Page 119 of 119 FirstFirst ... 1969109117118119
Results 1,181 to 1,189 of 1189

Thread: KOLANGAL - unkal paakam

  1. #1181
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    aanaa.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1182
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    'கோலங்கள்' நிறைவடைந்தது......
    ........்.

    நான் பெரிதும் மதிக்கும் எஸ்.சத்யா அவர்களால் துவங்கப்பட்ட இந்த கோலங்கள் திரி, பலராலும் தொடரப்பட்டு வெற்றிகரமாக முடிவை எட்டியுள்ளது. வடம் பிடித்து வழிநடத்திய அத்தனை அன்பு இதயங்களுக்கும் நன்றி.

    ஆம்.... கோலங்கள் நிறைந்து விட்டது...
    தொடக்கத்தில் வந்துபோன பொன்வண்ணன் ,விஜி சந்திரசேகர்,- பாஸ்கரின் சகோதரி - ..
    "அன்பே சிவம்.

  4. #1183
    Senior Member Devoted Hubber gta129's Avatar
    Join Date
    Aug 2005
    Location
    Canada
    Posts
    370
    Post Thanks / Like
    The serial is finally over. We haven't watched it in months, but surprised to learn they actually ended.
    Take Care .

  5. #1184
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    அடுத்து புதிதாக 'தென்றல்' என்ற ஒரு தொடருக்கான விளம்பரம் சன் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. நீங்கள் சொன்ன (திருச்செல்வம் இயக்கும்) தொடர் அதுதானா? அல்லது அது வேறா..?.
    ?.

    மாதவி



    [html:ea61093f71]<div align="center"><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/XjkQYf-EOao&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_U S&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/XjkQYf-EOao&rel=0&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_U S&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="425" height="344"></embed></object></div>[/html:ea61093f71]

    Quote Originally Posted by gta129
    The serial is finally over. We haven't watched it in months, but surprised to learn they actually ended.
    everything has to comes to END one day
    "அன்பே சிவம்.

  6. #1185
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    ஆறு வருடங்கள் கதை காடு மேடெல்லாம் சுற்றியலைந்தும் கூட, கடைசிக் காட்சிக்கு, தொடரின் முதல் காட்சியான அபியின் கனவு இல்லம் புகுவிழாவை கொண்டு வந்து இணைத்திருப்பது ஒரு நிறைவாக இருக்கிண்றது.

    ஆறு வருடங்களுக்கு மேல் இழுக்கப்பட்ட தொடருக்கு, கிடு கிடுவென முடிவு நெருங்கிக்கொண்டு இருக்கிறது. எதையும் நம்ம்ம்ம்ம்ம்பி அனுமானிக்க முடியவில்லை. எதிர்பாராத முடிவுகளாக வந்து தாக்குகின்றன. அதற்கு உதாரணம் பாஸ்கரின் முடிவு. அவனை டென்ஷனின் உச்சிக்குக் கொண்டுபோய் அவன் வாயாலேயே அவன் செய்த கொலைகளைச்சொல்ல வைத்தது மட்டுமல்லாமல், போலீஸ், கோர்ட், கேஸ் என்று போனால் கொலைக்கான ஆதாரங்கள் எதுமின்றி கேஸ் நிற்காது என்பதாலோ என்னவோ, பாஸ்கரே தற்கொலை செய்துகொள்வதாகக் காட்டி அவன் சேப்டரை முடித்துவிட்டார் இயக்குனர். (ஆனால், தன் மாமனாரையும், மனைவி சங்கீதாவையும் தான் தான் கொன்றதாக பாஸ்கர் சொன்ன அரைக்கால் நொடியில் அலமேலு மனம் மாறி, தன் மகனைச் சாடுவது இன்னொரு தமாஷ்).

    தொல்காப்பியன் அபியை விட்டு போயே போய்விட்டார். அபியின் திருமண வாழ்க்கையைக் காரணம் காட்டி, பழமைவாதியான கற்பகத்தால் ஒரு புனிதமான நட்பு முறித்து வீசப்பட்டு விட்டது. அவரும் ஏதோ ரயில், ரயில்வே ஸ்டேஷன் உதாரணங்களையெல்லாம் காரணம் சொல்லி விலகிப்போய் விட்டார். கடற்கரையில் நின்று பிரியாவிடை கொடுக்கும் அபியின் கன்னங்களில் வழிந்தது அவருடைய கண்ணீர் மட்டுமல்ல, பார்த்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோரின் கண்ணீரும்தான். அன்றைக்கு நாம் பார்த்தது ஒரு 'அண்ணாமலைக்கும் அன்வருக்குமான' புனித நட்பு, இன்றைக்கு 'அபினயாவுக்கும் தொல்காப்பியனுக்குமான' தெய்வீக நட்பு. ஆம், என்றைக்கும் மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்.

    அபியின் புதுவீடு குடிபுகும் விழா, அசல் விழாவைத்தோற்கடிக்கும் விதமாக நடக்கிறது. மந்திரங்கள் எல்லாம் அப்படியே சொல்கிறார்களே. எல்லோரும் இருக்கிறார்கள், ஆனந்தியைத்தவிர. எப்படியும் வந்து குதித்துவிடுவார் என்று எதிர்பார்த்தோம். வரவில்லை. கற்பகத்தின் முகத்தில் முகம் கொள்ளாத சந்தோஷம். காரணம் அவர் குடும்பத்தில் ஒரு கரப்பான் பூச்சி கூட சாகடிக்கப்படவில்லை. ஆனால் மனைவி காஞ்சனா, மகன்கள் ஆதித்யா, அர்ஜுன், மருமகள் ரேகா என்று எல்லோரையும் பறிகொடுத்த ஈஸ்வரனும் பூஜையில் சந்தோஷமாக உட்கார்ந்திருக்கிறார். (எல்லோரையும் கொன்றது ஆதிதான் என்றபோதிலும்).

    பூஜைமுடிந்து ஆர்த்தியும், மனோவும் ஒரு பிரச்சினையைக்கிளப்பி புறப்படத்தயாராகிறார்கள். அதாவது எல்லோரோடும் ஒன்றாக அதே வீட்டில் இன்னும் 'பூம் பூம் மாடாக' இருக்க மாட்டார்களாம். அவர்களுக்கென்று அபியக்கா தனியாக எதும் செய்யவில்லையாம். அதைப்பற்றி பின்னர் தனியாகப்பேசலாம் என்று அபியும் விஸ்வநாதனும் சொல்லியும் கேட்காமல் புறப்படத் தயாரானதால், அபி விஸ்வநாதனை அழைத்து அவள் செய்துவைத்திருக்கும் செட்டில்மெண்ட்டைப் படிக்கச்சொல்கிறாள். ஆர்த்திக்கென்று தனியாக ரூ.50 கோடியில் ஒரு நிறுவனம், மனோவுக்கு ரூ.60 கோடியில் 'கற்பகம் ஏஜன்ஸீஸ்', ஆனந்திக்கு ரூ.70 கோடியில் ஒரு டிஜிட்டல் பிரிண்ட்டர்ஸ், புதிய வீடு கற்பகம் பெயருக்கு. (அவருக்குப்பின் அது ஆர்த்திக்கும் மனோவுக்கும் சேர வேண்டுமாம்), விஸ்வநாதனுக்கும், கிருஷ்ணனுக்கும் மெட்டீரியல் சப்ளை நிறுவனம், தங்களையே நம்பியிருந்த ராஜேந்திரனுக்கு சைதாப்பேட்டை பழைய வீடும், ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரும், அபிக்கு 'அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' நிறுவனமும், அதில் வரும் மாதம் இருபதாயிரம் வருமானமும் மட்டும் (அதுகூட அனாதை இல்லக்குழந்தைகளுக்காக) எல்லாவற்றையும் படிக்க படிக்க எல்லோருக்கும் ஆச்சரியம், சந்தோஷம், நெகிழ்ச்சி.

    (விஸ்வநாதன் சார், பத்திரத்தை இன்னும் நல்லா படிச்சுப்பாருங்க. 'கோலங்கள்' தொடரை தொடர்ச்சியாக பார்த்தவங்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் நிலம், அதைப்பற்றி கமெண்ட் எழுதினவங்களுக்கு ஒரு வீடு என்று எதுவும் எழுதி வச்சிருக்கப்போறாங்க).

    ஏனோ தெரியவில்லை. விஸ்வநாதன் பத்திரத்தைப் படிக்க படிக்க, திரையில் நடந்து கொண்டிருந்த காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக என் கண்ணை விட்டு மறைந்து போக, அதற்கு மாறாக, தோளில் பேக்'கைப்போட்டுக்கொண்டு, கடற்கரையில் அபியை விட்டு விலகி தூர தூரமாகப் போய்க்கொண்டேயிருந்த தொல்காப்பியன்தான் என் மனத்திரை முழுக்க நிறைந்திருந்தார், என் கண்கள் நீர்த்திரையிட்டு மறைத்த பின்னும்.

  7. #1186
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    அதனால்தான் Sticky-யிலிருந்தும் திரியைக் கழட்டி விட்டாச்சு.
    "அன்பே சிவம்.

  8. #1187
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    mudinjiruchA?

    sollavE illai?

    eppadi mudichAnga? (what way they ended the story?)
    eppadi mudichAnga? (how they decided to end the serial?)

  9. #1188
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    'கோலங்கள்' நிறைவடைந்தது......

    என்ன ஒரு கவித்துவமான, கவிதை நயமான முடிவு. எதிர்பார்த்த அதே சமயம் எதிர்பாராத முடிவு.

    அபி ஒவ்வொருமுறையும் தன் உறவுகள் தன்னைக் காயப்படுத்தும் போதெல்லாம் மன்னித்துக்கொண்டே இருக்கிறாள் என்று எண்ணினோம். ஆனால் உள்ளுக்குள் உடைந்துகொண்டே இருந்திருக்கிறாள். இன்னொருமுறை மனம் உடைந்தால் தாங்காது என்பது மட்டுமல்ல, எதிர்பார்ப்புக்களோடு வாழும் தன் உறவுகள் தன்னை எந்த நாளும் புரிந்துகொள்ளப் போவதில்லை என்ற விரக்தி, வேதனை, இவற்றால் உறுத்தப்பட்டவளாய் தான் நேசித்த, நேசிக்கும் வாழ்க்கை இதுவல்ல என்பதை உணர்ந்தவளாய் புறப்பட்டுவிட்டாள்.

    இம்முறை தாயின் ஆறாகப்பெருகிய கண்ணீரும், தந்தையின் பாசம் நிறைந்த புலம்பல்களும் அவளது பயணத்தைத் தடை போட முடியவில்லை. தம்பி, தங்கையின் கெஞ்சலும், சித்தப்பாவின் வேண்டுகோளும் அவளை நிறுத்த முடியவில்லை. லட்சங்களை எண்ணி வாழும் உங்கள் வாழ்க்கை வேறு, லட்சியங்களைச்சுமந்த என் வாழ்க்கை வேறு என்று உணர்த்தியவளாய் புயலென புறப்பட்டுவிட்டாள். கார்களில் ஏறமாட்டாள் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். குறைந்த பட்சம் ஒரு ஆட்டோவில் ஏறிப்போவாள் என்று நினைத்தோம். ஆனால், நடையாக நடந்தாள். பின்னாலேயே விரட்டி வந்த உறவுகள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் நின்று விட்டனர், இனி அவளைத் தடுக்க முடியாது என்ற காரணத்தால்.

    கடற்கரைக்கு வருகிறாள். எல்லாமே முடிந்துவிட்டது போன்ற ஒரு விரக்தி நிலை. தன் செருப்பில் ஒட்டியிருக்கும் தூசி கூட தனக்குச் சொந்தமில்லை என்பது போன்ற சூன்யம். நடந்து நடந்து ஒரு படகின் முனையில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள். கண்களில் ஆறாகப்பெருக்கெடுத்த கண்ணீர். நிச்சயம் அது தனது தூய நண்பனை நினைத்துத்தான் என்பது நமக்குப்புரிகிறது. கேமரா அப்படியே பின்னோக்கிப்போகிறது. 'வணக்கம்' போட்டுவிடுவார்களோ என்று நமக்குள் ஒரு பதைபதைப்பு. கேமரா மறுபக்கம் திரும்ப, அதே படகுமுனையின் மறுபக்கத்தில் அமர்ந்து தன் தோழியைப்பற்றி டைரி எழுதிக்கொண்டிருக்கும் தொல்காப்பியன்.....!!!!!.

    எங்கோ தன் உறவுகளோடு இருப்பதாக தான் நினைத்துக்கொண்டிருக்கும் அபியை எண்ணியவாறு தொல்காப்பியன் எழ, தன்னைவிட்டு எங்கோ போய்விட்டதாக தான் எண்ணி ஏங்கும் தன் தோழனை நினைத்தவாறு அபியும் எழ, இதோ... இதோ... சந்திக்கப்போகிறார்கள் என்று நாம் கண்கள் இமைப்பதை மறந்து பார்த்துக்கொண்டிருக்க.....

    ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் அந்தப்பார்வையில்தான் எத்தனை ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப்பறக்கின்றன...!!!. தன் செருப்பிலுள்ள தூசி கூட தனக்குச்சொந்தமில்லை என்று சற்றுமுன்தானே நினைத்தேன்... இல்லை... இல்லை... இப்போது இந்த உலகம் முழுவதும் எனக்குச்சொந்தம் என்ற பூரிப்பு முகமெல்லாம் பொங்க, தோழியின் முகத்தில் தெரியும் அந்தப்பூரிப்பு தொல்காப்பியனையும் தொற்றிக்கொள்ள.... அவர்களின் அந்த தூய நட்பின் ஆழத்தை நாம் ஆயிரம் வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.

    காட்சி மாற்றம்.... மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளோடு, வளர்ந்த இந்த இரண்டு குழந்தைகளும் சேர்ந்துகொள்ள, தன்னலத்தைத்தூக்கியெறிந்த எங்கள் உலகம் வேறு என்று அவர்கள் மலர்ந்த முகங்கள் பறைசாற்ற....... நிறைவு.

    கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக, விடுமுறை நாட்கள் தவிர மற்ற எல்லா நட்களும் சரியாக இரவு 9 மணிக்கு நம் வீட்டின் நடுக்கூடத்துக்கு வந்து நம்மோடு ஒட்டி உறவாடிய அபியும், தொல்காப்பியனும், ஆதித்யாவும், உஷாவும் மற்றுமுள்ளோரும் இனிமேல் வரமாட்டார்கள் என்பதே, நம் மனதில் ஒரு வெற்றிடத்தை உண்டாக்குகிறது. இந்த ஆறாண்டுகளில்தான் நம் வாழ்க்கையில் எத்தனை நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன..!. யார் யாரையெல்லாம் இழந்துவிட்டோம்..!. அத்தனையையும் மீறி, இரவு 9 மணியானால் 'அது கோலங்கள் நேரம்' என்று தமிழ் நாட்டில் மட்டுமல்ல, எங்கெல்லாம் சன் தொலைக்காட்சி பார்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய தொடர், இனிமேல் இல்லை. திரையுலகிலிருந்து வந்து தொலைக்காட்சியில் தான் ஒரு புது அவதாரம் எடுத்திருப்பதை உணர்த்தும் வகையில் ஒலித்த "பெண்ணே எனது புது கோலம் எழுது" என்ற பாடல் இனி தொலைக்காட்சியில் ஒலிக்காது. எப்போது முடியும் என்று எண்ணியவர்களுக்கும், எப்படி முடியும் என்று எதிர்பார்த்தவர்களுக்கும் விடை சொல்லி, தொடர் விடைபெற்றுவிட்டது.....

    அபினயாவாக வாழ்ந்த தேவயானி,
    தொல்காப்பியனாக வாழ்ந்த (இயக்குனர்) திருச்செல்வம்
    கற்பகமாக வாழ்ந்த சத்யபிரியா
    ஈஸ்வரனாக வாழ்ந்த மோகன் சர்மா
    ஆனந்தியாக வாழ்ந்த மஞ்சரி
    ஆர்த்தியாக வாழ்ந்த ஷ்ரீவித்யா
    ஆதித்யாவாக வாழ்ந்த அஜய்கபூர்
    மனோவாக வாழ்ந்த ஷ்ரீதர்
    தோழர் பாலகிருஷ்ணனாக ஒரு இனத்தின் பிரதிநிதியாக முழங்கிய ஆதவன்
    திருவேங்கடமாக வாழ்ந்த ராமச்சந்திரன்
    சாரதாக்களாக வாழ்ந்த வனிதா மற்றும் குயிலி
    அலமேலுவாகவே அவதாரம் எடுத்த நளினி
    பாஸ்கராக வாழ்ந்துகாட்டிய அபிஷேக்
    கார்த்திக் ஆக வாழ்ந்த விஷ்வா
    பாரதியாக வாழ்ந்த விஜயசாரதி
    மேனகா மற்றும் செல்லம்மாவாக வாழ்ந்த பூர்ணிமா இந்திரஜித்
    ரேகாவாக வாழ்ந்த நீலிமா
    உஷாவாக சுடர்விட்ட தீபா வெங்கட்

    மற்றும் ராஜேந்திரன், ராஜேஷ், கலா, ராஜாமணி, ரஞ்சன், முரளி, அனு, அஞ்சலி(கள்), காஞ்சனா, அர்ஜுன், கிரி, தில்லா, சங்கர பாண்டியன்(கள்), தேவராஜ் பாண்டியன், கிருஷ்ணன், விஸ்வநாதன் (ஆடிட்டர்), கங்கா, ராமச்சந்திரன், பரிமளாச்சாரி, சாந்தி, சிவதாஸ், பாதிரியார் (ராகவேந்தர்), தாரகை, உபேந்திரா, அன்வர்பாய், அந்தோனி (நட்ராஜ்), தாசய்யா (கோவி மணிசேகரன்), வெற்றிமாறன், குலோத்துங்க சோழன், சித்ரா...... இன்னும் சொல்ல மறந்த எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் நம் வீட்டுக்குள் (அது பணக்காரர்களின் பளிங்கு மண்டபமோ அல்லது ஏழைகளின் குடிசையோ) சுற்றியலைந்தார்கள்.

    மூன்று மணி நேரம் திரைப்படம் பார்த்தாலே அதன் தாக்கம் நம் மனதில் நிழலாடும்போது, ஒரு மணியல்ல, ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல, ஆறு வருடங்கள் நம்முடன் வளைய வந்தவர்கள், திடீரென விடைபெற்றுப்போனது போல ஒரு வெறுமை, வெற்றிடம். நாளை முதல் வேறு தொடர் துவங்கலாம். இருந்தாலும் கோலங்கள் விட்டுச்சென்ற இடம் வெற்றிடமாகவே இருக்கும். அந்தப் பாத்திரங்கள் நம் மனதில் நீண்ட நாட்கள் நின்றிருப்பார்கள்.

    நான் பெரிதும் மதிக்கும் எஸ்.சத்யா அவர்களால் துவங்கப்பட்ட இந்த கோலங்கள் திரி, பலராலும் தொடரப்பட்டு வெற்றிகரமாக முடிவை எட்டியுள்ளது. வடம் பிடித்து வழிநடத்திய அத்தனை அன்பு இதயங்களுக்கும் நன்றி.

    ஆம்.... கோலங்கள் நிறைந்து விட்டது...

  10. #1189
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    KOLANGAL thread acheived with 336831 viewers till now .

    Surprise is, when the serial ended, the number of viewers were 225000+ only. After the end, more than 110000+ viewers have gome through it.

    Did this serial end in TTN channel at Europe...??.

Similar Threads

  1. watch latest kolangal episodes with good quality
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 29th June 2008, 06:34 PM
  2. Does anyone know the ending of Kolangal?
    By airtime2310 in forum TV,TV Serials and Radio
    Replies: 8
    Last Post: 15th December 2006, 11:23 AM
  3. Kolangal
    By slperson1 in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 11th March 2005, 04:59 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •