Page 16 of 150 FirstFirst ... 614151617182666116 ... LastLast
Results 151 to 160 of 1491

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5

  1. #151
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    இவர்கள்....
    கள்ளுக்கும் பாலுக்கும் பேதம் தெரியா பேதைகள்
    சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லா மமதைகள்!
    இனிக்கும் தேனையும் கடிக்கும் தேளையும்
    இனம் பிரிக்க தெரியா அறிவிலிகள்!
    ஆனாலும் சொல்கிறேன்!
    கதிரவன் உதிப்பது யார் கட்டளைபடியும் அல்ல
    தென்றல் வீசுவது யார் ஏவலுக்காகவும் அல்ல
    கடல் அலைகள் ஆர்ப்பரிப்பது யார் உத்தரவுக்காகவும் அல்ல
    வான மழை பொழிவது யார் ஆதரவாலும் அல்ல
    அதுபோல்...
    யார் கட்டளைக்கும் எதிர்நோக்கா கதிரவன் எஙகள் சிவாஜி
    யார் ஏவலுக்கும் காத்திராத தென்றல் எங்கள் சிவாஜி
    யார் உத்தரவுக்கும் எதிர்ப்பாரா கடலலை எங்கள் சிவாஜி
    யார் ஆதரவையும் எதிர்ப்பாராது பொழியும் வான்மழை
    எஙகள் சிவாஜி

    மக்களுக்கு செய்கின்ற கடமை தான் இவருக்கு
    பிரதானமே தவிர மக்களுக்குள் இருக்கின்ற மடமை பற்றி
    இவர் கவலைப்பட தேவையில்லை
    அதனால்தான்
    உலகளவு கிடைத்தாலும் மயங்காது - அதுவே
    கையளவு ஆனாலும் கலங்காத நெஞ்சனாய்
    அரசியலில்
    அரிச்சுவடி கூடத்தான் படிக்க தேவையில்லை
    பெருந்தலைவரின் அடிச்சுவடியே தனக்கு போதுமென
    சாக்கடை நாற்றமெடுத்த இந்நாள் அரசியலில்
    பூக்கடையாய் மணம் கமழ்கிறார்!

    இந்த பூக்கடையை ஒதுக்குவதில்,புலனாவது
    அவரவர் அறியாமையே தவிர
    எமக்கு எந்த நஷ்டமும் இல்லை
    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்......!
    எதிர்கால சரித்திரம் இவர்களை தூற்றும்!
    அன்றாவது என் இனம் விழித்தெழுமோ?


    பின்குறிப்பு:
    1989 தேர்தலில் சிவாஜிக்கு கிடைத்த தோல்விக்குப்பின் துவன்டு போயிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட
    துன்டுபிரசுரம்
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #152
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Nov,
    A different preamble to the film Anbe-Aaruyire. Very good review. Thanks for your further clarifications on the statement "Sattanathan's wife Meenatchi (Gandhimathi) and Ramasamy's wife Janaki (Sukumari) are sisters. Saravanan (Sivaji) is Sattanathan's only son while Devi (Manjula) is Ramasamy's only daughter. " Please continue giving review on films like this.

  4. #153
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    NOV, thanks for the clarification. Enge tamil kalacharathai 1974-leye thookki pottu udaichuttangalonu bayandhutten - ippo I'm relieved - Tamil kalacharam, nee, indhiya kalacaharam has been kappathufied by the director, indeed

  5. #154
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Sort of lull here. Sorry, due to unavoidable circumstances, couldn't contribute much for the past one month or so. Would try to start as early as possible.

    NOV, Plum, Rakesh - continue guessing. Would come out soon.

    Regards

  6. #155
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    MURALI SIR,
    Happy to see u here after a long gap.BTW,in the current issue of THE WEEK magazine they have selected the most powerful performances of the century in indian cinema.It includes hindi films like awaara,devdas(dilipkumar),mother india,sholay,deewar etc,
    a malayaalam film starring sheela and one tamil film that is.........
    NADIGAR THILAGAM's VEERAPANDIYA KATTABOMMAN
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  7. #156
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    Sort of lull here. Sorry, due to unavoidable circumstances, couldn't contribute much for the past one month or so. Would try to start as early as possible.

    NOV, Plum, Rakesh - continue guessing. Would come out soon.

    Regards
    Your posts are missed, Murali-sar. But of course, we understand your situation perfectly well.

    As for the movie we are trying to guess, and iIf I may paraphrase Gounder/Senthil:

    Adadadadada....suspens, suspens oreey suspensappa.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  8. #157
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619
    MURALI SIR,
    Happy to see u here after a long gap.BTW,in the current issue of THE WEEK magazine they have selected the most powerful performances of the century in indian cinema.It includes hindi films like awaara,devdas(dilipkumar),mother india,sholay,deewar etc,
    a malayaalam film starring sheela and one tamil film that is.........
    NADIGAR THILAGAM's VEERAPANDIYA KATTABOMMAN
    Harish,

    Thanks for this information. Do you have the link for this article? I don't find it online. No wonder The Week has picked V.Kattabomman as one of the finest and most powerful performance in Indian cinema. However, i wonder why the magazine missed other NT classics such as Thillana Mohanambal.

    Regards

  9. #158
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    DEAR TACIMEMA,
    I don't have the link.Regarding Thillaana moganaambaal,i think NT had underplayed the role(or is it called natural acting ? )
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  10. #159
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Dance Genius V.P. Dhananjayan on Nadigar Thilagam

    இரா. மகாதேவன் எழுதிய, செவாலியே சிவாஜிக்கு ஆஸ்காரும் வரும்
    என்ற நூலிற்கு நாட்டிய மேதை திரு. வி.பி. தனஞ்ஜெயன் அளித்துள்ள அணிந்துரையிலிருந்து-

    பாரத கலைகளுக்கெல்லாம் அடிப்படையாய்த் திகழ்வது "நாட்டிய சாஸ்திரம்".

    இந்த நாட்டிய சாஸ்திரத்தின் ஒரு முக்கிய பிரிவு பரத நாட்டியக் கலை!

    இந்த பரதக் கலையின் உயிர் மூச்சாய்த் திகழ்வது "அபிநயம்". பரதத்தின் அடிப்படையான, ஆதாரமான கலைநுட்பமாகத் திகழ்வது இந்த அபிநயம் தான். இதனையே பரதத்தின் உயிரோட்டம் என்றும் வர்ணிக்கலாம்.

    பரதக்கலைக்குத் தங்களைப் பூரணமாய் அர்ப்பணித்துக் கொண்டுள்ள முழுநேர பரத நாட்டியக் கலைஞர்களுக்கே பரிபூரணமாய் வந்து கை கூடாத இறையருள் வித்தை இந்த அபிநயக் கலை!கதகளியில் நிகரற்றக் கலைஞராய் திகழ்ந்த கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஒருவர் மட்டுமே இந்த அபிநயக் கலையில் பூரண சித்தி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி பரதக் கலைஞர்களுக்கே நிறைவாய்க் கை வராத இந்த அபிநயக் கலை, திரையுலகில் நடிகர் ஒருவரிடம் பரிபூரணமாய்க் குடி கொண்டிருக்கிறதென்றால் அது நடிகர் திலகம் சிவாஜியிடம் தான்!

    உலக அளவில் இது வரை தோன்றியுள்ள நடிகர்களில் சிவாஜி ஒருவரிடம் தான் இந்த அபிநயக் கலை இத்தனை அற்புதமாய்க் கொலு வீற்றிருக்கிறது!

    முகத்தில் ஆயிரம் வகையான பாவங்களைக் காட்டுவது, விழிகளாலேயே ஓராயிரம் அர்த்தங்களை உணர்த்துவது, உடல் முழுவதும் பல நூறு அபிநயங்களை அங்கங்கள் சித்தரித்துக் காட்டுவது - இவையனைத்தும் சிவாஜி என்னும் நடிப்பு சமுத்திரத்தில் இன்று வரை நாம் கண்டு வந்திருக்கிற, ரசித்து வியந்திருக்கிற நிஜங்களாகும்!

    சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு ... "ஸாகரம் ... ஸாகரோபமம்" என்பார்கள். அதாவது சமுத்திரத்தை சமுத்திரத்தோடு தான் ஒப்பிட வேண்டும் என்பது இதன் பொருள்.

    நடிப்புக் கலையில் சிவாஜி ஒரு சமுத்திரம். உலகம் முழுவதும் இன்று வரை வந்துள்ள நடிகர்களில் சிவாஜி ஒருவரே நடிப்பில் சமுத்திரம்! இந்தச் சமுத்திரத்தின் முன் பிற நடிகர்கள் எல்லோருமே சாதாரண நதிகள் தான்! ஆலிவுட் நடிகர்களுமே அப்படித்தான்.

    நதிகளை சமுத்திரத்திற்கு இணையாகப் பேச முடியாது!

    ஆலிவுட் நடிகர்களில் ரெக்ஸ் ஹேரிசன், சிவாஜியைப் போல், முகத்தில் பல்வேறு பாவங்களைக் காட்டக் கூடிய நடிகர். ஆனால் அவரும் சிவாஜி என்னும் நடிப்புச் சமுத்திரம் முன் சாதாரண நதிதான் ...

    எந்த வேடமேற்றாலும் அதனை மிகமிக நுணுக்கமாக, மிகமிக ஆழமாக, எந்தவொரு சிறு குணாம்சத்தையும் விட்டுவிடாமல், நிறைவாகச் செய்ய முடிந்தவர் உலகம் முழுமையிலும் சிவாஜிதான் ... IN THIS HE STANDS OUT FROM OTHERS ... இந்தத் தனித்திறமை சிவாஜி ஒருவருக்கே சொந்தம்.

    "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் சிவாஜி நாதஸ்வரம் இசைப்பார். வாசிக்கிற இசையின் சுரங்களுக்கு ஏற்ப அவரது கை விரல்கள், கச்சிதமாக களி நர்த்தனம் ஆடும். எந்த சுரத்துக்கு, எந்த விரல்களை இயக்க வேண்டும் என்பதை அற்புதமாகச் செய்து காட்டிய இசை ஞானம் அந்த வாசிப்பில் பளிச்சிட்டது.

    சிவாஜி போல் உலக மகா கலைஞன் நடிப்பில் யாருமே இல்லை. அவர் அவர்தான். HE IS HIMSELF ... ... A VERSATILE. GENIUS...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #160
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    tac,

    Welcome. Still busy with the project? Hope the X'mas holidays will make you to visit hub often.

    Rakesh & Senthil,

    Thanks. I should find time for this thread. Will do.

    ராகவேந்தர் சார்,

    நன்றி. அருமையான இந்த அணிந்துரையை இங்கே வழங்கியதற்கு. நடனக் கலையில் வல்லவர்களான தனஞ்செயன், பத்மா சுப்ரமணியன் போன்றவர்கள் நடிகர் திலகத்தை பற்றி, அவரது முகப்பாவங்களை பற்றி சொல்லியிருப்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் வெளியிடுங்கள்.

    Regards

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •