Page 37 of 150 FirstFirst ... 2735363738394787137 ... LastLast
Results 361 to 370 of 1500

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6

  1. #361
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள் II

    இந்த காட்சிக்கு சற்று முன்பாக குறிப்பாக சொல்லப் போனால் கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா பாடலின் போதே உள்ளே போலீஸ் வந்து விட்டது. அரங்க உரிமையாளர்கள் உள்ளே திரையரங்கிற்கு ரசிகர்களின் ஆர்வக் கோளாறினால் எதாவது ஊறு நேர்ந்து விடுமோ என எண்ணி அழைத்திருந்தனர். ஆனால் போலீஸ் இல்லை ராணுவமே வந்தாலும் ரசிகர்களை அடக்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

    போலீசுடன் ஒரு வாக்குவாதம் ஏற்பட மன்ற நிர்வாகிகள் தலையிட்டு பொறுப்பேற்றுக் கொள்ள போலீஸ் சற்று தள்ளி நின்று பார்க்க முற்பட்டனர். அந்த நேரம்தான் பைரவர் விஜயம். இந்தோ அலப்பறை முடிந்து அவர் மனோகரின் மாளிகையில் நுழைய அடுத்தக் கட்ட ரகளைக்கு தயாரானார்கள் ரசிகர்கள். நீ அழகிலே ராணின்னு பார்த்தாலே தெரியுது ஆனா ஆட்டத்தில் ராணின்னு சொன்னானே எங்கே பார்க்கலாம் என்று சொன்னவுடன் பின்னணி இசை வேகம் பிடிக்க முன்னை விட அதிக ஆட்கள் திரைக்கு அருகே இடம் பிடிக்க சூட தீபங்கள் ஏற்றப்பட முத்தங்கள் நூறு என பாடல் ஒலிக்க தியேட்டரே ஆட ஆரம்பித்தது. அதிலும் நடிகர் திலகம் கையில் நீள ரிப்பன் வைத்த பெண்கள் சுற்றிலும் நிற்க ஒரு பக்கம் சாய்ந்து முத்தங்கள் நூறு என்று ஆரம்பிக்கும் போது கேட்ட கைதட்டலை சொல்வதா, காலை சற்றே அகற்றி இன்று எனக்கு நாளை எவருக்கு என்ற போது எழுந்த ஆரவாரத்தை சொல்வதா, இரண்டாவது சரணத்தில், ஆளை அளந்து அவர் ஆட்டம் அளந்து வரும் கூட்டம் அளக்கும் புத்தி உண்டு என கையை காட்டுவாரே அப்போது நடந்த அலப்பரையை வர்ணிப்பதா அல்லது உச்சக்கட்டமாக இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் வல்லவனை எதிர்ப்பேன் ஜெயிப்பேன் என்ற வரிகளின் போது பாடல் சத்தத்தையும் மீறி ரசிகர்கள் போட்ட வாழ்த்தொலிகள் சவால்கள் இவற்றை சொல்வதா? சுருக்கமாக சொன்னால் ரணகளம்.

    இது முடிந்தவுடன் கனகா வீடு சௌகார் சந்திப்பு இடைவேளை. இடைவேளையில் ரசிகர்களின் நினைவலைகள். பலரும் தங்கள் பழைய நட்பை புதிப்பித்துக் கொள்ள ஒரே உற்சாக வெள்ளம். திடீரென்று நாளைய திரைப்படம் என்று சொல்லி திரையில் நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே என்று அப்பர் பாட ஆரம்பிக்க அனைவரும் ஒரே ஓட்டமாக உள்ளே ஓடினர். பாடல் முடிந்தவுடன் மீண்டும் பைரவன் காட்சி தொடர கற்பாம் மானமாம் பாடல். உடல் தெரியும் வண்ணம் அமைந்த ஷர்ட் பாண்ட் அணிந்துக் கொண்டு பாட இங்கே அமர்களத்திற்கு மேல் அமர்க்களம். அதிலும் தாய்மொழியாம் தாய் நாடாம் தாய்மை எனும் பண்பாம் என்ற வரிகளுக்கு உச்சகட்ட கைதட்டல். க்ளோஸ் அப் காட்சிகளிக்கு தீபமும் சூடமும் திரையை நோக்கியேஇருந்தன.

    அன்புடன்

    To be continued

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #362
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சிவாஜி நியூஸ்

    சென்னையில் இன்று புதன்கிழமை (31.3.2010) நடைபெறுகின்ற நடிகர் திலகத்தின் நிகழ்ச்சி:

    தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் (ஆறாம் நாள்) - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியம் - பிற்பகல் 2:30, மாலை 6:15, இரவு 9:45

    இன்றைய மேட்னி ஷோவைக் கண்டு களிக்க பாடகர் திலகம் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் வருகை புரிகிறார்.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #363
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் முரளியண்ணா....

    மகாலட்சுமி திரையரங்கில் ஞாயிறு மாலை நடந்தவற்றை அப்படியே (எழுத்துக்களால் நீங்களும், புகைப்படத்தொகுப்பால் பம்மலாரும்) கண்முன் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள். படிக்கும் அத்தனை பேரும் அன்றைய மகாலட்சுமி நிகழ்வுகளை அப்படியே கண்முன்னே காண்பார்கள் என்பது நிச்சயம். முத்தங்கள் நூறு பாடலின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ('மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள்... எங்கள் மன்னவர்க்கோ தினமும் திருநாள்'). தாஸாமக்கான் 'மகாலட்சுமி'யில் துவங்கிய இந்த திருவிழா சென்னை முழுதும் தொடர வேண்டும். தொடரும்.

    டியர் பம்மலார்...
    தினமும் ஒரு வி.ஐ.பி.வருகையால் மகாலட்சுமி அரங்கம் களைகட்டுகிறது. ராஜபார்ட் ரங்கதுரையில் டி.எம்.எஸ்.அண்ணாவின் பங்களிப்பு கொஞ்சமா?. அதை மீண்டும் மக்களோடு அமர்ந்து ரசிக்கப்போகிறார் என்பதே தித்திக்கும் செய்தி அல்லவா. 'சிவாஜி வாரம்' வசூல் விவரங்கள் அருமை. கலைப்புலி சேகரன் சொன்ன உண்மை மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.

  5. #364
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சகோதரி சாரதா,
    தங்கள் கூற்று முற்றிலும் உண்மை. முரளி சாரும் பம்மலாரும் மஹாலட்சுமி திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கண்முன் நிறுத்தி விட்டார்கள்.
    நிற்க. இத்திரிக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு பொருந்தக் கூடிய உண்மையை பெண்ணாகரம் இடைத்தேர்தல் காட்டியுள்ளதாகப் படுகிறது. மிகைப்படுத்தப்பட்ட செயற்கையான ஆதரவெல்லாம் அதே வேகத்தில் மறைந்து வருவதாகத் தோன்றுகிறது. மக்களின எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அரசைத் தான் மக்கள் விரும்புவர் என்பது புலனாகிறது. தனி மனித செல்வாக்கெல்லாம் ஒரு காலகட்டத்துக்கு மேல் நிலைக்காது, சாதனைகளே என்றைக்கும் நிற்கும் என்பதே இதன் பொருளாகத் தோன்றுகிறது.
    இந்த நேரத்தில் நம்முடைய தலைவரின் படங்கள் வீறு கொண்டெழுந்து வெற்றி பவனி வருவதற்கும் அவருடைய புகழும் செல்வாக்கும் சிரஞ்ஜீவியாய் இருப்பதற்கும் திருவருட்செல்வரின் பகல் காட்சி வசூலே சான்று. மற்ற படங்களை விடுவோம். இந்தப் படம் ஒரு வார நாளில் இவ்வளவு வசூல் செய்துள்ளதென்றால் அது நடிகர் திலகத்தின் செல்வாக்கையே காட்டுகிறது.
    1973 திரும்புகிறது என நான் எண்ணியது தவறில்லை என்றே தோன்றுகிறது, அனைத்து வகையிலும்.
    ஒரே ஒரு வித்தியாசம் நடிகர் திலகத்தின் சிரஞ்ஜீவியான வெற்றியையும் செல்வாக்கையும் காண பெருந்தலைவர் இல்லை என்பதே.
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #365
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Hello friends. Due to personal reasons I was not able to visit the hub for the past few days. Pammalar & Murali sir have done a great job. Thanks to both of you.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  7. #366
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    I feel glad & proud to share my experience here about NT FILMATHON @ Mahalakshmi theatre.


    At last, one of my long time wish has been fulfilled last Sunday. My God !!! what an event !! It’s about the screening of Engal Thanga Raja and the celebrations that took place on account of it. I went for the matinee and my F-I-L came along with his brother for the evening show. Raghavendra sir, Murali sir & Pammalar were obviously so happy to see the great proceedings.

    Actually, the theatre is located on a busy main road, congested with traffic. Since, it was a Sunday the traffic was limited and people were able to pull it off successfully. Policemen were deployed to regulate traffic and to control the crowd. The on lookers, people sitting inside the moving bus and the general public were astounded by the terrific celebrations.

    There were huge cut outs of NT in various avatars which was wonderfully captured by pammalar's camera and posted here. It was garlanded and rasigars climbed on top of it and did “ paalabishekam “. They burst crackers in front of the theatre and the loud speakers played songs from NT’s films to which the fans began to dance on the road itself. It was sheer fun.

    Raghavendra sir had bought a bunch of printed sheets which had details about the films that was screened in this NT FILMATHON and distributed it among the crowds.

    I also spotted Ms. Girija in the crowd. Actually, she came on Saturday also and was busy decorating the cinema hall with NT’s posters and placards which had rasigar mandram details written on it. On Sunday, she distributed free stationeries to kids who came to watch the film along with their parents.

    At about 5.30 pm Mr Ramkumar came to the theatre to cheer the fans and gave a brief speech. He was visibly surprised and glad to see the amazing and over whelming response. Later Mr. Vasanth Kumar also came along with Congress cadres and gave a speech.

    Altogether, it was a very very memorable day for me which I will cherish forever.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  8. #367
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Now, a small treat from Karnan.

    Have you heard the lion roaring? Well, watch Karnan if you have not and you will know that it is not for trivial reasons that Nadigar Thilagam is fondly called “ Simmakkuraloan “.

    Karnan’s father-in-law is a racist to the core. Karnan comes to this man’s palace to take back his wife but his F-I-L tease and humiliates Karnan by calling him “ Therotti Magan “. Knowingly or un-knowingly, Banthulu has done a good job here by conceiving this scene wherein he literally establishes what “ Simmakuraloan “ actually means.

    Now watch out for the genius……

    Unable to tolerate his F-I-L’s mocking accusations, a visibly humiliated and dejected Karnan, with shame, anger and helplessness, begins to leave the place controlling himself. This man follows him and continues to lash him out with venom in his words and pricks him once again about his race and starts to laugh at Karnan. He’s already had enough and now this criticizing laughter in intolerable.

    Karnan loses control and swiftly turns around and literally roars, not just once but thrice at his father in law. That’s it. No words, no arguments nothing. Just a thundering roar and that is enough to make the old man to shut his mouth. Not only his F-I-L, even the audience are stupefied by this sudden gesture.

    நடிப்பிலே கொடை வள்ளலாகத் திகழ்ந்தவர் நமது நடிகர் திலகம்.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  9. #368
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்றைய 31.03.2010 சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியை வசந்த் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் இனிய இன்ப அதிர்ச்சிக்கு நிச்சயம் உள்ளாகியிருப்பர். கடந்த ஞாயிறன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு ஒளிபரப்பானது. அன்று அங்கு நேரில் பார்க்க முடியவில்லையே என ஏங்கியோர், குறிப்பாக சகோதரி சாரதா அவர்கள், நிச்சயம் உள்ளம் குளிர்ந்திருப்பர். அரை மணி நேரம் நிகழ்ச்சியில் விளம்பரம் போக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒளிபரப்பினார்கள்.

    வசந்த் டிவிக்கு நமது உளமார்ந்த நன்றி.

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #369
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    எங்கள் தங்க ராஜா - தியேட்டர் நிகழ்வுகள் - III

    இதற்கு இடையே ஒரு சில காட்சிகளும் அவற்றுக்கு கிடைத்த வரவேற்பும் நினைவுக்கு வருகிறது. ரிக்சாகாரன் அந்தோனிக்கு உடல் நலம் சரியில்லை என்று டாக்டர் கிளம்பி போக தற்செயலாக உண்டியலின் மீது கை வைக்கும் நாகேஷ் அதை எடுக்க முற்பட்டு பெருந்தலைவரின் புகைப்படத்தை பார்த்ததும் உண்டியலை கிழே வைத்து விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்ளும் காட்சிக்கு 1973-ல் என்ன கைதட்டல் இருந்ததோ அதே அளவுக்கு இப்போதும் இருந்தது.

    நடிகர் திலகம் இந்தப் படத்தில் இளமை துள்ளளுடனும் முறுக்கேறிய துடிப்புடனும் இருப்பார். குறிப்பாக பைரவன் ரோலில். வீட்டுக்குளே ஓடும் கார் [இது அந்த காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது] அதில் தாவி ஏறுவார். அது போல் முத்தங்கள் நூறு பாடலின் முடிவில் தரையில் இருந்து பக்கவாட்டில் பறந்து படுக்கையில் போய் உட்காருவார் [கிட்டத்தட்ட stylish rolling high jumb போல இருக்கும்]. இவை இரண்டும் தியேட்டர் குலுங்கிய இடங்கள்.

    படத்தின் தொடர்ச்சிக்கு வருவோம். கனகா வீட்டை சீர்திருத்தி அங்கே இருப்பவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்கும் பைரவன்; சௌகாரை ராஜாவின் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் நாகேஷ், அங்கே மேஜரை சந்திக்கும் சௌகார் தன் தம்பி ராஜா எங்கே என்று கேட்க டாக்டர் ராஜாதான் உன் தம்பி என்று சொல்லி விட்டு இந்த காமராஜ் நகரே அவனை தவப்புதல்வனா கொண்டாடிட்டிருக்கு என்று சொல்லும் போது மீண்டும் பயங்கர கைதட்டல்.

    அது போல ராம்தாசோடு போடும் சண்டை. எப்போதும் முழுக்கை சட்டை அணிந்து வரும் பைரவன் அந்த காட்சியில் பிரவுன் நிற அரைக்கை சட்டை அணிந்து வரும் ஸ்டைல், அதற்கும் அந்த சண்டைக்கும் ஆரவாரம்.

    சௌகாருக்கும் டாக்டர் ராஜாவிற்கும் நடக்கும் உரையாடல்கள், அக்காவை தேடும் தம்பி, தம்பியிடம் உண்மையை மறைக்கும் அக்கா என காட்சிகள் போனது. இதற்கிடையில் மனோகரோடு கோபித்துக் கொண்டு சிவாஜியிடமே வந்து சேரும் மஞ்சுளா, ஏற்றுக் கொள்ள மறுக்கும் சிவாஜி, நம்பி வந்தவங்களை எங்க டாக்டர் ஒருபோதும் கைவிட மாட்டார் என்று அக்காவின் ஸ்தானத்தில் உள்ளே நுழைந்து குங்குமம் வைத்து விட சொல்லும் சௌகார். இது நடந்து கொண்டிருக்கும் போதே திரையை நோக்கி ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பிக்க சூட தீபங்கள் எல்லா இடங்களிலும் மீண்டும் ஏற்றப்பட பச்சை புல்வெளியில் நடிகர் திலகம் மஞ்சுளா ஓடி வர, பின்னணியில் மாமாவின் வழக்கமான ரிதம் தொடங்க இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை முழங்க திரைக்கு முன்னாலும் மேடையிலும், கிழே வரிசைகளுக்கு நடுவிலும் ஏன் பால்கனியிலும் கூட நடந்த ஆட்டங்களை வர்ணிக்க முடியாது, பார்த்துதான் ரசிக்க வேண்டும். நமது சுவாமி அவர்கள் பொருத்தமான தலைப்பு சூட்டியது போல் பங்குனியில் கார்த்திகை தீபங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். [ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம், சரணம் ஆரம்பித்த போது சாரதா அவர்களின் நினைவு வந்தது. காரணம் அவர் பல முறை கண்ணதாசனின் இந்த புறநானூறு பகர்த்தலை ரசித்து எழுதியிருக்கிறார்].

    பாடல் முடிவுக்கு வரவும் பெரும்பாலான ரசிகர்கள் கிளம்பி விட்டனர். இதை நான் எதிர்பார்த்தேன். ஏன் என்றால் பிறகு ராஜாவின் "மறைவும்" கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் என்ற பாடலும் வரும். பலருக்கும் அதை காணும் மனது இல்லை. நடிகர் திலகம் என்றும் நம்மிடையே வாழ்கிறார் என அழுத்தமான எண்ணம் அவர்களுக்கு இருப்பதே காரணம்.

    பிறகு கிளைமாக்ஸ். பைரவன் ராஜாவாக வெளிப்படும் போது. எஸ், டாக்டர் ராஜா என்று சொல்லுவார். அதுவரை முகத்தில் இருந்த கோபம், வார்த்தைகளில் இருந்த கடுமை அப்படியே விடை பெற்றுக் கொண்டு போய் விட முகத்தில் வரும் சாந்தம் கனிவு - ரசிகர்கள் காத்திருந்து கைதட்டுவார்கள். அன்றும் அப்படியே.

    படம் முடிந்தது. வெளியே வந்தோம். அப்படியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு மதுரை நியூசினிமா நினைவு வந்துக் கொண்டே இருந்தது. தவிரவும் 1973 ஜூலையில் வந்த மதுரை தினத்தந்தி விளம்பரத்தை வேறு சுவாமி அவர்கள் அங்கே ஒட்டி வைத்திருந்தார். அப்போது பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்.

    M-R என சொல்லப்படும் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் பெரிய படங்கள் அதிகபட்சமாக 5,6 பிரிண்ட்கள் வெளியிடப்படும். ஆனால் எங்கள் தங்க ராஜா படம்தான் முதன் முறையாக 9 பிரிண்ட்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. மதுரை, திண்டுக்கல், பழனி, விருதுநகர், காரைக்குடி,கம்பம், ராஜபாளையம். ராமநாதபுரம்.

    இந்த படம் வெளி வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் வந்த படத்திற்கு மதுரை விநியோகஸ்தர் ஒரு பத்திரிகை விளம்பரம் கொடுத்துக் கொண்டிருந்தார். 100 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்று. எங்கள் தங்க ராஜா வெளி வந்ததும் எங்கள் தங்க ராஜாவின் விநியோகஸ்தர் [Rm.S films] 101 நாட்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்று விளம்பரம் கொடுக்க ஆரம்பித்தார்.

    படம் வெளியான பிறகே பாடல் இசைத்தட்டு வெளிவந்தது. ஓபனிங் ஷோ படம் பார்க்கும் போதுதான் பாடல்களை முதன் முறையாக கேட்கிறோம். மாமா ஏமாற்றவில்லை.

    இப்படி பல செய்திகளை பேசி பகிர்ந்துக் கொண்ட பின் மனம் அந்த இன்பமான நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டிருக்க தியேட்டர் சுற்றுப்புறத்தை விட்டு விலகி வந்து வீடு நோக்கி திரும்பினோம்.

    அன்புடன்

  11. #370
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA
    இன்றைய 31.03.2010 சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சியை வசந்த் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் இனிய இன்ப அதிர்ச்சிக்கு நிச்சயம் உள்ளாகியிருப்பர். கடந்த ஞாயிறன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பு ஒளிபரப்பானது. அன்று அங்கு நேரில் பார்க்க முடியவில்லையே என ஏங்கியோர், குறிப்பாக சகோதரி சாரதா அவர்கள், நிச்சயம் உள்ளம் குளிர்ந்திருப்பர். அரை மணி நேரம் நிகழ்ச்சியில் விளம்பரம் போக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒளிபரப்பினார்கள். வசந்த் டிவிக்கு நமது உளமார்ந்த நன்றி.
    ராகவேந்திரன்
    டியர் ராகவேந்தர் அண்ணா...

    நீங்கள் சொலவ்து முற்றிலும் உண்மை. நான் சற்றும் எதிர்பார்க்கவில்ல்லை. நேற்றைய சிங்கத்தமிழன் சிவாஜி நிகழ்ச்சி துவங்கும் முன்பு 'இன்று யார் வி.ஐ.பி.யாக வந்து தன் அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளப்போகிறாரோ' என்று எண்ணத்தில் இருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக, நிகழ்ச்சி துவங்கியதும், நாதஸ்வர ஒலியுடன் காட்சிகள் காண்பிக்கப்பட மகிழ்ச்சியின் எல்லைக்குப்போனேன். இந்நிகழ்ச்சியை வசந்த தொலைக்காட்சியினர் படம்பிடித்தனர் என்று நீங்களும், முரளியண்ணாவும் சொன்னீர்கள். என்றைக்காவது சாவகாசமாகக் காட்டுவார்கள் என்று நினைத்திருந்தபோது, சூட்டோடு சூடாக இரண்டே நாட்களில் ஒளிபரப்பி திகைக்க வைத்தனர்.

    பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி, பட்டாசு வெடிக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் அருமையாகக் காண்பிக்கப்பட்டன. ச்கோதரர் ராம்குமார் அவர்களின் பேச்சு சுருக்கமாக இருந்தபோதிலும், ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார் என்பது அவர் முகத்தில் தெரிந்தது. சிறுவர்களுக்கு அவர் பரிசுப்பொருட்கள் வழங்குவதும் காண்பிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திரு வசந்தகுமார் அவர்களின் பேச்சு ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் மனதையும் அப்படியே பிரதிபலிப்பதாய் அமைந்திருந்தது. அதனால்தான் அவருடைய ஒவ்வொரு வரிக்கும் கைதட்டலும் ஆரவாரமும் எழுந்தது. சால்வையணிவித்து வரவேற்கப்பட்ட அவருக்கு இறுதியில் நினைவுக்கேடயமும் வழங்கப்பட்டது.

    டியர் முரளியண்ணா....

    ஞாயிறன்று நிகழ்வுகளை பகுதி பகுதியாக, வரி வரியாக விவரித்து எங்களை அப்படியே மகாலட்சுமி திரையரங்கின் நடு இருக்கையில் கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டீர்கள். வர்ணிப்புகள் அருமையிலும் அருமை. அவ்வளவு ஆர்ப்பாட்டத்துக்கிடையிலும், பாடல் வரிகளின்போது என் நினைவு வந்தது என்று நீங்கள் சொல்லியிருப்பது, நம் அனைவரின் இதயங்களும் நடிகதில்கத்தைப்பற்றி ஒரே அலைவரிசையில் துடித்துக் கொண்டிருப்பதற்கு எடுத்துக்காட்டு. உங்கள் அனைவரின் விவரிப்புகளும், பம்மலார் அளித்த புகைப்படத் தொகுப்புகளும் எனது 'யு.எஸ்.பி.ஃப்ளாஷ் மெமோரி'யில் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்டன. விழா பற்றிய உங்களின் வர்ணணைகளை கணிணியில் காண்பித்து என் கணவரிடம் 'பார்த்தீங்களா? நீங்களும்தான் போயிட்டு வந்தீங்க. இப்படி விவரமாகச்சொல்ல உங்களுக்கு தெரிந்ததா?' என்று கேட்க, அவர் ஒரே வரியில் சொன்ன பதில் 'எல்லோரும் முரளி சார் ஆகிவிட முடியுமா?'. (அவர் சொன்னது உண்மைதானே).

    டியர் மோகன் (ரங்கன்)....

    நீங்களும் உங்கள் பங்குக்கு, ஞாயிறு படவிழாவை அருமையாக விவரித்துள்ளீர்கள். நன்றி. குறிப்பாக சகோதரி கிரிஜா அவர்களின் பங்களிப்பைப் பற்றி.

    டியர் பம்மலார்....

    உங்களது புகைப்படத்தொகுப்பு அபாரம். சொர்க்கம் படத்தின் 100-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தை ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் புகைப்படத்தொகுப்பில் கிடைக்கப்பெற்றேன். பாரதவிலாஸ், ராஜபார்ட் ரங்கதுரைக்கான தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படியிருந்ததாம்?.

    மொத்தத்தில் இந்த வாரம், நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமி திரையரங்க நிர்வாகத்தினருக்கும் மறக்க முடியாத வாரமாக அமைந்துவிட்டது என்பதில் ஐயமில்லை.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •