Page 91 of 404 FirstFirst ... 41818990919293101141191 ... LastLast
Results 901 to 910 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #901
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    "கண்கள்" 59வது உதயதினம்.

    S.V.வெங்கட்ராமன்('கண்கள்' திரைப் படத்தின் இசை அமைப்பாளர்).


    S.V.வெங்கட்ராமன் அவர்களின் தேனிசையில் ஒலிக்கும் 'கண்கள்' படத்தின் சில அற்புத பாடல்கள்.

    "ஆளு கனம் ஆனால் மூளை காலி"....J.P.சந்திரபாபு அவர்களின் உற்சாகக் குரலில்...

    "பாடிப் பாடி தினம் தேடினாலும்"...

    "வருங்காலத் தலைவன் நீயே பாப்பா".. கேட்டு மகிழ...

    லிங்க் கீழே.

    http://www.inbaminge.com/t/k/Kangal/

    எம்.எல்.வசந்தகுமாரி


    "இன்ப வீணையை மீட்டுது அவர் மொழியே" எம்.எல்.வசந்தகுமாரியின் அற்புதக் குரலில். (கம்பதாசன் அவர்களின் காவிய வரிகளில்).

    லிங்க் கீழே.

    http://www.muzigle.com/album/kangal-...inba-veenaiyai

    அன்புடன்,
    வாசுதேவன்
    Last edited by vasudevan31355; 5th November 2011 at 08:37 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #902
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கண்கள் பாட்டுப் புத்தகத்தின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #903
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'கண்கள்' திரைப்படத்தில் நம் கண்ணுக்குக் கண்ணானவரும், பண்டரிபாய் அவர்களும். (நிழற்படம்)



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 5th November 2011 at 10:49 AM.

  5. #904
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குப்பிறகு நேற்று மாலைதான் மீண்டும் இண்ட்டர்நெட் இணைப்பு கிடைத்தது. கிடைத்ததும் முதல் வேலையாக நமது இந்த திரியைப் படித்ததுதான். கிட்டத்த்ட்ட 300 பதிவுகளுக்கும் மேலாக இருந்தது. இன்று காலைதான் பார்த்து முடிக்க முடிந்தது. இத்தனைக்கும் நேற்றிரவு ஒரு மணி வரை பார்வையிட்டேன்.

    அடேயப்பா எவ்வளவு ஆவணப்பொகிஷங்கள் திகட்டத் திகட்ட அள்ளி வழங்கப்பட்டிருக்கின்றன. அத்தனையும் விலை மதிக்க முடியாத ரத்தினங்கள்.

    டியர் பம்மலார்,

    கடந்த ஒரு மாதங்களில் நீங்கள் அள்ளி வழங்கியிருக்கும் ஆவணப்பொக்கிஷங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். அடேயப்பா எவ்வளவு சிரமமும் சிரத்தையும் எடுத்துச்செய்திருக்கிறீர்கள். இருப்பினும் இவை காலம் காலமாகத்தொடரும் வண்ணம் அடுத்த தலைமுறையைச்சேர்ந்த எண்ணற்றோர் கைகளில் கொண்டு சேர்த்திருக்கிறீர்கள்.

    திருடன், சபாஷ் மீனா, பாவை விளக்கு, பராசக்தி, கீழ்வானம் சிவக்கும், பாபு, சித்ரா பௌர்ணமி, எங்க ஊர் ராஜா, பெற்ற மனம், பட்டாக்கத்தை பைரவன், தேவர் மகன், பந்தபாசம், பைலட் பிரேம்நாத், அவள் யார், பாகப்பிரிவினை, தச்சோளி அம்பு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், லட்சுமி வந்தாச்சு, ரங்கோன் ராதா, முரடன் முத்து, நவராத்திரி, டாக்டர் சிவா, வைர நெஞ்சம், வெள்ளை ரோஜா...... என எவ்வளவு படங்களுக்கு எவ்வளவு ஆவணங்களை அள்ளிப் பொழிந்துள்ளீர்கள்.

    நினைக்க நினைக்க பெருமையாகவும், பெருமிதமாகவும், அவற்றைவிட ஆச்சரியமாகவும் இருக்கிறது. இங்கு பலர் தெரிவித்தது போல, இவற்றையெல்லாம் நாம் காண முடியுமா எண்ணி ஏங்கியிருந்தவை. எங்கே போய்த்தேட முடியும், யார் வைத்திருப்பார்கள், யார் தருவார்கள். ஆனால் இப்படி ஒருவர் பொக்கிஷப்புதையல்களை நம் வீட்டு நடுக்கூடத்துக்கே வந்து தருகிறார் என்றால், பல நேரங்களில் 'ஏய் சாரூ, கனவு கண்டது போதும். எழுந்திரு' என்று யாரும் எழுப்பி விடுவார்களோ என்றே அச்சம் ஏற்படுகிறது.

    இவற்றுக்கெல்லாம், உலகமெங்கிலும் உள்ள நடிகர்திலகத்தின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக நன்றி சொன்னாலும் போதாது. கார்த்திக்கின் நண்பர் சேலம் ரெங்கராஜ் சொன்னதுபோல, தாங்கள் பல்வேறு அமைப்புகளால் மிகச்சிறந்த முறையில் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசை, விருப்பம், வேண்டுகோள்.

    இப்போது இணைப்புக் கிடைத்து விட்டதால் தொடர்ந்து விரிவாக உங்கள் சாதனைகளைப்பற்றி பதிவிடுகிறேன். நன்றி.

  6. #905
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன்,

    சென்ற மாதம் மற்றும் இம்மாதம் வெளியான நடிகர்திலகத்தின் ஒவ்வொரு திரைக்காவியத்துக்கும் நீங்கள் மிகுந்த சிரத்தையெடுத்து படத்தின் நிழற்படங்களையும், பாடல்களின் வீடியோக்களையும் அளித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    வைர நெஞ்சம் படத்தில் இடம்பெற்ற 'நீராட நேரம் நல்ல நேரம்' என்ற அற்புதமான பாடலை, யாரும் கண்டுகொள்வதில்லையே என்று நான் ஏற்கெனவே வைர நெஞ்சம் கட்டுரையில் ஆதங்கப்பட்டிருந்தேன். எனது கணிப்பில் வாணி ஜெயராம் பாடிய மிகச்சிறந்த பாடல் அதுதான். என் வாட்டத்தைப்போக்கும் வண்ணம் அப்பாடலின் வீடியோ இணைப்பை அளித்து அசத்தி விட்டீர்கள். என்னுடைய கம்ப்யூட்டரில் வீடியோ பார்க்கும் வசதி இல்லையென்றாலும், தமிழ்கூறும் நல்லுலகுக்குக் கொண்டு சேர்த்த பெருமை உங்களுக்கு உண்டு. (அப்படத்தின் டி.வி.டி.யில் அடிக்கடி இப்பாடலை பார்த்துக்கொண்டிருப்பேன்). இதுவரை பார்க்காத பலரை பார்க்க வைத்த பெருமை உங்களுக்கே.

    ஒவ்வொரு படத்தின் ஸ்டில்களின் தொகுப்புகளும், அவற்றில் நடிகர்திலகத்தின் முகபாவங்களும் அருமையோ அருமை. அபூர்வமான படங்களுக்குக்கூட ஸ்டில்களை தேடி அளித்துள்ளீர்கள். நன்றி.

    டியர் ராகவேந்தர்,

    இத்திரியில் தங்களின் பங்களிப்புகளும் வழக்கம்போல அருமை. அரிய நிழற்படங்களை பதிவிட்டு அசர வைத்துள்ளீர்கள். பெருந்தலைவர் நவராத்திரி படம் பார்க்கும் ஸ்டில் ஒரு சான்று. மற்றும் திரைப்பட விளம்பரங்களும், மாத இதழ்களில் வந்த கிடைத்தற்கரிய ஸ்டில்களும் மிக அற்புதம். நன்றி.

    டியர் கார்த்திக்,

    'பாபு' படத்தின் தங்கள் மலரும் நினைவுகள் மிக அருமை. பல்வேறு விஷயங்களை ஒரே பதிவில் ஒருங்கிணைத்து தந்து ஒன்ற வைத்து விட்டீர்கள். உங்களின் மற்றைய பதிவுகளும் அவ்வப்போது பல விஷயங்களைத் தாங்கி வருகின்றன. நன்றி.

    டியர் முரளியண்ணா,

    அடிக்கடி பதிவிடவில்லையென்றாலும், வரும்போது பல அற்புதமான பதிவுகளைத்தந்து வழக்கம்போல மலைக்க வைக்கிறீர்கள். பாபு படத்தின் மதுரை நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்ட விதம் நன்றாக இருந்தது. முன்பு போல முரளியண்ணாவின் பதிவுகளை அடிக்கடி பார்க்க விரும்புகிறோம். நன்றி.

    எல்லோருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

  7. #906
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    விரைவில் வருகிறார்





    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 5th November 2011 at 05:24 PM.

  8. #907
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Photo vender Vasu sir

    Photo vender Vasu sir,

    Expecting for "Kathavarayan" photos... thanks again.

    Cheers,
    Sathish

  9. #908
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எங்கள் ஆசானின் "விஸ்வரூபம்" (6-11-1980) 32- ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    Hero ..... 'Nadigar thilagam' Sivaji ganesan
    Heroine ....... Sujatha
    Director ....... A.C.Thirulokachandhar
    Producer ....... G.Hanumantha rao
    Actors ....... Major sundarrajan,Manogar,Thengai seenivasan
    Actress ....... Sujatha,Manorama,Sridevi
    Music director..... M.S.viswanathan
    Lyricist ....... Vali, Kannadasan, Pulamaipithan
    Playback ....... T.M.soundarrajan,S.P.B,Vani jairam,S.janaki.
    Dialog ........ Arurdas
    Editor ....... B.kandasamy
    Photography...... Viswanatharoy
    Art ....... S.krshna rao
    Release date...... 06-11-1980


    "விஸ்வரூபம்" காவியத்தின் விஸ்வரூபக் கொண்டாட்டங்கள்.

    நடிப்புலக வித்தகரின் 'விஸ்வரூப' நிழற்படங்கள்.














    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 6th November 2011 at 01:09 PM.

  10. #909
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிப்பு விற்பன்னர் இரு மாறுபட்ட வேடங்களில் தூள் பரத்தும் "விஸ்வரூபம்".














    அன்புடன்,
    வாசுதேவன்.

  11. #910
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    படிக்காத மேதையின் பல்வேறு முகபாவங்கள்.










    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 6th November 2011 at 09:13 AM.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •