-
14th June 2012, 11:08 PM
#21
Senior Member
Diamond Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
தாங்கள் என் மீது கொண்ட அளவு கடந்த அன்பிற்கு என் தலையாய நன்றிகள். நாகர்கோவிலில் தலைவரின் சிலை வைக்க, கன்னியாகுமரியில் காமராஜர் மணிமண்டபத்தில் தலைவரின் புகைப்படம் வைக்க தாங்களும், தங்கள் அமைப்பும் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள். தங்களுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.
-
14th June 2012 11:08 PM
# ADS
Circuit advertisement
-
14th June 2012, 11:14 PM
#22
Senior Member
Diamond Hubber
டியர் ராதாகிருஷ்ணன் அவர்களே!
தங்கள் உயரிய அன்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
-
14th June 2012, 11:19 PM
#23
Senior Member
Seasoned Hubber
-
14th June 2012, 11:41 PM
#24
Senior Member
Seasoned Hubber
திரு காகா ராதாகிருஷ்ணன் மறைவு
நடிகர் திலகத்தின் பால்ய நண்பரும் அவருடன் சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்து உற்ற தோழருமாய் இறுதி வரை விளங்கியவருமான திரு காகா ராதாகிருஷ்ணன் காலமானார். அவருடைய மறைவு நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பேரிழப்பு. நடிகர் திலகத்தின் ஆரம்ப கால கஷ்டங்களில் உடன் பங்கெடுத்துக் கொண்டவர் காகா ராதாகிருஷ்ணன். அவருடைய பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். குறிப்பாக உலகம் பல விதம் படத்தில் நடிகர் திலகம், காகா ராதாகிருஷ்ணன், டி.கே.ராமச்சந்திரன் மூவர் கூட்டணியின் நகைச்சுவை அட்டகாசம் என்றென்றும் நினைவு கூறத் தக்கது. யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் குழுவில் பரிமளித்தவர்கள் இருவரும்.
திரு காகா ராதாகிருஷ்ணனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
-
15th June 2012, 12:13 AM
#25
Junior Member
Junior Hubber
திரு. காகா இராதாகிருஷ்ணன் அவர்களின் மறைவு
திரு. காகா இராதாகிருஷ்ணன் அவர்களை நினைக்கின்ற போது எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வரும். நான் இது பற்றி பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். அதாவது நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும் போது, நடிகர் திலகம் அவர்களும், காகா அவர்களும் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்ததற்காக மதுரை இரயில்வே ஸ்டேஷனில் பிடித்து அமர வைக்கப்பட்டார்கள். அப்போது நடிகர் திலகம் அவர்கள் காகா விடம், டேய் இராதா! எனக்கு ரொம்ப அவனாமா இருக்குடா! ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ வேணுன்னா பாரு.. நான் பெரிய ஆளாகி காட்றேன்டா என்று அழுது கொண்டே கூறியிருக்கிறார். எந்த கணேசன் பயணசீட்டு இல்லாமல் பிரயானம் செய்ததற்காக பிடித்து வைக்கப்பட்டாரோ, அவரே பின்னாளில் நடிகர் திலகமாக மாறி 1962ல் அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில், தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு பிரயானம் செய்தார் என்று சுய முன்னேற்ற கூட்டங்களில் அனேக முறை பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் திரு. காகா அவர்களை பல முறை நினைவு கூர்ந்திருக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்புடன்
-
15th June 2012, 04:07 AM
#26
Senior Member
Veteran Hubber
பழம்பெரும் நடிகர், கலையுலக வித்தகர் காக்கா ராதாகிருஷ்ணன் அவர்களின் மறைவு, கலைகூறும் நல்லுலகுக்கு ஒரு பேரிழப்பு. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார்-உறவினருக்கும், நண்பர்களுக்கும், கலையுலகினருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனையும், இதயதெய்வத்தையும் பிரார்த்திப்போம்.
அமரர் காக்கா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலியாக
'பொம்மை' அக்டோபர் 1997 இதழிலிருந்து அவருடைய பேட்டி
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
15th June 2012, 04:36 AM
#27
Senior Member
Veteran Hubber
Originally Posted by
abkhlabhi
பத்தாவது பாகத்தை தனது அன்பு கரங்களால் தொடங்கி வைத்த திரு. வாசுதேவன் அவர்களுக்கு அன்பான நன்றிகள். மேலும் மேலும் மெருகேற்றி வரும், திரு. ராகவேந்திரா, பம்மலார்,கார்த்திக், மற்றும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்.
எட்டாவது உலக அதிசயத்தை தந்த திரு. M . ஸ்ரீநிவாசனின் ( ஜெனரல் secretary - திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம்) பேட்டி, ராணி வார பத்திரிகையில் (17 /06 /2012 ) வெளியாகி உள்ளது. அவர் sms செய்திருந்தார். upload செய்யவும். (முயற்சிக்கிறேன் - வசிக்கும் இடத்தில் கிடைப்பதில்லை).
பாராட்டுக்கு நன்றி, பாலா சார்..!
தாங்கள் குறிப்பிட்ட, லேட்டஸ்ட் 'ராணி' 17.6.2012 இதழில் வெளிவந்துள்ள "கர்ணன்" குறித்த ஒருபக்கக் கட்டுரை தங்கள் மற்றும் அனைவரின் பார்வைக்கு:
கர்ணர் கருவூலம் : 8
லேட்டஸ்ட் [17.6.2012] 'ராணி' இதழிலிருந்து...
ஒரு பக்கக் கட்டுரை
குறிப்பு:
"கர்ணன்" முதல் வெளியீட்டில்,
பெரிய வெற்றி பெற்றது.....
நான்கு அரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது.....
செலவழித்த தொகைக்கு மேல் வசூல் செய்தது.....
நல்ல லாபத்தை ஈட்டியது.....
என இன்னும் எத்தனை முறைதான் நாம் முழங்க வேண்டுமோ..........................
பம்மலார்.
-
15th June 2012, 04:52 AM
#28
Senior Member
Veteran Hubber
Originally Posted by
RAGHAVENDRA
Excellent Write-up..!
Hats Off to Mr. ISO Nagaraj..!
Thanks for sharing, Raghavendran Sir..!
-
15th June 2012, 05:43 AM
#29
Senior Member
Veteran Hubber
-
15th June 2012, 06:50 AM
#30
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
அசத்தல் என்றால் இதுதான் அசத்தல். தாய் கூடகுழந்தை அழுதால்தான் உணவளிப்பாள். ஆனால் எங்கள் பம்மலாரோ நாங்கள் கேட்காமலேயே தலைவாழை விருந்தளிப்பவர். விரும்பிக் கேட்டு விட்டால்.... ராகுல்ராம் அவர்கள் ஜீவபூமியை கேட்டவுடன் பத்திரம் எழுதி எல்லோருக்கும் ஜீவபூமியை பதிவு செய்து சொந்தமாக்கி தந்து விட்டீர்கள். தலைவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வீரனாக நிற்கும் அந்த அற்புத விளம்பரத்தை பதிவு செய்து தூக்கத்தைக் கெடுத்து விட்டீர்கள். பதிவும் படு நேர்த்தி. என்ன ஒரு குறை! கைக்கு எட்டிய உணவு வாய்க்கு எட்டவில்லையே!
'கலைத்தோட்டம்' இதழின் கௌரவ ஆசிரியர், பிரபல கதாசிரியர், வசனகர்த்தா திரு.ஏ.எல்.நாராயணன் அவர்களின் கருத்துரை நிஜமாகவே அனலைக் கக்குகிறது. கலைத்தெய்வத்தை ஒரு காலத்தில் இகழ்ந்த கூட்டம் பிற்காலத்தில் காலத்தின் கட்டாயத்தால் அவரை புகழத் தொடங்கியது என்று திரு ஏ.எல், நாராயணன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை! தன் மீது கொண்ட பகைமையை, வெறியை தன்னை வைத்தே சிலர் தீர்த்துக் கொள்ள நினைத்தால், தன் அபார நடிப்பின் மூலம் எதிரிகளின் சூதுவாதுகளைத் தவிடு பொடியாக்கி உண்மையான திறமையால் உயர்ந்த உன்னத புருஷரல்லவோ நடிகர் திலகம். சுவையான சூடு பறக்கும் கட்டுரையை வழங்கிய தங்களுக்கு என் குளிர்ச்சியான நன்றிகள்.
'தீர்ப்பு' விளம்பரங்கள் உயிர்ப்பு.
"கட்டபொம்மன்" காவியம் குறித்து 'வெள்ளையத் தேவன்' ஜெமினி கணேசன் கூறியுள்ள கருத்துக்கள் படத்தின் மீது இருந்த அவருடைய முழு ஈடுபாட்டைக் காட்டுகிறது.
அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்கள் மற்றொரு திரையுலக ஜாம்பவானான பந்துலு அவர்களின் திரைக்காவியத்திற்கு கருத்துரை வழகியிருப்பது பெருமைப் படவேண்டிய விஷயம். கட்டபொம்மனைப் பற்றி நாடும், ஏடும் பாராட்டுவதை அவர் குறிப்பிட்டுள்ளதை படிக்கையில் மெய் சிலிர்க்கிறது.
மலையாள சூப்பர் ஸ்டார் நசீர் நரம்பெல்லாம் துடிக்க நம் கட்டபொம்மனின் நடிப்பை ரசித்ததாக எழுதியிருப்பது அருமை. ஒரு மாபெரும் நடிகரின் நரம்பே நடிகர் திலகத்தின் நடிப்பைக் கண்டு துடிக்கிறது என்றல் நமக்கெல்லாம்... கூறவும் வேண்டுமோ!
எவ்வளவு அரிய தகவல்கள்! அற்புதக் கட்டுரைகள்! இவ்வளவையும் இடம், பொருள், ஏவல் என்பதற்கேற்ப மிகச் சரியான பதிவுகளை மிகச் சரியான தருணத்தில் தந்து எங்கள் எல்லோர் அகங்களையும் குளிர்விக்கும் பதிவுச் சாரலாகிய தங்களுக்கு என் யுகம் கடந்த நன்றிகள்.
Last edited by vasudevan31355; 15th June 2012 at 08:15 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks