Page 253 of 404 FirstFirst ... 153203243251252253254255263303353 ... LastLast
Results 2,521 to 2,530 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #2521
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

    புயலெனப் புகுந்துள்ளீர்கள். அலை கடலெனத் தங்களது ஆர்ப்பரிப்புகள் ஆரம்பமாகட்டும்!

    நனையத் தயாராயிருக்கும்,

    இரா. பார்த்தசாரதி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2522
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like

  4. #2523
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    திரு பம்மல் சார்,
    சிறிய இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் தங்களை வருக வருக என வரவேற்கிறோம் .தங்கள் பதிவுகளை மீண்டும் படிப்பதில் மனம் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுகிறது.
    திரு குமரேசன் அவர்கள் சொன்னது போல வசந்த மளிகை திருவிழாவில் தங்களையும் முரளி சார்,ராகவேந்திரா சார் மற்றும் சில நண்பர்களையும் சந்திக்காததில் எனக்கு மிகவும் வருத்தம் .கர்ணன் கோலாகலத்தில் சந்திப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

    வாசு சார்,
    ராஜராஜசோழன் மற்றும் பச்சைவிளக்கு நிழல்படங்கள் அருமை.
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  5. #2524
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by abkhlabhi View Post
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  6. #2525
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார்

  7. #2526
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே,
    பல்வேறு நெருக்கடியான சூழலுக்கிடையில் சற்று இடைவெளி விட்டு சந்திக்கிறேன். பம்மலார் சூப்பரோ சூப்பர்மேன் என்று பாய்ந்தோடி வந்து கர்ணன் முதலில் தோல்வியடைந்த படம் என்று விவரம் தெரியாமல் கூறுபவர்களுக்கு சரியான நெத்தியடி தந்து விட்டார். இதில் நம்முடைய நண்பர்கள் சிலரும் மேம்போக்காக பேசி வந்தது மன வருத்தமே என்றாலும் பம்மலாருடைய ஆதார பூர்வமான நிழற்படம் அந்த கூற்றுக்களைப் பொய்யாக்கி விட்டது. உண்மையில் சொல்லப் போனால் அப்போதே கர்ணன் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டு, அதனுடைய எதிரொலி தமக்கு எங்கே பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் படாத பாடு பட்டு அப்போதைய அரசிடம் மிகுந்த பிரயாசைப் பட்டு நிஜப்புலியைக் கொண்டு வந்து வைத்தது தற்போதைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்காது. காட்டு விலங்கினை பொது மக்கள் கூடும் இடத்தில் காட்சிக்கு வைக்க அப்போதைய அரசு மிகவும் பலமாக மறுத்த போது, அதனை அரசியலாக்க அப்போதே முனைந்த பின் வேறு வழியின்றி நிர்ப்பந்தம் காரணமாக அனுமதி அளிக்கப் பட்டது. இந்தத் தகவல்கள் அப்போதே நமது நண்பர்கள் விவாதித்ததுண்டு. அப்போது நான் மிகவும் சிறிய வயதில் இருந்ததால் அந்த அளவிற்கு அதனைப் பற்றித் தெரியவில்லை என்றாலும் இந்த செய்தி மட்டும் அப்போதிலிருந்து நினைவில் உள்ளது. அப்போது சாந்தியில் கர்ணன் பார்க்க வீட்டிலிருந்த பெரியவர்கள் அழைத்துச் சென்றதும், டிக்கெட் கிடைக்காத காரணத்தால் திரும்பி விட்டதும் நினைவில் உள்ளது.

    வெளியான போதே வெற்றி நடைபோட்ட படம் கர்ணன். இதை முதலில் நம் சிவாஜி ரசிகர்கள் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப் பதிவு.

    பம்மலாருக்கு மீண்டும் நமது உளமார்ந்த நன்றிகள்.

  8. #2527
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புதிய பறவை திரைப்படத்தை நவீன ஒலி மயமாக்கலில் ஈடுபட உள்ளதாக வந்துள்ள தகவல் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபக்கம் சற்று நெருடலாக உள்ளது. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற ஈடிணையற்ற மேதைகளின் உழைப்பில் நிகரில்லாத இசையமைப்பில் வந்தபடம் புதிய பறவை. எந்த அளவிற்கு நடிகர் திலகம் அந்தப் படத்திற்கு காரணமோ அதே அளவிற்கு மெல்லிசை மன்னர்கள் பங்கு வகித்த படம். தற்போதைய டிஜிட்டல் கர்ணனில் பின்னணி இசை ஏமாற்றமே. இருந்தாலும் படத்தின் புராண கதையமைப்பில் மக்கள் அதைப் பொருட் படுத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால் புதிய பறவை அப்படியல்ல படம் முழுதும் பின்னணி இசை கொடி கட்டிப் பறந்த படம். குறிப்பாக பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் முடிந்த வுடன் கிளப்பில் நடிகர் திலகம் சௌகார் உரையாடும் போது பின்னணியில் ஹென்றி டேனியலின் குரலில் ஒலிக்கும் பாப்பிசை அந்தக் காட்சிக்கு ஜீவனுள்ளதாய் இருக்கும். இது போல் படம் முழுவதும்.

    சொக்கலிங்கம் சார், நீங்கள் இறங்குவது விஷப் பரீட்சை. புதிய பறவை படத்தை அவசர கதியில் செய்ய வேண்டாம். ஐந்து ஆண்டுகளானாலும் பரவாயில்லை. ஒரிஜினல் இசையமைப்பாளர்களான மெல்லிசை மன்னர்களிடமே முழுப் பொறுப்பையும் தந்து விடுங்கள். [என்ன தான் அவர்களே செய்தாலு்ம் அந்த ஒரிஜினாலிட்டி வராது என்பது வேறு விஷயம்], இருந்தாலும் அவர்கள் இருவரும் இறையருளால் நம்முடன் உள்ளதால் அவர்கள் நிச்சயம் சிறப்பாக செய்து தருவார்கள். இனிமேல் வேறு யாரிடமும் தந்து விஷப் பரீட்சை செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள் மட்டுமல்ல பல்லாயிரம் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    அதையும் மீறி செய்வீர்களானால் நிச்சயம் மிகப் பெரிய கலைஞர்களுக்கு நாம் செய்யும் அநீதியாகத் தான் இருக்க முடியும்.
    Last edited by RAGHAVENDRA; 2nd April 2012 at 02:11 PM.

  9. #2528
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    புதிய பறவை திரைப்படத்தை நவீன ஒலி மயமாக்கலில் ஈடுபட உள்ளதாக வந்துள்ள தகவல் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபக்கம் சற்று நெருடலாக உள்ளது. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற ஈடிணையற்ற மேதைகளின் உழைப்பில் நிகரில்லாத இசையமைப்பில் வந்தபடம் புதிய பறவை. எந்த அளவிற்கு நடிகர் திலகம் அந்தப் படத்திற்கு காரணமோ அதே அளவிற்கு மெல்லிசை மன்னர்கள் பங்கு வகித்த படம். தற்போதைய டிஜிட்டல் கர்ணனில் பின்னணி இசை ஏமாற்றமே. இருந்தாலும் படத்தின் புராண கதையமைப்பில் மக்கள் அதைப் பொருட் படுத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால் புதிய பறவை அப்படியல்ல படம் முழுதும் பின்னணி இசை கொடி கட்டிப் பறந்த படம். குறிப்பாக பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் முடிந்த வுடன் கிளப்பில் நடிகர் திலகம் சௌகார் உரையாடும் போது பின்னணியில் ஹென்றி டேனியலின் குரலில் ஒலிக்கும் பாப்பிசை அந்தக் காட்சிக்கு ஜீவனுள்ளதாய் இருக்கும். இது போல் படம் முழுவதும்.

    சொக்கலிங்கம் சார், நீங்கள் இறங்குவது விஷப் பரீட்சை. புதிய பறவை படத்தை அவசர கதியில் செய்ய வேண்டாம். ஐந்து ஆண்டுகளானாலும் பரவாயில்லை. ஒரிஜினல் இசையமைப்பாளர்களான மெல்லிசை மன்னர்களிடமே முழுப் பொறுப்பையும் தந்து விடுங்கள். [என்ன தான் அவர்களே செய்தாலு்ம் அந்த ஒரிஜினாலிட்டி வராது என்பது வேறு விஷயம்], இருந்தாலும் அவர்கள் இருவரும் இறையருளால் நம்முடன் உள்ளதால் அவர்கள் நிச்சயம் சிறப்பாக செய்து தருவார்கள். இனிமேல் வேறு யாரிடமும் தந்து விஷப் பரீட்சை செய்ய வேண்டாம் என்பது என் வேண்டுகோள் மட்டுமல்ல பல்லாயிரம் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    அதையும் மீறி செய்வீர்களானால் நிச்சயம் மிகப் பெரிய கலைஞர்களுக்கு நாம் செய்யும் அநீதியாகத் தான் இருக்க முடியும்.
    You are cent percent right. pudiyaparavai music composing and related work has to be given viswanathan and ramamurthy to get pakka and compelte results. a movie designed for NADIGARTHILAGAM AND MUSICAL BONANZA OF YESTERYEARS SHOULD COME OUT NICELY AND SUCCESSFULLY. HENCE THE REQUEST TO MR CHOKALINGAM SIR.
    REGARDING KARNAN.S EARLY RUN
    RAGHAVENDRAN HAS NICELY EXPLAINED. I HAVE ALSO MADE A NOTE ON THE ISSUE COFIMING RAGHAVENDER.S STATEMENT.

  10. #2529
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    'புதிய பறவை' கோபாலின் ஸ்டைல் ஸ்டில் அருமை.

    "நடிப்பும் ஒரு தொண்டுதான்" பொம்மைக் கட்டுரை நம் சாதனைச் சக்கரவர்த்தியின் அடக்கத்தையும், பெருந்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. நடிகர் திலகத்தின் பின்னாளைய பேட்டிகளில் அரசியல் சூதுகளில் அவர் சிக்குண்டு தவித்த விதத்தை அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. "நமக்குத் தெரிஞ்சதை இதுவரை நடிச்சோம். அது நடிப்புன்னா நடிப்பு. சரியில்லைன்னா சரியில்லைதான்"என்ற நடிகர் திலகத்தின் வரிகள் அந்த சாகாவரம் பெற்ற கலைஞரின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

    'சிவாஜி சில நினைவலைகள்' கட்டுரையில் நேரம் தவறாமையை எந்த அளவுக்கு கடைப் பிடித்தார் நடிகர் திலகம் என்பது தெளிவாகிறது. நிருபருக்கு அவர் செய்து கொடுத்த உதவி அவரின் கர்ணத்தனத்தை காட்டுகிறது.

    அற்புதமான இரு கட்டுரைகளை அருமையாக பதிவு செய்ததற்கு நன்றிகள் பல.

    அன்புடன்,
    வாசுதேவன்

  11. #2530
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by goldstar View Post
    Anbulla Pammalar avarkale, varuka varuka, namathu NT seithigal amudham pol alli alli tharuka....

    Cheers,
    Sathish
    டியர் goldstar,

    தங்களின் அன்பிற்கும், தாங்கள் என்னை வரவேற்கும்முகமாக வழங்கிய பாராட்டுப் பதிவுக்கும் எனது வளமான நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •