பாடல்: தேவலோகம் அழைத்தாலும்
திரைப்படம்: வசந்த அழைப்புகள்
இசை: டி.ராஜேந்தர்

தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
ராகங்கள் நாடிடும் தலைவா நான் உங்கள் கனவினில் நிலவா
ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ...ஆஆ ஆஆ ஆஆ ஆ
தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனைத் தேடிடவா

மல்லிகைப் பூவாகி மாமல்லன் சிலையாகி
மல்லிகைப் பூவாகி மாமல்லன் சிலையாகி
மரகத தேராகி...மன்னனுக்கு கவியாகி
மொழியது மௌனம்...கலைமகள் சரணம்
மொழியது மௌனம் கலைமகள் சரணம்
உனக்கும் எனக்கும் உறவில் நெறுக்கம்
இதுபோல் தொடரும் இதுபோல் தொடரும்
இது போல் தொடரும்
கொத்துப்பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தை பார்த்து வெட்டிப்போகும்
கொத்துப்பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தை பார்த்து வெட்டிப்போகும்
நிலையைக் கண்டால் உனக்கோர் வசந்தம்
உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம்

தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிட வா தேவனைத் தேடிடவா

சித்திரப்பூ ஓடம் சிக்கிட தினம் வாடும்
சித்திரப்பூ ஓடம் சிக்கிட தினம் வாடும்
சேலை தனில் இடை ஆடும்
சிந்தை தனில் உனை நாடும்
விழிமலர் மடல்கள்...வேதனையில் இதழ்கள்
விழிமலர் மடல்கள் வேதனையில் இதழ்கள்
தயங்கும் மயங்கும் பருவம் உருவம்
மழைபோல் குளிரும் மழைபோல் குளிரும்
மழைபோல் குளிரும்
மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம்
நெஞ்சம் காணா தஞ்சம் தேடும்
மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம்
நெஞ்சம் காணா தஞ்சம் தேடும்
வடிவைக்கண்டால் உயிரே பாவம்
உயிரே பாவம் உயிரே பாவம்

தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனைத் தேடிடவா