Page 35 of 150 FirstFirst ... 2533343536374585135 ... LastLast
Results 341 to 350 of 1500

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6

  1. #341
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர் பம்மலார் அவர்கள் பிம்பங்களைப் பிரதியேற்றும் வரைக்கும் நாம் கண்டு மகிழ சில, கீழே காணும் இணைப்பில் -
    http://sivajiweek.blogspot.com/

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks senthilvel thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #342
    Member Junior Hubber
    Join Date
    Oct 2005
    Location
    Bahrain
    Posts
    74
    Post Thanks / Like
    பம்மலரின் புகைபட பதிவுகலை பார்த போது மனதில் தோன்ரியது-னம் இருபது சிவாஜி உகதில்-பாக் டு 1970

  5. #343
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் முரளி & ராகவேந்தர்....

    உங்கள் இருவரின் பதிவுகள் மூலம் நேற்றைய அலப்பரைகள் எந்த அளவுக்கு நடந்துள்ளன என்று தெரிகிறது. இப்படி ஒருநாளைக்குத்தானே ஏங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் நேற்றிரவே எனக்கு நேரடி ரிப்போர்ட் வந்து விட்டது. என் கணவரும் மகனும் மகாலட்சுமி திரையரங்கில் எங்கள் தங்க ராஜா அதிரடிக்காட்சியைப் பார்த்துவிட்டு வந்து நள்ளிரவு வரை அதைப்பற்றி என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். (இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்டில் பணிபுரியும் அவருக்கு நேற்று லீவு, அவனுக்கும் பள்ளி விடுமுறை. சென்ற ஆண்டு இருதய ஆபரேஷன் செய்துகொண்டதிலிருந்து நான் பொது நிகழ்ச்சிகள் எதற்கும் செல்வதில்லை). ஆனால் அவர்கள் சொல்லச்சொல்ல 'ஐயோ நானும் சிரமத்தைப்பார்க்காமல் மகாலட்சுமிக்குப் போயிருக்கலாமே' என்று தோன்றியது. படம் பலமுறை பார்த்ததுதான். முக்கியமாக கொண்டாட்டத்தைக் காணத்தான் சென்றிருந்தார். சமீபகாலத்தில் இப்படி ஒரு கூட்டத்தை அந்த திரையரங்கம் பார்த்ததில்லை என்று அருகில் கடை வைத்திருக்கும் ஒருவர் சொன்னாராம். புதிய படம் வெளியீடு போலவே இருந்தது என்றார். இன்னும் அங்கு நின்ற ஒருசிலர் ஏழுநாட்களும் ஏழு படங்களையும் மாலைக்காட்சி பார்க்கவிருப்பதாகச் சொன்னார்களாம்.

    முரளியண்ணா....
    "எதிரில் அடுக்குமாடிக்குடியிருப்பு இருக்கும் இடத்தில்தான் முன்பு சரஸ்வதி தியேட்டர் இருந்ததாகச் சொன்னார்கள்" என்ற உங்கள் வரிகளைப்படித்ததும் அதிர்ச்சியடைந்தேன். அப்படீன்னா சரஸ்வதியும் போச்சா?. உள்ளே நுழையும்போதே 'கைகொடுத்த தெய்வம்' படத்தின் 100-வது நாள் ஷீல்டு சிரித்துக்கொண்டே வரவேற்கும் சரஸ்வதி தியேட்டர் இப்போது இல்லையென்ற செய்தி மனதைப் பிசைகிறது.

  6. #344
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சிவாஜி நியூஸ்

    சென்னையில் இன்று திங்கட்கிழமை (29.3.2010 - பங்குனி உத்திரம்) நடைபெறுகின்ற நடிகர் திலகத்தின் நிகழ்ச்சி:

    தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (நான்காம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு திருவருட்செல்வர் திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #345
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்றைய மாலை மலர் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி-
    http://www.maalaimalar.com/2010/03/29133510/MGR.html

    ஹவுஸ்புல்” காட்சிகளாக கலக்கும் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள்; கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் திங்கட்கிழமை, மார்ச் 29, 1:35 PM IST
    சென்னை, மார்ச். 29-

    சென்னையில் புதுப்படங்களுக்கு இணையாக பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் வசூலில் கலக்குகின்றன.

    நாடோடி மன்னன் ஆல்பர்ட் தியேட்டரிலும், அடிமைப்பெண் பிருந்தா தியேட்டரிலும் பல வாரங்கள் ஓடின. ஓட்டேரி சரவணா தியேட்டரில் வாரத்துக்கு ஒரு படம் என தொடர்ந்து 15 வாரங்கள் எம்.ஜி.ஆர். படம் திரையிட்டனர். கோபி கிருஷ்ணா தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் படங்கள் திரையிடப்பட்டன. மோட்சம் தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன் படங்கள் டிஜிட்டல் முறையில் திரையிடப்பட்டன.

    தற்போது நடராஜா தியேட்டரில் தனிப்பிறவி படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அத்தியேட்டரில் ரசிகர்கள் ஆளுயர எம்.ஜி.ஆர். கட்-அவுட் வைத்து மாலை அணிவித்துள்ளனர். கொடி தோரணங்களும் கட்டி உள்ளனர்.

    இதற்கு போட்டியாக சிவாஜி ரசிகர்கள் சிவாஜி வாரம் என்ற பெயரில் பட்டாளம் மகாலட்சுமி தியேட்டரில் தினம் ஒரு சிவாஜி படம் திரையிட்டு விழா கொண்டாடி வருகின்றனர். கடந்த வெள்ளியில் இருந்து நேற்று வரை மன்னவன் வந்தானடி, கௌரவம், எங்க தங்கராஜா போன்ற படங்கள் திரையிடப்பட்டன. இன்று திருவருட் செல்வர் படம் காட்டப்பட்டது. நாளை பாரத விலாஸ் படமும் நாளை மறுநாள் (புதன் கிழமை) ராஜபார்ட் ரங்கதுரை படமும், 1-ந்தேதி சொர்க்கம் படமும் தினமும் 3 காட்சிகள் திரையிடப்படுகின்றன.

    இந்த தியேட்டருக்கு நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் நேரில் வந்து கௌரவம் படம் பார்த்தார். நேற்று சிவாஜி மகன் ராம்குமார், வசந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வந்து எங்க தங்கராஜா படம் பார்த்தார்கள். சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன், நிர்வாகிகள் எம்.ஏ. மஸ்தான், எம்.எல்.கான், சி.எஸ். குமார், மணவா ளன், நவீன், சூளை ராஜேந் திரன், ஏ. நாராயணன், எம். ஆதிமூலம், தணிகாசலம், பாப்பையா பாஸ்கரன், சில்க் இளங்கோ உள்பட ஏராளமான ரசிகர்கள் தினமும் படம் பார்க்கிறார்கள்.

    தியேட்டரில் 25 அடி உயர சிவாஜி கட்-அவுட் அமைத்து தினமும் பால் அபிஷேகம் நடக்கிறது. வாணவேடிக்கை, தீபாராதனையும் நடத்துகின்றனர்.

    தற்போது ரிலீசாகும் பல படங்கள் கூட்டம் இன்றி ஓரிரு நாளிலேயே தியேட்டரை விட்டு போய் விடுகின்றன. ஆனால் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் இப்போதும் லாபம் ஈட்டி தருகின்றன என்று தியேட்டர் அதிபர் ஒருவர் கூறினார்.
    http://www.maalaimalar.com/2010/03/29133510/MGR.html

    முதல் முறையாக ஒரு முன்னணிப் பத்திரிகை மனமுவந்து பெரிய மனது பண்ணி இருவர் படங்கள் என்று எழுதியதன் மூலம் நடிகர் திலகத்தின் சக்தியை உணர்ந்துள்ளது என்பதையே இச்செய்தி காட்டுகிறது. ஒரு தலைப் பட்சமாக எழுதுவது இனி குறைவதற்கான அறிகுறியே இச்செய்தி. இதற்கு முழுமுதற் காரணமான அனைத்து சிவாஜி ரசிகர்களும் தனிப்ப்ட்டமுறையிலும் மன்ற அமைப்பின் மூலமும் பாராட்ட்ப் படவேண்டியவர்களாவர். எந்த அரசியல் பின்புலம் இல்லை, எந்த விதமான பதவி பலமும் இல்லை, முழுக்க முழுக்க நடிகர் திலகம் என்கின்ற அப்பழுக்கற்ற அமரருக்கும் அவர்தம் ரசிகருக்கும் இடையே பின்னப் பட்டுள்ள பாசப் பிணைப்பின் வெளிப்பாடே இந்தச் செய்தி வெளிக்காட்டும் உண்மை, அது மட்டுமல்ல, எந்த அளவிற்கு இன்னும் நடிகர் திலகம் தமிழர் நெஞ்சில் கோலோச்சுகிறார் என்பதற்கு 28.03.10 மாலை மகாலட்சுமி திரையரங்கம் கண்ட காட்சியே சான்று.

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #346
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    என்ன முரளி,
    இந்த சென்னை ரசிகர்கள் மதுரை ரசிகர்களை முந்தி விடுவார்கள் போல் இருக்கே? என்ன எங்க ஊர்லே போட்டிருந்த மதுரை மாநகரம் கலைகட்டிருக்கும்.

    Any way, lucky chennai NT rasigargal!!

  9. #347
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள்

    நாங்கள் தியேட்டருக்குள் நுழைந்து மாடிக்கு சென்று இடம் தேடி இடம் கிடைத்து உட்காரும் போது கிட்டத்தட்ட நடிகர் திலகத்தின் intro வந்து விட்டது. எங்களின் பின் வரிசையில் அமர்ந்திருந்தவரை ராகவேந்தர் சார் அறிமுகப்படுத்தினார். நமது நண்பர் மோகனரங்கனின் பாதர் -இன்-லா என்று. அவரிடம் ஒரு ஹலோ சொல்லி விட்டு திரும்பினால் மேஜர், சிறுவன் ராஜாவிற்கு முயல் சிங்கத்தை ஜெயித்த கதையை சொல்லும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் வெளியே ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து மக்கள் கூட்டம் உள்ளே சாரி சாரியாக வந்து கொண்டிருந்தது. மேஜர் அடுப்பில் வைத்த கல்லில் சின்ன சப்பாத்தியை பெரிய சப்பாத்தியாக மாற்ற ஒயிட் அண்ட் ஒயிட்டில் கூப்பிய கரங்களுடன் தெய்வதை வணங்கும் நடிகர் திலகம். பேப்பர் பறக்க காதை அடைக்கும் கைதட்டல்கள். கிழே திரைக்கு அருகில் மீண்டும் சூடம் ஏற்றப்பட அரங்கு உரிமையாளர்களுக்கு ஒரே கிலி. மன்ற நிர்வாகிகள் சிலர் மேடையில் ஏறி உணர்ச்சி வசப்பட்டவர்களை அமைதிப்படுத்தினர்.

    இட்லி சுட்டு விற்கும் ஆயா நடிகர் திலகத்திடம் " உன் ராசியான கையாலே போனி பண்ணிடேலே வியாபாரம் அமோகமாக நடக்கும்" என்று சொல்லும் போது எழுந்தது வாழ்த்தொலி. மஞ்சுளா அண்ட் கோ கிண்டல் காட்சிகள், சாதாரண ஆளாக இருந்த மனோகர் பெரிய தொழிலதிபர் ஆக இருப்பதைக் காட்டுவது என சில காட்சிகள் போனது. பிறகு வந்தது "சாமியிலும் சாமியிது" பாடல். அந்த கணபதியோட வாரிசுதானே இந்த சாமி என்ற வரிகளுக்கு பலமான வரவேற்பு.

    பிரின்சிபால் ராஜாவை கூப்பிடுகிறார் [நாகேஷ் - பிரின்சிபாலுக்கு பாடத்திலே ஏதோ சந்தேகமாம்,அதான் ராஜாவை கூப்பிடுறார்] ராஜாவிற்கு ஸ்காலர்ஷிப் இனிமேல் இல்லை என்று சொல்லி விட அடுத்த காட்சியில் நடிகர்திலகம் வேதனையோடு மேஜரிடம் சொல்லுவார் குல்லா வைக்கப் பிறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக் கூடாது. உடனே மேஜர் நீ கிரீடத்திற்கே பிறந்தவன் ராஜா என்ற போது மறுமுறையும் அதிர்ந்தது தியேட்டர்.

    குப்பத்து மக்கள் எல்லோரும் சேர்ந்து பரிட்சைக்கு பணம் கட்ட பரீட்சை நடக்கிறது என்று காட்சிகள் வெகு வேகமாக நகர்ந்தன.[பின்னால் இருப்பவன் நாகேஷிடம் என்ன எழுதறே அதற்கு நாகேஷ் ஸ்ரீராமஜெயம் எழுதறேன். உடனே நண்பன் அதைக் கூட ஸ்ரீராமானுஜன்-னு தப்பா எழுதறே].

    அடுத்து நடிகர் திலகம் நடந்து வர காரிலிருந்து இறங்கும் மஞ்சுளா. தியேட்டரில் ஆரவாரம் அதிகமாகி மீண்டும் சிலர் திரை இருக்கும் மேடை நோக்கி போக, மஞ்சுளாவிடம் என்னை மறந்து விடு என்று சொல்லி நடிகர் திலகம் ஒரு நடை நடப்பார் - கிழே, மேலே திரைக்கு அருகே என எல்லா இடங்களிலும் கைதட்டல் ஒலி காதை கிழிக்க அமர்க்களமாக இருந்தது.

    அதன்பின் நடிகர் திலகம் ஆஸ்பத்திரி ஆரம்பித்து நடத்தும் காட்சிகள். மஞ்சுளா அங்கே வலிய வந்து பணி செய்வது என காட்சிகள் விரைந்தன. நாகேஷ் நடிகர் திலகத்தை வந்து பார்த்து, டா போட்டு பேசி விட ஆப்பக் கடை ஆயா நாகேஷை திட்டி விட "என்னப்பா உன் பேட்டையிலே உன்னைப் பற்றி பேசினா பென்டை கழட்டிடுவாங்க போலிருக்கு" என்று சொல்ல பேசித்தான் பாரேன் என்று நடிகர் திலகம் சொல்ல பேட்டையை வளைக்கிறியா என்று நாகேஷ் கேட்க முதலிலே பேட்டையை வளைப்போம் அப்புறம் என்று நடிகர் திலகம் இடைவெளி விட்டு நிறுத்த பின்னால் பெருந்தலைவர் படம் இருக்க எழுந்த ஆரவாரம் மீண்டும் 1973 -ஐ நினைவுக்கு கொண்டு வந்தது.

    அடுத்து மஞ்சுளா மனோகரின் மகள் என்பதை நடிகர் திலகம் தெரிந்துக் கொள்ளும் காட்சி. வசனங்கள் இல்லாமல் கண் சிவக்க உதடு துடிக்க நடிகர் திலகம் வெளிப்படுத்தும் காட்சி தன்னை அவமானப்படுத்தும் மனோகரிடம் ஒன்றும் சொல்லாமல் உங்க அப்பா நல்லவர்-னு சொன்னியே என்று மட்டும் சொல்லி விட்டு வெளியேறும் நடிகர் திலகம் - பெரும் ஆரவாரம். அது அந்த காட்சிக்கு மட்டுமல்ல அடுத்து வரும் காட்சிக்கும் சேர்த்துதான் என்பது புரிந்தது. மஞ்சுளாவிற்கு போன். சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் மஞ்சுளா. அங்கே அதை விட அதிக சந்தோஷத்தில் ரசிகர்கள். இப்போது மேடையில் கிட்டத்தட்ட 20 நபர்கள். அதில் நாலைந்து நபர்களின் கையில் தீபம். அது போதாதென்று உள்ளே மேளத்தை கொண்டு வந்து சிலர் அடித்து ஆட ஆரம்பிக்க அட்டகாசம் ஆரம்பமானது.

    நடிகர் திலகம் இந்த பாடலில் சில ஸ்டைல் சில நடை நடப்பார். கர்சீப்பை கையில் வைத்துக் கொண்டு ஒரு கால் மாற்றி ஒரு கால் வைத்து ஆடி வருவார், சரணத்தின் போது நேர் போஸிலும் சைடு போஸிலும் ராஜ நடை நடப்பார். காது கிழியும் டெசிபல் லெவல். கிழே தீபம் என்றால் மேலே பால்கனி கைப்பிடியில் சூடம் ஏற்றப்பட்டு அது அணையாமல் எரிந்துக் கொண்டிருப்பதற்காக சூடங்கள் நெருப்பில் சேர்த்துக் கொண்டே சிலர் நிற்க பார்வையாளர்கள் எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.

    ஒரு சில காட்சிகளுக்கு பின் தியேட்டரே எதிர்பார்த்துக் கொண்டிருந்த காட்சி. மோட்டார் பைக் காட்டப்பட்டு பட்டாக்கத்தி பைரவன் வாயில் சூயிங்கத்தை மென்றுக் கொண்டே திரையில் தோன்ற உள்ளேயே வெடித்தது பட்டாஸ். கிட்டத்தட்ட அனைவரும் எழுந்து நின்று பார்க்க வேண்டிய நிலைமை. காரணம் முன்னால் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று விட்டனர்.

    பைரவ அமர்க்களம் நாளை.

    அன்புடன்

  10. #348
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    நீங்கள் சொன்னது போல் இப்போதாவது நமது படங்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறதே. அப்போதும் கூட சில அள்ளி விட்ட செய்திகளை உள்படுத்தாமல் அவர்களுக்கு எழுத முடியவில்லை. சரி விடுங்கள்.

    tac,

    என்ன இருந்தாலும் நம்ம மதுரைக்கு ஈடாகுமா? நம்ம ரேஞ்சே தனி. இருந்தாலும் நேற்று சென்னை வாழ் ரசிகர்கள் தூள் கிளப்பி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

    அன்புடன்

  11. #349
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள்

    பைரவ அமர்க்களம் நாளை.

    அன்புடன்
    என்ன சார் இது........... படத்தோட ஆர்ப்பாட்டமே பட்டாகத்தி பைரவர் தானே? எத்தனை நடிகர்கள் வந்தாலும் என்றும் நான் தான் ஸ்டைல் சக்ரவர்த்தி என்று நிருபித்த INTRODUCTION ஆயிற்றே

    Waiting for aththiradi!!

  12. #350
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    The Sunday (28.3.2010) Evening Gala at Chennai Mahalakshmi - A Connoisseur's Delight

    Everyone's eyes should see the following link to have a real feel of the divine power of THE GOD OF ACTING:

    http://pammalar.webs.com/apps/photos...lbumid=8588985

    A Very Very Happy Viewing,
    Pammalar.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •