்ணு ‘கிருஷ்ணலீலை'. இது ஜீவன் நடிக்கிற படம். கண்டிப்பா ஹிட் ஆகும்னு நம்புறேன். பட்ஜெட்டுக்கு மேல செலவு பண்ணி எடுக்கிறோம்.

  இன்னொன்னு ‘நூற்றுக்கு நூறு' படம். செல்வா டைரக்ட் பண்றார். முன்னாடி அப்பா பண்ணுன சப்ஜெக்ட். அதை இப்போ இருக்கிற ஸ்டைலுக்கு பண்றார். அதுல விநய் ஹீரோவா நடிக்கிறார்.

  சின்னத்திரையில் உங்கள் பங்கு என்ன?

  சின்னத்திரையை பொருத்தவரை நாங்க மின்பிம்பங்கள் நிறுவனத்தின் மூலமா நிறைய நல்ல சீரியல்கள் பண்ணியிருக்கோம். இப்போ கவிதாலயா பேனர்லயே கடந்த ஒரு வருஷமா கலைஞர் டிவியிலேயும், ஜெயா டிவியிலேயும் புரோகிராம் பண்ணியிருக்கோம். அது முடிஞ்சிப்போச்சு. இப்போ ஜீ தமிழ் சேனல்ல ‘சொல்லத்தான் நினைக்கிறேன்' சீரியல் பண்றோம். இது டிபிக்கல் கே.பி.ஸ்டைல் தொடர்.

  சஹானா தொடர்ல நடித்த காவ்யா இதுல மகளா நடிக்கிறாள். ரொம்ப வருஷம் கழித்து திரும்பி வந்து நடிக்கிறாள். ரவிராகவேந்தர் தந்தையா நடிக்கிறார். யுவராணி ஒரு முக்கிய பாத்திரத்துல நடிக்கிறாங்க. தேவதர்ஷினி, பாத்திமா பாபு என சின்னத்திரை நட்சத்திர பட்டாளமே இருக்காங்க. இது இன்னொரு சீரியல் மாதிரியே இருக்காது. வேற மாதிரி புதுசா இருக்கும் பாம்பே சாணக்யா டைரக்ட் பண்ணியிருக்கார். அப்பா திரைக்கதை, தவமணி வசீகரன் வசனம் எழுதியிருக்கார். இந்தத் தொடர் இந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு ஏழு மணிக்கு டெலிகாஸ்ட் ஆகுது.

  உங்கள் குடும்பம் பற்றி?

  என்னோட குடும்பம் ரொம்ப சின்னதுதான். ஜனனின்னு ஒரே ஒரு பொண்ணு. பி.டெக். முடிச்சிட்டு எம்.பி.ஏ. படிக்கப் போறா. நல்ல இன்டலிஜென்ட் கேர்ள். ஆனால், சினிமாவுல இன்னும் இன்வால்வு ஆகல. பியூச்சர்ல வரலாம். என் கணவர் கந்தசாமி இந்த நிறுவனத்துல எக்ஸிகியூட்டி டைரக்டரா இருக்கார். பேமிலியா இந்த கம்பெனியை எவ்வளவு தூரம் எடுத்துக்கிட்டு போக முடியுமோ போயிகிட்டு இருக்கோம். மக்களை நம்புறோம். அவர்களின் ரசனையை நம்புறோம்.

 8. #127
  Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
  Join Date
  Jan 2005
  Posts
  1,598
  Post Thanks / Like
  Abhishek turns director

  Television actor-cum-anchor Abhishek, who has made a mark with his performance in the serial Kolangal, debuts as a film director. He will direct Kadhai, which has a unique fusion song featuring singers such as the legendary Balamuralikrishna, Malgudi Subha, Chinna Ponnu and Muqtiar Ali. They will be seen performing on stage. The song was shot using five cameras and is supposed to have the feel of a live performance. The music is by Paul Jacobs, a long-time associate of A. R. Rahman.


  Another scorcher

  She is young and hot. She hails from Andhra Pradesh and has created ripples with her looks in the to-be-released Baana. Samantha played the lead role in cinematographer Ravi Varman's directorial debut Moscow in Cauvery. She plays a NIFT student, a first-of-its-kind role in Tamil cinema, in Baana, which is a realistic romantic film. The film's highlight is supposed to be its climax. Let's hope it isn't another run-of-the-mill love story.

  http://www.hindu.com/cp/2009/03/27/s...2750220900.htm

 9. #128
  Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
  Join Date
  Jan 2005
  Posts
  1,598
  Post Thanks / Like
  கணவருக்காக...!
  பின்னணிப் பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவரு
  மான கிரிஷ், திருமணத்துக்கு முன் "டில்லி' என்ற படத்
  தில் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் சில
  காரணங்களால் படம் கைவிடப்பட்டது. தற்போது
  "டில்லி' பட வேலைகளை மீண்டும் தொடங்க முயற்சி
  செய்து வரும் சங்கீதா, தனது கணவருக்காக பட வாய்ப்பு
  களைத் தேடி வருகிறார். கணவரை வைத்து சொந்தப்
  படம் தயாரிப்பீர்களா என்று கேட்டால்...
  ""நல்ல கதை, தயாரிப்பாளர், இயக்குநர் அமைந்தால்
  மட்டுமே கிரிஷ் நடிப்பார். மற்றபடி அவரை வைத்து
  சொந்தப் படம் எடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள்
  இல்லை'' என்கிறார்.
  கற்றது விளம்பரம்.. பெற்றது சினிமா!

  http://www.dinamani.com/Kadhir/2932009/18.pdf

 10. #129
  Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
  Join Date
  Jan 2005
  Posts
  1,598
  Post Thanks / Like
  சீரியல் தயாரிக்கிறார் தேவயானி. இன்னும் கணவர் நடித்த திரைப்படம் முடியாததால், இந்த சீரியல் லாபத்தினால் படத்தை வெளிக்கொண்டு வர ஐடியா. ( இதற்கும் ஆல் த பெஸ்ட்)

 11. #130
  Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
  Join Date
  Jan 2005
  Posts
  1,598
  Post Thanks / Like
  1. கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் சங்கவி, ஒரு புது கண்டிஷன் போட்டிருக்கிறார். தொடந்து அழுகை காட்சிகள் இருக்க வேண்டாம் என்பதுதான் அந்த கண்டிஷன் . தினமும் கிளிசரின் போட்டு கண்கள் பாழாவதால், கிளிசரின் போட்டு கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம் சங்கவி.(அழ மறுக்கிற எஅடிகையா?)

  2. ஒரு திரைபடத்தை இயக்குறார் சின்னத்திரை சேத்தன்.
  இயக்குநர் வேலையில் பிஸியாக இருப்பதான் சீரியல் நடிப்பிர்கு ஒரு குட்டி ப்ரேக். (தேவதர்ஷினி அதுல நடிப்பாங்களா)

Page 13 of 63 FirstFirst ... 3111213141523 ... LastLast

Similar Threads

 1. Musicians,events,anecdotes and tid-bits
  By rajraj in forum Indian Classical Music
  Replies: 223
  Last Post: 16th November 2020, 09:33 AM
 2. IR music bits as ringtone (mp3)
  By dochu in forum Ilaiyaraja (IR) Albums
  Replies: 8
  Last Post: 17th June 2009, 03:05 PM
 3. Tid Bits Memories of Yesteryears
  By R.Latha in forum Memories of Yesteryears
  Replies: 0
  Last Post: 24th April 2009, 01:18 PM
 4. Tit Bits
  By R.Latha in forum TV,TV Serials and Radio
  Replies: 5
  Last Post: 1st March 2009, 12:13 AM
 5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
  By Oldposts in forum Tamil Literature
  Replies: 62
  Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •