Page 45 of 277 FirstFirst ... 3543444546475595145 ... LastLast
Results 441 to 450 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #441
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பாசமும் பந்தமுமே கசக்குமையா பிசாசு Part 4 பந்தபாசம்
    சந்தேகப் பிசாசு
    மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல ஒரு நியாயப் பிசாசு. ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளி வாய் மாயப்பிசாசு!!


    திரையில் தோன்றிய அனைவருமே உச்ச நட்சத்திரங்களாக மின்ன இயலாது புகழின் போதைக்கு ஆளாகும் போது போட்டி பொறாமைகள் சகஜமே ஆனாலும் நடிகர்திலகமும் காதல் மன்னரும் இந்த விஷயத்தில் ஒரு நல்ல புரிதலுடன் பொறாமையின்றி போட்டியை நடிப்பிலே காட்டி படங்களின் தரத்தை உயர்த்தி மாபெரும் வெற்றிகளைத் தந்து ஏனைய நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக பெண்ணின் பெருமையில் ஆரம்பித்து நாம் பிறந்த மண் வரை தங்களது நட்புக்கோட்டையை எந்த சந்தேகப் பிசாசுக்கும் இடம் கொடுக்காமல் கட்டிக் காத்தார்கள்


    பந்தபாசம் திரைப்படத்தில் அண்ணன் சிவாஜி தன்னுடைய அலுவலகத்துக்கு வந்து தான் வெளியே சென்று வந்த சின்ன இடைவெளியில் தனது அலமாரியில் வைத்திருந்த பணத்தை திருடி விட்டாரோ (எடுத்தவர் சந்திரபாபு)என்ற சந்தேகப் பிசாசு ஜெமினியை ஆட்கொண்ட வேளையில் இப்பாடலில் இரு திரைவேந்தர்களின் போட்டி நடிப்பையும் கண்டு மகிழ்வோமே

    சந்தேக பிசாசு சகோதர பாசத்தின் மகிழ்ச்சியையும் தின்றுவிடுகிறதே!!

    Last edited by sivajisenthil; 10th January 2015 at 03:51 PM.

  2. Likes Russellmai, Russellhaj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #442
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Flashback Ecstasy 1 இனிக்கும் நினைவசை 1

    Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!

    கணவனே கண்கண்ட தெய்வம் (1955) திரைப்படத்தில் ஜெமினியின் கச்சிதமான ராஜகுமாரன் தோற்றமும் லலிதாவின் கிறங்கடிக்கும் நாகதேவதை பாடல்காட்சியும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளும் நினைவசைகளில் என்றும் இனிமையே





    நடிகர்திலகமும் வியக்கும் வண்ணம் குரூபியான கூனல் கோலத்தில் தனது நடிப்பு முத்திரையை பதித்தார் இயற்கையான அழகும் இனிமையான இளமையும் நிறைந்த காதல் மன்னர்!!!

    Last edited by sivajisenthil; 11th January 2015 at 03:14 PM.

  5. Likes Russellmai liked this post
  6. #443
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Flashback Ecstasy 2 இனிக்கும் நினைவசை 2 மிஸ்ஸியம்மா (1954)

    Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!


    தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த நகைச்சுவை காவியங்களில் முன்னோடி மிஸ்ஸியம்மா (1954) கணவன் மனைவியாக நடிக்க வேண்டிய சூழ்நிலை சங்கடங்களுடன் சாவித்திரியையும் இரண்டும் கெட்டானாக குழப்பித் தள்ளும் ஜமுனாவையும் காதல் மன்னர் எப்படி சமாளிக்கிறார் என்பதே இந்த நினைவசை தரும் இனிமை


    நினைவசை 2 மிஸ்ஸியம்மா இனிமை 1

    வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான் ...கலாய்க்கிறார் காதல்மன்னர் அக்காலகட்டநகைச்சுவை மன்னருடன்.




    நினைவசை 2 மிஸ்ஸியம்மா / இனிமை 2

    தன் காதலுக்கு வெண்ணிலாவையே உதவிக்கு அழைக்கிறாரே காதலில் நிலவின் குளிர்ச்சியை தமிழ்த் திரைக்குத் தந்தவர்!


    நினைவசை 2 மிஸ்ஸியம்மா / இனிமை 3


    இரண்டுங்கெட்டான் ஜமுனாவை ஓரங்கட்டுகிறார் காதல் வீரர் !!
    Last edited by sivajisenthil; 11th January 2015 at 11:01 PM.

  7. Likes Russellmai liked this post
  8. #444
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Flashback Ecstasy 3 இனிக்கும் நினைவசை 3 வஞ்சிக்கோட்டை வாலிபன்(1958)

    Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!



    வஞ்சிக்கோட்டை வாலிபன்(1958) ஜெமினியின் பிரம்மாண்ட் மகுடம் ஜெமினி கணேசனுக்கு மைல்கல் திரைப்படம் காதல் மட்டுமல்ல நடிப்பின் பரிமாணங்களையும் வீரதீரத்தையும் தன்னாலும் சிறப்பாக வெளிக்கொணர முடியும் என்று நிரூபித்த தமிழ்த் திரையுலகின் மிக முக்கிய வரிசைப் படங்களில் ஒன்று.


    நினைவசைகளில் என்றும் நீங்காத பாடல்கள், பத்மினி வைஜயந்தியின் அமரத்துவம் பெற்ற ஆடல் போட்டி, காதல் மன்னரின் எழில் தோற்றம், வீரப்பாவின் வசன பஞ்ச்கள் .....இனிமையே


    நினைவசை 3 / இனிமை 1


    எங்கே உன் காமரூப தேசத்துக் கட்டழகி ? ......... சபாஷ்.......சரியான போட்டி.......வெளுத்துக் கட்டும் வீரப்பாவின் வில்லத்தனம்......பத்மினி வைஜயந்தியின்
    வாழ்நாள் சாதனைப் போட்டி நடனம் .....காதல்மன்னரின் முத்திரை பதிக்கும் தர்மசங்கட முகபாவனைகள்....மூழ்கி முத்தெடுப்போமே!




    நினைவசை 3 / இனிமை 2


    நிச்சயம் சிக்ஸ் பேக் கிடையாது ஆனாலும் காதல்மன்ன்ர்தான் எத்தனை ஹேண்ட்சம் ராஜாமகனிடம் ரோஜாமலர் துவள்வது இயல்பே !!




    நினைவசை 3 / இனிமை 3
    காதல் மன்னருக்கு பாடல்களே இல்லாத அபூர்வ படம் பத்மினியுடன் ஓர் இதமான காதல் பாடல்!!

    Last edited by sivajisenthil; 11th January 2015 at 06:40 PM.

  9. Likes Russellmai liked this post
  10. #445
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Flashback Ecstasy 4 இனிக்கும் நினைவசை 4 மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)

    Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!


    மணாளனே மங்கையின் பாக்கியம் (1957) ஜெமினி கணேசன் larger than life எனப்படும் மந்திர தந்திரங்கள் மாயாஜாலங்கள் சாபங்கள் சாப விமோச்சனங்கள் அசரீரிகள் மந்திரவாதிகள் ராஜகுமாரர்கள் இளவரசிகள் ....நிறைந்த fantasy genre படங்களுக்கு பொருத்தமானவர் என்பதை மீண்டும் நிரூபித்த காவியம்.

    தயாரிப்பாளர் அஞ்சலிதேவிக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறார் காதல் மன்னர் !!


    மாயப் புல்லாங்குழல் ஊதி இந்திரசபையில் ஆடிக்கொண்டிருக்கும் ரம்பையை பூமிக்கு இழுத்து இந்திரனின் சாபத்துக்கு ஆளாக்குகிறார் ஜெமினி
    சாபவிமோசனம் அடையும்வரை இருவரும் படும் இன்னல்களுக்கு நடுவில் தேன் சிந்தும் பாடல்கள் நினைவசையின் இனிமையே!!!


    நினைவசை 4 / இனிமை1

    இன்றுவரை மவுசு இழக்காத மகோன்னதமான பாடல் காட்சி.. .....அழைக்காதே........



    நினைவசை 4 / இனிமை2

    ஜெமினி அஞ்சலி கெமிஸ்ட்ரி ......தேசுலாவுதே

    Last edited by sivajisenthil; 12th January 2015 at 01:46 PM.

  11. Likes Russellmai liked this post
  12. #446
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Flashback Ecstasy 5 இனிக்கும் நினைவசை 5 கொஞ்சும் சலங்கை (1962)

    Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!


    கொஞ்சும் சலங்கை (1962) வண்ணப்படம் ஜெமினி கணேசனை ஒரு நாதஸ்வர இசைக்கலைஞனாக நீள அகலப் பரிமாணத்தில் மட்டுமே காட்ட முடிந்தது. காருக்குருச்சி அருணாசலம் என்னும் நாதஸ்வர மேதையின் வாசிப்புக்கு தன்னால் இயன்ற அமைதியான நடிப்பை வழங்கியிருந்தார் ஜெமினி. பின்னர் வெளிவந்து உலகையே வசப்படுத்திய தில்லானா மோகனாம்பாளில் இதே நாதஸ்வர இசைக் கலைஞன் பாத்திரத்திற்கு ஆழப் பரிமாணத்தையும் சேர்த்து உயிர் கொடுத்து அசத்தியிருந்தார் நடிகர்திலகம் .எனினும் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த கொஞ்சும் சலங்கை தில்லானா மோகனாம்பாளுக்கு ஒருவகையில் முன்னோடியே .


    பாடு சாந்தா பாடு ....உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிடாதே......சிங்கார வேலனே தேவா என்னும் சாவித்திரிக்கு ஜானகியின் வாழ்நாள் முத்திரைப்பாடலுக்கு முன்னால் வரும் இவ்வரிகளோடு காருக்குறிச்சியின் நாதஸ்வர தேனிசையும் கலந்து இனிமையான நினைவசைகளுக்கு நாம் தயாராவோமே!!

    (தில்லானா மோகனாம்பாளில் சிவாஜி டெஸ்டெல்லாம் பண்ணாமல் எடுத்தவுடன் நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்து விடுவார். ஆனால் காதல்மன்னர் மைக் டெஸ்டிங் பாணியில் நாதஸ்வரத்திலிருந்து ஊதுபத்தையை வெளியே எடுத்து சின்னக்குழந்தை மாதிரி பீப்பீ என்று ஊதி சோதித்து விட்டே வாசிக்க ஆரம்பிப்பார் !!!)


    நினைவசை 5 கொஞ்சும் சலங்கை / இனிமை 1 சிங்கார வேலனே தேவா......!!




    Just for a comparison!! Popping up of Thillaanaa Mohanaambal is inevitable when we think of Konjum Salangai!!

    கொஞ்சும் சலங்கையின் இனிமை அன்னபூர்ணா லட்டு என்றால் தில்லானா மோகனாம்பாளின் இனிமை கிருஷ்ணா ஸ்வீட்சின் மைசூர்பா!!

    இரண்டு நாதஸ்வர ஆரம்ப வாசிப்புக் காட்சிகளிலும் தவில் கலைஞர் சாரங்கபாணியையும் (தவில் வாசிப்புக் காட்சியைத் திருடுபவர் என்னவோ பாலையாதான்!!) பக்க வாத்தியக்காரராக வரும் இன்னொரு கலைஞரையும் (பெயர் ஞாபகம் வரவில்லை Sakkarapaani?)நாம் காண இயலும் !! தில்லானாவில் ஜெமினி இல்லாத குறையை குட்டி ஜெமினி ராஜன் போக்கியிருப்பார்!!





    GG comes back as the scene and heart sweetener in VPKB with Padmini, with his PBS maiden song 'Inbam Pongum Vennilaa'
    Last edited by sivajisenthil; 12th January 2015 at 06:14 PM.

  13. Likes Russellmai liked this post
  14. #447
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap Filler தொடரை இரண்டுவிதமாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் கட்டடம் கட்டும்போது செங்கற்களுக்கு இடையே சிமெண்ட் கலவையால் கட்டடத்தின் உறுதி வேண்டி நிரப்புவது போல. இரண்டாவது நெடும் குறும் தொடர்களுக்கு இடையே to break the monotony சில சுவையான தகவல்களையோ இனிமையான பாடல்களையோ காட்சிகளையோ இடைநிரப்புதல் இரண்டுமே நாம் புகழ்பரப்பும் கலைஞரின் சாதனைகள் பற்றிய செய்திகளே அன்றி வெறுமனே பக்கங்களை நிரப்பும் உத்தி அல்ல

    சிலசமயங்களில் ஆளில்லாத தீவில் யாருக்காக தேநீர் ஆற்றுகிறேன் என்ற ஆயாசம் வரத்தான் செய்கிறது. திரியை கண்ணுறும் பார்வையாளர்கள், ஆக்கமும் ஊக்கமும் தரும் நண்பர்கள், சகபதிவர்கள் இருக்கும்வரையே என் பணி செவ்வனே தொடரும் சிவாஜி எம்ஜிஆர் போல ரசிகர்கூடம் இல்லாதிருக்கலாம். எனினும் திரையுலக மூவேந்தர்களில் ஒருவராகவே காதல் மன்னராக முடிசூட்டப்பட்டு நம்மை மகிழ்வித்தவர் ஜெமினி. அவரது திரைச் சாதனைகளும் குரிப்பிடத்தக்கவையே. அவரது புகழ் பரப்புவதும் அவர் பலபடங்களில் இணை ந்து பெருமைப்படுத்திய நடிகர்திலகத்தின் ஆத்மரசிகன் என்ற வகையில் எனக்கு மகிழ்வு தரும் பெருமையே ! If more hubbers can come in.... I feel elated!! Welcome friends for participation and interactions!!


    regards, senthil

  15. #448
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Flashback Ecstasy 6 இனிக்கும் நினைவசை 6 வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)

    Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!


    வீரபாண்டிய கட்டபொம்மன் நடிகர்திலகத்தின் பெருமை மகுடம் என்றாலும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி முக்கிய பாத்திரமான வெள்ளயத்தேவராக நடித்து படத்திற்கு இனிமை சேர்த்தார் காதல் மன்னர். வெள்ளையம்மாளாக வரும் பத்மினியுடன் அவர் தோன்றும் காதல் காட்சிகள் இதமானவை.
    AM Raja இடத்தை இப்படத்தின் இனிய பாடலான இன்பம் பொங்கும் வெண்ணிலா வாயிலாக தனதாக்கிக் கொண்டார் PB Sreenivas


    நினைவசை 6 / இனிமை 1

    Last edited by sivajisenthil; 12th January 2015 at 08:01 PM.

  16. Likes Russellmai liked this post
  17. #449
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Flashback Ecstasy 7 இனிக்கும் நினைவசை 7 கல்யாண பரிசு 1959

    Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!



    கல்யாண பரிசு 1959
    சிவாஜி என்று நினைத்தவுடன் பாசமலர் நமது நினைவில் Pop-up ஆவது போல ஜெமினிக்கு ஸ்ரீதரின் மேன்மையான இயக்கத்தில் விளைந்த மென்மையான காதலின் கல்யாண பரிசு.

    இந்தக்கால காதலின் whats app/upகளா(லா)ன செல்போன், பைக், Selfie.....எதுவில்லாமல் பயணத்திற்கு சைக்கிளையும், பேச்சுப் பரிவர்த்தனைக்கு டெலிபோனையும் நம்பியிருந்த காலகட்டத்தில் வளர்ந்த காதல்! sms வசதியின்மையால் சரோஜாதேவி கல்லூரிக்குப் புறப்படும்போது அம்மாவிடம்
    சத்தமாக ஜெமினிக்கு புரியும் சங்கேத பாஷையாக 'அம்மா....நான் காலேஜுக்கு போறேன்....போறேன்' என்று உணர்த்துவார். தன்னிடம் பல்சர் மாதிரி
    பைக்கெல்லாம் இல்லாததால் காதல் மன்னரும் சைக்கிளிலேயே வெக்கு வெக்கு என்று சரோஜாவை தொடர்ந்து கைக்கடிகாரத்தை ஸ்டைலாக நீட்டி
    ஏன் லேட்டு என்று கேட்பதாக 'வாடிக்கை மறந்ததும் ஏனோ'என்று சங்கேதமாக பாட்டை ஆரம்பித்து...காதலின் மேன்மையை வெளிப்படுத்தும் இப்பாடல் எக்காலத்திலும் நினைவசையில் இனிமையே!


    நினைவசை 7 இனிமை 1



    நினைவசை 7 இனிமை 2

    காதல் மன்னரின் மகத்தான நடிப்புடன் இப்படத்தை பொருத்தவரை நமது நினைவசைகளுக்கு இனிமை சேர்ப்பது தங்கவேலுவின் சாகாவரம் பெற்ற பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய மன்னார் கம்பெனி நகைச்சுவை காட்சிகளே !!



    நினைவசை 7 / இனிமை 3

    தீபாவளி பண்டிகைப் பாடகளில் என்றும் முதலிடம் ... 'உன்னைக்கண்டு நான் ஆட.....'

    Last edited by sivajisenthil; 12th January 2015 at 11:59 PM.

  18. Likes Russellmai liked this post
  19. #450
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Flashback Ecstasy 8 இனிக்கும் நினைவசை 8 தேன் நிலவு (1960)

    Gap filler Nostalgia to relax. Sit back and enjoy!!



    தேன் நிலவு (1960) ஜெமினியின் காதல் மன்னர் பட்டத்தை என்றும் அவரே என்று பட்டா போட்டுக் கொடுத்த நகைச்சுவைத் தேன் தடவிய காதல் பலாச்சுளை !
    அதிகம் அலட்டிக் கொள்ளாத ஆள் மாறாட்டக் கதையை ஸ்ரீதர் கையாண்ட விதம் கறுப்பு வெள்ளையிலும் கூட அழகு குன்றாமல் காண்பிக்கப் பட்ட காஷ்மீர் வெளிப்புறக் காட்சிகள் ஜெமினி வைஜயந்தியின் அசர வைக்கும் ஜோடிப் பொருத்தம் இளமை ததும்பும் இனிமை பொங்கும் பாடல்கள் குலுங்க வைக்கும் ஸ்ரீதர் பிராண்டு காமெடி விறுவிறுப்பான காட்சி நகர்வு .....என்றும் என்றும் பசுமையான மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் பொழுதுபோக்கு சித்திரம்!!

    நினைவசை 8 / இனிமை 1
    ஜெமினியை விட்டுப் பிரிக்க முடியாத ஏஎம் ராஜாவின் 'பாட்டுப் பாடவா.....பார்த்துப் பேசவா......




    நினைவசை 8 / இனிமை 2
    காதல் மன்னன் பட்டயம்......ஓஹோ எந்தன் பேபி!!


    Last edited by sivajisenthil; 13th January 2015 at 05:59 AM.

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •