Page 9 of 10 FirstFirst ... 78910 LastLast
Results 81 to 90 of 97

Thread: S.Janaki - Lyrics

  1. #81
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    en raagangaL(mudhal iravu)

    பாடல்: என் ராகங்கள்
    திரைப்படம்: முதல் இரவு
    இசை: இளையராஜா

    என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
    என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
    இவள் தாளங்கள் சம காலங்கள்
    என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

    பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
    ஆஆ ஆஆஆ...லால லல்ல லால லல்ல லல லலா
    பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
    கிள்ளைகளே...பேசுங்களே
    கிள்ளைகளே பேசுங்களே என் எண்ணங்களை
    மின்னல்களை தேராக்குவேன்
    கல்யாண ஊர்கோலம் கொண்டாட

    என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
    இவள் தாளங்கள் சம காலங்கள்
    என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

    மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
    மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
    காதல் மகள்...ராதை தந்தாள்
    காதல் மகள் ராதை தந்தாள் என் மாங்கல்யம்
    கண்ணன் தரும் பொன்னூஞ்சலில்
    அம்மாடி அம்மாடி நான் ஆட
    என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

    அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
    அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
    அத்தானிடம்...பேசுங்களேன்
    அத்தானிடம் பேசுங்களேன் என் ஆசைகளை
    கட்டில் வரும் தொட்டில் வரும்
    கண்ணான பிள்ளைக்கு தாலாட்டு

    என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
    இவள் தாளங்கள் சம காலங்கள்
    என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #82
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Feb 2005
    Location
    Chennai
    Posts
    5
    Post Thanks / Like

    paarthEan pon manam paarthEan thalaivaa

    பாடல்: பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
    படம்: அக்னி பார்வை
    ஆண்டு: 1992
    இசை: இளையராஜா


    பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
    தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா
    வீணை பெண் எனும் வீணை
    எடுத்தேனே பண்பாடு ஒய்யா ஒய்யர ஒய்யா
    அந்த ராமனைப் போலே இந்த பூமியின் மேலே

    இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
    தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா

    ஶ்ரீராமன் ஜானகி நீங்காத நாயகி நான் தான் அன்பே
    பூர்வீக பந்தமும் தெய்வீக சொந்தமும் உன்னால் கண்டேன்
    நேசம் எனும் காவியம் பேசும் உயிர் ஓவியம்
    உனை நீங்குமா கண் தூங்குமா ஜீவன் நீயே

    இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
    தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா ஒய்யா ஒய்யர ஒய்யா

    தாயாகும் ஓர் வரம் நான் கேட்க நீ தரும் நாள் தான் கூட
    பேர் சொல்ல ஓர் மகன் சீர் கொள்ள ஓர் மகள்
    தோள் மேல் ஆட
    வாங்கும் உயிர் மூச்சிலும் பேசும் தமிழ் பேச்சிலும்
    இளம் பாவை தான் உன் பேரைத் தான் நாளும் பாடும்

    இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
    தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா
    வீணை பெண் எனும் வீணை
    எடுத்தேனே பண்பாடு ஒய்யா ஒய்யர ஒய்யா
    அந்த ராமனைப் போலே இந்த பூமியின் மேலே

    இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
    தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா ஒய்யா ஒய்யர ஒய்யா

  4. #83
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    adhikaalai sugavELai(natpu)

    பாடல்: அதிகாலை சுகவேளை
    திரைப்படம்: நட்பு
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: எஸ்.ஜானகி & கே.ஜே.யேசுதாஸ்

    அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
    அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
    காதல் சொன்ன காகிதம் பூவாய் போனது
    வானில் போன தேவதை வாழ்த்து சொன்னது
    ஒரு தத்தை கடிதத்தை தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

    அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
    அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

    அன்பே வா வா அணைக்க வா
    நீ நிலவுக்கு பிறந்தவளா
    போதை வண்டே பொறுத்திரு
    இன்று மலருக்கு திறப்புவிழா
    உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
    உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
    ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் கனியே
    இதழ் ஓரம் அமுதூறும் பரிமாறும் இனியே
    அடி தப்பிப் போகக்கூடாதே

    அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
    அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

    தென்றல் வந்து தீண்டினால்
    இந்த தளிர் என்ன தடை சொல்லுமா
    பெண்மை பாரம் தாங்குமா
    அந்த இடை ஒரு விடை சொல்லுமா
    என்னை சேர்ந்த உன் உள்ளம் ஈரம் மாறுமா
    தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
    இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
    மலர்மாலை அணியாமல் உறங்காது மனது
    இது போதும் சொர்க்கம் வேறேது

    அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
    அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
    காதல் சொன்ன காகிதம் பூவாய் போனது
    வானில் போன தேவதை வாழ்த்து சொன்னது
    ஒரு தத்தை கடிதத்தை தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க

    அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
    அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது

  5. #84
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    madhukkadalO(kumarippeNNin uLLaththilE)

    பாடல்: மதுக்கடலோ
    திரைப்படம்: குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
    இசை: ஷங்கர் கணேஷ்
    பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி

    மதுக்கடலோ மரகத ரதமோ
    மதன் விடும் கணையோ
    மழை முகில் விழியோ
    கனி இதழ் சுவைதனில்
    போதை ஊட்டும் கோதை
    மனம் கவர் ராதை நீயே சீதை

    மதுக்கடலோ மரகத ரதமோ
    மதன் விடும் கணையோ
    மழை முகில் விழியோ
    கனி இதழ் சுவைதனில்
    போதை ஊட்டும் கோதை
    மனம் கவர் ராதை...நீயே சீதை

    கண்ணாலே உனைப்பார்த்த நேரம்
    இன்று என் வாழ்வில் ராஜ யோகம்
    உன் வாசல் நான் தேடி வந்தேன்
    நெஞ்சில் பொன்வீணை மீட்ட வந்தேன்
    உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம்
    உன்னை பார்த்தாலே உண்டாகும் வேகம்
    உந்தன் பார்வை புது மோஹ ராகம்

    மதுக்கடலோ மரகத ரதமோ
    மதன் விடும் கணையோ
    மழை முகில் விழியோ
    கனி இதழ் சுவைதனில்
    போதை ஊட்டும் கோதை
    மனம் கவர் ராதை நானே சீதை
    போதை ஊட்டும் கோதை
    மனம் கவர் ராதை நானே சீதை

    கள்ளூறும் ரோஜாவை பாராய்
    தொட்டு விளையாட ஓடி வாராய்
    உன் கூந்தல் நிழலோரம் நானே
    கொஞ்சம் இளைபாற வேண்டும் மானே
    உந்தன் தோள்மீது கிளியாக வேண்டும்
    உந்தன் தோள்மீது கிளியாக வேண்டும்
    உந்தன் மார்பில் உறவாட வேண்டும்

    மதுக்கடலோ மரகத ரதமோ
    மதன் விடும் கணையோ
    மழை முகில் விழியோ
    கனி இதழ் சுவைதனில்
    போதை ஊட்டும் கோதை
    மனம் கவர் ராதை நானே சீதை
    போதை ஊட்டும் கோதை
    மனம் கவர் ராதை நானே சீதை

  6. #85
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    பாடல்: அந்தரங்கம் நான் அறிவேன்
    திரைப்படம்: கங்கா கௌரி
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்கள்: பி.பி.ஶ்ரீனிவாஸ் & எஸ்.ஜானகி

    அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே
    அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

    மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே
    மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே
    வந்த வழி நான் அறிவேன் மங்கை எனை நீ அறிவாய்
    வந்த வழி நான் அறிவேன் மங்கை எனை நீ அறிவாய்
    அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

    தேடி வந்த சிலையைக்கண்டு மூடிக்கொண்ட கண்கள்
    இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்
    தேடி வந்த சிலையைக்கண்டு மூடிக்கொண்ட கண்கள்
    இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்

    மணந்தவனை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள்
    மணந்தவனை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள்
    தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்
    என் மன்னவா உண்மை சொல்லவா
    பெண்மை அல்லவா என்னை வெல்லவா
    அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

    தாமரையில் குடியிருக்கும் தங்கமலர் தேவி
    உன்னைத்தான் நினைந்து தழுவிக்கொள்ளும் தேவன் இவன் ஆவி
    தாமரையில் குடியிருக்கும் தங்கமலர் தேவி
    உன்னைத்தான் நினைந்து தழுவிக்கொள்ளும் தேவன் இவன் ஆவி

    அறிவேனே சாகசங்கள் இதுவரையில் போதும்
    அறிவேனே சாகசங்கள் இதுவரையில் போதும்
    அலைமோதும் காதலுடன் பூமகளைப் பாரும்
    அலைமோதும் காதலுடன் பூமகளைப் பாரும்
    என் மன்னவா உண்மை சொல்லவா
    பெண்மை அல்லவா என்னை வெல்லவா

    அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே
    அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

  7. #86
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    பாடல்: பூமகள் மேனி துளிர்விடும் காலம்
    திரைப்படம்: ஞாயிறும் திங்களும்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

    பூமகள் மேனி துளிர்விடும் காலம் வசந்தகாலம்
    பூவிடம் வண்டு தேன்பெறும் காலம் வசந்தகாலம்
    ஆறுகள் தோறும் நீர்வரும் காலம் வசந்தகாலம்
    அறியாத நெஞ்சும் விளையாடும் காலம் வசந்தகாலம்

    பூமகள் மேனி துளிர்விடும் காலம் வசந்தகாலம்
    பூவிடம் வண்டு தேன்பெறும் காலம் வசந்தகாலம்
    ஆறுகள் தோறும் நீர்வரும் காலம் வசந்தகாலம்
    அறியாத நெஞ்சும் விளையாடும் காலம் வசந்தகாலம்

    கண்ணும் நெஞ்சும் முன்னும் பின்னும்
    தடுமாறும் காலம் இதுவல்லவோ
    கந்தன் என்னை ஆளும் காலம்
    கனிவான காலம் இதுவல்லவோ

    கண்ணும் நெஞ்சும் முன்னும் பின்னும்
    தடுமாறும் காலம் இதுவல்லவோ
    கந்தன் என்னை ஆளும் காலம்
    கனிவான காலம் இதுவல்லவோ

    காவலில் நின்ற பாவை என் எண்ணம் மலர்ந்த காலம்
    காவலன் வேலன் நாயகன் என்னை அறிந்த காலம்
    கோவிலில் தெய்வம் குடிகொள்ள வந்த குளிர்ந்தகாலம்
    குடைபோல நாணம் படைகொண்டு மூடும் வசந்தகாலம்

    பூமகள் மேனி துளிர்விடும் காலம் வசந்தகாலம்
    பூவிடம் வண்டு தேன்பெறும் காலம் வசந்தகாலம்
    ஆறுகள் தோறும் நீர்வரும் காலம் வசந்தகாலம்
    அறியாத நெஞ்சும் விளையாடும் காலம் வசந்தகாலம்

    அன்பால் பண்பால் தன்பால் பெண்பால்
    உறவாட வந்த நேரத்திலே
    அண்ணல் வேலன் தன்னைத் தந்தான்
    அறியாத பாவை இதயத்திலே

    அன்பால் பண்பால் தன்பால் பெண்பால்
    உறவாட வந்த நேரத்திலே
    அண்ணல் வேலன் தன்னைத் தந்தான்
    அறியாத பாவை இதயத்திலே

    மாதர்கள் சேர்ந்து மங்கலம் பாடும் வசந்தகாலம்
    மாதர்கள் சேர்ந்து மங்கலம் பாடும் வசந்தகாலம்
    மார்கழி திங்கள் பேர்பெறும் காலம் வசந்தகாலம்
    வாவென சொல்லி தழுவிடும் காலம் வசந்தகாலம்
    வண்டாடும் தென்றல் பண்பாடும் காலம் வசந்தகாலம்

    பூமகள் மேனி துளிர்விடும் காலம் வசந்தகாலம்
    பூவிடம் வண்டு தேன்பெறும் காலம் வசந்தகாலம்
    ஆறுகள் தோறும் நீர்வரும் காலம் வசந்தகாலம்
    அறியாத நெஞ்சும் விளையாடும் காலம் வசந்தகாலம்

  8. #87
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    பாடல்: இங்கே இங்கே இங்கே
    திரைப்படம்: மாடிவீட்டு ஏழை
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர்

    இங்கே...இங்கே...இங்கே
    இன்ப உலகங்களின் எல்லை இங்கே
    இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
    இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே
    இனிமை இனிமை அது கொள்ளை இங்கே
    இங்கே...இங்கே...இங்கே

    சிம்ம குரல்கொண்ட கலைஞன் இங்கே
    ராஜநடை போடும் மறவன் இங்கே
    சிம்ம குரல்கொண்ட கலைஞன் இங்கே
    ராஜநடை போடும் மறவன் இங்கே
    நவரச பாவனை நடிகன் இங்கே
    நல்ல மனிதர்களில் ஒருவன் இங்கே

    இன்ப உலகங்களின் எல்லை இங்கே
    இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
    இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே
    இனிமை இனிமை அது கொள்ளை இங்கே
    இங்கே...இங்கே...இங்கே

    மஞ்சள் வண்ண மாங்கனி
    மின்னல் இடை மோகினி
    முத்து மணி பைங்கிளி
    தத்தி வரும் பூங்கொடி
    ஆடும் உன்னோடு தான்
    ஆடும் உன்னோடு தான்

    கன்னி என்னும் தாமரை
    கன்னம் அதில் தேன்மழை
    சின்னஞ்சிறு பூநகை
    சிந்துகின்ற மேனகை
    பாடும் பண்ணோடு தான்

    உன்னை அழைத்தது ஆசை நெஞ்சம்
    தன்னை மறந்தது தோகை கொஞ்சம்
    நல்ல இளமையின் வேகம் இங்கே
    உள்ள வீணையின் ராகம் அங்கே
    இங்கே...இங்கே...இங்கே

    மொட்டு விட்ட மல்லிகை
    தொட்டு விடச் சொன்னது
    கிட்ட வந்த தென்றலோ
    எட்டி எட்டி சென்றது
    ஏக்கம் என்னாவது
    ஏக்கம் என்னாவது

    அத்தை பெற்ற பிள்ளையோ
    அள்ள அள்ள கண்மணி
    மெத்தை இடச் சொல்வதோ
    என்னை இந்த பொன்மணி
    மோகம் பொல்லாதது

    மங்கை பிறந்தது நீதான் கொஞ்ச
    நாணம் பிறந்தது நான்தான் கெஞ்ச
    கன்னி மலருக்கு நானா தென்றல்
    மஞ்சள் நிலவுக்கு நானா மேகம்
    இங்கே...இங்கே...இங்கே

    இன்ப உலகங்களின் எல்லை இங்கே
    இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே
    இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே
    இனிமை இனிமை அது கொள்ளை இங்கே

  9. #88
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    ponvaanam panneer thoovuthu(indRu nee naaLai naan)

    பாடல்: பொன்வானம் பன்னீர் தூவுது
    திரைப்படம்: இன்று நீ நாளை நான்
    இசை: இளையராஜா

    பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
    பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
    அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
    பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

    மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
    மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
    மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
    மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
    இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
    இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
    இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா
    பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

    தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
    பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ
    மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
    மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
    இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
    இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
    மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா

    பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
    அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
    பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

  10. #89
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    idhu kanavugaL viLaindhidum(nizhal thEdum nenjangaL)

    பாடல்: இது கனவுகள் விளைந்திடும் காலம்
    திரைப்படம்: நிழல் தேடும் நெஞ்சங்கள்
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி & எஸ்.ஜானகி

    இது கனவுகள் விளைந்திடும் காலம்
    மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
    என் பாதையில் ஒரு தேவதை
    வந்து நிரந்தர வரம் தரும் நேரம்
    நீதானா நீதானா இது நீதானா நீதானா

    பாருங்கள் விழி ஓரங்கள் அங்கு நாணங்கள் குளிக்கும்
    பாருங்கள் விழி ஓரங்கள் அங்கு நாணங்கள் குளிக்கும்
    பூபாளமே இசை பாடுதோ பூமாலையே பூச்சூடுதோ
    இனி என் தேகம் பன்னீரில் நீராடும்
    உனைக்கண்டாலே நெஞ்சோரம் தேனூறும்

    இது ரகசிய அனுபவம் ஆகும்
    எந்தன் விழிகளில் மிதந்தது நாணம்
    தொலை தூரத்தில் அந்தி நேரத்தில்
    அந்த கடலோடு கலந்தது வானம்
    நான்தானா நான்தானா இது நான்தானா நான்தானா

    பூமேகம் இன்று தேன் தூவும் இனி ஆகாயம் அருகே
    பூமேகம் இன்று தேன் தூவும் இனி ஆகாயம் அருகே
    என் பாதையோ வேறானது உன் பார்வையால் வேறானது
    ஒரு பெண் மாலை என் தோளில் ஆடாதோ
    இனி உன் பாதம் என் கோயில் ஆகாதோ

    தன னன னன தன னன னன
    இது கனவுகள் விளைந்திடும் காலம்
    மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
    தொலைதூரத்தில் அந்தி நேரத்தில்
    அந்த கடலோடு கலந்தது வானம்
    நீதானா நீதானா இது நான்தானா நான்தானா
    இது நீதானா நீதானா இது நான்தானா நான்தானா

  11. #90
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    mugam senthaamarai endRaanE(vEdikkai manidhargaL)

    பாடல்: முகம் செந்தாமரை என்றானே
    திரைப்படம்: வேடிக்கை மனிதர்கள்
    இசை: ஷங்கர் கணேஷ்

    முகம் செந்தாமரை என்றானே
    இதழ் ரோஜாவென சொன்னானே
    முகம் செந்தாமரை என்றானே
    இதழ் ரோஜாவென சொன்னானே
    முகம் தாமரை மலரா
    இதழ் ரோஜா நிறமா
    அடியே நீயே சொல்லு

    முகம் செந்தாமரை என்றானே
    இதழ் ரோஜாவென சொன்னானே
    முகம் தாமரை மலரா
    இதழ் ரோஜா நிறமா
    அடியே நீயே சொல்லு

    மானாட்டம் விழியென்றான்
    மயிலாட்டம் ஒயிலென்றான்
    மானா மயிலா நானா அறியேனே
    மானாட்டம் விழியென்றான்
    மயிலாட்டம் ஒயிலென்றான்
    மானா மயிலா நானா அறியேனே
    மான் கூட்டம் என்னாட்டம் பேசுமோ
    பெண்ணாட்டம் மயிலாடுமோ
    முல்லைக்கொடியே முத்துக்கிளியே
    இந்த சந்தேகம் தீருங்களேன்
    முல்லைக்கொடியே முத்துக்கிளியே
    இந்த சந்தேகம் தீருங்களேன்

    முகம் செந்தாமரை என்றானே
    இதழ் ரோஜாவென சொன்னானே
    முகம் தாமரை மலரா
    இதழ் ரோஜா நிறமா
    அடியே நீயே சொல்லு

    இனி ஒரு முறை அவன் வரும் வரை
    மனம் தவிப்பதை உடல் கொதிப்பதை
    யாரிடம் போய் நான் சொல்வது
    இனி ஒரு முறை அவன் வரும் வரை
    மனம் தவிப்பதை உடல் கொதிப்பதை
    யாரிடம் போய் நான் சொல்வது
    அவன் மீண்டும் வருவானா
    மலர் மேனி தொடுவானா
    அவன் கூட மனம் ஓட
    அவன் பார்வை விழி தேட
    உறங்காமல் பொழுதோடுது
    அவன் கூட மனம் ஓட
    அவன் பார்வை விழி தேட
    உறங்காமல் பொழுதோடுது

    முகம் செந்தாமரை என்றானே
    இதழ் ரோஜாவென சொன்னானே
    முகம் தாமரை மலரா
    இதழ் ரோஜா நிறமா
    அடியே நீயே சொல்லு

    அவன் என்னைத் தாலாட்ட
    நான் கொஞ்சிப் பாராட்ட
    புதுநாள் திருநாள் சுபநாள் வர வேண்டும்
    அவன் என்னைத் தாலாட்ட
    நான் கொஞ்சிப் பாராட்ட
    புதுநாள் திருநாள் சுபநாள் வர வேண்டும்
    அவன் மார்பில் பொன்னூஞ்சல் ஆடுவேன்
    ஆனந்த நீராடுவேன்
    இன்ப நினைவும் இந்த சுகமும்
    இனி என்றேன்றும் நிலையாகுமே
    இன்ப நினைவும் இந்த சுகமும்
    இனி என்றேன்றும் நிலையாகுமே

    முகம் செந்தாமரை என்றானே
    இதழ் ரோஜாவென சொன்னானே
    முகம் தாமரை மலரா
    இதழ் ரோஜா நிறமா
    அடியே நீயே சொல்லு
    அடியே நீயே சொல்லு
    அடியே நீயே சொல்லு

Page 9 of 10 FirstFirst ... 78910 LastLast

Similar Threads

  1. S. Janaki
    By aruvi in forum Current Topics
    Replies: 46
    Last Post: 24th September 2016, 09:18 PM
  2. Thyagaraja Krithis by S Janaki
    By AV in forum Current Topics
    Replies: 0
    Last Post: 22nd November 2007, 12:02 AM
  3. Which of the 2 is best - Old songs Lyrics / New Song lyrics
    By gentlebreeze in forum Current Topics
    Replies: 9
    Last Post: 2nd August 2006, 02:55 PM
  4. Who is the best singer - P.Susheela or S.Janaki
    By S.Balaji in forum Current Topics
    Replies: 3
    Last Post: 20th July 2005, 03:07 PM
  5. can you please help with lyrics ?
    By GayathriChandra in forum Indian Classical Music
    Replies: 1
    Last Post: 11th April 2005, 08:47 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •