-
4th April 2013, 02:56 PM
#2441
Junior Member
Newbie Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-11
இந்தியாவிலேயே, எல்லோராலும் கொண்டாட படும் நடிகர்திலகத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர் திலிப் குமார். method acting என்ற பெயரில் என்ன ரோல் கொடுத்தாலும் ஒரே மாதிரி நடித்தாலும், பிமல் ராய் போன்ற புத்திசாலி இயக்குனர்களின் தயவாலும், ஹிந்தி படங்களுக்கே உள்ள sophistication நிறைந்த அணுகுமுறை ,ஆரோக்யமான போட்டி முறை,அரசியல் கலக்காத சூழ்நிலை இவற்றால் பயனடைந்த சராசரி நல்ல நடிகர்.இவரை உதாரணமாய் எடுப்பது நடிகர்திலகத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் contemporary என்பதாலும், Film Fare award வாங்குவதில் guinness சாதனைக்கு சொந்தகாரர் என்பதால்தான்.. calibre என்பதை வைத்து பார்த்தால் , இவர் பெயரை எழுதுவதே நம் திரிக்கு இழிவாகும்.
மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் இவர் நம் நம் நடிகர்திலகம் நடித்த படங்களை, ஹிந்தியில் remake செய்த போது நடித்துள்ளார்.
1959-1960 களில் paigham என்று ஹிந்தியிலும்,இரும்புத்திரை என்று தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாக்க பட்ட படம். இரு மொழிகளிலும் வெற்றியடைந்த படம். சிவாஜியின் நடிப்பை தொட முடியாவிட்டாலும் ,சமகால சராசரி மனிதனை பிரதிபலித்த method acting முறையில் நடிக்க கூடிய சுலபமான பாத்திரம் என்பதால் திலிப் சமாளித்திருப்பார்.
அடுத்ததாக, 1963 இல் ஆலயமணி ,1968 இல் ஆத்மி என்ற பெயரில் பீம்சிங் என்ற நல்ல இயக்குனரின் பணியில் ஹிந்தியில் தயாரிக்க பட்டது.இந்த பாத்திரம் சற்றே கடினமானது.chekhov பள்ளி பாணியில் அணுக வேண்டிய உளவியல் பூர்வமானது. சிவாஜி ஏற்கெனெவே செய்து முன்மாதிரி காட்டி விட்டாலும்,method acting என்று ஜல்லியடித்த திலீபினால், கிட்டவே நெருங்க முடியவில்லை. தமிழில் NT மிக அருமையாக இடைவேளை வரை மிருக குணத்தை அடக்கி நல்லவனாக வாழும் விழைவை, தனக்கு தானே நிரூபித்து கொள்ள முயலும் ஒருவனின் முயற்சியை explicit demonstration பாணியில் கொடுத்திருப்பார்.(அதாவது நல்லவனாக நடிக்க விழையும் ஒருவன் முயற்சி-இயல்புக்கு மாறாய் இருக்கும் ஒருவனின் தொடர்ந்த போராட்டம்) . திலிப்போ ,தன் வழக்கமான பாணியில் நல்லவனாகவே subtility என்ற போர்வையில் ஆழமே இல்லாமல், பாத்திரத்திற்கு இயல்பாக இருக்க வேண்டிய பெரிய மனித தனம் இல்லாமல் சராசரியாக கையாண்டிருப்பார். இடை வேளைக்கு பிறகோ கேட்கவே வேண்டாம். மனோதத்துவ Chekhov முறையில் உடல் மொழி, change in body position /tempo என்றெல்லாம் கவலை படாமல், தன் வழக்கமான method acting பாணியில் ஆழமோ அழுத்தமோ, hidden meanings என்பதை convey பண்ணாமல் திலிப் சொதப்பி இருப்பார். ஒரு உதாரணம்,தன் இயலாமை ,மிருக குணத்தை மேலும் உசுப்பி விடுவதை கால்களை கையால் அழுத்தி தேய்த்து மாய்ந்து போவார் சிவாஜி. அதை திலிப் தொடவே இல்லை. நடிப்பில் ஆழம் pathetically missing for dilip . ஆத்மி ,நல்ல வித்யாசமான கதையமைப்பால் சுமார் வெற்றியை ஹிந்தியில் அடைந்தாலும், நடிப்பில் உச்சம் தொட்ட ஆலய மணியின் பிரம்மாண்ட வெற்றியை தொடவே முடியவில்லை.
அடுத்ததாக, நடிகர்திலகம் உச்ச பட்ச நடிப்பு என எல்லோராலும் கொண்டாட படும், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க பட்ட, 1969 இல் வெளியான தெய்வ மகன். தந்தை பாத்திரத்தை method acting பாணியிலும்,மூத்த மகன் பாத்திரத்தை Chekhov மனோதத்துவ பாணியிலும்,இளைய மகன் பாத்திரத்தை முழுக்க தன் கற்பனையால் மெருகேற்றி oscar wilde விவரித்த கலைஞனின் சுதந்திர அழகுணர்ச்சி பாணியிலும்,பண்ணி சாதனை புரிந்திருப்பார். படம் மிக பெரும் வெற்றி பெற்றதுடன் இன்று வரையில் பேச படுகிறது. இதை பார்த்த திலிப் ,ஹிந்தியில் எடுக்கும் போது ,இதை நடிக்க நம்மால் முடியாது என்று (அவரே கன்னட நடிகர் விஷ்ணுவர்தனுடன் விமான பயணத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலம்) மூன்று பாத்திரங்களையும் சராசரி ,ஆழமில்லாத method acting பாணி கொண்டதாக அதே கதையமைப்பில்,Bairaag என்ற பெயரில் 1976 இல் குட்டிச்சுவராக்கி (முடவனுக்கு ஏன் கொம்புத்தேன் ஆசை?) தோல்வி அடைந்து,திரையுலகை விட்டே ஆறு வருடம் ஓடி விட்டார்.
இப்போது புரிந்ததா,அவருடைய அடுத்த இடத்தில் இருந்த இந்திய நடிகனின் லட்சணம்?
---TO be Continued .
Last edited by Gopal.s; 4th April 2013 at 03:24 PM.
-
4th April 2013 02:56 PM
# ADS
Circuit advertisement
-
4th April 2013, 05:13 PM
#2442
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (12) M.N.ராஜம்
'மங்கையர் திலகம்' படத்தில் M.N.ராஜம் அவர்களின் அழகிய தோற்றம்.
'பாவை விளக்கு' திரைப்படத்தில் ஸ்டைலான நடிகர் திலகத்துடன் ராஜம்.
'மங்கையர் திலகம்' படத்தில்
'பெண்ணின் பெருமை'
'பாவை விளக்கு'
'பாசமலர்'
நடிகர் திலகத்தின் ஜோடிகளில் ஒருவர். M.N.ராஜம் அவர்கள் சிறு வயது பிராயம் முதல் சினிமாக்களில் நடிக்கத் தொடங்கி விட்டார். யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை அவர்களில் பட்டறையில் இருந்து பட்டை தீட்டிக் கிளம்பிய இன்னொரு வைரம். டி.கே.எஸ் நாடக மன்றத்திலும் சிறந்த பயிற்சி பெற்றவர். ரத்தக் கண்ணீர் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்த ராட்சஷி. "வேம்ப் கேரக்டரா... கூப்பிடு ராஜத்தை"... என்று சொல்லுமளவிற்கு அந்தப் பாத்திரமாகவே மாறி அமர்க்களப் படுத்தியவர். NSK அவர்களின் படங்களில் முதலில் சிறு சிறு வேடங்களில் தமிழில் தலை காட்டி 'ரத்தக் கண்ணீர்' மூலம் உச்சப் புகழ் அடைந்த நடிகை. அப்படி ஒரு கேரக்டர் ஹிட்டடித்தால் சும்மா விடுமா தமிழ்ப் பட உலகம்? வேம்ப்(vamp),வில்லி, கொடுமைக்கார சித்தி, இரண்டாந்தாரம் என்ற ரோல்களுக்கு M.N.ராஜம் தான் என்று முத்திரை குத்தப்பட்டது. பின் அதையும் மீறி அப்போதைய சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு M.N.ராஜம் அவர்களின் நிலை உயர்ந்தது. அதற்குக் காரணம் அவருடைய கடின உழைப்பு. வில்லி ரோலுக்கு மட்டுமல்ல ஹீரோயினாகவும் பரிமளிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய நடிகை. நகைச்சுவை ரோல்களையும் விட்டு வைக்கவில்லை அவர். எம்.என்.ராஜம் நடிப்பில் 'எமன்' ராஜம் என்று பாராட்டப்பட்டார்.
சரி! தலைவருடன் இவர் பங்கு என்ன என்று பார்த்து விடலாம். 'மங்கையர் திலகம்' படத்தில் தலைவருக்கு ஜோடி இவர்தான். அடங்காப்பிடாரி மனைவியாக அட்டகாசம் செய்து பின் அடங்கிப் போகும் பாத்திரம். "பெண்ணின் பெருமை" திரைப்படத்திலும் கிட்டத்தட்ட தலைவருக்கு ஜோடி போலவே வருவார். இதிலும் ஆளை மயக்கும் பாத்திரம்தான். 'ரங்கோன் ராதா'வில் கேட்கவே வேண்டாம். தலைவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட வில்லியான ராஜமும், நாயகரும், வில்லருமான(!) தலைவரும் பானுமதிக்கு பேய் பிடித்திருப்பதாகக் கதை அளந்து, பைத்தியக்கார பட்டம் சூட்டி வீட்டைவிட்டு துரத்த எத்தனிப்பதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட இயலாது. 'பாக்கியவதி'யிலும் இதே கதைதான். கொண்டவள் பத்மினி இருக்க பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் நடிகர் திலகத்தை மயக்கும் மோகினியாய் மயக்கி வைக்கும் கதாபாத்திரத்தை அலட்சியமாக ஊதித் தள்ளியிருப்பார் ராஜம்.
'பதிபக்தி'யில் நேரடி ஜோடியாக பரிமளிப்பார். அதுவும் "கொக்கரக்கொக்கரக்கோ சேவலே" பாடலில் தலைவரும், ராஜமும் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே அழைத்துச் செல்வார்கள். நல்ல ரோல். 'பாவை விளக்கு' திரைப்படத்தில் சௌகார் ஜானகி, குமாரி கமலா இவர்களுடன் ராஜமும் தலைவரின் இன்னோர் ஜோடி. காலத்தால் மறக்க முடியாத காவியப் பாடலான "காவியமா...நெஞ்சின் ஓவியமா" பாடலில் ஒரிஜினல் தாஜ்மஹாலில் தலைவரும், ராஜமும் ஷாஜஹானாகவும், மும்தாஜாகவும் அற்புத நடை நடந்து வாழ்ந்து காட்டியதை ஆயிரம் ஜென்மங்களுக்கும் மறக்க முடியாதே. அதே போல தற்போது மீண்டும் வெற்றிக்கொடி நாட்டத் தயாராகி வரும் 'பாசமலரி'லும் ராஜம் அவர்கள் தலைவருக்கு ஜோடியாக நடித்தது அவர் செய்த பெரும் பாக்கியம். அருமையான கேரக்டர். வித்தியாசமாக பரிதாபப்பட வைக்கும் கேரக்டரும் கூட. இப்படி நிறையப் படங்களில் தலைவருடன் ராஜம் அவர்கள் நடித்திருந்தாலும் ஒரு தேவிகா போல, ஒரு பத்மினி போல, ஒரு விஜயா போல, ஒரு வாணிஸ்ரீ போல (ஒரு உள்ளம் அப்படியே இந்நேரம் குளிர்ந்து போய் இருக்குமே!) ராஜம் அவர்கள் ஒரு சிறந்த பொருத்தமான ஜோடியாய் நடிகர் திலகத்திற்கு அமையாதது துரதிருஷ்டமே! அதற்கு காரணம் அவர் முன்னம் ஏற்ற ஒருமாதிரியான கேரக்டர்களே.
அதுமட்டுமல்லாமல் நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் ராஜம் அவர்கள் நடித்திருப்பார்கள். நானே ராஜா, (இதில் நடிகர் திலகத்தின் தங்கை ரோல்... அதாவது ராமாயணத்தின் சூர்ப்பனகை ரோல் மாதிரி) மக்களைப் பெற்ற மகராசி (இதிலும் தலைவருக்கு தங்கை ரோல்), புதையல், காத்தவராயன் காமெடி ரோல்), தெய்வப் பிறவி, விடிவெள்ளி என்று பல குறிப்பிடத் தக்க படங்கள்.
M.N.ராஜம் அவர்கள் பிரபல பின்னணிப் பாடகர் திரு A.L.ராகவன் அவர்களை மணந்து கொண்டார்.
திரைப்படத்துறையில் பல சாதனைகள் புரிந்த ராஜம் திரு எம்ஜியார் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழ்நாடு அரசு செய்திப்பட நிறுவனங்களின் செய்திப் படங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராகவும் சிறந்த பணியாற்றினார். பின்னாளில் பல படங்களில் தாயார் ரோல்களிலும், சிறந்த குணச்சித்திர ரோல்களிலும் தன் அனுபவத்தால் நன்கு பரிமளித்தார். திரு.பாலச்சந்தர் அவர்களின் அரங்கேற்றம் திரைப்படத்தில் அந்தண மாமியாக இவர் நடித்தது மிகவும் பேசப்பட்டது.
இனி பாடல் வீடியோக் காட்சிகள்.
"கொக்கரக்கொக்கரக்கோ சேவலே" (பதிபக்தி)
"காவியமா...நெஞ்சின் ஓவியமா" (பாவை விளக்கு)
'பாட்டொன்று கேட்டேன்' (பாசமலர்)
கணவர் A.L.ராகவன் அவர்களுடன் M.N.ராஜம் அவர்கள்.
Last edited by vasudevan31355; 4th April 2013 at 09:56 PM.
-
4th April 2013, 06:01 PM
#2443
Senior Member
Diamond Hubber
-
4th April 2013, 07:36 PM
#2444
Junior Member
Newbie Hubber
ஒரே ஒரு உள்ளமல்ல குளிர்ந்தது!!! பல கோடி இளமை உள்ளங்கள். வருக தேவரே.
-
4th April 2013, 07:45 PM
#2445
Junior Member
Devoted Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1௦,11
நண்பர் கோபால் அவர்களே!
உங்கள ஆராய்ச்சி அருமையாக branch out ஆகி உள்ளது வாழ்த்துக்கள்.முதலில் பத்தாம் பகுதியை படித்து என்னடா இவர் திலீப் குமாரை இப்படி பந்தாடி உள்ளாரே என விசனப்பட்டேன்.ஆனால் பதினொன்றை படிக்கும் போதுதான் "பத்தோடு பதினொன்று ;அத்தோடு நீயும் ஒன்று!" என திலீப்ஜியை நீங்கள் எடை போட்டிருப்பது புரிந்தது.திலீப்ஜியை எடுத்துக்கொண்டதிற்கு காரணம், அவர், நடிப்பில், சிவாஜிக்கு அடுத்தபடி இரண்டாம் நிலையில் உள்ளார் என பரவலாக கருதப்படுவதே என்பதும் புரிந்தது.இரண்டிற்கே இந்த வேகம் என்றால் இனி மூன்றாம் எண்ணில் உள்ளவரை பற்றி நீங்கள் எழுதப்போவதை நினைத்தால் பயமாக உள்ளது.ஒரு விஸ்வரூபமே எடுத்து விடுவீர்கள்.
நடிகர் திலீப்ஜியின் புகழுக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர் ஹிந்தி பட நடிகர் என்பதும் ஆகும்.ஒரு மிதமான நடிப்பையே வட மாநிலத்தவர்கள் பெரிதும் விரும்புவர்.அதை திலீப் ஜி செவ்வனே செய்து வந்தார்.மேலும் தலைவரின் உழைப்பு உலகப்பிரசித்தம்.மனம்,வாக்கு காயம்(உடல்) என்ற மூன்றையும் அதிகபட்சம் உபயோகித்து ஒரு பாத்திரத்தை உருவாக்குவதில் அவர்க்கு நிகர் அவரே.ஒரு கைதேர்ந்த சிற்பி, சிலை ஒன்றை செதுக்குவதைப்போன்றது அவருடைய நடிப்பு.இதையெல்லாம் எல்லாரும் செய்யவும் முடியாது அதை எதிர்பார்ப்பதும் தவறு.உலக நடிகர்கள் எல்லாரிடமும் அவரின் சாயல் எங்கோ நிச்சயம் தென்படும் ஏனெனில் அவர் ஒரு வாக்கியமோ,உரையோ அல்ல .அவரே எழுத்து.இதை மிக அழகாக வெளிபடுத்திய உங்கள் பத்து பகுதிகளும் முத்துப்பகுதிகள்.
நன்றி.
Last edited by Ganpat; 4th April 2013 at 07:50 PM.
-
4th April 2013, 08:16 PM
#2446
Junior Member
Veteran Hubber
Dear Gopal Sir. It is obvious that NT can not be compared with any other actor of this Universe, as his acting caliber is so high particularly in close-up scenes where he shows all expressions effortlessly with perfect lip movement in songs and flawless dialogue delivery in emotional scenes. However, actors like Dilip Kumar or Sanjeev Kumar or Nageswararao or Madhu or Sathyan have always understood their limitations and never liked to be compared with NT since they know where they stand. Dilip could not perform better in aadmi or irumbuthirai remake or thangapadakkam remake or deivamagan remake. But whatabout our NT’s Iru Duruvam where NT excelled Dilip but the movie did not turn well compared to Ganga Jamuna. Same way remake of Aradhana. Sanjeev kumar did not fare well in Navarathiri remake or compared to engirundho vandal in Kilona but he had made his niche in sholay and many other movies. Nageswararao in Devdas though not comparable for his performance in Prem Nagar with VM. They all have done characters within their cultural domain like NT in tamil. They were also humble in admitting the fact that their performance can never match that of NT, including Marlon Brando as we read. The other side of the coin is bitter that they all could enjoy honors while NT was ignored for political or other reasons even though his performance scaled high above even the Oscar winners.
-
4th April 2013, 09:07 PM
#2447
Senior Member
Seasoned Hubber
வாசு சார்,
சூப்பர் .... இதை என்னென்று சொல்வது ... ரொம்ப நாளாயிற்றே ... வாசு சார் பதிவு வரவில்லையே... ஒரு வேளை இன்றைக்கு கதாநாயகிகள் தொடருடன் வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்... தற்போது வந்து பார்க்கும் போது அது நடந்துள்ளது.. இதைத் தான் டெலிபதி என்பதோ...
நடிகர் திலகத்தின் படங்களில் மட்டுமல்ல எம்.என்.ராஜம் அவர்களின் பங்களிப்பு, அவருடைய அத்தனை படங்களிலும் சிறப்புடன் இருக்கும். தாங்கள் கூறியது போல் பாவை விளக்கு மறக்க முடியாத படம், பாடல்... பல படங்களில் அவருடைய நடிப்பு படத்தையே தூக்கி நிறுத்தும் அளவிற்கு வலிமை வாய்ந்தது. ரத்தக் கண்ணீர் அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
மறைந்த பின்னணிப் பாடகி ஜிக்கி அவர்களின் புகழை உலக அளவில் ரசிகர்கள் நெஞ்சில் நிலைத்து வைக்க உதவிய பிரசித்தி பெற்ற பாடல்களில் மங்கையர் திலகம் படத்தில் இடம் பெற்ற ஒரு முறை தான் வரும் பாடலும் ஒன்று. இலங்கை வானொலியில் இப்பாடல் ஒலிபரப்பப் படாத நாளே இல்லை எனலாம். அப்பேர்ப்பட்ட சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் நமக்காக இங்கே ..
பாடல்காட்சிக்கு நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் நம் அன்பிற்குரிய TFMLover அவர்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th April 2013, 09:13 PM
#2448
Senior Member
Seasoned Hubber
இதே போல் ஜமுனா ராணி அவர்களையும் உலகப் புகழ் பெற வைத்த பாடல் ... அந்தக் காலத்தில் குரலாலேயே இளைஞர்களை வசீகரப் படுத்தியது இந்தப் பாடல் ... தெய்வப் பிறவி படத்தில் இந்தப் பாடலைக் கேட்டால் தாளம் போடாத கைகள் உண்டோ ... ஆடாத கால்கள் உண்டோ ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th April 2013, 09:16 PM
#2449
Senior Member
Diamond Hubber
கோபால் சார்!
11 பாகத்திற்கும் தனித்தனியான 11 பாராட்டுக்களைப் பிடியுங்கள். தங்களின் இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடர் அருமை என்ற ஒரே வார்த்தையில் நான் முடித்துவிடப் போவதில்லை. ஆனால் ஒன்று. சீரிய சிறந்த உயர்ந்ததொரு முயற்சி என்பது மட்டும் திண்ணம். வர வர தங்கள் நடையில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. தண்ட, தான, பேத, சாம வரிசையில் தங்கள் நடை பயணிக்கிறது. (ஒரு சில ஊடல்களைத் தவிர)
திலீப் பற்றிய தங்கள் கண்ணோட்டாம் அப்படியே என் மனதிலிருந்து நீங்கள் காப்பியடித்தது. எந்த வகையிலும் திலீப் சிறந்த நடிகர் என்பதை நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். இதில் நடிகர் திலகத்துடன் கம்பேர் வேறா?
Mughal-e-Azam இல் "Pyaar Kiya To Darna Kya" என்ற உயிரை உருக்கும் பாடலில் மதுபாலா தன் ஆக்ரோஷமான அதே சமயம் அமைதியான நாட்டிய அசைவுகளிலும், முக பாவங்களிலும் நம்மை மதி மயங்கச் செய்ய, ஆஜானுபாகுவான அக்பரோ (பிருதிவிராஜ்கபூர்) அருமையான அலட்டல்களை பார்வையிலே அனல் தெறிக்க வீசி அனாரையும், நம்மையும் அச்சுறுத்த எண்ண, செட்களின் பிரம்மாண்டம் வண்ணம் குழைக்கப்பட்டு, அரபு நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரிஜினல் முத்துக்கள், வைரங்கள், மரகதங்கள், வைடூரியங்கள் கண்களைப் பறித்து மின்ன, நௌஷாத்தின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் இசையில் (முக்கியமாக தபலாவின் பங்கு) லதாவின் லட்டுக் குரலில் ஒலிக்கும் ஆறுமாத கால மிகக் கடினமான உழைப்பில் உருவான அந்த கந்தர்வ கானம் நம்மை அப்படியே கட்டிப் போட்டுத் தூக்கிக்கொண்டு போய் சொர்க்கத்திலே கிடாச, இந்தியாவின் அந்தப் பெரிய நடிகர் முகத்தில் சிறிது கூட சலனமின்றி அப்படியே ஏதோ பார்த்தபடி (ஆழமான பார்வையாம்!) method ஆக்டிங் என்ற ஓட்டைப் போர்வைக்குள் தெரிந்தோ தெரியாமலோ ஒளிந்து கொண்டு விசால மனது கொண்ட ஒருபக்க வஞ்சக விமர்சனக் கூட்டம் ஒன்றின் பெருத்த புகழுக்கு ஆளான கதையை எண்ணி எண்ணி பல நாட்கள் மனதுக்குள் சிரித்திருக்கிறேன். நடிகர் என்று ஒத்துக் கொள்வது முதல் வேலை, நல்ல நடிகன் என்று ஒத்துக் கொள்வது அடுத்தது. சிறந்த நடிகன் என்று ஒத்துக் கொள்வது மூன்றாவது. மிகச் சிறந்த நடிகன் என்று ஒத்துக் கொள்வது நான்காவது. இவன் ஒருவன்தான் சிறந்த நடிகன் உலக அளவில் என்பது முடிவானது. இதில் முதல் இடத்துக்கே ததிகிணதோமாம். இதில் முடிவான ஐந்தாவதற்குப் போட்டியா! அந்த முக லட்சணத்தை இப்போது கொஞ்சம் பார்க்கலாம். நடிப்பின் நுணுக்கங்கள் நன்கறிந்தவர்கள் திலீப்பின் அந்த இறுக்கமான மொக்கை முகபாவங்கள்(!) பற்றி விளக்கினால் நலம்.
கோபால் சார்,
அசத்துங்கள். பதினொன்று நூற்றுப் பத்தாகட்டும். படித்து புரிந்து மகிழ ஒரு கூட்டமே காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள். ஆனால் நன்றியெல்லாம் கிடையாது. அதற்கு மேல் ஒன்று இருந்தால் அது நிச்சயம் உங்களுக்குத்தான்.
Last edited by vasudevan31355; 4th April 2013 at 09:49 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
4th April 2013, 09:37 PM
#2450
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கும், அக்கறைக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தங்களின் அன்பான பாராட்டிற்கு என் ஆழ்ந்த நன்றிகள். கோபாலின் அருமையான தொடருக்கு பக்க பலமாக தாங்கள் அளித்து வரும் பதிவுகள் அத்தொடருக்கு மேலும் சுவையூட்டுகின்றன. எம்.என்.ராஜம் அவர்கள் பற்றிய பதிவுக்கு மேலும் பக்க பலமாக அருமையான இரண்டு பாடல்களைத் தந்து சுவை சேர்த்து விட்டீர்கள். நமக்குள்ளே டெலிபதியை உருவாக்கித் தருவது நம் அன்புத் தெய்வமல்லவா! முதலும் முடிவுமான அந்த இறைவனுக்கே நம் நன்றிகளை சமர்ப்பணம் செய்வோம். அற்புதமான தங்களின் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.
Bookmarks