Page 260 of 404 FirstFirst ... 160210250258259260261262270310360 ... LastLast
Results 2,591 to 2,600 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #2591
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கள் கருத்துக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார். கர்ணன் படத்திற்கும் கட்டபொம்மன் படத்திற்கும் வித்தியாசம் உள்ளது. கட்டபொம்மன் படத்தில் பின்னணி இசை மிகச் சிறப்பாக இருக்கும், வசனம் சிறப்பாக இருக்கும் என்பதெல்லாம் தாண்டி முழுக்க முழுக்க நடிகர் திலகம் என்கிற பிரம்மாண்ட கலைஞன் தனியே தாங்கி நிறுத்தும் படம் அது. கர்ணனைப் போல் புராணக் கதை என்கிற பின்புலம் இல்லை. ஆனால் நடிகர் திலகம் என்கிற ஆகர்ஷண சக்தியில் இயங்கும் படம் கட்டபொம்மன். எந்தப் புத்தகத்தையும் படித்தவரில்லை நடிகர் திலகம். ஆனால் கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்றை படித்தவர்கள், கயத்தாறில் தூக்குக் கயிற்றை முத்தமிட கட்டபொம்மனின் நடையழகு அப்புத்தகத்தில் வர்ணித்திருந்தவாறே படத்தில் அவர் செய்திருந்தார் என்கிற ஒரு செய்தியே போதும். அபபடத்தைத் தூக்கி நிற்கும் தனியொரு சக்தி அவர் என்பது.

    எனவே முழுக்க முழுக்க நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்தல் ஒன்றே அப்படத்தினை வெளியிடும் நிறுவனம் அவருக்கு செய்யக் கூடிய சிறப்பாய் அமையும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2592
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அன்பு பம்மலார் சார்,

    பேசும் படம் (டிசம்பர் 1976) இதழின் அண்ணலின் அனுபவம் பேசுகிறது...எட்டு பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

    'சோமனதுடி' படத்தை பார்த்துவிட்டு அப்படத்தில் நடித்த வாசுதேவராவ் அவர்களை பாராட்டுவது...

    விமர்சனங்களைக் கண்டு உணர்ச்சி வசப்படும் குறைந்த அனுபவம் தனக்கில்லை என்று அனுபவத்தில் முதிர்ச்சியுடன் கூறியுள்ளது...

    தனக்காக மட்டுமல்லாமல் நண்பர்களின் நல்வாழ்விற்காகவும் படங்களில் நடித்துக் கொடுத்தது...

    என நடிகர் திலகத்தின் சத்திய வார்த்தைகள் சங்கமிக்கும் கட்டுரைக் கடலாய் எட்டு பக்கங்களும் சிந்தை கவர்கின்றன. (பேட்டிக் கட்டுரைக்கு மத்தியில் நடிகர் திலகம் பற்பல போஸ்களில் நெஞ்சை அள்ளுகிறார்)

    கட்டுரையின் முன்னோட்டமாக நடிகர் திலகத்தைப் பற்றிய பேசும் படத்தின் கருத்து அழகு என்றால் அந்த 'ரோஜாவின் ராஜா' நிழற்படம் அதைவிட அழகு.

    சூப்பரான கிடைத்தற்கரிய கட்டுரையை பதிவு செய்து இன்புறச் செய்ததற்கு இனிய நன்றிகள் சார். இது போன்ற வரலாற்று ஆவணங்களால் மீண்டும் புத்தம் புது பொலிவுடன் வழக்கம் போல் வெற்றிநடை போடுகிறது நமது திரி.

    அன்புடன்
    வாசுதேவன்.
    டியர் வாசுதேவன் சார்,

    எப்பொழுதும் போல், ஒவ்வொரு ஆவணப் பதிவையும் ஆழ்ந்து ரசித்துப் படித்து, அதிலுள்ள முக்கிய அம்சங்களைக் கோடிட்டுக் காட்டி எழுதுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே !

    தங்களது பாராட்டுக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் !

    தங்களது கைவண்ணத்தின் "கவரிமான்", அனைவரது நெஞ்சங்களையும் 'கவரும் மான்' !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #2593
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by J.Radhakrishnan View Post
    டியர் பம்மலார் சார்,

    நீண்ட இடைவெளிக்கு பின் வரும் தங்களின் பதிவுகள் அசத்தல், நடிகர்திலகத்தின் பேட்டி அருமை.

    நன்றி!
    டியர் ஜேயார் சார்,

    தங்களின் அன்பான பாராட்டுப் பதிவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #2594
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    மிக அழகாக ராஜ் டிவி நிறுவனம் வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தை எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் எனக் கோடிட்டுக் காட்டியுள்ளீர்கள். அற்புதம்.

    பொதுவாகவே எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்கள் என்றால் இளக்காரம் தான். நமது தலைவர் ஒரு பணம் காய்க்கும் மரம். அந்த மரத்தை அவரவரும் கல்லால் அடித்து அவரவருக்கு தேவையான பணத்தை அள்ளிக்கொண்டு செல்வதில் மட்டும் குறியாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் தனக்கு வாழ்வளித்த அந்த மரத்தை மட்டும் கவனிக்கவோ, அல்லது நன்றியுடன் நடக்கவோ மட்டும் மறந்து போகிறார்கள். அவரை வைத்து குறைந்த செலவில் நிறைய லாபம் பார்த்தவர் பல பேர். ஆனால் அதில் பெரும்பாலானோர் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் நம் கண் முன்னமேயே ஆகியிருக்கிறார்கள். ஆனால் அதில் பல பேர் எனக்கு பெருத்த நஷ்டம், படம் ஓடவில்லை அல்லது படம் ஓடியும் வசூல் வரவில்லை என்ற அண்டப்புளுகு ஆகாசப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருவதை பல காலமாய் நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. இதை ஏன் சொல்கிறேன் என்றால் தாங்கள் கூறியுள்ளது போல விளம்பரம் என்பது ஒரு படத்தின் உயிர் நாடி. என்ன தான் அருமையாக எடுக்கப்பட்டாலும் விளம்பரம் சரியாக அமைந்தால் ஒரு நூறு நாள் படம் கூட வெள்ளிவிழாவைத் தாண்டும். ஏவிம்மின் பல படங்கள் விளம்பரங்களினாலேயே வெள்ளிவிழாக் கண்ட காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் கூட நம் விஷயத்தில் சிக்கனத்தைத் தான் கடைப்பிடித்தார்கள். இது ஒரு சாபக்கேடு போலும்.

    முறையான திட்டமிடலுடன் சரியான விளம்பரங்களை கொடுத்து, டிரைலரையும் முறையாக பிரம்மாண்டமாக வெளியிட்டு, நாளிதழ்களிலும் தினசரிகளிலும், இணையத்திலும் விளம்பரங்கள் கொடுத்ததினால் இன்னும் அசுர வெற்றியை கர்ணன் அடைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    கர்ணனின் மாபெரும் வெற்றி பல பழைய படங்களை டிஜிட்டல் செய்ய வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றே விதை விதைத்து நாளையே அறுவடை செய்ய நினைப்பது மாதிரி பலர் புற்றீசல் போல கிளம்பி, டிஜிட்டல் மோகம் பிடித்து, நான் அந்தப் படத்தை டிஜிட்டல் செய்யப் போகிறேன், இந்தப் படத்தை டிஜிட்டல் செய்யப் போகிறேன் என்று அவசரக் கோலம் அள்ளித் தெளித்தது போல ஏனோ தானோ என்று படத்தை அவசர கதியில் தயாரித்து வெளியிடுவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ரசிகர்களுக்கும் தான். எல்லாப் படங்களுமே கர்ணன் ஆகி விடாது. அது ரசிகர்களுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கி விடும்.

    இன்றைய இளைஞர்களும் பார்த்து பயன் பெற்று மகிழக் கூடிய வகையில் நல்ல படங்களைத் தேர்வு செய்து டிஜிடிலைஸ் செய்வது நல்லது. ஒவ்வொரு பிரேமாக பார்த்து பார்த்து செதுக்கினால் தான் இமாலய வெற்றியை ஈட்ட முடியும். அப்படி செய்ய ஒரு வருடத்துக்கும் மேலாக கால நேரம் தேவைப்படும். (இரவு பகல் பாராமல் உழைத்தால் கூட) ரசிகர்களின் ஆர்வம் இப்போது மிக அதிகமாகக் கூடியுள்ளது. ரசிகர்களும் பொறுமை காத்து நல்ல படங்களைத் தயாரிப்பாளர்களை தேர்வு செய்ய வலியுறித்தி, முக்கியமாக படத்தின் தரம் எந்த விதத்திலும் குறையாமல் இருக்கும் படி கவனம் செலுத்தி, தயாரிப்பாளர்களுக்கு வேண்டிய ஆதரவளித்தால் கர்ணன் போன்ற கலக்கல் வெற்றிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பல வெற்றிக் காவியங்களை அமுதசுரபி போல் நமக்கு வாரி வழங்கியிருக்கிறார் நம் அன்புத் தெய்வம். பல தலைமுறைகளுக்கு அப்போதைக்கப்போதைய தொழில் நுட்ப உத்திகளுக்கு ஏற்ப அவர் படங்களை புதுப்பித்து மறு மறு வெளியீடுகள் செய்து கொண்டே இருக்கலாம். வெற்றியை ஈட்டிக்கொண்டே இருக்கலாம். உலகம் உள்ளமட்டும் அவர் புகழ் பாடிக் கொண்டே இருக்கலாம்.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 5th April 2012 at 09:30 AM.

  6. #2595
    Junior Member Junior Hubber
    Join Date
    Sep 2011
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ராஜ் டி.வி. வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டலில் எடுப்பதைப் பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு விசுவாசமாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு விளம்பரம் செய்வார்கள் என்பது கேள்விக் குறி. சூப்பர் டூப்பர் ஹிட்டாக ரூ. 200 விலையிலும் விற்பனையாகி வரும் கர்ணன் டிவிடியின் விற்பனையைப் பற்றி மூச்சு விடாத நிறுவனமாச்சே... பதிபக்தி டிவிடியின் அட்டையில் ஜெமினி கணேசன் அவர்களின் படத்தைப் பிரதானமாக போட்டு விளம்பரம் செய்பவர்களாச்சே. மூச்சுக்கு முன்னூறு தரம் ... வேறு டி.வி.டி.க்கு விளம்பரம் செய்யும் நிறுவனமாச்சே... இவர்கள் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்தி அப்படத்தை விளம்பரப் படுத்துவார்களா என்பது...

    million dollar question...

    எனவே இதை வேறு யாராவது தயாரித்தால் நடிகர் திலகத்திற்கு உரிய மரியாதை தந்து விளம்பரப் படுத்துவார்கள் என்பதே என் எதிர்பார்ப்பு...

    நம்முடைய இந்த ஆதங்கம் அந்த நிறுவனத்திற்கு எட்ட வேண்டும். அவர்கள் இது வரை செய்யாத அளவிற்கு விளம்பரத்தில் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். இது வரை அவர்கள் புறக்கணித்து வந்தது போன்று இனிமேலும் செய்தார்களானால், அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.
    திரு. இராகவேந்திரன் சார்!

    சரியாக சொன்னீர்கள். அந்த நிறுவன தொலைக்காட்சியில் "நான் வாழவைப்பேன்" திரைப்படம் ஒளிபரப்பும் போது வாய் கூசாமல் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் நடிக்கும் என்று சொல்லி பெருமை பட்டுக் கொள்ளும் நிறுவனம் அது. என்ன செய்வது நடிகர் திலகம் அவர்களிடம், வாங்கித் திண்றவர்களைப் பற்றி அவரும் சொன்னதில்லை, வங்கித் திண்றவனும் சொன்னதில்லை. இது போன்ற செய்கைகளினால் நடிகர் திலகம் போன்ற உத்தமர்கள் உருவாகுவது கடினம் இதை அவர்கள் உணர்ந்தால் சரி!

    நட்புடன்!

  7. #2596
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    டியர் ராகவேந்திரன் சார்,

    மிக அழகாக ராஜ் டிவி நிறுவனம் வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தை எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் எனக் கோடிட்டுக் காட்டியுள்ளீர்கள். அற்புதம்.

    பொதுவாகவே எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்கள் என்றால் இளக்காரம் தான். நமது தலைவர் ஒரு பணம் காய்க்கும் மரம். அந்த மரத்தை அவரவரும் கல்லால் அடித்து அவரவருக்கு தேவையான பணத்தை அள்ளிக்கொண்டு செல்வதில் மட்டும் குறியாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் தனக்கு வாழ்வளித்த அந்த மரத்தை மட்டும் கவனிக்கவோ, அல்லது நன்றியுடன் நடக்கவோ மட்டும் மறந்து போகிறார்கள். அவரை வைத்து குறைந்த செலவில் நிறைய லாபம் பார்த்தவர் பல பேர். ஆனால் அதில் பெரும்பாலானோர் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் நம் கண் முன்னமேயே ஆகியிருக்கிறார்கள். ஆனால் அதில் பல பேர் எனக்கு பெருத்த நஷ்டம், படம் ஓடவில்லை அல்லது படம் ஓடியும் வசூல் வரவில்லை என்ற அண்டப்புளுகு ஆகாசப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருவதை பல காலமாய் நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. இதை ஏன் சொல்கிறேன் என்றால் தாங்கள் கூறியுள்ளது போல விளம்பரம் என்பது ஒரு படத்தின் உயிர் நாடி. என்ன தான் அருமையாக எடுக்கப்பட்டாலும் விளம்பரம் சரியாக அமைந்தால் ஒரு நூறு நாள் படம் கூட வெள்ளிவிழாவைத் தாண்டும். ஏவிம்மின் பல படங்கள் விளம்பரங்களினாலேயே வெள்ளிவிழாக் கண்ட காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் கூட நம் விஷயத்தில் சிக்கனத்தைத் தான் கடைப்பிடித்தார்கள். இது ஒரு சாபக்கேடு போலும்.

    முறையான திட்டமிடலுடன் சரியான விளம்பரங்களை கொடுத்து, டிரைலரையும் முறையாக பிரம்மாண்டமாக வெளியிட்டு, நாளிதழ்களிலும் தினசரிகளிலும், இணையத்திலும் விளம்பரங்கள் கொடுத்ததினால் இன்னும் அசுர வெற்றியை கர்ணன் அடைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    கர்ணனின் மாபெரும் வெற்றி பல பழைய படங்களை டிஜிட்டல் செய்ய வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றே விதை விதைத்து நாளையே அறுவடை செய்ய நினைப்பது மாதிரி பலர் புற்றீசல் போல டிஜிட்டல் மோகம் பிடித்து நான் அந்தப் படத்தை டிஜிட்டல் செய்யப் போகிறேன், இந்தப் படத்தை டிஜிட்டல் செய்யப் போகிறேன் என்று கிளம்பி அவசரக் கோலம் அள்ளித் தெளித்தது போல ஏனோ தானோ என்று படத்தை அவசர கதியில் தயாரித்து வெளியிடுவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ரசிகர்களுக்கும் தான். எல்லாப் படங்களுமே கர்ணன் ஆகி விடாது. அது ரசிகர்களுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கி விடும்.

    இன்றைய இளைஞர்களும் பார்த்து பயன் பெற்று மகிழக் கூடிய வகையில் நல்ல படங்களைத் தேர்வு செய்து டிஜிடிலைஸ் செய்வது நல்லது. ஒவ்வொரு பிரேமாக பார்த்து பார்த்து செதுக்கினால் தான் இமாலய வெற்றியை ஈட்ட முடியும். அப்படி செய்ய ஒரு வருடத்துக்கும் மேலாக கால நேரம் தேவைப்படும். (இரவு பகல் பாராமல் உழைத்தால் கூட) ரசிகர்களின் ஆர்வம் இப்போது மிக அதிகமாகக் கூடியுள்ளது. ரசிகர்களும் பொறுமை காத்து நல்ல படங்களைத் தயாரிப்பாளர்களை தேர்வு செய்ய வலியுறித்தி, முக்கியமாக படத்தின் தரம் எந்த விதத்திலும் குறையாமல் இருக்கும் படி கவனம் செலுத்தி, தயாரிப்பாளர்களுக்கு வேண்டிய ஆதரவளித்தால் கர்ணன் போன்ற கலக்கல் வெற்றிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பல வெற்றிக் காவியங்களை அமுதசுரபி போல் நமக்கு வாரி வழங்கியிருக்கிறார் நம் அன்புத் தெய்வம். பல தலைமுறைகளுக்கு அப்போதைக்கப்போதைய தொழில் நுட்ப உத்திகளுக்கு ஏற்ப அவர் படங்களை புதுப்பித்து மறு மறு வெளியீடுகள் செய்து கொண்டே இருக்கலாம். வெற்றியை ஈட்டிக்கொண்டே இருக்கலாம். உலகம் உள்ளமட்டும் அவர் புகழ் பாடிக் கொண்டே இருக்கலாம்.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Dear Vasu Sir,

    Well said.
    I fully agree with you.
    Murattukkalai,Yejaman pictures ran ONLY because of solid advt given by AVM.
    All old hit movies can not become success like our Karnan.
    I challange anybody will see the following super hit movies of those days in theaters to day.
    16 Vayadinile
    Mullum Malarum
    Then Nilavu,Kalyana Parisu
    Billa,Sigappu rojakkal,Puthiya Varpugal etc

    All the above movies may be super hit ,when it was released.But who will see these movies to day.

    Nadigarthilagam is a GOD Gift.
    Comparing him with anybdoy is meaning less.
    Also his movies will be seen by any generation.

    Even to day he is SIMMA SOPPANAM to any actor in the World.
    Can anybody try his performance in Navarathiri,Deyva Magan with whatever techology help available today?
    NT needs no technolgy help.
    Imagin New Generation movies with somuch media help,You Tube etc is STRUGLING to sustain before GREAT KARNAN.
    This is a lesson to them.
    Here after no new movies will be released with any NT old movie Re Release.

    Long Live Shivaji.

    Shivaji Mohan

  8. #2597
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அதே போல இன்னொரு ஆதங்கம்.

    கர்ணனின் ஆர்ப்பரிக்கும் வெற்றி தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆனால் சிறு நடிகர்கள் முதல் பெரும் நடிகர்கள் வரை எதுவும் கருத்துச் சொல்லாமல் 'கப் சிப்'. இது ஏன்?... எல்லோரும் சந்தோஷப் பட வேண்டிய விஷயம் தானே! "நான் சிறு வயது முதற்கொண்டே சிவாஜி ரசிகன்... அவர் படங்களை முதல் ஷோவே பார்த்துவிடுவேன்" என்று பெரும்பான்மையான நடிகர்கள் பேட்டிகளில் கூறியுள்ளார்கள். அப்படியிருக்கையில் கர்ணனின் வெற்றியைப் பற்றி நடிக நடிகைகள் யாரும் 'மூச்' விடவில்லையே? படம் பிய்த்துக் கொண்டு போகிறதே என்ற கர்வத்திலோ, அகம்பாவத்திலோ இதைக் குறிப்பிடுவதாக தயவு செய்து யாரும் நினைத்து விட வேண்டாம். உலகிலுள்ள நடிகர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்த அந்த மாபெரும் கலைஞரின் இறப்புக்குப் பின்னரும் தொடரும் இறவாப் புகழ் வெற்றியை ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் இன்றுள்ள இளம் நடிகர்கள் அவரை சிறப்பித்துப் போற்ற வேண்டாமா? எல்லோரும் வாய்மூடி மௌனியாக இருப்பதேன்?

    நடிக நடிகையருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நடிகர் சங்கத்தின் வாயிலாக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை கர்ணன் படம் பாருங்கள். எங்கெங்கோ உலகமெல்லாம் சுற்றுகிறீர்கள். எத்தனையோ மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். குத்தாட்டம், குதியாட்டமெல்லாம் போடுகிறீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களை மேம்படுத்திக் கொள்ள அந்த நடிப்புலக பிரம்மாவின் இந்த காவியத்தைக் கண்டு நடிப்பென்றால் என்ன என்பதை முதலில் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். நடிகர்திலகத்தை மட்டுமல்ல. ஏனைய அனைத்து நடிகர்களும் இந்தக் காவியத்தில் எத்துணை சிறப்பாக ஏற்ற பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள் என்பதனையும் கூர்ந்து கவனியுங்கள். நடிப்பு தானாய் உங்களை வந்து ஆட்கொள்ளும்.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 5th April 2012 at 03:24 PM.

  9. #2598
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Karnan’s record in Box Office

    http://600024.com/karnans-record-in-box-office/

  10. #2599
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    As regular readers of this thread would recall, we had launched NT FAnS [Nadigar Thilagam Film Appreciation Association] on January 22nd with Paarthal Pasi Theerum. The second programme of the Association was held today evening. As we had screened a serious family drama last time, this time we decided to go for different genre comedy and so Bale Pandiya was screened at Four Frames theatre. As the artists of this movie are no more [save for Vasanthi,who could not be traced] we have only the musicians and though MSV, TKR, TMS, PBS, PS and Jamuna Rani were invited, only Suseelamma turned up in spite of travelling all night and was kind enough to sit and watch the entire movie. Our sincere thanks to her. The screening went off well and as it always happens, the people who had turned up enjoyed the movie well and there was huge applause at the end.

    Regards

    திரு.முரளி சார், பார்த்தால் பசி தீரும் நிகழ்ச்சியின்போது சொசைட்டியில் சேருவதற்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்திருந்தேன். அப்போதே கட்டணத்தைச் செலுத்தத் தயாராக இருந்தும் தாங்கள் அதுகுறித்து தகவலைத் தெரிவிப்பதாகக் கூறினீர்கள்.

    எனக்கு பலே பாண்டியா திரையிட்டது குறித்து எந்த தகவலும் (Through Mobile or Email or even through Hub) இல்லாதது வருத்தமளிக்கிறது.

    உறுப்பினர்கள் சேர்க்கை என்னவாயிற்று - மற்றும் NT FAnS [Nadigar Thilagam Film Appreciation Association] செயல்பாடுகள் குறித்து தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

    Thanks
    Last edited by KCSHEKAR; 5th April 2012 at 11:20 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  11. #2600
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அதே போல இன்னொரு ஆதங்கம்.

    கர்ணனின் ஆர்ப்பரிக்கும் வெற்றி தமிழ்த் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆனால் சிறு நடிகர்கள் முதல் பெரும் நடிகர்கள் வரை எதுவும் கருத்துச் சொல்லாமல் 'கப் சிப்'. இது ஏன்?... எல்லோரும் சந்தோஷப் பட வேண்டிய விஷயம் தானே! "நான் சிறு வயது முதற்கொண்டே சிவாஜி ரசிகன்... அவர் படங்களை முதல் ஷோவே பார்த்துவிடுவேன்" என்று பெரும்பான்மையான நடிகர்கள் பேட்டிகளில் கூறியுள்ளார்கள். அப்படியிருக்கையில் கர்ணனின் வெற்றியைப் பற்றி நடிக நடிகைகள் யாரும் 'மூச்' விடவில்லையே? படம் பிய்த்துக் கொண்டு போகிறதே என்ற கர்வத்திலோ, அகம்பாவத்திலோ இதைக் குறிப்பிடுவதாக தயவு செய்து யாரும் நினைத்து விட வேண்டாம். உலகிலுள்ள நடிகர்களுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்த அந்த மாபெரும் கலைஞரின் இறப்புக்குப் பின்னரும் தொடரும் இறவாப் புகழ் வெற்றியை ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் இன்றுள்ள இளம் நடிகர்கள் அவரை சிறப்பித்துப் போற்ற வேண்டாமா? எல்லோரும் வாய்மூடி மௌனியாக இருப்பதேன்?

    நடிக நடிகையருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நடிகர் சங்கத்தின் வாயிலாக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை கர்ணன் படம் பாருங்கள். எங்கெங்கோ உலகமெல்லாம் சுற்றுகிறீர்கள். எத்தனையோ மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். குத்தாட்டம், குதியாட்டமெல்லாம் போடுகிறீகள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களை மேம்படுத்திக் கொள்ள அந்த நடிப்புலக பிரம்மாவின் இந்த காவியத்தைக் கண்டு நடிப்பென்றால் என்ன என்பதை முதலில் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். நடிகர்திலகத்தை மட்டுமல்ல. ஏனைய அனைத்து நடிகர்களும் இந்தக் காவியத்தில் எத்துணை சிறப்பாக ஏற்ற பாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள் என்பதனையும் கூர்ந்து கவனியுங்கள். நடிப்பு தானாய் உங்களை வந்து ஆட்கொள்ளும்.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Well said Vasu Sir,

    இதை எல்லாம் அவர்களிடம் எதிர்பார்க்க கூடாது.
    இந்த நடிகர்களை எல்லாம் ஒரு நடிகராக பார்ப்பதே / மதிப்பதே தவறு.
    அவர்களுக்கு எல்லாம் தற்போது தெரிவதெல்லாம் ஒரே நடிகர் Big B தான்.
    தங்களுடைய படங்கள் இப்படி சரித்தரம் படைக்கவில்லையே , தங்களுக்கு இப்படி ஒரு புகழ் இல்லை என்ற பொறமை , வைத்தெரிச்சல் கூட இருக்கலாம்.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •