Page 8 of 10 FirstFirst ... 678910 LastLast
Results 71 to 80 of 97

Thread: S.Janaki - Lyrics

  1. #71
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like

    sirikkinRa mugathai ( muradan muthu )

    பாடல் : சிரிக்கின்ற முகத்தை
    படம் : முரடன் முத்து
    இசை : டி.ஜி.லிங்கப்பா
    பாடியவர் : எஸ்.ஜானகி

    சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்
    தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்
    குறுகுறு என்னும் பார்வையிலே
    கொஞ்சும் நெஞ்சை சிறை செய்வேன்

    சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்

    தங்க நிலாவால் முகம் செய்வேன் - இரு
    தாமரைப்பூவால் விழி செய்வேன்
    செங்கரும்பாலே இதழ் செய்வேன்
    செங்கரும்பாலே இதழ் செய்வேன் - சிட்டுச்
    சிறகினை எடுத்தே இமை செய்வேன் - சிட்டுச்
    சிறகினை எடுத்தே இமை செய்வேன்

    சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்
    தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்
    சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்

    கோபுரத்தில் அந்த மணியை வைத்தான் - ஒரு
    குடிசையிலே என் செவியை வைத்தான்..
    ஆஆஆ... ஆஆஆ..
    கோபுரத்தில் அந்த மணியை வைத்தான் - ஒரு
    குடிசையிலே என் செவியை வைத்தான்..
    காதல் மணியின் ஓசையிலே
    காதல் மணியின் ஓசையிலே
    நான் கலந்து விட்டேன் அவன் ஆசையிலே
    நான் கலந்து விட்டேன் அவன் ஆசையிலே

    சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்
    தேகத்தைப் போல் ஒரு கலை செய்வேன்
    சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன் - அவன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #72
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    poonkodiyE poonkodiyE(School Master)

    பாடல்: பூங்கொடியே பூங்கொடியே
    திரைப்படம்: ஸ்கூல் மாஸ்டர்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

    பூங்கொடியே...பூங்கொடியே

    பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
    பொன்னைக் கொண்டு மாலைகட்டி மாலையிட வருவாயோ
    பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
    ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக
    பார்க்கவோ பறிக்கவோ சேர்க்கவோ அணியவோ
    பெண்ணின் மனதில் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால்
    போதாதோ...போதாதோ...போதாதோ
    பொன்னைக் கொண்டு மாலைகட்டி
    மாலையிட வருவாயோ...மாலையிட வருவாயோ

    கண்களிலே நாணம் வரும் கைகளினால் மூடி விட்டேன்
    கைகளினால் மூடி விட்டால் காதலுமா ஒட்டி விடும்
    கன்னங்களில் என்னென்னவோ மின்னல் விளையாடும்
    தாங்கவோ...தழுவவோ..உண்ணவோ...உருகவோ
    வருஷம் மாதம் போகப்போக வளரும் ஆசை
    தீராது...தீராது...தீராது

    பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
    பொன்னைக் கொண்டு மாலைகட்டி மாலையிட வருவாயோ

    பூமியிலே வானம் வந்து போதைகொண்டு சேர்ந்துவிடும்
    சேர்ந்தவுடன் மழை பொழியும் பூமியெங்கும் வெள்ளம் வரும்
    வெள்ளத்தினால் பிள்ளைகள் போல் முல்லை விளையாடும்
    எடுக்கவோ...தொடுக்கவோ...கொடுக்கவோ...முடிக்கவோ

    பெண்ணின் மனதில் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால்
    போதாதோ...போதாதோ...போதாதோ
    பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
    பொன்னைக் கொண்டு மாலைகட்டி
    மாலையிட வருவாயோ...மாலையிட வருவாயோ

  4. #73
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    singaara vElanE(konjum salangai)

    பாடல்: சிங்கார வேலனே தேவா
    திரைப்படம்: கொஞ்சும் சலங்கை
    இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு
    பாடியவர்: எஸ்.ஜானகி

    சிங்கார வேலனே தேவா
    அருள் சிங்கார வேலனே தே...வா
    அருள் சீராடும் மார்போடு வா..வா
    சிங்கார வேலனே தே...வா
    சிங்கார வேலனே தே...வா

    செந்தூரில் நின்றாடும் தேவா
    திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா
    முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
    அருள் சிங்கார வேலனே தேவா

    செந்தமிழ் தேவனே சீலா
    செந்தமிழ் தேவனே சீ...லா
    விண்ணோர் சிறைமீட்டு குறை தீர்த்த வேலா
    அருள் சிங்கார வேலனே தே...வா
    ஸ...க...ம...ப...நி சிங்கார வேலனே தேவா
    நிஸ நித பம...கம கரி ஸநி...ஸநி ஸக மப
    மகரிஸ நிதமப கரிநி சிங்கார வேலனே தேவா
    ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...மம பப நிநிஸ
    ககஸ ககஸ நிநிஸ பபநி மமப கக மம பப நிநி ஸஸ கரிநி
    பா நித பம கரி ஸநி ஸகக ஸகக ஸக மப கரி ஸநி ஸகஸா
    நிநிப மமப நிப நிபஸ பநி பஸ நித பம கரி ஸகஸா
    கம பநிஸா நிஸ கரி ஸரிநி ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
    கரிநி கரிக நிரி கரி நிக ரிநி
    நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா
    நிநி நிஸா...ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
    ஸநிஸ மக மப கம பநி ஸரி....ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
    ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி
    பநி பஸ பநி பநி மபக பநிப நிஸ கஸா
    பநிப நிஸ ரிஸா...மக பம
    ஸரிநி...நிஸபா...ஸரிஸநி...ஸரிஸ ஸரிஸ ஸரிஸ
    .................................................. ..........................
    சிங்கார வேலனே தேவா
    அருள் சீராடும் மார்போடு வா
    சிங்கார வேலனே தேவா

  5. #74
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    பிரியா..

    ஸ்வரங்கள் முழுசா இல்லாத மாதிரி தோணுதே.. !

  6. #75
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    Madhu,

    The last set of Swaram in the song is blended with nadhaswaram, ippOdhaikku puLLi vachchi adhOda niRuththi irukkEN.

    ennaikku Sawaram puriyudhO, annaikku ezhudhi edit paNNuREn!

  7. #76
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Feb 2005
    Location
    Chennai
    Posts
    5
    Post Thanks / Like

    kaNNan manam ennavO(vasantha raagam)

    படம் : வசந்தராகம்
    இசை : M.S. விஸ்வநாதன்
    பாடல்: கண்ணன் மனம் என்னவோ

    கண்ணா… கண்ணா…. கண்ணா…
    கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
    கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே
    அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
    தினம் வாடாமல் நான் வாடினேன்
    மீராவைப் போல் ஏங்கினேன்
    தினம் வாடாமல் நான் வாடினேன்
    கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
    கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே


    கானத்தில் குழல் நாதத்தில் ஒரு கந்தர்வ லோகத்தில்
    எனைக் கொண்டுச் சேர்ப்பான்
    மோனத்தில் அந்தி நேரத்தில் அவன் முந்நூறு முத்தங்கள்
    ஒன்றாகக் கேட்பான்
    கார்கூந்தல் தனை நிவுவான் அதில்
    கல்யாண சுகம் தேடுவான்
    அந்தக் கணத்தில் என் உதட்டில் தன் உதட்டால்
    முத்தெடுப்பான். வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ

    கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
    கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

    மோகத்தில் விழி ஓரத்தில் கண்ணன் பார்த்தாலும் என்
    நெஞ்சில் பசி ஆறிப் போகும்
    காமத்தில் நடு ஜாமத்தில்
    இமை மூடாத என் கண்ணில் நதி ஓடி பாயும்
    மை கூட கரைகின்றதே இன்று பன்னீரும் சுடுகின்றதே
    அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான்
    கண்மணிக்குள் இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்

    கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
    கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

  8. #77
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Feb 2005
    Location
    Chennai
    Posts
    5
    Post Thanks / Like

    orE muRai un dharisanam(en jeevan paadudhu)

    படம்: என் ஜீவன் பாடுது
    இசை: இளையராஜா
    ஆண்டு: 1988
    பாடல்: ஒரே முறை உன் தரிசனம்


    ஒரே முறை உன் தரிசனம்
    உலா வரும் நம் ஊர்வலம்

    ஒரே முறை உன் தரிசனம்
    உலா வரும் நம் ஊர்வலம்
    என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
    நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

    ஒரே முறை உன் தரிசனம்
    உலா வரும் நம் ஊர்வலம்

    இளமை என்னும் பருவம் சிறிது காலமே
    உறவில் காணும் சுகமும் விரைவில் மாறுமே
    தென்றல் வந்துத் தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே
    கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்
    கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்

    ஆத்ம ராகம் பாடுவோம் அளவில்லாத ஆனந்தம் மனதிலே

    ஒரே முறை உன் தரிசனம்
    உலா வரும் நம் ஊர்வலம்
    என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
    நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

    ஒரே முறை உன் தரிசனம்
    உலா வரும் நம் ஊர்வலம்

    தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம்
    தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம்
    கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே
    உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா
    உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா

    வானம் பூமி ஆகலாம் மனது தானே காரணம் உலகிலே

    ஒரே முறை உன் தரிசனம்
    உலா வரும் நம் ஊர்வலம்

    ஒரே முறை உன் தரிசனம்
    உலா வரும் நம் ஊர்வலம்
    என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
    நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

    ஒரே முறை உன் தரிசனம்
    உலா வரும் நம் ஊர்வலம்

  9. #78
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    Welcome to SJ's Lyric thread Sreesharan!

    Please check your PM!

  10. #79
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    poovE panippoovE(nilavu suduvadhillai)

    பாடல்: பூவே பனிப்பூவே
    திரைப்படம்: நிலவு சுடுவதில்லை
    இசை: இளையராஜா

    பூவே பனிப்பூவே நானும் மலர்தானே
    பூந்தளிர் தாளங்கள் போடும்
    புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
    பூந்தளிர் தாளங்கள் போடும்
    புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
    பூவே பனிப்பூவே நானும் மலர்தானே

    என் மேனி ஏன் இளம் பனியினில் வேகுது
    உன்னோடு பேசவே மொழியும் நாணுது
    என் மேனி ஏன் இளம் பனியினில் வேகுது
    உன்னோடு பேசவே மொழியும் நாணுது
    பூக்கோலம் கண்ணில் கண்டு ஏங்குதே மனம்
    பார்க்காத நாளில் நெஞ்சம் தூங்குமா இனி
    கண்ணோடு சல்லாபம்...எந்நாளும் உல்லாசம்

    பூந்தளிர் தாளங்கள் போடும்
    புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
    பூவே பனிப்பூவே நானும் மலர்தானே

    காதோரம் ஆயிரம் கதை நான் கூறுவேன்
    ஏழேழு ஜென்மமும் உனைத்தான் பாடுவேன்
    காதோரம் ஆயிரம் கதை நான் கூறுவேன்
    ஏழேழு ஜென்மமும் உனைத்தான் பாடுவேன்
    உன் மாலை மார்பில் சூடும் நாளைத் தேடியே
    பொன் மேக வானில் பாடும் வானம்பாடி நான்
    நெஞ்செல்லாம் சங்கீதம்...நாளெல்லாம் சந்தோஷம்

    பூந்தளிர் தாளங்கள் போடும்
    புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
    பூவே பனிப்பூவே நானும் மலர்தானே

  11. #80
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    kanavugaLE oorgOlam engE(saamandhippoo)

    பாடல்: கனவுகளே ஊர்கோலம் எங்கே
    திரைப்படம்: சாமந்திப்பூ
    இசை: இளையராஜா

    கனவுகளே ஊர்கோலம் எங்கே
    கவிதையைத் தேடும் ராகம் இங்கே
    பாடிடும் உள்ளம் ஒன்று
    காண வேண்டும் இன்பம் என்று

    கனவுகளே ஊர்கோலம் எங்கே
    கவிதையைத் தேடும் ராகம் இங்கே
    பாடிடும் உள்ளம் ஒன்று
    காண வேண்டும் இன்பம் என்று

    தென்றல் காற்றிலே இவள் சேதி போனது
    தேடும் பாதையில் சில நேரம் ஆனது
    தென்றல் காற்றிலே இவள் சேதி போனது
    தேடும் பாதையில் சில நேரம் ஆனது
    திரும்பும் பொழுது அந்த தேவனின் நினைவு
    சொல் தீயாகித்தான் வாட்டுதே
    இவள் மோகத்தை மீட்டுதே

    கனவுகளே ஊர்கோலம் எங்கே
    கவிதையைத் தேடும் ராகம் இங்கே

    எண்ணம் யாவிலும் ஒரு தாகம் கூடுதே
    ஏங்கும் போதிலே இவள் தேகம் வாடுதே
    தவிக்கும் வயதில் தணியாதது நினைவு
    கண் மூடாமல்தான் தூங்குமோ
    கண நேரம் யுகம் ஆகுமோ

    கனவுகளே ஊர்கோலம் எங்கே
    கவிதையைத் தேடும் ராகம் இங்கே
    பாடிடும் உள்ளம் ஒன்று
    காண வேண்டும் இன்பம் என்று

Page 8 of 10 FirstFirst ... 678910 LastLast

Similar Threads

  1. S. Janaki
    By aruvi in forum Current Topics
    Replies: 46
    Last Post: 24th September 2016, 09:18 PM
  2. Thyagaraja Krithis by S Janaki
    By AV in forum Current Topics
    Replies: 0
    Last Post: 22nd November 2007, 12:02 AM
  3. Which of the 2 is best - Old songs Lyrics / New Song lyrics
    By gentlebreeze in forum Current Topics
    Replies: 9
    Last Post: 2nd August 2006, 02:55 PM
  4. Who is the best singer - P.Susheela or S.Janaki
    By S.Balaji in forum Current Topics
    Replies: 3
    Last Post: 20th July 2005, 03:07 PM
  5. can you please help with lyrics ?
    By GayathriChandra in forum Indian Classical Music
    Replies: 1
    Last Post: 11th April 2005, 08:47 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •