Page 3 of 10 FirstFirst 12345 ... LastLast
Results 21 to 30 of 97

Thread: S.Janaki - Lyrics

  1. #21
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    thoongAdha vizhigaL reNdu(agni nakshathiram)

    பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு
    திரைப்படம்: அக்னி நட்சத்திரம்
    இசை: இளையராஜா
    பாடியவர்: எஸ்.ஜானகி

    தூங்காத விழிகள் ரெண்டு
    உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
    செம்பூமஞ்சம் விரித்தாலும்
    பன்னீரைத் தெளித்தாலும்
    ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
    தூங்காத விழிகள் ரெண்டு
    உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

    மாமர இலை மேலே...ஆஆ...ஆஆ...ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...ஆஆஆ ஆஆ
    மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
    பூமகள் மடிமீது நான் தூங்கவோ
    மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
    பூமகள் மடிமீது நான் தூங்கவோ
    ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
    ராஜனைக் கையேந்தி தாலாட்டவோ
    நாளும் நாளும் ராகம் தாளம்
    சேரும் நேரம் தீரும் பாரம்
    ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ

    தூங்காத விழிகள் ரெண்டு
    உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
    செம்பூமஞ்சம் விரித்தாலும்
    பன்னீரைத் தெளித்தாலும்
    ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
    தூங்காத விழிகள் ரெண்டு
    உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

    ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
    நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
    ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
    காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
    மாதுளம் கனியாட மலராட கொடியாட
    மாருதம் உறவாடும் கலை என்னவோ
    வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
    வார்த்தையில் விளங்காத சுவை அல்லவோ
    மேலும் மேலும் மோகம் கூடும்
    தேகம் யாவும் கீதம் பாடும்
    ஆஆ ஆஆ ஆஆ ஆஆ...ஆஆஆ ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ...ஆஆ ஆஆ ஆஆ

    தூங்காத விழிகள் ரெண்டு
    உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
    செம்பூமஞ்சம் விரித்தாலும்
    பன்னீரைத் தெளித்தாலும்
    ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
    தூங்காத விழிகள் ரெண்டு
    உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    vaanam niRam maaRum(dhaavaNi kanavugaL)

    பாடல்: வானம் நிறம் மாறும்
    திரைப்படம்: தாவணிக் கனவுகள்
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்; எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

    வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை
    மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை
    நாள்தோறும் வேதங்கள் பாடாதோ தேகங்கள்
    வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை
    மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை

    மன்மதக்கலை எங்கு விற்பனை
    மங்கை இவள் தேகம் எங்கும் முத்திரை
    அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
    திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
    மன்னவன் தோளோரம் என் இதழ் ரீங்காரம்
    பஞ்சணை பூபாளம் பாடிடுமே
    இனி தேவன் கோயில் பூஜை நேரம்
    காதல் தீபம் நாணும்

    வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை
    மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை

    பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
    கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
    கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
    அள்ளித்தர வேண்டும் அன்புக்கட்டளை
    சங்கதி ஏராளம் என் மனம் தாராளம்
    மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
    இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
    மோகம் காவல் மீறும்

    வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை
    மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை
    நாள்தோறும் வேதங்கள் பாடாதோ தேகங்கள்
    வானம் நிறம் மாறும் இளமாலை சுபவேளை
    மேகம் பனிதூவும் அது காமன் பரிபாஷை

  4. #23
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    maalai soodum vElai(naan magaan alla)

    பாடல்: மாலை சூடும் வேளை
    திரைப்படம்: நான் மகான் அல்ல
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

    மாலை சூடும் வேளை
    அந்தி மாலை தோறும் லீலை
    இன்ப மாலை சூடும் வேளை
    அந்தி மாலை தோறும் லீலை
    ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
    கண்ணாடிக் கன்னம் உண்டு
    மாலை சூடும் வேளை
    அந்தி மாலை தோறும் லீலை

    காயும் வெயில் காலம்
    பாயும் மழை நீயோ
    காயும் வெயில் காலம்
    பாயும் மழை நீயோ
    கோடையில் நான் ஓடை தானே
    வாடையில் நான் போர்வை தானே
    கோடையில் நான் ஓடை தானே
    வாடையில் நான் போர்வை தானே
    நீ கொஞ்ச நான் கெஞ்ச வேறென்ன இன்பம்
    நீண்ட நேரம் தோன்றுமோ

    மாலை சூடும் வேளை
    அந்தி மாலை தோறும் லீலை
    ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
    கண்ணாடிக் கன்னம் உண்டு
    மாலை சூடும் வேளை
    அந்தி மாலை தோறும் லீலை

    சோலை மஞ்சள் சேலை
    சூடும் அந்தி வேளை
    சோலை மஞ்சள் சேலை
    சூடும் அந்தி வேளை
    மாங்கனியாய் நீ குலுங்க
    ஆண் கிளியாய் நான் நெருங்க
    மாங்கனியாய் நீ குலுங்க
    ஆண் கிளியாய் நான் நெருங்க
    அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்
    ஆடை கொண்டு மூடுமோ

    மாலை சூடும் வேளை
    அந்தி மாலை தோறும் லீலை
    ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
    கண்ணாடிக் கன்னம் உண்டு
    மாலை சூடும் வேளை
    அந்தி மாலை தோறும் லீலை

  5. #24
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    rOjA onRu muththam kEtkum(kombEri mookkan)

    பாடல்: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும்
    திரைப்படம்: கொம்பேரி மூக்கன்
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

    ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
    வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
    மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
    ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
    வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

    தங்க மேனி தழுவும் பட்டுச்சேலை நழுவும்
    தென்றல் வந்து விளக்கும் அது உங்களோடு பழக்கம்
    சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன் மூடாதே
    மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு வாடாதே
    அல்லிப்பூவின் மகளே கன்னித்தேனை தா...ஹோய்

    ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
    வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
    மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
    ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
    வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

    வெண்ணிலாவில் விருந்து அங்கு போவோம் பறந்து
    விண்ணின் மீனைத் தொடுத்து சேலையாக உடுத்து
    தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய்போட
    நம்மை பார்த்து காமன் தேசம் ஜன்னல் சாத்தி வாயூற
    கன்னிக்கோயில் திறந்து பூஜை செய்ய வா...ஹோய்

    ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
    வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
    மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
    ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
    வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

  6. #25
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    thaamtha theemtha(pagalil oru iravu)

    பாடல்: தாம் ததீம்த ஆடும் உள்ளம்
    திரைப்படம்: பகலில் ஒரு இரவு
    இசை: இளையராஜா
    பாடியவர்: எஸ்.ஜானகி

    தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
    தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
    தாளம்...தீம்த தீம்த மேளம்...தீம் ததீம்
    ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம்
    தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்

    கனவுகள் பலிக்கும் பலிக்கும் காலம் நேரம் வந்து சேர்ந்தது
    கவிதைகள் அதிகம் அதிகம் காதல் தெய்வம் கொண்டு வந்தது
    உடல் நிலையிலும் மன நிலையிலும் புது உணர்வுகள் தோன்றின
    நதி திரண்டது மடை திறந்தது அலை எழுந்தன ஆடின
    தாளம்...தீம்த தீம்த மேளம்...தீம் ததீம்
    ஆடல்...பாடல்...ஊடல்...ஆயிரம்

    தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
    தாளம்...தீம்த தீம்த மேளம்...தீம் ததீம்
    ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம்
    தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்

    இனியது உறவு உறவு இன்று வந்து தெய்வம் சொன்னது
    இளமையின் வரவு வரவு அந்த நாணம் இன்று வந்தது
    கனி கனிந்ததும் மடி விழுந்ததும் சுகம் வளர்ந்ததும் கொஞ்சமா
    இது நடந்ததும் மனம் மலர்ந்தது இனி நடப்பது பஞ்சமா
    தாளம்...தீம்த தீம்த மேளம்...தீம் ததீம்
    ஆடல்...பாடல்...ஊடல்...ஆயிரம்

    தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்
    தாளம்...தீம்த தீம்த மேளம்...தீம் ததீம்
    ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும் மோகனம்
    தாம் ததீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்

  7. #26
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    poo maalaiyE(pagal nilavu)

    பாடல்: பூமாலையே
    திரைப்படம்: பகல் நிலவு
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

    பூமாலையே...தோள் சேர வா
    பூமாலையே...ஏங்கும் இரு...தோள் சேர வா
    ஏங்கும் இரு...இளைய மனது...இளைய மனது
    இணையும் பொழுது...இணையும் பொழுது
    இளைய மனது...தீம்தன தீம்தன
    இணையும் பொழுது...தீம்தன தீம்தன
    பூஜை மணி ஓசை பூவை மனதாசை
    புதியதோர் உலகிலே பறந்ததே
    பூமாலையே...ஏங்கும் இரு...தோள் சேர வா
    வாசம் வரும்...பூமாலையே
    ஏங்கும் இரு...தோள் சேர வா...வாசம் வரும் பூ

    நான் உனை நினைக்காத நாள் இல்லையே
    தேனினைத் தீண்டாத பூ இல்லையே
    னன னா...நான் உனை நினைக்காத நாள் இல்லையே
    என்னை உனக்கென்று கொடுத்தேன்
    தேனினைத் தீண்டாத பூ இல்லையே
    ஏங்கும் இளம் காதல் மயில் நான்
    தேன்துளி பூவாயில்...னன னா
    பூவிழி மான் சாயல்...னன னா
    தேன்துளி பூவாயில்...னன னா
    பூவிழி மான் சாயல்
    கன்னி எழுதும் வண்ணம் முழுதும்
    வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
    கன்னி எழுதும் வண்ணம் முழுதும்
    வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
    நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
    கலையெலாம் பழகுவோம் அனுதினம்

    பூமாலையே...ஏங்கும் இரு...தோள் சேர வா
    வாசம் வரும்...பூமாலையே
    ஏங்கும் இரு...தோள் சேர வா

    லலல லலா...கோடையில் வாடாத கோவில்புறா
    லல லா...காமனைக் காணாமல் காணும் கனா
    லல லா...கோடையில் வாடாத கோவில்புறா
    நாளும் தூங்காது ஏங்க
    காமனைக் காணாமல் காணும் கனா
    நாளும் மனம் போகும் எங்கோ
    விழிகளும் மூடாது...லல லா
    விடிந்திடக் கூடாது...லல லா
    விழிகளும் மூடாது...லல லா
    விடிந்திடக் கூடாது
    கன்னி இதயம் என்றும் உதயம்
    இன்று தெரியும் இன்பம் புரியும்
    கன்னி இதயம் என்றும் உதயம்
    இன்று தெரியும் இன்பம் புரியும்
    காற்று ஸ்ருதி மீட்ட தாளம் ஜதி கூட்ட
    கனவுகள் எதிர்வரும் அனுபவம்

    பூமாலையே...ஏங்கும் இரு...தோள் சேர வா
    வாசம் வரும்...பூமாலையே
    ஏங்கும் இரு...தோள் சேர வா...ஏங்கும் இரு
    இளைய மனது...இளைய மனது
    இணையும் பொழுது...இணையும் பொழுது
    இளைய மனது...தீம்தன தீம்தன
    இணையும் பொழுது...தீம்தன தீம்தன
    பூஜை மணி ஓசை பூவை மனதாசை
    புதியதோர் உலகிலே பறந்ததே
    பூமாலையே...ஏங்கும் இரு...தோள் சேர வா
    வாசம் வரும்...பூமாலையே
    ஏங்கும் இரு...தோள் சேர வா

  8. #27
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    poo enbadhA pon enbadhA(uyirE unakkaaga)

    பாடல்: பூ என்பதா பொன் என்பதா
    திரைப்படம்: உயிரே உனக்காக
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

    பூ என்பதா பொன் என்பதா
    பூமாலை நீயே ராதா
    கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
    வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
    பூ என்பதா பொன் என்பதா
    பூமாலை நீயே ராதா

    மேலாடையில் நூலாக வா
    மேலாடையே நானாக வா
    கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
    கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
    ஆனந்த மாறன் அம்பானது
    நெஞ்சுக்குள் பாய்ந்து வம்பானது
    உறங்கும் போது...னன னனனா னானா னா

    பூ என்பதா பொன் என்பதா
    பூமாலை நீயே ராதா
    கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
    வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்

    ஆசை மனம் மூடாதடி
    வாய் பேசுமோ உன் பூங்கொடி
    மௌனங்கள் காவல் காக்கும் ஆசைகள் கோடி
    மௌனங்கள் காவல் காக்கும் ஆசைகள் கோடி
    புண்ணாகச் செய்யும் ஆலிங்கனம்
    தாங்காது கண்ணா பிருந்தாவனம்
    தழுவும் போது...லல லலலா லாலா லா

    பூ என்பதா பொன் என்பதா
    பூமாலை நீயே ராதா
    கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
    வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
    பூ என்பதா பொன் என்பதா
    பூமாலை நீயே ராதா

  9. #28
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    engE unnai kaNdaal(chiththira sevvaanam)

    பாடல்: எங்கே உன்னைக் கண்டால்கூட
    திரைப்படம்: சித்திரச் செவ்வானம்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

    எங்கே உன்னைக் கண்டால்கூட நெஞ்சில் கொண்டாட்டம்
    ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்
    ஆ ஆ...தங்கம் போல அங்கம் அம்மா தாழம்பூவாட்டம்
    தாளாதம்மா நாள் முழுதும்
    அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்
    எங்கே உன்னைக் கண்டால்கூட நெஞ்சில் கொண்டாட்டம்
    ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்

    கண்டதுதானே வெள்ளிப்பூவை கொஞ்சம் பொறுங்களேன்
    கடலின் நீரை வெள்ளம் கொண்டு போவதில்லையே
    கண்டதுதானே வெள்ளிப்பூவை கொஞ்சம் பொறுங்களேன்
    கடலின் நீரை வெள்ளம் கொண்டு போவதில்லையே
    தண்ணீர் பட்டு குளிர்ந்த மேனி கொதிக்க வைத்ததேன்
    இன்று நாளை என்றும் உங்கள் உரிமை அல்லவா

    எங்கே உன்னைக் கண்டால்கூட நெஞ்சில் கொண்டாட்டம்
    ஆஹா ஹா ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்

    நெற்றிக்குங்குமம்...
    நெற்றிக்குங்குமம் கெட்டுப்போகுது சற்றே நில்லுங்கள்
    கட்டுக்கூந்தலை தொட்டுத்தழுவி சங்கதி சொல்லுங்கள்
    எட்டுப்பிறவிகள் எட்டும் போதிலும் நீயே மணவாட்டி
    இளமை அற்புதம் இன்பம் அற்புதம் வாடி ராஜாத்தி
    அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்

    எங்கே...ஆஆ ஆஆ ஆஆஆ
    எங்கே உன்னைக் கண்டால்கூட நெஞ்சில் கொண்டாட்டம்
    ஆ ஆ...ஏக்கம் தீர சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்
    ஆ ஆ...தங்கம் போல அங்கம் அம்மா தாழம்பூவாட்டம்
    தாளாதம்மா நாள் முழுதும்
    அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்

  10. #29
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    poonkaatrE theeNdaadhE(kunguma chimizh)

    பாடல்: பூங்காற்றே தீண்டாதே
    திரைப்படம்: குங்குமச் சிமிழ்
    இசை: இளையராஜா
    பாடியவர்: எஸ்.ஜானகி

    பூங்காற்றே தீண்டாதே
    என் நெஞ்சைத் தூண்டாதே
    பூவிழி மாதிவள் நீ தொடும் போதிவள்
    போராடும் எண்ணங்கள் தாங்காதே
    என் பொன்மேனி கண்மூடி தூங்காதே
    பூங்காற்றே தீண்டாதே
    என் நெஞ்சைத் தூண்டாதே

    வெள்ளிரத மேகமே செல்லுகின்ற போதிலே
    என் அருமை மன்னனை கண்டு வருவாய்
    கன்னி இளம் பூங்கொடி காதலெனும் வியாதியில்
    துன்பப்படும் சேதியை சொல்லிவந்து சேருவாய்
    தேகத்தில் மோகத்தீ ஆறாமல்
    தேய்ந்திடும் சூடத்தில் தேகத்தின் மாடத்தில்
    என் கண்ணன் கைசேர சொல்வாயோ
    என் தூதை நீ சொல்ல செல்வாயோ
    பூங்காற்றே தீண்டாதே
    என் நெஞ்சைத் தூண்டாதே

    கண்ணனவன் காலடி கண்டு தினம் சேரடி
    என்றும் உந்தன் பாதையில் இன்பங்களடி
    கங்கை நதி போலவே மங்கை மனம் ஓடுதே
    பொங்கி பல ராகமே இந்த மனம் பாடுதே
    பல்லாக்கில் ஊர்கோலம் போகாதோ
    மாதிவள் மான் இனம் பூவிதழ் தேன் இனம்
    உண்ணாமல் ஏங்காதோ என் உள்ளம்
    இனி என்னோடு ஒன்றாகும் உன் உள்ளம்

    பூங்காற்றே தீண்டாதே
    என் நெஞ்சைத் தூண்டாதே
    பூவிழி மாதிவள் நீ தொடும் போதிவள்
    போராடும் எண்ணங்கள் தாங்காதே
    என் பொன்மேனி கண்மூடி தூங்காதே
    பூங்காற்றே தீண்டாதே
    என் நெஞ்சைத் தூண்டாதே

  11. #30
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    sorgamE enRaalum(ooru vittu ooru vandhu)

    பாடல்: சொர்க்கமே என்றாலும்
    திரைப்படம்: ஊரு விட்டு ஊரு வந்து
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
    தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

    ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
    இங்கே ஏதும் கேட்கவில்லையே
    பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
    பார்க்க ஒரு சோலை இல்லையே
    வெத்தலைய மடிச்சி மாமன் அதை கடிச்சி
    துப்ப ஒரு வழி இல்லையே
    ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிச்சு
    ஆட ஒரு ஓடை இல்லையே
    இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு
    அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
    ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
    தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

    மாடு கண்ணு மேய்க்க மேயுறதப் பார்க்க
    மந்தைவெளி இங்கு இல்லையே
    ஆடுபுலி ஆட்டம் போட்டு விளையாட
    அரசமர மேடை இல்லையே
    காளை ரெண்டு பூட்டி கட்டைவண்டி ஓட்டி
    கானம் பாட வழி இல்லையே
    தோழிகளை அழைச்சி சொல்லிச் சொல்லி ரசிச்சி
    ஆட்டம் போட முடியலையே
    ஒரு எந்திரத்தைப்போல அட இங்கே உள்ள வாழ்க்கை
    இதை எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
    நம்மூரப்போல ஊரும் இல்ல

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
    தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

Page 3 of 10 FirstFirst 12345 ... LastLast

Similar Threads

  1. S. Janaki
    By aruvi in forum Current Topics
    Replies: 46
    Last Post: 24th September 2016, 09:18 PM
  2. Thyagaraja Krithis by S Janaki
    By AV in forum Current Topics
    Replies: 0
    Last Post: 22nd November 2007, 12:02 AM
  3. Which of the 2 is best - Old songs Lyrics / New Song lyrics
    By gentlebreeze in forum Current Topics
    Replies: 9
    Last Post: 2nd August 2006, 02:55 PM
  4. Who is the best singer - P.Susheela or S.Janaki
    By S.Balaji in forum Current Topics
    Replies: 3
    Last Post: 20th July 2005, 03:07 PM
  5. can you please help with lyrics ?
    By GayathriChandra in forum Indian Classical Music
    Replies: 1
    Last Post: 11th April 2005, 08:47 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •