Page 141 of 404 FirstFirst ... 4191131139140141142143151191241 ... LastLast
Results 1,401 to 1,410 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #1401
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    [QUOTE=parthasarathy;779974]
    அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

    தங்களுடைய பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

    தங்களின் "கருடா சௌக்கியமா" படத்தின் பதிவு அபாரம். குறிப்பாக, நடிகர் திலகத்தின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக கவனித்து, விவரித்து, அதகளப் படுத்தி விட்டீர்கள்.

    அத்துடன் நில்லாமல், "நீதி" படத்தின் மினி ஆய்வும் மிகச் சுவையாக இருந்தது. தங்களிடத்திலிருந்து மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்.

    நன்றியுடன்,

    இரா. பார்த்தசாரதி

    மேலும், போனில் அழைத்துப் பாராட்டிய திரு. சதீஷ் அவர்களுக்கும் மிக்க நன்றி.

    உங்கள் எல்லோருடைய அங்கீகாரமும் பாராட்டு மழையும், என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கிறது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1402
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Anjalpett520 PATTUPADNARU song a long mi ssng in tv relays, one of the rare songs like OH littleflower neelavanam. thanks mr raghavendran.
    expecting more collections of neelavanam, due for dec.
    kartik sir gving details of seventies nicely. sorgam was cresent moves release and engrundovandal a svaji release, my vague rememberance.
    manitharulmanickam a movie suddenly appeared in the scene without much adv and disappeared verysoon before not spoken in publc

  4. #1403
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே!

    1982-ஆம் ஆண்டு ஜூன் மாத 'ஜென்டில்மென்' ஆங்கில இதழ் நடிகர் திலகம் ராஜ்ய சபா எம்.பி ஆக பதவி ஏற்றுக்கொண்டதைப் பெருமைபடுத்தும் விதமாக அவர் புகழ் பாடும் அற்புதமான ஒரு கட்டுரையை வெளியிட்டது. 'Men and Matters' என்ற பகுதியில் இந்த சிறப்பான கட்டுரை இடம் பெற்றுள்ளது. நடிகர் திலகத்தின் அரசியல் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட துறைகளைப் பற்றி அவரே தெரிவிக்கும் அற்புதமான விஷயங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. சென்சார் சம்பந்தப் பட்ட விஷயங்கள், சினிமாத் துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகள், இப்படி பல்வேறு கருத்துக்களை அழகாகவும், சுருக்கமாகவும் பேட்டியில் கொடுத்திருக்கிறார் நடிகர் திலகம். புகழ் பெற்ற நடிகர்கள் நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையை சிலாகித்துப் பாராட்டியுள்ள விதம் நம்மையெல்லாம் மிகவும் பெருமைப் பட வைக்கிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் திலகத்தின் அன்புப் புதல்வர் திரு.ராம்குமார் தன் தந்தையைப் பற்றி பலவிஷயங்கள் தெரிவித்திருப்பது இக்கட்டுரைக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. அரிய அற்புதமான போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய இந்தக் கட்டுரையை இப்போது படித்து மகிழலாம்.




    பக்கம் 1



    பக்கம் 2



    பக்கம் 3



    பக்கம் 4



    பக்கம் 5



    பக்கம் 6





    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 9th December 2011 at 09:56 AM.

  5. #1404
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    காணக்கிடைக்காத 'ஜென்டில்மேன்' ஆங்கில இதழில் நடிகர்திலகத்தின் சிறப்பு ஆர்ட்டிக்கிள் மற்றும் அவரது பிரத்தியேக பேட்டியை அதன் ஒரிஜினல் வடிவில் பதிப்பித்த விதம் அருமை. இந்த இதழ்கள் எல்லாம் நாங்கள் பார்த்திராதது. கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கழித்து அந்தப்பொக்கிஷப் பதிவுகளைக் கண்ணுறச்செய்தமைக்கு மிக்க நன்றி. நம்மவர்கள் எங்கிருந்தெல்லாம் ஆவணங்களைத்தேடியெடுத்து வந்து தருகிறார்கள் என்பது நிஜமாகவே ஆச்சரியப்படுத்துகிறது.

    அன்புள்ள ராமஜெயம் சார்,

    சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் இரண்டுமே சென்னையில் 'எலைட் மூவீஸ்' ரிலீஸ்தான். எனவேதான் அவ்விரண்டு படங்களின் 100-வது நாள் வெற்றி விழாக்கள் ஒரே விழாவாகக் கொண்டாடப்பட்டது. வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த இரண்டு படங்களின் வெற்றி விழாக்கள் ஒரே விழாவாக நடந்தது அத்ற்கு முன்னும் அதற்குப்பின்னும் நடந்ததில்லை. (கமல் தனது ஒரே நிறுவனத்தின் சார்பில் தயாரித்த சதி லீலாவதி, மகளிர் மட்டும், குருதிப்புனல் ஆகிய மூன்றின் வெற்றிவிழாக்களை ஒரே விழாவாகக் கொண்டாடினார்).

    அத்துடன் என் நினைவுக்கெட்டிய வரையில் பாலாஜியின் எந்தப்படத்தையும் சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்ததாக தெரியவில்லை.

  6. #1405
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள்

    மீண்டும் ஒரு புதிய கட்டுரைத் தொடர் மூலம் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

    நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பை வேறு வேறு பரிமாணங்களில் இப்பூவுலகம் உள்ளவரை ரசித்துக் கொண்டே இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால், அவரது ஒவ்வொரு படத்தையும், திரும்பத் திரும்பப் பார்க்கும் போதும், ஒவ்வொரு முறையும், ரசிப்புத் தன்மையுள்ள ஒவ்வொருவருக்கும், வேறு வேறு கோணங்களில், அவரது அற்புதத் திறமையை புதிது புதிதாக ரசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

    நான் இங்கு எழுதப் போவது, நிச்சயம் அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் ஏற்கனவே ரசித்தது தான் (திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அடிக்கடி குறிப்பிடுவது போல், அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் ஒரே கோணத்தில்தான் அவரை ரசிக்கிறார்கள்.) இருப்பினும், அந்த அற்புதத் தருணங்களை மறுபடியும் எழுத்து வடிவில் இங்கு கொணர என்னால் இயன்றவரை முயல்கிறேன்.

    நடிகர் திலகம் பெரிய/அகன்ற திரைக்கு அறிமுகம் ஆன கால கட்டத்தில், பெரும்பாலும், அனைத்து நடிகர்களும் நாடகத்திலிருந்துதான் அறிமுகம் ஆனார்கள். நாடகம் என்கின்ற ஊடகம் எதையும் உரத்துச் சொல்லுவதிலும், சொல்ல வந்த விஷயத்தைப் பாடல்களின் மூலமும் சொல்லிக் கொண்டிருந்தது. காரணம் எல்லோரும் அறிந்ததுதான் - கடைசி இருக்கையில் இருப்பவருக்கும் கேட்க வேண்டும் என்பதால். இந்தக் காரணத்தால், நாடகத்திலிருந்து வந்த நடிகர்களின் நடிப்பில் ஒரு வித செயற்கைத் தன்மை இருப்பதாக சொல்வதுண்டு. இது சரியான கூற்று அல்ல. நாடகத்திலிருந்து வந்தவர்களிடம் இருந்த சரளமான நடிப்பு நேரே வெள்ளித்திரைக்கு வந்தவர்களுக்கு ஒரு போதும் இருக்காது. இதற்குக் காரணம், நாடகம் அளிக்கும் அனுபவம் மற்றும் தைரியம் - நேரே லைவாக ஆடியன்சை எதிர்கொள்ளவிருப்பதால். அங்கு தான் ரீடேக் எல்லாம் கிடையாதே.

    அதே சமயம், நாடகத்திலிருந்து நடிக்க வந்த நடிகர்கள் பாடல் காட்சியில் நடிக்கும் போது, அவர்களுடைய உடல் மொழி இயல்பாக இல்லாமல், கைகளை மனம் போன போக்கில் ஆட்டி, அசைத்து நடித்துக் கொண்டிருந்தார்கள் - இல்லை ஒரேயடியாக எந்த வித அசைவும் இன்றி நின்ற இடத்தில் அப்படியே சிலையாக நின்று நடித்துக் கொண்டிருந்தார்கள் - அதாவது ஒரு உயிரோட்டமான நடிப்பு அந்தக் காலத்தில் பாடல்களில் இல்லாமல் இருந்தது. அப்படிப் பார்த்தால், இந்த நிமிடம் வரை, பெரும்பாலான நடிகர்களுக்குப் பாடல் காட்சியில் அந்த அளவிற்கு நடிப்பதற்குத் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே நாடக உலகில் இருந்து வந்த நடிகர் திலகமோ, தன் முதல் படத்தில் இருந்தே, பாடல் காட்சியில் நடிக்கும் போது, அளவோடு கை கால்களை அசைத்து, அந்தப் பாடல் வரிகளுக்கேற்றார் போல் முகம் மட்டுமல்லாமல், மற்ற உடல் மொழிகளின் மூலமாகவும், சரியான பாவங்களைக் காட்டி நடிக்கலானார். அதாவது, அந்த முதிர்ச்சி, அவரது முதல் படத்திலேயே இருந்தது. நடிப்பில் எல்லையை முதல் படத்திலேயே தொட்டவரல்லவா அவர்! பாடல் முழுவதுமே, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பின்னர் நடித்து விட்டவராயிற்றே! (பொன்னை விரும்பும் பூமியிலே - ஆலய மணி).

    திரைப்படங்களில், பாடல்கள் மூலம் கதையையும், காட்சியின் வீரியத்தையும் காட்டி அதன் மூலம், மக்களை ஒரு சேர சென்று சேர ஆரம்பித்தது, நடிகர் திலகம் - பீம்சிங் - கண்ணதாசன் - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் / ராமமூர்த்தி - டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலா கூட்டணி தான் என்றால், இதற்கு மாற்றுக்கருத்துக்கு இடமேது? இதே போல், பாடல்களின் மூலம், காட்சியின் வீரியத்தை மட்டுமல்லாது, அந்தப் பாடல்கள் இடம் பெற்ற காட்சிகளின் சூழலை சுவையும் சுவாரஸ்யமும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டதும், நடிகர் திலகம் தான்.

    அப்படிப்பட்ட பாடல்களின் மூலம், ஒரு இயக்குனர் (அவர் தானே அந்தக் கப்பலின் கேப்டன்) சொல்ல வந்த விஷயத்தை, மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, வெறுமனே நடித்து விட்டுப் போகாமல், அந்தப் பாடலில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலைத் தன்மையை, கிரியேடிவிடியைக் காண்பிக்க நினைத்து, அதில் நூறு சதம் வெற்றி பெற்ற பாடல்களை இந்தக் கட்டுரையில் பதிவிட முயல்கிறேன்.

    1. "சக்கப் போடு போடு ராஜா"; படம்:- பாரத விலாஸ் (1973); இயக்கம்:- ஏ.சி.திருலோகசந்தர்

    புதிதாகத் திருமணம் ஆன ஒருவன், முதன் முதலாகத் தன் காதல் மனைவியைப் பார்க்கும் முன், அவன் மனதில் எழுகின்ற உணர்வுகளைக் காட்டுவதாக அமைந்த பாடல். இந்தப் பாடலைப் புதிய கோணத்தில் சிந்தித்து எடுத்திருப்பார் இயக்குனர் ஏ.சி.டி. - அதாவது, அவனும் அவனது மனசாட்சியும் பாடி, பேசுவதாக அமைந்த பாடல்.

    இந்தப் பாடலின் தனிச் சிறப்பு - பொதுவாக, அனைத்து படங்களிலும், சம்பந்தப்பட்ட மனிதனும் மனசாட்சியும் நேருக்கு நேர் வருவதாகக் காண்பிப்பார்கள். அதனால், அந்த இரண்டு பாத்திரங்களும் அதாவது நடிகர்களும், கொஞ்சம் சுலபமாக யோசித்து, நடித்து விட முடியும். ஆனால், இந்தப் பாடலிலோ, மனசாட்சி அசரீரியாகக் குரல் மட்டுமே கொடுக்கும். அதை அவர் கவனித்து, ரியேக்ட் மட்டும் செய்ய வேண்டும். இங்கு தான், நடிகர் திலகத்தின் அபார கற்பனை வளம் அவருக்குக் கை கொடுக்கிறது.

    பல்லவியில், சக்கப் போடு போடு ராஜா என்று நிஜ மனிதனாக நடிகர் திலகம் பாடத் துவங்கியவுடன், "டேய் டேய் என்னடா பாட்டுல பேச ஆரம்பிச்சிட்ட" என்று மனசாட்சியின் குரல் வரும். அப்பொழுது அவருடைய ரியேக்ஷனை கவனியுங்கள். அபாரம்!

    சரணத்தில், "நல்ல சமயம் இதை விட்டு விடாதே நாளும் தெரிந்த நீ நழுவ விடாதே" என்றவுடன் "என்னடா என்னடா நல்ல சமயம்" என்று மனசாட்சி கேட்டவுடன், அவர் இரண்டு கைகளையும் பின்னி "வெள்ளி நிலாக் காயுது வாடைக் காற்று வீசுது" என்று நடிக்கும் நடிப்பு, அது வரை அவர் காட்டாத - நடிக்க வந்து 21 வருடங்களுக்குப் பின்னர், 150 படங்களுக்கு மேல் நடித்த பின்னும், காட்டிய ஒரு புதிய பாணி நடிப்பு!

    அடுத்த சரணத்திற்கு முன் வரும் தருணத்தில், அந்த மனசாட்சி இவரது கழுத்தில் இருக்கும் துண்டைப் பிடித்து இழுப்பதாக நினைத்துக் கொண்டே அந்தத் துண்டைப் பிடித்து இழுத்து தன்னை விடுவித்துக் கொள்வதாக கற்பனை கலந்து நடித்திருக்கும் விதம் - நடிகர் திலகத்தின் அபார கற்பனை வளத்திற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.

    கடைசியில், கட்டிலைச் சுற்றி ஒரு மாதிரி கைகளை இழுத்து இழுத்து காட்டிக் கொண்டே பாடலை முடிக்கும் விதம் மிகவும் நகைச்சுவையோடு இருக்கும்.

    மொத்தத்தில், ஒரே நேரத்தில், அபாரமான கற்பனை வளத்தோடும், அற்புதமான நகைச்சுவையோடும், ஒரு முதல் இரவுப் பாடலாக இருந்தாலும், தரம் கொஞ்சமும் குறையா வண்ணம், நடித்த பாடல். அதுவும், எந்த வித அதீத முயற்சியும் இல்லாமல் (effortless) நடித்த பாடல்.

    எதையும் வித்தியாசமாக சிந்தித்து, மக்களுக்கு அறுசுவை விருந்து படைப்பவர் நடிகர் திலகம் என்பதற்குக் கட்டியம் கூறும் பாடல்.

    தொடரும்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 9th December 2011 at 06:06 PM.

  7. #1406
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

    தாங்கள் பதிந்த தி ஜென்டில்மேன் இதழில் வெளி வந்த நடிகர் திலகம் நான் இது வரை படிக்காத ஒன்று. எனக்குத் தெரிந்து நிறையே பேர் இதைப் படித்திருக்க மாட்டார்கள். அது எப்படித் தான் உங்களுக்கு இந்தக் கட்டுரைகள் கிடைக்கிறதோ, தெரியவில்லை. உள்ளம் குளிர்ந்தது. மிக்க நன்றி.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி



    அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

    தங்களுடைய "நீதி" மற்றும் "மனிதரில் மாணிக்கம்" படங்களின் நினைவலைகள் மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் இருந்தது. அதிலும், மனிதரில் மாணிக்கம் படத்தைப் பற்றிய நினைவலைகள் ரொம்பவே சுவை. அந்தக் காலத்தில், "I will sing for you" மிகவும் பிரபலமான பாடல். எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி



    அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

    திரு. கார்த்திக் அவர்கள் எழுதியவுடன், அந்த அரிதான பாடலைப் பதிந்து, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி விட்டீர்கள். நன்றி.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  8. #1407
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சக்கை போடு போடும் பார்த்தசாரதி சார்,

    நடிகர் திலகத்தின் அதியற்புத நடிப்புத் திறமையைக் கொண்ட பாடல்களை ஆய்வு செய்ய ஆரம்பித்திருப்பது குறித்து பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது. அதுவும் நம்மவர் மிகக் கடினமான இருவேறு நடிப்புப் பரிமாணத்தை ஒரே சமயத்தில் வேறுபடுத்திக் காட்டும் 'சக்கை போடு போடு ராஜா' பாடலை நீங்கள் ஆய்வு செய்துள்ளவிதம் புதுமையாகவும், அதேசமயம் மிகச் சரியாகவும் உள்ளது. நடிகர் திலகத்தின் நடிப்பை நயமாக ஆய்வு செய்துள்ளீர்கள். நாடகக் கலைஞர்களைப் பற்றிய தங்களின் அப்பிப்பிராயமும் அருமை. நாடகத்துறையில் இருந்து வந்த பல நடிகர்கள் ஆரம்ப காலத்தில் வெள்ளித்திரையில் நாடக பாணியைக் கடைப்பிடித்தாலும் சில காலங்களுக்குள்ளேயே தங்கள் அசாத்திய அனுபவத்தால் அற்புதமாக வெள்ளித்திரைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு இன்றுவரை மறக்க முடியாத கலைஞர்களாய் நம் நெஞ்சில் நிலைத்து வாழ்கிறார்கள். அதவும் நம் நடிகர் திலகம் பற்றி கேட்கவே வேண்டாம். பாடல் முழுவதுமே, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே நடித்து வியக்க வைத்தாரென்றால், படம் முழுவதும் கட்டில் மெத்தையில் படுத்துக் கொண்டே 'மருமகள்' படத்தில் பட்டையைக் கிளப்புவார்.அற்புதமான ஆய்வுக்கு ஆனந்தமான நன்றிகள்.

    தங்களுடைய இந்த புது முயற்சியை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறோம். பாடல்களில் நடிகர் திலகம் அசத்தியிருக்கும் நடிப்புத் திறமைகள் உங்கள் மூலம் புதிய பரிணாமத்தில் திரியில் பிரகாசிக்கப் போகிறது என்பதால் 'எங்க காட்டுல மழை பெய்யப் போகுது....

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 9th December 2011 at 06:58 PM.

  9. #1408
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பார்த்தசாரதி சார் 'சக்கை போடு' போட்டு விட்டார். இந்த அற்புதப் பாடலில் சக்கை போடு போடும் நம் தங்க ராஜாவை பார்த்தசாரதி சாரின் அருமையான ஆய்வை மனதில் நிறுத்திக் கொண்டே பார்த்து இன்புறுவோம்.



    அன்புடன்,
    வாசுதேவன்.

  10. #1409
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு ராகவேந்திரன் சார்,

    "I will sing for you" பாடலைப் பதிபித்ததற்கு "I always thanks for you"

    அன்புடன்,
    வாசுதேவன்.

  11. #1410
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நீலவானம் (10-12-1965) 47-ஆவது ஆண்டுத் துவக்கத்தை முன்னிட்டு...









    'நீலவானம்' வீடியோ டிரைலர்



    நடிகர் திலகத்தின் நளினமான மேற்கத்திய பாணி நடன அசைவுகளில் ஜொலிக்கும் "oh little flower" வீடியோப் பாடல் காட்சி.



    ஓஹோஹோ...ஓடும் எண்ணங்களே..(பி.சுசீலாவின் மயக்கும் குரலில்) வீடியோப் பாடல் காட்சி.



    "ஒ..லக்ஷ்மி... ஒ.. ஷீலா"... வீடியோப் பாடல் காட்சி.



    நடிகர் திலகமும், திருமதி.தேவிகா அவர்களும் நடிக்கும் ஒரு அற்புதக் காட்சி. (இந்த வீடியோக் காட்சியை you tube- இல் அப்- லோட் செய்த அன்பு 'ரசிக வேந்தர்' ராகவேந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்).



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 9th December 2011 at 09:04 PM.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •