-
28th April 2013, 08:58 AM
#3071
Senior Member
Diamond Hubber
-
28th April 2013 08:58 AM
# ADS
Circuit advertisement
-
28th April 2013, 09:08 AM
#3072
Senior Member
Diamond Hubber
ஒரு அன்பு வேண்டுகோள்.
நடிகர் திலகத்தின் Filmography thread இல் ஹப்பர்கள் அந்தந்தப் படத்தைப் பற்றி தங்களுக்குண்டான அனுபவங்களையும், விமர்சனங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். படங்கள் சம்பந்தமல்லாத வேறு விஷயங்களை எழுதவேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்ளப்பட்டதே தவிர Filimography இல் இடம் பெற்றுவரும் படங்களை பற்றியோ, அதன் மேலதிக விவரங்கள் பற்றியோ பதிவிட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு விளக்கத்திற்காகத்தான் இதை சொல்கிறேன். நிச்சயமாக உறுப்பினர்கள் Filmography thread இல் கண்டிப்பாக பங்கு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
Last edited by vasudevan31355; 28th April 2013 at 10:39 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
28th April 2013, 01:09 PM
#3073
Junior Member
Devoted Hubber
சில விஷயங்களை சொல்லவேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது.இது பொதுவாக இந்த திரியின் வளர்ச்சியையும்,புகழையும் கருதியே.யாரையும் குறை சொல்லும் எண்ணம் இல்லை.
தலைவர் ஒரு மகா மேரு ..புகழப்புகழ மேலும் வளர்வார்.
காற்றானவன்
ஒளியானவன்
நீரானவன்
நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்
அன்பின் ஒளியாகி நின்றானவன்
எனும் வரிகள் துதிக்கும் அவரை நாமும் புகழ நினைப்பது இயற்கையே..
அப்படி புகழும் பட்சத்தில் அவரை,
தூய தமிழிலோ ஆங்கிலத்திலோ புகழலாம்.
தமிழ் வார்த்தைகளை ஆங்கில எழுத்துரு கொண்டு எழுதுவது அதுவும் எல்லாம் caps (!!) படிப்பதற்கு மிகவும் ஆயாசமாக உள்ளது.
கல்வெட்டு தமிழ் என்று ஒன்று உண்டு.சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்த தமிழ்.பண்டைய கால கோவில்களில் சுவர் முழுக்க அதை செதுக்கி வைத்திருப்பார்கள்.எதோ அந்த கோவிலை பராமரித்த மன்னன் பற்றிய செய்தி என்பது மட்டும்தான் புரியும் மற்றபடி எதுவும் புரியாது.
"நடிகர் திலகம் ஒரு கலையுலக சக்ரவர்த்தி" எனபதை ζκώதிலϘΩϕϠஒருϑΫϐϑϗζκώϘΩϕϠϡϑΫϐϑϗζκώϘΩϕϠϡϑΫϐϑϗζκώϘΩϕ ϠϡϑΫϐϑϗ என்று எழுதினால்?
பொன்னியின் செல்வன் எனும் நாவலின் தலைப்பை PONNIYIN SELVAN என்று எழுதினால் சரி.
ஆனால் அந்த நாவலின் மொத்த ஐந்து பாகத்தையும் இப்படியே எழுதி,அதாவது
AADHI ANTHAMILLAATHA KAALAVELLATHIL என்று துவங்கி,
UNTHIRUNAMAM ENDRUM NILAITHU VILANGKUVATHAKA
என்று முடித்தால்?
புரிதலுக்கு நன்றி.
-
28th April 2013, 01:38 PM
#3074
Junior Member
Devoted Hubber
தலைவரின் மிகப்பெரிய சாதனை என்ன?
அவர் படங்களில் காட்டிய ஸ்டைலா?
அவர் அணிந்த உடைகளா?
அவர் காட்டிய முகபாவங்களா?
அவர் ஈட்டிய வசூலா?
அவரின் பன்முக ஆற்றலா?
அவரின் ஒப்பற்ற நேர்மை குணமா?
அவரின் தேச பக்தியா?
இப்படி பலதலைப்புகளில் விவாதிக்கலாம்.
அனைத்தும் உண்மையும் கூட.
ஆனால் அவரின் ஒப்பற்ற சாதனை ,என நான் கருதுவது..
தமிழ் மக்களின் ரசனையை உயர்த்தியது.அப்படி உயர்த்தி
அவர்களையும் தன்னைப் போல,மாற்றியது.
தன்னை ஒரு சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில்
எல்லாருக்கும் ஒரு கெளரவத்தை உண்டாக்கியது.
சினிமா என்பது வெறும் கேளிக்கை அல்ல,
அது ஒரு கலை என்பதை நிரூபித்தது.
காமிராவிற்கு முன்னால் நான் ஒரு தெய்வம்..
பின்னாலோ நான் ஒரு எளிய, நேர்மையான மனிதன் என
சொல்லாமல் சொன்னது.
கயமையும் போக்கிரித்தனமும் நிறைந்த ஒரு தொழிலில்
"வாழு வாழ விடு" எனும் கொள்கையை
பின்பற்றி பல சக கலைஞர்களை வாழ வைத்தது.
தன மறைவிற்குப்பின்னர்,
பல நட்சத்திரங்களுக்கு நடுவே ஒரு துருவ நட்சத்திரமாக மாறி
அனைவர்க்கும் வழிகாட்டுவது.
-
28th April 2013, 02:49 PM
#3075
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Ganpat
தலைவரின் மிகப்பெரிய சாதனை என்ன?
அவர் படங்களில் காட்டிய ஸ்டைலா?
அவர் அணிந்த உடைகளா?
அவர் காட்டிய முகபாவங்களா?
அவர் ஈட்டிய வசூலா?
அவரின் பன்முக ஆற்றலா?
அவரின் ஒப்பற்ற நேர்மை குணமா?
அவரின் தேச பக்தியா?
இப்படி பலதலைப்புகளில் விவாதிக்கலாம்.
அனைத்தும் உண்மையும் கூட.
ஆனால் அவரின் ஒப்பற்ற சாதனை ,என நான் கருதுவது..
தமிழ் மக்களின் ரசனையை உயர்த்தியது.அப்படி உயர்த்தி
அவர்களையும் தன்னைப் போல,மாற்றியது.
தன்னை ஒரு சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில்
எல்லாருக்கும் ஒரு கெளரவத்தை உண்டாக்கியது.
சினிமா என்பது வெறும் கேளிக்கை அல்ல,
அது ஒரு கலை என்பதை நிரூபித்தது.
காமிராவிற்கு முன்னால் நான் ஒரு தெய்வம்..
பின்னாலோ நான் ஒரு எளிய, நேர்மையான மனிதன் என
சொல்லாமல் சொன்னது.
கயமையும் போக்கிரித்தனமும் நிறைந்த ஒரு தொழிலில்
"வாழு வாழ விடு" எனும் கொள்கையை
பின்பற்றி பல சக கலைஞர்களை வாழ வைத்தது.
தன மறைவிற்குப்பின்னர்,
பல நட்சத்திரங்களுக்கு நடுவே ஒரு துருவ நட்சத்திரமாக மாறி
அனைவர்க்கும் வழிகாட்டுவது.
நூற்றுக்கு நூறு உண்மை.
சாதாரண ரசிகனிடம் உள்ளுக்குள் இருந்த உயர்ந்த ரசிப்புத் தன்மையை வெளிக்கொண்டு வந்தவர் நடிகர் திலகம். அதனை நாமும் பின்பற்றுவதே அவருக்கு நாம் செய்யக் கூடிய சிறந்த தொண்டாகும். ஒவ்வொரு சிவாஜி ரசிகரையும் நம் நண்பராக, சகோதரனாக கருதி அவர்களிடம் நேசக்கரம் நீட்டி, அவர்களுடைய நிறைகளைப் பாராட்டி, குறைகளை சுட்டிக் காட்டி அனைவரும் ஒரு சேர பணியாற்றும் போது அந்த மகா கலைஞனுக்கு இதை விட சிறந்த சேவையை யாராலும் செய்ய முடியாது என மற்ற ரசிகர்கள் பார்த்துப் பொறாமை கொள்ளும் அளவிற்கு பலனளிக்கும். அந்த அடிப்படையில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் பேதம் பாராது அனைவரும் சிவாஜி ரசிகர்கள் என்ற அணுகுமுறையை அனைவரும் கடைப்பிடித்தலே சிறந்த தொண்டு என்பதை பணிவுடன் கூற விரும்புகிறேன்.
இந்த நேரத்தில் அவருடைய பாடலின் வரிகள் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
....
தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்த
தன்மை வர உள்ளத்திலே கனிவு வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை ...
...
டியர் கண்பத் சார்,
அவ்வப்போது வந்து போகாமல் தொடர்ந்து தங்கள் பதிவுகளை இங்கு அளிக்க வேண்டும். சிவாஜி ரசிகராக தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த பல சுவையான அனுபவங்களை இங்கே அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். படங்களைப் பற்றிய தங்கள் கருத்துக்கள் இவற்றையும் கூறுங்கள். ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் வாழ்க்கையில் அவர் சம்பந்தப் பட்ட ஆவணத்தை நிச்சயம் பாதுகாத்து வருவார் என்பது நிச்சயம். ஏதாவது ஒன்றாவது அவருடை நினைவாக பேணுவார் என்பது அனுபவ ரீதியாக நான் அறிந்துள்ளேன். அப்படி தங்களிடம் ஏதாவது ஆவணம் இருக்குமானால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.
சௌரிராஜன் அவர்கள் தமிழில் பதிய முயன்று வருகிறார். நாளடைவில் அவரும் சகஜமாக தமிழில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
நாம் அனைவரும் சிவாஜி ரசிகர்கள். நமக்குள் distance maintain பண்ணாமல் அன்புடன் பழகுவோமே.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th April 2013, 02:57 PM
#3076
Senior Member
Seasoned Hubber
-
28th April 2013, 02:59 PM
#3077
Junior Member
Devoted Hubber
என்னதான் இருக்கிறதென்று முதன்முறையாக எதிர் கூடாரத்துக்குள் எட்டிப்பார்த்தபோது.... அட! சில தெரிந்த முகங்கள்! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறை ருசித்தபோது அது சொந்த கூடாரத்தின் பதத்தை நினைவு படுத்தியது. அசாதாரண அளவில் பளிச்சிடும் எழுத்துருவும் தேவையற்ற, ஆடம்பரமான, முதிர்ச்சியற்ற வரிகளுமாய்..... நடிகர் என்ற பெயருக்குள்ளேயே அடக்க முடியாதவரையெல்லாம் இப்படி போற்றுகிறார்களே. சரி ரசனை உணர்வுகள் உயர்ந்தும் தாழ்ந்தும் இருப்பது நடைமுறை தானே. ஆனால் உலக மகா நடிகரான சிவாஜி கணேசனுக்கு இந்தமாதிரியான செயற்கையான ஆடம்பரங்கள் தேவைதானா என நினைக்கத்தோன்றியது. தகுதியானவர்களிடம் போட்டி போட்டால் தான் பெருமை. அழகு, கம்பீரம், அட்டகாசம் எல்லாவற்றையும் தனது நடிப்புக்குள்ளே அடக்கிக்கொண்ட நடிகர் திலகத்தின் பெருமையை சாதாரண எழுத்துக்களில் சத்தமின்றி எழுதினாலே போதுமே, traffic lights போல blinding florescent colours தேவையா?
p.s: எடுத்ததற்கெல்லாம் 'பாருங்க டீச்சர் இவ அடிக்கிறா' என்று 'பிராது' கொடுப்பதை விட்டுவிட்டு இது சகலருக்கும் பொதுவான திரி என்பதை நினைவில் கொள்வோம். இது எனது சொந்த கருத்து, பிடிக்கவில்லை என்றால் பார்க்காதது போல போய்க்கொண்டே இருக்கலாம்.
Last edited by Vankv; 28th April 2013 at 03:14 PM.
Reason: நாட்டாண்மை தீர்ப்பை மாத்து!
-
28th April 2013, 03:04 PM
#3078
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ganpat
"நடிகர் திலகம் ஒரு கலையுலக சக்ரவர்த்தி"
எனபதை ζκώதிலϘΩϕϠஒருϑΫϐϑϗζκώϘΩϕϠϡϑΫϐϑϗζκώϘΩϕϠϡϑΫϐϑϗζκώϘΩϕ ϠϡϑΫϐϑϗ என்று எழுதினால்?
கண் பத்து அவர்களுக்கு வேற்று கிரக பாஷை தெரியுமோ?
-
28th April 2013, 03:10 PM
#3079
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ganpat
பொன்னியின் செல்வன் எனும் நாவலின் தலைப்பை PONNIYIN SELVAN என்று எழுதினால் சரி.
ஆனால் அந்த நாவலின் மொத்த ஐந்து பாகத்தையும் இப்படியே எழுதி,அதாவது
AADHI ANTHAMILLAATHA KAALAVELLATHIL என்று துவங்கி,
UNTHIRUNAMAM ENDRUM NILAITHU VILANGKUVATHAKA
என்று முடித்தால்?
புரிதலுக்கு நன்றி.
அய்யய்யோ அப்படி ஏதாவது செய்துவிடாதீர்கள் ஐயா! பின் நானே உங்களுக்கு 'NUTS - Thy name is Gun PATs' என்று பட்டம் கொடுத்துவிடுவேன்!
-
28th April 2013, 03:56 PM
#3080
Junior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தின் கம்பீர தமிழ் உச்சரிப்புக்காகவே இந்த பாட்டை எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் பார்க்கலாம், கேட்கலாம்.
Bookmarks